Advertisement

“இந்தப் பாருங்க … எங்கண்ணன் எது பன்னினாலும் நல்லதா தான் பன்னுவாங்க. அவர் நிச்சியம் நல்லப்பொண்ணாதான் பார்த்துருப்பார்.. அவங்கள ஏதாவது சொன்னீங்க … சொல்லமாட்டேன்.. மண்டைய பிளந்துட்டுத்தான் அடுத்த வேலைப் பார்ப்பேன் .”

அண்ணன்  மேல் கொண்ட பாசத்தைப் பார்த்தவன் ,

“உங்கண்ணன இவ்வளவு தெரிஞ்சு வச்சுருக்க உனக்கு , அவன் உன் மனசு படிதான் வாழ்க்கை அமைச்சுத் தருவான்னு தெரியலயா… ம்” என்று புருவம் உயர்த்திக் கேட்டவனைப் பார்த்தவளுக்கு, ஒரு நொடி ஆகாயத்தில் பறக்கும் உணர்வு ,

அவளது திகைப்பைப் பார்த்தவன் தன் மொபைலை எடுத்துக் கொடுத்து ” நான் நேத்திலருந்து இதை ஆன் பன்னல…. நீயே ஆன் பன்னி உங்கண்ணன் அனுப்பிச்ச போட்டோ பார்த்துச் சொல்லு”

முதலில் ரமேஷிற்கு உண்டான அத்தனை உணர்வுகளும் இப்பொழுது அனன்யாவுக்கு உண்டானது.ஆம்…. கைகள் நடுங்க முகமெல்லாம் வேர்க்க .. அதனை ஆன் செய்தவள்… அண்ணன் அவனுக்கு அனுப்பிய மெசேஜை பார்க்க இயலாது ரமேஷைப் பார்க்க , கண்களாலயே ‘ பார்’ என்று சைகை செய்யவும் , அதை அழுத்த ….

புகைப்படம் மங்கலாக தெரிந்தது .அவள் தோளில் கிடந்த துப்பட்டாவால் அவள் முகத்தை அழுந்த துடைத்தவன் ….. ” இப்ப ஏன் இப்படி உனக்கு வியர்க்குதோ …. அப்படித்தான் உன் மொபைல நான் பார்த்தப் போ வியர்த்துச்சு, இப்ப புரியுதா “

இப்பொழுது தெளிவாக தெரிந்த புகைப்படத்தின் அடியில் ” நான் தோளில் சுமந்த என் குழந்தையை நீ நெஞ்சில் சுமப்பாயா  நண்பா ” என்றுக் கேட்டிருந்தான்.

உணர்ச்சிவசத்தில் நடுங்கிக் கொண்டிருந்த கையிலிருந்து நழுவப் பார்த்த மொபைலை அவளிடமிருந்து வாங்கிய அடுத்த நொடி தன் கரங்களுக்குள் முகம் பதித்து அழுதவளது கரங்களை எடுத்து தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டு அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

அப்படி ஒரு அழுகை …கிடைக்காதோ என்ற ஒன்று கிடைத்துவிட்டது என்ற நிம்மதியில் வந்த அழுகை… அவனை இறுக்கிப் பிடித்து அழுதவள் தலையை மென்மையாக தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்தியவன் .

“இப்ப சொல்லு என்னைக் கல்யாணம் பன்னிக்கிறியா”, அணைத்திருந்த கைகளை விடுவித்துக் கொண்டே ,

” இவ்வளவு நேரம் தவிக்க விட்டு , டென்ஷனாக்கி, கோபப்படுத்தி, அழவைச்சு வேடிக்கைப் பார்த்திட்டு ப்ரபோஸ் பன்ற முதல் ஆளு நீங்களா தான் இருப்பீங்க ….. ஐ ஹேட் யூ அத்தான் , ஐ ஹேட் யூ … “

தன் மென் கரத்தால் அவன் நெஞ்சில் அடித்துக் கொண்டே சொன்னவளிடம் ,

” பப்ளி….இப்ப தான் தூங்கி எழுந்துருக்கேன் …. நீ இப்படி சுகமா மசாஜ் பண்ணா திரும்பவும் தூக்கம் வந்துடும் .. அப்புறம் வேலை பார்க்க முடியாது… “

” என்ன .. மசாஜ் பன்றேனா… இப்ப தான சொன்னேன் பப்ளி செல்லாதிங்கனு … நீங்க நான் ஸ்கூல் படிக்கும் போது அப்படிக் கூப்பிட்டு கிண்டல் பன்னதாலதான்… நான் எவ்வளவு டயட் ஃபாலோ பன்னேன் தெரியுமா … ” என்று அவன் முகம் பார்க்காமல் பேசியவளை , சடுதியில் கைகளில் ஏந்தியவன் ,

“அட ஆமா …வெயிட்டே இல்லையே… நீ பப்ளி இல்ல தான் ….” என்று விளையாட்டாக பேசியவன்

 கைகளிலிந்து இறங்க முயன்றவளை  இறுகப் பிடித்தவன், ” இப்பதான் காலம் பூரா உங்க கைக்குள்ளயே இருக்க ஆசைனு சொன்ன இப்ப இறங்கப் போற … அப்ப சும்மா சொன்னியா … சரி என் பேச்சு உன்னைப் பாதிக்குமா … “, எதுவும் சொல்லாமல் இறங்கியவள் ,

 “பின்னே … என்னைப் பார்க்கும் போது எல்லாம் பப்ளி , அணு குண்டு இப்படி சொல்லி கிண்டல் பன்னி விளையாடிட்டு இருந்த அத்தான்… திடீர்னு என்கிட்ட பேசறத நிறுத்தி … என்னைப் பார்க்கும் போதெல்லாம் கத்திப் பேசி என்னைய தூரவே நிப்பாட்டினா … எப்படி இருக்கும்…. அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது… ஆமா உங்களுக்கும் எனக்கும் தான் கல்யாணம்னு முதல்லயே உங்களுக்குத் தெரியுமா…”

” ம்ஹும் … இப்ப தான் உன் போன் பார்த்து தான் தெரியும் … “

” என்ன என் போன்லப் பார்தீங்களா” என்று அதிர்ச்சியானவளிடம் …. ” ஏன் இவ்வளவு ஷாக் … வேற எதுவும் இருக்கா பார்க்க … “

“இல்ல இல்ல …. நான் என் கேபின் போறேன் … அண்ணன் நிறைய வேலைக் கொடுத்து இருக்காங்க … ” என்று வெளியேறப் போனவள் கையைப் பிடித்து ஃபோனைப் பறித்துக் கொண்டவனிடம் அதை திரும்ப வாங்க முற்பட்டாள்.

“தாங்க நான் போகனும் … “

“இரு பார்த்துட்டுத் தாறேன்” , “அதெல்லாம் லேடீஸ் போன் பார்க்க கூடாது … ” என்று சிணுங்கவும் , அவள் காதருகே மென் குரலில் ,

” பப்ளி… இப்படி சிணுங்கிறியே ஒரு வேளை அப்படி இப்படி போட்டோஸ் , படம்…’ இப்படி எதுவும் வச்சுருக்கியா…” என்று கண்ணடித்து கேட்கவும் ,

முதலில் புரியாமல் “என்ன அப்படி இப்படி ஃபோட்டோஸ் … ” என்றவள் அர்த்தம் புரிந்து , “யூ… யூ…. ச்சீ … என்ன கேள்வி இது…. அப்ப நீங்கல்லாம் அப்படித்தான் வச்சுருப்பீங்களா ….பேட் பாய் … என் ஃபோன் கொடுங்க நான் போறேன்”

“அதெல்லாம் பார்க்கலனா என்னைய பாய் லிஸ்ட்லயே

சேர்க்க மாட்டாங்க பப்ளி … நீ என்னையப் பார்க்க விடலனா.. நான் அப்படி தான் நினைப்பேன்”

கண்ணில் நீருடன் அவனைப் பார்த்தவள் ஒன்றும் பேசாது … அங்கிருந்த சோஃபாவில் சென்று முழங்காலிட்டு அமர்ந்து முகத்தை புதைத்துக் கொண்டாள்.

‘ அப்படி என்ன இதில் இருக்கிறது’ என்றுப் பார்த்தவனுக்கு .. அதிர்ச்சி தான். அது இனிய அதிர்ச்சி… அவள் மொபைலில் பாதி இடத்தை ரமேஷ் தான் ஆக்கிரமித்து இருந்தான். அவன் சிறுவயது புகைப்படம் முதல் இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் போட்டிருந்த புதிய ஆடை வரை அத்தனை போட்டோக்கள் , கூடவே அவன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வரும் ஆடைகள் , பரிசுப் பொருட்கள் அத்தனையும் பரிசு பெட்டியாக தயார் ஆவதற்கு முன்பு எடுக்கப்பட்டது. சாப்பிடும் போது , அவன் பந்து விளையாடும் போது , வேலை செய்யும்போது எனப் பலப் புகைபடங்கள் நிறைய இருந்தன.

இன்னும் நிறைய இருந்தன. போனை எடுத்துக் கொண்டு அவளருகில் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டான்.

அவன் அருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தவள் , அப்படியே தலை கவிழ்ந்துக் கொண்டே .., “சின்ன வயசிலருந்து… உங்கள பிடிக்கும் அத்தான் .. நீங்களும் ரொம்ப பாசமா இருப்பீங்க … ஒரு டைம்ல நீங்க பேசுறத நிறுத்திட்டீங்க … அந்த ஸ்டேஜ்ல ஏன் எதுக்குப் புரியல .. ஆனா நான் உங்கள கவனிச்சிட்டு இருப்பேன். நீங்க கோபமா பேசினாக்கூட திரும்ப பேசுவேன்.

காலேஜ் போனதும்  பசங்க எங்கிட்ட பேசும் போது உங்க ஞாபகம் தான் வரும். ஒவ்வொருத்தர் பார்வையையும் வச்சு உங்கள கம்பேர் பண்ணி பார்க்கிறதே என் வேலையா போச்சு, ஒரு ஸ்டேஜ் மேல இதுக்குப் பேர் பிடித்தம் இல்ல காதல்னு தெரிஞ்சுப் போச்சு.

கல்யாணம்னு வரும் போது அண்ணன் என்கிட்ட கேட்பாங்க….அப்போ … அப்போ உங்க பேரைச் சொல்லணும்னு இருந்தேன். ஆனா நீங்க சொன்னது போல எங்கண்ணா என்னை நல்லாவே தெரிஞ்சு வச்சுருக்காங்க ….. “

எழுந்து மொபைலை அவன் கையிலிருந்து வாங்கியவள் ,அறைக்கதவை  பாதி திறந்து , “அத்தான் என் மனசில நீங்க தான் இருக்கிங்கனு தெரிஞ்சு அண்ணன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துட்டாங்க …. ஆனா உங்க மனசுல அத்தைப் பொண்ணா மட்டும் தான் இத்தனை நாள் நான் இருந்துருப்பேன்… இப்ப அண்ணன் சொன்னதால மட்டும் தான் நீங்க எனக்கு ப்ரபோஸ் பன்னீங்களாத்தான்.” என்று கேட்டவள் அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

அப்படியே பிரமைப்பிடித்தது போல் அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் எழுந்தவன் சில வேலைகளை போனில் பேசி சொல்லிவிட்டு, மேசை டிராயரில் இருந்த அவனது ‘டுகாட்டி ‘ சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அவனுக்கு யோசிக்க வேண்டியிருந்தது. அலைபேசியை அணைத்து பாக்கெட்டினுள் போட்ட வன் அலுவலகத்திலயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த   பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

ரமேஷ் அவன் அறையை விட்டு வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் … அவன் கையோடு குளிருக்கு அணியும் ‘ ஜெர்கின்’ எடுத்துக் கொண்டு செல்வதையும் பார்த்தாள்.

இத்தனை வருடங்களாக அவனைப் புரியாமல் இருக்குமா. அவன் ஒவ்வொரு அசைவையும் ரசித்தவளாயிற்றே … புன்னகைத்துக் கொண்டவள் தன் வேலையைப் பார்க்கச் சென்றாள்.

          மாலை நேரக் குளிர்காற்றுடன் வந்த ரோஜா பூக்களின் நறுமணத்தை ரசித்துக் கொண்டு அந்த புல்வெளியில் தலைக்கு கைக்கொடுத்து படுத்திருந்த ரமேஷிற்கு அப்பொழுதுதான் போனை அணைத்து வைத்த ஞாபகம் வந்தது.

எடுத்து ஆன் செய்தவனுக்கு அரவிந்த் நிறைய நேரம் அவனுக்கு அழைப்பு விடுத்த தகவல் வந்தது. அரவிந்த்க்கு அழைத்தவனிடம் “ஏன்டா மாப்ள ஊட்டி வந்து ரொம்ப நேரம் ஆகியிருக்கும் இவ்வளவு நேரமாவா யோசிச்சுட்டு இருந்த … “

“மச்சான்… எப்படிடா தெரியும் நான் இங்க வந்துருக்கேன்னு … யார்கிட்டயும் சொல்லலயே டா”

வாய் விட்டு சிரித்தவன்” அனுதான் சொன்னா நீ ஊட்டிக்கு போயிருக்கிறத” ,

மனம் பூரித்த ரமேஷ் , “மச்சான் நீ இளவரசியத் தேடி உன் அரசியப் பத்தி தெரிஞ்சுக்கப் போன …… நான் அரசியத் தேடி உன் வீட்டு இளவரசியப் பத்தி புரிஞ்சுக்க வந்தேன் ….இப்போ ரொம்ப நிம்மதியா இருக்குடா”.

திரும்பவும் சத்தமாக சிரித்த அரவிந்த் “என்னமோ காதல் வந்ததிலருந்து நான் உளர்றேன்னு சொன்ன மாப்ள ….இப்ப நீ உளறிட்டு இருக்கியே இதுக்குப் பேர் காதல் இல்லாம என்னவாம்….”

                             காதல் என்றுமே அழகுதான் …..

 

 

 

 

 

Advertisement