வியர்வை வாசனை தான் … ஆனால் அது ஏதோ ஒரு மயக்கத்தைக் கொடுக்க கண்களை ஊஞ்சலில் தலைசாய்த்து மூடிக்கொண்டாள்.

கன்னத்தில் ஈரஸ்பரிசத்தை உணர்ந்து கண் திறந்தவள் , “ஹேய் ஸ்வீட்டி இன்னைக்கும் பால்கனிலயே தூங்கலாம்னு முடிவு பன்னிட்டியா”

ஊஞ்சலில் இருந்து எழுந்தவள் , “அப்படிலாம் இல்ல … நான் பிறந்து வளர்ந்தது கொடைக்கானல்ங்கிறதால இப்படி செடி, கொடி, பூக்கள்னு பார்க்கிறது ஒரு சந்தோஷம் அவ்வளவுதான் , சரி வாங்க சாப்பிடலாம்”

“வா ..வா இந்நேரம்  புது மனைவிக்கூட சாப்பிடுறது நல்லாதான்  தான்  இருக்கு … ” என்றவாறே அவன் போட்டுக் கொள்ள உடை எடுக்க , துண்டைக் கட்டியிருந்த அவனைப் பார்த்து நாணமடைந்தவள் திரும்பவும் பால்கனிக்குள் சென்று கொண்டே, “முதல்ல டிரஸ் மாத்துங்க அப்புறம் வாரேன்”

“ஸ்வீட்டி… இது உனக்கே ஞாயமா …  உன் புருஷன் நான் .. இப்படி ஒரு வார்த்தை சொல்லலலாமா”

“ஐயோ ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.… “

அவள் பின்னாடி வந்து நின்றவன் “எதுக்குத் தேவையில்லாம ப்ளீ்ஸ்லாம் .. . டிரஸ்  சேன்ஜ் பன்னிட்டேன் … பாரு என்னை.. இட்ஸ் எ ஃபன் டியர்” என்றவன் அவள் கைப் பிடித்து உள் அழைத்துச் சென்றான்.

“நீ சாப்டியா” என்று தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தவளைக் கேட்டவனிடம் ,

தலைநிமிர்ந்து “நீங்க சாப்பிட்டதுக்கப்புறம் சாப்பிடுறேன் “

“அதெல்லாம் முடியாது சேர்ந்து சாப்பிடலாம் வா”

“ஒரு தட்டு தான் இருக்கு…”

“ஐயோ .. மை டியர் பொண்டாட்டி உனக்கு நிறைய தெரிய வைக்கனும் போலிருக்கே …ம் சரி கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலாம் … இப்போ எப்படி சாப்பிடுறதுனு சொல்லித்தாறேன்”

ஒரு தட்டில் இருந்த உணவை அவள் எடுத்து உண்ணவும் , அவள் அடுத்த முறை கொண்டுப் போகும் கையை எடுத்து தன் வாயில் வைத்துக் கொண்டான்.

வாயில் உணவை வைத்துக் கொண்டவன் உடனே விரல்களை விடுவிக்க வில்லை… அதிர்ந்து அவனைப் பார்க்க , கண்ணடித்து அவளை இயல்புக்குக் கொண்டு வந்தவன் , புன்னகையோடே …

“ரதி .. அம்மாதான் சின்ன வயசுல ஊட்டி விடுவாங்க … அந்த இன்ஸிடென்ட்க்கு அப்புறம் என்னையும் ரமேஷையும் தாத்தா போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துட்டாரு.. அப்புறம் யாரும் எனக்கு ஊட்டி விட்டது கிடையாது. ஏன் இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்கிறேன்னு இப்ப நீ தான்  எனக்கு அவங்களுக்கப்புறம் சாப்பிடத் தர்ற…. “

இயல்பாய் அவனுக்கும் ஊட்டித் தானும் உண்டுக் கொண்டு இருந்தவள்….

“நீங்களாவது பரவால்ல … எனக்கு தெரிஞ்சு நானேதான் சாப்பிடுறேன். எங்கத்த எனக்கு ஊட்டும் போது என்னையப் பார்த்து அழுவாங்களாம்… அவங்களப் பார்த்து நானும் அழுவேனாம். அதிலருந்து எங்கமாமா என்னைய தனியாவே சாப்பிட விட்டதா சொல்வாங்க… அதனாலயே சிவாண்ணன் பசங்களுக்கு விரும்பி ஊட்டுவேன்”

அவள் இயல்பாய் தான் சொன்னாள் , கேட்டவனுக்குத் தான் மனம் என்னவோ போல் ஆகிவிட்டது.

ஊட்டிக் கொண்டு இருந்தவள் கையைப் பற்றி “ஐ. …ம் வெரி சாரிடா, நான் என்னையே தான் நினைச்சுட்டு இருக்கேன் .. உன்னை ய நினைக்கலப் பார்த்தியா.. நீ உங்க மாமா அத்தைக் கிட்ட வளர்ந்தனு மட்டும் தான் தெரியும் வேற எதுவும் தெரியாது.. “

அவனிடம் புன்னகைப் புரிந்தவள் , ” முதல்ல உங்கள பிடிச்சிருக்கு சொன்னேன் இப்ப ..” என்று புன்னகையை விரிவாக்கியவளிடம் ,

“இப்ப ” என்று கேட்டவனிடம்,

கையை விடுவித்துக் கொண்டே “ரொம்ப பிடிச்சிருக்கு ” என்று சொல்லி எழுந்து குளியலறைச் சென்றுக் கை கழுவி வந்தாள்.

கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவனிடம் பாலைக் கொடுத்துக் கொண்டே , “உங்களப் பத்தி நானும் என்னைப் பத்தி நீங்களும் தெரிஞ்சிக்க நிறைய டைம் இருக்கு , இப்ப நீங்க தூங்குங்க … நானும் போய் தூங்குறேன்”

” என்ன .. போய் தூங்குறியா”

“ஆமா .. அனு ரூம் போறேன்..”

“அங்க போய் .. போ போ … அங்க பூட்டியிருந்தா இங்க தான் வரணும் ஓகே”

மனதினுள் “என் தங்கச்சிப் பத்தி தெரியாமப் போறா என்மக்கு பொண்டாட்டி “

சென்றவள் அதே வேகத்திலயே திரும்பி வந்து கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தவள் ,

” அனு ரூம் பூட்டியிருக்கு …” என்று மெதுவாக சொல்லவும் ,

“முதல்ல உன்ரூம்க்குள்ள நீ வரதுக்கு கதவ தட்டுற பழக்கத்த விடுடா … நீ இங்க தான் படுக்கனும்… நான் தான் உனக்கும் டைம் வேணும் , தங்கச்சிக்கு கல்யாணம் பன்ற முன்னால என் வாழ்க்கைய பார்க்குறதும் தப்புங்கிற ஃபீல்ல உன்னைய அங்க தங்கச் சொன்னேன் … இனி அது அவசியமில்ல. அனுவுக்கும் கல்யாணம் இன்னும் ஒரு மாசத்துல ஏற்பாடு பன்னப் போறேன்”

” என்ன அனுவுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சா”

கொட்டாவியை வெளியேற்றிக் கொண்டே “டியர் … தூங்கலாம் டா .. ரொம்ப டயர்டா இருக்கு .. நாளைக்கு டீடெய்லா சொல்றேன்”

அவன் கட்டிலில் படுத்துக் கொண்டதும் மறுபக்கம் வந்துப் படுத்துக் கொண்டவள் , அந்தப் பெரிய போர்வையை எடுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டாள்.

“ஹேய் டியர் குளிருதா , ஏசிய கம்மி பன்னவா…”

திரும்பி அவனைப் பார்த்து படுத்தவள், “பாஸ் … நான் கொடைக்கானல்ல பிறந்து வளர்ந்தவ … இதெல்லாம் ஒரு குளிரா “

அவள் ‘பாஸ்’ என்றழைத்து இயல்பாய் பேசவும் அவனும் ,

“ஓ அப்படிங்களா மேடம் … அப்புறம் எதுக்கு இந்தப் போர்வையாம்”

“அது… அது .. ஒரு சேப்டிக்கு … தூங்கும் போது …..டிரஸ் விலகிடும்னு எப்பவும் போர்த்திக்குவேன்” சொல்லியவள் முகத்தையும் மூடிக் கொண்டாள்.

இருளிலும் பலமாக சிரிக்க ஆரம்பித்தவன் , அவள் புறம் உருண்டு வந்து , ” ச்சோ ஸ்வீட் மை டியர் …. சேஃப்டி ரூல்ஸ் எங்க பேசுறனு தெரியுதா … “அவள் முகத்திரையை விலக்கிக் கொண்டே “உன் சேஃப்டி இப்ப என் கைல டியர்… அப்போ என் மேல நம்பிக்கை இல்லையா”

பக்கத்தில் நெருங்கி இருந்தவனின் முகம் அருகில் இருக்கவும் அதிர்ந்து “இல்லை” என்பதாக தலையசைத்தாள்.

“அப்போ இது எதுக்கு …ம் …இது நம்ம ரூம் நான் உன் ஹஸ்பண்ட், நீ என் வொய்ஃப் … நம்ம ரெண்டு பேரைத்தவிர யாரும் இங்க கிடையாது … “அந்தப் போர்வையை விலக்கி விட்டவன் …” இந்தப் போர்வைக்கும் வேலை கிடையாது.”

அப்படி அவன் செய்யவும் எழுந்து அமர்ந்தவளை, கைப் பிடித்து இழுக்க .. அவன் மேலேயே வந்து விழுந்தாள்.

அவளை கெட்டியாகப் பிடித்து மெத்தையில் விட்டவன் , “நீ இப்படிலாம் பன்னிட்டு இருந்த , தங்கச்சி கல்யாணத்துக்கு அப்புறம் ஆரம்பிக்கலாம்னு இருந்த நம்ம வாழ்க்கைய இப்பவே ஆரம்பிச்சிருவேன் … எப்படி வசதி பொண்டாட்டி , இப்பவே ஆரம்பிக்கலாமா…” புன்னகைத்துக் கொண்டே புருவம் உயர்த்திக் கேட்டவனை அகல விழி திறந்துப் பார்க்க , எப்போதும் அவனைக் கவரும் அந்தக் கண்களில் முத்தம்  இட்டான்.

இப்போதும் ஒரு சிலிர்ப்பு உடலில் ஓட … கண்களை திறக்கும் எண்ணமே இல்லை ராதிகவுக்கு , இரவு நேரம் , காதலியே மனைவியாக அருகில் எந்த ஆண்மகனுக்கும் ஹார்மோன்கள் வேலையை ஆரம்பித்து விடும் …. அரவிந்த்க்கும் வேலை செய்தது..அவள் மீது கொண்ட மயக்கத்தில் நெற்றி .., கன்னம் என இதழ் பதித்தவன் … மனையாளின் உதடுகளை நெருங்க பட்டென்று கண்ணைத் திறந்தவள் , அவனைத் தள்ளி விட்டு ,

“வேண்டாம் …வேண்டாம் .. நாம  அனு கல்யாணத்துக்கு அப்புறமே….” மேலும் சொல்லக் கூச்சப்பட்டு … அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டவள் போர்வையை எடுக்க கைப் போக … பட்டென்று கையை குறுக்காக கட்டிக் கொண்டாள். அந்த இருளிலும் அவளின் முகச் சிவப்பை கண்டு கொண்டவன் ,

“அப்புறமா என்ன… “எனக் கேட்க ..

அவள் ஒன்றுமே சொல்லாமல் ., இன்னொரு தலையணையை எடுத்து தலைக்கு மேல் முகத்தை மறைத்தவாறு படுத்துக் கொண்டாள்.

“போர்வை மட்டுமில்ல தலையணை வச்சாலும் நான் சொன்னது தான் …. வரட்டா”

தலையணையைக் கீழே போட்டவளிடம், உனக்கு தலையணை வேணும்னா என் கை இருக்கு …  குளிருக்கு போர்வை வேணும்னா சொல்லு நானே போர்வையா மாறிடுவேன்….”

அந்த தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தவள்” அசிங்கமா பேசறீங்க நீங்க ” எனவும் ,

அடி வாங்கிக் கொண்டே “என்னது அசிங்கமா பேசறேனா … இதுவே அசிங்கமா ….அப்போ நிஜமாவே இன்னும் இறங்கிப் பேசினா அத என்ன சொல்வ… வா … வா .. உன் காது கொடு .. அசிங்கமா பேசறதுனா என்னனு சொல்றேன் …”

இரு காதுகளையும் கைக்கொண்டு பொத்திக் கொண்டவள்… “ப்ளீஸ் பாஸ் … இப்பலாம் நான் கேட்கல…மணியப் பாருங்க ரெண்டாகப் போகுது , காலையில அண்ணன் வீட்ல ஊருக்கு கிளம்புறாங்க நாம தூங்கலாம்”

“ஷ்யர்…ஷ்யர் நாம தூங்கலாம் வா” என்று அழைத்தான் கண்ணடித்துக் கொண்டே … “

அவன் பேசிய அழகில்  பளீரென்று சிரித்தவள் ” உங்களை … ” என்று இயல்பாக அவன் கையை கட்டி , “ஷ் … பேசக் கூடாது … குட்னைட்” என்றவள் , முன்பு போல் ஓரமாக சென்றெல்லாம் படுக்கவில்லை. அவனைப் பார்த்துக் கொண்டே அவனருகேயே  கண்ணை மூடிக் கொண்டாள்.

அவளையேப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தவன் அவள் உறங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு , ” இந்த இரவு என் வாழ்க்கைல மறக்க முடியாத அற்புதமான இரவு மை டியர் .. இவ்வளவு சந்தோஷமா நான் இருந்ததே இல்ல … தேங்க்யூ மை டியர்..” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு “குட்னைட் ” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டான்.

கதவு தட்டும் சத்தமும் , அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருக்கும் சத்தமும் கேட்டு கண் விழித்த ராதிகா , இரவில் அவன் சொன்னது போல் அவன் கையே தலையணையாக இருக்க அதில் தான் தலை வைத்திருந்தாள்.

உடனே எழுந்தவள் நீண்ட கூந்தலோ அவன் கைக்கு அடியில் சிக்கிக் கொள்ள , வெட்கம் மேலிட ..மெல்ல அவன் உறக்கம் கலையாவண்ணம் எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.

வெளியே நின்றுக் கொண்டு இருந்த அனன்யாவைக் காணவே சங்கடமாக இருக்க ,

“சாரி நல்லா தூங்கிட்டேன்” என்று சொல்லிக் கொண்டே அனன்யா அறை நோக்கிச் சென்றாள்.

         உள்ளே சென்றவள் மணி பார்க்க அது காலை பத்தரை என்பதைக் காட்டியது. ” இவ்வளவு நேரமா தூங்கினேன் ” என வியந்தவள் இரவில் அரவிந்துடனான பேச்சும் தனிமையும் ஞாபகம் வர புன்னகையோடே குளியலறைச் சென்றாள்.

காதல்

வந்தாச்சோ மழை

வானம் தந்தாச்சோ

விழி மேலே காதல் புறா

தூறல் நின்னாச்சோ

மனம் வான வில்லாச்சோ

மலை மேலே நான் அன்றில்லா

          

           காதல் அழகானதே…