“எப்போதும் …எப்பவும் எலியும் பூனையுமா இருக்கிறவங்களுக்குள்ள ஏதோ இருக்கு… ம் … இவங்க வாயாலயே அவங்க மனசிலுள்ளத சொல்ல வைப்போம்.
” ண்ணா … நான் படிக்கணும்”
” ராதிகாவும் உன் கூடத்தானம்மா படிக்க சேர்ந்துருக்கா… நீயும் கல்யாணம் பன்னிட்டு படிக்கலாம் … ஒன்னும் பிரச்சினை இல்ல… ரமேஷ் உனக்கும் தான் டா”
” என்ன எனக்கு இப்ப கல்யாணம் லாம் வேண்டாம்”
“சரி எப்ப பன்றியோ அப்ப நான் என் லைப் ஸ்டார்ட் பன்னிக்கிறேன்”
“டேய் முட்டாள் போல பேசாதே… எனக்கு … எனக்கு “
“உனக்கும் , பாப்பாவுக்கும் கல்யாணம் முடிஞ்சப் பிறகு தான் நான் என் லைப் ஸ்டார்ட் ஆகும் … ” என்று இரட்டை அர்த்தத்தில் சிரித்துக் கொண்டே சொன்னவன் , அனன்யா அருகில் வந்து சோஃபாவில் அமர்ந்து அவளையும் அமர வைத்தவன் ,
“அண்ணன் உன் படிப்புக்கு எந்த வித டிஸ்டபன்ஸ் யும் இல்லாத மாதிரி தான் டா பார்ப்பேன்”
“அதுவரைக்கும் என் .. ” என்று ஆரம்பித்தவள் ராதிகா சமையலறையினுள் தான் இருக்கிறாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு ,
“நேத்து நைட் முழுசும் அண்ணி பால்கனில வெறும் தரைல படுத்திருக்காங்க … கண்ணெல்லாம் சிவந்து … நான் காலைல எழுந்து குளிச்சதுக்கப்புறம் தான் பார்த்தேன். பாவம் ணா தீடீர்னு இப்படிலாம் நடந்தா எல்லாப் பொண்ணுங்களுக்குமே அது மனஉளைச்சல் தானேண்ணா .. ப்ளீஸ் நீங்க பக்கத்துல இருந்து புரியவைங்க… நைட் நான் நல்லா தூங்கிருக்கேன் … அவங்க என்ன மனக்கஷ்டத்துல இருந்தாங்களோ… எனக்கு கில்ட்டி ஃபீலிங்கா இருக்கு … நீங்களா இருந்தா அப்பவே கவனிச்சு இருந்துருபீங்கள்ல…” என்று மனம் சங்கடப்பட்டு சொல்லவும் , எழுந்தவன்..
“இதோ வாறேன் மா” என்று சமையலறை நோக்கிச் சென்றான்.
அவன் இருவரிடமும் பேசிக் கொண்டு இருந்தாலும் மனைவியின் நடவடிக்கைகளைத் தான் கவனித்துக் கொண்டு இருந்தான். அதனால் தான் அவள் சமையலறையில் நுழைந்ததைக் கவனித்திருந்தான்.
அதுவரையில் ஏதோ யோசனையில் இருந்த ரமேஷும் கிளம்பி வெளியே சென்றான்.
அரவிந்திடம் பேசிக் கொண்டு இருக்கையில் அனன்யா தந்த காஃபி கப்பை அங்கிருந்த மேசையில் வைத்தவன் அதை மறந்து விட்டுச் செல்வதைக் கவனித்த அனன்யா அதை எடுத்துக் கொண்டு ரமேஷின் பின் ஓடினாள்.
அவன் காரினுள் ஏறி அமரவும் , அந்தக் கப்பை அவனிடம் தந்து, அவன் கண்ணைப் பார்த்துக் கொண்டே , “மறந்துட்டு வந்துட்டீங்க” என்றாள்.
அதுவரை “அண்ணனுக்காக யோசிக்கிறா … ஒரே நாள்ல அண்ணன் மனைவியா வந்தவங்களுக்காக யோசிக்கிறா….இது போல எனக்காக யோசிப்பாளா..” என்று யோசித்துக் கொண்டு இருந்தவனுக்கு அவள் இப்படிக் கொண்டு வந்து தந்ததும் மனம் கொள்ளா மகிழ்ச்சி அடைந்தவன்… வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ் ” என்றான்.
உண்மையில் இது நாள் வரை அவள் எது தந்தாலும் அவன் இப்படி நன்றியெல்லாம் சொன்னதில்லை.
இன்று “என்னையும் யோசிக்கிறாள் ” என்ற நினைவில் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்துவிட்டது.
அவன் ‘தேங்க்ஸ் ‘என்றதும் .. அவள் மூக்கு சிவந்து கண்களில் கோபம் காட்டி “அங்க நம்ம பனியன் கம்பெனில சாயக்கழிவு வெளியேத்த பெரிய இடமிருக்குல ” என்றாள்.
ஏன் கேட்கிறாள் என்றுப் புரியாத போதும் , “ஆமா இருக்கு …ஏன் ” என்றான்.
“ம்… உங்க ‘தேங்க்ஸ் ‘கொண்டு அதுல போடுங்க … தேங்ஸாம் தேங்க்ஸ் ” என்று கோபத்தோடு சொன்னவள் நகர்ந்து வீட்டினுள் திரும்ப போகும் போது , சமையல் செய்யும் ஈஸ்வரி வெளிகேட்டிலிருந்து வீட்டின் பின்புற வாசலுக்குப் போய்க் கொண்டு இருந்தார்.
அதைப் பார்த்த அனன்யா “அச்சோ அண்ணன் அண்ணி கிட்சன் ல இருக்காங்க… இவங்க ” என யோசித்தவள் ,
“ஈஸ்வரியக்கா” என்றவள் அவளருகே வருமாறு சைகை செய்தாள். அவரை அருகே அழைத்து ஏதோ சிரித்துப் பேசிக் கதை அளந்துக் கொண்டு இருந்தவளைப் பார்த்துக் கொண்டே புன்னகையோடு காரை கிளப்பினான் ரமேஷ்.
அதே நேரம் சமையலறையில் நுழைந்த அரவிந்த் கண்ணில் , ஈரக் கூந்தலை தலையில் துண்டினால் கொண்டைப் போல் கட்டி , ஈரமாக முதுகோடு ஒட்டியிருந்த சுடிதார் டாப்ஸில் அந்தப்புறம் திரும்பி காஃபி கலக்கிக் கொண்டு இருந்த ராதிகா பட்டாள்.
மனைவியை ரசித்துக் கொண்டே அருகில் சென்று , அவன் அம்மா நேற்றுப் போட்டுவிட்ட ஜிமிக்கி அழகாய் அசைய , காதோரம் இருந்த துண்டினுள் சேராமல் ஈரத் துளிகளை துளித்துளியாய் அவள் கழுத்தில் விழச் செய்துக்கொண்டு இருக்க, அப்படியே அவளை பின்னோடு அணைத்து ஜிமிக்கி ஆடும் காது மடல்களில் முத்தம் பதிக்க ஆவல் கொண்டான்.
எழுந்த கைகளை அடக்கும் வழி தெரியாது சட்டென்று கையினைக் கட்டிக் கொண்டவன்” ரதி ” என்றழைத்தான்.
அப்பொழுதுதான் ஒரு வாய் குடித்துக் கொண்டே திரும்ப இருந்தவள் அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு புரையேற கையிலிருந்த காஃபி கோப்பை அசைந்தது. சூடாக இருந்ததில் சில துளிகள் கையில் படவும்” ஷ்” என்றவளிடமிருந்து அதை வாங்கி சமையல் மேடையில் வைத்தவன் , சூடான காஃபி பட்ட இடத்தில் அங்கிருந்த உப்பை எடுத்து தடவினான்.
“ஏன்டா என் குரலுக்கு இப்படி பயப்படுற , அப்படி பயங்கரமா இருக்கா என் வாய்ஸ் … நேத்தும் இப்படித்தான்.” பேசிக் கொண்டே அவள் கைப் பிடித்து அந்த வேலை செய்தான்.
அவனிடம் கை கொடுத்து விட்டு அவனையே பார்த்தவளிடம் ” இப்படிப் பன்னா நீர் கட்டி மாதிரி வராது அதான் … ” என்றவன் அவள் கண்கள் விரிக்கும் அழகில் மயங்கி … முறுவலுடன் “லாக் பன்னனுமா” என்று கிசுகிசுப்பாக கேட்டான்.
திகைத்து கையை பின்னுக்கு இழுத்தவள்… “நீங்க அங்க நின்னுக் கூப்பிட்டாக் கூட எனக்கு காது கேட்கும் … இப்படிப் பக்கத்துல வந்துக் கூப்பிட்டா அப்படித்தான் ” என்று முகத்தை வேறு புறம் வைத்துக் கொண்டு சொன்னாள்.
அவளின் பாவனையை ரசித்தவன் ” நான் உன் புருஷன் … என்னைய தள்ளி நின்னு பேசுனு சொல்றியே .. இது நியாயமா … ” என்றவன் பேசிக் கொண்டே அந்த காஃபியை அருந்திக் கொண்டு இருந்தான்.
அவனது பேச்சில் அவன் முகம் பார்த்தவள்” ஐயோ .. அது நான் வாய் வச்சுட்டேன்… வச்சிருங்க உங்களுக்கு வேறப் போட்டுத் தாறேன்..”
“எனக்கு இதுதான் வேணும். நீ வேறப் போடு”
“இல்ல நான் அப்புறம் குடிச்சுக்கிறேன் .. ” என்று நகரப் போனவளை கைப் பிடித்து தடுத்தவன் ,
“உனக்குத் தெரியுமா தெரியல … நமக்கு காஃபி தோட்டம் , டீ எஸ்டேட் ரெண்டுமே இருக்கு … ஆனா நான் இதுவரை காஃபி , டீ .. குடிச்சதே இல்ல. நேற்றும் நீ குடிச்சத தான் குடிச்சேன் .. இன்னைக்கும் அப்படித்தான்.. காஃபி இவ்வளவு டேஸ்டா இருக்கும்னு எனக்குத் தொயாது…”
” என்ன நேத்தும் நான்குடிச்சதா … நேத்து நான் என்ன சாப்பிட்டேன் , குடிச்சேன் எதுவுமே ஞாபகமில்ல..” என்று யோசித்துக் கொண்டு இருந்தவளை அருகிழுத்து ,
“ஏதோ நினைப்புல அப்படி வெளிய படுத்துட்டேன்.. இனி அப்படிப் பன்னல .. நான் … நான்… அனுக் கூடயேப் படுத்துக்கிறேன்.”
அரவிந்த்க்கு அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு வரவும் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான். சிரிப்பினூடே ” என் …வொய்ப்… அவளோட ரூமுக்கு … வர ..இவ்வளவு பயப்படுறா” என்று சிரித்துக் கொண்டே சத்தமாக சொல்லவும் , அந்த அதிகாலை அமைதியான நேரத்தில் யாருக்கும் அவன் சிரிப்பும் பேச்சும் யாருக்கும் கேட்டு விடுமோ என்று விழித்தவள் , அவன் வாயை தன் பூக்கரம் கொண்டு மூடியவள் ” மெதுவா மெதுவா … வெளியக் கேட்கும் “
தன் உதட்டின் மேல் பதித்திருந்த அவள் கரத்தை அழுத்தி உதட்டில் பதித்து முத்தமிட்டவன் , அதை விடாது அவன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.