Advertisement

நாட்கள் அழகாக நகர , அன்றோடு அனன்யாவுக்கு நான்கு முடிந்து ஐந்தாம் மாதம் துவங்கியது. அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க , சட்டென்று பேச்சு தடைபட , என்னவென்று அவள் முகம் பார்த்த ராதிகாவுக்கு ….அனுவின் முகத்தில் தெரிந்த ஒரு பொலிவு அவளை பேரழகியாக காட்ட , மெதுவாக எழுந்து அனன்யா அறைக்குள் சென்றாள்.

அறைக்குள் அவள் சென்றதும் இரு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவுக்குள்ளும் ஏதோ ஒரு மாற்றம் ….அவளும் குழந்தைகளை பெரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு அறைக்குச் சென்று விட்டாள்.

முதலில் வீட்டுக்கு வந்த ரமேஷ் மனைவியைத் தேடி ஓடினான்.ஜானகி “என்னப்பா இந்த நேரத்துல “

“ஒன்னுமில்ல அத்த ….அரவிந்த் ஒரு பேப்பர் எடுத்துட்டு வரச் சொன்னான்… அதான்” என்றவன் நிற்காது அறைக்குச் சென்று விட்டான் . “அப்பா என்று பின்னால் ஓடி வந்த மகனையும் தூக்கிக் கொண்டு அறைக்குச் செல்ல அனன்யா , கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் … “

” பப்ளி….” என்றவன் .. அருகில் சென்று கட்டிலில் மகனை இறக்கிவிட்டு மனைவியின் வயிற்றில் கை வைக்க …. குழந்தையின் அசைவை உணர்ந்தவன் ,

கண்கள் கலங்க , ” பப்ளி…. ம்மா எங்க அம்மா….” என வயிற்றில் முத்தமிட , குழந்தை மறுபடி அசைய மறுபடி மறுபடி முத்தமிட , பார்த்துக் கொண்டிருந்த மகனும் முத்தமிட … கூச்சத்தில் நெளிந்தவள் ,

“ச்சூ அப்பாவும் பிள்ளையும் என்ன பண்றீங்க….. போதுமா உங்கம்மா அசையறத … முதல்ல உங்கள கூப்பிட்டு தான் சொல்லிருக்கேன் ….”

“ம் … இவ்வளவு நேரம் எங்கம்மாவுக்கு , இப்ப உங்கம்மாவுக்கு ” என்று மகனிடம் சொன்னவன் கன்னத்திலும் நெற்றியிலும் அழுத்தமாய் இதழ் பதிக்க , தந்தையைப் போலவே மகனும் பதிக்க…….எந்த பெண்ணுக்குமே வார்த்தையால் அந்த உணர்வுகளை சொல்ல இயலாது… அனுவும் அப்படி தான் இருந்தாள். மனைவின் உணர்ச்சிப் பெருக்கான முகத்தைப் பார்த்தவன் , காதில் மென்மையாக முத்தமிட்டு ,

” என் பொண்டாட்டிக்கு ஸ்பெஷல் கிஸ் நைட் ஸ்பெஷலான இடத்துல ” என்று அவளை சிவக்க வைத்து தோளோடு அணைத்துக் கொண்டான்.

பேரனோடு விளையாடிக் கொண்டிருந்த ஜானகி , அடுத்து மகன் கார் வருவதைப் பார்த்து விட்டு , “என்னப்பா இப்..….” என்று ஆரம்பிக்கவும் , “அது மா ரமேஷ் கிட்ட ஒரு ஃபைல் கொடுக்கணும் அதான் … ” என்றவன் அவன் மகன் “ப்பா” என ஓடிவரவும்…. அவனையும் தூக்கிக் கொண்டு மாடியேறியவன் அறைக்கு ஓடினான்.

கணவனைக் கண்டதும் கட்டிலிலிருந்து புன்னகையுடன் எழுந்தவள் அருகே வந்தவன் , மகனிடம் பிஸ்கட் ஒன்றை தந்து கட்டிலில் விட்டவன் , மனைவியிடம் “அத்தான் டைரி மில்க் வேணும் இப்பவேனு சொன்னதால … உடனே கிளம்பி வந்தேன் டா ….ம்ம் சாக்லேட் ஊட்டி விடவா….” என்றவன் … அதைப் பிய்க்கப் போக , அவனை தடுத்து கைப்பிடித்து அழைத்து அவர்களது சீமந்த போட்டோ அருகில் அழைத்துச் சென்று , அவன் கைகளை எடுத்து வயிற்றில் வைத்தாள்.

இப்படி ஒரு நிகழ்வை எதிர் பார்த்ததுதான் … இருந்தாலும் அரவிந்த்தின் முகத்தில் முதலில் அதிர்ச்சி அதன் பிறகு மகிழ்ச்சி இப்படியான கலவையான உணர்வுகள் தான் வெளிப்பட்டது. ஆனாலும் மகிழ்ச்சியே அதிகம் ஏற்பட அந்த போட்டோவில் இருப்பது போலவே , கரங்களை எடுத்து விட்டு முழங்காலிட்டு உதடுகளை வயிற்றில் ஒற்றினான்.நிமிர்ந்து பார்க்க கண்ணீரோடு அவனைப் பார்த்தவள் கண்களிலிருந்து உருண்டோடி வந்த கண்ணீர் துளி அரவிந்த் உதட்டில் பட , எழுந்தவன் உதடுகளை வைத்தே துடைத்து விட்டு , நெற்றியோடு முட்டி …..

” எப்படி கன்பர்ம் பண்ணிட்டியா… டியர்…. வா டாக்டர் கிட்ட போகலாம் ….” என்றவாறே அந்த சாக்லேட்டை பிய்த்து அவன் வாயில் வைத்து மகனறியாது மனைவியின் வாய்க்கு மாற்றி விட்டான்.

ஆனந்த கண்ணீரோடு அதைச் சுவைத்துக் கொண்டே அந்த பிரக்னன்ஸி டெஸ்ட் கிட்டை எடுத்துக் காட்டியவள் , அப்படியே கட்டிலில் அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். அவள் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவன், அவள் முகத்தை நின்றுக் கொண்டிருந்தவன் வயிற்றோடு அணைத்துப் பிடித்து ஆறுதல் படுத்தினான். பார்த்துக் கொண்டிருந்த மகனும் தாயின் பின்னால் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டான். அவனை தூக்கி முத்தமிட்டு கொஞ்சியவளை அப்படியே தூக்கிக் கொள்ளவும் , ராதிகா பயந்துப் போய் பார்க்க , மகனோ அப்படியொரு சிரிப்பு . இருவரையும் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வர , ரமேஷ் மகனைக் கையில் வைத்துக் கொண்டு மனைவியின் தோளில் கைப்போட்டு அணைத்து வெளியே வர இந்தக் காட்சியைக் கண்டவன் ,

“ஏன் பப்ளி உங்கண்ணன் மறுபடியும் பொண்டாட்டிய தூக்கிட்டு ஹாலுக்கு வாரான்….. அப்போ பிரஜுலுக்கு பொண்ணு ரெடி பண்ணிட்டானோ …..”

” அத்தான் இருக்கும் இருக்கும்… ‘. என்றவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வேகமாக அண்ணன் அருகில் வர ,

” அனுமா பார்த்து வாடா …. டேய் என்னடா பாப்பாவ இப்படி நடக்க விட்டு வேடிக்கைப் பார்க்கிற “

“இன்னும் நீ பீப்பா பாப்பாவா பெத்து தந்தாலும் நீ பாப்பானு சொன்னா அவ அப்படி தான் ஓடி வருவா…. “

” ண்ணா பாருங்கண்ணா….”

அதற்குள் ராதிகா இறங்கப் பார்க்க , ” உன்னைய யார் இப்ப இறங்க சொன்னா.. இரு ….”

“அத்தான் ….. அண்ணன் …..” என்று மெதுவாக சொன்னவளிடம் ,

“ஏம்மா …. மச்சான் எனக்கு மருமகள கூட்டிட்டு வரப்போறாரு போல…. எனக்கு இது சகஜம் தான் …. அவன் என் தங்கச்சிய கீழ இறக்கினான் இருக்கு அவனுக்கு “

“அண்ணி நிஜம் தானே…. அதான் உன் மருமக நமக்கு கூட விளையாட இன்னொரு ஆள் வரப்போகுதுனு துள்ளியிருக்கா போல …..” என தன் மகிழ்ச்சியையும் வெளியிட ,கீழிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜானகியும் தாயம்மாவும், மகனின் கையில் மருமகளைக் கண்டதுமே புரிந்துக் கொண்டவர்கள் பூஜையறை சென்று வேண்டிக் கொண்டு கையில் விபூதியோடு காத்திருந்தனர்.

மருமகனை தூக்கி கணவனிடம் தந்து விட்டு அனன்யாவும் மெல்ல நடந்து கீழே வந்தாள். மனைவியை வசதியாக கையால் ஏந்தி வந்து க்ழே இறக்கி விட்டவன் அம்மாவிடமும் தாயம்மா விடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

” எப்படி அத்த நான் சொல்லாமலே எல்லாருக்கும் தெரியுது….” என்று வெட்கப்பட்டவளிடம் ,

“அண்ணி நான் தான் அன்னைக்கே சொன்னேனே …., இப்படி அண்ணன் உன்ன கையில தூக்கிட்டு சுத்தும் போதே நாங்களாம் தெரிஞ்சுக்குவோம்….இனி உனக்கு நடையே கிடையாது….. மிதந்துட்டுத்தான் வருவ….” என்று கிண்டலடித்தாள்.

“சரி சரி பேசுனது போதும் ,முதல்ல ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போப்பா … பேரன நாங்கப் பார்த்துக்கிறோம்…” என்று அவர்களிடம் சொன்னவர் ,தாயம்மாவிடம் திரும்பி ,

“தாயம்மா , அரவிந்த் ஃபைல் கேட்டான்னு ரமேஷும் , ரமேஷ் ஃபைல் கேட்டான்னு அரவிந்தும் சொன்னாங்க … ஆனா ரெண்டு பேர் கைலயும் ஃபைலக் காணோம் ….” என சிரித்தார்.

இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் நமுட்டு சிரிப்பு சிரித்து ….” மாப்ள “

“மச்சான் ” என்றவர்கள் , ஒரு சேர, “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா….. ” என்றவாறு ஹைஃபை கொடுத்து ஓங்கி  சிரித்துக் கொண்டார்கள். பார்த்திருந்தவர்கள் அத்தனைப் பேர் முகத்திலும் புன்னகை.

ராதிகாவை முன்பு அழைத்துச் சென்ற மருத்துவரிடம் முன்பே ஃபோனில் தனியாகப் பேசிவிட்டு அழைத்துச் சென்றான்.

அவரும் ராதிகாவை பரிசோதித்து விட்டு … தற்போது அவள் நீண்ட காலமாக மாத்திரை மருந்துகள் எடுத்துள்ளதால் உடலில் அனைத்தும் சாதாரணமாக இருப்பதாக தெரிவித்தவர் பயப்படத் தேவையில்லை கர்ப்ப காலத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகளை மட்டும் பரிந்துரைத்தார். ஆனாலும் அரவிந்தால் திருப்தி அடைய முடியவில்லை. மனைவியை காரில் அமர வைத்து விட்டு வந்து சில ஆலோசனைகளை மருத்துவரிடம் பெற்ற பின் தான் திருப்தியடைந்தான்.

வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் ராதிகாவை விட்டு நகருவதில்லை. அவள் கூட நான் நல்லா இருக்கேன் பயப்படாதீங்க என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டாள் கேட்டால் தானே. இடையில் மதர் வந்துப் பார்த்து விட்டு சென்றார். இப்படியே இரண்டு மாதங்கள் செல்ல , அமுதாவுக்கு சீமந்தம் செய்யப் போவதாக தாயம்மா சொல்லி ,அவளை கோவைக்கு அழைத்துக் கொள்வதாக திட்டம். இந்நிலையில் ரமேஷிற்கு மூன்று நாள் பயணமாக வெளிநாடு சென்றாக வேண்டிய கட்டாயம்.

அரவிந்துக்கோ தங்கையின் உடல்நிலைக் கருதி அவனை அனுப்ப மனதில்லை … ராதிகாவை விட்டு இவனுக்கும் செல்ல மனதில்லை .. அது அவன் முகத்தில் நன்கு பிரதிபலிக்க என்னவென்றுக் கேட்டவளிடம் அவனும் மறையாது காரணம் சொல்ல , அவளோ…

“அத்தான் அனுக்கு இது ஏழாம் மாசம் அண்ணன் பக்கத்துல இருக்கிறது தான் நல்லது… ம்ம் முடிஞ்சா நீங்க போய்ட்டு வாங்களேன் …”

கண்கள் மின்ன ஆச்சரியமாக

, “ஏன்டா இது நீயா சொல்ற …தலை எதுவும் வலிக்கலையே ….. அன்னைக்கு நான் லண்டன் கிளம்புறேன் சொன்னதுக்கே என்னை பயமுறுத்திட்ட , அதுக்கு பயந்தே நான் எவ்வளவு லாஸ் ஆனாலும் பரவாயில்லனு எங்கயும் போறதில்ல….”

புன்னகை முகமாக “அத்தான் … நான் இப்போ நல்லாதான் இருக்கேன்… நாம எங்க இருந்தாலும் உங்க நினைவு எங்கிட்டயும் , என் நினைவு உங்க கிட்டயும் தான் இருக்கும் … அது ஒன்னே என்ன நல்லா வச்சுக்கும் ….. அது மட்டுமில்ல தாம்பத்தியம் கணவன் மனைவிக்கு ஒரு சிறந்த மருந்துங்கிறது என் விஷயத்துல சத்தியமான உண்மை…. நீங்களே பார்த்தீங்கள்ள , நாம சேர்ந்து வாழ ஆரம்பிச்சப் பிறகு நான் எப்பவாது சின்னதாக் கூட உடம்புல எந்த பிரச்சினையும் சொல்லலயே….. இப்படி ஒரு அன்பும் காதலும் பக்கத்துல நீங்க இருந்தாலும் தள்ளி இருந்தாலும் என்னை நல்லா வச்சிக்கும் …. ஒருவேளை அது தான் நான் காணாம போனப்பக் கூட என்னை உயிரோட உங்க கிட்ட வந்து சேர்த்திருக்கு…. நீங்க தைரியமா போய்ட்டு வாங்க …. உங்க ரதி இங்க நல்லாயிருப்பேன்…..”

நீயொரு காதல் சங்கீதம் ….

 

வாய்மொழி சொன்னால் தெய்வீகம் ….

 

             காதல் அழகானது……

Advertisement