மகிழ்ச்சிப் பொங்க வீட்டிற்கு வந்து இறங்கியிருந்தார்கள். குழந்தைகள் எட்டு மணிக்கெல்லாம் உறங்கிவிட ஹாலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்த ஜானகியிடமும் , தாயம்மாவிடமும் இரண்டொரு வார்த்தைகள் பேசியவள் அனன்யா அறைக்கு மகனைத் தேடி வேகமாக படியேறினாள்.
காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்த மகனைப் பார்த்து,
“ஏன்டாப்பா இரண்டே நாள்ல திரும்புறதுக்கா … அந்த ஆர்பாட்டம் பண்ணின ….”
“ம்மா உங்க மருமகளுக்கு மகனப் பார்க்காம இருக்க முடியலயாம் ….” என்று புன்னகையுடன் சொன்னவன் .
“ம்மா மணி ஒன்பதுதான் ஆகுது … வீட்டுக்கு கிளம்புவோமா “
மகனைத் தோளில் போட்டுக் கொண்டு அனன்யாவோடு படியிறங்கிக் கொண்டிருந்த ராதிகா , அரவிந்த் ஜானகியுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு புன்னகையுடன் வந்தமர்ந்தாள். அதற்குள் ரமேஷூம் வீட்டினுள் நுழைந்துக் கொண்டே ,
” மாப்ள, இல்லாத கல்யாண விருந்துக்கு அத்தைப் போறாங்களாம்….. நீ கிளம்பு கிளம்பு…. ” என தோளில் தட்ட ,அனைவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.
காரில் செல்லும் போது இடையில் ஒரு முறை விழித்தக் குழந்தை தாயையும் தந்தையையும் கண்டு மகிழ்ந்து … அவள் வைத்திருந்த பாலையும் குடித்துவிட்டு உறங்கியது. இரவில் வீடு வந்து சேர்ந்தவர்கள் மனதில் அப்படியொரு நிம்மதி.காரில் இருந்து இறங்கியவர்களை அவர்களது அவுட் ஹவுசில் இருந்த ஈஸ்வரியும் அவரது கணவரும் எதிர்கொள்ள , அவர்களை நிறுத்தி வைத்த அரவிந்த் , கையில் பணம் எடுத்து தந்து ஈஸ்வரி கணவரிடம்,
“நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு காலையிலயே பெரிய வண்டிய எடுத்துட்டு கிளம்புங்க , வரும் போது அம்மா தாயம்மாக்கூட வந்துருங்க” என்று விட்டு வீட்டினுள் செல்ல இருந்த ராதிகாவை ,
“ரதி ஒரு நிமிஷம் ” எனவும் ,என்னவென்று நின்றவள் அருகில் வந்தவன் , குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு அவளை கதவருகே நிற்கச் சொல்லிவிட்டுச் சென்றான்.
கதவைத் தாழிட்டு திரும்பியவள் , இப்போது அரவிந்தின் கையில் , தீடீரென்று தூக்கியதால் அரவிந்த் கழுத்தைக் கட்டிக் கொண்டவளிடம் ,
“ஸ்வீட்டி .. உனக்குத் தெரியுமா , இப்படித்தான் நம்ம வரவேற்பு முடிஞ்சு இங்க நம்ம மட்டும் முதல்ல வந்தோம்… அப்ப இப்படித்தான் உன்னையத் தூக்கிட்டு நம்ம ரூமுக்கு வந்தேன்…” என்றவாறே அவளை மாடியில் அவர்கள் அறைக்குத் தூக்கி வந்து படுக்கையில் விட்டான் .
அவன் கைகளில் மிதந்து வந்தவள் , படுக்கையில் விட்ட பிறகும் கைகளை எடுக்காமல் ,
“அத்தான் … எனக்கு நியாபகம் இல்லனாலும் …நீங்க இப்ப அதை ஞாபகமா சொல்றதும் ….ம்ம்” அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டே , ” இப்படித் தூக்கிட்டு வந்ததும் ….. ரொம்ப ஸ்வீட்டா … எப்படி சொல்றது … ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ….”
அருகில் மகன் படுத்திருந்த தொட்டில் போன்ற சிறிய கட்டிலைக் காட்டி ,
“இப்ப சொல்லுங்க சொல்லுங்க இல்ல ஸ்வீட்டி….. ” என்று அவள் உதட்டை விரல்கொண்டு குவித்தவன் ,
“டியர் அவர் எழுந்திருக்கிறதுக்குள்ள ப்ராக்டிகல் கிளாஸ் …. ஒகே யா…. அதற்கப்புறம் தியரி கிளாஸ் ஒகே யா….. ” என்றவன் அவளோடு சேர்ந்து கட்டிலில் சரிய ,
“அத்தா…….ன்ன்ன் ” என்று சிணுங்கியவளிடம்….
“அப்ப அப்ப பார்டிப் போறப்போ விஷ்கி …ரம் …. பீர்னு சும்மா ஒரு கிக்’க்கு .. கிக் க்குனு பிரண்ட்ஸ்சோட எடுத்துக்குவேன் ….. நீ இப்படி அத்தா….. ன்ன்னுக் கூப்பிடுற கிக்கே தனிதான்…..”
வேகமாக அவன் மீசையை இழுத்தவள்” என்ன ..நீங்க குடிப்பீங்களா…..”
” விட்றா…. விட்றா…. சும்மா ஒரு சிப் டியர்….. பார்ட்டிகல்ச்சர் டியர்…..”
“எதுனாலும்…. குடிக்கிறது எனக்குப் பிடிக்காது” என அவன் மீசையின் இரு பக்கமும் இழுத்தவளின் கையைப் பிடித்துக் கொண்டு ,
“ஏற்கனவே பார்ட்டி போகும் போது எல்லாம் என் கன்னத்தைப் பிடிச்சி கடிச்சி இங்க பாரு…. எத்தனை பல் தடம்….” என்றவன் விளையாட்டுப் பேச்சைக் கைவிட்டு ,
“அன்னைக்கு கூட …. என்றவன்” அந்தப் பேச்சை நிறுத்தி , நீ எப்போ காணாம போனியோ….அப்ப இருந்து சுத்தமா நிறுத்திட்டேன்… சில சமயம் உன்னையக் காணோம்ங்கிற டென்ஷன்ல இருக்கும் போது ரமேஷ் எடுத்துக்கோனு சொல்வான்….. உன்னைய மறக்க வைக்கிற எதுவும் எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன் …… “கணவனை நிமிர்ந்துப் பார்த்தவள் ,
“அப்ப நீங்க என்னை நொடிக் கூட மறக்கல….”
“அது எப்படி மறப்பேன்டா….” என நெற்றியில் முத்தம் வைத்தவனிடம் ,
கண்களில் நீர் பொங்க”நான் மறந்துட்டேனே அத்தான்.. இப்படி ஒரு காதலன ….ஒரு அருமையான கணவன … என் உயிரும் உடலுமா என் வயித்துக்குள்ள பத்து மாசமா இருந்த நம்ம குழந்தையையே மறந்து இருந்த நான் என்ன பொண்ணு …..” அவனை இறுக கழுத்தோடு கட்டிக் கொண்டு ,
“எனக்கு …..எனக்கு .….உங்களுக்கு காதலியா … மனைவியா …. ஏன் என் பிள்ளைக்கு அம்மாவா இருக்கக் கூட தகுதியில்லை…..” என அழுதவளிடம் ,
“ஸ்வீட்டி … உனக்கா தகுதியில்ல …. உன் காதல … உன் அன்ப உன்னை மாதிரி யாரும் நிரூபிச்சிருக்க முடியாது தெரியுமா ….”
தேம்பிக் கொண்டே , ” எப்படி நிரூபிச்சேனாம்….ம் சொல்லுங்க எப்படி நிரூபிச்சேன்….”
“அது… ” என்று ஆரம்பித்தவன் , மகன் சினுங்கிக்கொண்டே திரும்பி ஒருக்களித்துப் படுப்பதைக் கண்டு ,
“போதும் தியரி …. முதலில் செய்முறை விளக்கம் தான்…. ” என்றவன் …. அவளைப் புரட்டி மேலும், “அத்தா….. ன்ன் ” என பேச முயன்றவளை பேச இயலாதபடி அவள் இதழ்களைச் சிறைச் செய்து ,முதலில் செய்முறை விளக்கம் தான் தந்தான். ஓர் நிறைவான கூடலுக்குப் பின் , தன் வெற்று மார்பில் தலை வைத்திருந்தவளின் கூந்தலை கோதிக் கொண்டே ,
“ஸ்வீட்டி ….இப்ப நீ என்ன மனநிலைல இருக்கியோ தெரியாது ….. ஆனா நான் இப்ப இந்த நொடி ரொம்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்னு தான் சொல்வேன் …..”
அவன் முகத்தருகே முகம் கொண்டு வந்தவள், “நான் எப்படி மனநிலைனா….என் உயிர் ” எனப் பேச வந்தவள் வாயினை கரம் கொண்டு மூடியவன், அவளது அடுத்த வார்த்தை என்னவாக இருக்கும் என்பதை அறிந்தவனாதலால் ,
“நான் எதுக்கு உங்கிட்ட அப்படி சொல்றேன்னா….. இந்த நொடி இருக்கிற சந்தோஷத்த விட பல ஆயிரம் மடங்கு நாம சந்தோஷமா இருந்தோம்…. கணவன் மனைவியே ஆனாலும் நம்ம அந்தரத்த பகிர்ந்து நாம அப்படி இருந்தோம் ….இப்படி இந்தோம்னு வார்த்தையாலயோ…. “அவள் கன்னத்தில் முத்தம் வைத்து ,
” இப்படி உடல் செய்கையாலயோ தெரிஞ்சுக்கவோ புரிஞ்சுக்கவோ முடியாது டியர்…. நம்ம மனசு அதை உணரனும் டா ….. நான் உனக்கு உணர வச்சேன்னு நினைக்கிறேன்…. ஆனால் நீ உன் உயிரக் …..”பட்டென்று அவன் முகம் பார்த்து ,
” என்ன … என் உயிரக் கொடுத்தேனா… நான் எதுவும் சூசை… “
“ம்ச் என்னடா நீ இப்படியே பேசுற … நம்ம ஸ்ரீய எனக்கு கொடுத்து உன் லவ்வ உணர வச்சேன்னு சொல்ல வந்தேன்…..அதுபோல இப்ப உள்ள வாழ்க்கைய நாம ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சு , புரிஞ்சு உடல் பிளஸ் மனம் ரெண்டுலயும் தான் சொல்றேன் உணர்ந்து வாழ்வோம் சரியா…..”
“ம்…. ஆமாமத்தான்….அவர் தான இப்பவும் உங்ககிட்ட என்னையக் கூட்டிட்டு வந்தார் “.(மகனைக் காட்டியவள் ) எப்படியோ பேச்சுத் திரும்பியதே என்று ஆசுவாசமானவன் அதன் பிறகு மேலும் பேச்சுக்கள் வளராமல் பார்த்துக் கொண்டான்.
அதன் பிறகு ராதிகாவுக்கு சொர்க்கம் என்றால் இது தான் என்பதை அரவிந்த் அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தான். பழைய வாழ்க்கை ஞாபகம் இல்லை என்றாலும் புதிய வாழ்க்கை அவளை மிகவும் மகிழ்ச்சியாகவே வைத்திருந்தது. நாட்கள் அனைவருக்குமே அழகாக நகர்ந்தது என்றே சொல்லலாம்.
முடிந்த வரை இரவில் பள்ளியறை பாடத்தோடு பள்ளிப் பாடங்களையும் அவளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். அலுவலகம் வந்து வேலைக்கற்றுக் கொள்ள முயற்சி செய்ய சொல்ல … தன்னால் முடியாது என்றுப் பின் வாங்கியவளுக்கு , முதன் முறையாக அவன் ஊரில் இல்லாத போது தொழிற்சாலை பிரச்சினைகளை சமாளித்த சிசிடிவி காட்சிகளை அவளுக்கு காட்டி,
“அங்கப் பார் நான் பக்கத்துல இல்லனாலும் , நீ எவ்வளவு அழகா சமாளிச்சிருக்கனு…. ப்ளீஸ்டா வாழ்க்கைல என்னால முடியாது முடியாதுனு சொல்லிட்டே இருந்தா கடைசி வரை நம்மாள முடியாமலே போயிரும் ….. அதே நாம என்னால முடியும் என்னால முடியும்னு சொல்லிட்டே இருந்தோம்னு வச்சுக்கோ …. கண்டிப்பா அது நல்ல படியா முடிஞ்சேத்தீரும்…. என்னையே பாரு … தாத்தா இறந்தப் போ தான் காலேஜ் முடிச்சுருந்தேன்…. மேல ஃபாரின் போய் படிச்சுட்டு வரலாம் நினைச்சுருந்தேன்….ஆனா சூழ்நிலை பிஸ்னஸ் பார்க்க வச்சது…. முதல்ல என்னால முடியுமானு இருந்துச்சு தெரியுமா….. என் குழப்பத்த யாருகிட்ட ஷேர் பண்ணனே தெரியல…. அப்புறம் ரமேஷ நீ படி நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி தட்டுத்தடுமாறி கத்துக்கிட்டு இன்னைக்கு இங்க வந்து நிக்கிறேன்.”