Advertisement

அதன் பின் வந்த நாட்கள் இருவருக்குமே ஒருமன நிறைவோடு தான் சென்றுக் கொண்டிருந்தது. அன்றிலிருந்து அரவிந்திடம் ஒதுக்கம் இன்றி இயல்பாக பேச ஆரம்பித்தாள் ராதிகா … பேச வைத்திருந்தான் அரவிந்த் என்பதே சரி… குறும்பு பேச்சு பேசியே அவளை மயக்கினான் எனலாம்.

கணவனோடு உடல் ஒன்றவில்லை என்றாலும் மனம் ஒன்றித்தான் இருந்தது. ஒரு வாரம் கழித்து இரண்டு மூன்று நாட்களுக்கான உடமைகளை எடுத்து வைக்கச் சொன்னவன். ஜானகி தாயம்மா மனைவி மகன் எனத் திருப்பூர் அழைத்துச் சென்றான்.

“ஏன் பா இங்க வரதுக்கா எம் மருமகளை அதை எடுத்துக் கோஇதை எடுத்துக்கோனு அந்தப் பாடு படுத்தின ….” என்ற ஜானகியிடம்,

“ம்மா … நீங்க ரெண்டு பேரும் தான் இங்க இருக்கப் போறீங்க…. நாங்க செகன்ட் ஹனிமூன் போறோம்” என ராதிகாவைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டே உரக்கச் சொல்லவும் , முகம் சிவந்த ராதிகா ,

“ஐயோ … அனு   உங்கண்ணன் பேச்சைப் பாரு” என அவள் முதுகுப் புறம் மறைய ,

ஜானகி புன்னகையோடு , “தாராளமா போய்ட்டு வாங்க … ஆனா எம் பேரன எங்களுக்கு துணைக்கு விட்டுட்டுப் போங்க.”

“ம்மா … ஸ்ரீ குட்டி அவங்க மாமா அத்தைக் கூட யானைப் பார்க்க வராரு அப்படித்தானே ….. “

அவளுக்குத் தெரியும் யானைப் பார்க்க என்றால் அத்தையை விட்டு நகர மாட்டான் அவள் மருமகன் என்று. தந்தையின் மடியிலிருந்து இறங்கி அழகாக அத்தையிடம் நடந்து சென்றக் குழந்தை , “அத்த .. நாண … அத்த நாண” என்ற மருமகனை தூக்கிக் கொண்டவள் , முத்தமிட்டு மகனை வைத்திருந்த கணவனிடம் சென்று,

“அத்தான் ரெண்டு பேரையும் கார்ல உக்கார வையுங்க , அப்புறம் அண்ணன் கிளம்புறப்ப இவர் மனசு மாறிடுவார் …. இல்ல எங்கண்ணன் அண்ணி மனசுமாறிடுவாங்க ….” என்றாள்.

மருமகனை வாங்கிக் கொண்டே , “பப்ளி நாம எப்போ செகண்ட் ஹனிமூன் போறது …..”

கணவனின் பேச்சில் வெட்கப்பட்டுக் கொண்டே …. “ம்….. உங்கம்மாவ கூட்டிட்டு வந்ததும் போலாம்….”

“எங்கம்மாவ கூப்பிடத்தானே ஹனிமூன் வான்னு கூப்பிடுறேன்…”

“ஷ் ….ஐயோ அத்தான் …. ப்ளீஸ் நாம அப்புறம்  பேசலாம்…” என்றவள் திரும்பி ராதிகா அருகில் சென்றாள்.

அரவிந்த் அருகில் வந்த ரமேஷ் , “மச்சான் ….” என , அரவிந்தும் ,

“மாப்ள. … ” என இருவரும் நமட்டுச் சிரிப்புடன் ராகம் இழுத்து அழைத்து வாய் விட்டுச் சிரிக்க , தந்தைமார் இருவரும் சிரிப்பதைப் பார்த்து குழந்தைகளும் சிரிக்க , இவர்களது இந்த சிரிப்பை பார்த்து பெண்கள் அனைவரும் சிரிக்க ….வெகு நாட்களுக்குப் பின் திரும்பிய இந்த சிரிப்பு சத்தம் எப்போதும் கேட்க வேண்டும் என ஜானகி கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டார்.

ராதிகா அனன்யாவிடம் , ” அனு … திடீர்னு உங்கண்ணா இப்படி சொல்லுவார் நினைக்கல…. உனக்கு ரெண்டு பேரையும் சமாளிக்கிறது …… திடீர்னு அழுதா….. உனக்கு முடியும் தான் …  ஆனாலும் … ” எனத் தயங்க,

அவள் கைப் பிடித்த அனு , “அண்ணி எங்கண்ணன் எனக்கு அப்பா இல்லாத குறையே தெரியாம தகப்பன் ஸ்தானத்துல இருந்து பார்த்துக்கிட்டார் … அதே போல எங்கண்ணன் பிள்ளைக்கு ……” என்றவள் கண்ணீரோடு ,

“பிரஜுல்  பிறந்த பத்து நாள்லயே உனக்கும் வலி வந்து அவர் பிறந்துட்டார் …. உனக்கு என்னாச்சுனு அண்ணன் சொன்னாங்களா தெரியாது…..நீ சுயநினைவுல இல்லனாலும் நீ தான் அவருக்கு பசியமத்துவ …… தீடீர்னு நீ காணாம போனதும் , அவருக்கு புட்டிபால் ஒத்துக்காம பிஞ்சுகால்ல ட்ரிப்ஸ் போட்டாங்க அண்ணி ….” அன்றைய நினைவில் அழுதவள்…. “அப்ப அப்ப எனக்கு வேறு வழி தெரியல , எங்கண்ணன் பிள்ளைக்கு நான் தாயாவே மாறி தாய்ப்பால் தந்தேன். எனக்கு ஸ்ரீயும் பிரஜுலும் வேற வேற இல்லண்ணி …. நீ கவலைப்படாம அண்ணன் கூட போய்ட்டு வா….. எங்கண்ணன் முகத்துல ரொம்ப நாள் கழிச்சு இந்த சிரிப்பப் பார்க்கிறேன் ….. அது உன்னாலதான்…. நீ அண்ணன மட்டும் கவனி , நான் அவர பார்த்துக்கிறேன்.

அனன்யா சொல்ல சொல்ல உணர்ச்சிவசப்பட்ட ராதிகா அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.  சில குடும்பங்களில் இப்படியும் நாத்தனார் அண்ணி பாசப்பிணைப்புகள் இருப்பதே நமது குடும்ப அமைப்புகள் சிதையாமல் உயிர்ப்போடு இருக்க காரணம்.

ஓர் அழகிய குடும்பம் தனக்கு கிடைத்ததை எண்ணி கடவுளுக்கு நன்றி சொன்ன ராதிகா , கணவனுடன் காரில் ஏறி அருகில் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ” எல்லாம் இவனால் , இவனது காதலால்” என்று விழியகற்றாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பார்வை வித்தியாசத்தை உணர்ந்த அரவிந்த் , “ஸ்வீட்டி…. நீ இப்படி என்னையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டுருந்தா நான் எப்படி வண்டி ஓட்டுவேன்.”

இருக்கையிலிருந்து நன்கு திரும்பி முழங்கையை முட்டுக் கொடுத்து கன்னத்தில் கை வைத்து இன்னும் நன்றாக பார்க்க ஆரம்பித்தாள்.

அவனால் அதற்கு மேல் ட்ரைவ் செய்ய இயலாது காரை ஓரமாக நிறுத்தி , “என்னடா இப்படி சைட் அடிச்சா நான் சும்மா இருக்க முடியாதே…. “

” என் புருஷன நான் சைட் அடிக்கிறேன் … உங்களயார் சும்மா இருக்க சொன்னா…..வேணும்னா ‘ ச்சும்மா’ கொடுங்க….. என நாக்கை உதட்டுள்ளே சுழட்டி புருவம் ஏற்றி இறக்கியவளை …..”

“டேய் டேய் இப்படி உசுப்பேத்துனா கார்னுக்கூடப் பார்க்க மாட்டேன் … அப்படியே அந்த கண்ணு ரெண்டுலயும் ……”

“கண்ணு ரெண்டுலயும் ….ம்….”

அவளருகில் வந்தவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி கண்களிரண்டிலும் முத்தம் பதித்து….. ” இப்படி முத்தம் கொடுப்பேன்” என்றான்.

புன்னகையோடு , ” நானும் ‘ச்சும்மா ‘கொடுங்கனு தானே சொன்னேன். ஹிந்தில ‘ ச்சும்மா’ னா என்னனுப் பாருங்க….” என்றுப் புன்னகைத்தவள் ,

“ஆமா அத்தான் எப்பவும் இந்த கண்கள் மட்டுமே கிஃப்ட் வாங்குது ஏன் “

அவளைக் குறும்புடன் பார்த்துக் கொண்டே , ” இங்க இருந்து இங்க வரைக்கும் நான் கிஃப்ட் தரப்போய் தான் ….. ஸ்ரீராம் ங்கிற பெரிய கிஃப்ட் எனக்கு கிடைச்சது … ” என அவளது உச்சந்தலையிலும் , கால் பாதத்தையும் தொட்டுக் காட்ட … அவன் தொடுகையில் உடல் சிலிர்த்தாலும் ….

அவனது மீசையை பிடித்து இழுத்தவள் ….” நீங்க இருக்கீங்களே… சொல்லுங்க சொல்லுங்க என் கண் என்ன ஸ்பெஷல்…. “

” இந்த கண்கள் காட்டுற வித்தையில மயங்கித்தான் நான் கா ….. உன்னை விரும்ப ஆரம்பிச்சதே … ஆமா என் ஸ்வீட்டிக்கு எத்தனையோ லாங்வேஜ்ல என் ஃபீலிங்க்ஸ் புரிய வைக்க பார்த்தேன் … இப்ப மலையாளம் ஹிந்தினு புகுந்து விளையாடுறா… அதுவும் ‘கிஸ்’ க்கான மீனிங்லாம் தெரிஞ்சு வச்சிருக்கடா…. தேறிட்ட போ …..”

புன்னகைத்தவள் …. “சரி நாம எப்படி லவ் பண்ணோம்…, எப்படி கல்யாணம் பண்ணோம் அதைச் சொல்லுங்களேன்….”

காரை ஸ்டார்ட் செய்து ஓட்டிக் கொண்டே , “மேடம் … நாம எப்படி லவ் பண்ணோம்… னு கேட்கறீங்களே அந்த கேள்வியே தப்பு … நான் தான் லவ் பண்ணேன் …நீ லவ் அப்படினு சொன்னாலே ஏதோ வெடிகுண்டு சத்தம் கேட்டது போல காதை மூடிக்குவ….. ” என்று புன்னகைத்தான்.

“அப்படியா …. எப்படி அத்தான் … காதல் ஒரு அழகான உணர்வு…. அதைப் போய் எப்படி வெறுத்தேன். முன்ன எப்படியோ தெரியாது …. ஊட்டில உங்களப் பார்த்ததுல இருந்து ஏதோ ஒரு சலனம் …. ஒரே குழப்பம் … அது என்ன ஃபீலிங் அப்படினு யோசிச்சுட்டே இருந்தேன். நீங்க இல்லாம என்னால இருக்கவே முடியாதுனு அன்னைக்கு திருப்பூர்ல எனக்கு கிஸ் பண்ணப்போதான் தெரிஞ்சது. அதுக்கு பேர் தான் காதல்னு எனக்குத் தெரிஞ்சது…..

உங்க மேல காதல் வந்த நாள்லருந்து நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அத்தான்.… “

காரை நிறுத்திவிட்டு திகைத்த விழிகளில்  அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் கரங்களை தன் கன்னங்களில் வைத்துக் கொண்டவள்,

கலங்கிய விழிகளோடும் , சிவந்த முகத்தோடும் அரவிந்தின் வலது உள்ளங்கையில் முத்தம் பதித்து ,

“காதல் ரொம்ப அழகானது அத்தான்… என்னை இன்னைக்கு உயிர்ப்போடு வச்சுட்டு இருக்கிறது உங்க மேல உள்ள காதல் தான் … Love is beautiful ….. ரொம்ப ரொம்ப அழகான உணர்வு ..அத்தான். ….

ஐ லவ் யூ….ஐ லவ் யூ சோ மச்….என்றவாறு அவன் கரங்களில் மறுபடி மறுபடி இதழ் பதித்தாள் அரவிந்தின் ரதி ……..

                     இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ஏன் இனிக்கின்றது……..

                      காதல் அழகானது……

Advertisement