Advertisement

“எங்க வீட்டிலயும் நிறைய கடன் இருந்தது மது. அதனால தான் நிறைய செய்ய முடியலை. ஆனா இனி செய்யலாம் மது. ஆனா அவங்க செய்யுற நிலைமைல இல்லை. நல்லா இருக்காங்க”
“ஹ்ம்ம் நான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி டாக்டர்க்கு படிச்சுட்டேன் பாத்தீங்களா?”
“சந்தோசம் மது. இவ்வளவு வருசம் சந்தோசமே இல்லாம போச்சு மது. கண்டிப்பா வேலைக்கு போகணும்னு போனேன். சிரிப்பு கூட அடுத்தவங்களுக்காக தான் இருந்தது. உன்னை பாத்த அப்புறம் தான் உண்மையான சந்தோசத்தையே உணருறேன்”
“நானும் தான், பேய் மாதிரி படிப்பிலே தான் என் கவனத்தை செலுத்தினேன். கொஞ்ச நேரம் தனியா இருந்தா கூட உங்க ஞாபகம் வந்துரும்.ரொம்ப வலிக்கும். உங்களை பாக்க தான் இந்த ஊருக்கே வந்தேன். அன்னைக்கு பாத்தப்ப அப்படியே உங்க கிட்ட ஓடி  வரணும் போல இருந்தது. ஆனா உங்களுக்கு கோபம் இருக்கும் என்னை வெறுத்துருப்பீங்கன்னு நினைச்சேன். அதனால தான் ஒதுங்கியே இருந்தேன். வளர் க்ரேட் தெரியுமா? வீட்டுக்கு டியூசன் படிக்க வரும் போது அவ கிட்ட இருக்குறதே எனக்கு உங்க பக்கத்துல இருக்குற மாதிரி இருந்தது. இப்ப நானும் சந்தோசமா இருக்கேன். இனிமே நாம பழைய விசயம் எதையுமே பேச கூடாது சரியா?”
“ஹ்ம்ம் இனி ஏன் பேச போறேன், பேச வேண்டிய நிறைய விசயம் இருக்கு”, என்று சொன்னவனின் விரல்கள் அவள் உடலில் ஊர்ந்தது. செல்ல சிணுங்களுடன் அவன் மார்பில் சாய்ந்தாள் மது.
அடுத்த நாள் காலையிலே எழுந்து இருவரும் குளித்து முடித்து டீ குடித்து கொண்டிருக்கும் போது மொத்த குடும்பமும் வந்தது. பின் பூங்காவனத்துடன் சேர்ந்து சமையலுக்கு உதவி செய்தாள் மது.
அடுத்த இரண்டு நாளில் ஊட்டிக்கு அழைத்து சென்றான். மூன்று நாட்கள் தேனிலவை கொண்டாடினார்கள். அதன் பின் வாழ்க்கை சாதாரணமாக சென்றது.
வளர் காலேஜ் சேர வேண்டிய நாளும் வந்தது. காலையில் சென்னையில் இறங்கியதும் மித்ரன் வீட்டுக்கு தான் இருவரும் சென்றார்கள். அங்கே குளித்து முடித்து கிளம்பிய செழியனையும் வளரையும் மித்ரனே காலேஜ்க்கு  அழைத்து சென்றான்.
அங்கே அட்மிசன் போடுவதுக்கும், அவளுக்கு ஹாஸ்டலுக்கு தேவையான பொருள்கள் வாங்கும் போதும் மித்ரன் அவர்கள் கூடவே இருந்தான்.
“நீங்க போங்க மித்ரன் நாங்க பாத்துக்குறோம்”, என்று செழியன் சொன்னதுக்கு “எனக்கு இன்னைக்கு லீவ் தான? நேரம் போகட்டும்”, என்று முடித்து விட்டான் .
வளரோ இருதலை கொல்லி எறும்பாக தவித்தாள். என்று மித்ரன் பார்வையில் வித்தியாசத்தை கண்டாளோ அன்றில் இருந்து ஊமையாகி போனாள். ஆனாலும் அவன் பார்க்காத போது அவள் அவனை கவனிக்க தான் செய்தாள். அவனுடன் சகஜமாக பேச  எதுவோ ஒன்று தடுத்தது.
அவளை காலேஜ் ஹாஸ்டலில் விட்டு விட்டு மித்ரன் வீட்டுக்கு சென்று தன்னுடைய பேகை எடுத்து கொண்டு ஊருக்கு கிளம்பினான் செழியன்.
ஊரில் செழியன் மது காதல் வாழ்க்கை அழகானதாக இருந்தது. ஆனால் மித்ரனோ நிம்மதி இல்லாமல் தவித்தான்.
வேண்டா வெறுப்பாக வேலைக்கு செல்வதும் வீட்டுக்கு வந்து தனிமையில் முடங்குவதுமாக இருந்தவனை கண்டு பெற்றோர்கள் தான் வருந்தினார்கள்.
அன்று காலை அவன் வேலைக்கு கிளம்பும் போது “ஏன் மித்ரா இப்படி இருக்க? எங்களுக்கு கவலையா இருக்கு உன்னை நினைச்சு”, என்று பேச்சை ஆரம்பித்தார் கோகுல்.
எதுவும் சொல்லாமல் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் “எனக்கே தெரியுது பா நான் முன்ன மாதிரி இல்லைன்னு. நான் இப்படி இருக்குறது எனக்கே பிடிக்கலை. ஆனா என்னோட யோசனை எல்லாம் ஒரு விசயத்துல தான் இருக்கு. நான் வெளிய வரணும்னு நினைக்கிறேன் ஆனா முடியலை. நான் ஒரு ரெண்டு வருசம் பாரின் போய்ட்டு வரட்டா பா? எனக்கு கொஞ்சம் ரிலாக்சேஷன் தேவை. அது வர நீங்க ஹாஸ்ப்பிட்டலை பாத்துக்கோங்களேன்”, என்றான்.
“நீ படிக்க போறது நல்ல விசயம் தான். தாரளமா போய்ட்டு வா”
“ஹ்ம்ம் சரி, நான் அதுக்கான வேலையை பாக்குறேன். இப்ப ஹாஸ்பிட்டல் போறேன். அம்மா கிட்ட சொல்லிருங்க ”, என்று சொல்லி விட்டு ஹாஸ்பிட்டல் சென்றவனுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது.
நோயாளிகளை பார்வை இட்டு கொண்டிருந்தவன் அடுத்த நோயாளிக்காக காத்திருக்கும் போது உள்ளே வந்தது அவனுடைய வளரே தான்.
“என் கண்ணுக்கு அவ மாதிரியே தெரியுது?”, என்று கண்ணை கசக்கி கொண்டு பார்த்தான்.
அவன் அதிர்ச்சியில் அவளுக்கு சிரிப்பு வந்தது. “நான் வளர் தான் டாக்டர் சார்”, என்றாள் வளர்.
அவளுடைய புன்னகையில் உயிர்த்தவன் “ஏய் வளர் என்ன ஆச்சு உனக்கு? வா உக்காரு”, என்றான்.
“லைட்டா ஃபீவர்”
“லைட்டான்னு நான் செக் பண்றேன். சரி எதனால ஃபீவர் வந்துச்சு? வீட்டு ஞாபகமா?”
“அதுவும் தான். ஆனா வேற ஒரு விசயமும் மனசுக்கு கஷ்டமா இருக்கு”
“என்ன விசயம்?”
“உங்களால தான்”
அதிர்ச்சியில் விழித்தவன் “என்னாலயா?”, என்று கேட்டான்.
“ஹ்ம்ம், உங்களுக்கு என்ன தான் ஆச்சு?”\
“எனக்கா? எனக்கு என்ன?”
“நீங்க ஆளே மாறி போய்ட்டிங்க தெரியுமா? தாடி எல்லாம் வச்சு நல்லாவே இல்லை. என்கிட்ட கூட சரியாவே பேசுறது இல்ல”
“காதலை சொல்லலாமா?”, என்று யோசித்தவன் அவள் கூறும் மறுப்பை தாங்க  முடியாது என்பதால் “அதெல்லாம் ஒண்ணும் இல்லை மா. சரி இங்க திரும்பு டெஸ்ட் பண்றேன்”, என்றான்.
“அப்புறம் டெஸ்ட் பண்ணுங்க. முதல்ல எனக்கு பதில் சொல்லுங்க”
“இதை விட வேற சான்ஸ் கிடைக்காது மித்ரா சொல்லிரு”, என்று நினைத்து கொண்டு “அப்படி எல்லாம் இல்லை. நான் பாரின்க்கு போக போறேன். அந்த யோசனை தான்”, என்றான்.
“பாரின்க்கா? எதுக்கு?”
“படிக்க. எனக்கும் கொஞ்சம் ரிலாக்சேஷன் தேவை அதான்”
“ரிலாக்ஸ் ஆகுர அளவுக்கு உங்களுக்கு என்ன பிராப்லம்”
“விடு வளர்”
“நான் தான் காரணம் அப்படி தான?”
“வளர்”
“என்ன அதிர்ச்சியாகுறீங்க? நீங்க இப்படி இருக்குறதுக்கு நான் தான் காரணம்னு தெரியும். நீங்க என்னை விரும்புறீங்களா?”
அதிர்ச்சியில் விழித்தவன் அமைதியாக மண்டையை ஆட்டினான். பின் ஒரு பெரு மூச்சை வெளியேற்றி விட்டு “சாரி வளர். தப்புனு தெரியும். ஆனா நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற. உன் கூடவே இருக்கணும் போல இருக்கு. இத்தனை வருசம் எத்தனையோ பொண்ணுங்களை பாத்திருந்தாலும் உன்னை மாதிரி யாரும் என்னை டிஸ்டர்ப் பண்ணது இல்லை. ஆனா இது தப்புன்னு தெரியும். பட் உன்னை விரும்புறேன் வளர். உன்னை மறக்க தான் பாரின் போறேன்”, என்றான்.
“ஓ அப்ப பாரின்க்கு போனா என்னை மறந்துருவீங்களா?”
“முயற்சி பண்ணனும்… ஏய், நீ என்ன சிரிக்கிற? அப்ப என் மேல கோபம் இல்லையா? என்னை உனக்கும் பிடிச்சிருக்கா?”, என்று   
அதிர்ச்சியாக கேட்டான்.
“ஹ்ம்ம் உங்களை வெறுக்க எனக்கு எந்த ரீசனும் இல்லையே. அது மட்டுமில்லாம உங்க பார்வை என்கிட்ட எதையோ சொல்ல வரது புரிஞ்சது. ஆனா என்னனு அப்ப புரியலை. இப்ப நல்ல யோசிச்ச அப்புறம் புரியுது, நான் வயசுக்கு தகுந்த மாதிரி பேசுறேனா தெரியலை. ஆனா எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு”
“ஏய், குட்டி மா”, என்று கத்திய படியே அவளை கட்டி பிடிக்க வந்தவன் “இப்ப அவளோட மனசை கெடுக்க கூடாது”, என்று முடிவெடுத்து  தன்னை அடக்கி கொண்டான்.
“நான் உன்னோட அதிக வயசு மூத்தவன் வளர். அதான் எனக்கு பயமா இருக்கு. உங்க வீட்டில கூட  ஒத்துக்க மாட்டாங்க. எனக்கு இருபத்தி ஆறு ஆக போகுது. உனக்கு பதினேழு தான் ஆகுது”
“எனக்கு பதினேழுனு யார் சொன்னா? எனக்கு வயசு பத்தொன்பது. ஏழு வயசு டிஃபரென்ஸ் பெரிய வித்தியாசம் இல்லை. எங்க அம்மா அப்பாக்கு பன்னிரெண்டு வயசு வித்தியாசம்”
“ஏய் நிஜமாவா?”
“ஹ்ம்ம் ஆமா”
“எப்படி?”
“ரெண்டு வருசம் செவன்த், ரெண்டு வருசம் எய்ட்த் படிச்சிருக்கேன்”
“நீ பெயில் ஆகிட்டியா? நீ நல்லா படிக்கிறியே?”
“முன்னாடி இப்படி படிக்க மாட்டேன். ஆனா இப்ப அது தான் நாம சேருறதுக்கு ஹெல்ப் பண்ணிருக்கு”
“எனக்கு சந்தோசமா இருக்கு தெரியுமா மா?’
“அது உங்க முகத்தை பாத்தாலே தெரியுது. படிச்சு முடிச்ச அப்புறம் கல்யாணம் பண்ணிப்போம். நீங்க பாரின் போய்ட்டு வாங்க. ஆனா என்கிட்ட போன்ல அடிக்கடி பேசணும். படிச்சு முடிக்கிற வர யாருக்கும் தெரிய வேண்டாம்”
“தெளிவா பேசுற”
“பின்ன இந்த அளவுக்கு கூட தெளிவா இல்லைன்னா எப்படி? சரி சரி வைத்தியம் பாருங்க. வெளிய என் பிரண்ட் நிக்குறா. நீங்க கடலை போட்டுட்டு இருக்கீங்க?”
“அட பாவி ஏன் சொல்ல மாட்ட? இப்பவே என்னை அதிகாரம் பண்ற. கலக்குற போ. சரி ஒரு இன்ஜெக்ஸன் போட்டுக்குறியா? ரெண்டு  நாள் அம்மா சாப்பாடு கொண்டு வருவாங்க சரியா?”
“அத்தை சாப்பாடு சாப்பிட கசக்குமா என்ன? ஆனா அத்தை பையனும் பாக்க வந்தா நல்லா\ இருக்கும்”
“காரியத்தையே  கெடுத்த போ. எங்க வீட்ல நான் உன்னை விரும்புறதை கண்டு பிடிச்சிட்டாங்க. நான் உன்னை பாக்க வந்தா பின்ன நீ விரும்புறதும் தெரிஞ்சிரும்”
“முகத்துல எழுதி வச்சிருந்தா கண்டு பிடிக்காம இருப்பாங்களா?”
“உனக்கு வாய்  ஜாஸ்தி மா. இத்தனை நாள் தவிக்க விட்டுட்டு இன்னைக்கு பேச்சை பாரு. சரி என் போன் நம்பர் நோட் பண்ணிக்கோ”
“அதெல்லாம் மனசுல பதிஞ்ச நம்பர் மறக்காது.நீங்க ஊசியை போடுங்க”, என்று சொல்லி கையை காண்பித்தாள்.
“இது இடுப்பில் போடுற ஊசி”, என்று  சொல்லி அவளை வெறுப்பேத்தி, திகில் அடைய வைத்து கையில் ஊசியை போட்டு அனுப்பி  வைத்தான்.
அடுத்த இரண்டு மாதங்களில் அவன் பாரின் கிளம்பும் நாளில் அவனை வழி அனுப்ப மது, செழியன் வந்திருந்தார்கள். வளரும் ஹாஸ்ட்டலில் இருந்து மித்ரன் வீட்டுக்கு வந்து விட்டாள்.
எல்லாரிடமும் விடை பெற்று விமானத்தில் ஏறினான் மித்ரன். அவன் சென்றதும் வளரை ஹாஸ்ட்டலில் விட்டு விட்டு செழியனும் மதுவும் அன்று இரவு ஊருக்கு பஸ் ஏறினார்கள்.
அமைதியாக அமர்ந்திருந்த செழியனை பார்த்து குழம்பிய மது “என்ன ஆச்சுங்க?”. என்று கேட்டாள்.
“எனக்கு வளரை நினைச்சு  ஒரு யோசனை மது?”
“வளரையும் மித்ரனையும் பத்தி தான?”
“மது???”
“எனக்கும் ரெண்டு பேர் முகத்தை பார்த்தே புரிஞ்சது. இதுல என்ன யோசனை? வளர் படிச்சு முடிச்ச அப்புறம் கல்யாணம் வச்சிக்கலாம். என் தம்பிக்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிருவீங்களோ?”
“ஹா ஹா பொண்ணு கேக்குறதுக்கு மிரட்டி தான் கேப்பீங்களா மேடம்? பொண்ணு கொடுக்கலைன்னா நீயே அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவ. வளர் படிப்பு முடியட்டும். நான் வீட்ல பேசுறேன்”
அவன் மூக்கை பிடித்து கிள்ளியவள் “தேங்க யூ”, என்று சொல்லி சிரித்தாள்.
“ஏய் வலிக்குது டி”
“இதுக்கே வா, இன்னும் கொஞ்ச மாசத்துல உங்க பிள்ளை வந்து கிள்ளி வைப்பான்”
“மது நிஜமாவா?”
“ஹ்ம்ம்”
“உடனே டாக்டர் கிட்ட… ஹா ஹா சந்தோஷத்துல நீயே டாக்டர்னு மறந்துட்டு. சந்தோசமா இருக்கு டி”, என்று சொல்லி கொண்டே  அவளை தன்னுடைய தோளில் சாய்த்து கொண்டான்.
தாகம் தணிந்தது…..
இந்த  கதை எத்தனை பேருக்கு பிடிச்சதுன்னு தெரியலை. படிச்சு கமெண்ட் சொன்னவங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் பிரண்ட்ஸ்

Advertisement