Advertisement

அத்தியாயம் 9
“என்னடி முண்ட கண்ணை வச்சு இப்படி முழிக்கிற? ப்ளீஸ் அப்பு புரிஞ்சிக்கோ. என்னால முடியவே இல்லை. அன்னைக்கு ராகுல் சொன்னான்ல? அந்த மோகினி தான். மேல வந்து விழுந்து கட்டி பிடிக்கிறா. ச்சின்னு சொல்லி தள்ளி விட்டுட்டேன். ஆனா அவ ஸ்மெல் மேலயே இருக்குற மாதிரி இருக்கு. உனக்கு தான் தெரியுமே. எனக்கு அப்படி இருந்தா பிடிக்காதுன்னு. ப்ளீஸ் எனக்காக செய் டி”, என்றான் நரேன்.
“நான் என்ன டா செய்ய?”, என்றாள் அபர்ணா.
“டிரஸை  கழட்டு”
“விளையாடுறியா? அதெல்லாம் முடியாது”
“ப்ளீஸ் டி, புரிஞ்சிக்கோ. என் ப்ராப்ளம்  உனக்கு தெரியும் தான?”
“புரியுது டா. சின்ன வயசுல இருந்து உன் கூட இருக்கேன். உன் வியாதி பத்தி தெரியாதா என்ன? அதுக்கு தான மல்லிகை பூ எல்லாம் எடுத்து வச்சிருக்கேன். நீ அதை எடுத்துக்கோ”
“அது எல்லாம் சாதாரண வாசனைக்கு தான். இது அப்படி இல்லை. எனக்கு ஒரு மாதிரி எரிச்சலா இருக்கு. அன்னைக்கு உன் நெஞ்சுல சாஞ்சு இருந்தப்ப, எனக்கு அந்த வாசனை பிடிச்சிருந்தது. அதனால தான கேக்குறேன். ப்ளீஸ் அப்பு”
“ஏன் டா இப்படி படுத்துற? ப்ளீஸ் நரேன் புரிஞ்சிக்கோ”
“எனக்காக இது கூட செய்ய மாட்டியா அப்பு? ப்ளீஸ் டி. டிரெஸ் கழட்டு”
“என்னோட வேற டிரெஸ் வேணா எடுத்து தரேன் டா. நான்  டேன்ஸ் ஆடி வேர்த்து போய் வந்துருக்கேன். இது வேண்டாம்”
“எனக்கு உன் வியர்வை வாசனை தான் வேணும்”
“என்னோட அழுக்கு துணி கிடக்கும். அதையாவது  எடுத்துக்கோ போ”, என்று சொல்லி விட்டு நகர பார்த்தவளின் கையை பிடித்தவன் “உன்கிட்ட கேட்டுகிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது”, என்று சொல்லி கொண்டே அவள் சேலையை பிடித்து இழுத்தான்.
அவன் முந்தானை சரிந்து விழுந்தது. எடுத்து குத்தி இருந்த பின், அவன் இழுத்ததில் கழண்டு அவள் சட்டையில் நின்றது.
“லூசு நரேன், ஏன் டா இப்படி  அறிவு இல்லாம பண்ற?”, என்று கேட்டு கொண்டே சேலைய இழுத்து மேலே போட போனாள்.
ஆனால் அதற்குள் அவள் நெஞ்சில் சாய்ந்திருந்தான் நரேன். அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் அபர்ணா.
தோளில் மாட்டி இருந்த பின் அவள் முதுகை குத்தியது. அது வேற வலி உயிர் போனது. அதை முதலில் எடுத்து தூர எறிந்தாள்.
அவளை நகர கூட விடாமல் அவள் மார்பில் ஒண்டி இருந்தான் நரேன். அவள் நெஞ்சில் முகத்தை புதைத்து இருந்தவனை பார்த்து எரிச்சலாக வந்தது அவளுக்கு.
புதைந்திருந்த  முகம் அவன் இழைந்ததில் அங்கே இங்கே ஆடி அவளுக்கு அவஸ்தையையும், விசித்திரமான உணர்வையும் கொடுத்தது.
“இவன் என்னை பத்தி என்ன தான்  நினைச்சிட்டு இருக்கான்? தலையணைல முகம் புதைக்கிற மாதிரி செய்றான். என்னை பொண்ணுன்னு நினைச்சானா? இல்லை பொம்மைன்னு நினைச்சனா?”, என்று நினைத்து கொண்டு  வந்த எரிச்சலில் அவனை தள்ளி விட பாத்தாள்.
வியர்வையுடன் கூடிய அவள் வாசனையை உணர்ந்து கொண்டிருந்தவன், அவள் தள்ளி விட பார்க்கவும் அவள் இடுப்பை சுற்றி கையை போட்டு இறுக்கி கொண்டான்.
அவன் தலையை அப்படியே நெஞ்சோடு அணைத்து கொள்ள அவள் ஒவ்வொரு செல்லும் துடித்தது. அவன் காதலுடன் கூடிய காமத்தால் அனைத்திருந்தால் அதை செய்திருப்பாள். இப்போது அதையும் செய்ய முடியாமல் அவனை விலக்கவும் முடியாமல் தவித்தாள்.
“நரேன் ப்ளீஸ் விடு டா”, என்று பலவீனமாக வந்தது அவள் குரல்.
முடியாது என்னும் விதமாய் தலை அசைத்தவன் மேலும் அவளுடன் ஒண்டி அவளின் பெண்மையின் மென்மையை அனுபவித்தான்.
எந்த வித காமமும் இல்லாமல், ஒரு குழந்தை அம்மாவின் நெஞ்சில் முகம் புதைத்திருப்பது போல இருந்த அவனுடைய செய்கையை தடுக்க முடியாமல் தவித்தாள்.
“அவனுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை, ஆனா எனக்கு? இதை ஏன் யோசிக்க மாட்டிக்கிறான்?”, என்று நினைத்து பல்லை கடித்தாள்.
நெஞ்சுக்குள் புதைந்திருந்தவனோ அவள் வாசனையை ஆழ்ந்து அனுபவித்தான். அவனுடைய செய்கை அவளுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
உதடு கடித்து தன்னுடைய உணர்ச்சியை அடக்கினாள். அவனை அப்படியே இறுக்கிக்க சொல்லி அவள் மனது தூண்டியது. அதை செய்ய முடியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
நேரம் ஆக ஆக அவன் முகம் அவள் மார்பில் அங்கும் இங்கும் அசைந்தது. அதுக்கு மேல் தாங்க முடியாமல் அவனை வெறி கொண்டு தள்ளி விட்டாள் அபர்ணா.
கட்டிலில் விழுந்தவன் மிட்டாயை பிடுங்கிய குழந்தையை போல் விழித்தான்.
ஆனால் அவளோ, சரிந்து  கிடந்த முந்தானையை மேலே  தூக்கி போட்டவள், தாரை தாரையாக கண்ணீர் வடித்து கொண்டு நின்றாள்.
தன்னுடைய செய்கை அவளை காய படுத்தியதை உணர்ந்த நரேன் “சாரி அப்பு”, என்று சொன்னான். அவள்  கண்ணீரை கண்டு பதறி போனான்.
அவன் முகத்தை கூட பார்க்காமல் விருட்டென்று குளியல் அறைக்குள் சென்றவள், சிறிது  நேரம் முன்பு அவன் நின்ற படியே ஷவர் அடியில் நின்றாள். கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் பெருகியது.
“என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியலையே? நான் அவன் தான் என்னோட உலகம்னு வாழ்ந்துட்டு இருக்கிறேன். கூட சேர்ந்து வாழ்ந்தாலாவது எனக்கு நிம்மதியா இருக்கும். என் கூட வாழவும் செய்யாம இப்படி என்னை தனியா இருக்கவும் விடாம அப்ப அப்ப இப்படி எதாவது செஞ்சு என்னோட உணர்ச்சிகளை தூண்டி விட்டு வேடிக்கை பாக்குறானே? ஒவ்வொரு தடவையும் அவன் என்னை நெருங்கி விலகும் போது அப்படியே தவிச்சு போய் நிக்குறேனே? இந்த வலி அவனுக்கு ஏன் புரிய மாட்டிக்கு? அன்னைக்கு அவனுக்கு தெளிவா சொன்னேன் தானே? என் மேல காதல் வந்த பிறகு சேர்ந்து வாழலாம்னு. ஆனா, அதை அப்படியே விடாம இப்படி அணு அணுவா கொல்றானே. இவனுக்கு எந்த பீலிங்க்ஸும் வராதா?  மனுசனா மாடா?”, என்று யோசித்து தலையை பிடித்து கொண்டவள், “என்ன ஆனாலும் இனி அவனை என் கிட்ட நெருங்க விட கூடாது”, என்று தீர்க்கமாக முடிவெடுத்தாள்.
“அவன் மனசை கஷ்ட படுத்த கூடாதுன்னு நினைச்சு, நான் அவனை புரிஞ்சு நடந்துக்குறேன். ஆனா அவன் என்னை பத்தி யோசிக்கவே மாட்டிக்கான். இனி இப்படி கிட்ட வரட்டும். அவனுக்கு இருக்கு”, என்று நினைத்து கொண்டு குளிப்பதுக்காக சேலையை மொத்தமாக உருவி போட்டாள்.
குளிக்கும் போது சோப்பு பட்டு, பின் குத்திய இடம் எரிந்தது.  அவன் முகம் தன் நெஞ்சில் புதைந்திருந்த அந்த நொடியை யோசித்து பார்த்தாள். மறுபடியும் ஒரு இனம் புரியாத கிளர்ச்சி அவளுக்குள் வந்தது. “சே அதை நினைக்க கூடாது”, என்று மனதில் நினைத்து கொண்டு குளித்து முடித்தாள். அப்போது தான் மாற்று துணி எடுத்து வராதது நினைவில் வந்தது.
“இப்படியே ஒன்னும் இல்லாம போனா கூட அவனுக்கு எந்த உணர்ச்சியும் வராது”, என்று எரிச்சலுடன் நினைத்து கொண்டு பாவாடையை பிழிந்து கட்டியவள், சேலையை அலசி மேலே போட்டு கொண்டு வெளியே வந்தாள்.
“அவளுக்கு என்ன ஆச்சோ? அழ வச்சிட்டேனே”, என்று நினைத்து கொண்டு பாத்ரூம் கதவையே பார்த்து கொண்டு பாவமாக அமர்ந்திருந்தான் நரேன்.
வெளியே போனதும் அபர்ணா கண்ணில் பட்டது பாவமாக அமர்ந்திருந்த நரேன் தான்.
“இவனுக்கு பாவம் பாத்தா நான் ஒன்னும் இல்லாம போயிருவேன்”, என்று நினைத்து கொண்டு அவனை பார்ப்பதை விட்டுவிட்டு ஷெல்ப்பில் இருந்து உடையை எடுத்து கொண்டு மறுபடியும் குளியல் அறைக்கே சென்றாள்.
அவனோ  அவளையே  அங்குலம்  அங்குலமாக பார்வை  இட்டு கொண்டிருந்தான். முட்டு  வரை கட்டி இருந்த பாவாடையில் கவனம்  செலுத்தியவன் “அது இன்னும் கொஞ்சம் மேலேறினா  எப்படி இருக்கும்?”, என்று யோசித்து விதிர்த்து போனான். அவனுடைய யோசனை அவனுக்கே வித்தியாசமாக பட்டது.
உடை மாற்றி வந்த அபர்ணா, தன்னுடைய துணிகளை ஒவ்வொன்றாக எடுத்தாள்.
அவள் செய்கையை பார்த்து கொண்டிருந்தவன் “எதுக்கு அப்பு டிரெஸ் எல்லாம் எடுக்குற?”, என்று கேட்டான்.
“இல்லை நான் பக்கத்துக்கு ரூம்ல தங்க போறேன் அதான்”, என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னாள் அபர்ணா.
“என் மேல கோபமா அப்பு? சாரி டி. ப்ளீஸ். இங்கயே இரேன்”
“பேசுறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை”, என்று நினைத்து கொண்டு “உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை. கொஞ்சம் தனியா இருக்கணும்னு தோணுது அதான்”, என்று சொல்லி விட்டு தினமும் பயன் படுத்தும் உடை, பொருள்கள் அனைத்தையும் பக்கத்துக்கு அறைக்கு எடுத்து சென்று விட்டாள் அபர்ணா.
நரேனோ யோசித்து கொண்டே இருந்தான். “நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக ரூம் விட்டு போகணுமா? நான் அவ வாசனையை உணரணும்னு தான கட்டி புடிச்சேன். அப்புறம் என்ன ஆச்சு எனக்கு? எனக்கு ஏன் அவ சட்டையை தாண்டி முகம் புதைக்கணும்னு தோணுச்சு? எதுக்கு அந்த சட்டை இடைஞ்சலா இருக்குனு தோணுச்சு? வாசனை உணர நினைச்சு அதையே மறந்து, நான் ஏன் இப்படி தப்பு தப்பா யோசிச்சேன்? அதான் அப்புவுக்கு கோபம் வந்துட்டு போல? கிட்ட இருந்தா எதாவது ஜாலியா சண்டை போட்டுட்டே இருப்பா”, என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தான்.
அப்போது அவனுடைய அறைக்கு வந்தவள், “நைட்  வெளிய போய் எதாவது சாப்பிட்டுக்கோ நரேன். எனக்கு சாப்பாடு வேண்டாம். எனக்கு பசிக்கல. நான் தூங்க போறேன்”, என்றாள்.
“அப்பு சாரி டி. இந்த ரூமுக்கே வந்துறேன்”
“எதுக்கு?”
“இங்க இருந்தா எதாவது ஜாலியா சண்டை போட்டுட்டு இருப்போம்”
“என்னை பாத்தா உனக்கு சண்டை மட்டும் தான் போட தோணுமா நரேன்?”, என்று அவனிடம் கேட்டாள் அபர்ணா.
அவளையே பார்த்தவன் “அது மட்டும் இல்ல டி. என்ன என்னவோ செய்ய தோணுது. தப்பு தப்பா தோணுது டி”, என்று மனதில் நினைத்து கொண்டு “ம்ம்”, என்று சொன்னான்.
எரிச்சலில் “குட் நைட்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
ஆனால் நரேன் மனதோ அவள் விலகி போனது சிறு வருத்தத்தை தந்தாலும் அவள் நெஞ்சில் முகம் புதைந்திருக்கும் போது அவனுக்கு தோன்றிய புது விதமான உணர்வை நினைத்து பார்த்து ரசித்தான்.
“தப்பா யோசிக்கிறேன், தப்பா யோசிக்கிறேன்”, என்று நினைத்து கொண்டே அதை பற்றியே தான் அவன் மனதில் ஓடியது.
சேலை முந்தானை கீழே விழுந்தவுடன், அவன் கண்ட காட்சி இப்போது  மனக்கண்ணில் வந்தது.
அவன் அனுபவித்த மென்மையும், செழுமையும் மீண்டும் வேண்டும் என்று அவன் யோசித்து தகித்து போனான். அவனை அறியாமலே அவன் உடம்பெல்லாம் சூடானது.
இது எல்லாம் ஒரு சாதாரண ஆண்மகனுக்கு ஒரு பெண்ணை கண்டால் வர வேண்டிய உணர்வு தான் என்பது அவனும் அறிந்ததே. ஆனால் சிறு வயதில் இருந்து ஒன்றாக ஒரே வீட்டில் வளர்ந்த அப்பு மேல் வருவதை தான் அவனால் தங்க முடிய வில்லை. அதை தான் அவன் தவறு செய்வதாகவே கருதினான்.
“அப்புவை அப்படி நினைச்சு பாக்கவே கூடாது. ஆனாலும் செம பிகரா இருக்கா?”, என்று மீண்டும் யோசித்து தலையில் அடித்து கொண்டு படுத்தான்.
அருகில் இருந்த அவள் படுக்கும் தலையணையை எடுத்து அதில் முகம் புதைத்தவன் அதிலும் அவள் வாசனையை உணர்ந்தான்.
“அவளை கட்டி பிடித்து தூங்க வேண்டும்”, என்று ஏங்கியது அவனுடைய மனது. மனம் முழுவதும் குழம்பி தவித்தது.
“நாளைக்கு அப்பு கிட்டயே, கேட்டுற வேண்டியது தான். நான் இப்படி அவளை பத்தி யோசிக்கிறது எல்லாத்துக்கும் அவ கிட்ட சாரி கேக்கணும். இப்படி யோசிக்காம இருக்குறதுக்கு என்ன வழின்னு கேக்கணும்”, என்று லூசு தனமாக யோசித்த படியே தூங்க துடங்கினான்.
ஆனால் அறையில் படுத்திருந்தவளுக்கு சிறிது சிறிதாக அவன் மீதான எரிச்சல் மறைந்து அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. “இவனுக்கே பையன் வர வேண்டிய வயசில் இருக்கான். ஆனா இவனே சின்ன பையன் மாதிரி நடந்துக்குறான். எப்ப தான் மாற போறானோ? எப்படி சேலையை இழுத்துட்டு முகத்தை தேய்க்குது பாரு பண்ணி”, என்று நினைத்து சிரித்தவளுக்கு அவன் வாசனை உணர அவள் நெஞ்சில் சாய்ந்தாலும் அதன் பின் அதையே மறந்தவன் போல அவள் மார்பில் இழைந்தது நினைவில் வந்தது.
அதை இப்போது யோசித்தவள் “சரியா தான டா தோணுது உனக்கு? அப்புறம் ஏன் லூசு மாதிரியே விலகி இருக்க? எனக்கு நீ விலகி இருக்குறது கஷ்டமா இருக்கு. அதை எப்ப தான் புரிஞ்சிக்க போற? நீ தான் எப்படி என்கூட சந்தோசமா இருக்கணும்னு யோசிக்கணும். நான் வெக்க பட்டு சினுங்கனும். ஆனா இங்க எல்லாம் உல்டாவா இருக்கே. வர வர நானே அவனை ரேப் பண்ணிருவேன் போல?”, என்று நினைத்து தலையில் அடித்து கொண்டாள்.
அடுத்து அவன் சொன்ன மாயா நினைவில் வந்தாள். “அந்த பொண்ணு இவனை விரும்பிருக்கு தான? அவளையாவது இவன் கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா அதையும் செய்யாம என்னையே கட்டிக்கிட்டு கொல்றான் பரதேசி. இப்ப என்ன செய்வான்? சாப்பிட வெளிய போன மாதிரியும் தெரியலை. ஒழுங்கா தூங்காம உருண்டு கிட்டு இருப்பான்”, என்று நினைத்து கொண்டே மணியை பார்த்தாள். அது பத்து  என்று காட்டியது. உடனே கிச்சனுக்கு சென்றவள், கோதுமை மாவை கொஞ்சம் கட்டியாக கரைத்து ரொட்டி மாதிரி தோசை கல்லில் தட்டி எடுத்தாள்.
அது வேகும் போதே வெங்காயம், தக்காளி, வத்தல் அனைத்தையும் பச்சையாக அரைத்தவள் சட்டியை வைத்து தாளித்து கொதிக்க வைத்தாள்.
இரண்டும் தயார் ஆனதும் அவன் அறைக்கு சென்றாள்.
தூங்காமல் இருப்பான் என்று பார்த்தால் அவன் நன்கு உறங்கி இருந்தான். அதுவும் அவளுடைய தலையணையை கட்டி கொண்டு.
“இதுல மட்டும் குறைச்சல் இல்லை. தலையணை பிடிச்சிட்டு தூங்குது பாரு பரதேசி. குத்து கல்லாட்டம் நான் தான் இருக்கேனே. என்னை கட்டிக்கணும்னு  தோணுதா பாரு?”, என்று நினைத்து கொண்டு அவன் அருகில் சென்று எழுப்பினாள்.
“நரேன், நரேன், எந்திரி”
“அப்பு”, என்று பதறி அடித்து எழுந்தவன் “என்னடா எதாவது செய்யுதா? அன்னைக்கு மாதிரி வயிறு வலிக்குதா?”, என்று கேட்டான்.
அவன் பதட்டத்தை பார்த்து நெகிழ்ந்தவள், “அதெல்லாம் இல்லை. பசிக்குது எழுந்து வா”, என்றாள்.
“இரு நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்”, என்று எழுந்தான் நரேன்.
“அதெல்லாம் வேண்டாம். நான் செஞ்சிட்டேன். நீ வா சாப்பிடலாம்”
அவள் பேசியதே போதும் என்று நினைத்தவன் சந்தோஷமாகவே அவள் பின் சென்றான்.
இருவரும் தட்டை வைத்து கொண்டு சாப்பிட அமர்ந்தார்கள். “சாப்பாடு ஊட்டி விடு டா”, என்று அவள் சொல்வதுக்காக காத்திருந்தான் நரேன்.
அதை சொல்ல நினைத்தவளோ, “வேண்டாம் பா, ஊட்ட சொன்னா  அவன் கிட்ட இருப்பேன். அவன் தோள்ல சாய்வேன். அப்புறம் அவன் நெஞ்சில சாய தோணும். அப்புறம் அவன் முகத்துல கிஸ் பண்ண தோணும். அப்புறம் நான் தான் தூக்கத்தை தொலைக்கணும். அவன் கும்பகர்ணன்  மாதிரி தூங்குவான்”, என்று நினைத்து அமைதியாக உண்ண ஆரம்பித்தாள்.
ஆனால் சாப்பிட முடியாமல், அவளை ஒரு பார்வை பார்ப்பதும், தட்டை பார்ப்பதுமாக இருந்தான் நரேன்.
அரை ரொட்டிக்கு மேல அவன் தட்டில் காலி ஆகாததை பார்த்தவள் “என்ன டா நல்லா இல்லையா? சாப்பிடாம இருக்க?”, என்று கேட்டாள்.
“நல்லா தான் இருக்கு”, என்று இழுத்தான் நரேன்.
“அப்புறம் என்ன? பசிக்கலையா?”
“பசிக்க தான் செய்யுது”
“டேய் அரை கிறுக்கா, படுத்தாத. பசிக்குது, நல்லா இருக்கு, அப்பறம் தின்னு தொலைக்க வேண்டியது தான?”
“நீ கோபமா இருக்கல்ல? அதான் சாப்பிட தோணலை”
“கோபமே இல்லை டா, கோபம்னா இந்நேரம் உன் மண்டைய ஆஞ்சி விட்டுருப்பேனே”
“அது விளையாட்டு கோபம். ஆனா இது உண்மை கோபம். அதனால தான் என்கிட்ட ஒழுங்கா பேச மாட்டிக்க”
“அப்படி எல்லாம் இல்லை டா. கோபம் இல்லைனு என்ன செஞ்சா நம்புவ?”
“நான் ஊட்டி விட்டு நீ சாப்பிட்டா தான் கோபம் இல்லைனு நம்புவேன்”
“இந்த நாய்க்கு இது கூட காதல் தான்னு ஏன் தெரிய மாட்டிக்கு”, என்று நினைத்து கொண்டு “ஊட்டி தொலை. நாம ரெண்டு பேரும் இப்ப சண்டை போட்டுருக்கோம்னு யார் கிட்டயாவது சொன்னா காரி துப்புவாங்க”, என்றாள்.
அவள் பேச்சை காதில் வாங்காமலே அவளுக்கு ஊட்ட துடங்கி இருந்தான் நரேன்.  அவளுக்கு ஊட்டி கொண்டே அவன் சாப்பிட்டாலும் அங்கே அமைதி நிலவியது.
சாப்பிட்டு கை கழுவி விட்டு அவள் அவளுடைய அறைக்குள் போக போறதை பார்த்த படியே நின்றிருந்தான் நரேன்.
உள்ளே நுழைய போனவளை “அப்பு”, என்று அழைத்தான். “என்ன டா?”, என்று திரும்பி பார்த்தாள் அபர்ணா.
“கோபம் தான் போய்டுச்சே, அப்ப  இங்க தூங்க வாயேன்”
அடுத்த நொடி அவள் மனக்கண்ணில் அவன் அவள் மார்பில் முகம் புதைந்திருந்த நிமிடங்கள் நினைவில் வந்தது. அவள் அடி வயிற்றில் மின்னல்கள் தெறித்தது. “அவனை விட நான் தான் கெட்ட பொண்ணா மாறிட்டேன்”, என்று நினைத்து கொண்டு “இல்லை இங்கயே தூங்குறேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
அவள் அறையையே பார்த்து கொண்டிருந்தவன், பின் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.
நன்கு உறங்கி கொண்டிருந்த அபர்ணாவுக்கு காலையில் தான் விழிப்பு வந்தது. ஆனால் கண் விழித்தவள் திகைத்து விட்டாள். இப்போதும் அவன் அவளுடைய மார்பில் தான் முகம் புதைத்து தூங்கி கொண்டிருந்தான். கனவோ என்று முதலில் நினைத்தவளுக்கு புன்னகை அரும்பியது.
ஜன்னல் வழியே வெளிச்சம் உள்ளே வந்திருந்தது. “விடிஞ்சிருச்சு, எப்ப இவன் வந்து கிட்ட படுத்தான்னு தெரியலையே. என்னோட அருகாமை வேணும்னு நினைக்கிறான் போல? என்னை பத்தி யோசிக்கிறான். இதெல்லாம் காதல்னு சீக்கிரம் புரிஞ்சிக்குவான்”, என்று சந்தோசமாக  நினைத்து கொண்டு மணியை பார்த்தாள்.
டேன்ஸ் கிளாசுக்கு நேரம் ஆகி விட்டதால்,  வேறு வழி இல்லாமல் “நரேன் எந்திரி, எந்திரி டா. நேரம் ஆகிட்டு”, என்று அவனை  எழுப்பினாள்.
அவன் இன்னும் அவள் மார்பில் புதைந்து அவளை படுத்தி எடுத்தான். அவனுடைய செய்கையை அவளும் ரசிக்க தான் செய்தாள்.
“டேய் எந்திரி டா, குளிச்சி கிளம்பனும்”
“ஹ்ம்ம்”
“ஹ்ம்னா, என்ன அர்த்தம்? எந்திரி. ஆமா நீ எப்ப இங்க வந்து படுத்த? உன் ரூம்ல படுக்காம எதுக்கு இங்க வந்த?”
“நீ இல்லாம இருக்க முடியலை டி”, என்று சொல்லுவான் என்று எதிர்பார்த்து அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.
ஆனால் அவனோ  “நேத்து படுத்த உடனே தூக்கமே வரலை டி”, என்றான்.
“அதனால?”
“தண்ணி குடிக்கணும்னு கிச்சனுக்கு போனேன் அப்பு”
“சரி”
“அப்ப டம்ளர் எடுக்குறேனு சொல்லி பெருங்காய டப்பாவை கீழே தட்டி விட்டுட்டேன்”
“இவன் என்ன சொல்ல வாரான்? இங்க எதுக்கு வந்தானு தான கேட்டுட்டு இருக்கேன்”, என்று நினைத்து கொண்டு “அதை ஏன் டா இப்ப சொல்ற?”, என்று கேட்டாள்.
“இரு சொல்றேன். அதை கொட்டுனதை பார்த்தா நீ திட்டுவன்னு நினைச்சு எல்லாத்தையும் அள்ளி போட்டேனா?”
“ஹ்ம்ம் அப்புறம்?”
அப்புறம் கை கழுவிட்டு ரூம்க்கு போய் படுத்துட்டேன்”
“எருமை சொல்லி தொலையேன் டா”
“இல்ல படுத்த அப்புறம் தெரியாம என் கையை நானே மோந்து பாத்துட்டேன் அப்பு”
“என்னது???”
“ஹ்ம்ம், அந்த ஸ்மெல் பிடிக்கலையா? உடனே உன்கிட்ட வரணும்னு தான் நினைச்சேன். ஆனா நீ கோப பட்டியா? உடனே நீ வச்சிருந்த மல்லிகை பூவை தான் மோந்து பாத்தேன். ஆனா வாசனை போகவே இல்லை, அதனால தான் நீ திட்டினாலும் பரவால்லைன்னு நினைச்சு இங்க வந்துட்டேன்”, என்று பாவமாக சொன்னான் நரேன்.
அடுத்த நொடி அவனை உதறி தள்ளியவள், எழுந்து அமர்ந்து அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினாள்.
ஆ என்று தலையை தடவினான் நரேன்.
“ஒழுங்கா இங்க இருந்து போ. என் ரூம் குள்ள வந்த கொன்னுருவேன். நான் குளிச்சிட்டு வரும் போது நீ இங்க இருக்க கூடாது. இன்னைல இருந்து கதவை பூட்டிட்டு தான் தூங்கணும் போல”, என்று கத்தி விட்டு பாத்ரூம் உள்ளே சென்று விட்டாள்.
“போச்சு, அப்பு மறுபடியும் கோச்சிக்கிட்டா. நான் அவ கிட்ட வராதே அவளுக்கு பிடிக்கலை போல? நான் ஏன் தான் அப்படி செய்றேனோ? இன்னைக்கு வேற எதாவது வாசனையான பொருள் வாங்கணும்”, என்று நினைத்து  கொண்டு எழுந்து சென்று விட்டான்.
அபர்ணாவோ வாய் விட்டே புலம்பினாள். “இவன் மோந்து பாக்க நான் தான் கிடைச்சேனா? பண்ணி, பரதேசி. எவ்வளவு ஆசையா அவன் உன் கிட்ட படுக்கணும்னு நினைச்சேன்னு சொல்லுவான்னு எதிர்பார்த்தேன்? ஆனா அவன் இப்படி சொல்றான். தகர டப்பா, சரியான டியூப் லைட். டியூப் லைட் கூட இல்ல. சரியான சிமிழி விளக்கு. இவனுக்கு ரொமான்ஸ் சுட்டு போட்டாலும் வராது. இனி கிட்ட வரட்டும் பல்லை தட்டி கையில் கொடுக்குறேன்”, என்று பல்லை கடித்தாள்.
“அவன் கிட்ட வந்ததும், அப்படியே மெய் மறந்து நிக்குறவ அவன் பல்லை தட்ட போறாளாம்?”, என்று சிரித்தது மனசாட்சி.
அதை அடக்கியவன் “இனி அந்த மெண்டல் கிட்ட மயங்க மாட்டேன். மயங்குனா அப்புறம் நீ பேசு”, என்று அதை அடக்கி விட்டு கிளம்ப ஆரம்பித்தாள்.
அவள் கிளம்பி வெளியே வரும் போது, அவன் குளித்து முடித்து வெளியே வந்தான்.
அவனை பார்த்தவளுக்கு “செக்சியா இருந்து தொலைகிறானே”, என்று யோசனை வந்தது. “ஹ்ம்ம் நான் அவனை பார்த்து மயங்க மாட்டேன்”, என்று தனக்குள் சொல்லி கொண்டு அவனை கவனிக்காமல் செருப்பை போட ஆரம்பித்தாள்.
“அப்பு சமைச்சிட்டியா? பசிக்குது. என்ன செஞ்ச?”, என்று கேட்டான் நரேன்.
“சாப்பாடு செய்யலை. நான் கிளம்புறேன்”
“பசிக்குது டி”
“கடைல போய் தின்னு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
“இனி எப்ப சமாதானம் ஆவான்னு தெரியலையே”, என்று அவள் போனதையே பார்த்து கொண்டு நின்றான் நரேன்.
தொடரும்…..

Advertisement