Advertisement

அத்தியாயம் 8
மெதுவாக கண்களை திறந்தாள் அபர்ணா.
அறையின் வெளிச்சமே விடிந்து அதிக நேரம் ஆகி விட்டதை உணர்த்தியது.
“இவன் ஆபிஸ் கிளம்பணுமே. என்ன செஞ்சான்? கிளம்பிட்டானா?”, என்று நினைத்து கொண்டே எழுந்து அமர்ந்தாள்.
சேலை விலகி இருந்தது. “நேத்து என்ன எல்லாம் செஞ்சிட்டான்? பண்ணி. நான் தான் தவிச்சு போய்ட்டேன்”, என்று நினைத்து அவள் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
சேலையை ஒழுங்காக எடுத்து விட்டவள் கூந்தலை கொண்டை  இட்டாள். போர்வையை விலக்கி விட்டு எழுந்து வெளியே வந்தவளின் கண்ணில் பட்டான் நரேன்.
“குட் மார்னிங் டா”, என்று சிரித்து கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள் அபர்ணா.
“அப்பு எந்திச்சிட்டியா டி? வலி குறைஞ்சிருக்கா? ஹாஸ்பிடல் போகலாமா?”
“இப்ப வலி இல்லை டா. சரியாகிட்டு. நீ ஆபிஸ் போகலையா?”
“போகல அப்பு. உன்கூட இருக்கேன்”
“ஹ்ம்ம் சரி டா”
“நீ போய் பல்லு விளக்கிட்டு வா அப்பு. சாப்பிடலாம்”
“சரி டா பப்ளு”, என்று சொல்லி அவனிடம் ஒரு முறைப்பை பெற்று கொண்டு உள்ளே சென்றாள் அபர்ணா.
குளியல் அறை சென்று குளித்து முடித்து விட்டு ஒரு பாவாடையையும், ஒரு சட்டையையும் போட்டு கொண்டு வந்தாள்.
“நீ டேன்ஸ் கிளாஸ் வர மாட்டேன்னு நான் போன் பண்ணி சொல்லிட்டேன் டி. அந்த ஆண்ட்டி பாத்துக்குவாங்களாம்”, என்று சொல்லி கொண்டே அவளுக்கு ரெண்டு இட்லியை எடுத்து தட்டில் வைத்தான்.
“சரி டா, நீயே சமைச்சிட்டியா? கஷ்டமா இருந்துச்சா? எழுப்பிருக்கலாம்ல?”
“நீயே முடியாம படுத்திருக்க. அப்ப உன்னை செய்ய விடுவேனா லூசு? காரம் கம்மியா தான் வச்சிருக்கேன். எப்படி இருக்கோ? அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்கோ”
“என் செல்ல குட்டி, எனக்கு செஞ்சி தரதே பெருசு. அதை போய் நல்லா இல்லைனு குறை சொல்லுவேனா டா?”
“இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. நைட் புல்லா படுத்தி எடுத்துட்ட”
“தூங்க விடாம செஞ்சிட்டேனா நரேன்?”
“லூசு லூசு, அதையா சொல்றேன்? வலில எப்படி துடிச்ச? நான் பயந்தே போய்ட்டேன் தெரியுமா?”
“ஹ்ம்ம் நானே பயந்துட்டேன் டா. செம வலி. இன்னும் வெளிய ரொம்ப சாப்பிட கூடாது”
“ரொம்ப இல்ல கொஞ்சம் கூட வெளிய சாப்பிட கூடாது”
“ஹ்ம்ம் அத்தை கால் பண்ணாங்களா? அவங்களை வேற எழுப்பிட்டோம்”
“ஹ்ம்ம் அம்மா கிட்ட பேசி தான் இட்லி செஞ்சேன். மதியம் ரசம் வைக்க சொன்னாங்க. ஆன் கேக்கணும்னு நினைச்சேன். அது என்ன வீட்டுக்கு தூரமானு கேட்டாங்க. நீ வீட்டுக்குள்ள தான இருந்த? அப்புறம் தலைக்கு ஊத்துனாயான்னு  கேட்டாங்க. நீ இல்லைனு சொன்ன? நேத்து குளிச்சியே டி”
முகம் சிவந்து போனாள் அபர்ணா. அவளை வித்தியாசமாக பார்த்தான் நரேன்.
“என்ன டி?”
“அது மன்த்லி பீரியட்ஸ் டா. அதை தான் அத்தை அப்படி கேட்டாங்க”
“ஓ அதுவா? நான் வேற என்னவோ நினைச்சிட்டேன். உனக்கு தான் இப்ப அது இல்லையே”, என்று சொல்லி அவளை திகைக்க வைத்தான் நரேன்.
“அட பாவி, இவனுக்கு இது எப்படி தெரியும்?”, என்று நினைத்து கொண்டு “உனக்கு எப்படி டா இல்லைனு தெரியும்?”, என்று கேட்டாள்.
“போன மாசம் மெடிக்கல்ல நான் தான வாங்கி கொடுத்தேன்? அப்ப தான் தேதி தெரியுமே. இன்னும் நாள் இருக்கே”, என்று அசால்டாக சொன்னான் நரேன்.
“எந்த மாதிரி விசயத்தை எவ்வளவு கூலா சொல்றான் பேசுறான் பாரு? இவன் நல்லவனா கெட்டவனா? என்கிட்ட மட்டும் தான் இப்படி பேசுறானா? இவன் நேச்சரே இப்படி தானா?”, என்று யோசித்தாள் அபர்ணா.
பேச்சை மாற்றுவதுக்காக “எனக்கு ஊட்டி விடு டா”, என்றாள் அபர்ணா.
“நானே அதை தான் செய்யணும்னு நினைச்சிட்டு இருந்தேன். இந்த சேர்ல உக்காரு”, என்று அவள் அருகே அமர வைத்து ஊட்டி விட்டான்.
அதன் பின் இருவரும் சிறு சிறு சண்டையுடன், கேலியுடன், பழைய விஷயங்களை பேசி மதியம் சமைத்து சாப்பிட்டு, டிவி பார்த்து, தூங்கி என்று அந்த நாளை கழித்தார்கள்.
அன்று இரவு அவளை ஒட்டாமல் தனியாக தான் படுத்திருந்தான் நரேன். ஆனாலும் அவளுடைய வாசனையை நினைவு கூர்ந்தவன், தலையை உலுக்கி விட்டு வேறு எதையோ சிந்திக்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் காலை எப்போதும் போல் விடிந்தது இருவருக்கும்.
அவள் எழுவதும் முன்னரே காபி போட்டான் நரேன்.
அதை குடித்து விட்டு, அவன் கிளம்புவதுக்கு முன்னால் அவனுக்கு உணவை சமைத்தாள் அபர்ணா.
அவனுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு “வீட்டை பூட்டிட்டு போயிரு டா. நான் கீ எடுத்துட்டேன்”, என்று சொல்லி விட்டு டேன்ஸ் ஸ்கூலுக்கு சென்று விட்டாள் அபர்ணா.
ராகுல் கிளம்பி வரும் வரைக்கும் காத்திருந்தான் நரேன். அவன் கிளம்பி வந்ததும் சாப்பாட்டையும், பேகையும் எடுத்து கொண்டு கிளம்பி விட்டான்.
என்ட்ரி புக்கில் கை எழுத்து போட்டு விட்டு எதையோ பேசி கொண்டு சிரித்து கொண்டே உள்ளே போனார்கள் ராகுலும், நரேனும்.
அப்போது “ஹாய் நரேன்”, என்ற படி அங்கு வந்தாள் மாயா.
அவளை கண்டாலே ராகுலுக்கு பிடிக்காது. நண்பனிடம் அவள் பேச முயற்சி செய்வதை எப்போதும் கடுப்புடனே பார்ப்பான். அப்படி அவள் பேச ஆரம்பித்தாலும் நரேனை எதாவது சொல்லி அவர்களை பேச விடாமல் கூட்டி சென்று விடுவான் ராகுல். அதை உணர்ந்த மாயாவுக்கு ராகுலை கண்டாலே பிடிக்காது
அதை நரேனும் உணர்ந்து தான் இருந்தான். மாயா தன்னிடம் பேசுவது சாதாரணமாக இருந்தாலும் அவள் மனத்தில் வேறு எதுவோ உள்ளது என்று புரிந்தது அவனுக்கு.
அதனால் ராகுல் அழைத்தவுடன் சென்று விடுவான்.
இன்றும் மாயா பேச வந்ததும் அவள் முன்னாடியே “எனக்கு ரொம்ப பசிக்குது டா, கேன்டீன் போகலாம்”, என்றான் ராகுல்.
அது பொய் என்று புரிந்தாலும் “சரி டா, வா போகலாம்”, என்றான் நரேன்.
அதில் ராகுலை முறைத்து பார்த்தாள் மாயா.
ஆனால் அவள் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல் எங்கோ பார்த்தான் ராகுல்.
“பாரின் டிரிப் பத்தி அப்புறம் பேசலாம் மாயா. ராகுலுக்கு பசிக்குதாம்.  நாங்க கேன்டீன் போறோம் என்றான் நரேன்.
“இவ கிட்ட சொல்லிட்டு தான் போகணுமா?”, என்று பல்லை கடித்தான் ராகுல்.
“ராகுல் வேணும்னா போகட்டும். நீங்க இருங்க நரேன். கொஞ்சம் பேசணும்”, என்று சொன்னாள் மாயா.
“அவன் இல்லாம நான் சாப்பிட போக மாட்டேன். நீ வா நரேன்”, என்றான் ராகுல்.
“ராகுல் நீ வேணும்னு பண்ற. எப்பவும் நரேன் கூட என்னை பேச விட மாட்டிக்கிற”, என்றாள் மாயா.
“ஆமா, அப்படி தான் செய்றேன். இப்ப என்னங்குற”
“இது நல்லா இல்லை ராகுல். நான் நரேன் கிட்ட பேசினா உனக்கென்ன?”
“நீ அவன் கிட்ட என்ன பேசணும்? எதுக்கு பேசணும்?”
“அது எங்க விசயம். நீ ஏன் கேள்வி கேக்குற?”
இருவரும் மோதி கொள்வதை கடுப்புடன் பார்த்தான் நரேன். ஆனாலும் அமைதியாய் இருந்தான்.
“அவளை ஏதாவது சொல்லு தா”, என்னும் விதமாய் ராகுல் நரேனை பார்த்தான்.
“நீ தான சண்டையை ஆரம்பிச்ச. நீயே முடி”, என்று நினைத்து கொண்டு அமைதியாய் நின்றான் நரேன்.
“இவளுக்கு சாக் கொடுக்காம இவ சரி பட்டு வரமாட்டா”, என்று நினைத்து கொண்டு “எது உங்க விசயம்? உங்க ரெண்டு பேருக்குள்ள எந்த விசயமும் இல்லை மாயா”, என்றான் ராகுல்.
“அதை சொல்ல நீ யார்?”, என்று திமிராய் கேட்டாள் மாயா.
“பொறு பொறு நீ ஏன் இப்படி காரமா முறைக்கிற? நான் அவனோட பிரண்ட். சரி இப்ப நீ என்ன நரேன் கிட்ட பேசணும் அவ்வளவு தான? நரேன் மாயாவையும் கேன்டீன் கூப்பிடு டா. சன்டே எல்லாருக்கும் பார்ட்டி கொடுத்த. ஆனா மாயாவை விட்டுட்ட. இன்னைக்கு அவளுக்கும் கொடுத்துரு”, என்றான்.
“என்னது நரேன் எல்லாருக்கும் பார்ட்டி கொடுத்தாங்களா? என்ன பார்ட்டி நரேன்? உங்க பிறந்தநாள் கூட இல்லையே”, என்று கேட்டாள் மாயா.
“அது நீ நினைக்கிற மாதிரி பார்ட்டி இல்லை மா. மேரேஜ் ரிசப்ஷன்  மாதிரி”, என்று நமட்டு சிரிப்புடன் கூறினான் ராகுல்.
“மேரேஜ்ஜா? யாருக்கு? உங்களுக்கு சிஸ்டர், பிரதர் கூட இல்லையே நரேன்”
“அவனோட சிஸ்டர், பிரதற்கு இல்லை மாயா. அவனுக்கு தான். மிஸ்‌டர் நரேனுக்கும், மிஸஸ் அபர்ணா நரேனுக்கும் தான் பார்ட்டி நடந்தது”, என்று குண்டை தூக்கி போட்டான்.
அதிர்ச்சியாக நரேனை பார்த்தாள் மாயா. அவன் சாதாரணமாக நின்றான்.
“நரேனுக்கு கல்யாணம் ஆகிருச்சா?”
“அது ஆகி ரெண்டு வாரம் ஆகிட்டு . நீ பாரின் போனதுனால உனக்கு தெரியலை மாயா. நரேன் கிட்ட ட்ரீட்  அப்புறம் கேட்டுக்கோ மாயா. வா டா போகலாம்”, என்று நரேனை இழுத்து கொண்டு சென்று விட்டான் ராகுல்.
அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் மாயா. “பாரின் போய்ட்டு வந்து தான காதலை சொல்லணும்னு நினைச்சேன். அதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சிட்டா?”, என்று நினைத்து  அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. தன்னுடைய தோழியிடம் விவரம் கேக்க வேகமாக ஓடினாள்.
அவள் விசயத்தை சொன்னது மட்டும் அல்லாமல் போட்டோவையே  காண்பித்து வயிறு எரிய வைத்தாள். போட்டோவில் நரேன் அருகே நின்ற அபர்ணாவை  பார்த்து பொறாமை வந்தது மாயாவுக்கு.
கேன்டீனில்  அமர்ந்திருந்த நரேன் முகத்தை பார்த்தான் ராகுல். நரேன் அமைதியாக  இருந்தான்.
“என்ன டா  அமைதியா இருக்க? நான் மாயா கிட்ட ஓவரா பேசிட்டேன்னு கோபமா டா?”, என்று கேட்டான் ராகுல்.
பதில் சொல்லாமல் எதையோ யோசித்த படி இருந்தான் நரேன்.
“அவ கிட்ட நீ பேசுனா வந்து லவ பண்றேன்னு சொல்லு வா டா. அதான் அவளை உன்கிட்ட நான் நெருங்க விடாம பண்றேன். அந்த மாயாவை எனக்கு சுத்தமா பிடிக்கலை.. உனக்கு அப்பு தான் டா  பெஸ்ட் ஜோடி. உன்கிட்ட அவளை பேச விட கூடாதுன்னு நான் நினைச்சாலும் வம்புக்குனு எப்படி வந்து வழியுரா பாரு. அதான் கல்யாணத்தை பத்தி பேசினேன். அப்ப அவ முகம் போன போக்கை பாத்தியா? அவ இதயமே வெடிச்சிருக்கும். நீ இந்த ஆஃபீசில வேலைக்கு வரதுக்கு முன்னாடி நந்தன்னு ஒருத்தன் வேலை செஞ்சான் டா. அவன் கிட்டயும் இவ இப்படி தான் நடந்துகிட்டா. அவ பண்றது லவ்வே கிடையாது டா மச்சான்”
“டேய் நான் பேசிட்டே இருக்கேன். நீ அமைதியா இருக்க?”
“ஆங் என்ன கேட்ட?”, என்று கனவில் இருந்தவன் விழித்து போல கேட்டான் நரேன்.
“நான் நிறைய வேஸ்ட்டா பேசிட்டேன். ஆமா நீ என் பேச்சை கூட கேக்காம என்ன யோசிச்சிட்டு இருக்க?”
“இல்லை டா, நீ அப்ப காரம்னு ஒரு வார்த்தை சொன்னியா? அப்படி சொன்ன உடனே தான் ஞாபகம் வந்தது. இன்னைக்கு சாப்பாடுல கொஞ்சம் காரம் அதிகம் டா. அதான் அப்பு சாப்பிட்டா,  அன்னைக்கு மாதிரி வயிறு வலிக்க கூடாதேன்னு யோசிச்சிட்டு இருக்கேன்”
“அட பாவி, இங்க எவ்வளவு பெரிய சீன் ஓடிட்டு இருக்கு. உன் கவலை அப்பு பத்தியா?”
“பின்ன என் பொண்டாட்டி பத்தி கவலை படாம, இந்த மாயவை பத்தி  எவன் யோசிப்பான். அவளும் அவ மூஞ்சியும்”
“டேய்  மச்சான், சரியா சொன்ன டா. நீ விவரமா தான் டா இருக்க. ஐ லவ் யூ”
“இதை உன் ஆள் கிட்ட போய் சொல்லு. சரி வா வேலையை பாப்போம்”
அன்றைய நாள் சாதாரணமாக தான் சென்றது. இடையில் அப்புவுக்கு போன் செய்து “குழம்பு கொஞ்சமா ஊத்தி சாப்பிடு”, என்று சொல்லவும் நரேன் மறக்க வில்லை.
சாயங்காலம் ராகுல் அவனுடைய ஆளை பார்க்க போறேன் என்று சொல்லி விட்டதால் “சரி நாமளும் அப்புவை கூட்டிட்டு வீட்டுக்கு போகலாம்”, என்று நினைத்து மணியை பார்த்தான்.
ஏழு என்று காட்டியது. “எட்டு மணிக்கு தான அவளுக்கு முடியும்?”, என்று நினைத்து, மீதி இருந்த வேலையை முடித்தான்.
ஏழரைக்கு எழுந்தவன் கம்ப்யூட்டரை அனைத்து விட்டு வெளியே வந்தான். “இன்னும் கொஞ்ச நேரத்துல அப்புவை பாக்கலாம்”, என்று நினைத்து அவனுக்கு அவனை அறியாமலே சந்தோசம் வந்தது.
லிஃப்ட் உள்ளே சென்று நின்றவன், தரை தளத்துக்கான பட்டனை அழுத்தினான்.
அப்போது வேகமாக உள்ளே ஓடி வந்தாள் மாயா.
எப்போதும் போல் அவளை பார்த்து சிரித்தவன், அமைதியாக நின்றான்.
லிஃப்ட் கதவும் மூடியது.  “எதுக்கு நரேன் நீங்க என்னை விட்டுட்டு  அவளை கல்யாணம் பண்ணீங்க?”, என்று கேட்டாள் மாயா.
“என்ன உளறல் இது?”, என்னும் விதமாய் அவளை பார்த்தான் நரேன்.
“எனக்கு உங்களை பிடிக்கும்னு  தெரியும் தான? அப்புறம் ஏன் அவளை கட்டி கிட்டீங்க?”
“லூசு மாதிரி பேசாத மாயா. உன்னை கல்யாணம் பண்ணனும்னு நான் யோசிச்சது கூட இல்லை”, என்றான் நரேன்.
அடுத்த நொடி அவன் எதிரே நின்றவள், அவன் அருகில் சென்றாள். “நான் நீங்க தான் எல்லாம்னு நினைச்சேன் தெரியுமா? உங்க கூட தான் கடைசி வரைக்கும் வாழணும்னு நினைச்சேன். எனக்கு நீங்க வேணும்”, என்றாள்.
அவளை விட்டு  விலகி நிற்க பார்த்தான். ஆனால் அவள் வழியை அடைத்து கொண்டு நின்றாள்.
கொஞ்சம் நகர்ந்தாலும் அவளை உரச வேண்டி இருக்கும் என்று நினைத்து அப்படியே நின்று கொண்டு “மாயா நகரு”, என்றான் நரேன்.
“மாட்டேன். என்னை விட அவ உங்களுக்கு எந்த விதத்துல உசத்தின்னு  தெரியணும்? ஐ லவ் யூ நரேன்”, என்று சொல்லி கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அதிர்ச்சியானான் நரேன். அவளுடைய தொடுகையும் , அவளிடம் வந்த சென்ட் வாடையும் , லிப்ட்டில் இல்லாத காற்றும் சேர்ந்து அவனுக்கு குமட்டலை தந்தது.
அடுத்த நொடி அவளை இழுத்து கீழே  தள்ளி விட்டான். கீழே விழுந்து கிடந்தவள் தலையை திருப்பி அவன் முகத்தை பார்த்தாள்.
“சி”, என்று சொல்லி  தலையை திருப்பி கொண்டவன் கதவு திறந்ததும் விரைந்து சென்று விட்டான்.
காரை எடுத்தவனுக்கு எரிச்சலாக வந்தது. அவளிடம் இருந்து வந்த அந்த வாசனையை வெறுத்தான் நரேன்.
“சி சி”, என்று அவன் மனது சொல்லி கொண்டே இருந்தது.
“அபர்ணாவை கூப்பிட போகணும்”, என்று நினைத்ததை மறந்தவன் “சி முதலில் போய் குளிக்கணும்”, என்று நினைத்தான்.
வீட்டுக்கு போனவன் ஷூவை கழட்டி ஆங்காங்கே விசிறி விட்டு ஷவர் அடியில் போய் நின்று கொண்டான்.
அப்போது தான் உள்ளே நுழைந்தாள் அபர்ணா. திறந்திருந்த கதவையும், ஷூ கிடந்த விதத்தையும் பார்த்தவளுக்கு எதுவோ சரி இல்லை என்று தோன்றியது.
கதவை பூட்டி விட்டு, ஷூவையும் ரேக்கில் வைத்து விட்டு அவர்கள் அறைக்குள் சென்றாள். அவனை அங்கு காணும்.
குளிக்கும் சத்தம் வந்ததில் பாத்ரூம் பக்கம் பார்த்தாள். பாத்ரூம் கதவு திறந்திருந்தது. “திறந்து வச்சிட்டு  என்ன செய்றான்?”, என்று நினைத்து எட்டி பார்த்தாள்.
போட்டிருந்த உடையுடன், சாக்ஸை கூட கழட்டாமல் கண்களை மூடி ஷவரில் நின்றிருந்தான் நரேன்.
“டேய் என்ன டா ஆச்சு?”, என்று பதறினாள் அபர்ணா.
கண்களை திறந்தவன் அவளை பார்த்ததும் “அந்த மாயா  என் மேலேயே விழுந்துட்டா டி. ச்சின்னு வருது எனக்கு  என்றான்.
“அதுக்கு இப்படியா? டிரஸை கழட்டிட்டு குளி. இரு துண்டு  எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி எடுத்து கொடுத்தவள் “சீக்கிரம் குளிச்சிட்டு வா”, என்று சொல்லி விட்டு கதவை சாற்றி விட்டு சென்றாள்.
“போச்சு, இனி அந்த வாசனை பிடிக்கலை. இது பிடிக்கலைனு உயிரை வாங்குவானே”, என்று நினைத்து கொண்டு பீரிட்ஜை பார்த்தாள்.  அதில் மல்லிகை பூ இருந்தது. அதை எடுத்து கொண்டு அவர்களுடைய அறைக்குள் நுழைந்தாள்.
அப்போது குளித்து முடித்து துண்டை மட்டும்  கட்டி கொண்டு வந்தான் நரேன். அவனை பார்த்தவள் “இந்தா மல்லிகை பூ இருக்கு. மோந்து பாரு. இந்த வியாதியை வெளிய சொன்னா சிரிப்பாங்க டா. மனுஷர் அண்டாதவனே. யாராவது கிட்ட வந்தா போதும். உன் மூக்குக்கு என்ன வந்துருமோ?”, என்று பேசி கொண்டிருந்தவளின் கையை பற்றினான்.
“என்ன டா, இதோ பூ இருக்கே”, என்றாள் அபர்ணா
“அந்த வாசனை வேண்டாம்”
“பின்ன?”
“உன் வாசனை வேணும்”
“உளராத நரேன். நீ பூவை மோந்து பாத்துக்கோ. நான் நைட்டுக்கு  ஏதாவது செய்யணும்”
“அதெல்லாம் அப்புறம். எனக்கு உன்னோட வாசனை இப்ப வேணும்”
“இப்படி எல்லாம் கேக்க மாட்டியே டா. அப்புறம்  என்ன?”
“தெரியலை பட் வேணும்ன்னு தோணுது”
“அதுக்கு?”
“டிரஸை  கழட்டு”
“ஆங்”,  என்று அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்  அபர்ணா.
தொடரும்…..

Advertisement