Advertisement

அத்தியாயம் 15

 

நரேனுடைய அசைவுகளை ஓர  கண்ணால் அவளும் கவனித்து கொண்டு தான் இருந்தாள்.

 

“இப்ப எதுக்கு பக்கத்துல வாரான்? வர வழியில எதாவது வாசனையை மோந்து பாத்துட்டுனா? அதனால மோப்பம் பிடிக்க கிட்ட வாறானோ? மவனே பக்கத்துல வந்து தொடட்டும். இருக்குற விளக்க மாத்தாலே வெளுத்து விடுறேன்”, என்று மனதுக்குள் முடிவு எடுத்தாள் அபர்ணா.

 

கிட்ட வந்தவனோ குனிந்திருந்த அவளுடைய உருவத்தையே பார்த்து கொண்டிருந்தான்.

 

முட்டுக்கு சற்று கீழே வரை தான் இருந்தது அபர்ணாவின் பாவாடை. அதுவும் அவள் குனிந்து எடுத்து கொண்டிருந்ததால் இன்னும் கொஞ்சம் மேலேறி அவள் பின்னங்கால் நன்றாகவே அவனுக்கு தெரிந்தது. அதுவும் குளித்து முடித்து வந்தால் ஆங்காங்கே நீர் துளிகள் வேறு நின்றன.

 

முதுகு வரை தொங்கி கொண்டிருந்த ஈர கூந்தலில் இருந்து ஈரம் வடிந்து அவள் பாவாடையை நனைத்து கொண்டிருந்தது.

 

அதுவும் எந்த ஆடையும் இல்லாத அவளுடைய வேற்று தோள்கள் அவன் கண்ணில் பட்டு மின்னின. அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டே இருந்தான்.

 

அவன் எதுவும் பேசாததால் “இவன் எல்லாம் திருந்தாத ஜென்மம்”, என்று நினைத்து கொண்டு உடையை எடுத்து கட்டிலில் வைத்து விட்டு நிமிர்ந்தாள்.

 

அப்போது தான் அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தான். பொட்டில்லாத நெற்றி, ஈரமான அவளுடைய இமை, லேசாக சிவந்த உதடு என அவள் முகத்தில் வலம் வந்தது அவன் பார்வை. அவள் சிவந்த உதடுகளை கண்டதும் கல்யாணத்துக்கு முந்தைய நாள் கொடுத்த முத்தம் நினைவில் வந்தது அவனுக்கு.

 

தயங்கி தயங்கி  தான் கொடுத்த முத்தமும், அந்த உதடுகளின் மென்மையும் இப்போது நினைவில் நின்றது. அதுவும் அதை பற்றி பேசிய போது “இன்னும் கொஞ்ச நேரம் நீ முத்தம் கொடுக்கணும் போல இருந்தது டா”, என்று அவள் சொன்னது என அனைத்தும் நினைவு வந்து அதே முத்தம் இப்போதும் வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

 

“என்னோட அப்பு எவ்வளவு அழகு? இதனால தான் எல்லா பசங்களும் இவளையே சுத்தி சுத்தி வந்தாங்களா? என்கிட்டயே எத்தனை பசங்க இவ அழகா இருக்கான்னு சொல்லிருக்காங்க? அப்ப எல்லாம் அவங்க மேல நான் கோப பட்டத்துக்கு காரணம் எனக்கு இவ மேல உள்ள காதல் தானா? அப்பா எந்த பொண்ணுனாலும் சரின்னு சொன்னப்ப எதுக்காக எனக்கு வேற எந்த பொண்ணோட நியாபகமும் வரலை. வேற பொண்ணை பார்த்து நான் சலன பட்டது கூட இல்லையே ஏன்? கல்யாணத்தை பத்தியும், காதலை பத்தியும் நான் யோசிச்சிருந்தா அந்த இடத்தில அப்பு தான் வந்திருப்பாளோ?”

 

“ஆனா இத்தனை வயசு வரைக்கும்  ஒரு பையனா நான் ஏன் காதல், கல்யாணம், செக்ஸ் ன்னு எதை பத்தியும் யோசிச்சது இல்லை? ஏன் என்னோட உலகமே அப்புவா இருந்தா? அவ கூட இருக்கிறதே போதும்னு  அடிக்கடி நினைச்சிப்பேனே? அதை தாண்டி அவளுக்கு கல்யாணம் ஆகும், நான் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணனும். அதனால அப்பு என்னை பிரிஞ்சிருவா இப்படி எல்லாம் யோசிக்கவே இல்லையே. அப்பு இதை பத்தி யோசிக்கும் போது தான என் மேல உள்ள காதலை புரிஞ்சிகிட்டான்னு சொன்னா. ஆனா நான் ஏன் அப்பு என்னை விட்டு பிரிஞ்சு போயிருவானு யோசிக்கணும். அவ எப்பவுமே என்கூட தான இருக்கணும். இதை தான் ராகுல் சொன்னானா?அவளை மாதிரி  நானும் யோசிச்சிருந்தா எனக்கு அவ மேல இருக்குற லவ்வையும் புரிஞ்சிருப்பேனோ? அப்ப ராகுல் சொன்ன மாதிரி எனக்கு அப்பு மேல இருக்குறது லவ் தான். சின்ன வயசுல இருந்து அவ எனக்கானவன்னு நினைச்ச நான் அப்படி எனக்கானவ என் பொண்டாட்டியா தான் இருக்க முடியும் அப்படிங்குறதை மட்டும் யோசிக்காம விட்டுருக்கேன்”, என்று அவளை பார்த்து கொண்டே யோசித்து கொண்டிருந்தான்.’

 

அவன் பார்வைக்கு விடை தெரியாமல் அவளும் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள்.

 

“பாக்க ஹீரோ மாதிரி இருக்கான். இருக்குற வேலை எல்லாம் விட்டுட்டு இவனையே சைட் அடிக்கணும்னு தோணுது. ஆனா பாரு ஒரு பீலிங்ஸ்சும் இல்லாத மரம்”, என்று நினைத்து கொண்டு அவனை பார்த்து “நீ எதுக்கு வந்த? மறுபடியும் என்னை அடிக்கவா?”, என்று கேட்டாள்.

 

அவள் கேள்வியில் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவன் “நான் என் பொண்டாட்டியை தேடி வந்தேன்”, என்று புன்னகையுடன் கூறினான்.

 

அதில் துள்ளிய மனதை அடக்கி கொண்டு “அப்படியா? அடிக்கிறதுக்கு தான?”, என்று கேட்டாள்.

 

“இல்லை”

 

“பின்ன”

 

“வேற ஒரு விசயத்துக்கு”

 

“என்ன விசயம்?”, என்று ஆர்வமாக கேட்டாள் அபர்ணா.

 

அவன் பதிலை சொல்வதுக்காக வாயை திறக்கும் போது “அப்பு அப்பு இங்க கீழ வா”, என்ற அம்பிகா பாட்டியின் குரல் கேட்டது.

 

“இதோ வரேன் பாட்டி”, என்று குரல் கொடுத்தவள் “வெளிய போ நரேன். நான் டிரெஸ் மாத்தணும்”, என்று கூறினாள்.

 

“வில்லி பாட்டி, சரியான நேரத்துல கூப்பிட்டுட்டே”, என்று நினைத்து கொண்டு “உங்கிட்ட கொஞ்சம் பேசணும் அப்பு”, என்றான்.

 

“அப்புறம் பேசலாம். இப்படியே நிக்குறேன் பாரு. ஒழுங்கா வெளிய போ”, என்றாள்.

 

அவள் முகத்தையே பரிதாபமாக பார்த்து கொண்டே வெளியே சென்றான் நரேன். அப்படி செல்லாமல் அவன் அவளை கட்டி பிடித்து ஒரு முத்தம் கொடுத்திருந்தால் அனைத்தும் நல்ல படியாக சென்றிருக்கும். பேசுறதுக்கு முன்னாடி அதை செய்ய கூடாது என்று நினைத்த நல்லவனோ சோகமாக கீழே சென்றான்.

 

அவன் போனதும் கதவை அடைத்து தாளிட்டவள் சேலையை அணிய ஆரம்பித்தாள்.

 

முகம் முழுவதும் சந்தோசத்துடன் ஓடிய நரேன் தலையை தொங்க போட்டு கொண்டு சோகமாக வருவதை  பார்த்த சிவபிரகாசம் முகத்தில் யோசனை வந்தாலும், பார்த்து விட்டு கண்டு கொள்ளாமல் இருந்தார்.

 

அவர் அருகில் சென்று  கன்னத்தில் கை வைத்து அமர்ந்து கொண்டான் நரேன். அவரோ அவனை அடி கண்ணால் மட்டும் பார்த்து கொண்டு கண்டும் காணாத மாதிரி இருந்தார்.

 

பொறுத்து பார்த்தவன் “அப்பா தான நீ? பையன் சோகமா உக்காந்துருக்கானே? என்ன ஏதுன்னு கேக்கணும்னு தெரியாது?”, என்று முறைப்புடன் கேட்டான்.

 

அவர் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு வேறு பக்கம் திரும்பி கொண்டார்.

 

“எப்பா உன்னை தான கேக்குறேன்? காதுல விழலையா?”

 

“விழலை டா. இப்ப என்னங்குற?”, என்று முறைப்புடன் கூறினார் சிவப்பிரகாசம்.

 

“அப்பா….”

 

“என்ன அப்பா. வீட்ல செவனேன்னு படுத்து கிடந்தவனை காருல தூக்கி போட்டு கூட்டிட்டு வந்துட்டு இறக்கி கூட்டிட்டு வராம  நான் கத்துறதை கூட கண்டுக்காம ஓடுனல்ல. நான் மட்டும் உன்னை கண்டுக்கணுமா?”

 

“இப்படி எல்லாம் பழி வாங்காதப்பா. அப்புவை பத்தின நினைவுல அப்படியே வந்துட்டேன். அம்மா இருக்காங்களேன்னு நினைச்சேன்”

 

“யாரு உன் ஆத்தா தான? எனக்கு உதவி செஞ்சிட்டு தான் மறுவேலை பாப்பா”

 

“சரி சரி விடு”

 

“சரி டா சொல்லு. உனக்கு என்ன பிரச்சனை? அப்பு உன்னை அடிச்சிட்டாளா?”

 

அவரை முறைத்தவன் “இன்னைக்கு அடி விழலை. ஆனா பேசலாம்னு போனேன்.  பேச வேண்டிய நேரத்துல உன் அம்மா கூப்டுட்டா”, என்று சோகமாக கூறினான்.

 

“சரி சரி இங்க தான இருக்க போற. அப்புறம் பேசு டா”

 

“பேசுனா மட்டும். முறைக்க தான் செய்வா. உன் மருமக என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்கா பா”

 

“முறைச்சா, நீ பயந்துருவியா? நீ ஆம்பளை சிங்கம் டா மகனே. இப்படி எல்லாம் பொண்டாட்டிக்கு பயப்படக்கூடாது. கம்பீரமா இருக்கணும். நான் எல்லாம் உங்க அம்மாவை எப்படி மிரட்டி வச்சிருக்கேன் தெரியுமா? நான் நில்லுன்னா நிப்பா. அப்படி இருக்கணும். பொசுக்கு பொசுக்குன்னு பொண்ணுங்க பின்னாடி போக கூடாது. அவங்கள தான் நம்மளை தேட வைக்கணும். உங்க அம்மாவை லவ் பண்ணும் போது என் பின்னாடியே வருவா தெரியுமா?”, என்றார் சிவப்பிரகாசம்.

 

“அப்படியாப்பா?”, என்று கேட்டான் நரேன்.

 

“என்ன இங்க உங்க அப்பா சத்தம் பலமா கேக்குது?”, என்று  கேட்டு கொண்டே அங்கு வந்தாள் சிவகாமி.

 

“அது வந்து மா”, என்று நரேன் ஆரம்பிக்கும் போது “ஒன்னும் இல்லமா. சும்மா அரசியல் பத்தி பேசிட்டு இருந்தோம்”, என்று சிரிப்புடன் கூறினார் சிவப்பிரகாசம்.

 

“இது தான் உங்க வீரமா?”, என்ற பார்வையை சிவப்பிரகாசம் பக்கம் வீசினான் நரேன். “இதெல்லாம் சகஜம்”, என்று கண்களால் விடை கூறி சிரித்தார் சிவப்பிரகாசம்.

 

அப்போது அங்கு வந்தாள் அம்பிகா பாட்டி. அவளை ஒரு முறைத்தான் நரேன். அவன் முறைப்பை பார்த்தாலும் “இதுக்கெல்லாம் பய படமாட்டேன்”, என்ற பதில் பார்வையை பார்த்தாள் பாட்டி.

 

அப்போது தான் மேலே இருந்து இறங்கி வந்தாள் அபர்ணா. அத்தை மாமாவை பார்த்ததும் “ஐ ஜாலி நீங்க ரெண்டு பேரும் வந்துடீங்களா?”, என்று சந்தோஷத்தில் குதித்தாள்.

 

“அட பாவி என்னை பாத்து மட்டும் இப்படி சந்தோச பட்டாளா?”, என்று நினைத்து அவளை முறைத்தான்  நரேன்.

 

அவளும் அவன் பார்வையை கண்டு கொள்ள வில்லை.

 

“எதுக்கு பாட்டி என்னை கூப்பிட்ட? குளிச்சிட்டு இருந்தேனா? அதான் நேரம் ஆகிட்டு”, என்று கேட்டாள் அபர்ணா.

 

“அதுவா என்னோட ரோஸ் கலர் சேலை உள்ள பையை நீ எடுத்துட்டு போயிருப்பியோனு நினைச்சு கேட்கலாம்னு கூப்பிட்டேன் அப்பு. ஆனா அப்புறம் தான் பாத்தேன். அது என்கிட்ட தான் இருந்தது”, என்றாள் பாட்டி.

 

“அட பாவி கிழவி, கலர் பாத்து சேலை கட்டுற வயசா? கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம இருந்திருந்தா அப்படியே கும்முன்னு நின்னவளை கோழி அமுக்குற மாதிரி அமுக்கிருப்பேனே?”, என்று நினைத்து பல்லை கடித்தான் நரேன்.

 

அதன் பின் அனைவரும் சேர்ந்து கதை பேசி கொண்டிருந்தார்கள்.

 

இருட்ட துவங்கியதும் தான் நடராஜன் கேஸ் சிலிண்டரை தூக்கி கொண்டு வந்தான். அவனுடன் வள்ளி சாப்பாடு கொண்டு வந்தாள். கூடவே அவர்களுடைய பொண்ணு விஜியையும் அழைத்து கொண்டு.

 

உள்ளே வந்த விஜி நரேனை பார்த்து பிரமித்து போனாள். அவனை பற்றி கேள்வி பட்டிருக்கிறாள் தான். கல்யாணம் அவன் கூட தான் உனக்கு செஞ்சி வைக்கணும் என்று வள்ளி சொல்லும் போது “எப்படி இருப்பான்?”, என்ற குறுகுறுப்பு எழும். ஆனால் அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் என்று கேள்வி பட்ட போது  கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இரண்டு நாள் பீல் செய்து விட்டு மறந்து விட்டாள். அப்பு, நரேன் கல்யாணத்துக்கும் அவள் வர வில்லை. அதனால் அவனை அவள் கண்டதே இல்லை.

 

இவர்கள் குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வைக்க போயிருந்த போது கூட விஜி, அவளுடைய பெரியம்மா வீட்டுக்கு வேற ஊருக்கு சென்று விட்டாள்.

 

ஆனால் இன்று அழகிய ஆண்மகனாக, கண் முன் இருந்தவனை இமைக்க மறந்து பார்த்தாள். “இப்படி பட்ட கணவன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணுமே. இவன் மட்டும் கிடைச்சிருந்தா?”, என்று அவள் மனம் அலைபாய்ந்தது.

 

“இது தான் நரேனோட முறை பொண்ணு விஜியா?”, என்று அவளை பார்த்து கொண்டிருந்த அபர்ணாவுக்கு விஜி நரேனையே பார்ப்பதை பார்த்து பொறாமை பொங்கியது. “எப்படி பாக்குறா பாரு? இதுல பெருமூச்சு எல்லாம் விடுறா? இன்னைக்கு நரேனுக்கு சுத்தி போடணும்”, என்று நினைத்து கொண்டு அதே முறைப்புடன் அவளை பார்த்து கொண்டே இருந்தாள். பாவாடை தாவணியில் கிராமத்துக்கே உரிய அழகுடன் இருந்த விஜியை சுத்தமாக அபர்ணாவுக்கு பிடிக்க வில்லை. விஜிக்கும் நரேன் திருமணம் செய்தது பிடிக்கவில்லை.

 

“இப்படி பட்ட அழகனை போய் எனக்கு கிடைக்காம செஞ்சிட்டாளே. எங்க அவ?”, என்று நினைத்து கொண்டே அபர்ணாவை பார்த்த விஜி மேலும் திகைத்தாள்.

 

அங்கே அழகு பதுமை என அமர்ந்திருந்தாள் அப்பு. இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்த படியே பார்த்து பார்வையை திருப்பி கொண்டார்கள். இது எதையும் கவனிக்காமல் முழு கவனத்தையும் தன்னுடைய மனைவி மீதே வைத்திருந்தான் நரேன்.

 

அவளுடைய ஓவ்வொரு அசைவையும் தான் கவனித்து கொண்டிருந்தான். அப்போது தான் கண்ணில் பட்டது அபர்ணாவின் முறைப்பான பார்வை.

 

“இவ என்னை தான இப்படி முறைப்பா. இப்ப யாரை முறைக்கிறா?”, என்று நினைத்து கொண்டு அவள் பார்வை போன திசையில் பார்த்தான்.

 

அங்கே ஒரு கிராமத்து கட்டழகி அவனை சைட் அடித்து கொண்டிருந்தது. “வாறே வா, என் பொண்டாட்டி பார்வையாலே இந்த பொண்ணை பொசுக்கிருவா போலயே?”, என்று நினைத்தவனின் உள்ளம் துள்ளியது.

 

சும்மா அந்த விஜியை பார்த்து லேசாக சிரித்து வைத்தான் நரேன்.

 

அந்த சிரிப்பை கண்ட விஜி சந்தோஷமாகி அவனை பார்த்து ஈ என இளித்த படி “எப்படி இருக்கீங்க மச்சான்?”, என்று கேட்டாள்.

 

“என்னது மச்சானா?”, என்று அதிர்ச்சியானாள் அபர்ணா. “விட்டா மச்சானை பாத்தீங்களான்னு பாட ஆரம்பிச்சிருவா போலயே?”, என்று நினைத்து கொண்டு நரேனை பார்த்தால், அவன் அந்த விஜியிடம் “நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?”, என்று கேட்டு கொண்டிருந்தான்.

 

பெரியவர்கள் அனைவரும் எழுந்து சாப்பிட சென்றிருக்க இவர்கள் மூவரும் இருக்கும் போது தான் இந்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது.

 

“ஏதோ, இருக்கேன் மச்சான்”, என்று இழுத்தாள் விஜி.

 

அதற்கு மேல் தாங்க முடியாமல் “நரேன் சாப்பிட வா”, என்று அழைத்தாள் அப்பு.

 

“பொண்டாட்டியா இருந்து கிட்டு புருஷனை பேர் சொல்லி வா போன்னு கூப்பிடுதாங்க. நீங்க கண்டுக்க மாட்டிங்களா மச்சான்?”, என்று கேட்டாள் விஜி.

 

“அட பாவி என் முன்னாடியே என் புருஷன் கிட்ட என்னை பத்தி போட்டு கொடுக்காளே?”, என்று நினைத்து கொண்டு இருவரையும் முறைத்தாள் அபர்ணா.

 

“அப்பு சிட்டில வளர்ந்த பொண்ணு. அதனால அவளுக்கு மரியாதைனா என்னன்னே தெரியாது”, என்று கூறி எரியும் தீயில் எண்ணையை ஊற்றினான் நரேன்.

 

“இதுக்கு தான் கிராமத்து பக்கம் பொண்ணு எடுத்துருக்கணும் மச்சான். கிராமத்து பொண்ணா இருந்தா உங்க காலுலே கிடப்பா தெரியுமா?”, என்றாள் விஜி.

 

“என்ன செய்ய விஜி? விஜி தான உன் பேரு? சின்ன வயசுல விளையாடியது எல்லாம் நினைவு இருக்கு”

 

“ஆமாங்க மச்சான். என் பேரு எல்லாம் நினைவு வச்சிருக்கீங்களா?”

 

“ஆமா விஜி. அப்புறம் என்ன கேட்ட கிராமத்து பொண்ணை கட்டிருக்கலாம்னு தான? ஹ்ம்ம் கட்டிருக்கலாம். ஆனா என்னோட விதி, அப்புவை என் தலையில கட்டி வச்சிட்டாங்க?”, என்று சலிப்புடன் கூறினான் நரேன்.

 

ஏற்கனவே தன்னை அவன் விரும்ப வில்லை என்று நினைத்து கொண்டிருந்த அபர்ணாவுக்கு நரேன் வார்த்தைகள் அனைத்தும் வலியை கொடுத்தது. ஆனால் விளையாட்டுக்கு அபர்ணாவை வெறுப்பேற்ற நினைத்த நரேனுக்கோ அவளுடைய வலி புரியவே இல்லை.

 

அடுத்த நிமிடம் அங்கிருந்து அகன்று விட்டாள் அபர்ணா. அவள் போனதும் அவனும் சென்று விட்டான்.

 

ஆனால் விளையாட்டுக்கு பேசிய நரேனின் வார்த்தைகளை உண்மை என்று நம்பினாள் விஜி. “மச்சானுக்கு இந்த ராங்கியை பிடிக்கலை போல?”, என்று விஜியின் மனதில் பதிந்து போனது.

 

நேராக சென்ற அபர்னாவோ தன்னுடைய பாட்டியை தேடினாள். கோபத்துடன் வந்த பேத்தியை பார்த்ததும் “என்ன ஆச்சு அப்பு?”, என்று கேட்டாள் பாட்டி.

 

“உன் பேரனுக்கு நீ அந்த பொண்ணையே கட்டி வச்சிருக்கலாம் பாட்டி”

 

“ஏய் என்ன உளற அப்பு?”

 

“உண்மையா தான் சொல்றேன். அவனுக்கு கிராமத்து பொண்ணு தான் பிடிக்குமாம்”

 

“லூசு, அவன் சும்மா சொல்லி இருப்பான். அவன் கார்ல இருந்து இறங்கி எப்படி உன்னை பாக்க ஓடி வந்தான் தெரியுமா? உன்னை கஷ்ட படுத்துற அவனை உங்கிட்ட பேச விடாம காய விடணும்னு தான் உன்னை நான் கூப்பிடவே செஞ்சேன்”

 

“நிஜமாவா பாட்டி?”

 

“ஆமா டா. ஆனா அவன் அடங்காம இன்னும் உன்னை காய படுத்துறான்ல? அவனுக்கு இரு நான் ஆப்பு வைக்கிறேன். நீ சாப்பிட வா. அப்பறம் அவன் வந்து பேசுனா பேசாத. பொண்டாட்டி மனசுல என்ன நினைக்கிறானு தெரியாம அந்த கருவாச்சியை கொஞ்சிறானா? நான் பாத்துக்குறேன். நீ மட்டும் நான் சொல்ற படி செய் என்ன? இந்த திருவிழா முடியுற வரைக்கும் அவன் கிட்ட சரியா பேசாத? இப்ப சாப்பிட வா”, என்று கூறி விட்டு சென்று விட்டாள்.

 

“ஹ்ம்ம்”. என்று முணுமுணுத்து அப்புவும் “என்னையா வெறுப்பேத்துற? இரு டா பண்ணி உனக்கு இருக்கு”, என்று மனதுக்குள் திட்டி கொண்டே சாப்பிட வந்தாள்.

 

ஏற்கனவே சிவகாமி, சிவப்பிரகாசம் அருகில் அமர்ந்திருந்தான் நரேன்.

 

அவர்களுக்கு பரிமாறி கொண்டிருந்தாள் வள்ளி.

 

பாட்டியும், சிவகாமி அருகில் அமர்ந்து கொண்டாள். இப்போது நரேனுக்கும், பாட்டிக்கும் இடையே இரண்டு சேர் இருந்தது. ஒன்று நரேன் அருகிலும், மற்றொன்று நரேனுக்கு எதிரிலும்.

 

அவன் அருகே அமர துடித்த மனதை அடக்கி கொண்டு “பாட்டி பக்கத்துல உக்காரனும்”, என்று நினைத்து கொண்டு அருகில் சென்றாள்.

 

ஆனால் அபர்ணாவையே தான் விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்வையில் மனதில் நினைத்ததை மறந்து அவன் அருகில் அமர போனாள். அதில் அவன் மனமும் துள்ளியது. ஆனா சரியான நேரத்தில் “என்ன நின்னு யோசிச்சிட்டு இருக்க? உக்காந்து சாப்பிடு அப்பு”, என்று கை பிடித்து இழுத்து தன் அருகே அமர வைத்து கொண்டாள் பாட்டி.

 

அதில் இவருடைய மனமும் கூம்பி போனது. பாட்டியை பாவமாக பார்த்தாள் அப்பு. “அவனை விட்டு விலகி இருன்னு சொன்னேன்ல?”, என்று அபர்ணா காதில் முணுமுணுத்தாள் அம்பிகா பாட்டி.

 

அடுத்து சிவப்பிரகாசம் “நீ மட்டும் ஏன் மா நின்னுட்டு இருக்க? நீயும் உக்காந்து சாப்பிடு விஜி”, என்று அவளையும் அழைத்து விட்டார்.

 

“இல்லை மாமா. நான் வீட்டுல போய் சாப்பிட்டுக்குறேன்”, என்று நல்ல பிள்ளையாக சொன்னாள் விஜி.

 

“பரவால்ல விஜி. நிறைய இருக்கே. நீயும் சாப்பிடு. நரேன் பக்கத்துல உக்காரு”, சொன்னாள் சிவகாமி.

 

“குடும்பமே எதிரியா இருக்கே”, என்று நினைத்த அபர்ணாவுக்கு நரேன் அருகில் விஜி அமர்ந்தது பிடிக்கவே இல்லை.

 

ஆனால் விஜியோ சந்தோஷமாக இருந்தாள்.

 

பக்கத்தில் அமர்ந்தவளிடம் எதாவது சில்மிஷம் செய்யவேண்டும் என்று காத்திருந்த நரேன் எண்ணத்தில் மண் விழுந்தாலும் அவன் மனம் தளரா விக்கிரமாதித்யன் மாதிரி எதிரில் இருந்த அப்புவை கவுக்க எண்ணினான்.

 

முகத்தில் ஒரு சிரிப்புடன், காலை மெதுவாக நீட்டினான். அது அவள் காலில் பட்டது. “ஐ என் பொண்டாட்டி கால் சிக்கிருச்சு.இன்னைக்கு கிச்சு கிச்சு மூட்டுறேன் பாரு. அப்படியே தொட்ட உடனே அவ செக்க சிவந்து சிலிர்த்து போகணும் “, என்று நினைத்து கொண்டே மெதுவாக காலை வைத்தே காலை தடவினான்.

 

அபர்ணாவோ விஜியை நினைத்து  கடுப்புடன் சாப்பிட்டு கொண்டிருந்தாள். “இவன் எப்படி இந்த பொண்ணு கிட்ட அப்படி எல்லாம் பேசலாம்?”, என்று நினைத்து  அவனை முறைப்பதுக்காக நிமிர்ந்தாள். அவனோ குறுஞ்சிரிப்புடன் அவளை பார்த்தான். “இவன் எதுக்கு இப்படி லூசு மாதிரி என்னை பாக்குறான்?”, என்று நினைத்து அவனையே பார்த்தாள் அப்பு. அவனோ கண்களால் எப்படி என்னும் விதமாய் கேள்வி எழுப்பினான். பத்தாததுக்கு டேபிள் கீழே கவனி என்று கண்களை வேறு காட்டினான்.

 

“கிறுக்கு புடிச்சிருச்சா?”, என்று நினைத்து அவள் கீழே பார்க்கும் முன் அவன் கண்ணில் பட்டது கண்களை மூடி கனவில் இருந்த விஜி தான். ‘

 

“அவன் என்ன இப்படி சைகை செய்றான். இவ என்ன ஒரு மார்க்கமா உக்காந்துருக்கா”, என்று நினைத்து யாருக்கும் தெரியாமல் கீழே குனிந்து பார்த்தவள் இடி விழுந்தது போல துடித்து போனாள். நரேன் காலை நீவி கொண்டிருந்தது விஜியின் கால் விரல்களை.

 

அதிர்ச்சியாக எழுந்தவள் அவனை தீ பார்வை பார்த்தாள்.

 

“நான் இங்க ரொமான்ஸ் செஞ்சிட்டு இருக்கேன்? இவ என்ன இப்படி முறைக்கிறா?”, என்று நினைத்து கொண்டு முழித்தவன் என்ன என்னும் விதமாய் கண்களை காட்டினான்.

 

“எனக்கு சாப்பாடு போதும்”, என்று சொல்லி விட்டு எச்சி தட்டை தூக்கி கொண்டு சென்று விட்டாள் அபர்ணா.

 

இப்போது அதிர்ந்து விழிப்பது நரேன் முறை. “அவள் போன அப்புறமும்  அவ கால் எப்படி இருக்கும்?”, என்று முழித்தவன் அப்போது தான் விஜியை பார்த்தான்.

 

“ஐயையோ”, என்று வாய் விட்டே அலறி விட்டு காலை எடுத்து கொண்டான். அவள் தான் செக்க சிவந்து சிலிர்ப்புடன் இருந்தாள்.

 

“என்ன டா எதுக்கு இப்படி கத்துற?”, என்று கேட்டாள் சிவகாமி.

 

“எனக்கு சாப்பாடு வேண்டாம் மா. ஒரு முக்கியமான போன் செய்யணும்”, என்று சொல்லி விட்டு கையை கூட கழுவாமல் சென்று விட்டான்.

 

கிட்சன் உள்ளே சென்ற அபர்ணாவின் மனது முழுவதும் கொதித்தது. “எவ்வளவு திமிர் இருந்தா இப்படி கேவலமா நடந்து கிட்டு எப்படின்னு வேற கண்ணை காட்டுவான்”, என்று நினைத்து அவளுக்கு ரத்த அழுத்தம் ஏறியது.

 

ஆனால் விஜியோ நரேனின் சில்மிஷத்தில் திளைத்திருந்தவள் அவனுடைய ஐயையோ சத்தத்தில் தான் நிகழ்காலத்துக்கு வந்தாள்.

 

அவளுக்கு அவனை பார்க்கவே தயக்கமாக இருந்தது. “அவனுக்கும் அப்படி தான் இருக்கும். அதான்   போய்ட்டான் போல?”, என்று நினைத்து கொண்டு சந்தோசமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

 

விஜி வீட்டினர் சென்ற பிறகு உம்மென்று இருந்தவளை “என்ன ஆச்சு அப்பு?”, என்று விசாரித்தாள் பாட்டி.

 

நடந்ததை கூறியவள் “நீ எந்த பொய்யும் சொல்லி என்னை ஏமாத்ததா பாட்டி. அவனுக்கு என்னை பிடிக்கவே இல்லை”, என்று கூறி விட்டு தன்னுடைய அறைக்கு சென்று கதவை தாளிட்டு விட்டு படுக்கையில் படுத்தாள்.

 

அபர்ணா சொன்னதை கேட்ட பாட்டிக்கு, நரேன் ஐயையோ என்று அலறியது நினைவில் வந்தது. “பாவி பய பொண்டாட்டின்னு நினைச்சு பக்கத்துல உள்ளவ காலை போய் சுரண்டிருக்கானே. இவனே அவன் தலைல  மண்ணை அள்ளி போட்டுக்குவான். இந்த வயசு வந்த அப்புறமும் புத்தி இருக்குதான்னு பாரு. உன்னை எல்லாம்… புத்தி வர வரைக்கும் நீ இப்படி தான் இருக்கணும் நரேன்”, என்று நினைத்து கொண்டாள்.

 

வெளியே காத்து வாங்கி கொண்டிருந்தவனுக்கு நடந்ததை நினைத்து குற்றவுணர்வாக இருந்தது. “அப்பு ஏற்கனவே என் மேல கோபமா இருக்கா. இப்ப வேற இப்படி ஆகிட்டே. ஆனா எப்படி இருந்தாலும் நான் அந்த பொண்ணு கிட்ட பேசுனா அப்புவுக்கு செம கோபம் வருது. இதை இப்படியே மெயின்டெயின் பண்ணா அப்பு என்கிட்டே கண்டிப்பா ஏண்டா இப்படி பண்றன்னு சண்டைக்கு வருவா. அப்ப அப்படியே அவளை கட்டி புடிச்சிக்குவேன். விஜி பத்தி பேசி வெறுப்பேத்துனா அப்பு இன்னைக்கே சண்டை போடுவா. இன்னைக்கு நைட்டே சண்டை வரும். அப்படியே அவளை சமாளிச்சு, அப்படியே என் காதலை சொல்லி அவளுக்குள்ளே தொலைஞ்சு போயிருவேன்”, என்று குறுகுறுப்பாக நினைத்து உள்ளே வந்தான்.

 

பாட்டி மட்டும் தான் அமர்ந்திருந்தாள்.

 

“தூங்கலையா பாட்டி?”, என்று கேட்டான்.

 

“ஹ்ம்ம் கொஞ்ச நேரம் கழிச்சு போகணும் டா”

 

“சரி சீக்கிரம் போய் தூங்கு. நானும் படுக்க போறேன். குட் நைட்”, என்று கூறி விட்டு மாடிக்கு போக முதல் படியில் காலை வைத்தான்.

 

“டேய் அங்க எங்க போற?”, என்று கேட்டு அவனை நிறுத்தினாள் பாட்டி.

 

“எங்க போவாங்க? தூங்க தான் போறேன்”

 

“அது தெரியுது. ஆனா மேல எங்க போற?”

 

“பாட்டி என்ன உளற? அப்பு மேல ரூம்ல தான இருக்கா? அங்க தான போகணும்”

 

“எங்கயும் போக வேண்டாம். நீ உன் அப்பா ரூம் பக்கத்துல உள்ள ரூமை எடுத்துக்கோ”

 

“பாட்டி…..”, என்று அதிர்ச்சியாக முழித்தான் நரேன்.

 

“என்ன பாட்டினு முழிக்கிற? கல்யாணம் பண்ணி வச்சா நீ அவளை அடிச்சு அனுப்பியிருக்க. அவ வந்து எனக்கு மனசு சரி இல்லை பாட்டி. எங்கயாவது என்னை கூட்டிட்டு போன்னு கண்ணை கசக்குறா. உனக்கு இதுக்கா கல்யாணம் செஞ்சி வச்சோம்?”

 

“ஐயோ பாட்டி அது அப்ப நடந்தது. அப்புறம் உன் பேத்தியும் என்னை அடிச்சிட்டு தான் கோப பட்டு  வந்தா. இப்ப போய் அவளை சமாதானம் பண்ணிருவேன். குட் நைட் என்ன?”, என்று சொல்லி விட்டு ஓட பார்த்தான்.

 

“நீ ஆணியே புடுங்க வேண்டாம். ஒழுங்கா கீழே உள்ள ரூம்ல போய் படு. இப்ப அவ கிட்ட நீ பேசுனா அவ இங்க இருந்தும் எங்கயாவது போயிருவேன்னு இப்ப தான் சொல்லிட்டு போனா”

 

“ஐயோ பாட்டி அது ஒரு சின்ன கோபத்துல சொன்னது  பாட்டி. நான் அவ கூடவே தூங்குறேனே ப்ளீஸ்”, என்று கேவலமாக கெஞ்சினான் நரேன்.

 

“மானத்தை வாங்காத டா. சொல்றதை கேளு. ஒழுங்கா போய் கீழ உள்ள ரூம்ல படு. அவ சந்தோசமா இருக்க தான் இங்க கூட்டிட்டு வந்தேன். ஆனா பின்னாடியே வந்து தொல்லை செய்ற. அவ ஏன் பாட்டி அவன் இங்க வந்தான்னு என்னை கேக்குறா? ஒழுங்கா கீழே படு”

 

“பாட்டி… வேணும்னா மாடில உள்ள இன்னொரு ரூம்ல படுக்கட்டா?”

 

“எதுக்கு அவளை போய் வெறுப்பேத்துறதுக்கா? அவ கிட்ட நீ கொஞ்ச நாள் பேசாத. அப்படி பேசுறதை பாத்தேன்? அவளை வேற எங்காவது போய் நிம்மதியா இருன்னு அனுப்பி வச்சிருவேன்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு செல்ல இரண்டடி எடுத்து வைத்தாள்.

 

“ஐ பாட்டி போயிருச்சு. போன அப்புறம் நாம போய் பேசலாம்”, என்று நினைத்து அங்கேயே இருந்தான் நரேன்.

 

“நடுராத்திரில போய் அவளை எழுப்பணும்னு நினைக்காத. யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க மாட்டேன்னு சொல்லிட்டு தான் போயிருக்கா”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.

 

“ஐயோ பாட்டியே சகுனி வேலை செய்யுதே”, என்று நினைத்து பல்லை கடித்தவன் கீழே உள்ள அறைக்கே சென்றான்.

 

அப்போது அவனை வெறுப்பேத்தவென போனில் அழைத்தான் ராகுல்.

 

இருந்த கடுப்பை அனைத்தையும் சேர்த்து “என்ன டா?”, என்று அவனிடம் எரிந்து விழுந்தான் நரேன்.

 

“ஏய் என்னடா இப்படி கத்துற? முக்கியமான வேலைல இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? அப்பவே பண்ணனும் நினைச்சேன் மச்சான். அம்மா, கண்ணு முன்னாடி பூரியை கொண்டு வந்து வச்சிட்டாங்களா? அதை காலி பண்ண அப்புறம் உனக்கு போன் பண்றதுக்குள்ளே மணி ஒன்பது ஆச்சு. ஆனாலும் மணி ஒன்பது தான டா ஆகுது? அதுக்குள்ளயுமா ஆரம்பிச்சிட்ட?”, என்று கேட்டான் ராகுல்.

 

“நீ எதை ஆரம்பிச்சிட்டியானு கேக்குற ராகுல்?”, என்று பல்லை கடித்த படி கேட்டான் நரேன்.

 

“வேற என்ன? அது தான். இன்னைக்கு அப்புவை பாத்து சமாதான படுத்தின உடனே லைப் ஸ்டார்ட் பண்ண சொன்னேன்ல? நீ இன்னும் திருந்தலையா டா? என்ன அவ பக்கத்துல போன உடனே உன் மனசாட்சி அப்புவை அப்படி பாக்க கூடாதுனு சொல்லிட்டா? உடனே நீயும் வந்துட்டியா? நீ எல்லாம் மாறவே மாட்ட டா. பரதேசி. நாலஞ்சு விடியோவாது அனுப்புறேன்னு சொன்னேன்ல?”

 

“டேய் எருமை, தின்னி மாடு. மனுஷன் அவஸ்தை புரியாம, நீ வேற படுத்தி எடுக்குற பன்னாடை. அவ கிட்ட பேச கூட முடியாத நிலைமைல இருக்கேன் டா. கதவை அடைச்சிட்டு தூங்கிட்டா. பத்தாததுக்கு அவளை நான் டிஸ்டர்ப் பண்ணா எங்க பாட்டியே அவளை எங்கயாவது அனுப்பிருமாம். என்னை அவ ஏன் வந்தான்னு கேட்டுருக்கா மச்சான். என்னென்னவோ நினைச்சிட்டு வந்தேன் மச்சான். புஷ்வாணம் மாதிரி போய்ட்டு”, என்று புலம்பினான் நரேன்.

 

“உன் வாழ்க்கையிலே விதி இப்படியா விளையாடனும்? எனக்கு என்னவோ அப்பு உன்னை வெறுத்துருப்பானு தோணலை. அந்த கிழவி எதுவும் பிளான் போடுதா டா?”

 

“சே சே பாட்டி தான் எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க. அப்புறம் எப்படி எங்களை பிரிச்சு வைப்பாங்க?”

 

“அதுவும் சரி தான். சரி எதுக்கும் நாளைக்கு பகல்ல அவ கிட்ட தெளிவா உன் மனசுல உள்ளதை சொல்லு சரியா?”

 

“டிரை பண்றேன் டா. இப்ப வைக்கிறேன்”, என்று போனை வைத்த நரேனுக்கு “ஆமா அப்பு என் மேல கோபமா எல்லாம் இருக்க மாட்டா. நான் கதவை தட்டுனா அவ திறக்க மாட்டேன்னு சொன்னது இந்த கிழவி தான் ரீல் சுத்திருக்கும்”, என்று நினைத்து கொண்டு பூனை போல் மாடி படியில் ஏறினான்.

 

அவள் அறையை அடைந்தவன் கதவை தட்டினான். ஆனால் அவளோ இரண்டு நாள் சரியான உறக்கம் இல்லாததால் அடித்து போட்ட படி தூங்கி கொண்டிருந்தாள்.

 

“பாட்டி சொன்னது சரி தான். அவளுக்கு நிஜமாவே என் மேல கோபம். அதான் திறக்க மாட்டிக்கா. தேவை இல்லாம பாட்டி மேல போய் சந்தேக பட்டுட்டோமே. நான் தான் இந்த ராகுல் நாய் பேச்சை கேட்டு தப்பா நினைச்சிட்டேன்”, என்று நினைத்து கொண்டு படுக்க சென்றான். தூக்கம் தான் வருவேனா என்று அடம் பிடித்தது.

 

கண் முன் அப்புவின் உருவமே வலம் வந்தது. அவளை பற்றியே யோசித்து கொண்டிருந்தான்.

 

அன்று அவள் மார்பில் முகம் புதைத்துத்து இப்போது  நினைவில் வந்தது. அவளுடைய வியர்வை வாசனையை கூட இப்போது சுவாசிப்பது போல உணர்ந்தான் நரேன். “அன்னைக்கு அவ்வளவு கிட்ட இருந்தா. அன்னைக்கே அவளை அப்படியே இறுக்கி, அவ காதுல உதட்டை வச்சு ஐ லவ் யு ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு அவ உதட்டுல முத்தம் கொடுத்து, அவ வயித்துல இருந்த கையை அழுத்தி பிடிச்சிட்டு, அப்படியே அவள் மேல கவிழ்ந்து..”, என்று நினைத்து பார்த்தவனுக்கு உணர்வுகள் முதல் முறையாக அவனுடை மனைவியை நினைத்து பேயாட்டம் போட்டன.

 

வாழ்க்கையில் முதல் முறை அவனை அறியாமலே இந்த உணர்வுகள் வந்தது விசித்திரம் தான். சுற்றி சுற்றி இதே மாதிரியான யோசனைகளே அவனுக்குள் அணிவகுத்தது.  பெருக்கெடுத்த காதல் உணர்வுகளை அடக்க முடியாமல் நடுராத்திரியில் பாத்ரூம் சென்று குளித்து விட்டு துண்டுடன் வந்தான் நரேன்.

 

அந்த  வீட்டில் ஒரே ஒரு பாத்ரூம் மட்டுமே இருப்பதால் அந்நேரம் கீழே இறங்கி வந்தாள் அபர்ணா. வந்தவளின் கண்ணில் குளித்து முடித்து வந்த நரேன் தான் பட்டான். அவனை விசித்திரமாக பார்த்தாள் அபர்ணா.

 

ஏதோ நிழலாடுவதை உணர்ந்து தலையை நிமிர்ந்து பார்த்த நரேன் கண்களில் அபர்ணாவை கண்டதும்  வெளிச்சம் வந்தது.

 

தொடரும்…..

 

Advertisement