Advertisement

புரவியில் கவிந்தமிழனை தூக்கிக்கொண்டு சட்டென பறந்தவன் அடுத்து நின்ற இடம் அவன் கவிந்தமிழனுக்காக கட்டிய ரகசிய மாளிகை.
“தோழா! உனக்கு ஒன்றும் ஆகவிடமாட்டேன்” என்று  ஆழ்ந்த சிந்தனையில் இருந்து பின் மீண்டவன்.
“என்னை மன்னித்துவிடுங்கள் நண்பா. எந்த காரணத்தை கொண்டும் மிக முக்கியமான நேரங்களை தவிர இந்த திறனை உபயோகப்படுத்தக்கூடாது என்று எனக்கு கூறியிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக இருக்கிறது. உங்களின் பேச்சை மீற போகிறேன்” என்றவன் பக்கத்திலிருந்த மூலிகை நிறைந்த இடத்திற்கு சென்று தேடினான். அவன் தேடியது கிடைக்கவில்லை.
ஆம்! நம் கவிந்தமிழன் நம்பியது அவனின் உயிர் தோழனை மட்டும்தான். அதனால் தான், அவனுக்கு தெரிந்த அனைத்து மந்திரங்களையும் திறன்களையும் கருவனுக்கு சொல்லி கொடுத்தான்.
அதனால் கருவன் எல்லாவற்றையும் கற்று தேர்ச்சி பெற்றான். இருந்தாலும் மூலிகை விஷயத்தில் இன்னும் தெளிவு பெறாமல் தான் இருந்தான்.
ஆகையால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, இப்பொழுது மிக முக்கியமான திறனை உபயோக படுத்த முயற்சி செய்கிறான்.
கண்களை மூடி விரல்களை மடக்கி சிறிது நேரம் யோசித்து பின் முகம் பிராகாசம் அடைய, விழிகள் தானாய் கவிந்தமிழனை கண்டது.
இந்த முறை மருத்துவ குணத்தில் இதற்கு என்ன செய்வது என்று யோசித்து அந்த மருந்துகளை கொண்டுவந்து  விட்டான்.
காயங்கள் உடனே மறையவில்லை என்றாலும் அவனின் நிலையில் முன்னேற்றம் இருந்தது.
*******************
விரைந்து உள்ளே வந்த செந்தமிழன் மலரை நெருங்கி,
“அம்மா மலர்! என்ன ஆயிற்று?” என்று கனிவாய் கேட்க.
நடநத அனைத்தையும் கூறினாள் மலரிதழ்.
“எவ்வளவு திமிரிருந்தால் கவிந்தமிழனின் வேடமிட்டு உன்னிடம் வந்திருப்பான். அவனை அவ்வளவு எளிதில் விடக்கூடாது.” என்று வெகுண்டெழுந்தான் செந்தமிழன்.
பின்னர் செந்தமிழின்,
“அம்மா மலர்! நான் கூறுவதை கேட்பாயா?” என்றாள் மிகவும் மெதுவாய்.
“கூறுங்கள் மாமா” என்றாள் மலர்.
“அது என்னவென்றால் சிறிது நாளைக்கு நீ நான் கூறுமிடத்திற்கு சென்று தங்கவேண்டும்” என்றான் செந்தமிழன்.
“எதற்காக?” என்றாள் மலர்.
“அண்டை நாட்டு போர் முடிவதாக இல்லை. இன்னும் இரு தினங்களில் இங்கும் நடைபெறும். நீ மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும். நீ இப்பொழுது கர்பமுற்றிருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமல்லவா அதற்கு தான் கூறுகிறேன்” என்றான் செந்தமிழன்.
“பெண் என்று பயப்படுகிறிரா?” என்றாள் சிறிது கோபமாய்.
“நிச்சயமாய் இல்லையம்மா. வாள்வீச்சில் உன் திறமையும் உன் அச்சமின்மையும் நான் அறிவேன் மலர்.” என்றான் செந்த.
“சரி மாமா” என்றதும் வெளியில் நின்றிருந்த ஆட்களை வரவழைத்து அமைச்சரை அழைத்து வரச்சொன்னான்.
அவர் வந்ததும் அனைத்தும் கூறி, “ஞாபகமிருக்கிறது அல்லவா? மலர் மிகவும் ஜாக்கிரதையாக நான் கூறிய இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.” என்றான் பொருள்பொதிந்த வார்த்தைகளால் அமைச்சரை விழிகளால் உரசியபடி.
அதன் பொருள் புரிந்த அமைச்சர் தலையசைத்து ஆமோதித்தார்.
புரவிகள் மட்டும் பறந்து கொண்டிருக்க மிளரிதழின் எண்ணங்களோ பின்னோக்கி சென்று கொண்டிருந்தது.
 பெண்ணென்று அவள் பிறந்திருந்தாலும் அவளுக்கு மிகவும் பிடித்த கலை வாள்வீச்சு தான்.
தினமும் அதற்கென்றே யாருமற்ற வனப்பகுதியில் தேர்ந்த வீரர்களோடு பயற்சி மேற்கொள்வாள் மலரிதழ்.
அன்றும் அப்படிதான் அதிகாலையிலேயே அவளின் கனவில் ஒரு இளவரசன் புன்னகைத்த முகமாக அவளிடம் நெருங்கி வருவது போல் இருக்க வெடுக்கென எழுந்தவள், அதற்குப்பின் உறக்கம் வராமல் ‘யார் அந்த அழகிய முகத்திற்கு சொந்தக்காரன்? முகம் தெளிவாக தெரியவில்லையே? ஆனாலும் அவன் விழிகளின் கூர்மையில் என்னை கட்டியிழுகிறானே?’ என்று தனக்குள் யோசித்தபடி உறக்கத்தை தொலைத்தாள். பின் எழுந்து விடியாததால் யாரையும் எழுபாமல் வாள்வீச்சு பயிற்சிக்கு தனியாக வந்துவிட்டாள்.
கவிந்தமிழன் தென்திசையில் போர்கொண்டு வெற்றிபெற்று திரும்பி வந்துகொண்டிருந்த சமயம்.
“நான் பின்னே வருகிறேன். நீங்கள் அனைவரும் அரண்மனை செல்லுங்கள்” என்று அனைவரையும் அனுப்பிவிட்டு தான் மட்டும் அருவியை தேடி சென்றான்.
அங்கே அவன் விழிகளுக்கு விருந்தாக, அருவியின் கரையோரத்தில் யாருமில்லாமல் அருகில் இருந்த பாறைகளின் மேல் வாள்வீச்சு என்று நர்த்தனம் ஆடி கொண்டிருத்தாள் மலரிதழ்.
அவளை கண்டு மெய்மறந்தவன். ‘யாரிந்த பேரழகி? யாருமில்லாமல் பயிற்சி கொள்கிறாள்?’ என்று தனக்குள் பேசியபடி நோக்கினான்.
ஆடம்பர ஆடைகள், ஆபரணங்கள் எதுவும் இன்றி மிகவும் சாதாரணமான உடை அணிந்திருந்த மலரிதழின் கூந்தல் இடையில் இருந்து கீழிறங்கி அவளின் அழகுக்கு மேலும் அழகூட்டின.
பயிற்சியில் பூத்த வியர்வைத்துளிகள் அவளின் முகத்திலிருந்து வழிந்தோட முன் நெற்றியில் சிறு சிறு கீற்றாய் கற்றை முடிகள் அசைந்தாட அதில் தன்னையுமறியாமல் லயித்திருந்தான் கவிந்தமிழன்.
அவளுடன் சற்று விளையாட எண்ணி முகத்தை தலைபாகையின் துணியில் மறைத்துகொண்டு முன்னே சென்றான்.
அவனின் விழிகளை கண்டவள் ஒருநொடி அதிர்ந்து நின்றாள் மலரிதழ்.
‘இவ்விழிகளை இதற்கு முன்னே எங்கேயோ கண்டிருக்கிறேனே?’ என்ற கேள்வி மனதில் உதித்தாலும் அதை வெளிக்காட்டாமல், மிடுக்காக கணீரென்ற குரலில் துளியும் பிசிரில்லாமல் “யார் நீ?” என்றாள்.  
அவளின் அழகிலும் திறனிலும் கட்டுண்டிருந்தவன் அவளின் இனிய தேன்போன்ற குரலில் இன்னும் மதிமயங்கி அவளை நோக்கினான்.
பதிலேதும் கூறாமல் அவளையே நோக்கி கொண்டிருக்கும் கவிந்தமிழன் மீது எரிச்சல் கொண்டு, “கேட்கிறேன் அல்லவா? யார் நீ? வழிபோக்கனாக இருந்தால் என் பொறுமையை சோதிக்காமல் சென்றுவிடு” என்று முறைத்தாள்.
அவளின் வீரத்தில் ஒரு திமிர் தெரிய அவளுடன் மேலும் விளையாட எண்ணி, “உன்னை போன்ற ரதியை கண்டபின் தனியே எப்படி விட்டு செல்வது?” என்று சிரித்தான் கவி.
கோபம் தலைக்கேற தன் வாளினால் அவனை தாக்க முயற்சித்தாள்.
அதை லாவகமாக தடுத்தவன், மேலும் வாள்வீசி அவளின் திறனை சோதித்தான்.
முதலில் அவன் மேல் கோபம் கொண்டு வாள் வீசத்தொடங்கியவள் பின் அவனின் லாவகமான தடுப்புகளும் வாள்வீசும் திறமையும் கண்டு ஆர்வதோடு தன் பயிற்சிக்கு தகுந்த இணை என்று எண்ணியபடி உற்சாகமாக வாள் வீசினாள்.
வெகுநேரம் நீடித்த இவர்களின் மோதல் யாரும் வெற்றிபெறாமல் கற்று தரும் களமாக மாறியிருந்தது.
கவிந்தமிழன் நுணுக்கமான முறைகளை மலரிதழுக்கு கற்று கொடுத்துகொண்டிருந்தான்.
“இன்று இதுபோதும். உனது வாள்வீசும் திறமை என்னை மலைக்க வைக்கிறது. அருமையான கற்கும் திறன் உனக்கு உள்ளது.” என்றவன் தன் புரவியில் ஏறிக்கொள்ள.
“தாங்கள் …?” என்று இழுத்தாள் மலர்.
“நான் கவிந்தமிழன்.” என்று சிரித்தான்.
அவனை பற்றி தோழிகள் பேச கேட்டிருக்கிறாள்.
‘மிகுந்த மாவீரன் என்று கூறினார்களே’ என்று யோசிக்க.
”உன் பெயர் என்ன பெண்ணே?” என்றான் கவி.
“ நான் மலரிதழ். உங்கள் அண்டை நாட்டு இளவரசி” என்று புன்னகைத்தாள்.
அவளை மேலும் கீழும் பார்த்தவன். “மேலும் பயிற்சி வேண்டுமென்றால் நாளை இதே நேரம் இங்கு உன்னை காண்கிறேன்” என்று கூறிசென்றான் கவிந்தமிழன்.
இப்படியே இவர்களின் பயிற்சி காதலில் முடிந்தது.
ஆனால் மலரிதழின் மதி மயங்க்களுக்கு வேறு காரணமும் இருந்தது.
*****    
நினைவுகள் கலைந்திட,                                                                     
அடுத்து மல்ரிதழ் அமைச்சருடன் விரைந்து சென்று நின்ற இடம் காட்டின் நடுப்பகுதி…
அதாவது கவிந்தமிழன் இருந்த இடம்.
“என்னாயிற்று ஏன் இங்கு நிறுத்திவிட்டிர்?” என்றாள் மலரிதழ் அமைச்சரிடம்    
“அரசி இது தான் மன்னர் கூறிய இடம்” என்றார் அமைச்சர்.
“இந்த வனப்பகுதியிலா என்னை விட சொன்னார் மாமா.” என்றாள் சந்தேகமாய்.
“ஆம் அரசி!” என்று புரவியில் இருந்து இறங்கி, “வாருங்கள் அரசி” என்று அழைத்தார்.
ஒன்றும் புரியாமல் இறங்கிய மலரிதழ் அமைச்சரை பின் தொடர்ந்தாள்.
நேராக விரைந்து சென்ற அமைச்சர் சுற்றும் முற்றும் ஒருமுறை கூர்ந்து கவனித்தபின், “வாருங்கள்” என்று தன் முன்னால் இருந்த பச்சைநிற செடிகளின் கதவை திறந்தார்.
ஆச்சர்யமாக வாயை பிளந்தபடி அவரின் பின்னே சென்றாள் மலர்.
உள்ளே சென்றதும் இருவரும் அங்கிருந்த தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு முன்னேறினர்.
மேலும் ஒரு பத்துநிமிட  நடைக்குபின் அந்த அழகிய மாளிகை தெரிந்தது.
“இதென்ன ஆச்சர்யம் இவ்வளவு அழகிய வேலைபாடுகளுடன் ஒரு அரண்மனை இத்துணை நேர்த்தியாக வடிவைம்மக்க பட்டுள்ளது” என்று விழிகள் விரிய ஆச்சர்யமாக பார்த்தாள் மலரிதழ்.   
“ஆம் அரசி! இதைவிட சிறந்த ஒன்றை  நீங்கள் எதிர்பார்க்காதது போல் நாங்கள் தரப்போகிறோம்” என்று சிரித்தார் அமைச்சர்.
“என்ன அது? அந்த ரகசியம் என்ன?” என்று மலர் ஆர்வமாக கேட்டாள்.
“ரகசியம் என்று சொன்னேனே” என்று முன்னால் சென்றார்.
சிறிது தூரம் சென்றபின் பனிபெண்களின் மலர்தூவலோடு உள்ளே சென்றவள் ஒரு நொடி ஸ்தம்பித்து அசைவற்று நின்றாள்.

Advertisement