Advertisement

“போதும் உன் உளறலை நிறுத்து சரத். உண்மைய மட்டும் என் முகத்தை பார்த்து சொல்லு? நானா உன்னை விரும்பி வர சொன்னேனா? ” என்றாள் மதி அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து.
அவள் விழிகளின் அக்னியை தாளமுடியாமல் தலை கவிழ்ந்தவன், “இல்லை” என்றான் சரத் மெதுவாய்.
“நீ என்கிட்டே உன் விருப்பத்தை சொன்னவுடனே நான் மறுத்தவுடனே  நீ உன் ஹாஸ்டெல்ல என்ன பண்ண ஞாபகம் இருக்கா உனக்கு?” என்றாள் நிதானமாய்.
“ஹ்ம்ம்..” என்றான் கேட்காத குரலில்.
“அதுக்கு மட்டும் வார்த்தையே வரலை? நா மறுத்தப்புறம் நீ உன் ரூமுக்குள்ளயே இருந்துகிட்டு சாப்பிட மட்டும் இல்ல எதுக்குமே வெளிய வராம ரெண்டு நாள் உங்க ஹாஸ்டலையே ஒரு வழி பண்ணிட்ட! கடைசியா உன் பிரெண்ட்ஸ் போன் பண்ணி கூப்பிட்டப்புறம் தான் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம எங்க அப்பாகிட்ட சொன்னேன். அவர் சரி… வர சொல்லும்மா.. நான் பேசுறேன்னு சொன்னப்புறம் தான் உன்னை வரச்சொன்னேன். நீ என்னோட பிரெண்டுடா. உன்னை கல்யாணம் பண்ண நான் நினைச்சதில்ல. நான் எவ்ளோ எடுத்து சொல்லியும் உனக்கு புரியாததுனால, என்னோட நிலைமையை உனக்கு புரியவைக்க தான் அப்பாவை பேச சொன்னேன், உன்கிட்ட பேசினப்புறம் அவருக்கு ஏதோ உன்கிட்ட பிடிச்சதுனால தான் மேல விசாரிக்க போய் என்னென்னவோ நடந்துருச்சு. ஆக, என்னோட விருப்பம் தான் நிறைவேறுச்சு.” என்றாள் மதி விழிகளில் நிம்மதியை சுமந்து.
ஆம்! அவளின் நிம்மதிக்கு முழுக்காரணம் அவளின் மனம் கவர்ந்த நாயகன் நிழலில் இருந்து நிஜமாகி அவள் விரும்பும் வண்ணம் கன்னத்தில் குழி விழ, கைகளை கட்டிக்கொண்டு சிரித்தபடி நின்றிருந்தான்.
இதை அறியாத சரத் என்கிற கனி, “எது எப்படியோ மதி. நீ எனக்கு தான். உன்னை யாருக்காகவும் விட்டு தரமுடியாது. இனி இந்த ஜென்மத்துல இருந்து நீ மதிசரத் தான். உனக்கு பிடிக்கலைன்னாலும் என்னால உன்னை விடமுடியாது. நமக்கு இடைஞ்சலா இருந்த அந்த கவியோட கதை இதோட முடிஞ்சுது.” என்று சரத் குரூரமாய் சிரிக்க.
“அப்பகூட.. சரி உனக்கு பிடிக்கலை ஒதுங்கிடலாம்னு நினைச்சப்ப தான் எனக்கு என் பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. அதோட நீயும் உன் கல்யாண பத்திரிகையோட கவியையும் கூட்டிட்டு என்னை பார்க்க வந்த. அப்போகூட பார்த்தியா? அன்னைக்கு என் வீட்டு வாசல் வரைக்கும் வந்தவன் என்னை பார்த்திருந்தான்னா அப்பயே உஷாராகிருப்பான். ஆனா, என்னோட நல்ல நேரம் நான் மட்டும் அவனை பார்த்தேன். உள்ள வரதுக்குள்ள ஏதோ அவசரமா வேலை விஷயமா போயே ஆகணும்னு என்னை பார்க்காம போய்ட்டான்.” என்றான் சரத்.
“அப்போ நான் வந்தப்ப உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு. தெரிஞ்சு தான் என் கல்யாணத்துக்கு வந்து சிரிச்சுக்கிட்டே விழுந்து விழுந்து எல்லா வேலையும் செஞ்சியா? அப்போ ஏன் கல்யாணத்தை நிறுத்தலை?” என்றாள் மதி.
“மதி! எனக்கு வெறும் அவனோட உயிர் மட்டும் வேணும்னா எப்படியோ கொன்றிப்பேனே?? அதுக்கும் மேல இது ஜென்மத்து பகை.. எனக்கு அவனோட சாவுக்கு அப்புறமும் அவன் அழனும் அந்த வலிய கல்யாணத்தை நிறுத்தினா தரமுடியாதே? அதான் உன் கழுத்துல தாலி கட்டி ஜஸ்ட் ஒன் அவர்க்கு மட்டும் உனக்கு புருஷனா உயிரோட ரொம்ப சந்தோஷமா விட்டிருந்தேன். அதுக்கப்புறம் அந்த சந்தோஷம் ஆரம்பிக்கிறதுக்குள்ள நான் ஆசையா முடிச்சி வச்சிட்டேன். அதுக்கப்புறமும் அவன் பட்ட வலி இருக்கே? அட அடா அடா எனக்கு அதை பார்க்கும் போது என்ன ஒரு சுகம் தெரியுமா மதி? அவ்ளோ சந்தோஷம். இப்போ அவன் முழுசா இல்லாமயே போய்ட்டான். இப்போ நான் தான் இந்த உலகத்துலயே ரொம்ப சந்தோஷமானவன் போல இருக்கு தெரியுமா?” என்றான் சரத் கர்வமாய்.
“இவ்ளோ மோசமானவனா என்னோட நண்பனா இருந்தது ஒரு காலத்துல? எனக்கு உன்னை நினைச்சா ரொம்ப வெறுப்பா இருக்கு” என்றாள் மதி.
“அப்படியெல்லாம் பேசாதே மதி. இனி, உனக்கு எல்லாமே நான் மட்டும் தான். நமக்கு குறுக்க யாருமே வரமுடியாது.” என்று சிரித்தான் சரத்.
“எப்பவும் நல்லது தான் நடக்கும். இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல.. இனி எடுக்க போற எல்லா ஜென்மத்துலையும் என் ஷ்ரவன்கூட தான் வாழ்வேன்.” என்றாள் மதி தீர்க்கமாய் விழிகளில் தீர்க்கம் காட்டி.
“நடக்காததை நினைச்சு கனவு காணாத மதி பேபி” என்று சிரித்தான் சரத்.
எதுவும் பேசாதே என்று இதழில் விரல் வைத்து சைகை செய்த ஷ்ரவன். மெதுவாய் சத்தம் வராமல் சரத்தை நோக்கி முன்னேறினான்.
“அப்படியா கனி? என்னோட மதி எப்பவுமே நடக்கிறதை மட்டும் தான் சொல்லுவா” என்றான் ஷ்ரவன் தீர்க்கமான குரலில்.
அக்குரலை கேட்ட சரத் பேரதிர்ச்சி அடைந்து திரும்பி பார்த்தான்.
உலகமே தன் தலையில் விழுந்தது போலிருக்க சரத்க்கு பேச்சு வராமல் திணறினான்.
“ஷ்ர…வ…ன் இல்…ல.. க…வி… நீ…யா… எப்…படி..?? இப்படி நடக்க வாய்ப்பே இல்ல!! இது எப்படி முடியும்?” என்றான் அதே திகைப்புடன்.
“நானே தான் கனி. உன்னோட பாசமான அண்ணன் தான். வழக்கம் போல உன்னோட வேலைய காட்டிட்ட. ஆனா, இந்த முறை ரொம்ப அதிகமா எங்க ரெண்டு பேரையும் சோதிச்சிட்ட, ஒவ்வொரு முறையும் உன்னை விட்டேன். ஆனா, இந்த முறை அப்படி நடக்காது” என்றான் ஷ்ரவன்.
“இல்ல கவி. நான் உன்னோட தம்பி. நீ என்னை எதுவும் செய்யக்கூடாது. நீ என்னை எதுவும் செய்யமாட்ட தானே?” என்றான் சரத் உள்ளத்தில் நடுக்கம் கொண்டு.
ஏனென்றால் தன்னை அழிக்கும் ஆயுதம் அவனிடம் மட்டும் தான் இருக்கிறது என்பது சரத்துக்கு தெரியும்.
அதை நிறைவேற்ற கவி என்ன செய்தான்??

Advertisement