Advertisement

கரையும் காதலன் 36:
“நானே தான் மதி” என்றான் எதிரில் இருப்பவன்.
“ச்சீ! வாயை மூடு. சரத்!! நீயா இவ்ளோவும் பண்ணது?” என்றாள் மதி மீண்டும் நம்பாமல் ஆத்திரமும் ஆதங்கமும் தாங்கியபடி.
“யா! பேபி!! நானே தான். இன்னும் உனக்கு சந்தேகமா இருக்கா?” என்று நெருங்கி அவளின் கண்ணத்தை தொட முயற்சி செய்ய, வெடுக்கென்று முகம் சுளித்து திருப்பி கொண்டாள்.
“என்னாச்சு மதி? ஒரு காலத்துல நான் உன் கைய புடிச்சு நடந்தா கூட ஒன்னும் சொல்ல மாட்ட? ஆனா, இப்போ என் விரல்கூட படக்கூடாதுனு நினைக்குற?” என்றான் சரத்.
வேகமாக நிமிர்ந்தவள்.
கோபமாய் முறைத்து, “ஆமா! அன்னைக்கு இருந்த சரத் வேற. அதுக்கப்புறம் இருந்த சரத் வேற, இப்போ இருக்க சரத் ரொம்ப வேற” என்றாள் முடிவில் நக்கலாய்.
“அப்டியா சொல்ற மதி பேபி? இல்லையே நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க சரத் தான். மே பி உன் கண்ணுக்கு இப்போ நான் அப்படி தான் தெரிவேன்.” என்றான் சரத்.
“வாய மூடு! எல்லாமே நாம பார்க்கிற பார்வைல தான் இருக்குனு நினைக்கிறவ நான். ஆனா, உன் விஷயத்துல அப்படி இல்ல…” என்றால் சுள்ளென்று.
“ஓஹ்ஹோ” என்றான் கையை கட்டிக்கொண்டு.
“நீ இவ்ளோ கொடூரமானவனா இருப்பன்னு நினைக்கவே இல்ல…” என்றாள் மதி வேதனையை விழிகளில் காட்டி.
“நானும் முதல்ல இப்படி இல்ல மதி. எல்லாம் காலத்தின் கட்டாயம்..” என்றான் சரத் முகத்தில் எந்தவித பாவத்தையும் காட்டாமல்.
“என்ன கட்டாயம் சரத்? நீ என்னோட நல்ல நண்பன் டா. ஆனா இப்போ?” என்றாள் முகத்தில் கோபம் சூரியனாய் தகிக்க.
“இப்போ என்ன மதி? அதையே தான் நானும் கேட்கிறேன்? நான் உன்னோட நல்ல நண்பன் மட்டும் இல்ல… அது தெரியும்” என்றான் அர்த்தமுள்ள ஒரு பார்வையை வீசி.
“இப்போ என்ன சொல்ல வர? நீ என்னை விரும்பின? ஆனா, நான் உன்னை விரும்பலையே? என்னோட எண்ணத்தை சொன்னப்புறம் நீயும் சரின்னு சொல்லி விலகி தான இருந்த? என் கல்யாணத்துக்கு கூட வந்தியே? அப்போ எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் என் கல்யாணத்துக்கு வந்தியா?” என்றாள் மதி.
“ஆமா!” எனறு கத்தியவன், அவள் விழிகளை உள்ளத்தின் வலிகளோடு நோக்கினான்.
“நான் எல்லாத்தையும் பிளான் பண்ணிட்டு தான் உன் கல்யாணத்துக்கே வந்தேன்.” என்றான் சரத்.
“ஏன்?” என்றாள் உள்ளுக்குள் சென்ற மெதுவான குரலில்.
“ஏன்னா மதி! ஐ லவ் யு! ” என்றான்.
அவளின் பார்வையை தாங்காது, “சத்தியமா அப்படி பார்க்காத மதி. நீயும் நானும் மூணு வருஷம் கல்லூரில ஒண்ணா படிச்சோம். அந்த காலத்துல எனக்கு பிறகு தான் மத்த பிரெண்ட்ஸ் எல்லாம் உனக்கு.” என்றான் கண்களில் அந்த காலங்களை நினைத்தபடி.
“எப்படி? எப்போ? உன்ன விரும்ப ஆரம்பிச்சிட்டேன். வேற யார்கூடவாவது நீ பேசினா கூட என்னால தாங்கமுடியாது. அப்புறம் கடைசி வருஷம் உன்கிட்ட ஒரு நாள் வந்து என் மனசிலிருக்கிறதை சொன்னேன். அதுக்கப்புறம் எல்லாமே தலை கீழாகிடுச்சி” என்று அவளை பார்த்தான்.
“அதுக்கப்புறம் கூட எதுவும் மாறலை சரத். என் அப்பா அம்மாவும் சம்மதம் சொன்னா பார்க்கலாம்னு சொன்னேன்.” என்று நிறுத்தினாள் மது.
“நீ அப்படி சொன்ன மறுநாளே வந்தேன் உன் வீட்டுக்கு பல கனவுகளோட!” என்றான் சரத்.
“எது நடக்கும்னு இருக்கோ அது தான் நடக்கும். நீ வந்த.. எங்கப்பாகிட்ட பேசின.. அவருக்கும் உன்னை பிடிச்சிருச்சு… ஆனா..” என்று நிறுத்தினாள் மதி.
“ஆனா என்ன மதி? சொல்ல உங்கப்பா சொன்ன ஒரே காரணம்? எப்படியோ பேசும்போது தெரிஞ்சிருச்சி கண்டுபிடிக்க முடியாத வகைல நான் சுத்தி வளைச்சு உங்களுக்கு சொந்தக்காரன்னு..” என்று நிறுத்தினான் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல்.
“அது மட்டும் தானா சரத்? இல்ல.. அது இல்ல எங்கப்பா உன்னை வேணாம்னு சொல்ல காரணம். எப்படி தெரிஞ்சாலும் தூரமோ ரொம்ப சொந்தமோ ? சொந்தம்னு வந்தப்புறம் முறையை பார்க்க தான செய்வாங்க? பார்த்தாங்க..” என்று அவள் நிறுத்த.
“என்ன பெரிய முறையை கண்டு பிடிச்சீங்க?” என்று வார்த்தைகளை நிறுத்தினான்.
“ஆமா! முறைன்னா முறை தான். மாமன் முறை வந்திருந்தா இந்நேரத்திற்கு நமக்கு கல்யாணம் நடந்திருக்கும். நீ சொன்ன மாதிரி விதி. யாருக்கு யாருனு கடவுள் முதல்லயே முடிவு பண்ணிட்டார். நான் என் ஷ்ரவனுக்கு மட்டும் தான். நீ ஏதோ ஒரு வகைல எனக்கு சகோதர முறை ஆகிட்ட. அது தெரிஞ்சப்புறம் எப்படி பெத்தவங்க கட்டிக்கொடுப்பாங்க?”என்றாள் மதி காரமாக.
“ஆனா, என்னால மறக்க முடியலையே மதி. நான் எவ்ளோ ஆசை ஆசையா உன்னை காதலிச்சேன். என்னால மறக்க முடியலை. என் மனசுக்கு அது தெரியலை” என்றான் வேதனையாக.
“இங்க பாரு சரத். நாம வாழற சமூகத்துல இது இப்படி தானிருக்கணும்னு ஒரு சில நியாயமான அடிப்படை செயல்களை வகுத்திருக்காங்க. நாம அதை கடைபிடிச்சு தான் ஆகணும். ” என்றால் மதி.
“அப்போ உனக்கு என்னை பிடிக்காதா மதி?” என்றான் சரத் ஏக்கமாய்.
“யார் சொன்னா உன்னை எனக்கு பிடிக்காதுன்னு? ரொம்ப பிடிக்கும் ஒரு நல்ல நண்பனா… என்னை எல்லா விதத்துலையும் பாதுகாத்த என் தோழனா? ஆனா, என் கணவனா உன்னை என்னைக்கும் நினைச்சது இல்ல. ஒரு வேளை உன் விருப்பம் சரியாயிருந்தா உனக்கு மனைவியா வந்த அப்புறம் உன்னை கணவனா பிடிச்சிருக்கலாம்… ” என்றாள் மதி.
“மதி ” என்றான் உடைந்து போன குரலில்.
“சரத்! நீ எப்படி இங்க? நீயா நான் உயிருக்கு உயிரா விரும்பின என் ஷ்ரவனை இவ்ளோ கஷ்ட்டப்படுத்திருக்க?” என்றாள் அழுவும் குரலில்.
“என் மனசை தேத்திகிட்டு தான் இருந்தேன். ஆனா, விதிவசத்தால் ஷ்ரவன் வந்த அதே நேரத்துல நானும் என் நண்பர்களோட இங்க வந்திருந்தேன். அதற்கு பிறகு தான் நான் யார் என்பது எனக்கு தெரிந்தது. யாரென்று தெரியாமலே உன்னை விருமபியவன். நான் எப்படி இருந்தேன்னு தெரிஞ்சப்புறம் எப்படி சும்மா இருப்பேன்? உன்னை என்கிட்டே கொண்டு வர ஒரு வாய்ப்பு இருக்கும் பொழுது நான் சும்மா இருப்பேனா? அதான் ஷ்ரவன் சாரி அந்த கவிய பிளான் பண்ணி இங்க கொண்டு வநதேன். இனி அவன் வரமாட்டான்.” என்று சிரித்தான் இறுதியில்.
அவனின் கவனம் முழுக்க மதியின் மேல் இருக்க. ஆனால், அவனுக்கே தெரியாமல் அங்கு ஒன்று நடந்துகொண்டிருந்தது.

Advertisement