Advertisement

கரையும் காதலன் 35:
இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே எங்கிருந்தோ ஓடிவந்த சிறு எலி வேகமாக ஷ்ரவனின் உடலில் இருந்த கட்டுகளை கடித்து கொண்டிருந்தது.
இதை கவனித்த மதி எதிரில் இருப்பவனின் கவனம் அங்கே திரும்பாமல் இருக்க இன்னும் பேச்சு கொடுத்தாள்.
‘ஷ்ரவன்! நான் சொன்ன மாதிரியே பார்த்தியா? என்னை மாதிரி இக்காலத்தில் இருந்து உனக்கு உதவக்கூடிய இன்னொரு நபர் வந்துட்டார். அவரின் உருவம் அவருக்கு மிகவும் உதவியாய் இருக்கும் போல.’ என்று உள்ளுக்குள் எண்ணியவள் ஷ்ரவனின் உடலை தப்பி தவறியும் காணவில்லை.
அதற்குள் “நான் யார்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா மதி பேபி?” என்ற குரல் அவளின் எண்ணத்தை கலைத்தது. 
‘யாரா இருக்கும்? இந்த குரலை நான் நிறைய தடவை கேட்ருக்கேன். எனக்கு ரொம்ப பழக்கமான குரல்… யாரூ?’ என்று அவளின் மனம் தன் நினைவுகளில் தேட முயற்சித்தது.
அதற்குள் அந்த கட்டுக்களை அவிழ்த்த அந்த சிறு எலி, தன் பணி இன்னும் முடியவில்லை என்பது போல் ஓடி மதியின் பின்னால் வந்தது.
இதனை கண்ட மதிக்கு வியர்க்க தொடங்கியது.
உருவமில்லா எதிரில் இருக்கும் எதிரிக்கு தெரிந்துவிடுமோ என்ற பதற்றம் தொற்றி கொண்டது.
‘அய்யய்யோ இப்போ எதுக்கு இது இறங்கி என்கிட்ட வருது. மாட்டிக்க போகுதோ? இல்ல எல்லாத்தையும் கெடுக்க போகுதோ?’ என்று தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தாள் ஷன்மதி.
“என்ன மதி! ஹ்ம்ம்… மலர்.. நான் யாருன்னு தெரிஞ்சிக்க இவ்ளோ பதட்டமா இருக்க? உனக்கு ரொம்ப தெரிஞ்சவன் தான்.. ஆனா, உனக்காக என்ன வேணாலும் செய்ய கூடியவன்.” அவனின் குரலில் இருந்த தீவிரம் இது இப்பொழுது முடியுமா என்ற கேள்வியை எழுப்பியது மதிக்கு.

“நீயாவே உன்னை ரொம்ப பெருமையா நினைச்சிட்டு இருக்க!! ஆனா, அடுத்தவர் மனைவியை கவர நினைக்கும் கயவன் நீ.. ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ. நடக்காது இருந்தாலும் சொல்றேன். ஒரு வேளை என்னை நீ அடைய நினைச்சு ஒரு அடி எடுத்து வச்சா கூட, என் மேல ஒரு விரல்கூட படவிடமாட்டேன். அதையும் மீறி அப்படி ஒரு நிலைமை வந்தா உயிர் இல்லாத இந்த உடலை தான் உன்னால தொட முடியும். இது என் ஷ்ரவனுக்கு நான் கொடுக்குற பரிசு. அவனுக்கு மட்டும் தான் நான் சொந்தம்” என்றாள் மதி ஷ்ரவனின் முகத்தை மனக்கண்ணில் கண்டு.

“ஒஹ் மதி பேபி! நீ பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல. அந்த ஷ்ரவன் சாரி சாரி கவிய விட உன்னை ஆயிரம் மடங்கு அதிகமா லவ் பண்றேண்டி. ஒரு ஜென்மம் இல்ல… இதோ தொடர்ந்து மூணு ஜென்மமா உன்னையே சுத்தி வர அளவுக்கு. உனக்கு ஏன்டி புரிய மாட்டேங்குது. எந்த காரணத்துக்காகவும் உன்னை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். நீ என்னோட மதி.” என்றது அந்த குரல்.
எதுவும் சொல்லாமல் சிரித்த மதி அவனை ஆழ்ந்த ஒரு பார்வை செலுத்தி, “நீ சொல்றது போலவே இருக்கட்டும் மிஸ்டர்.கனி. அண்ட் வூஹ் எவர் மே பீ யு? அதை பத்தி எனக்கு கவலை இல்ல.. நீ என் ஷ்ரவனை விட அதிகமா நேசிச்சாலும் உன்னை நான் திரும்பி நேசிக்கனும் அப்போ தான் உன்னோட காதலுக்கு ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா, நீ சொன்ன இந்த மூணு ஜென்மத்துலையும் என் மனச கவர்ந்துட்டு போனது என் ஷ்ரவன் ஹ்ம்ம் கவி மட்டும் தான்… அப்புறம் அதுவுமில்லாம நீ கனியா இருந்தப்ப நான் உன்னோட அண்ணி… அண்ணிங்கறவ அம்மாக்கு சமானம். ஹ்ம்ம் இந்த பிறவில நீ யாருன்னே இன்னும் உன் முகத்தை என்கிட்டே காட்டலையே? அப்புறம் தான் சொல்லமுடியும் நீ என்ன பண்ணிருக்கன்னு” என்றாள் மிகவும் நிறுத்தி நிதானமாக.
மௌனம் அறையெங்கும் நிலவியிருக்க, “ஆயிரம் பேசினாலும் நீ எனக்கு மட்டும் தான்றது என்னோட ஒவ்வொரு அணுவுளையும் கலந்திருக்கு மலர் . அதை எப்பவும் மாத்த முடியாது. சோ, நீ வீனா பேசி என் மனசை மாத்த முடியும்னு கனவு காணாத” என்றது உருவமில்லா அக்குரல்.
இவர்களின் பேச்சுவார்தைக்குள் அந்த சிறு எலி மதியின் பின்புறம் இருந்து அவளின் கையில் இருந்த மணியை வாங்கி கொண்டு ஷ்ரவனின் உடல் இருக்கும் இடத்திற்கு விரைந்தது.
அம்மாலையை அவனின் உடலில் அணிவித்து அவனருகிலேயே அமர்ந்தது.
மாலையை அணிவித்த அடுத்த அரைமணி நேர காலத்தில் ஷ்ரவனின் உடலில் மாற்றங்கள் நிகழ தொடங்கியது.
மதியின் பேச்சுக்கிடையில் அவளின் விழிகள் ஷ்ரவனின் அசைவுகளை மகிழ்வுடன் பார்த்துக்கொண்டிருந்தது.
“நீ யாரு? உன் முகத்தை காட்டு கனியழகனா இருந்த உன் முகம் இப்ப எப்படி இருக்குன்னு பார்க்கணும்?” என்றாள் மதி.
“அவ்ளோ ஆசையா உனக்கு என்னை பார்க்க? ” என்று மெதுவான குரலில் அவளின் செவிகள் அருகே குரல் கேட்க திடுக்கிட்டவள் சற்று விலகினாள்.
“ஒரு பெண்ணோட அனுமதி இல்லாம அவளை நெருங்கியது ரொம்ப தவறு” என்றாள் காட்டமாக.
“ஹ்ம்ம் ஓகே ஓகே.. ஆனா, உன்னை தொடாம நீ எனக்கு சொந்தம்னு மட்டும் காட்டுவேன். நீ கேட்டதுக்காக நான் இந்த பிறவியில் யாருன்னு பாரு.. மதி பேபி!!” என்று அவளின் முன் ஜொலிப்புடன் கூடிய ஒரு உருவம் தெரிய விழிகளை விரித்து பார்த்தவள் தலைசுற்ற அதிர்ந்தாள்.
“நீ …யா… இல்ல இது மாதிரி நடக்காது.” என்றாள் மதி அதிர்வோடு.

Advertisement