Advertisement

கண்டுகொண்டேன் காதலை

அத்தியாயம் – 9 

புதுமணத் தம்பதிகள் மண்டபத்தில் இருந்து நேராக மாப்பிள்ளை வீடு சென்றனர். ஒரு ஒப்புக்கு கூடப் பெண் வீட்டினரை சிதம்பரம் உடன் அழைக்கவில்லை. ஆனால் பாலா விடவில்லை. அவன் அம்மா, சித்தி அதோடு சுப்த்ரா மற்றும் அவள் கணவனையும் அனுப்பி வைத்தான்

மாப்பிள்ளை வீடு பெரிதாக இருந்தது. கீழ் தளத்தையும், இரண்டாம் தளத்தையும் வாடகைக்கு விட்டுவிட்டு, இவர்கள் முதல் மாடியில் இருந்தனர். காரில் இருந்து இறங்கி மாடி ஏறி வீட்டிற்குள் செல்வதற்கே, திலகாவுக்கு மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியது

முதலில் பூஜை அறையில் சுமித்ரா விளக்கேற்றி விட்டு வந்ததும், அனைவரும் சேர்ந்து வீட்டை சுற்றி பார்த்தனர். வீடு பெரிதாக இருந்தது. வீட்டில் நிறையச் சாமான்கள் இருந்தது

தீனாவின் அறையில் எல்லா வசதிகளும் இருந்தது. அறையில் ஏசி செய்யப்பட்டு, ஹோம் தியேட்டர் இன்னும் என்னென்னமோ வைத்திருந்தான்
சுமித்ரா அவள் வீட்டினரோடு அறையில் உட்கார்ந்து இருக்கசிதம்பரத்தின் அண்ணன் மருமகள் பத்மா அவர்களுக்குக் குடிக்கக் குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்தவள், சுமித்ராவின் அருகே உட்கார்ந்து அவளைப் பார்த்து நட்பாகப் புன்னகைத்தாள். பதிலுக்குச் சுமித்ராவும் அவளைப் பார்த்து புன்னகைத்தாள்

நேற்றில் இருந்து பத்மாதான் மாப்பிள்ளை வீட்டின் சார்பில் அவளோடு இருப்பதால்அவளோடு நன்றாகப் பழகி இருந்தாள்

வீடு பிடிச்சு இருக்கா சுமி?” 

ம்ம்நல்லா இருக்கு பத்மா அக்கா. ” 
நீங்க எங்க இருக்கீங்க அக்கா?” 
நான் திருவாண்மையூர்ல இருக்கேன்.” என்று பத்மா சொல்லிக் கொண்டிருந்த போதேதீனா உள்ளே வர, அவனைப் பார்த்த மற்றவர்கள் எழுந்து வெளியே சென்றனர்

தீனாவை பார்த்துக் கொண்டே பத்மா சுமித்ராவிடம் பேசினாள். “கவலைப்படாதே சுமித்ரா, நான் அடிக்கடி வந்து உன்னைப் பார்த்துகிறேன்.ஆனா என்ன? என் கொழுந்தனார் தான் என்னைக் கொஞ்ச நாள் வீட்டு பக்கமே விடமாட்டார்.” 
என்ன கொழுந்தனாரே அப்படித்தானே?” பத்மா குறும்பாகத் தீனாவை பார்த்துக் கேட்க… 

நீங்க சொன்னா தப்பா இருக்குமா அண்ணி. ஆமாம் உங்களுக்கு வேற வேலை இல்லையா? இங்க உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க.” என அவன் நேரடியாகவே சொல்ல…. சுமித்ரா முகம் சிவந்தாள்

பார்த்தியா சுமித்ரா….எப்படி என்னைத் துரத்துறாருன்னு. நானே வெளிப் போறேன் பா…” எனப் பத்மா செல்ல… 

தேங்க்ஸ், அப்படியே கொஞ்சம் கதவை மூடிட்டு போங்க.” என்றான் தீனா

அவனோடு தனியறையில் இருப்பது சுமித்ராவுக்குப் படபடப்பை கொடுக்கஅவளும் மெதுவாக அங்கிருந்து செல்ல… 

நீ எங்கப் போற? உட்காரு.” என்றான்

வெளியே இருக்கும் உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயத்தில் சுமித்ரா தயங்கஅதற்குள் கதவை தட்டிவிட்டு பத்மா மீண்டும் உள்ளே வந்தாள்
இப்போ எதற்கு வந்தாள்? என்பது போல் தீனா கடுப்பாகப் பார்க்க… 
அப்பா என்னை முறைக்காதசுமித்ரா வீட்ல கிளம்புறாங்க. ஒரு நிமிஷம் வந்திட்டு போயிடு.” என்றதும், வெளியே வந்தான்

நாங்க கிளம்புறோம் சுமி, நாளைக்கு உங்களை மறுவீடு அழைக்க வரோம்.” என  மீனாட்சி சொல்லசுமித்ரா தலையசைக்கமற்றவர்களும் சொல்லிக் கொண்டு கிளம்பினர்

சுமித்ராவின் பக்க உறவினர்கள் கிளம்பியதும், மாப்பிள்ளையின் உறவினர்களும் கிளம்பினார்கள்

நாளைக்குப் பெண் வீட்ல விருந்து இருக்கு. அதனால ஒரு பதினொரு மணிக்கு எல்லாம் வந்திடுங்க. நான் வேன் பிடிச்சிருக்கேன்.” எனச் சொல்லி சிதம்பரம் அவர்களை வழியனுப்பினார்

திலகாவின் தங்கை குடும்பமும், பத்மா மற்றும் அவளது மாமியார் மட்டுமே இருந்தனர். திலகாவின் அறையில் அவரது உறவினர்கள் சென்று முடங்க. கஷ்ட்டப்பட்டு எழுந்த திலகா, “இந்தப் புடவையிலேயே இரு. சாயங்காலம் கோவிலுக்குப் போகணும்.” எனச் சுமித்ராவிடம் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார்

மூன்றாவது சிறிய அறையில் பத்மாவின் மாமியார் சென்று படுக்கஹாலில் பத்மாவும் சுமித்ராவும் மட்டுமே இருந்தனர்

நீயும் கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடு.” பத்மா சொல்லசுமித்ரா தயங்கினாள்

பாவம் தீனா, உன்னோட பேச காத்திட்டு இருப்பார்.” என்றதும் எழுந்து சென்றாள்

மெதுவாக அவள் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற போது, தீனா உடை மாற்றிக் கட்டிலில் படுத்து இருந்தான்

அவன் உறங்கிவிட்டான் என நினைத்த சுமித்ரா, பூனை பாதம் வைத்து உள்ளே வந்தவள், ஒய்வு அறைக்குச் சென்றுவிட்டு வந்து கட்டிலில் அமர, அடுத்த நொடி தீனா புரண்டு அவள் மடியில் படுத்து, அவள் அசையாமல் இடையைச் சுற்றி கையைப் படரவிட்டான்

சிறிது நேரம் அவனைத் தள்ள முயன்று தோற்ற சுமித்ரா செல்லமாக அவனை முறைக்கதீனாவும் மடியில் படுத்தபடி அவளை நிமிர்ந்து பார்த்தான்

எவ்வளவு நேரமா வெயிட் பண்றது? இன்னும் கொஞ்சம் நேரம் நீ வரலைனா அப்படியே தூங்கி இருப்பேன்.” 
பார்க்கவே ரொம்பக் களைப்பா தெரியுறீங்க. கொஞ்சம் நேரம் தூங்குங்க.” 

ஆமாம் நேத்து ப்ரண்ட்ஸ் தூங்கவே விடலைஅதுதான் களைப்பா இருக்கு. நீயும் படு…” என்றவன், தலையைத் தலையணைக்கு மாற்ற… 

இருக்கட்டும் நீங்க தூங்குங்க.” சுமித்ரா தயங்கஅவளை இழுத்து தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டான்

சுமித்ரா அவன் பக்கமாக ஒருக்களித்துப் படுக்கதீனா அவளை அணைக்க முயன்றான். அவனைத் தடுத்த சுமித்ரா, “சும்மா இருங்க. யாரவது வரப்போறாங்க.” என்றதும், எரிச்சலாக விலகி படுத்தவன், கண் மூடி சிறிது நேரத்தில் உறங்கிவிட்டான்

உறங்கும் அவனையே சுமித்ரா பார்த்து இருந்தாள். சிறிது நேரத்தில் அவளும் உறங்கி விடபத்மா வந்து கதவை தட்டஅந்தச் சத்தத்தில் தான் கண் விழித்தாள்

மாலை ஏழு மணி போல் தான் தீனா எழுந்து வந்தான். அதன் பிறகு கோவிலுக்குச் சென்று வந்தனர். இரவுக்கு ஹோட்டலில் இருந்து உணவு வரஅதைப் பத்மாவோடு சேர்த்து சுமித்ராவும் பரிமாறினாள்
திலகா அவர் அறையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு அப்படியே படுத்து விட்டார். இரவுக்குச் சுமித்ராவை தயார் செய்துவிட்டு, பத்மாவும் அவளது மாமியாரும் கிளம்ப, அவர்களை அழைத்துச் செல்லபத்மாவின் கணவன் வந்திருந்தான்

நீங்களும் இன்னைக்கே போறீங்களா?” 

ஆமாம் சுமி, நாளைக்கு விருந்துக்கு நேரா உங்க வீட்டுக்கு வந்திடுறோம்.”

என்னக்கா எனக்கு இங்க ஒன்னும் தெரியாது. நீங்களும் விட்டுட்டு போறீங்க?”
சுமித்ரா சொன்னதும், பத்மா எதோ சொல்ல வந்தவள் சொல்ல தயங்க…. 

எதோ சொல்ல வர்றீங்க? சொல்லுங்க பத்மா அக்கா.” சுமி ஊக்கஅறையில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்

இன்னைக்கே நான் ஏதும் சொல்லி உன்னைக் குழப்ப விரும்பலைநீ ரொம்பப் பொறுப்பான பொண்ணுன்னு கேள்விபட்டேன். இங்கயும் நீதான் பொறுப்பா இருக்கணும்.” எனச் சுமியிடம் சொல்லிவிட்டு பத்மா விடைபெற்றாள்
அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்தில் தீனா அறைக்குள் வந்தான். அவனைப் பார்த்ததும் கட்டிலில் உட்கார்ந்து இருந்த சுமித்ரா எழுந்து நிற்கஅவன் அவளைத் தலையில் இருந்து கால் வரை நிதானமாகப் பார்த்து ரசித்தான்

வெள்ளை நிறத்தில் இருபக்கமும் பச்சை கரை வைத்த ஷிப்பான் புடவை அணிந்து, தலை நிறைய மல்லிகை பூ வைத்திருந்தாள்

சுமித்ரா தலை நிமிர்ந்து தீனாவை பார்க்கஅவன் பார்வையாலையே அவளை விழுங்கிக் கொண்டு இருந்தான். சுமித்ரா வெட்கப்பட்டு மீண்டும் தலைகுனியஅவள் அருகில் வந்தவன், அவளைக் கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, விளக்கை அணைத்த கையோடு அவளையும் அணைக்க…. 

ப்ளீஸ் கொஞ்ச நேரம் பேசலாமே…” எனச் சுமித்ரா எழுந்துகொள்ள முயலஅவளை அடக்கி படுக்க வைத்தவன், “நான் ரொம்ப ஆசையா இருக்கேன் சுமி.” என்றதும், சுமித்ராவும் அவனை மறுக்கவில்லை

காலை சுமித்ரா கண்விழித்த போது விடிந்து வெகு நேரம் ஆகி இருந்தது. திரைசீலைகள் போட்டிருந்ததால்…. அறை இருட்டாக இருக்கஏசியின் குளுமையில் விடிந்ததே தெரியவில்லைஅதோடு இரவு தூங்க வெகு நேரம் ஆகி இருந்தது

முதல் நாளே இவ்வளவு லேட்டா எந்திரிச்சாமாமியாரும் மாமனாரும் என்ன நினைப்பாங்க எனப் பயந்தவள், மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்

வேகமாக அவள் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது, ஹாலில் திலகா உட்கார்ந்து இருந்தார். காலையிலேயே எழுந்து குளித்துத் தயாராக இருந்தார்

அவள் பயந்து கொண்டே அவரைப் பார்க்கஅவர் ஒன்றும் சொல்லவில்லை. சுமித்ரா சமையல் அறைக்குச் செல்லஅங்கே சிதம்பரம் நின்று பால் காய வைத்துக் கொண்டு இருந்தார்

நான் காபி போடுறேன் மாமா.” சுமித்ரா சொல்லஅவளை நிமிர்ந்து பார்த்தவர், ஸ்டவ் முன்பிருந்து விலகி நின்றார்

எத்தனை பேருக்கு காபி கலக்க?” 

முதல்ல உங்க அத்தைக்குக் கலக்கு. அவ காலையில் ஆறு மணிக்கே எழுந்துப்பாஇன்னைக்கு நான் தூங்கிட்டேனா. அதனால அவ குளிச்சு கிளம்ப லேட் ஆகிடுச்சு. ஏற்கனவே அந்தக் கோபத்தில இருக்கா…” என்றதும், சுமித்ரா வேகமாகக் காபி கலந்து அவளே எடுத்து சென்று திலகாவிடம் கொடுத்து விட்டு வந்தாள்

என்ன டிபன் பண்ண?” சுமித்ரா கேட்க… 

இன்னைக்கு உங்க வீட்டுக்கு விருந்துக்குப் போகணும் இல்லையா…. அதனால டிபன் வெளியவே வாங்கிக்கலாம். இங்க பக்கத்தில ஒரு மெஸ் இருக்குஅங்க விலை கம்மியாத்தான் இருக்கும். நான் போய்ப் பொங்கல் வாங்கிட்டு வரேன். நீ பாத்திரம் மட்டும் எடுத்து வை.” என்ற சிதம்பரம் வெளியே சென்றார்

சுமித்ரா வந்ததில் இருந்து பார்க்கிறாள், சிதம்பரம் தான் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவரை ஏன் வீணாக அலைய விட வேண்டும். தானே சமைக்கலாம் என நினைத்து, அங்கிருந்து அலமாரியில் என்ன மளிகை இருக்கிறது என ஆராய்ந்த சுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது

எல்லா டப்பாவும் காலியாக இருந்தது. அரிசி மட்டும் ஒரு ட்ரம்மில் இருக்கபருப்பு, புளி எனச் சிலது கொஞ்சம் மட்டுமே இருந்தது. இந்த வீட்டில் சமையலே நடக்காதாஎன வியந்தபடி காபி கலக்க ஆரம்பித்தாள்

காலை பத்து மணிக்குத்தான் தீனா படுக்கையில் இருந்து எழுந்தான். அதுவும் சுமி சென்று பத்து தடவை எழுப்பிய பின்னரே எழுந்தான்.
 
அவன் குளித்துச் சாப்பிட அமரும் போது மணி பத்தரை. ஒரு பேச்சுக்கு கூட, ‘சுமி, நீ சாப்பிட்டியா?’ என அவன் கேட்கவில்லைஅவன் மட்டும் இல்லைஅந்த வீட்டில் யாருமே கேட்கவில்லை

காலையில் காபி கூட அப்படித்தான், எல்லோருக்கும் போட்டுக் கொடுத்து விட்டு, அவளாகத்தான் போட்டு குடித்தாள்

இப்போதும் யாரும் சாப்பிட சொல்வார்கள் என எதிர்பார்த்தால்தான் பட்டினிதான் கிடக்க வேண்டும் என நினைத்தவள், அவளாகவே தீனாவின் அருகே உட்கார்ந்து சாப்பிட்டாள்

அவள் சாப்பிட்டு முடித்துச் சமையல் அறைக்கு வந்தபோது, அங்கே நின்று வேலைக்காரி பாத்திரம் கழுவி கொண்டு இருந்தாள்
சுமித்ரா கழுவ வேண்டிய பாத்திரங்களைக் கொண்டு வந்து போட்டவள், மீதம் இருந்த பொங்கலை ஒரு தட்டில் வைத்து, சாம்பார் ஊற்றி அவரிடம் சாப்பிட கொடுக்க…. அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி

கைகழுவிவிட்டு சுமித்ராவின் முகத்தை வழித்து டிஷ்ட்டி கழித்தவர், இந்த வீட்ல மீதம் ஆன சாப்பாடை மனசாரக் குப்பையில வேணா கொட்டுவாங்களே தவிர…. ஒருநாளும் எனக்குக் கொடுத்தது இல்லை

நீதான் மாமுதல் நாளேஎன்னையும் ஒரு மனுஷியா மதிச்சு இருக்க. நீ நல்லாயிருக்கனும்.” என அவர் வாழ்த்தசுமித்ரா புன்னகைத்தாள்

அவளுக்கு அந்த வீட்டை பற்றிச் சில விஷயங்கள் புரிந்துகொள்ள முடிந்தது. தன் மாமியார் திலகா உடல் நலமில்லாதவர், அதனால் மாமனார் செய்கிறார். ஆண் வீட்டு வேலைகளைச் செய்யும் போதுபெண்களைப் போல் திடமாகச் செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது இல்லையாஅதிலும் வயதானவர் வேறு… 

பாதி நாட்கள் வீட்டிலும் மீதி நாட்கள் ஹோட்டலிலும் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் எனப் புரிந்து கொண்டாள். கொஞ்சம் பாவமாகக் கூட இருந்தது
மீனாட்சியும், வாணியும் அவர்களை விருந்துக்கு அழைக்க வந்துவிடஅதன்பிறகு வீடு பரபரப்பாக இருந்தது. பாலாதான் அவனது காரில் அவர்களை அழைத்து வந்திருந்தான்

சுமித்ரா அவர்களுக்குக் குளிர்பானம் கொண்டு போய்க் கொடுக்க… “வீடு நல்லாயிருக்கு சுமி.” என்றபடி பாலா எடுத்துக்கொள்ளசுமித்ரா புன்னகைத்தாள்
தீனா பாலாவின் அருகில் இருந்தாலும், அவனோடு பேசாமல் தன செல்லை பார்த்துக் கொண்டு இருந்தான்

சுமித்ரா வீட்டினர் முதலில் கிளம்பிவிடஇவர்களும் ஆளுக்கொரு வாகனத்தில் கிளம்பினார்கள். வந்திருந்த உறவினர்கள் வேன்னிலும், தீனாவின் காரில் சுமித்ரா, சிதம்பரம் மற்றும் திலகா வந்தனர். அவனின் நண்பர்கள் தனியாக  இனோவாவிலும் வந்தனர்

செங்கல்பட்டுப் போய்ச் சேர்ந்த போது, மதியம் இரண்டு மணி ஆகிவிட்டது. ஈஸ்வரி மகளைப் பார்க்கும்வரை தவித்துப் போய் இருந்தார். சுமித்ரா முகம் முழுக்கச் சந்தோஷத்துடன் உள்ளே வர…. அப்போதுதான் அவருக்கு உயிரே வந்தது

அவருக்கு மாப்பிள்ளை வீட்டினரை பற்றித் தெரிந்த விஷயங்களை அவர் யாரிடமும் சொல்லவில்லைஇப்போது அதைச் சொல்லி என்ன ஆகப்போகிறது என நினைத்தார். எப்படியும் திருமணம் முடிந்து விட்டது. இனி எப்படி இருந்தாலும் அவர்களை அனுசரித்துத்தான் போக வேண்டும் என நினைத்தார்

இது தான் முக்கியமான தவறுஇந்த அனுசரித்துப் போவது. மாப்பிள்ளை எப்படி இருந்தாலும், நீ அனுசரித்துப் போஎன்று பெண்களிடம் சொல்வது.
அனுசரித்துப் போவது என்றால் என்ன? அடங்கிப் போவதா?


Advertisement