Advertisement

இத்தனை நாள் எப்படியோ வாழ்ந்தவனை…. இப்படித்தான் வாழ வேண்டும் எனச் சுமித்ரா பழக்கினாள். குடும்பம் என்னவென்றால் என்னவென்றே இப்போதுதான் தீனாவுக்குப் புரிந்தது

அவன் இந்த வேலையாக இருந்ததால்நண்பர்களையும் பார்க்க செல்லவில்லை. அது அவர்களுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்தியது. நண்பர்கள் அழைத்துக் காரணம் கேட்டாலும் இதையே சொன்னான்

சுமித்ரா அவள் அம்மா வீட்டில் இருப்பது தெரிந்து, அவளைப் பார்க்க பாலா வந்திருந்தான். சுமித்ரா வந்திருந்ததால் சுபத்ராவும் அங்கேதான் இருந்தாள். திலீப்பும் அவன் மனைவியுடன் அங்கே வந்திருந்தான்

அவன் திருமணதிற்குப் பிறகு அவனிடம் ஈஸ்வரி, “இனிமே நீ எங்களுக்குப் பணம் எல்லாம் கொடுக்க வேண்டாம். பெரிய இடத்தில பொண்ணு எடுத்திருக்க…. அவளை நல்லா பார்த்துக்க உனக்குத் தேவைப்படும்.” என முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டார்

பின்னே தாய் தந்தையை மதிக்காமல் அவன் இஷ்ட்டதிற்கு நடந்து கொண்டால்பிறகு வேறு எப்படிப் பேசுவார். அதுவும் சுமித்ராவும் அன்று அப்படிப் பேசியது, இன்று அம்மாவும் இப்படிச் சொன்னதும், அவனுக்குக் கொஞ்சம் வலித்தது

இதில் ஷாலினி வீட்டினர் வேறு அவனுடைய குடும்பம் என்று ஒன்று இல்லாதது போலஎல்லா முடிவுகளையும் அவர்களே எடுக்கதிலிப் கொஞ்சம் சுதாரித்தான். இப்படியே விட்டால் தன்னுடைய தாய் தந்தையைத் தான் மறந்துவிட வேண்டியதுதான் எனப் புரிந்து கொண்டான்

இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மனைவியுடன் அம்மா வீட்டிற்கு வந்து விடுவான். சனிக்கிழமை வந்துவிட்டு, ஞாயிறு மாலை கிளம்பி செல்வான்
ரொம்ப நாட்கள் கழித்து எல்லோரும் ஒரே இடத்தில் இருந்ததால்மிகவும் சந்தோஷமாக இருந்தனர்

எல்லோரும் இப்படிச் சேர்ந்து பேசி சிரிச்சு எவ்வளவு நாள் ஆச்சு.” சுபத்ரா சொல்ல… 

ஆமாம், ரொம்ப நல்லா இருக்கு இல்ல…. நல்லவேளை தீனா அத்தான் இல்லை…. அவர் சரியான முசுடு.” எனத் திலிப் வாய்விட…. சுமித்ராவுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது

அவள் முகத்தில் இருந்தேஇப்போது நன்றாக வைத்து வாங்கப் போகிறாள் எனப் பாலாவுக்குத் தெரியும்

அவன் சொன்னதற்கு ஷாலினியும், சுபத்ராவும் வேறு சிரித்து விட…. சுமித்ரா பொங்கி விட்டாள்

அவரைப் பத்தி ஏன் பேசுற நீ? உன்னை விட எந்த விதத்துல அவர் குறைஞ்சு போயிட்டார். நிறையச் சம்பாதிக்கிறோம்ங்கிற திமிர்ல பேசுறியா?” 

கஷ்ட்டதுளையும் நல்லா வளர்த்த அப்பா அம்மாவையே நீ மதிக்கலை…. அவங்க அப்பா அம்மா எப்படிபட்டவங்களா இருந்த போதும், அவர் அவங்களோடதான் இருக்கார்.” 
சுமித்ரா சொன்னதைக் கேட்ட எல்லோரும் வாய்யடைத்துப் போய்ப் பார்க்க…… “இல்லைஅன்னைக்கு என் கல்யாணத்துல நீங்க அழுதுட்டே போனீங்கஅதனால சொன்னேன்.” 

அதனால இப்ப என்ன? நான் வந்து உன்கிட்டா அவரைப் பத்தி குறை சொன்னேனாபுருஷன் பொண்டாட்டினா சண்டை வராம இருக்குமா….அன்னைக்கு எதோ கோபம் அவருக்கு. அதனால அவர் எப்பவுமே அப்படின்னு நீயா முடிவு பண்ணிப்பியா?” 

சாரி கா…” சுபத்ரா சொல்லவரிசையாக ஷாலினி திலிப் எல்லோரும் சாரி கேட்டனர். பாவம் விடடேன் என்பது போல் பாலா பார்க்ககோபம் குறையாமல் அங்கிருந்து சுமித்ரா எழுந்து சென்றாள்

எப்படி இருந்தாலும் தீனாவை சுமித்ரா தன் வழிக்குக் கொண்டு வந்துவிடுவாள் எனப் பாலாவுக்குத் தெரியும். இப்போது அவள் தன் கணவனுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவதைக் கேட்க சந்தோஷமாக இருந்தது

நீங்க விளையாட்டுக்குத்தானே சொன்னீங்க. உங்க அக்காவுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது?” 

அதுவும் நீங்க ஒன்னும் பொய் சொல்லலையே…. எங்க வீட்ல விசாரிக்கும்போது கூடஉங்க அக்கா வீடு சரியில்லாத வீடுன்னு தான் சொன்னாங்க.” தனியாக இருக்கும்போது ஷாலினி சொல்ல… 

நான் என் பொறுப்பை ஒழுங்கா செய்யாம…. கிண்டல் மட்டும் செஞ்சா அவங்களுக்குக் கோபம் வராதா…” பதிலுக்குத் திலிப் கேட்கஷாலினி வாயை மூடிக் கொண்டாள்

நான் ரொம்பச் சுயநலமா இருந்திட்டேன். அதனாலதான் என் அக்கா இப்ப கஷ்ட்டபடுறாங்க. அவங்க கஷ்ட்டபட்டாலும் என்கிட்டே மட்டும் எதுக்கும் வரமாட்டாங்க. அது எனக்கு நல்லாவே தெரியும்.” 
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால்தீனா வேலைக்குச் செல்ல வேண்டியது இல்லை…. அதனால நிதானமாக எழுந்து கிளம்பி கொண்டு இருந்தான்

சுமித்ராவிடம் எப்போதும் இருக்கும் கலகலப்பு இல்லை…. மிகவும் அமைதியாக இருந்தாள்

என்ன என்று தீனா கேட்ட போது கூட, அவள் ஒன்றும் சொல்லவில்லை

சுமித்ரா உள்ளே திலகாவோடு இருக்க வெளியே வந்தவன், சுபத்ராவை அழைத்தான்

இப்போது தான் முதல் தடவை அவளை அழைக்கிறான். சுபத்ராவுக்குப் படபடப்பாக ஆகிவிட்டது. ஆனால் தீனா சாதாரணமாகதான் பேசினான். அவளது நலத்தை விசாரித்தவன், கார்த்திக்கை பற்றியும் கேட்டான்

இப்படியெல்லாம் கூட அத்தான் பேசுவாங்களா…’ எனச் சுபத்ராவுக்கு ஆச்சர்யமாக இருந்தது
ஆமாம் ஏன் உன் அக்கா மூட் அவுட்டா இருக்கா?” கடைசியாகத் தீனா விஷயத்துக்கு வர…. 

சுபத்ராவுக்குச் சொல்லலாமா சொல்லக் கூடாதாஎனத் தெரியவில்லைசொல்லவில்லை என்றால் தீனா எதாவது தவறாக நினைத்துக் கொள்ளபோகிறான் என்று நினைத்தவள்,
உங்களைப் பத்தி விளையாட்டுக்கு கேலி பண்ணோம். அது அக்காவுக்குக் கோபம். அவங்க அப்பவே அதுக்காகச் சண்டை போட்டுடாங்க.”  நீ வேற சண்டைக்கு வந்திடாத என அவள் சொல்லாமல் சொல்ல…. 

சரி.” எனத் தீனா வைத்து விட்டான்

தான் இப்படி இருக்கும் போதே, அவள் தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாள். இன்னும் அவளைத் தான் நன்றாகப் பார்த்துக் கொண்டாள், எப்படி இருப்பாள் என நினைக்காமல் இருக்க முடியவில்லை

அம்மா, நீ இங்க இருந்துப்பியாநாங்க கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரோம்.” தீனா சொல்லதிலகா சரி என்றார்

அவருக்கு வைத்தியம் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகி இருந்தது. பத்திய உணவால் உடல் எடை குறைந்து, இப்போது கொஞ்சம் நடக்கவும் வந்தது. தினமும் அந்த வளாகத்திற்குள் நடை பயின்றார்

அவர்கள் மூட்டில் தடவிக்கொள்ளத் தைலமும் கொடுத்து இருந்ததால்வலியும் குறைந்து இருந்தது. தனக்குச் சரியாகும் எனத் திலகாவுக்கு இப்போது நம்பிக்கை வந்தது. அதனால் முன்பு மாதிரி கோபப்படுவது இல்லை. முழுமையாக அவர்களுக்கு ஒத்துழைத்தார்

மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்த உயிரியல் பூங்காவுக்குச் சென்றான். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது
இங்க ரொம்பத் தூரம் நடக்கணுமேநாம பட்டெரி கார்ல போகலாமா…” சுமித்ரா கேட்க… 

அது வயசானவங்க போறதுநாம யூத்நாம சைக்கிள்ல போகலாம்.” என்றவன், வரிசையில் நின்று டோகேன் வாங்கிக்கொண்டு வந்தான்

அவன் சைக்கிளில் அமர்ந்து கொண்டு, முன்புறமிருந்த பாரில் சுமித்ராவை உட்கார வைத்துக் கொண்டான்

என்னை வச்சு ஓட்டிடுவீங்களா….” சுமித்ரா சந்தேகமாகக் கேட்க…. 

நீ என்ன ஒரு முப்பது கிலோ இருப்பியா….” 

அம்பது கிலோங்க.” என சுமித்ரா அவன் கிண்டலை புரிந்துகொள்ளாமல் சொல்ல,  

பிப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா….” என அவன் பாட…. சுமித்ராவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது

கொஞ்ச நேரம் அங்கே இங்கே சுற்றி விலங்குகளைப் பார்த்தவர்கள், பின்பு ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுத்தனர்

என்னைப் பத்தி நான் எல்லாம் சொன்னேன் இல்ல.. இப்ப நீ சொல்லு…” 

என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு? ஒன்னும் இல்லை….” 
நீ உன் தம்பி தங்கையைப் படிக்க வச்சஎனக்கு அது தெரியும்.” 

நான் யாரையும் வளர்த்து விடலைஎங்க அப்பா பாரத்துக்குத் தோள் கொடுத்தேன்னு வேணா சொல்லலாம்.” 

ஏன் செஞ்சிட்டு இல்லைன்னு சொல்ற?” 

திலிப்போசுபத்ராவோ என்னை வந்து எதுவும் கேட்கலைநானே விருப்பட்டுச் செஞ்சிட்டு, அதைச் சொல்லிக் காட்ட கூடாது இல்லையா….” 

சுமித்ரா சொல்வதைக் கேட்டு தீனாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நிறை குடம் தளும்பாதுன்னு சொல்றது இது தான் போலஇதே குறை குடமா இருந்தா கூத்தாடி இருக்கும். நான்தான் அது பண்ணேன், இது பண்ணேன்னு
எப்பவும் நாம் செய்யும் செயலை மற்றவர்கள் பாராட்ட வேண்டுமே தவிரநாமே நம்மைப் புகழ்ந்து கொள்வது கேவலம்

என்றும் மேன் மக்கள் மேன் மக்களே என்பதற்குச் சுமித்ரா ஒரு எடுத்துக் காட்டு…. இவள் வளர்த்து விட்ட தம்பி தங்கைகள் இப்போது நன்றாக இருக்கும் போதுஇவள் எப்படி இருக்க வேண்டும். அவர்களை விட இவள் அல்லவா உயரத்தில் இருக்க வேண்டும்

அவள் அப்படியா இருக்கிறாள். ஏற்கனவே வாழ்க்கையில் பல பிரச்சனைகளைச் சமாளித்து வளரந்தவளை, தானும் தானே இன்னும் வருத்தினோம். இனியாவது அவளை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தான்
இனி என் மனைவியைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படும்படி நான் அவளைப் பார்த்துக் கொள்வேன்.’ எனத் தீனா மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்

நாம் மனது வைத்தால் எல்லாமே நடக்கும்.

 

Advertisement