Advertisement

கண்டுகொண்டேன் காதலை


அத்தியாயம் – 11 

சுமித்ராவுக்குத் திருமணமாகி ஒரு மாதம் கடந்து இருந்த நிலையில், அவளுக்குத் தன் கணவனைப் பற்றியும் புகுந்த வீட்டினர் பற்றியும் நன்றாகத் தெரிய வந்திருந்தது

தீனா தான் சம்பாதிப்பதில் ஒரு ருபாய் கூட வீட்டிற்குக் கொடுப்பது இல்லைஅவனுடைய சொந்த செலவுக்கு மட்டுமே பயன்படுத்தினான்

வீட்டு வாடகை மற்றும் தனக்கு வரும் பென்ஷன் பணம் வைத்தே வீட்டு செலவுகளைச் சிதம்பரம் பார்த்துக் கொண்டார்

இத்தனை நாள் கொடுக்கவில்லை சரி, திருமணதிற்குப் பிறகாவது கொடுக்க வேண்டாமாஇன்னும் திருமணதிற்கு முன்பு எப்படி இருந்தானோஅப்படித்தான் இப்போதும் இருந்தான்

அவன் நினைத்த நேரம் வருவது போவதுஎதோ வீட்டிற்கு வந்த விருந்தினன் போலவே இருப்பான். அவனை ஒரு விரலளையும் அசைக்க விடாமல், சிதம்பரம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்

அதுவும் அடிக்கடி குடித்து விட்டு வேறு வருவான். சுமித்ராவும் அன்பாகச் சொல்லி பார்த்து விட்டாள். அவள் எதாவது பேசினாலே, “வீட்டுக்கு வந்தாலே நீ தொன தொணன்னு அரிக்கிறவீட்டுக்கு வரவே பிடிக்கலை..” என்பான்

வீட்டில் இருப்பதே இல்லை…. வேலைக்குச் சென்று விட்டு வந்ததும், நண்பர்களைப் பார்க்க சென்று விடுவான். அப்படி என்னதான் பேசுவார்களோஎல்லாம் உருப்படி இல்லாத வெட்டி பேச்சுக்கள் தான்

பாலாவுக்குச் சமீபத்தில்தான் திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது. மீனாட்சியும் அவர் கணவரும் வந்து பத்திரிக்கையோடு சுமித்ராவுக்கும் தீணாவுக்கும் உடைகளும் வைத்து கொடுத்து விட்டு சென்று இருந்தனர்

தீனா பிடிவாதமாகக் கல்யாணத்துக்கு வர மறுத்தான். “நீ அப்பாவோட போயிட்டு வா…” என்றான். வேறுவழியில்லாமல் சிதம்பரத்தோடுதான் சுமித்ரா மட்டும் கல்யாணத்துக்குச் சென்றாள்

ஏன் உன் வீட்டுக்காரர் வரவில்லை?” எனக் கேட்காதவர்கள் இல்லை… 

வார நாள் என்பதால் அலுவலகத்தில் லீவ் கிடைக்கவில்லை என்று எதையோ சொல்லி சமாளித்தாள்

பாலாவுக்கு நன்றாகத் தெரியும், தீனா வேண்டுமென்றேதான் வராமல் இருந்திருப்பான் என்று

முதலிலேயே சுமித்ரா முடிவு செய்துவிட்டாள், அங்கே திருமணத்திற்குச் சென்றும் சோக கீதம் வாசிக்கக் கூடாது. வெளியே வந்த இடத்திலாவது சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றுஅதனால் எல்லோரோடும் கலகலப்பாகப் பேசிக் கொண்டு இருந்தாள்.
 
திருமணப் பரபரப்பு எல்லாம் ஓயிந்த பிறகு ,அவள் தனியாக நின்று கொண்டிருந்தபோது, பாலா அவள் அருகில் வந்தான்

எப்படி இருக்கச் சுமி?” 

ரொம்ப எளிதான கேள்வி தான், சுமித்ராவுக்குத் தான் சட்டென்று பொய் சொல்ல வரவில்லைஒரு நொடி திகைத்தவள், புன்னகையை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு அங்கருந்து சென்றாள்

பாலாவுக்குக் குழப்பமாக இருந்தது. அப்போது அங்கே வந்த ஈஸ்வரியை அழைத்தவன், “சுமி எப்படி இருக்கா அத்தை? உங்ககிட்ட எதாவது சொன்னாளா?” எனக் கேட்டான்

எதாவது சொல்லிக்கிற மாதிரி இருந்தாதான சொல்வா பாலா…. நானும் உங்க மாமாவும் ரெண்டு தடவை அவங்க வீட்டுக்கு போயிட்டோம், மாப்பிள்ளை எங்க முகம் பார்த்து கூட வாங்கன்னு சொல்ல மாட்டார். எல்லோரும் எதோ நம்மை விரோதியை போலவே பார்ப்பாங்க.” 

ஒரே பையனா வளரந்ததுனால அப்படி இருக்கலாம். ஆனா கல்யாணம் ஆகியும் மாறலைனா எப்படி?” 

என்னவோ போஅவசரமா கல்யாணம் பண்ணி அவளை ஒரு உருப்படாத இடத்தில கொண்டு தள்ளிட்டோம்.” என்றார் ஈஸ்வரி வேதனையாக.
இதில் பாலாவாகச் செய்ய ஒன்றும் இல்லைசுமித்ரா எதாவது சொன்னால் தான். ஆனால் சுமித்ரா தன்னுடைய கஷ்ட்டத்தைச் சொல்வாளா

அதன்பிறகு பாலா சுமித்ராவை ஆராய்ச்சி கண் கொண்டு பார்க்கஎங்கே தன்னையும் மீறி கண்ணீர் வந்துவிடுமோ என்ற பயத்தில் சுமித்ரா தன் மாமனாரோடு வீட்டிற்குக் கிளம்பினாள்

வெகு நாட்கள் கழித்துப் பத்மா வீட்டிற்கு வந்திருந்தாள். சுமித்ராவின் வாடிய முகத்தைப் பார்த்தவள், மிகவும் வருந்தினாள். திலகா மதிய உணவை சாப்பிட்டு விட்டுப் படுத்ததும், இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்

திலகாவுக்கு வேளைக்கு எதாவது சாப்பிட கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். கொஞ்சம் தாமதமானாலோ அல்லது சுவை பிடிக்கவில்லை என்றாலோ பேச ஆரம்பித்து விடுவார். சுமித்ரா அதைப் பெரிதாக எண்ண மாட்டாள்

வெளியே எங்கேயும் செல்லாமல் அறைக்குள் முடங்கிக் கிடப்பதால்அவரது இயலாமை கோபமாக வெளிவருகிறது எனப் புரிந்து கொள்வாள்.
திலகா உறங்கிவிட்டது தெரிந்ததும், பத்மா சுமித்ராவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்

எப்படி இருக்கச் சுமி?” 

உண்மை சொல்லனுமா பொய் சொல்லனுமா பத்மா அக்கா.”
எனக்குத் தெரியும் சுமி, ஏன்னா இதே கஷ்ட்டத்தை நானும் அனுபவிச்சிருக்கேன்.” 

உங்களுக்கு என்ன பத்மா அக்கா?” 

எப்பவோ ஒரு தடவை குடிச்சிட்டு இருந்த என் வீட்டுக்காரர் பிசினஸ் நஷ்ட்டம் ஆனதும், தினமும் குடிச்சிட்டு ஒரே ரகளை…. நான் கோவிச்சிக்கிட்டு எங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டேன். அங்க போனா அவங்க ஒரே அட்வைஸ் மழைஅதோட சமாதானம் பேசி திரும்ப இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க.” 

ரெண்டு தடவை அப்படிப் போன்னேன். எத்தனை தடவை போனாலும் திரும்பக் கொண்டு வந்து விட்டுடுவாங்கன்னு தெரிஞ்சிடுச்சுஇனி நம்ம வாழ்க்கை இது தான்னு நினைச்சுஅதுல இருந்து போறது இல்லை.” 

நமக்கு என்ன ஏதுன்னு புரியறதுகுள்ள குழந்தை வந்திடுதாஅப்ப நாம குழந்தைக்காகவும் பார்க்க வேண்டியதா இருக்கு…” 

அப்ப இப்பவும் பிரச்சனையோட தான் இருக்கீங்களா அக்கா?”
 
இல்லைகடவுள் புண்ணியத்துல நான் அதுல இருந்து வெளி வந்துட்டேன். என் மாமனார் மாமியார் ரொம்ப நல்ல மாதிரி. அவங்க எங்களுக்குத் தனியா வீடு கட்டி கொடுத்துத் தனிக் குடித்தனம் வச்சுட்டாங்க. இனி உன் குடும்பம் நீதான் பார்க்கனும்ன்னு எனக் கணவர்கிட்ட சொல்லிட்டாங்க.” 

இவருக்கும் பயம் வந்துடுச்சு. அதுல இருந்து ஒழுங்கா வேலைக்குப் போக ஆரம்பிச்சார். அதனால முன்ன மாதிரி ப்ரண்ட்ஸ் கூடச் சேர்ந்து குடிக்கவும் நேரமில்லை. சம்பளத்தை ஒழுங்கா வீட்ல கொடுத்திடுவார்.” 

பத்மா சொன்னதை வைத்து சுமித்ராவுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவளது மாமனார் முயன்றால் தீனா கூடத் திருந்துவான் என்றுஅதனால் அடுத்த நாள் தீனா இல்லாத போது, அவரோடு பேசினாள்

உங்க பிள்ளை இப்படிப் பொறுப்பு இல்லாம இருக்காரேநீங்களாவது அவருக்கு எடுத்து சொல்லக் கூடாதா?” 

அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டான்.” 

அப்படி அவரைச் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சது யாரு? நீங்கதானே….”
சுமித்ரா கேட்க சிதம்பரம் அமைதியாக இருந்தார்

நீங்க அவர்கிட்ட எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம். இனி உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் நான் செலவு செய்ய மாட்டேன்னு மட்டும் சொல்லுங்க போதும்.” சுமித்ரா சொல்ல… 

எங்களுக்கு இருக்கிறது ஒரே பையன். நான் இப்படிச் சொல்லி அவன் உன்னைக் கூடிட்டுத் தனிக் குடித்தனம் போயிட்டாஅப்புறம் எங்க நிலைமை?” 

உங்களைப் பத்திதான் யோசிப்பீங்க? நான் எப்படிப் போனாலும் பரவாயில்லை…” 

உனக்கு இங்க என்ன பிரச்சனை?” 
என் புருஷன் குத்துக்கல்லு மாதிரி இருக்கும் போதுஉங்க காசுல சாப்பிடுறேன் பார்த்தீங்களா அதுதான் பிரச்சனை.” 

நீ கொஞ்சம் பொறுமையா இருந்து அவனைத் திருத்தணும்.” 

நீங்க உங்க பையனை கண்டபடி வளர்ப்பீங்க…. அவரை நாங்க வந்து திருத்தனுமா…. அதுக்குத்தான் எங்க அப்பா அம்மா என்னைப் பெத்து விட்டாங்களா?” 

தீனாவுக்குப் பெரிய இடத்தில பொண்ணு கொடுக்கக் கூடத் தயாரா இருந்தாங்க. ஆனா இந்த மாதிரி பிரச்சனை வரும்ன்னு தான் வசதி இல்லாத வீட்ல பெண் எடுத்தது.” 

உங்களுக்கு இப்படிச் சொல்ல வெட்கமா இல்லையாவசதி இல்லாத வீட்டு பொண்ணுன்னா எப்படி வேணா நடத்தலாமாஉங்களுக்கு ஒரு பொண்ணு இருந்த்திருந்தாஅவங்களோட புருஷன் இப்படி இருந்தாஉங்களால ஏத்துக்க முடியுமா?” 

இப்ப நீ எதுக்கு இவ்வளவு பேசுறேன்னு எனக்குப் புரியலை? உனக்கு இங்க என்ன குறை?” 

உங்களுக்கு என் நிலைமை புரியாது. என் குடும்பத்துக்காகச் சின்ன வயசுலேயே வேலைக்குப் போன பொண்ணு நான். எனக்கு மத்தவங்களுக்குக் கொடுத்து தான் பழக்கம், வாங்கி இல்லை….” 

உங்க காசுல சாப்பிட எனக்குப் பிடிக்கலை…” எனப் பட்டென்று சொல்லிவிட்டு சுமித்ரா எழுந்து செல்ல…. சிதம்பரம் அவளையே அதிர்ச்சி விலகாமல் பார்த்து இருந்தார்

ஒருநாள் சுமித்ராவுக்கு நல்ல காய்ச்சல். அவளால எழுந்து கொள்ளவே முடியவில்லைஅவள் கட்டிலில் படுத்திருக்கதீனா வெளியே செல்ல கிளம்பிக் கொண்டு இருந்தான்

அவனாக எதாவது கேட்பான் எனக் காத்திருந்து பார்த்தவள், அவன் வெளியே கிளம்புவதைப் பார்த்து, “என்னங்க எனக்கு ரொம்ப முடியலைஹாஸ்பிடல் போகணும்.” என்றாள்

அப்பாகிட்ட சொல்றேன் அவர் கூடப் போயிட்டு வா…” தீனா சொல்லகட்டின பொண்டாட்டியை ஹாஸ்பிடல் கூடிட்டுப் போகக் கூட, அவங்க அப்பாவைத்தான் அனுப்புவானா என நினைத்த சுமித்ராவுக்கு, அப்படி ஒரு கோபம் வந்தது

உங்களால முடியாது இல்லவிட்டுடுங்க நான் பார்த்துகிறேன்.” என்றவள், எழுந்து முகம் கழுவி தலைவாரிக்கொண்டு சென்றாள்

தெரு முனைக்கு வந்து அவளே ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குச் சென்றாள். என்ன கட்டுபடுத்தியும் முடியாமல் கண்ணீர் வழிந்தது

ச்சநாம் இப்படி அழுவது கோழைத்தனம் என நினைத்தவள், மாற்றுவேன் மாற்றியே காட்டுவேன் என உறுதி எடுத்துக் கொண்டாள்

மருத்துவரிடம் காய்ச்சலுக்கு மட்டுமின்றி வேறு ஒன்றுக்கும் ஆலோசனை பெற்றுக் கொண்டு, வழியில் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள்

அன்று மிகவும் கோபமாக இருந்ததால்அவள் யாருக்கும் சமைக்கவில்லைஎப்படியோ சாப்பிடட்டும் என அவளுக்கு மட்டும் காஞ்சி வைத்துக் கொண்டாள்.
மகன் வருவதற்குள் சிதம்பரம் அவரே சாதம் வைத்து, பக்கத்தில் இருந்த மெஸ்ஸில் இருந்து குழம்பு வாங்கி வைத்தார்

தான் இந்த வீட்டில் இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என நினைத்துக் கொண்டாள். மகனுக்கு மனைவியின் நினைவு வராமல் எல்லாவற்றையும் செய்யதான் சிதம்பரம் இருக்கிறாரே….. 

மறுநாள் வேலை செய்ய வந்த வள்ளியிடம் கூடச் சுமித்ரா பேசவில்லை
என்ன மா ஒரு மாதிரி இருக்க? இந்த வீட்டு ஆளுங்களைப் பத்தி உனக்குத் தெரியும் தான…” 

சுமித்ரா பதில் சொல்லாமல் வேலையைப் பார்க்க… “என் புருஷன் இருக்கானே கம்முனாட்டி, அவனும் இப்படித்தான் குடிச்சிட்டு வந்து ஒரே ரகளை…. அத்து போட்டுட்டு போக எவ்வளவு நேரம் ஆகும் சொல்லு…. ஆனா நாம அப்படிப் போனா அம்மா வீட்டுக்குத்தானே போகணும். நம்மால அவங்களுக்கு எதுக்குக் கஷ்ட்டனும்ம்னு தான் இதனை வருஷமா பொறுத்து போறேன்.” 

இந்த ஆம்பிளைங்க அவங்க சந்தோஷத்துக்காகக் குடிச்சிட்டு ஊர் மேய்வாங்க. இவங்களைக் கட்டிக்கிட்டு வந்த பொண்ணுங்க மட்டும் கஷ்ட்ட படனும்.’ இது என்ன நியாயம் என்றே சுமித்ராவுக்குப் புரியவில்லை… 

சுமித்ராவுக்குக் காய்ச்சல் குறைந்த இரண்டாம் நாள் ஈஸ்வரி போன் செய்தார்

சுமித்ரா, உன் தம்பி திலீப்புக்கு கல்யாணம்.” 

என்ன மா சொல்றீங்க? அவனுக்கு ஏன் இப்ப அவசரமா கல்யாணம்?” 

அவசரமா ஒன்னும் இல்லை. உன் தம்பி படிக்கும் போதே லவ் பண்ணி இருக்கான். பொண்ணு பெரிய இடம். நல்ல வேலை வாங்கிட்டு வா கல்யாணம் பண்ணி வைக்கிறோம்ன்னு பொண்ணு வீட்ல சொல்லி இருக்காங்க.” 

இதுல இவ்வளவு இருக்கா…” 

இன்னும் நிறைய இருக்குநாம தான் ஒன்னும் தெரியாம இருந்திருக்கோம். அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு வசதியா வாழத்தான், உன் தம்பி அப்ப இருந்தே திட்டம் போட்டிருக்கான். அவன் சாமர்த்தியத்தைப் பார்த்தியா?” 

நல்லது நல்லா இருக்கட்டும்.” 

நீ மட்டும் ஏன் டி சாமர்த்தியசாலியா இல்லாம போனநல்லவங்களுக்கே காலம் இல்லைங்கிறது உண்மைதான் போல….”ஈஸ்வரி கண்கலங்க…. சுமித்ரா விரக்தியாகச் சிரித்தாள்

திலிப்பின் கல்யாணம் பெரிய மண்டபத்தில் நடந்தது. திருமணத்தில் தன் கெளரவம் குறையக் கூடாது என்பதற்காக, தன் அம்மா, சகோதரிகளுக்கு விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் வாங்கிக் கொடுத்து இருந்தான்.
பணக்கார வீட்டுச் சம்பந்தம் அல்லவாஅதனால் தீனாவும் அவன் அப்பாவும் கலந்து கொண்டனர். மாப்பிள்ளை வீட்டினருக்கு வேலையே இல்லை. சாஸ்த்திர சம்ப்ரதாயங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் மேடைக்கு அழைத்துக் கொண்டனர்

மணமகள் ஷாலினி மிகவும் அழகாக இருந்தாள். அவ்வளவு நகைகள் போட்டு இருந்தாள். அவள் மட்டுமே அங்கே இருப்பது போல்திலிப்பின் பார்வை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பவில்லை. இனி தங்களுக்கு ஒரு சகோதரன் இருந்தும் இல்லாத நிலைதான் எனச் சுமித்ராவுக்குப் புரிந்தது

தன் சொந்த சகோதரனின் திருமணத்தில் எதையும் உரிமையாகச் செய்ய முடியாமல், யாரோ போல் இருப்பது சுபத்ராவுக்குக் கஷ்ட்டமாக இருந்தது. அவள் அதையே சொல்லி புலம்ப…. 

நீ இப்ப மனசுல எதுவும் நினைக்காத…” என்றான் அவள் கணவன். சுபத்ரா இப்போது மாசமாக இருக்கிறாள்

பாலாவின் மனைவியும் குழந்தை உண்டாகி இருந்ததால்அவன் மட்டும் பெற்றோரோடு திருமணதிற்கு வந்திருந்தான். அவன் மனைவி அவன் அம்மா வீட்டில் இருந்தாள்

முன்தின இரவு நிச்சயம் முடிந்து தீனாவும் அவன் அப்பாவும் காலையில் வருவதாகச் சொல்லி சென்றனர். மற்றவர்கள் மண்டபத்திலேயே தங்கி இருந்தனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்

என்ன சுமி, பாலாவுக்கு முன்னாடியே உனக்குக் கல்யாணம் ஆச்சு. அவன் பொண்டாட்டி முழுகாம இருக்கா.. உனக்கு ஒன்னும் விசேஷம் இல்லையா?” மீனாட்சி கேட்க…. 

இப்ப இது ரொம்ப முக்கியமான கேள்விபோய் உங்க வேலையைப் பாருங்க.” எனப் பாலா அதட்டமீனாட்சி மகனை முறைக்கசுமித்ரா புன்னகைத்தாள்.
சுமி, உனக்கு ஒன்னு தெரியுமாபாலா முன்னாடி மாதிரி இல்லை…. இப்போ எல்லாம் என்னை மதிக்கிறதே இல்லை…. அவன் பொண்டாட்டி பேச்சை மட்டும் தான் கேட்பான்.” 

அப்படியாஎன்பது போல் சுமித்ரா பார்க்க…. 

அப்படி அவங்களே கற்பனை பண்ணிகிறாங்க சுமி, நான் என்ன பண்றது?” 

ஆமாம் நான் கற்பனை பண்ணிக்கிறேன். இவன் பொண்டாட்டிகிட்ட நான் எதாவது சொன்னாஅதை அப்படியே புருஷன்கிட்டே சொல்லிடுவா…. இவனும் வந்து என்னைக் கேள்வி கேட்பான்.” 

அதுல என்ன தப்பு. நீங்க பார்த்து கட்டி வச்ச பொண்ணு தானஅதுவும் நூறு பவுனோடவாங்கும் போது நல்லா இருந்துச்சா…. ஆனா நான் அவளை நல்லா பார்த்துகிட்டா மட்டும் வலிக்குதா?” பாலா கேள்வியை மீனாட்சியின் பக்கமே திருப்பி விட…. இப்போது பதில் சொல்லமுடியாமல் மீனாட்சி திகைக்க… 

குணத்தைப் பார்த்தா மா பொண்ணு எடுத்தீங்க? பணத்தைப் பார்த்து தானேஅப்ப முன்ன பின்னே தான் இருக்கும்.” என்று நக்கலாகச் சொல்லிவிட்டு பாலா எழுந்து சென்றான்

பாலா போட்ட போடில் மீனாட்சிக்கு சுமித்ராவை பார்க்கவே முடியவில்லை. அவர் மெதுவாக அங்கிருந்து நழுவினார்.

Advertisement