Advertisement

கண்டுகொண்டேன் காதலை


அத்தியாயம் – 10 

மதிய விருந்து மாடியில் பந்தல் போட்டு தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது. முதல் பந்தியிலேயே மாப்பிள்ளை வீட்டினர் சாப்பிட்டு இருந்தனர்

நான்காம் பந்தி ஆரம்பிக்கும் போது தான் தீனாவின் நண்பர்கள் வந்தனர். அவர்களும் இவர்களோடு வந்தவர்கள் தான். ஆனால் இப்போதுதான் வருகிறார்கள். இத்தனைக்கும் அன்று டிராபிக் கூட இல்லை

வீட்டுப் பக்கத்தில் இருந்த காலி மனையில் ஆட்கள் வைத்து சமையல் செய்து, அதை வீட்டினரே பரிமாறினார்கள். சுமித்ராவும் தன் தம்பி தங்கை மற்றும் அத்தை பிள்ளைகளுடன் பரிமாறிக் கொண்டு இருந்தாள்

தீனாவின் நண்பர்கள் வரும் போதே சற்று தள்ளாட…. வழியில் வண்டியை நிறுத்தி நன்றாகத் தண்ணி போட்டுக் கொண்டு வந்திருக்கின்றனர் எனப் பாலாவுக்குப் புரிந்து விட்டது

அங்குப் பரிமாறிக்கொண்டிருந்த தங்கள் வீட்டுப் பெண்களை எல்லாம் கீழே போகச் சொன்னான். பாலா எதாவது சொன்னால் காரணம் இருக்கும் என்பதால்யாரும் எதுவும் கேட்காமல் கீழே சென்றனர்

சுமித்ரா மட்டும் தீனாவோடு நின்று அவன் நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்தாள். சிஸ்டர் என அழைத்து ஓவர் பணிவுக் காட்டினார்கள்

அந்தப் பக்கம் பரிமாற வந்த பாலா, “சுமி, கீழ போ…” என்றான்

பாலா சொன்னதும் சுமி கீழே செல்ல திரும்ப, அவளைத் தடுத்த தீனா, “இங்கயே இரு சுமி.” என்றான்

அவனுக்குப் பாலா சுமியிடம் சொன்னது பிடிக்கவில்லைஅவள் கணவன் நான் இங்கே இருக்கும் போது, இவன் என்ன அதிகாராம் செய்வது என நினைத்தான்.
தீனாவே சொன்னதும், சுமித்ரா நின்று அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தாள்

ஒருவர் தயிர் பச்சடி கேட்கஅதை எடுக்கச் சென்ற சுமித்ராவிடம், “உனக்கு அறிவு இருக்கா? அவனுங்க குடிச்சிட்டு வந்திருக்காங்க. அவனுங்களோட நின்னு பேசிட்டு இருக்க….” பாலா கோபப்பட… 

குடிச்சிருக்காங்களா…. பார்த்தா அப்படித் தெரியலையே…. நல்லாத்தானே பேசுறாங்க.” சுமித்ரா சொல்லபாலா அவளை முறைத்தான்

தயிர் பச்சடி கொண்டு வந்து கொடுத்த சுமித்ரா, “நான் கீழ இருக்கேன்.” எனச் சொல்லி உடனே அங்கிருந்து சென்று விடதீனா பாலாவை முறைத்தான். அவனுக்குத் தெரியும் இவன்தான் எதோ சொல்லி இருக்கிறான் என்று

முறைத்தால் முறைத்து விட்டு போகட்டும் எனப் பாலா நினைத்தான். அவனுக்குக் கவலையெல்லாம் இவனது நண்பர்கள் இப்படி இருந்தால்இவன் எப்படி இருப்பான் என்ற எண்ணம்தான். இவனும் இவன் நண்பர்களைப் போலத்தானே இருப்பான்

தன் நண்பர்கள் சாப்பிட்டதும், அவர்களை வழியனுப்பிவிட்டுதான் தீனா வீட்டுக்குள்ளையே வந்தான். திலகா படி ஏற முடியாததால்அவருக்கு உணவை கீழே கொண்டு வந்து கொடுத்து இருந்தனர். அவர் சாப்பிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார்

வேன்னில் வந்த உறவினர்கள் எல்லாம் கிளம்பி இருந்தனர். பத்மாவும் அவள் கணவரோடு விருந்துக்கு வந்துவிட்டு சென்று இருந்தாள். இங்கேயும் சுமித்ராவின் இரண்டு அத்தைகளின் குடும்பம் மற்றும் சுபத்ரா குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்
மாப்பிள்ளையை உள்ளே கூடிட்டு போமா…” ஈஸ்வரி சுமித்ராவிடம் சொல்லசுமித்ரா தீனாவுடன் அறைக்குள் சென்றாள்

தன் சட்டையைக் கழட்டி அங்கிருந்து கொடியில் போட்டுவிட்டு, தீனா கட்டிலில் படுத்தான். அவனுக்கு வியர்த்து வழிந்தது. அதைக் கவனித்த சுமித்ரா இன்னொரு டேபிள் ஃபேன் கொண்டு வந்து, அவன் எதிரில் வைத்தாள்

தீனாவுக்கு அவள் மேல் கோபம். அதனால் அவளோடு பேசாமல் கண்களை மூடிக்கொண்டான். அவள் உறங்கட்டும் என நினைத்து சுமித்ராவும் வெளியே சென்றாள். இன்னொரு அறையில் அவளது மாமியாரும் மாமனாரும் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர்

ஹாலில் ஒரு பக்கம் சுபத்ராவும் அவளது மாமியாரும் படுத்து உறங்கி இருக்கஇன்னொரு பக்கம் மீனாட்சியும், வாணியும் படுத்துப் பேசிக்கொண்டு இருந்தனர்

சுமித்ரா வந்ததில் இருந்து அவளோடு உட்கார்ந்து பேச முடியாமல் இருந்த ஈஸ்வரி, அவளை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று பேசிக்கொண்டு இருந்தார்
உனக்கு அங்க பிடிச்சிருக்கா சுமி.” 
பிடிச்சிருக்கு மாவீடு எல்லாம் வசதியா இருக்கு. நிறையச் சாமான்கள் வாங்கிப் போட்டு மட்டும் வச்சிருக்காங்க. ஆனா அதை ஒழுங்கா பராமரிக்கத் தெரியலை….இனி நான்தான் எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தனும்.” 

வீட்டை பத்தி கவலை இல்லை சுமி. ஆனா அதுல இருக்கிற மனுஷங்க.” என ஆரம்பித்த ஈஸ்வரி இப்போது எதையும் சொல்லி குழப்ப வேண்டாம் என நினைத்து
நேத்து அவர் உன்கிட்ட நல்லா நடந்துகிட்டாராநீ சந்தோஷமா இருந்தியா…” எனப் பேச்சை மாற்றினார்.

ம்ம்…” என்ற சுமித்ராவின் முகம் சிவக்க…. ஈஸ்வரிக்கு சற்று நிம்மதியாக இருந்தது

நான்கு மணி போல் சிதம்பரமும் திலகாவும் எழுந்து வந்தனர். அவர்கள் ஹால் சோபாவில் உட்காரஅவர்கள் வந்ததைப் பார்த்த மீனாட்சியும், வாணியும் அவர்களைக் கண்டு கொள்ளாமல் பேச்சை தொடர்ந்தனர்

காபி டீ எதுவும் வேணுமான்னு கூடக் கேட்காமல்இருவரும் பேசுவதில் கவனம் செலுத்ததங்களை மரியாதை குறைவாக நடத்துவதாகச் சிதம்பரமும், திலகாவும் நினைத்தனர்
வேண்டுமென்றேதான் மீனாட்சியும், வாணியும் அப்படிப் படுத்துக் கிடந்தனர். அவங்க என்ன நம்ம சம்பந்தியாஅவங்க சம்பந்தியே வந்து கவனிக்கட்டும் என்று இருந்தனர்

அவர்கள் இருவருக்கும் ஈஸ்வரியும், சுமித்ராவும் தோட்டத்தில் இருப்பது தெரியும், அவர்களிடமாவது சென்று இவர்கள் எழுந்ததைச் சொல்லி இருக்கலாம். வேண்டுமென்றே இருவரும் அலட்சியமாகப் படுத்து இருந்தனர்

தீனா படுத்திருந்த அறைக் கதவு திறந்துதான் இருந்தது. அவன் மட்டும் உள்ளே இருப்பதைப் பார்த்த சிதம்பரம், எழுந்து சென்று உறக்கத்தில் இருந்த அவனை எழுப்பினார்

அவன் கண்திறந்து பார்த்ததும், “நானும் அம்மாவும் கிளம்புறோம்.” என அவர் சொல்லதீனா எழுந்து அமர்ந்தான். “எங்களுக்கு ஒரு டாக்ஸி பிடிச்சு விடுறியா….” என்றதும், எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்தான்

மறுவீட்டுக்கு வந்த தீனாவும், சுமித்ராவும் ஒருநாள் தங்கிவிட்டு மறுநாள்தான் கிளம்புகிறார்கள். மகனை பார்த்த திலகா பொரிய ஆரம்பித்து விட்டார்
கொஞ்சம் கூட மரியாதை தெரியாத குடும்பம். நாங்க எழுந்து வந்து எவ்வளவு நேரம் ஆகுது. காபி டீ கொடுக்கக் கூட ஆள் இல்லை.” 

அவர் சொன்னதைக் கேட்ட தீனாவுக்கு மிகவும் கோபம் வந்தது. அவன் ஏற்கனவே மனதிற்குள் புகைந்து கொண்டுத்தான் இருந்தான். இப்போது திலகா வேறு ஊதிவிடஎரிய ஆரம்பித்தது

அதுவரை மாடியில் அரட்டையில் இருந்த, இளைய பட்டாளம் இறங்கி வந்தது. இவர்களைப் பார்த்த பாலா, தன் தங்கையிடம் ஈஸ்வரியை அழைத்து வர சொல்லி அனுப்பினான்

ஈஸ்வரியோடு சுமித்ராவும் உள்ளே வந்தாள். ஹாலில் சம்பந்தி வீட்டினரை பார்த்த ஈஸ்வரி, வேகமாக வந்து, உங்களுக்குக் காபியா டீயா என்று கேட்க… 

இல்லை ஒன்னும் வேண்டாம். நாங்க கிளம்பிட்டோம்என்றார் சிதம்பரம்

என்ன இப்படித் திடுதிப்புன்னு கிளம்புறாங்க.” என ஈஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லைமீனாட்சியும், வாணியும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்
டாக்ஸிக்குச் சொல்லிட்டியா தீனா….” 

நானும் உங்களோட இன்னைக்கே வரேன். அதனால நம்ம கார்லயே போயிடலாம்.” என்ற தீனா அறைக்குள் செல்லஎல்லோரும் அதிர்ந்து போய்ப் பார்த்தனர்
ஈஸ்வரி புரியாமல் சுமித்ராவை பார்க்கஅவள் மெதுவாகத் தீனா இருந்த அறைக்குள் சென்றாள். அங்கே அவன் கண்ணாடி பார்த்து தலைவாரிக் கொண்டு இருந்தான்

ஏன் இன்னைக்கே கிளம்புறீங்க?” 

உன் குடும்பத்துல நிறையவே மரியாதை கொடுத்துடீங்க. இன்னைக்கே இப்படினா நாளைக்கு எப்படியோ? கிடைச்ச வரை போதும். அதுதான் கிளம்பிட்டேன்.” தீனா நக்கலாகச் சொல்ல… 

என்ன நடந்ததுச்சு தெரியலையே? என நினைத்த சுமித்ரா அவனைக் கவலையாகப் பார்க்க… 

நீ என் கூட வரணும்ன்னு அவசியம் இல்லை. உனக்கு எப்ப வரணும்ன்னு தோணுதோ அப்ப வாஇல்லைனாஉன் அத்தை பையன் பெர்மிஷன் கொடுத்ததும் வா…” 

இன்னைக்கு மதியம் அவன் சொன்னான்னு தான கீழ இறங்கி வந்த…. கட்டின புருஷன் என்னைவிட அவன் சொன்னதுதான உனக்கு முக்கியமா தெரிஞ்சிது.” 

அப்படி இல்லைங்கஉங்க ப்ரண்ட்ஸ் குடிச்சிருந்தாங்க.” 

அது எனக்குத் தெரியாதா? நான் உன் கூடத் தான இருந்தேன். நான் அங்க இருக்கும் போதுஉனக்கு என்ன பயம்?” 

சாரி, நான் அப்படிச் செஞ்சிருக்கக் கூடாது.” சுமித்ரா விட்டுக் கொடுத்தாலும், தீனா விடுவதாக இல்லை

நான் இன்னைக்குக் கிளம்புறேன். நீ வந்தா வாவரலைனா இரு.” என்றவன், அறையில் இருந்து வெளியே செல்ல… 

அவன் பின்னே ஹாலுக்கு வந்த சுமித்ரா ஈஸ்வரியை பார்த்து, “நாங்க இன்னைக்கே கிளம்புறோம் மா…” என்றதும், தீனா முகத்தில் வெற்றி சந்தோஷம். அவன் பாலாவை திமிராகப் பார்த்தான்

Advertisement