Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று :    

காலையில் அன்னகிளி கண்விழித்த போது… விக்ரம் அருகில் இல்லை….

பெட் ரூமை விட்டு வெளியில் சென்று பார்த்தாள்…….. அவன் இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை.. “ஆமாம்! நைட் ஃபுல்லா குடிச்சு குடலை வேக வைக்க பிளான் பண்ணிட்டு, இப்போ பெரிய இவர் மாதிரி பாடி மெயின்டைன் பண்ண வாக்கிங் போறார்”, என்று மனதிற்குள் கண்டபடி திட்டினாள்……

சமையலறையிலும் ஒன்றுமில்லை, பிரிட்ஜிலும் ஒன்றுமில்லை….. வெறும் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே…. “இவர் ஊத்திக்கறதுக்கு மட்டும் வெச்சிருக்கார் போல”, என்ற நினைவு எழுவதை தடுக்க முடியவில்லை…

விக்ரம் கோவிலில் இருந்து நேற்று தான் வந்தான் என்று தோன்றிய போதும் அதை ஒதுக்கினாள்.

அவள் மீண்டும் வெளியே வந்த போது, “குட் மார்னிங்!”, என்று சொல்லியபடி கதவை திறந்து விக்ரம் வந்தான்…….

அவன் கையில் பால் பாக்கெட் இருக்க….. அவனிடம் பதில் எதுவும் பேசாமல் அதை வாங்கி காய்ச்ச போனாள்….

“ரொம்ப கோபம் போல!”, என்று அவளுக்கு கேட்குமாறு சத்தமாக சொல்லிகொண்டே நாளிதழை பிரித்து படிக்க அமர்ந்தான்…..

அவன் நாளிதழில் ஆழ்ந்து விட…. சிறிது நேரம் கழித்து சட்டென்று அவன் கையில் இருந்த நாளிதழ் பறிக்க பட்டது…..

“இதையேண்டா புடுங்கறா இவ……”,  என்று விக்ரம் நிமிர்ந்து பார்க்க… பேப்பரை பக்கத்தில் இருந்த சோபாவில் போட்டாள் அன்னகிளி…

“பேப்பரை ஏண்டி கிழிக்கற….”, என்று விக்ரம் கேட்க…..

“உங்களை கிழிக்க முடியலைன்னு பேப்பரை கிழிக்கறேன்”, என்று அன்னகிளி பார்வையால் பதில் சொல்ல….

“ஒஹ்! என்னை கிழிக்க முடியலைன்னு பேப்பரை கிழிக்கறியா! ஓகே! ஓகே!”, என்றான்….

அவனை நோக்கி அன்னகிளி விரல் நீட்டவும், “என்னடி அடிக்க போறியா?”, என்று விக்ரம் கேட்க….

அவனுக்கு முன்னே இருந்த டீபாயை காட்டினாள், அங்கே டீ இருந்தது…

“ஒஹ், டீயா…..! உன்னோடது எங்க, எடுத்துட்டு வா சேர்ந்து சாப்பிடலாம்”, என்றான்…

அன்னகிளி பதில் பேசாமல் போக…. “நீ வரலைன்னா என்ன நான் வர்றேன்!”, என்று டீயை எடுத்துக்கொண்டு அவள் பின்னே போனவன்…

“ஒரு டிஸ்ட்ரிக் ஜட்ஜை பின்னாடி சுத்த வைக்கிற நீ!”, என்று சொல்லிக்கொண்டே போக…..

அவனை மாதிரி, “ஒஹ்!”, என்றவள்…….. “என் பின்னாடி சுத்தும் போது மட்டும் தான் நீங்க ஜட்ஜுன்னு தெரியுமுங்களா….. மத்த நேரமெல்லாம் தெரியாதுங்களா”, என்று கோபமாக திரும்பி நின்று அவனை கேள்வி கேட்டாள்.

அவள் சீரியசாக இருக்கிறாள் என்று புரிந்து….. “என்ன பண்ணினேன்?”, என்றான் புரியாமல்.

“ம்! நேத்து ராத்திரி நீங்க பண்ணினதை தான் சொல்றனுங்க…”,

“நேத்து ராத்திரி நான் உன்னை ஒன்னுமே பண்ணலை! ஐ ஸ்வேர்! நீ அந்த பக்கம் படுத்த, நான் இந்த பக்கம் படுத்தேன், எதுவுமே பண்ணலை……. காலைல எழுந்த போது கூட உன் புடவை மேல ஏறி கால் கொஞ்சம் தெரிஞ்சது, அதை கூட நான் சரி செஞ்சு தான் விட்டேன்…..”, என்று ஒரு நீள விளக்கம் கொடுத்தான்.

அவள் முகம் இன்னும் சீரியஸாக மாறியிருந்தது……. “உங்கள் பேச்சை நான் ரசிக்கவில்லை…..”, என்று நேரடியாக சொன்னது… 

“சொதப்பரனா”, என்றான்…..

“நிச்சயமா! எப்பவும் இந்த மாதிரி பேசி என்னை டைவர்ட் பண்ண கூடாது….”,

“ஓகே! சொல்லு!”, என்றான் சீரியசாக விக்ரமும்…..

“நம்ம வேணா செத்து போகலாமுங்க! ஆனா அடுத்தவங்களை கொல்ல நமக்கு உரிமை கிடையாதுங்க!”, என்றாள் கடுமையாக…

“என்னடி சாவு கீவுன்னு உளர்ற!”, என்று அடிக்குரலில் சீறினான்.

“கேட்கும் போதே கோவம் வருதுதானுங்க! நீங்க பண்ற வேலை அப்படிதான் இருக்குதுங்க……   சரியா போகிற வரை பிரச்சனையில்லை! ஆனா தடம் மாறிச்சின்னா என்ன ஆகறதுங்க…..”,

“குடிச்சிட்டு வண்டி ஓட்டி இருக்கீங்க…. நம்ம எங்கயாவது போய் நமக்கு ஏதாவது ஆனா நம்ம தப்பு, நம்ம பட்டு தான் ஆகணும்! வேற ஏதாவது வந்தாலும் தாங்கி தான் ஆகணும்……. ஆனா நம்ம அடுத்தவன் மேல மோதினா…….. அவன் என்ன பாவம் பண்ணினான், சொல்லுங்க……!”,

“அதுவும் நீங்க அந்த மாதிரி விபத்துல ரெண்டு உறவை பறிகொடுத்து இருக்கீங்க! அதுக்கு அப்புறம் எத்தனை கஷ்டத்தை அனுபவிச்சிருகீங்க! நீங்க இப்படி பண்ணலாமுங்களா…..!”,

விக்ரமால் அந்த நாட்களை நினைக்கவே முடியவில்லை…..  

“அதுவும் நீங்க இப்போ டிஸ்ட்ரிக் ஜட்ஜ்! நீங்க இப்படி ரூல்ஸ் வைலேட் பண்ணலாமுங்களா……. குடிச்சிட்டு வண்டி ஓட்டுறது அஃபென்ஸ்… அப்போ யாரும் பார்க்கலைன்னா தப்பு பண்ணலாம்னு அர்த்தமுங்களா…..”,

“நமக்கு பிரச்சனை ஆயிரம் இருக்கலாம்……. நம்ம அறியாம கூட எதுவும் தப்பு நடக்க கூடாதுங்க!”, என்றாள்……

அவள் சொல்வது நூற்றுக்கு நூறு நிஜம் தானே! ஏற்கனவே தாயையும் தந்தையையும் ஒருங்கே விபத்தில் பலி கொடுத்திருக்கிறான்….. மற்ற எல்லோரையும் விட அவனுக்கு உயிரின் இழப்பு தெரியுமல்லவா….

அதுவும் அவன் டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ்! அவன் ரூல்சை கடைபிடிக்காமல் அடுத்தவனை கேள்வி கேட்பதா…..?

விக்ரம் முதல் முறையாக சற்று அவமானமாக உணர்ந்தான்…..

“இதோட அது உங்க உடம்புக்கும் கெடுதல்…… முழுசா என்னோட வருவீங்க தானே இல்லை பாதிலயே விட்டுட்டு போயிடுவீங்களா!”, என்றாள்… மிகவும் கடுமையான வார்த்தைகள்….

“அப்படி ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க… அதெல்லாம் என்னால தாங்க முடியாது….!”,

“நானும் இந்த மாதிரி உடம்புக்கு கெடுதல் தர்றது எதுன்னு பார்க்கிறேன்! நானும் என் ஆயுசை குறைச்சிக்கறேன்!”, என்றவளின் வாயை வேகமாக மூடினான் விக்ரம்………

“போதும் பேசாத!”, என்று அவன் சொன்ன போது  டீயும் ஆறிப்போய் இருந்தது…. அதை சமையல் மேடையில் வைத்து விட்டு…. குளிக்க போனான்….

விக்ரம் குளிக்க போகவும்…… செக்யூரிட்டி யிடம் பணம் கொடுத்து விரைவாக காய் கறி வாங்கி வர சொல்லி சமைக்க ஆரம்பித்தாள்…

சப்பாத்தி குர்மா செய்து முடித்த போது…… அவன் வைட் அண்ட் வைட்டில் டிரெஸ் செய்து கோர்ட் கிளம்ப தயராய் இருந்தான்……. டீ வீ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதே இவன் கிளம்ப என்று அன்னகிளி நினைத்தாலும்…… அவசரமாக டைனிங் டேபிளில் சமைத்ததை எடுத்து வைத்தாள்.

“சாப்பிட வாங்க…..!”, என்று அவள் அழைக்கவும் மெளனமாக எழுந்து சாப்பிட அமர்ந்தான்….

இரண்டோடு எழுந்து கொள்ள போனவனை விடவில்லை…. அவள் பாட்டிற்கு தட்டில் இன்னும் இரண்டை வைத்து விட வேறு வழியில்லாமல் உண்டான்..

அதன் பிறகு அன்னகிளி டீ கொண்டு வர…. அது பிரெஷாக இருந்தது…

“இது சூடு பண்ணின டீ மாதிரி இல்லையே…….!”,

“அதை நான் குடிச்சிட்டேன்! நீங்க இதை குடிங்க!”, என்றாள்…..

“நேத்து என்னோட வரமாட்டேன்னு சொன்ன.. இப்போ இப்படி கவனிச்சிக்கற…….”,

“நான் நேத்து தானுங்க வரலைன்னு சொன்னேன்! எப்பவுமே வரலைன்னா சொன்னனுங்க….. ஒரு ரெண்டு நாள் கழிச்சு வர்றேன்னு தான் சொன்னனனுங்க….”,

“நீங்க தான் சொல்றீங்களே, கல்யாணமாகிட்டு அப்பா வீட்டுல உட்கார்ந்து அவங்க உயிரை எடுப்பியான்னு…. அதான் அவங்களை விட்டுட்டு உங்க உயிரை எடுக்கலாம்னு வந்துட்டனுங்க…..”, என்று சொல்லி சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவள் குரலில் இருந்தது என்ன…….?  விக்ரமால் கண்டு பிடிக்க முடியவில்லை……!

அவள் பின்னேயே சென்றான்…… அன்னகிளியை பின்னிருந்து அணைத்தவன்….

எதுவாயிருந்தாலும், “சாரி பேபி!”, என்றவன்…

“உங்கண்ணன் உனக்காக இத்தனை வருஷம் கல்யாணம் பண்ணாம இருந்தான்! உயிரை எடுக்கறேன் அது இதுன்னு பேசினா அவன் மனசு கஷ்டப்படாது……”,

“உங்க வீட்டுக்கு போன்னு  என்னை பார்த்து அவர் சொன்னார்….. நீங்களும் தோணினப்போ போன்றீங்க வான்றீங்க!”,

“அதுதான் கோபமா உனக்கு…..  இப்படி ஒவ்வொரு பேச்சுக்கும் அர்த்தம் கண்டுபிடிக்க கூடாது….. இப்படி இருந்தா வாழ்க்கை ரொம்ப சிக்கலாகிடும்….!”,

அசையாமல் நின்றாள்……..

அணைப்பை இருக்கியவன், “மனசுல இருக்குறத பேசு! நீயா ஏதாவது நினைக்க கூடாது…. ஏண்டான்னு என் சட்டையை பிடிச்சு கேக்கணும்….. அதை விட்டுட்டு மனசுல வெச்சிட்டு மருகுவியா…….”, என்று விக்ரமும் முடிந்தவரை பொறுமையாய் விஷயத்தை வாங்க முற்பட்டான்…   

“இப்போ எதுக்கு உனக்கு கோபம்? நீ ஏன் இங்க வரலைன்னு சொன்ன….!”,

“சொல்ல மாட்டேன்!”, என்றாள் பிடிவாதமான குரலில்……

“ஏன்….?, நம்ம டீல் ஞாபகம் இல்லையா”,   

“டீலும் கிடையாது! ஒன்னும் கிடையாது!  சொல்ல மாட்டேன்…..!”,

“அக்கா, உன்கிட்ட என்ன சொன்னா…….!”,

“சொல்ல மாட்டேன்……..!”,

“ப்ச்! அவ என்ன சொன்னான்னு தெரிஞ்சா தானே, அவ சொன்னது சரியா இல்லையான்னு நான் சொல்ல முடியும்….!”,

“சொல்ல மாட்டேன்!”, என்று திரும்ப திரும்ப அதையே சொன்னாள்…

“ஆமாம்! அப்படித்தான்!”, என்று விக்ரம் சொல்லிவிட்டால் அவளால் தாங்க முடியும் என்று அன்னகிளிக்கு  தோன்றவில்லை….. அது நிஜமாகவே கூட இருக்கட்டும், ஆனால் விக்ரம் வாய் மொழியாக அதை கேட்க விருப்பமில்லை……. பயந்தாள்…. எந்த சாஷாவை பற்றியும் அவளுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை….

“உன்னை பிடித்திருக்கிறது! காதலிக்கிறேன்!”, என்று பைய்த்தியம் மாதிரி பின்னால் சுற்றியவனை அவள் கண்டு கொண்டதே இல்லை… அவன் வலுக்கட்டாயமாக கட்டிய தாலியை அவன் மேல் தூக்கி எறிந்திருக்கிறாள்…..

அவன் முன் வாழ்க்கையில் தோற்று போவதா! முடியவே முடியாது…..! விக்ரமிற்கு என்னை பிடித்தால் என்ன? பிடிக்காவிட்டால் என்ன….? யார் முன்னிலையிலும் என்னால்  இனி தாழ முடியாது…..

எதையும் விக்ரமின் வாய் மொழியாகவும் கேட்க விருப்பமில்லை….. வாழ்க்கை எப்படி கொண்டு செல்கிறதோ போவோம்…. நம்மை விட இந்த வாழ்க்கையில் துன்பம் அனுபவிப்பவர் பலர்….. இதில் நமது எல்லாம் ஒன்றுமேயில்லை….

இரவு முழுவதும் யோசித்து இந்த முடிவுக்கு வந்திருந்தாள்….. ஆனால் விக்ரம் குடிப்பதை அனுமதிக்க முடியாது….. அதிலும் அவள் தீர்மானமாக இருந்தாள்.   

எதிர்பார்ப்புகள் தானே ஏமாற்றங்களை கொடுக்கிறது…. அந்த எதிர்பார்ப்பு வேண்டாம் என்ற ஒரு நிலையை கொண்டு வர முயன்று கொண்டிருந்தாள்.

விக்ரமிற்கு அன்னகிளியின் இந்த தீவிரமான எண்ணப் போக்கு தெரியவில்லை..          

விக்ரமும் இப்போதைக்கு அவள் பேச மாட்டாள் என்று தெரிந்தவன்…. மெதுவாக பேசலாம் என்று அதை பற்றி அதிகம் துருவவில்லை… அவனாகவும் சாஷாவை பற்றி சொல்ல இஷ்டமில்லை…… அது அவனின் தமிழச்சிக்கு செய்யும் மரியாதை கிடையாது…..     

தமிழச்சி பொறாமையாக பார்க்க பட வேண்டிய ஆள் கிடையாது…… அவள் பெருமையாக பார்க்க படவேண்டியவள்….. அன்னகிளி அவளை பற்றி தெளிவான மனநிலையில் அறிய வேண்டும்…..

இருவரின் எண்ண ஓட்டமுமே விக்ரமின் அணைப்பில் அன்னகிளி இருந்த போதே நிகழ்ந்தது…. 

அணைப்பிலேயே அசையாமல் யோசித்து நின்றிருந்தவளை.. இன்னும் இறுக்கி அவள் பின் கழுத்தில் முகத்தை வைத்தவன்……

“ரொம்ப பிடிவாதம்டி உனக்கு! நீ புடிச்ச ஓடற முயலுக்கு காலே இல்லை போ…..! சரி, பழசை விடு இப்போ உன் மனசுல என்ன நினைக்குற சொல்லு…”, என்றான்….

பேசும் போது அவனின் உதடுகள் கழுத்தில் உராய அன்னகிளி விலக முற்பட்டாள்…….

“ப்ச்! நகர கூடாது!”, என்று இன்னும் அழுத்தமாக கழுத்தில் முகத்தை பதித்தான்..

உடல் கூசி சிலிர்த்தாலும்….. அந்த உணர்வை ஒதுக்கி, “உங்களுக்கு லேட் ஆகுது….”, என்றாள்.

“ஆனா ஆயிட்டு போகுது…..!”, என்றவன் இதழ்களால் அவளின் பின் கழுத்தில் கோலமிட……

“விடுங்க!”, என்று அவள் திமிறி விலக முற்பட……   

“நீ சொல்லாம நான் விடமாட்டேன், என்ன நினைக்கிற சொல்லு”, என்றபடி அவன் காரியத்தில் கண்ணாயிருந்தான். அன்னகிளியின் மனம் மயங்கியதோ இல்லையோ உடல் மயங்க ஆரம்பித்துது… 

“நீங்க இப்படி என்கிட்ட பேசி, என்கிட்ட நடந்துகிட்டு, என்னை மயக்க ட்ரை பண்றீங்க”, என்றாள்…  

“என்ன மயக்கறனா….?”, என்று முகத்தை நிமிர்த்தி வாய் விட்டு சத்தமாக சிரித்தான்…

பலம் கொண்டு அவனின் கையை விலக்கி விக்ரமின் முகம் பார்த்தாள்….

அவன் அப்படி ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான்…….

அன்னகிளி இடுப்பில் கைவைத்து முறைக்கவும்…….

“என்ன நான் மயக்கறனா… ஏற்கனவே மயங்கியிருக்கறவள யாராவது மயக்குவாங்களா…..?”, என்றான் கண்ணடித்து…..

அன்னக்கிளி இப்போது சண்டை போட முடிவே செய்தாள்… “என்ன நான் மயங்கியிருக்கிறனுங்களா…..”, என்றாள் ரோஷமாக…. 

“இல்லையா……. அப்போ சரி! மயக்கிட்டா போச்சு!”, என்று விக்ரம் அசால்டாக பதிலளித்து… அவள் எதிர்பாராமல் அவளை தன் மேல் இழுத்து விட….. அவன் மேல் மோதி நின்றாள்.

பிறகு அவசரமாக விலகியவள், அவனை பார்த்து இன்னும் அதிகமாக முறைத்தாள்…..

“ஒஹ்! நீ மயங்கமாட்டியா சரி……. நான் உன்னிடம் மயங்குகிறேன்…..”, என்று மீண்டும் கண்ணடித்து வசனம் பேசினான் விக்ரம்.

“இவர் என்னிடம் மயங்குகிறவர்!”, என்று மனதில் நினைத்தாலும் வெளியில் மாற்றி “உங்களுக்கு லேட் ஆகலையா?”, என்றாள்.

“எப்பவும் சொல்றது தான், உன்கூட இருந்தா என் நேரம் போறதே தெரியலை…”,

“இதெல்லாம் சும்மா! இந்த வாசலை தாண்டிட்டீங்கன்னா என்னை மறந்துடுவீங்க!”, என்று வாய் வரை வந்த வார்த்தைகளை வெளியில் சத்தமாக வர விடவில்லை…..

ஆனால் கண்கள் அதை நன்கு பிரதிபலித்தது…….

அவளின் கண்களை படிக்க முயன்ற விக்ரம் முடியாமல், “என்ன நினைக்கிற நீ! சொல்லு!”, என்று அருகில் வர…..

“போங்க! டைம் ஆச்சு!”, என்றாள்….

“அதெல்லாம் முடியாது! நீ சொல்லு…….!”,

“நானும் அதெல்லாம் சொல்ல முடியாது!”, என்று அவனை போலவே சொல்லி…. வழியில் நின்றிருந்த அவனை சுற்றி சமையலறையை விட்டு வெளியேறினாள்…..     

“இவளை  எப்படி பேசவைப்பது…… இவள் சந்தோஷமாக இருப்பது போல தோன்றவில்லை! என்ன செய்வது! எங்கு தவறுகிறேன் நான்…. ஒரு வேளை என்னை பிடிக்கவில்லையா! மனைவி என்பதற்காக சேர்ந்து இருக்கிறாளா….!”,

“இல்லையே! உங்களுக்கு என்னை பார்க்கணும் போல, என்கூட இருக்கணும் போல தோணலையா? என்று சிறிது நாட்களுக்கு முன் கூட கேட்டாளே…..”,

அன்னகிளிக்கு விக்ரமை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்திருப்பதால் தான் இந்த பிரச்சனை…. அதற்கான பிரதிபலிப்பை அவள் தன்னிடம் எதிர்பார்க்கிறாள் என்று விக்ரமிற்கு புரியவில்லை…..

“எங்கே போனாலும் உன்னை விடுவதில்லை பெண்ணே! பார்த்துவிடலாம்! நீயா! நானா! என்று… உன் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வர முடியாவிட்டால் பிறகு நான் என்ன உன் கணவன்….”,

நிகழ்ந்தவைகள் நிகழ்தவைகளாகவே இருக்கட்டும்…… இந்த பிரிவுகள் நமக்குள் இனி வேண்டா…. என்றவாறே விக்ரமின் எண்ணம் உறுதி பெற்றது……

“அனு”, என்று திடீரென்று கத்தினான்…… என்னவோ ஏதோ வென்று அன்னகிளி பதறி விரைந்து வர……

“நான் போயிட்டு வர்றேன்னு சொல்ல கூப்பிட்டேன்…”,, எனவும்…..  அவன் கத்திய கத்தலில் பயந்து வந்த அன்னகிளி பெருமூச்சு விட்டாள்.  “பை பேபி!”, என்று சிரித்துக் கொண்டே அவளின் கன்னத்தில் தட்டவும்….   அன்னகிளியின் முகம் அவளையும் மீறி புன்னகையை பூசியது.

Advertisement