Advertisement

அத்தியாயம் பத்தொன்பது:

கதிர் அமைதியாக அமர்ந்திருந்தான். லலிதாவிற்கு தான் படபடப்பாக இருந்தது. அவளிடம் பேசவேண்டும் என்ற முடிவோடு தான் அமர்ந்திருந்தான்.

ஆனால் அவளை பார்த்தவுடன் இப்போதே பேசவேண்டுமா. அப்புறம் பேசிக்கொள்ளலாமே என்று தோன்றியது. அமர்ந்திருந்தவன் அவளை பார்த்து புன்னகைக்க. பதிலுக்கு புன்னகைத்தாள்.

 அவன் அமர்ந்திருக்கும்போது தான் எப்படி படுப்பது என்று அங்கிருந்த   சோபாவில் அமர்ந்தாள். “இங்க வந்து உட்காரு லலிதா”, என்றான் கட்டிலைக்காட்டி.

அவள் செல்ல. அவள் அமர்வதற்கு நகர்ந்து இடம் கொடுத்தான்.   அவள் அமைதியாகவே அமர்ந்திருக்கவும் அவள் அருகில் நகர்ந்து அவளை ஒட்டி அமர்ந்தவன். அவள் கையை எடுத்து மெதுவாக வருடிக்கொடுத்தவன். “உனக்கு எதுவும் ஆட்சேபனையில்லையே”, என்று கேட்க.

“எதற்கு கேட்கிறான்”, என்று புரிந்தாலும். “என்ன பதில் சொல்ல சொல்வது”, என்று தெரியாதவளாக அமர்ந்த்திருந்தாள்.

“பதில் சொல்லேன் லலிதா”, என்று அவள் பதிலுக்காக அவன் காத்து இருந்தான்.

“உங்களுக்கு எப்படி பிரியமோ, அப்படி”,

“எனக்கு பிரியமில்லாமையா உன்கிட்ட கேட்பேன்”,.

லலிதாவுக்கு படபடப்பாக இருந்தது. தயக்கமாய் அவனை பார்த்து புன்னகைக்க முயற்சி செய்ய.

“இதுல நீ பயப்படறதுக்கு ஒண்ணுமேயில்லை. திஸ் இஸ் குவைட் நேச்சுரல்”, என்று மெதுவாக அவளை அணைக்க. அவளிடம் இருந்து ஒரு எதிர்ப்புமில்லாததால் அதையே சம்மதமாக எடுத்து முன்னேற. ஒரு நிமிடம் தன் வசமிலந்தவள். தன்னையே தொலைக்க துவங்கியபோது. திடீரென்று தன்னை நிலைப்படுத்தினாள். அவனை கேள்வி கேட்டாள்.

“நீங்க ஏன் என்னை காப்பாதியதை கூட சொல்லலை. நான் அதுக்கு தகுதியில்லைன்னு நினைசீங்களா இல்லை என்னை தீண்டத்தகாதவள் நினைசீங்களா”. 

பதறி விலகினான். “என்ன பேச்சு இது லலிதா”, என்றவன் விலகியிருந்த அவள் ஆடைகளை கூட அவனே மளமளவென்று சரிபடுத்தினான். பிறகு என்னை பார்த்தா இப்படி ஒரு கேள்வி கேட்டாய் என்பது போல ஒரு பார்வை பார்க்க.  

“இல்லை என் மனசுக்குள்ள ரொம்ப நாளா இருக்குற கேள்வி. இதுக்கு எனக்கு பதில் தெரிஞ்சே ஆகணும். அது நல்லதா இருந்தாலும் பரவாயில்லை இல்லை கெட்டதா இருந்தாலும் பரவாயில்லை. நான் தாங்கிக்குவேன்”.

“இதுக்கு பதில் தெரியலைன்னா என் மனசுக்குள்ள இது உறுத்திட்டே இருக்கும். என்னால முழுமையா உங்களோட எதுலயும் ஈட்டுப்பட முடியும்னு தோணலை”, என்றாள் தொடர்ச்சியாக அவனுக்கு எதுவும் பேச வாய்ப்பே கொடுக்காமல்.

அவளையே தீர்க்கமாக பார்த்தான். “என்ன வாக்கியம் இது தகுதியில்லாதவள். தீண்டத்காதவள்.”, அவனை அது பலமாக தாக்கியது.

“என்ன பேசிட்ட லலிதா நீ. இப்படி எல்லாம் பேசாத. எனக்கு கஷ்டமா இருக்கு”, என்று வேதனையில் அவன் முகம் சுருங்கியது. எதற்கும் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

இதற்கு நாம் முன்னமேயே விளக்கம் கொடுத்திருக்கலாம் என்று நினைத்தான் கதிர். அவள் வார்த்தைகள் காயப்படுதியிருந்தாலும். அவளுக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவன், அவளுக்கு விளக்கம் கூற ஆரம்பித்தான்.   

“ஏன் உன்னை காப்பாத்தியதை சொல்லலைன்னா.”. அன்றைய தினத்தின் ஞாபகத்திற்கு போனவன். “உன்னோட வார்த்தையில சொல்லணும்னா, உன்னை தீண்டியதால் தான்”, என்றான்.

“என்னடா இது புதுக்கதை”, என்று அவள் அவனையே பார்த்திருக்க. அந்த முகத்தை பார்த்த கதிருக்கு, அவனை அறியாமல் ஒரு பெருமூச்சு வெளியேறியது.

“நீ அன்னைக்கு வந்து அந்த கோழி அடைச்சிருந்த பட்டிகளை எண்ணிட்டு இருந்தபோதே  உன்னை பார்த்தேன். உன் முகம். இந்த முகம். எனக்கு ரொம்ப பரிச்சையமானதா தோணிச்சு . என்னை அறியாமல் அதையே நான் பார்த்திருந்த போதுதான் நீ கீழே விழப்போன. பிடிக்க போனபோது நீ என் மேலயே விழுந்து, நானும் கீழ விழுந்து மயக்கம் ஆகிட்ட”.

“மறுபடியும் உன்னை எழுப்ப என் கைகள் உன்னை தட்ட. அது இந்த கன்னத்துல பஞ்சு மாதிரி உள்ளே போனது”, என்றான் அவனையும் மீறி அந்த கன்னத்தை மிருதுவாக தடவ. அவளுக்கு உடல் முழுவதும் சிலிர்த்தது. அந்த சிலிர்ப்பை கதிரின் கைகளும் உணர்ந்தது. கதிரின் முகத்தில் லேசாக புன்னகை தோன்றியது.

இருந்தாலும் கட்டுபடுத்தி லலிதா முகத்தை சீரியசாக வைத்து அவனையே பார்த்திருந்தாள்.

“அப்புறம், அப்புறம்”, என்று இழுத்தவன். “உன் டிரெஸ் கொஞ்சம் விலகி இருந்தது. உன் இடுப்பு அதுல பளீர்ன்னு தெரிஞ்சது”, என்றதும் “அன்”, என்று அவளையறியாமல் ஒரு சத்தம் கொடுத்தாள்.

“ஒண்ணும் பண்ணலை. யாரும் வர்றதுக்கு முன்னாடி உன் டிரெஸ் சரிபண்ணிட்டேன்.”, என்றதும்.

“அப்பாடா”, என்றாள்.

“அந்த மயக்கத்துல உன் முகம் என்னை ரொம்ப கவர்ந்திச்சு. அப்போ பார்த்து ஆளுங்க வர. என்னவோ நான் தான் உன்னை காப்பாதினேன்னு சொல்ல மனசே வரலை”.

“அப்புறம் தான் நீ கந்தசாமி மாமாவோட பொண்ணுன்னு தெரிஞ்சது. நம்ம கிட்ட வேலை செய்யபோற பொண்ணு. ஏன் சொல்லணும்னு தான் சொல்லலை”, என்றான் உண்மையாக.

“அப்புறம் உன் மேல கொஞ்சம் கோபம் வந்திச்சு. நீ எப்படி என்னை கவரலாம்னு. ஏன்னா நிறைய நேரம் என் ஞாபகத்துல உன் முகம் தான் வந்து வந்து மறையும். அப்போ பார்த்து சபரி வர. அவனோட நீ பேசினது எனக்கு சுத்தமா பிடிக்கலை”.

“அந்த கோபம் தான் உன்கிட்ட என்னை தப்பா பேசவச்சது. அதுக்கு நீ சரியான பதில் கொடுத்தவுடனே. உன்னை அடிக்க வைச்சது. ஐ அம் சாரி”, என்றான் அன்றைய நினைவுகளில்.

அதே ஞாபகத்தில். “ரொம்ப லேட் சாரி”, என்றாள் கொஞ்சம் கோபத்தோடு. “என் டிரெஸ் சொல்லி நீங்க திட்னது ரொம்ப தப்பு”.    

 “அது.”, என்று இழுத்தவன். “என் கனவுல நீ நல்ல நல்ல டிரெஸ்ல வருவ. ஆனா நேர்ல என்னை நீ. உன்னோட சாதாரண டிரெஸ்லயே என்னை கவரவும். என்னோட கோபம் வேற மாதிரி வார்த்தையா வந்துடுச்சு”. 

மறுபடியும், “சாரி”, என்றான்.

“பண்றதெல்லாம் வில்லன் வேலை. எல்லாம் செஞ்சிட்டு இப்போ என்ன ஹீரோ மாதிரி சாரி”, என்றாள் கோபமாக.

அந்த நேரத்திலும் அவள் உவமையை நினைத்து கதிருக்கு சிரிப்பு வந்தது.

அது சிரிக்கும் நேரமல்ல என்றுணர்ந்து முயன்று கட்டுப்படுத்தினான். “அப்படி கோபம்மா இருந்த நேரத்துல தான். அந்த பொண்ணு கீதாவோட சம்மந்தம் வர. அழகாவும் இருந்தா. எங்க அந்தஸ்துக்கும் இருந்தா. சரின்னு சொல்லிட்டேன். அப்போவும் உன் ஞாபகம் என்னை விட்டு போகலை”.

“நீ எப்படி என் மனசை ஆக்ரமிக்கலாம்ன்ற எண்ணமே அப்போ பெரிசா இருந்தது. அப்போ பார்த்து தான் அந்த பொண்ணு கீதா அவ்வளவு தெளிவு இல்லைன்னு தெரிய. அது நின்னது. என் மனநிலை ரொம்ப குழப்பமாச்சு”.

“உன்னை சீரியஸா நான் நினைக்க துவங்க. மறுபடியும் சித்ராவோட கல்யாணம் பேசினாங்க. அந்த நிலையில உண்மையா சொல்றேன், லலிதா. ஆஸ்தி, அந்தஸ்து, அழகு, எல்லாம் பார்த்து தான் நீ எனக்கு சரிவரமாட்டேன்னு நானே முடிவு செஞ்சு சித்ரா வோட கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன்”. கேட்ட லலிதாவின் முகம் இயலாமையில் சுருங்கியது.

“எப்படியும் காலப்போக்குல உன்னை மறந்துடுவேன்னு நினைச்சேன். ஆனா முடியலை. என் குழப்பம் ரொம்ப அதிகமான சமயம் தான் கல்யாணம் நிக்கற மாதிரி சபரியும் சித்ராவும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க”.

“எனக்கு கல்யாணம் நின்னதும் உண்மையாவே அப்பாடான்னு பெருமூச்சு வந்துச்சு. ஆனா உன்மேல பயங்கர கோபம் வந்துச்சு. எப்படி என்னை விட்டு அவங்க முக்கியம்னு நீ என்கிட்ட சொல்லாம அவங்க கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டேன்னு”.

“அதனால தான் அன்னைக்கு கோபத்துல மறுபடியும் உன்னை திட்டிடேன். ஆனா வீட்டுக்கு வந்துதுமே இதை கேள்விப்பட்டதுமே வித்யா என்கிட்ட உன்னைபத்தி கேட்டா.”

“அவளுக்கு நான் முன்னமே உன்னை இஷ்டபறேன்னு தெரிஞ்சது போல. நான் ஒண்ணும் சொல்லாததுனால ஒண்ணுமே பேசாம இருந்திருக்கா. அப்போ திடீர்ன்னு கல்யாணம் நிக்கவும் உடனே முடிவெடுத்து கேட்டா. நான் சரின்னு தலையாடிட்டேன்”.

ஆனா அந்த நிமிஷத்துல இருந்து, எனக்கு உன்மேல இருந்த காதல் ரொம்ப அதிகமாயிடுச்சு. உன்னை விட்டு இனிமே இருக்க முடியும்னு தோணலை”.

“அதனால தான் நீ ஏதாவது சொல்வியோன்னு, ஒரு வேளை இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா.  கல்யாணம் வரைக்கும் உன்னை பார்க்கலை”.

“இது தான் என்னோட காதல் கதை. எப்படி இருக்கு”, என்று முடித்தான்.

“நல்லாவே இல்லை”, என்று மனதிற்குள் நினைத்தவள் வெளியே சொல்லவில்லை.

பிறகு அவனை பார்த்து. “அப்போ அந்தஸ்து பார்த்து தான் என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லலையா”.

“அதுவும் ஒரு காரணம். என் குணமும் ஒரு காரணம் லலிதா. யோசிச்சுபார் நான் இருபத்தி ஒன்பது வயசு இளைஞன். உனக்கு என்ன ஒரு இருபத்தி ஒண்ணு வயசு இருக்குமா. நீ என்கிட்ட அப்போ தான் வேலைக்கு சேர்ந்திருக்க, அதுவும் நீ என்கிட்ட வேலை செய்யறவரோட பொண்ணு. உன்கிட்ட வந்து எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு நான் எப்படி சொல்வேன்”.

“முதல்ல அது ஒரு ஈர்ப்பு. அதை வச்சு எல்லாம் யாரும் பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டாங்க. நிறைய பேருக்கு ஏதோ ஒரு காலக்கட்டத்துல யாரையாவது பிடிக்கும். அதுக்காக எல்லாரும் சொல்லிடுவாங்களா என்ன?”.

“சொல்ல மாட்டாங்க. கட்டாயம் சொல்ல மாட்டாங்க. இடம் பொருள் ஏவல்ன்னு இருக்கு. அதை பார்த்து தான் நடந்துப்பாங்க. நம்ம சொன்னா. இது நம்ம குடும்பத்துக்கு சரிவராதுன்னு தெரிஞ்சா. சொல்ல மாட்டாங்க”.

“இது நிறைய பேரோட வாழ்கையில இருக்கும். நம்ம பெத்து வளர்தவங்களும் முக்கியம். அது ஒரு விஷயம். அதே போல சமுதாயத்துல அந்தஸ்து இன்னொரு மறுக்க முடியாத விஷயம். அதை பார்த்து தன் பிரியத்தை சொல்லாம மறைக்கிறவங்க எத்தனை பேர் தெரியுமா.”,

“காலபோக்குல மறந்திடும். யூ நோ டைம் இஸ் எ பிக் ஹீலர். காலம் எல்லாவற்றையும் மறக்க செய்யும். அது தான் உண்மை கூட”.

“அந்த மாதிரி நினைச்சு தான் நான் சித்ராவோட கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனா உனக்கு நான். எனக்கு நீ. என்பது இறைவன் போட்ட முடிச்சு. ஒண்ணும் செய்ய முடியாது போல. அதனால தான் வித்யா என்னை கண்டுபிடிச்சதால எனக்கும் உனக்கும் கல்யாணம் செஞ்சு வச்சா.”,

“எது எப்படி இருந்தாலும். அது கல்யாணத்துக்கு முன்னாடி தான் லலிதா. என்கூட கல்யாணம் ஆன பிறகு. உனக்கு எத்தனை குறைகள் இருந்தாலும் அது என்னோட சேர்ந்தது தான் அது. என்னோட குறையும் அதான்”.

எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் முகத்தை கடினமாக வைத்திருந்தாள்.

“அதனால அன்னைக்கு நான் உன்கிட்ட நடந்ததுகிட்டதுக்கு. முன்னாடி நிச்சயமான கல்யாணங்களுக்கு. எல்லாத்துக்கும். மறந்துடு. மன்னிச்சிடு”.

“அதையே நினைச்சிருந்தா நம் வருங்காலம் கட்டாயம் பாதிக்கும் அதை மறந்துடு. இப்பவும் என்னோட அன்றைய நடவடிக்கைகள் தப்புன்னு சொல்லமாட்டேன். ஆஸ்தி அந்தஸ்து இதுவும் முக்கியம் தான்”.

“ஆனா உன்னை பிடிச்சிருந்ததை கண்ட்ரோல் பண்ண முடியாம உன்கிட்ட ஹார்ஷா நடந்தது ரொம்ப தப்பு. அதுக்கு ரீசன் நான் உன்மேல் கொண்ட காதல் தான்”, என்று நீளமாக பேசி முடித்தான்.

“இவ்வளவு பெரிய கதையா”, என்பது போல பார்த்திருந்தாள் லலிதா. தன்னிடைய எல்லா செய்கைகளுக்கும் விளக்கம் கொடுக்கிறான் தப்பையும் ஒப்புகொள்கிறான் என்ன செய்ய என்று யோசித்த படியே இருந்தாள்.

அவன் விளக்கம் கேட்ட பிறகு லலிதாவிற்கு அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் குறைந்து விட்டதா இல்லையில்லை போயே விட்டது.

ஆனாலும் காட்டிகொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். சில விஷயங்கள் அவன் சொன்னதில். அவளுக்கும் உடன்பாடு தான். “அவனுக்கு அவள் மேல் வந்த காதல், ஒரு வேளை அவளுக்கு அவன் மேல் வந்திருந்தால். கட்டாயம் சொல்ல்லியிருக்க மாட்டாள் தான், மறைதிருப்பாள்”.

எல்லாரும் அவரவர்க்கு தோன்றும் எண்ணங்களை எல்லாம் எல்லோரிடமும் சொல்வதில்லையே.  அதுதானே உண்மையும் கூட.

அவளை மேலே யோசிக்கவிடாமல், “தூங்கலாமா லலிதா”, என்றான். இத்தனை விளக்கங்களுக்கு பிறகு தங்கள் உறவு ஆரம்பிப்பதில் கதிருக்கு உடன்பாடில்லை. அவள் மனம் தெளியட்டும் என்று அமைதியாக உறங்க முற்பட்டான்.

லலிதாவிற்கும் சற்று அவகாசம் தேவைப்பட்டது. அவளுமே உறங்க முற்பட்டாள். இருவருமே முற்பட்டார்கள் தான். முடியவில்லை. வெகு நேரம் ஆயிற்று இருவரும் உறங்க. 

காலை விடிந்ததில் இருந்து ஏதோ ஒரு தயக்கம் லலிதாவிடம். அவனுக்கு கோபம் வந்திருக்குமோ என்று. எதையும் கதிரின் முகத்தில் இருந்தும் உணர முடியவில்லை. அவன் முகத்தை முகத்தை பார்பதையே வேலையாக வைத்திருந்தாள்.

அவன் டீ குடிக்கும்வரை அவனை பார்க்க. அன்று பார்த்து வேகமாக கிளம்பாமல் அவன் பேப்பரில் ஆழ்ந்திருந்தான். பிறகு எப்பொழுதும் போல பண்ணைக்கு கிளம்பி சென்றுவிட்டான். 

அவள் முகத்தை முகத்தை பார்ப்பது தெரிந்தது. எப்போதும் எதையாவது செய்வது பிறகு முகத்தை பார்ப்பது இவளுக்கு இதே வேலையாக போய் விட்டது என்று நினைத்துக்கொண்டே சென்று விட்டான்.

காலையில் எழுந்ததில் இருந்து ஒன்றும் பேசாமல் போகிறானே. இது தான் இவன் நேற்று இரவு இவன் காதல் கதை சொன்ன லட்சணமா என்று தோன்றியது லலிதாவிற்கு. வரட்டும் இன்னைக்கு ஒரு கை பார்க்கிறேன். எத்தனை பெரிய லூசாக இருந்திருக்கிறேன் நான். ஒருவன் என்னை விழுந்து விழுந்து நினைக்க. அதை கூட தெரியாமல் இருந்திருக்கிறேன். முட்டாள் பெண் என்று அவளை அவளே திட்டி கொண்டாள்.

பிறகு எப்பொழுதும் போல சமையல் வேலை ஆக்ரமிக்க, பின்பு பாட்டிக்கும் அவள் மாமனாருக்கும் பறிமாறிய பிறகு ஓய்வாக அமர்ந்து கதிருக்கு காத்திருந்தாள்.

பாட்டி வேறு இன்னும் காணவில்லை காணவில்லை என்று புலம்ப.

பதினோரு மணியாகியும் சாப்பிட வராததால் அவனை தொலைபேசியில் அழைத்தாள். லலிதாவிற்கு வேறு பசியில் தலைசுற்றியது.

இன்னும் அரைமணிநேரம் ஆகும் முட்டை லோடு ஏறிட்டு இருக்கு என்று தகவல் சொன்னான்.

கோபமாக வந்தது. “அதை நான் போன் செஞ்சா தான் ஐயா சொல்வாங்களோ. அவங்களே கூப்பிட்டு சொல்லமாட்டங்களோ”, என்று மனதிற்குள்ளேயே நினைத்தவள். வெளியில் இருக்கும் போது என்ன பேசுவது என்று அமைதியாகி விட்டாள்.                      

வந்து அவன் சாப்பிடும் வரை அமைதியாக இருந்தாள். பிறகு ஆரம்பித்தாள். “ஏன் லேட் ஆகும்னு ஒரு போன் பண்ணி சொல்ல மாட்டீங்களா”, என்றாள். 

“வேலை பிசில மறந்துட்டேன்”.

“வந்து சாப்பிட்டுட்டு போகலாம் இல்லை”.

“முடிச்சிட்டே வந்துடலாம்னு இருந்தேன்”.

“என்ன முடிச்சிட்டே வந்துடலாம்னு இருந்தேன்?. காலையில ஆறுமணிக்கு குடிச்ச டீ எப்படி பதினோரு மணிவரைக்கும் தாங்கும்”,

“இல்லை லலிதா எனக்கு பசியே தெரியலை, பழகிடிச்சு”, 

“ஆனா எனக்கு தெரியுதே. நான் இன்னும் பழகலை. நீங்க சாப்பிடாம நான் எப்படி சாப்பிட முடியும்”, என்று கேட்க.

அப்போதுதான் அவள் சாப்பிடாமல் இருப்பாள் என்பது ஞாபகம் வர. “சரி நீ சாப்டுட்டு என்னை திட்டு”, என்று முதலில் அவளை சாப்பிட சொல்ல.

“செய்யறது எல்லாம் செஞ்சிட்டு சாரி கேக்கறதே வேலையா வெச்சிருக்கீங்க”, என்றாள் இருபொருள்பட.

இவள் எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து தன்னை திட்டுகிறாள் என்றுணர்ந்த கதிர். அதான் சாப்பிட்டுட்டு தெம்பா திட்டு சொல்றேன் இல்லை”,

“ம்! அதுக்குள்ள மறந்துடுவேன்”, என்றாள்.

கதிருக்கு சிரிப்பு வந்துவிட்டது

“என்னை திட்ட மறக்கறது உனக்கு கஷ்டமான விஷயமா”, என்று அவளிடம் கேட்க.

“ஆமாம்”, என்ற பதில் வாய்வரை வந்தது. “இருந்தாலும் சிரித்துக் கொண்டிருக்கிறான், அவன் மூடை ஏன் ஸ்பாயில் பண்ண வேண்டும் சாப்பிட்டு விட்டு திட்டலாம்”, என்று சீரியசாக நினைத்தாள்.

சாப்பிட்ட பிறகு பசி போய்விட. அவள் கோபமும் போய், அவனை எதற்கு திட்ட வேண்டும் என்பதும் மறந்துவிட்டது .

அவள் செய்கைகளையெல்லாம் சிரிப்போடு பார்த்திருந்தான் கதிர்.

அவள் சாப்பிட்டு முடித்ததுமே, “இப்போ ஆரம்பி”, என்றான்.

“எதை”, என்பது போல அவள் பார்த்திருக்க. “என்னை திட்டுறதை தான்”, என்று அவன் கூற.

“நான் என்ன இங்க காமெடியா பண்ணிட்டு இருக்கேன்”,

“சீரியஸா தான் சொல்றன் புள்ள”, என்றான் லோக்கல் பாஷையில்.

“ம்!. மறந்துட்டேன் மாமா!. ஞாபகம் வந்தவுடனே ஏசறேன்”, என்றாள் அவளும் பதிலுக்கு.

தங்கள் பேச்சை கேட்டு இருவருக்கும் அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது. கதிருக்கு அவளுடன் வாய்க்கு வாய் பேசுவது சந்தோஷத்தை கொடுக்க.

அதை உணர்ந்த லலிதாவும். “நீங்க இவ்வளவு பேசுவீங்களா. ஊருக்குள்ள எங்க மாமா பேசவேமாட்டாங்கன்னு சொல்றாங்க”, என்றாள் கதிரை மனதில் வைத்து.     

“யாரு சொல்றது அப்படி. அவனுங்க யாரும் பயந்துட்டு என்கிட்ட பேசமாட்டாங்க”, என்றான் காலைரை தூக்கியபடி

உண்மைதானே லலிதாவும் அவனை பார்த்து பயந்தவள் தானே. ஆனால் நேற்று இரவு அவன் பேச்சை கேட்ட பிறகு அவனுடன் ஒரு கூடுதல் நெருக்கம் வந்தது போலவே உணர்ந்தாள். சந்தோஷமாகவே உணர்ந்தாள். 

அன்று இரவு லலிதா வந்தபோது நேற்று போல் கதிர் அவளுக்காக காத்திருக்கவில்லை. உறங்க ஆயத்தமாகி படுத்துக்கொண்டு இருந்தான்.

லலிதா நேற்றைய நினைவுகளால் சற்று எதிர்பார்ப்போடு தான் வந்தாள் என்ன வருமோ என்று. ஆனால் அதற்கான அடையாளம் சிறிதும் இல்லாமல் கதிர் உறங்க முற்பட்டு கண்மூடிக்கொண்டு இருந்தான்.

சற்று ஏமாற்றமாக தான் உணர்ந்தாள்.

நேற்று இரவு ஆர்வமாக நெருங்கியவன் தன்னால் தான் தயக்கத்தை பூசிகொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன் தயக்கத்தை உடைக்க அமைதியாக அவளும் ஏறி அவனை சற்று நெருங்கி படுத்துக்கொண்டாள்.

லலிதா நெருங்கி படுப்பதை உணர்ந்த கதிர் இன்னும் அவளிடம் இருந்து தள்ளி படுத்தான். அவளும் விடுவேனா என்று இன்னும் அவள் புறம் சற்று நெருங்க.

“லலிதா என்ன பண்ற”

“ஒண்ணும் பண்ணலையே”

“இப்படி என் பக்கம் தள்ளி தள்ளி வந்தா என்ன அர்த்தம்”

“என்ன அர்த்தம்”, என்று திருப்பினாள்.

கதிருக்கு அவள் வார்த்தைகள் சிரிப்பை கொடுக்க . “அப்புறம் நடக்கறது எதுக்கும் நான் பொறுப்பில்லை. யோசிச்சுக்கோ!”, என்றான் சிரித்துகொண்டே சம்மந்தமில்லாமல்.

“எல்லாம் எங்களுக்கும் மூளையிருக்கு. நாங்களும் யோசிப்போம்”, என்றாள்.

“என்ன யோசிப்பீங்க”, என்று படுத்தபடியே கேட்டான்.

இவளும் படுத்துக்கொண்டே. “அதைத்தான் மறந்துட்டேன்”, என்றாள்.

“எதை மறந்துட்ட”

“நீங்க  எதை கேக்கறீங்களோ அதை”

“நான் எதையும் கேக்கலையே”

“நானும் எதையும் சொல்லை”

 

அவள் வார்தையாடிகொண்டிருக்கும் போதே, “ரொம்ப பேசறடி நீ.  இரு முதல்ல உன் வாயை மூடுறேன்”, என்று அவள் இதழ்களை தன்னுடையதால் மூடினான்.

வெகு நேரம் கழித்தே விடுவித்தான். பதட்டப்படுகிறாளோ இல்லை ஏதாவது பிடிக்கவில்லையோ என்று லலிதாவின் முகத்தை ஆராய. அது மலர்ந்து, சிரித்து, வெட்கத்தை பூசியது. அது அவனின் தயக்கத்தை எல்லாம் உடைத்தது.  

அவள் முகத்தை மிக அருகில் பார்த்தவன். “உனக்கு தெரியாது லலிதா இந்த முகம் என்னை எவ்வளவு டிஸ்டர்ப் பண்ணியிருக்கு தெரியுமா”. அவள் முகத்தில் விரல்களால் கோலமிட . சிலிர்த்தாள்.

அதை தன்னில் உணர்ந்தவன். முதல் முறையாக, “ஐ லவ் யூ லலிதா, ஐ லவ் யூ ஸோமச்”, என்றான். மறுபடியும் அவள் முகத்தை பார்த்தவன் பொறுமையின்றி அவள் இதழ்களில் ஆவேசமாக முற்றுகையிட. அங்கே பேச்சுக்கே இடமில்லாமல் ஒரு இனிய தாம்பத்தியம் உதயமானது.

காலையில் எழுந்ததில் இருந்து அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டு கொண்டு லலிதா ஓடிக்கொண்டு இருந்தாள்.

அவளை பார்க்க பார்க்க அவனுக்கு சிரிப்பு பொங்கியது. இருவருமே மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். அவன் முகம் பார்க்காமல் சென்று கொண்டிருந்தவளை நிறுத்தி கேள்வி கேட்டான்.

“ஆமா எதுக்கு நீ இப்படி என்னை பார்த்து பயந்து ஒடறவ”,

“நான் ஒண்ணும் பயந்து ஒடலையே”,

“சரி அப்ப நில்லு” என்றான்.

ஏதோ சொல்ல நிற்க சொல்கிறான் என்று கனகாரியமாக அவளும் நின்றாள். 

லலிதா நின்றவுடன் அவளை தலையிலிருந்து கால்வரை ரசனையுடன் ஆராய்ந்தான் கதிர்.

தலைக்கு குளித்திருந்தாள். புது மணப்பெண்ணுக்குக்குரிய நாணம் கன்னங்களில் சிவப்பையும், கண்களில் கனவுகளையும் கொடுத்திருந்தது.  அவன் கனாவில் வந்து இத்தனை நாட்கள் இம்சித்த அந்த முகத்தை ஆசைதீர பார்க்க. 

“இதுக்கா நிற்க சொன்னிங்க”, என்று இடுப்பில் கைவைத்து அவனை முறைக்க முற்பட்டு முடியாமல். “போங்க நீங்க”, என்று மறுபடியும் ஓடினாள்.

“எனக்கு டீ யை குடுத்துட்டு போ லலிதா”, என்ற அவனின் குரல் அவளை பின் தொடர்ந்தது. 

“என்னை விட்டுட்டு கொஞ்சம் அந்தபக்கம் இந்தப்பக்கம் பாருங்க. உங்க டீ உங்க முன்னால தான் இருக்கு”, என்று அவனை பார்த்து சொல்லிவிட்டு போனாள்.

அங்கே இருந்த டீயும் பேப்பர்ரும் அவனை பார்த்து சிரித்தது. “பயபுள்ள இப்படி வழியறியேடா. தொடைச்சுக்கோ”, என்றது அது. அதை பார்த்து பதிலுக்கு சிரிக்க ஆரம்பித்தான் கதிர்வேல்.   

Advertisement