Advertisement

அத்தியாயம்….2 
 தன் அன்னையின் நெற்றி வெறுமையாக இருப்பதை பார்த்து,    தன் அன்னையில் அருகில் சென்ற வேணி, அவர் கன்னம் பற்றி அவர்  முகத்தையே பார்த்திருந்தாள்.
 அன்னையின் ஒடுங்கி போன கன்னத்தால்,  முன் பல் கொஞ்சம் தூக்கலாய் தெரிகிறதா…? இல்லை அன்னையில் பல்லே கொஞ்சம் தூக்கிய வாகா…? மொத்தத்தில்  புனிதாவின் பல் கொஞ்சம் தூக்கி, கன்னம் ஒட்டி போய் தான் இருக்கும்.
நிறம் கொஞ்சம் மங்கலான நிறம் தான். உயரமும் சரி கொஞ்சம் வளர்த்தி கம்மியாக தான் இருக்கும். மொத்ததில் புனிதா பார்க்க சுமாரண பெண்மணி. ஆனால் குணம் அவர் பெயருக்கு ஏற்றார் போல்  இருக்கும்.
பார்த்த உடன் ஒருவர் கண்ணுக்கு புலப்படுவது அழகு தான். பழகி பார்த்தால் தான் அவர்களின் குணம் தெரியும். ஆனால் தன் அன்னையை பற்றி தன் தந்தைக்கு தெரிந்து தானே இருக்கும்.
சொந்த அத்தை மகளை தானே கட்டிக் கொண்டார். ஒரே வீட்டில் வளர்ந்தவளின் குணம்  தெரிந்து இருக்காதா…? என்னை பற்றி என்னோடு பவித்ரனுக்கு தானே நன்கு அறிவான்.
எப்படி தாலி கட்டி குழந்தையும் கொடுத்து விட்டு,  அழகு இல்லை என்று எப்படி போக முடிந்தது…? தன் அப்பா  அன்னையை விளக்கியதுக்கு உண்டான காரணம் பவித்ரன் தன்னிடம் சொன்னதில் இருந்து, வேணியின் மனதில்  எழும் கேள்வி இது.
தன் கன்னத்தை பற்றி தன்னையே பார்த்திருக்கும் வேணியை,  புனிதாவும் அப்போது விழி விரிந்து தான் பார்த்துக் கொண்டு  இருந்தார். 
‘ நல்ல வேள  என் மகள் உருவத்தில்  என்னை போல் இல்லை. எனக்கு ஏற்பட்ட நிலை என் மகளுக்கு ஏற்படாது.’   ஆம் புனிதா நினைப்பது போல் வேணி அவள் அன்னையை கொண்டு பிறக்காது, நிறம் ஆகட்டும் உயரம் ஆகட்டு முகம் வடிவாகட்டும், ஏன் தலை முடியில் இருந்து அவள் தகப்பனை கொண்டு பிறந்திருந்தாள்.
யாரை மறக்க நினைத்தாரோ, யாரின் நினைவே தனக்கு  துன்பத்தை ஏற்படுத்துமோ, அவரின் பிரதிபலிப்பாய் தன் மகள் உருவில் தன் கண் முன் நடமாடும் போது  … அந்த நினைவை எப்படி மறக்க முடியும். ஒரு சிலரின் வாழ்வே நரக வேதனை தானோ…வேதனை தான் என்பது போல் தான் புனிதாவின் வாழ்வும்  அமைந்து விட்டது.  
தாய்,  மகள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒன்றும் பேசாது,  அப்படியே நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்த பவித்ரன் தான்…  “வேணி போய் தலைக்கு ஊத்திக்கோ… …” என்ற பேச்சில் தான் இருவரும்  எண்ணத்தில் இருந்து வெளி வந்தனர்.
 வேணி தன் நெற்றயில் ஒட்டி இருந்த  பொட்டை எடுத்து தன் அன்னையின் நெற்றியில் பதித்தவள்.  “ இது எப்போதும் உங்க நெத்தியில இருக்கனும். யாரு எடுக்கனுமோ அவங்க எடுக்கட்டும்.” என்று சொன்னவள்.
தன் தாத்தாவை பார்த்து …” முழுகிட்டு வந்துடுறேன் தாத்தா.” 
கிருஷ்ணவேணி தன்  பத்து வயது வரை “ அப்பா  எப்போ ஊரில் இருந்து வருவார்…?” தன் நான்கு  வயதில் தன் தந்தையை பார்த்த மங்கலான நினைவுகளில் அவள் கேட்டு இருக்கிறாள்.
சில சமயம் அந்த நினைவுகள் நிஜமா…?  இல்லை நாம் உறக்கத்தில் கண்ட கனவை நிஜம் என்று  நினைத்துக் கொண்டு இருக்கிறோமா…? இந்த சந்தேகம் தன் அப்பாவை பற்றி வீட்டில் கேட்டுக் கொண்டு இருந்தாலும்,  அவள் மனதில் இந்த சந்தேகமும் எழும்.
பின் கொஞ்சம் கொஞ்சமாய் தன் பிறப்புக்கு காரணமானவரை பற்றி அறிந்துக் கொண்டதில்,   அவரை பற்றிய பேச்சை வீட்டில் எடுப்பதை விட்டு விட்டாள். தந்தையை பற்றி அறிந்துக் கொண்டது பவித்ரன்  வாய் மூலம் தான். 
“ இனி அவரை பற்றி பேசாதே  வேணி.” பவித்ரன் யாரை பற்றி சொல்கிறான் என்று புரியாது.
“ யார கேட்க கூடாது…?” என்று  கிருஷ்ணவேணி கேட்டதுக்கு,
“ உன் பிறப்புக்கு காரணமானவரை பற்றி.”
முதலில் அந்த பத்து வயதில் இப்படி சுத்தி வளைத்து பவித்ரன்  சொன்னது புரியவில்லை. புரிந்ததும் “ அப்பாவையா…?” என்று சந்தேகத்துடன் கேட்டதும் …
“ அவர் உனக்கு மட்டும் அப்பா இல்ல . இன்னும் இரு பிள்ளைக்கு அப்பா. அதனால இனி அவர் உனக்கு அப்பாவாக மாட்டார்.அவர பத்தி கேட்காதே. அத்தை ரொம்ப அழுவுறாங்க. உனக்கு அவரை பத்தி ஏதாவது தெரியனுமுன்னா என் கிட்ட கேளு.”
பவித்ரன் சொன்னதை அந்த சின்ன வயதில் கிரகித்துக் கொள்ள முடியாது பவித்ரனையே பார்த்து நிற்க. அவள் தோள்  மீது கை போட்டவன், அப்பாவா என் அப்பா இருக்கிறார். தாத்தா இருக்கார். நான் இருக்கேன். உனக்கு இது போததா…?
பவித்ரன் கிருஷ்ணவேணியை விட பத்து மாதம் தான் பெரியவன். ஆனால்  அவன் பேச்சி, செயல் அனைத்தும் பத்து வருடம் பெரியவன் போல் தான் இருக்கும். பின்  வளர வளர கிருஷ்ணவேணிக்கும் என்ன என்று புரிய. மனதிலும் தன் தந்தை பற்றி நினைப்பதை நிறுத்தி விட்டாள். 
 இன்று வரை பவித்ரன்  சொன்ன படி தான் நடந்துக் கொள்கிறான்.  தந்தை ஸ்தானத்தில் மாமா சிவனேசன் மட்டும் அல்லாது,  அத்தை சுகுனாவும் சரி தாய் ஸ்தானத்தில் தான் கிருஷ்ணவேணிக்கு இன்று வரை இருந்து வருகின்றனர். கிருஷ்ணவேணியின்  பலமே பவித்ரன் தான்.
வேணி  தன் தாயின் அருகில் சென்றது அவள்  செய்த செயல். பின் தங்கள் தாத்தாவிடம் “ தலைமுழுகுறேன்.” அந்த ஒற்ற வார்த்தையில் யாருக்கு என்ன புரிந்ததோ பவித்ரனுக்கு  அவள் மனது தெள்ள தெளிவாக புரிந்து விட்டது.
“ யாரும் ஒன்றும் பேசாதிங்க.” வேணி குளிக்க சென்ற போது தன் குடும்பத்தினரை  பார்த்து சொன்னதோடு அந்த பேச்சு எழ வில்லை. ஆனால் நாரயணன் என்ன தான் தன் மகன் மருமகளை  விட்டு சென்று இருந்தாலும், நீ என் மகனே இல்லை . 
என்னை பொறுத்த வரை நீ இறந்து விட்டாய் என்று,  பதினெட்டு வருடம் முன் சொல்லி இருந்தாலுமே,தான் இருக்க தன் மகனுக்கு தலை முழுகுவது என்பது…
சோகத்திலேயே புத்திர சோகம் தான் பெரியது என்பர். அந்த சோகத்தை அனுபவ பூர்வமாய் உணர்ந்தார் அந்த பெரியவர்.   ஆனால் அதை வெளியிலும் காட்டிக் கொள்ளாது தன்னுள்அதை அடக்க தான் பெரும் பாடு பட்டார்.
பவித்ரன் தன்னை ;பார்க்கும் போது எல்லாம்.. ‘ கண்ணை துடைங்க தாத்தா. அவ பாக்க போறா…’ ஜாடையில்   சொல்ல. அந்த கண்ணீரையும் மறைக்கும் சூழல் அந்த பெரியவருக்கு. மகள் சுகுனாவுக்கும் அதே நிலை தான்.
தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே… அது போல் தான் தன் அண்ணன் இறந்து விட்டான். அதுவும் மற்றவர்களுக்கு தெரிவது போல் மீடியா மூலம் தான் அவர்களுக்கும் தெரிந்தது. 
வேலைக்கு சென்ற  கணவர் சீக்கிரம் வீடு வந்து  தன்னிடம், இதை சொல்லி விட்டு தன்னையே பார்த்திருக்க… அடுத்த தெருவில் யாராவது இறந்து விட்டால் கூட ‘அய்யோ பாவம்.’  என்று சொல்வார்களே…
அது போல் கூட  சொல்ல முடியாது தன்னை அடக்கியவராய்… “ அப்படியா…? அப்போ தலை முழுகிட்டு,  எல்லோரையும் முழுக சொல்றேன்.” தன் கணவரிடம் சொன்னது போலவே செய்து முடித்தார்.
இதற்க்கு தன் கணவன் மீதும் குற்றம் சொல்ல முடியாதே… தாய் தகப்பன் அற்ற தன்  ஒரே தங்கையின் வாழ்வை நாசமாக்கியவன் இறந்தால் துக்கம் கொண்டாட தோன்றுமா…? அதுவும் புனிதா  கேட்ட அந்த வார்த்தை… அப்போது நானும் தானே பக்கத்தில் இருந்தேன்.
சென்னை  சென்று வந்த அந்த நாளை மறக்க முடியுமா…?மகன் சென்னையில் வேலை என்று  சொன்ன போது, அனைவருக்கும் அந்த நாளின் நினைவில் பவித்ரனை வாழ்த்த கூட முடியவில்லையே… தன் அண்ணனுக்கு தான் ஒரு சொட்டு கண்ணீர் விட்டால் கூட அது புனிதாவுக்கு, வேணிக்கு தான் செய்யும் துரோகம். 
வரும் கண்ணீரை  வர விடாது தடுத்து,  அடுத்த வேலை பார்க்க ஆராம்பித்து விட்டார். அவ்வீட்டில் புனிதா வேணி மிக முக்கியம். வேணியின் மனதை அறிந்து தான் அனைவரும் பார்த்து பார்த்து நடப்பர். பவித்ரன் அனைவருக்கும் மேல் என்னை தான்டி தான்   அவளுக்கு தீங்கு வரும் என்பது போல், அவளுக்கு ஒரு அரணாய் இருப்பான். 
சந்திரசேகர் இறப்பில் கம்பத்தில் இந்த நிலை என்றால் சென்னையில்….
தன் கையில் உள்ள  உயிலை பிரித்து ஹாலில் உள்ள அனைவரையும் ஒரு பார்வை பார்த்த ராஜசேகர்.  இதை நாம் படித்து முடிக்கும் போது, அனைவரும் தன்னை கழுத்தை பிடித்து தள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்று அறிந்தும் தன் தொழில் தர்மமாய்…
 “ இது சந்திரசேகர் எழுதிய உயில் படிக்கட்டுமா…?” அனைவரையும் பொதுவாய் ஒரு பார்வை பார்த்து கேட்டார்.
“ இந்த உயில் எப்போ எழுதினது…?” கேள்வி கேட்டது உதயேந்தின்.
“ ஒரு வருடம் முன்.” என்று  சொல்லி விட்டு அடுத்து கேள்வி ஏதாவது இருக்கிறதா…? என்று  உயதயேந்திரனை பார்க்க, அவனோ … ‘ படிங்க’ சைகை செய்தான்.
உதயேந்திரன் ராஜசேகரிடம் எதுவும் கேட்கவில்லை என்றாலும்,  மனதில் கேள்வியின் அணிவகுப்புகள் ஒரு தொகுப்பாய் மனதில் எழுந்தது.
“ உயில் எழுத அவசியம் என்ன…? அதுவும் நாற்பத்தியெட்டு வயதில்…?  அதுவும் சரியாக அவர் மனவுளச்சலுக்கு சிகிச்சை ஆராம்பித்தும் ஒரு வருடம். உயில் எழுதிய பின் அவருக்கு மனவுளச்சல் வந்ததா…? மனவுளச்சல் வந்ததால் உயில் எழுதினாரா…?இப்படி ஏகப்பட்ட கேள்விகள் இருந்தாலும்,  ஒன்றும் கேளாது பாக்கெட்டில் கை விட்டு விரைப்பாகவே நின்றுக் கொண்டு இருந்தான். எது என்றாலும் நான் பார்த்துக் கொள்வேன் என்பது போல்.
சின்ன மகனின் இந்த நிமிர்வே பரமேஸ்வரருக்கு பலம் வந்தது போல் இருக்க…” படியும்…”  எப்போதும் போல் தன் கம்பீர குரலில் சொன்னார்.
ராஜசேகர் படித்த முதல் வரியே… “ தேனி மாவட்டம்,  கம்பத்து என்ற ஊரில் நாரயணன் காமட்சியின் மகனாகிய நான்…” என்ற அந்த வாசிப்பில் தான் உதயேந்திரனுக்கு மாமா ஊர் கம்பம் என்பதே தெரிய வந்தது.
அடுத்து  அவர் வாசித்த… “ என் மாமனார் பரமேஸ்வர்  கொடுத்த சொத்தை அப்படியே இருபாகமாய் பிரித்து… ஒன்று என் சின்ன மகன் கிரிஷ்க்கும், மற்றொன்று என்  மகள் கீர்த்திக்கும் சரி பாதியாக கொடுக்கிறேன்.
அடுத்து நான் இத்தனை வருடமாய் சுயமாய் சம்பாத்தித்த  சொத்து, ஷேர், அனைத்தும் என் முதல் மனைவியின் பெண். என் மூத்த பெண் கிருஷ்ணவேணிக்கு எழுதி  வைக்கிறேன். இரண்டாம் மனைவி ஜெய்சக்தியின் பிள்ளைகள் மைனர் என்பதால், ஜெய்சக்தியை கார்டியனாக நியமிக்கிறேன்.” படித்து முடித்த ராஜசேகர் அனைவரின் முகத்தையும் பயத்தோடு ஒரு பார்வை பார்த்தார்.
முதலில் சுயநினைவுக்கு வந்தது  ஜெய்சக்தியின் இரண்டாம் மகன் கிரிஷ் தான்… “ மா.மா என்ன சொல்றாங்க… இது யாரு யாருக்கு எழுதுன உயில்.  அங்கிள் இங்கு வந்து இதை தப்பா படிக்கிறார்.
“ உயில் தப்பு இல்ல.  அதை எழுதுனவரு தான் தப்பானவர்.” உதயேந்திரனின் வார்த்தையை  சட்டென்று புரிந்துக் கொண்ட அந்த பதினைந்து வயது சிறுவன்…
“ அப்பாவ சொல்றிங்கலா…? அப்போ அப்போக்கு ஏற்கனவே மேரஜ் ஆகி அத மறச்சிட்டாரா…?” அவனால் நம்ப முடியவில்லை. பாசமாக தன்னிடம் பழகும் அப்பா ஒரு பொய்யானவர் என்பதை.
“ மறச்சாரா…?இல்லையான்னு இவங்க தான் சொல்லனும். அங்கு கூடி இருந்தவரை பொதுவாக பார்த்து சொன்னவன்,  ராஜசேகரை பார்த்து… “ உங்க வேல முடிஞ்சா நீங்க கிளம்பலாம். நாங்க எங்க குடும்ப விசயமா பேச போறோம்.” 
அவர் நினைத்தது போல் கழுத்தை பிடித்து தள்ளி இருந்தாலோ, செருப்பைக் கொண்டு அடித்து இருந்தால் கூட அவருக்கு இந்த அளவுக்கு வலித்து இருக்காது போல் இருந்தது,  உதயேந்திரன் தன்னிடம் இப்படி பேசியது.
மனம் வலிக்க ராஜசேகர் பரமேஸ்வரரை பார்க்க…” அது தான்  என் மகன் சொல்லிட்டானே…இனி வெளியாட்களை ஒரு துளியும் நம்புவதாய் இல்லை.”
அவர் சொல்வது ஒருவகையில் உண்மை  தான். பரமேஸ்வரரின் சாம்ராஜ்ஜியம் மிக பெரியது. யாரை யார் எப்போது கவிழ்க்கலாம் என்பது போன்றான சூழ்நிலையில்,  யாரையும் நம்பாது அவர் எப்போது விழிப்போடு தான் இருப்பார்.
நம்பியது தன் மாப்பிள்ளை. மாப்பிள்ளை அழைத்து வந்த… “ இவன் என் நண்பன் நம்பகமானவன்.” என்ற  வார்த்தை கேட்டு காலம் காலமாய் இருந்து வந்த குடும்ப வக்கீலை மாற்றி , அந்த இடத்தில் ராஜசேகரை அமர வைத்தது. நம்பியதுக்கு நல்ல  கைய்மாறு இருவரும் செய்து விட்டனர்.
பெரியவரின் அந்த பேச்சில் தலை தொங்க போட்டு கொண்டு ராஜசேகர் வெளியேறியதும்,  பரமேஸ்வர்… “ என்ன கேட்கனுமோ கேள். ஆனா பசங்க உள்ளே அனுப்பிடு” கீர்த்தி, கிரிஷ் இருவரையும்  காட்டி சொன்னதும்,
“ இருக்கட்டும் அவங்களும் இருக்கட்டும். இது வரை தெரியாது இருந்ததே அதிகம். தெரியட்டும் அவங்க அப்பா அம்மாவை பத்தி.” அவர்களும் இருப்பார்கள் நீங்க சொல்லி தான் ஆக வேண்டும் என்பது போல் இருந்தது அவனின் பேச்சு.
அதற்க்கு ஏற்றார் போல்  இருவரும் இருப்பக்கம் வந்து நின்றுக் கொண்டு தன் மாமனின் கையை கெட்டியாக பற்றிக் கொண்டனர்.
“ம்…சொல்லுங்க.  அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது தெரிஞ்சி பெண் கொடுத்திங்கலா…? பெண் கொடுத்துட்டு தெரிஞ்சுதா…?” உதயேந்திரன்  சுற்றி வளைக்காது நேராக விசயத்துக்கு வந்து விட்டான்.
“  கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்குன்னு தெரிஞ்சி தான் உன் அக்கா அவரை விரும்பினார்.” அந்த வார்த்தை உதயேந்திரனுக்கு மட்டும் அதிர்ச்சியை ஏற்படுத்த வில்லை . பதினெழுவயது கீர்த்திக்கும்,  பதினைந்தே வயதான கிரிஷூக்கும் அப்போதைய நிலை அதிர்ச்சி என்ற ஒரு வார்த்தையில் அடக்கி விட முடியாது.

Advertisement