Advertisement

UD:13
சந்தியாவும் ரம்யாவும் அவளை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு இருக்க, மஹா உதட்டை பிதுக்கி முகத்தை பாவமாக வைத்து கொண்டு முன்தினம் நந்தனிடம் போட்ட கண்டிஷனுக்கான அவர்களின் பதிலுக்காக காத்து இருந்தாள்.
ஏன்டி…. இப்படி பார்க்குறீங்க? ஏதாச்சும் தப்பா பேசிடேனா…..? ” குழப்பத்தில் முகத்தை தொங்க போட்டு கொண்டு கேட்டவளை பார்த்து தோழிகளுக்கு இரக்கம் வர
சந்தியா, ” நீ வேலைக்கு போகணும்னு கேட்டது தப்பில்ல அதை நான் முழுமனசோடு ஒத்துக்குறேன்…. ஆனா மத்தது எல்லாம்​ ரொம்ப ஓவர் டி…. பாவம் அண்ணா…..தோழியின் செயலுக்கு  பாதி பாராட்டையும், பாதி வருத்தத்தையும் தெரிவத்தவளை ரம்யாவும் ஆமோதித்தாள்.
தோழிகள் நந்தனை பாவம் என்றதும் அவன் அளித்த முத்தமும், காரில் நடந்தவை, தன்னை தாங்கி பிடித்தது என்று அனைத்தும் நினைவிற்கு வர. அவனிடம் அப்பொழுது காட்ட முடியாத கோபத்தை தன் தோழிகளிடம் காட்டினாள்.
யாருடி பாவம்…. அவனா??? சரியான பிராடு டி…. அவனை பாவம்னு சொல்லி என்னை வில்லி ஆக்கிட்டீங்களே…. அவன் செய்ததை சொன்னா இப்படி எல்லாம் சொல்ல மாட்டீங்க……உணர்ச்சி வசப்பட்டு பேசி கொண்டு வந்தவள் அவனது செயலை பற்றி உளற வந்ததை உணர்ந்து சட்டென தன் பேச்சை நிறுத்தி கொண்டாள். 
அவளது தடுமாற்றத்தை உணர்ந்து தோழிகள் சந்தேக பார்வை வீச, ” என்னடி பார்க்குறீங்க? டைம் ஆச்சு சாப்பிடுங்க கிளாஸ் போகணும்….பேச்சை மாற்ற முயற்சி செய்ய அது தோழிகளிடம் தோல்வியை தழுவியது.
ஏதோ மறைக்குற மாதிரி இருக்கே…. என்ன விஷயம்னு சொல்லு இல்லாட்டி கொன்றுருவோம் டி உன்னை….என்று சந்தியா கேட்க,
ஆமா ஒழுங்கா சொல்லு….. குற்றம்…. நடந்தது என்ன….என்று ரம்யாவும் டைலாக் விட
உன்மையா எதுவும் இல்லடி… அவன் சண்டை போட்டது, அப்புறம் மில் ஷேக்கு காசு வேஸ்ட் ஆகுதுனு சொன்னதை தான் சொன்னேன். வேற எதுவும் காரணம் இல்ல…. நம்புங்கடி….இவள் காரணத்தை கேட்டு நம்பாத பார்வை பார்த்தவர்களை பார்த்து கெஞ்சினாள் மஹா.
தோழிகளே ஆயினும் தனக்கும் அவனுக்கும் நடுவில் உள்ள தனிமை ரகசியத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள ஏனோ மனதிற்க்கு ஒப்பாததால். அதை கூறாது மறைத்து விட்டாள். இந்த எண்ணம் எதனால் உருவானது என்பதை உணராமல் இருப்பவளை கண்டு விதி வாய் விட்டு பெரிதாக சிரித்ததையும் அவள் அறியவில்லை….
சரி நம்புறோம்….. ஆனா ஏன் இப்படி கண்டிஷன் போட்ட? ” தன் சந்தேகத்தை சந்தியா கேட்க,
நம்ம கிளாஸ் செல்வி நினைச்சு தான்….என்றவளை கேள்வியாக இருவரும் பார்க்க, மஹா தொடர்ந்தாள்,
அவளுக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வச்சு அவ எவ்வளவு கஷ்ட படுறா….. இன்னும் படிச்சே முடிக்கலை அதுக்குள்ள பிரெக்னெட்டா இருக்கா…. அவளுக்கு நிறைய ஆம்பிஷன்ஸ் இருக்குனு நமக்கு தான் நல்லா தெரியுமே…. ஆனா இப்ப எதுவும் பண்ண முடியாமல் வருத்தபடுறா…. அதான் நான் இந்த முடிவை எடுத்தேன்….உறுதியாக பேசியவளை பார்த்த என்ன கூறுவது என்று புரியாமல் இருவரும் விழிக்க. சந்தியா,
மஹா….. செல்வி கல்யாணம் பண்ணிகிட்டது படிக்காத ஒரு கிராமத்தானை. அதுவும் ஊருல ரௌடியா சுத்துற ஒருத்தருக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வச்சு இருக்காங்க. ஆனா நந்தன் அண்ணா அப்படி இல்ல. நீ சொல்லுறத வச்சு பார்த்த நீ எவ்வளவு சேட்டை பண்ணினாளும் அதை பொறுத்துகிட்டு இருக்காரு….. அண்ணாவை செல்வி கணவரோடு கம்பேர் பண்ணாதடி…..தோழிக்கு புரிய வைக்கும் பொருட்டு அவளுக்கு எடுத்து கூற. மஹாவோ அவளை முறைக்க,
சும்மா முறைக்காத…. உண்மையை சொல்லுறேன். புரிஞ்சுக்க முயற்சி பண்ணு…… ஒருவேலை எதிர் காலத்தில் உனக்கு அவர் குணம் பிடிச்சு காதல் வந்தால்…… முறைக்காத… ஒரு பேச்சுக்கு தான் சொல்லுறேன்….ஒரு வேலை காதல் வந்தால் உன்னோட இந்த வார்த்தைகளே உனக்கு பிரச்சனையாக வந்து நிக்கும்….நிதானமாக கூறிய சந்தியாவை பார்த்தவள்,
அது வரும் போது வரட்டும்….. இப்ப சாப்பிடு கிளாசுக்கு போலாம்….அலட்சியமாக பதில் உறைந்து விட்டு தன் உணவில் கவனம் செலுத்த. ஒரு பெருமூச்சுடன் சந்தியா ரம்யாவை பார்த்து மெல்லிய குரலில்
என்னடி இப்படி பேசுறா….என்க,
விடுடி…. அவளே சீக்கிரம் புரிஞ்சுப்பா….இப்ப நாம என்ன சொன்னாலும் அவள் காதில் விழாது…. அண்ணா நல்லா டைப்பா தான் தெரியுறாங்க  …. அவர் பார்த்துப்பார்……ரம்யா, சந்தியாவை சமாதானம் செய்ய, மூவரும் மதிய உணவை முடித்துவிட்டு தங்கள் கிளாஸை நோக்கி சென்றனர்.
யாரோ தன் பெயரை கிணற்றுக்குள் இருந்து அழைப்பது போல் உணர்ந்தாள் மஹா. நேரம் செல்ல செல்ல அந்த குரல் தனக்கு அருகில் உணர, சட்டென்று தன் மேல் பெரும் பாரத்தை வைத்தது போல் உணர்ந்தவள் மூச்சு விட சிரம படவும், பதறியடித்து எந்திரிந்தவள், தன்னை சுற்றி பார்க்க தன் படுக்கையின் ஓரத்தில் ரம்யா சுருண்டு கிடந்தாள். 
நீ தான் என்னை கொல்ல பார்த்தியா…? பாவி உனக்கு சாப்பிட விதவிதமாக வாங்கி குடுத்த என்னையவே கொல்ல பார்த்து இருக்க…. நன்றியே இல்லடி உனக்கு…..வீர வசனம் பேசிய மஹாவை கண்டு கடுப்பான ரம்யா. 
அவள் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்து, ” யாரு யாரடி கொல்லுறாங்க? நீ தான் எங்க ரெண்டு பேரையும் கொல்லற…..என்று சீற
அப்பொழுது தான் அவள் சந்தியாவை திரும்பி பார்க்க, அவளோ இடுப்பில் கை வைத்து மஹாவை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ ஏடா குடாமாக தாம் செய்து இருக்கிறோம் என்று புரிந்து இருவரையும் பார்த்து இளித்து வைக்க… 
அதில் இன்னும் கடுப்பான இருவரும் அவளை அடிக்க வர, ” ஐயோ… விட்டுருங்கடி….. இந்த குழந்தை அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழையை மன்னித்து விடுங்கடி…..என்றவளை பார்த்து இருவரும் தங்கள் நெற்றியில் அறைந்து கொண்டனர்,
எவ்வளவு நேரம் டி எழுப்புறது? இப்படியா தூங்குவ? அம்மா 3 டைம் கால்(call) பண்ணிட்டாங்க……சந்தியா சலிப்புடன் கூற
சாரிடி…. அந்த காண்டாமிருகம் பேசியதை யோசிச்சுட்டு இருந்ததுல ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு தான் தூங்க போனேன் அதான் எந்திரிக்க முடியல…. ஆமா அம்மா எதுக்கு கால் (call) பண்ணி இருந்தாங்களாம்? ஏதாச்சும் சொன்னாங்களா?” பேசிய வாரே தன் ஃபோனை தேட
எல்லாரும் இப்ப ஹாஸ்டல் வந்துட்டு இருக்காங்களாம்…. உன்னை சீக்கிரம் ரெடியாக ஆக சொன்னாங்க…. வெளி..சந்தியா கூறி முடிக்கும் முன் மஹா இடைபுகுந்து,
ஐ…. செம்ம டி…. நேத்து கூட பேசுனேன் ஹாஸ்டல் வருவதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லல….என்று பேசி கொண்டே போனவளை நிறுத்திய சந்தியா, ” உனக்கு நிச்சயதார்த்த மோதிரம் வாங்க வராங்களாம்…. உன்னை ரெடியாகி இருக்க சொன்னாங்க….நிதானமாக சொல்லிய தன் தோழியை சட்டென்ன மாறிய சோகமான முகத்துடன் பார்த்து வைத்தாள் மஹா.
போ….. போய் ரெடியாயிட்டு வா….“என அவளை அடுத்து யோசிக்க விடாமல் துரிதப்படுத்தி கிளம்ப செய்தனர் தோழிகள் இருவரும்.
அடுத்த அரைமணி நேரத்தில் மஹாவின் குடும்பம் ஹாஸ்டல் வந்துவிட, அவர்களுடன் பயணமானாள் மஹா. முகத்தில் எதுவும் காட்டவில்லை என்றாலும் அவளது சிரிப்பில் ஜீவன் இல்லை என்பதை உணர்ந்தே இருந்தனர் அவர்களது தோழிகள். 
அவர்கள் சென்றதும் சந்தியா, ” ஏன்டி இவ இப்படி இருக்கா….? என்ன தான் பிரச்சனையோ…. அந்த அண்ணா அடுத்த நாளே வந்து இவ இஷ்டப்படி ஓகே சொல்லிட்டாரு…. அப்புறம் ஏன் இன்னும் தெளிவில்லாமல் இருக்கா…. ?” உண்மையான  வருத்தத்துடன் கேட்க,
எல்லாம் புரிஞ்சுப்பா டி….. எனக்கு அந்த அண்ணா மேல முழு நம்பிக்கை இருக்கு….உறுதியுடன் கூறிய தோழியை பார்த்து சினேகமாக புன்னகைத்தாள் சந்தியா…
ஆம் அவர்கள் ஹோட்டலில் சந்தித்து பேசிய அடுத்த நாள் மாலை மஹாவின் காலேஜின் முன் விஜயம் ஆனான் நந்தன். கண்ணில் கூளர்ஸும், கிரே ஷர்ட் பிளாக் பேண்ட்டும் அணிந்து, காரின் மேல் சாயிந்து நின்று, ஒரு கையை காரின் கண்ணாடியின் மேலும், மற்றோரு கையை பேண்ட்டு பாக்கேட்டிலும் விட்டு, ஒரு காலை பக்கவாட்டில் மடித்து ஸ்டைலாக நின்றிருக்க, காலேஜ் முடிந்து வெளியே சென்று கொண்டு இருந்த அனைத்து பெண்களின் கண்களும் அவனையே மோய்த்தது என்றால் ஆண்கள் அனைவரும் அவனது ஆளுமையை கண்டு வியந்தனர்.
சந்தியாவுடன் கல்லூரியில் இருந்து வண்டியில் வெளியே வந்து கொண்டு இருந்த மஹா, அவனை கண்டு தடுமாற, ” ஏய்…. என்ன ஆச்சு…. ஏன் இப்படி ஓட்டுற? இப்ப எதுக்கு வண்டிய நிறுத்துன?” பதட்டத்துடன் கேட்க
அவளிடம் பதில் அற்று போக, அவள் பார்வையை உணர்ந்து, அந்த திசையில் இவளும் பார்க்க. சந்தியாவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அவர் தான் நந்தா அண்ணாவா என்று வினவியதற்கு ஆம் என்று அவள் தலை தானாக அசைந்தது. ஆனால் பார்வையை மட்டும் அவள் விளக்கி கொள்ளவில்லை….
சரி நீ போய் பேசிட்டு வா…. நான் வெயிட் பண்ணுறேன்….வண்டியை விட்டு இறங்கி அவளை பேச அனுப்பி விட்டு சற்று தள்ளி நின்றுக் கொண்டாள் சந்தியா.
மெல்ல நந்தனிடம் சென்றவள் எதும் பேசாது அமைதியாக நிற்க…. அவளையே கண்ணிமைக்காமல் காதல் பொங்க பார்த்து இருந்தவனை அவள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை, காரணம் அவன் அணிந்து இருந்த கூளர்ஸால். 
அனைவரும் அவனையே பார்க்கும் விதத்தில் மஹாவிருக்கு சுர்ரென கோபம் வரவும், “எதுக்கு இப்படி நின்னு ஷோ காட்டிட்டு இருக்க….கடுப்புடன் கூற, அவள் கோபத்தின் காரணத்தை உணர்ந்து சிறு புன்கையை சிந்தியவன்.
கொஞ்சம் பேசணும்….. கார்ல ஏறு….என்றுவிட்டு காரில் அவன் ஏற போகும் சமயம்,
இல்ல வேண்டாம் எதுவா இருந்தாலும் இங்கேயே பேசுங்க…. நேத்து மாதிரி லேட் ஆச்சுன்னா நான் தான் கஷ்ட படணும்….அவசரமாக வந்தது அவளுது  மறுப்பு,
அதான் பல நாள் டிரைனிங் இருக்கே சுவர் ஏறி குதிக்குறது…. அப்புறம் என்ன….நக்கலுடன் கூறி புருவம் உயர்த்தி கேட்டவனை முடிந்த மட்டும் முறைத்தவள்,
பக்கத்துல ஒரு கோவில் இருக்கு அங்க போகலாம்…. பட் பத்து நிமிஷம் தான்…..ஆள் காட்டி விரலை நீட்டி கட்டளை இட்டவளை ஆசையாக பார்த்து வைத்தான்…..
அவளது கட்டளைக்கு இணங்கி சரி என ஒப்புக் கொண்டவன். காரில் ஏற போக, அவனை தடுத்து நிறுத்தியவள், தான் சந்தியாவுடன் கோவிலுக்கு வந்து விடுவதாக சொல்ல. ஏன் என்று கேட்டவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவள், பின் யோசனை வர. காலேஜில் யாராவது பார்த்து விட்டால் தனக்கு பிரச்சினை என்று கூறி சமாளித்தவள் சற்றும் தாமதிக்காமல் அவனிடம் இருந்து தப்பித்து தோழியிடம் சென்று விஷயத்தை கூற. இருவரும் கோவில் நோக்கி பயணமாயினர். 
கொசுக்குட்டி எத்தனை நாளுக்கு என் கிட்ட இருந்து தப்பிக்குறேனு நானும் பார்க்குறேன்….முன்தினம் காரில் நிகழ்ந்ததை வைத்து தான் இப்பொழுது காரில் வர மறுத்து தன்னிடம் இருந்து தப்பித்து செல்லகிறாள் என்று புரிந்து மனதிற்குள் சிரிக்கலானான். 
காரில் அவர்களை பின் தொடர்ந்து செல்ல, சிறிது தூரத்தில் ஒரு கோவில் வரவும், மூவர் கோவிலினுள் சென்று கடவுளை தரிசனம் செய்துவிட்டு அங்கு இருந்த படிகளில் நந்தனும், மஹாவும் அமர. சந்தியா அவர்களுக்கு தனிமை அளித்து கோவிலில் உள்ள குளத்தை வேடிக்கை பார்க்க சென்றாள். 
என்ன பேசணும்னு சொன்னீங்க? சீக்கிரம் சொல்லுங்க…. டைம் ஆச்சு….தனிமையில் அவனுடன் இருக்கும் பொழுது தான் பலவீனமாவதை உணர்ந்து இந்த தனிமையை தவிர்க்க அவனை அவரசப் படுத்தினாள்.
பெரு மூச்சொன்றை விட்டவன்,” நீ வேலைக்கு போறது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை…. அதே மாதிரி நீ நம்ம கம்பெனிக்கு வந்தா நல்லா இருக்கும்…. இரு நான் பேசி முடிச்சுடுறேன்…நடுவில் பேச வந்தவளை தடுத்து மேலே தொடர்ந்தான்.
நீ, நம்ம கம்பெனிக்கு தான் வேலைக்கு வரணும்னு சொல்லலை. வந்தா நல்லா இருக்கும்னு தான் சொன்னேன். அதுக்கு மேல உன் இஷ்டம்…. அடுத்து உன்ன டச்சு பண்ண கூடாதுனு சொன்ன….பாதியில் நிறுத்தி அவள் முகம் பார்க்க, உதட்டை கடித்து தன் உணர்வை வெளி காட்டாமல் இருக்க தலை கவிழ்ந்து கொண்டாள்.
உன்னை நான் அறிவேன் என்பது போல் தனக்குள் சிரித்துக்  கொண்டவன், வெளியே முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு, “உன் கண்டிஷனை நான் அக்ஸேப்ட்டு பண்ணுறேன். ஆனா உனக்கும் அதே கண்டிஷன் உண்டு….அவன் சொல்லி முடிக்கும் முன் அவள்சரி நானும் அஃஸேப்ட் பண்ணுறேன்….என்றவளை அவன்  கூர்ந்து பார்க்கவும்
அதில் தன் படபடப்பை மறைத்து அமைதியானவளை பார்த்து கேலி சிரிப்பை உதிர்த்துவன், “சரி நீ போலாம்….என்க,
அவன் சொன்னதும் வேகமாக தன் தோழியை அழைத்து கொண்டு இல்லை இல்லை இழுத்துக் கொண்டு சென்றிருந்தாள். 
சுற்று புறத்தை மறந்து தன் நினைவில் நடந்ததை நினைத்து பார்த்துக்கொண்டிருந்தவள், அப்பொழுதுதான் கார் ஒரு பெரிய நகை கடையின் வாயிலில் இருப்பதை உணர்ந்து காரை விட்டு இறங்க. இவர்களுக்கு முன்பாகவே வந்த இருந்த நந்தா  குடும்பத்தினர்  இவர்களை வரவேற்றது. பின் அனைவரும் கடையினுள் சென்று மோதிரம் இருக்கும் பகுதிக்கு சென்றனர் பேசியபடி.

Advertisement