Advertisement

அனைவரையும் வரவேற்று நலம் விசாரித்த நந்தன் மறந்தும் மஹாவின் புறம் திரும்பவும் இல்லை ஏரேடுத்து பார்க்கவும் இல்லை. அதில் ஏனோ அவளது மனமும் முகமும் சுருங்க, அதை வெளிக்காட்டாமல் இருக்க பெரும்பாடு பட வேண்டியதாகி போயிற்று…
அந்த கடையில் காட்டிய எந்த மோதிரமும் அவளுக்கு பிடிக்கமால் போக, வேறு கடைக்கு செல்ல, அங்கும் இதே தொடர மேலும் இரண்டு கடைக்கு சென்றனர். அவளுக்கு பிடிக்காததால் அடுத்து எங்கு செல்வது என்று அனைவரும் பேசிக் கொண்டு இருக்க…..
மற்றவர்களை விட்டு சிறிது விலகி நின்று அங்கு வரிசையாக அடுக்கி வைக்க பட்டு இருந்த ஆரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை முறைத்து பார்த்தபடி நின்று இருந்தான் நந்தன்.
அந்நேரம் அவனது ஃபோனிற்கு அழைப்பு வர, அதை ஆன் செய்து பேசிய வாரே பெரியவர்களை விட்டு விலகி வந்தவன், யாரும் பார்க்காத வண்ணம் மஹாவின் அருகில் சென்றான் .
தன் அருகில் யாரோ இருப்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்க அங்கு நந்தன் அவளை உக்கிரப் பார்வை பார்த்துபடி நிற்பதை கண்டு ஒரு நொடி   அதிர்ந்தவள்,பின் சுதாரித்து ஓர் அலட்சிய பார்வையோடு, தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
இவனுக்கு வேற வேளையே இருக்காதா…. எப்ப பாரு ஜின்ஜர் ஈட்டிங் மங்கி மாதிரி மூஞ்சை வச்சுகிட்டு சுத்துரான்…. காண்டாமிருகம்….மனதில் அவனை கொஞ்சிக் கொண்டு இருந்தவளை நந்தனின் குரல் தடை செய்தது. 
என்னடி திமிரா…? ” என பல்லை கடித்தப்படி மெல்லிதாக தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அடிக்குரலில் சீற.
அவனது கேள்வியில் புரியாது விழித்தவளை பார்த்த நந்தனுக்கு , சட்டென கோபம் மறைந்து திரு திருவென விழிக்கும் அந்த காந்த விழியின் மேல் தன் இதழ் பதிக்க துடித்தது நந்தனின் இதழ்கள்.
என்னதான் இருக்கோ இவ கண்ணுல….. பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கே… அடியேய்….. கொசுக்குட்டி என்னைக்கு என் கைக்கு நீ சிக்குறியோ அப்ப இருக்குடி இந்த இரண்டு முட்டை கண்ணுக்கும்என மனதிற்குள் அவளுடன் சூளுரைத்தவன்,  சிரமப் பட்டு தன் பின்னங்கழுத்தை வலது கையால் கொதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். 
அவனது செயலை பார்த்துக் கொண்டு இருந்தவள், ” லூசா டா நீ….என்று முணுமுணுக்க,
அவளது கேள்வியிலும், ‘டாஎன்ற விழிப்பிலும் மறைந்த கோபம் மீண்டும் எழ, “யார பார்த்துடி லூசுனு சொன்ன…. திமிர் உடம்பு பூரா திமிர்…. என்னடி வேணும்னே எதுவும் பிடிக்கலைனு சொல்லி கடை கடையா அலைய  விட்டுட்டு இருக்கியா….. ஒழுங்கா அடுத்த கடைல நான் சொல்லுறதுக்கு சரினு சொல்லுற இல்ல…என பல்லை கடித்தவனை பார்த்து,
இல்லைனா என்ன டா பண்ணுவ….?” என்று அவளும் எகிர,
வேண்டாம்டி என்னை கோவபடுத்தி பார்த்தேனா சேதாரம் உனக்கு தான்….. ஒழுங்கா இருந்துக்கோ……” 
முடியாது டா காண்டாமிருகம்….. நான் இப்படி தான் பண்ணுவேன்… வேணும்னே பிடிக்கலைனு சொல்லுவேன்…. என்ன டா பண்ணுவ…?” என்று அவனுக்கு நிகராக சண்டைக்கு சிலிர்த்துக் கொண்டு நின்றாள்.
அவளது பதிலில் கோபம் தலைக்கேற அவளை அடக்கி ஆகா வேண்டும் என பரபரத்தவன், அவளை உற்று நோக்கியபடி நின்றவனின் விழியில் மஹாவின் பின் புறத்தில் இருந்தது தென்பட, அது அவனது கோப நிலை அனைத்தையும் மறக்கடிக்க செய்து அவன் யோசனையில் தோன்றியதை   செயல் படுத்த எண்ணினான்.
மஹாவையும், பெரியவர்களையும் ஓர் பார்வை பார்த்தவன் அனைவரும் கவனிக்கும் முன்பு சட்டென்று அவளின் கை பிடித்து இழுத்துக் சென்று அருகில் இருந்த லிப்டினுல் நுழைந்தான்.
அவர்கள் உள்ளே நுழையவும் கதவு சாற்றிக் கொள்ளவும் சரியாக இருக்க. அவனது இந்த செயலை சற்றும் எதிர்ப்பார்க்காத மஹா அதிர்ச்சியில் உறைந்த அந்த ஒரு நொடியை பயன் படுத்தி அவளை லிஃப்டின் பக்கவாட்டு சுவர் மேல் சாய்த்தவன், அவளது இரு பக்கமும் அணைவாக தன் இரு கைகளையும் வைக்க, அவளை உரசி விடும் அளவு நெருக்கி நின்று, தன் மூச்சு காற்றையும் அவளது மூச்சு காற்றையும் ஒன்றாக கலக்க விட்டான் நந்தன். 
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று உணரும் முன் அவனது அடுத்தடுத்த செயல்களில் அதிர்ந்தவள், தன்னை தீண்டி விடும் அருகில் நிர்பவனை கண்டு இமைகள் படபடக்க, அவனை திட்ட வாய் திறக்கும் முன் அவனது அடுத்த செயல் இருந்தது.
அவள் சுதாரிக்கும் முன் அவளது இதழை தன் இதழால் மென்மையாக ஒற்றி எடுத்திருந்தான் அந்த கள்வன். அவனது இச்செயலை சற்றும் எதிர்பார்க்காத மஹா அவனை தடுத்து தள்ளி விடும் முன் நந்தனே விலகி கொள்ள லிப்டின் கதவும் திறந்துக் கொண்டது.
எதுவும் நடவாது போல் லிப்டை விட்டு நந்தன் வெளி சென்றவிட, மஹா தான் அதிர்ச்சியில் சிலையென நின்றாள். அவன் சண்டையிடுவான் அல்லது தன் செயலுக்கு திட்டுவான் என்று நினைத்தவளுக்கு,  இப்படியொரு தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காதவள் மூச்சு விட மறந்து அவன் விட்டு சென்ற நிலையிலேயே நின்றிருந்தாள். 
லிஃப்ட் மீண்டும் மூன்றாம் தளத்தில் வந்து நிக்க, வாயிலில் நின்று இருந்த மொத்த குடும்பமும் இவள் நின்று இருப்பதைப்​பார்த்து குழம்பி போயினர். அப்பொழுது வசுந்தரா,
ஏய்… மஹா….யாரு கிட்டையும் சொல்லாம எங்க போனா? மாப்பிள்ளை எங்க? ” அவளை காணவில்லை என்று அந்த 20 விநாடிக்குள்   அனைவரும் பதரி போயிருக்க, லிஃப்டினுள் இருந்தவளை கண்டு நிம்மதி பெருமூச்சொன்றை வெளியிட்டனர் குடும்பம் மொத்தமும். 
பத்மாநந்தன், நந்தனை காணாமல் அவனது அலைபேசிக்கு அழைக்க, அவன் கீழ் தளத்தில் உள்ளதாக கூற சற்று ஆசுவாசமாயினர்.
இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளி வராதவளின் தோளில் வசுந்துரா தட்டியதும், சிறு நிமிடங்களுக்கு முன்பு நடந்தது அவள் நினைவில் வர அவசரமாக  வாயை தன் இரு கரம் கொண்டு பொத்தியப் படி திருதிருவென அனைவரையும் பார்த்து விழித்தாள். 
அவளது பாவனையையும், பார்வையையும் கண்டு அனைவரும் குழம்பி என்னவென்று விசாரிக்க தன் நிலை உணர்ந்து ஒன்றும் இல்லையென கூறி சமாளிப்பதர்க்குள் மயக்கம் வரும் நிலைக்கு சென்று விட்டாள் மஹா.  
பின் அனைவரும் முதல் தளத்திற்கு செல்ல, மனதிற்குள் அவனை முடிந்த மட்டும் திட்டிக் கொண்டே வந்தவளின் விழி வட்டத்தில்,  நந்தன் ஒரு கையை பாண்ட் பாக்கெட்டிலும், இடது கையால் தன் பின்னந்தலையை கோதியபடி தன்னை பார்த்தும் பார்க்காதது போல் ஒரு பாவனையில் ,அந்த கடையின் சிப்பந்தியிடம் பேசிக் கொண்டு இருந்தவனை கண்டு உள்ளுக்குள் எரிமலையாக குமறியது….
‘எவ்வளவு திமிர் இருந்தா முத்தா குடுத்து இருப்பான். இப்படி பண்ண கூடாதுன்னு சொல்லியும் பண்ணி இருக்கான்…. இவனை…. டேய்…. உன்னை சும்மா விட மாட்டேன் டா ஜின்ஜர் ஈட்டிங் மங்கி….மனதில் திட்டிக் கொண்டு இருந்தவள் ஒரு முடிவோட தன் தாயிடம் அனுமதி வாங்கி, அவனை நோக்கி சென்றாள் வீர நடையிட்டு.
 தன்னை நோக்கி வருபவளை ஓர விழியால் கவனித்தவன், தன்னுடன் பேசிக் கொண்டு இருந்த கடை சிப்பந்தியிடம் விடை பெற்று அவசரமாக கடையை விட்டு வெளியேறினான். அவன் கட்டிடத்தின் பார்க்கிங் ஏரியாவிற்கு  செல்வதை பார்த்து ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தவள்,
டேய்… காண்டாமிருகம்… நில்லுடா….கத்திக் கொண்டே அவன் பின் ஓடினாள்.
அவள் அழைத்தற்கு நிற்காமல்  அலைபேசியை எடுத்து தன் தந்தைக்கு அழைத்தவன் தான் பார்க்கிங் ஏரியாவில் இருப்பதாகவும், அனைத்திற்கும் ஃபில் பே செய்து விட்டு தன்னை அழைக்குமாறு கூறியவன், மஹா தன்னுடன் இருப்பதாக கூறி அழைப்பை துண்டித்தான். 
அந்நேரம் மஹா அவனது கையை பிடித்து நிறுத்த என்னவென்று அவளை கேள்வியாக நோக்கினான் நந்தன்.
என்னடா சீன் போடுறியா? நான் கூப்பிடுறேன் நீ பாட்டுக்கு நிக்காம போய்ட்டே இருக்க…..”  ஓடி வந்ததினால் மூச்சு வாங்க , இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு ஒரு முறைப்புடன் கேள்வி கேட்டவளை நிதானமாக பார்த்தான்.
அவனது இந்த நிதானம் மஹாவை தன் நிலையை இழக்க செய்தது.
என்னடா லுக்கு…. கண்ணு ரெண்டையும் நோண்டிருவேன் தடியா…..கண்கள் இரண்டையும் உருட்டி 5அடி உயரத்தில் இருந்தவள் அவனது ஆறடி உயரத்திற்கு எம்பி ஆள் காட்டி விரலை நீட்டி மிரட்ட,
அடிங்கு….. பஜாரி…. கை நிட்ட வேண்டாம்னு நினைச்சா ஓவரா போர…. உனக்கு எல்லாம் நாலு போட்டா தான் சரி வரும்….அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு வரவும், அவன் கைக்கு சிக்க கூடாது என்று இரண்டடி பின்னோடு நகர்ந்து கொண்டாள்
இன்னொரு முறை மரியாதை இல்லாமல் பேசு அப்புறம் அடி வெளுத்துறுவேன்…. கொசுக்குட்டி….என்று மிரட்ட, நான் அசைவேனா என்பது போல் அவனை உறுத்து பார்த்தாள் மஹா.
அவளது பார்வையை அவனும் சளைக்காமல்  எதிர் கொள்ள.இருவரும் ஒருவர் விழியினுள் மற்றோருவர் உணர்வுகளை தேட முற்பட்டனறோ என்னவோ… அப்பொழுது பார்க்கிங்க்கு வந்த வேறு ஒரு வாகனத்தின் ஹாரன் ஒளியில் கலைத்தனர் இருவரும். 
தன்னை எதற்கு பின் தொடர்ந்து வந்தாள் என்று தெரிந்தும் அவள் அதற்காக இன்னும் தன்னிடம்  சண்டை பிடிக்கவில்லையே என யோசித்தக் கொண்டு இருக்க,அச்சமயம் தாம் அவனை பின் தொடர்ந்து வந்த நோக்கம் நினைவிற்கு வர, கோபமாக அவன் புறம் திரும்ப.
அதை கவனித்தவனோ மனதில், ‘ஆஹா… கொசுக்குட்டிக்கு நியாபகம் வந்துருச்சு போல…. ஆரம்பிடி ராசாத்தி…’ 
உன் கிட்ட என்ன டா சொன்னேன்…..கோபத்தில் முகம் சிவக்க அவள் கேட்கவும், அவனோ
என்ன சொன்ன….???” கூலாக பாண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்து எதிர் கேட்டவனை கொலவெறியில் பார்த்தவள்,
சும்மா சைட் அடிக்குறதே வேலையா போச்சு இவளுக்கு…. கொஞ்சம் ஹான்சம்மா இருந்திர கூடாது பார்வையிலே சாப்பிட்டுறுவா….அவளுக்கு கேட்கும் வண்ணம் சற்று சத்தமாகவே முணுமுணுத்தான் சீண்டும் பொருட்டு… 
சிறிது நேரத்திற்கு முன்பு அவன் செய்த செயலில் கோபத்தில் இருந்தவள் இப்பொழுது அவனது இந்த பேச்சில் மேலும் அவளது கோபத்திற்கு தூபம் போட சண்டைக்கு முழு வீச்சில் தயார் ஆனாள்.
அன்னைக்கு கோவில்ல என்ன சொன்ன…. இன்னைக்கு இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன பண்ணின…. அன்னைக்கு பெருசா வீர வசனம் பேசுன… இன்னைக்கு எங்க போச்சு அந்த வசனம் எல்லாம்….கோபத்தில் அவள் எகிற,
நிதானமாக இரு கைகளையும் நெஞ்சிற்க்கு  குறுக்கே கட்டிக்கொண்டு அவளை ஆழ்ந்து பார்த்து, ” கடையில் வச்சு நீ நடந்துக் கிட்ட விததிற்கும், பேசுன பேச்சுக்கும் கிடைச்ச தண்டை தான் அது….தொடர்ந்து,
அப்புறம் என்ன சொன்ன வீர வசனமா??? அத நான் மறக்கலை மேடம்….என்றவனை கேள்வியாக பார்த்தவளின் பார்வையில் அவனது செயலுக்கான விளக்கத்தை கேட்கும் தோரணையை புரிந்து  கொண்டவன்
என்ன பார்க்குற? நான் உன்னை தொட மாட்டேன்னு சொன்னேன் அதே போல நான் உன்னை  நேரடியா எதுவும் தொடலை…. நல்லா யோசிச்சு பாரு…என்று பாதியில் நிறுத்த, முழுவதுமாக குழம்பி போனாள் மஹா….
இல்லையே…. அவன் முத்தா குடுத்தானே… ஒரு வேலை கனவு கண்டோமோ….என யோசித்தபடி தன் ஷாலின் நுனியை திருகியவாறே நின்றவளின் கண்கள் அகல  விரிந்தது. அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளது கண்கள் புரிந்த பாவனையில் அவளுக்கு புரிந்து விட்டது என்று அவன் புரிந்துக் கொண்டான்….. 
கண்டிஷன் தொடரும் …….

Advertisement