Advertisement

UD:9
மங்கிய இருட்டில் மிதமான பாடல் ஒலிக்க ,பூவின் நறுமணம் சுழ்ந்து இருந்த அந்த ரம்மியமான இடத்திற்குசற்றும் பொருந்தாமல் திருத்திருவென முழித்த வாரே தன் விரல் நகத்தை கடித்து படி இருந்தாள் மஹா…..  
ஹே….. எல்லாரும் ஒரு மாதிரி பார்க்குறாங்க டி….. ஏன்டி இப்படி பண்ணுற?? அட்லீஸ்ட் சாப்பிடுறத்துக்கு ஏதோச்சும் வாங்கி குடு டி….. வந்து அரைமணி நேரம் ஆச்சு…, ” என ரம்யா கெஞ்சிக் கொண்டு இருந்தாள்……
கொஞ்சம் பேசாம இருக்கியா….. எப்ப பாரு சாப்பிடுறதுல மட்டும் கவனமா இரு. நான் இங்க பயந்துட்டு இருக்கேன் அத பத்தி கவலை இல்ல….” எப்படி பேச போகிறோம் என்று படபடப்புடன் இருந்தவள் ரம்யாவிடம் தன் எரிச்சலை காட்டினாள் மஹா…..
சரிதான் போடி….. நான் கிளம்புறேன்……” எழ போனவளின் கையை பிடித்து தடுத்த மஹா, ” ஹே..,.. போகாத டி பிளீஸ் எனக்கு ஒரு மாதிரி டென்ஷனா இருக்கு தனியா பேச. போகாத டிசாப்பிட வாங்கி தரேன்…..ப்ளீஸ்…” என்று கெஞ்சியவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தாள் ரம்யா.
இன்னைக்கு காலைல தனியா அவரு ஆஃபீஸ்க்கு போய் பேச தெரிஞ்ச உனக்கு, இங்க பப்ளிக்கா பேச டென்ஷனா …? இத நான் நம்பணும்  ம்ம்ம்…. போடிஇஇ….. நீ பேசிட்டு வா…. நான் போய் ரெபரன்ஸ் புக் வாங்கிட்டு கால்(call) பண்ணுறேன்…..” என்று கூறிக் கொண்டே அவ்விடத்தை விட்டு சென்றவளின் பின்னோடு மஹாவின் அழைப்பும் பின்தொடர்ந்தது.
ரம்யா சென்றதும் தனியாக இருந்தவளுக்கு ஏனோ பயமும் பதற்றமும் மனதில் கூடிக்கொண்டே போனது. அவன் வந்தால்  என்ன சொல்ல வேண்டும் எப்படி சொல்ல வேண்டும் என்று கல்லூரியில் இருந்தே மனதில் நூறாவது முறையாக சொல்லி பார்த்துக் கொண்டு  இருந்தாள்….
……………………..
சில நொடிகள் நீடித்த அவனின் இதழொற்றல், மெல்ல அவனது இதழ் அவளது பட்டு இதழை விட்டு பிரிந்தது மனமே இல்லாது. மேலும் தனது முத்த சஞ்சரத்தை நீடிக்க தூண்டிய மனதை கடினப் பட்டு அதை அடக்கியவன் அவளை விட்டு பிரிந்து நின்றான் சலனமற்ற முகத்துடன்...  
அவன் காலை ஒரு பக்கமாக திருப்பவும் அதில் ஏற்பட்ட வலியை விட திருப்பியதால் வந்த ஓசையில் மிரண்டு அந்த கட்டிடமே அதிரும் நிலைக்கு கத்தினாள் மஹா….. அடுத்த சில நொடிகளில் தன் இதழை சிறை செய்தவனை மிக அருகில் அதுவும் அந்த முத்தத்தில்  லயத்திருந்தவன் போல விழி முடியிருந்தவனை பார்த்து மேலும் தன் விழிகளை விரித்தாள் அதிர்ந்து. ….
அவனை எதிர்க்க தோன்றாது முதலில் விழிவிரித்துப் பார்த்தவள் பின்பு கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் அவனது பின்பம் தன்னுள் வராமல் இருக்க எண்ணி மூடினாளோ என்னவோ…. மடியில் இருந்த கைப்பையை இறுக பற்றியபடி அவனது இதழொற்றலை தடை இன்றி பெற்றுக் கொண்டாள்….ஏனோ தடுக்க தோன்றவில்லை அவளது முளைக்கும்,மனதிற்கும்….. 
அதற்கு காரணத்தை தேடினால் முதலில் அவன்பால் உன்னாடன ஈர்ப்பும், பின் தனக்காக தந்தை பார்த்த மாப்பிள்ளை என்ற உணர்வா என்று அவள் அறியாள்….
அவன் அவளை விட்டு பிரிந்தும் மஹா அதே நிலையில் இருக்க , அவளை தலை நிமிர்ந்து பார்த்தவனுக்கு மீண்டும் அந்த இதழை சிறை செய்ய தோன்றியது அவன் மனதிற்கு….. மேலும் மஹாவினால்  தன் உணர்ச்சிகள் தூண்டப்படுவதை உணர்ந்தான் நந்தன்.
ஆசை கொண்ட மனதை அடக்கும் வழியறியாமல் தன் நெஞ்சை லேசாக நீவி க் கொண்டான்….. பின் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து கனிவான குரலில் ஸ்ரீ  என்று அழைத்தான் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு…..
அவனுக்கு அவளை பிடித்து இருப்பதில் ஐயம் இல்லை இருப்பினும் அவள் பேசியதற்கு அவளது தவறையும் தப்பான புரிதலையும் உணர வைக்க நினைத்தானே தவிர, அவளை வேண்டாம் என்று வெறுக்க நினைக்கவில்லை. அதன் தாக்கமே இன்று அவனை அவள் இடத்தில் உரிமை கொள்ள செய்தது. அது அவனுக்கு தவறாக தோன்றாததால் தான் அவனது அறையில் அதை இயல்பு போல் எடுத்துக் கொண்டான்
இருப்பினும் அவளின் உணர்வுகளை யோசிக்காது தான் இப்போது செய்த செயல் அவனுக்கு ஒருவகை நெருடலாக தோன்றியது….. அவள் அவனது செயலை தடுக்காது தன் கண்களையும், கையையும் இறுக முடி இருந்தவளை பார்த்தவனுக்கு, அவள் எதில் இருந்தோ தப்பிப்பதற்காக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இறுகி இருப்பதை உணர்ந்தான்.
அதனால் அவளை நிதானத்திற்கு கொண்டுவர எண்ணி அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து ஸ்ரீ என்று அழைக்க. அதற்கு பதில் அளிக்காமல் அப்பொழுதும் விழிகளை மூடி இருந்தவள் தலை குனிந்துக் கொண்டாள் வேக மூச்சுகளுடன். அவன் மீண்டும் அழுத்தமாக அவளை அழைக்கவும் தன் இருக்கையில் இருந்து எழுந்தவள் பதில் ஏதும் கூறாமல் ஓட்டமும் நடையுமாக அவ்விடத்தை விட்டு விறுவிறுவென்ன நடக்க தொடங்கினாள் வேகமாக...
நந்தன்,ஸ்ரீ என்று அழைத்தவாறே அவள் பின்னே செல்ல, மஹா வேகமாக படி இறங்கி செல்வதை பார்த்தவன் எதுவும் கூறாது ,அவளை பின்தொடராமல் படிகளின் தடுப்பு கம்பியினை இறுக பற்றியபடி நின்றுவிட்டான்.
மஹா உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாள் என்று அவள் லிப்டை பயன்படுத்தாமல் படிகளில் வேகமா ஓடுவதை வைத்தே அறிந்துக்கொண்டவன், அவளது உணர்சிக்கு மரியாதையை அளித்து பின்தொடராமல் நின்று விட்டான்…..  
தன் அறைக்கு வந்தவன் கிஷோர்க்கு அழைத்து தனக்கு உடல்நிலை சரி இல்லை என்றும்மீட்டிங்கிற்கு தன்னால் வர இயலாது என்றும் கூறியவன் கிஷோரையை அனைத்தையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான்…..
தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் மஹாவின் சிந்தனையில் ஆழ்ந்தான்…. இப்பொழுது தான் செய்த செயலால் மாலை தன்னை காணவருவாளா என்று யோசித்தவன்…. இறுதியில் அவள் சற்று முன் இருந்த நிலையை நினைத்து, அவள் மேல் கொண்ட நம்பிக்கையில் வருவாள் என்று எண்ணினான்….. 
நந்தன் தன் கண்களில் கொடுத்த முதல் முத்தத்தையும் அதன் பின் நடந்துக் கொண்ட விதம், தன் வேதனையை அவன் துச்சமாக என்னியவது என  எல்லாம் சேர்ந்து அவளை வேதனையில் இழுத்து சென்றதில் இருந்து மீள்வதற்குள் அவனது அடுத்த தாக்குதலில் மொத்தமும் செயல் இழந்து போனாள் மஹா
வெளியில் வந்தவளை சந்தியா என்னவாயிற்று என்று கேட்க முதலில் பதில் ஏதும் கூறாமல் நின்றவள் பின் மாலை ரெஸ்டாரண்டில் பேசலாம் என்று அவன் கூறியதை மட்டும் கூறியவள் வேறேதும் கூறாமல் மறைத்து விட்டாள்.
 
தோழியே ஆயினும் தங்கள் விசயத்தை பகிர்ந்து கொள்ள ஏனோ அவளது மனம் இடம்  கொடுக்கவில்லை
காலேஜில்  மஹாவினாள் எதிலும் கவனம் செலுத்த இயலாமல் ஒதிங்கியே நின்றாள். அவளது தோழிகளும் அவள் நந்தனை சந்தித்து பேச போவதை நினைத்து யோசனையில் இருக்கிறாள் என்று எண்ணி அவளை சீண்டாது அவளது போக்கில் விட்டுவிட்டனர்
கடைசியில் ஒரு முடிவாக தன்னை சமன் செய்துக் கொண்டு அவனிடம் என்ன பேச வேண்டும் என்று தீர்மானித்து கொண்ட பின்னே சற்று ஆசுவாசம் ஆனாள் மஹா..
மாலை, காலேஜ் முடிந்ததும் ரம்யாவை இழுத்துக் கொண்டு 5.15 க்கே ஹோட்டலின் வாசலில் நின்றவளை, ஏன் என்று கேட்டதிற்கு சீக்கிரம் வந்தால் பேசிய உடனே சென்று விடலாம் என்று அவள் கூறிய பதிலில் தன் நெற்றியில் அறைந்து கொண்டாள் ரம்யா.
பாவி…. அதுக்கு அவரும் சீக்கிரம் வரனும் இல்லநீ மட்டும் வந்தா போதுமா… ?” என்ற கேள்வியில் முதலில் முழித்தவள் பின் , ” அவன் வரதுக்குள்ள ரெடி ஆயிக்குறேன்…..” என்றவளை கேள்வியாக பார்த்தவளைஎன்னஎன்பது போல் புருவம் உயர்த்தி கேட்ட மஹாவிற்க்கு,
இல்ல இப்ப நீ வந்து இருக்குற விஷயத்துக்கு மேக்கப் அவசியமா? ” என்று கேட்டவளை முதலில் புரியாது பார்த்தவள் பின் புரிந்ததும் அவளை பாவமாக பார்த்தவள், ” ஏன்டி நீயும் என்னை படுத்துற? நான் ரெடி ஆகுறேனு சொன்னது மேக்கப் பத்தி இல்ல அந்த காண்டாமிருகம் கிட்ட என்ன பேசணும்னு ரெடி ஆகிக்குறேனு சொன்னேன்….” என்றவளை பார்த்து இளித்து வைத்தாள் ரம்யா.
பின் இருவரும் உள்ளே சென்று ஓர் இருக்கையில் அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்த டேபிள்  சதுரங்கமாக வடிவமைக்கப் பட்டு நான்கு பக்கமும் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது.
 
சிறிது நேரம் பொருத்து பார்த்த ரம்யா பின் முடியாமல் தாங்கள் வாங்க வேண்டிய புக்கை வாங்க செல்வதாக சென்று விட மஹாவிற்க்கு பதட்டம் கூடிக்கொண்டே போனது
மேலும் 10 நிமிடங்களில் சென்ற நிலையில் சரியாக ஆறு மணிக்கு ஹோட்டலின் அந்த அறையினுள்ளே நுழைந்தான் நந்தன். முருகனை வேண்டிக் கொண்டு இருந்தவள் எதர்ச்சையாக வாசலை நோக்க முருகனையும் மறந்தாள், தான் பேச நினைத்து வார்த்தைகளையும் மறந்தாள்.
படிய வாரியும் அதில் அடங்காமல் சிலிர்ப்பி கொண்டு இருந்த சிகையும், கண்களில் கூலர்ஸ்ஷும், ஸ்கை புலு கலர் கேஸ்வல் ஷர்ட்டிற்க்கு மேட்சாக சந்தன நிற பேண்ட்டும், வலது கையில் ரோலக்ஸ் வாட்சும்,ஷர்டை மணிக்கட்டு வரை மடித்துவிட்டு, வலது கையை பேண்ட் பாக்கெட்டிலும்இடது கையில் ஃபோனை பிடித்துக் கொண்டும் ஸ்டைலாக நின்ற இருந்தவனை பார்த்து உருகி வழிந்துக் கொண்டு இருந்தாள் மஹா…..
உள்ளே நுழைந்ததும் அவ்வறையை சுற்றி நோட்டம் விட்டவன், சற்று தள்ளி இருந்த பக்கவாட்டு டேபிளில் மஹா தன்னை பார்ப்பதை(சைட் அடிப்பதை) உணர்ந்து மனதில் சிரித்துக் கொண்டே வெளியில் தன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது, அவளை நோக்கி தன் இடது கரத்தை தூக்கி ஹாய் என்று ஸ்டைலாக கையசைத்தான்….
அவன் தன்னை நோக்கி கையசைக்கவும் தன் நிலைக்கு வந்தவள் சட்டென்று தன் தலையை திருப்பிக் கொண்டு ஏதும் தெரியாதது போல் பாவனை செய்ய அதை கவனித்த நந்தன் மனதிற்குள்கொசுக்குட்டி செம்ம நடிப்பு டி…. இரு உன்னை கவனிச்சுக்குறேன்….’ என்று எண்ணிக் கொண்டே தன் கூலர்ஸை கழட்டி தன் ஷர்ட்டில் மாட்டிக் கொண்டே அவள் அருகில் சென்றான்
அவனது மேனரிசத்தை ஓர கண்ணால் கவனதித்த மஹா, ” என்ன இவன் இவ்வளவு ஹேண்சம்ஹா இருக்கான்…. சை ….. சைட் அடிக்கவும் முடியலை, பார்க்காம இருக்கவும் முடியலைமஹாரொம்ப பேட் கேர்ள் ஆயிட்ட நீ…. கெத்தா இருடி…. கெத்துகெத்து….” என சந்தனம் பாணியில் மனதில் சொல்லிக் கொண்டு இருக்க அவன் அருகில் வந்து ஹாய் என்றதும் தலை நிமிர்ந்து பார்த்தாள் மஹா.
பதில் ஏதும் கூறாமல் மீண்டும் தலை குனிந்துக் கொள்ள, சிறு புன்முறுவலுடன் அவளது பக்கத்து இருக்கையில் அமர போனவனை கலவரத்துடன் பார்த்தாள். அவன் அமரும் முன் அவசரமாக அவனை தடுத்தவளை அவன் கேள்வியாக நோக்க,
நீங்க அங்க உட்காருங்க…. இங்க வேண்டாம்..” என தனக்கு எதிரில் இருந்த இருக்கையை சுட்டிக் காட்டினாள்.
காலை அவனது ஆபீஸ்சில் அவன் நடந்து கொண்ட முறையில் இப்பொழுது அவளுக்கு சிறிது ஜாக்கிரதை உணர்வு தோன்ற…. எங்கு அவன் தன் கையை பிடித்து விடுவானோ அல்லது காலையில் நிகழ்ந்ததை போல் நடந்து விடுமோ என்று யோசித்தவள், அவனை அருகில் அமர அனுமதிக்கவில்லை…..  
ஏன்….?” என்று சந்தேக பார்வையுடன் கேட்டவனை பார்த்து திருதிருவென விழித்தவள் பதில் கூற வேண்டுமே என்று,
நம்ம இரண்டு பேரும் எனிமீஸ்( enemies) இல்லஅப்ப எதிர் எதிரா தான் உட்காரணும்….” என்று உளறியவளை பார்த்து, ” அப்படியா?” என்று அவன் கேட்டதற்கு வேகமாக தலையைஆம்என்று ஆட்டி வைத்தாள் மஹா.
தான் காலையில் நடந்துக் கொண்ட விததிற்கு தான் அவள் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று புரிந்து கொண்டவன் அவளது உணர்வுக்கு மதிப்பளித்து எதுவும் கூறாது அவளுக்கு எதிரில் அமர்ந்தான் நந்தன்…..
அதில் நிம்மதி அடைந்தவள் அவன் கவனிக்கவில்லை என்று எண்ணி பெரு மூச்சொன்றை வேறு வெளியிட்டாள் பெரிதாக… அதை பார்த்து மனதில் சிரித்துக் கொண்ட நந்தன் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை
ஆமா கொசுக்குட்டிஇந்த விஷயத்தை யாரு சொன்னது உனக்கு?” என்று படு சீரியஸாக முகத்தை வைத்து கொண்டு கேட்டவனை அதிர்ந்து விழி உயர்த்தி பார்த்தவள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவள் பின்,
.. அண்ணா சொசொன்னாங்க…..” என்று திக்கி திணறி சமாளித்தாள் அவன் தன்னை கொசுக்குட்டி என்று கூறியதையும் பொருட்படுத்தாது.
ஓஓஓஓ….” என்று தலை அசைத்து கேட்டு கொண்டவன் மனதில், ‘அடியேய்எப்படி டி இப்படி எல்லாம் யோசிக்குற?’ என்று எண்ணிக் கொண்டு இருக்கையில்,
இவர்களது டேபிளிக்கு வந்த பேரர்  , ” யூவர் ஆடர் பிளீஸ் சார்…” என்று கேட்க
” டூ வெண்ணிலா மில் ஷேக்…” என்று அவன் அவளுக்கும் சேர்த்து கூறினான். பேரர் சென்றதும் மஹாவை திரும்பி பார்க்கவும் அதிர்ந்தான் நந்தன்.
நந்தனை நோக்கி உஸ்ணப் பார்வைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மஹா.
ஏனோ நந்தனுக்கு அவளை மேலும் மேலும் சீண்டி   பார்க்க தோன்றியது. அதன் விளைவாக , ” ஹே.. கொசுக்குட்டி…. நான் இப்ப ஒன்னும்மே பண்ணல அப்புறம் ஏன் இப்படி வெட்கப் பட்டு உன் முகம் சிவப்பா இருக்கு…. ? ” என்று கேள்வி எழுப்பியவனை பார்த்து ஒரு நொடி தடுமாறினாலும் மீண்டும் சகஜநிலைக்கு வந்தவள்,
டோன்ட் கால் மீ கொசுக்குட்டி எவர்……” என்று பல்லை கடித்தவளை பார்த்து புன்னகை புரிந்தவாரே டேபிளில் தன் கைகளை மடக்கி வைத்து கூலாக , ” கூப்பிட்டா….. என்ன மேடம் பண்ணுவீங்க?” என்றவனை மேலும் முறைத்தவள்,
டேபிளில் இருந்த ஃபோர்க்கை எடுத்து அவன் முன்பு நீட்டி, ” வில் கில் யூ ( I will kill u)….” என்று ஜான்ஸி ராணி ரேன்ஜிர்க்கு பேசியவளை கண்டு ரசிக்க தான் தோன்றியது அவனுக்கு….. அவள் கையில் பிடித்து இருந்த ஃபோர்கின் நுணியை லேசாக தொட்டு, ” ஷ்ஷ்ஷ்…. செம்ம ஷார்ப் குத்துன்னா ஆள் ஷ்பாட் அவுட் இல்ல…?” என்று நக்கல் அடித்தவனை கண்டு ஃபோர்கை கீழே வைத்துவிட்டு தலையில் கை வைத்துக் கொண்டாள்.
என்ன செய்வது என்று தெரியாமல் சளித்துக் கொண்டவளை பார்க்க பாவமாக இருந்தது போலும் நந்தனுக்கு, தன் சீண்டலை விடுத்து சமரசமாக பேச துவங்கினான்.
ஓகே கூல் பேபி…..” என்று அவன் பேசி முடிக்கும் முன் இடைபுகுந்தாள் மஹா, ” என்னது பேபியா…?” என்று வெடித்தவளை, ” ஓகே கூல்….. எப்படி கூப்பிட்டாலும் பிடிக்கலைனா என்ன பண்ணுறது? என்ன தான் பிரச்சினை உனக்கு…? “என்று அவன் கேட்ட பின்பேஅவளுக்கு தான் எதற்கு இங்கு வந்தோம் என்று நினைவில் வர ,
சட்டென்று தன் தலையில் அடித்துக் கொண்டவள் தன் கண்களை மூடி, நாக்கை கடித்துக் கொண்டாள்அவளது அனைத்து பாவனைகளையும் ரசித்தவன், அதை தன் மனப்பெட்டகத்தில் சேமித்து வைத்தான்…..
பின் ஒரு முடிவுடன் அவனை நிமிர்ந்து பார்க்கஎன்னஎன்பது போல் அவன் சைகையில் கேட்க அந்த பாவனையில் மயங்கியவள் பின் தன்னை நிதானித்துக் கொண்டு மெல்லிய குரலில் பேச தொடங்கினாள்.
எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லசோ….. உங்க வீட்டுல பேசி இந்த கல்யாணத்தை நிறுத்திருங்க…” என்று ஒருவாறு தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள்.
அதுவரை அவளை ரசித்துக் கொண்டு இருந்தவன் அவள் கூறியதை கேட்டு சிறிது அதிர்ந்து தான் போனான். பின் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் அவளது இந்த முடிவிற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று அவளது முகத்தை ஆராய்ந்தான் நந்தன்
என்ன நாம விஷயத்தை சொல்லி கொஞ்ச நேரம் ஆச்சு, இன்னும் ரியாக்ஷன் ஒன்னையும் காணமே…’என்று மனதில் நினைத்தவள் மெல்ல தலை உயர்த்தி அவனை பார்க்க,
அவளையே அளவிடும் பார்வை பார்த்து கொண்டு இருக்க…. அவனது இந்த பார்வையை எப்படி எதிர் கொள்வது என்று புரியாமல் தன் விழிகளை அங்கும் இங்குமாக அழைய விட்டவளால் சில நிமிடங்களுக்கு மேல் முடியாமல் அவனை பாவமாக பார்த்து வைத்தாள்
அவளது தவிப்பை உணர்ந்தான் போலும் மெல்ல பேச துடங்கினான், ” ஏன் இஷ்டம் இல்லைன்னு தெரிஞ்சுக்கலாமா….?” என்று அவன் கேள்வி எழுப்ப,
ஏன்னா நான் சின்ன பொண்ணு….” ஏற்கனவே தான் யோசித்து வைத்த பதிலை அவன் கேட்ட மறுநொடியே அவள் பதிலளிக்க,
நந்தன் பெரிதாக சிரிக்க துவங்கினான்…. சரியாக அப்பொழுது பார்த்து அவன் ஆடர் செய்த மில்க் ஷேக் வந்துவிட, பேரர் அதை அவர்களுக்கு வைத்து விட்டு சென்றதும் அவனது கிளாஸில் இருந்ததை ஒரு மிடரு பருகியவன் மீண்டும் அவளை பார்த்தும்ம்…. அப்புறம்…” என்றானே பார்க்கலாம்,
மஹாவிற்க்கு பொறுமை என்பது பறந்து சென்றது, ” யோவ்நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்? சிரிச்சுட்டு ,ஜூஸ் குடிச்சுட்டு அப்புறம்னு சொல்லுற…. எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல. ஒழுங்கா கல்யாணத்தை நிறுத்து…. இல்ல உன்னை கொன்றுருவேன்…” என்று கோபத்தின் உச்சியில் கத்தினாள் ஆனால் மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி.
நிதானமாக அவளை தலை நிமிர்ந்து பார்த்தவன்…..
தங்களின் வயது என்னவோ? குழந்தாய்!…” என்று நக்கலாக கேட்க அவளால் பதில் கூற இயலாமல் தலைகுனிந்தாள்.
எப்பாடு பட்டாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று குறிக்கோளாக இருந்தாள் மஹா…. அவனோ முன்பு அவள் பேசிய அனைத்தும் பின்னுக்கு சென்று விட அவளை மணந்தே தீர வேண்டும் என்று முடிவுடன் இருந்தான் நந்தன்.
தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று இருவரும் அவர்களின் நிலையில் நின்று இருந்தனரே தவிர, தங்களுக்குள்ள உண்டான காதல் மொட்டை வளர்க்கவும் நினைக்கவில்லை வெளிப் படுத்தவும் நினைக்கவில்லை…… 
இது அவர்கள் செய்த முதல் தவறா
எதிர் எதிரே நீயும் நானும்
எதுவரை இந்த தூரம் போகும் 
விடை தெரியா பேதை 
நெஞ்சம் கொல்வதேன(டா)டி…..
கண்டிஷன்ஸ் தொடரும் …….

Advertisement