Advertisement

UD:8

தன் முன் இருந்த கதவை யோசனையாகப் பார்த்த படி நின்றுக் கொண்டு இருந்தவள், “எப்படியும் ஓவரா சீன் போடுவான் அந்த GM, அதுக்கு பேசி பல்ப் வாங்குறதுக்கு பதில் திரும்பி போயிறலாமா ..” என முடிவெடுத்து கதவிற்கு முதுகு காட்டி நின்றவள் அந்த யோசனையிலேயே கதவின் மேல் சாயப் போனாள்……

சரியாக அந்நேரம் அறை கதவும் திறக்கப்பட அதை எதிர்பாராதவள் கதவோடு பின்னே சரிந்து கீழே விழபோனவளை ஒரு வலிய கரம் அவளது இடையை பற்றி தாங்கி பிடித்தது.

கொசுக்குட்டி உள்ளே வருவது போல் தெரியாததால் தாமே சென்று அழைக்க முடிவு செய்து இடது கையால் அறைக்கதவை திறந்ததும் கதவோடு சேர்ந்து விழ போனவளை தன் வலது கையால் அவளது இடையை பிடித்து தாங்கினான் நந்தன்.

சட்டென்று நிகழ்ந்த அந்நிகழ்வால் அதிர்ந்து பிடிப்புக்காக அவனது கோட்(coat)யை பற்றிக் கொண்டவள் விழிகளை விரித்து அவனை பார்த்த படி அவனது கையில் தவழ்ந்துக் கொண்டு இருந்தாள் மஹா….

தன்னைக் கவர்ந்த அவள் விழியோடு தன் விழிகளை கலக்கவிட்டவன், தன்னையறியாமலே தன் விழிகளின் வழியே தன் உயிரையும், உணர்வையும் அவளுக்கு உணர்த்த முற்ப்பட்டான் போலும் அவளது GM.

மணித்துளிகள் செல்ல செல்ல தன் நிலையையும், அவள் மேல் இருந்த கோபத்தையும் மறந்து அவன் கையணைப்பை மென்மையாக இறுக்கியவன் மெல்ல குனிந்து அவளது இடதுவிழியில் தன் முதல் அச்சாரத்தை பதித்தான் தன்னை அறியாமலேயே...

அவன் இதழொற்றலை சற்றும் எதிர் பார்க்காதவள் அதிர்ந்து மேலும் தன் விழிகளை சாசர் போல விரித்தாளே ஒழிய அவனிடம் இருந்து விடு பட முயலவில்லை பெண்ணவள்...

நந்தனோ தன்னையும் அறியாது, தன் கையில் தவழும் தன்னவளையும் அறியாது கண்ணிமைக்கும் நொடிக்கு குறைவாக அவளது வலது விழியிலும் நோகாமல் இதழை ஒற்றினான் உள்ளத்தில் உண்டான அரும்பு காதலால்..

தன் வாழ்வில் கிடைத்த முதல் முத்தத்தில் அதிர்ந்திருந்தவள், இரண்டாம் முத்தத்தில் மெதுவாக தன்நிலையை இழக்க ஆரம்பித்தாள்இதுவரை தன் அண்ணனுடன் சண்டையிட்டு ,அடித்தடியில் ஈடுபட்டு, உடம்பு சரியில்லாமல் இருக்கும் சமயம் தந்தையாக தன்னை மடிதாங்கி இருக்கிறான் தான்.. ஆனால் இன்று முதன் முதலாக தன்னில் சலனத்தை ஏற்படுத்தியவனிடம் இருந்து கிடைத்த முதல் முத்தத்தில் அதிர்ந்து, சிறிது நேரத்தில் தன்நிலை மறந்து துவண்டு போனாள். துவண்டதில் அவனது கோட்டை பிடித்து இருந்த அவள் கைகள் தளர அவனது முதல் இதழ் தீண்டலில் அவள் உடலும் தளர்ந்தது.

ஒற்றைக் கையில் அவளை தங்கி பிடித்தவன் அவள் உடல் தளர்வதை உணர்ந்து அவளை இறுக்கி பிடிக்க நினைத்து தன் கைகளுக்கு வலுவூட்டும் தருணம் அதில் நந்தனுக்கு மயக்கம் கலைந்தது.

முதலில் சுதாரித்த நந்தன் தான் செய்த செயலை எண்ணி அதிர்ந்து மஹாவை  பார்க்க தன் இதழொற்றலில் அவள் இன்னும் கிறங்கி  தன் கையில் தளர்ந்து கொண்டிருப்பதை கண்டு சட்டென்று நிமிர்ந்தவன் எதையும் சிந்திக்காது கைகளை விலக்கி கொண்டான் .

மயக்கத்தில் இருந்த மஹா இதை சற்றும் எதிர்பார்க்காததால் தரையில் பொத்தென்று விழுந்தாள். கைகளை விலக்கி கொண்ட வேகத்தில் திரும்பி நின்று தன் தலையை வலது கையால் கோதி தன்னை சமன் செய்ய முயற்சித்தப்பொழுது அலறல் சப்தம் கேட்டு திரும்பி பார்த்தவன்……. தன் மடதனத்தை எண்ணி மனதுக்குள் திட்டிக் கொண்டாலும் வெளியில் நிமிர்வாகவே நின்றான்.

அம்மா ஆஆஆஆ…” என்ற அலறல் உடன் கீழே விழுந்தவள் இடுப்பை பிடித்துக்கொண்டு முறைத்து பார்த்தாள் அவனை...

தன்னை முறைத்தவளை கண்டு முதலில் குற்றவுணர்ச்சியில் தடுமாறினாலும் பின் நிமிர்வாக அவளது விழியை எதிர்க்கொண்டவன்,

கொஞ்சமாச்சும் அறிவிருக்கா….??? இப்படி தான் வந்து விழுவியா…??” என்றவனை பார்த்து காளி அவதாரம் எடுக்க தொடங்கினாள் மஹா.

தன்னை கீழே போட்டதும் இல்லாமல்,  எழ உதவியும் செய்யாது அறிவிருக்கா என்று திட்டவும் உச்ச கட்ட கோபத்திற்கு சென்றவள்,

தானே முயன்று எழ முயற்சிக்க, இடது காலை பிடித்துக் கொண்டுஅம்மாஆஆஆஎன மீண்டும் அலறினாள்.

தன்னை அம்போவென கீழே விடுவான் என எதிர்ப்பாராததால் இடது காலை லேசாக மடக்கியவாறு அவன் கையில் தொங்கிக் கொண்டிருந்தவள் அவன் தன் கையை விலக்கி கொள்ளவும் சட்டென்று விழுந்தவளின் இடது கால் மடங்கி சுழுக்கிக் கொண்டது லேசாக...

 

இப்பொழுது அவள் மீண்டும் அலறவும் அவளை சந்தேகமாக பார்த்து வைத்தான் நந்தன்.

அவனது பார்வையை உணர்ந்து அவனை முடிந்த மட்டும் முறைத்தவள்என்னஎன்று பல்லை கடித்துக் கொண்டு கேட்க,

இல்ல முதல இடுப்பை பிடிச்சுட்டு கத்துன இப்ப காலை பிடிச்சுட்டு கத்துற …. அதான்….” நடிக்கின்றாளோ என்று சந்தேக பார்வையோடு கேட்டு வைத்தான் பார்வையை கூர்மையாக்கி...

அவன் கூறியதில் சுறுசுறுவென கோபம் வர வலியை பொறுத்துக் கொண்டு முயன்று எழுந்து நின்றவள், ” ஏன்டா…. என்னை கீழே போட்டதும் இல்லாம நான் நடிக்குறேனு சந்தேகம் வேறையா உனக்கு…” என்றவள்லூசு காண்டாமிருகம்….” என்று திட்ட தொடங்க,

ஹே….. கதவை திறந்ததும் நீ தான் ரிவர்ஸ்ல வந்து விழுந்த….” என்க,

 

நான் விழ தான் வந்தேன் நீ பிடிக்காம இருந்து இருந்தா நானே பேலன்ஸ் பண்ணி நின்னு இருப்பேன். ஆனா நீ…. பிடிக்குறேன்னு சொல்லி இடுப்பை பிடிச்சதும் இல்லாம நீ….. நீ…..” கோபத்துடன் ஆள் காட்டி விரலை நீட்டி பேச துவங்கியவள் தான் அனுபவித்த முதல் இதழொற்றலை நினைத்து வார்த்தைகள் வராது தந்தி அடிக்க ஆரம்பிக்க தன் இதழை கடித்து தலை குனிந்துக் கொண்டாள் லேசாக தோன்றிய வெட்கத்தில்.

அவளது தடுமாற்றத்தையும் வெட்கத்தையும்  சில நொடிகள் ரசித்தவன் பின் தன் ஆர்வக்கோளாறால் அவளை சங்கட படுத்த விரும்பாமல், இயல்புக்கு கொண்டு வர எண்ணி,

 

இப்ப இதுக்கு டைப் அடிச்சு என் டைமை வேஸ்ட் பண்ணுற????” எதுவும் நடக்காதது போல் பேசிக் கொண்டே தன் இருக்கையை நோக்கி சென்றான் நந்தன்….

அவன் பேசி சென்ற விதத்தில் மஹா தான் சில நொடிகள் குழம்பி போனாள்.

‘நாம ஏதாச்சும் கனவு கண்டோமா இல்ல இவன் நம்மளை ஏமாத்துறானா? அவன் முத்தா வச்சான் தானே….???’ என்று தன்னை தானே கேட்டு யோசனையில் நகத்தை கடித்துக் கொண்டு இருந்தாள் மஹா….

ஏய்ய்ய்ய்……. கொசுக்குட்டி…. ” அவன் விழித்ததில் தலை நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தவள்…..

அப்படி கூப்பிடாதே டா தடியா…. உன்னை…” திட்டிக் கொண்டே அவனை நோக்கி நடக்க கால் எடுத்து வைக்க போனவள், ” ஷ்ஷ்ஷ்…. ஆஆ..” வலியில் முகம் சுழித்து முனங்க,

ஷப்ப்ப்பா நடிப்பு தாங்கலை….”ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு மறுகையால் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

அதில் வெகுண்டவள் அவனை நோக்கிடேய்…” அவள் திட்ட தொடங்கும் முன்சார்….” என்று  நந்தனின் பி. பரணி வந்து  அழைக்கவும் தன் பேச்சை உள் இழுத்துக் கொண்டாள் அமைதியாக….

சொல்லுங்க பரணி… ” என்ற கம்பீர குரலில்……

அதில் நந்தனை அதிசயித்து பார்த்தாள் மஹா.

இத்தனை மணி துளிகள் தன்னிடம் பேசியதிற்கும் தற்பொழுது பேசியதிற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டு அதிசயித்து போனவள், ஒற்றை வார்த்தையில் அவனது கம்பீரத்தையும்,அவனது அழகும், கருப்பு நிற கோட்டும் சாம்பல் நிற சட்டையும் பாண்ட்டும் என பார்வையால் அவனை அலசியவள்…….. கோட்டின் கால்ளர் பகுதி கசங்கி இருப்பதைப் பார்த்து மறைந்த கோபம் மீண்டும் எழுந்தது அவளுள்.

மீட்டிங்கிற்கு நேரம் ஆவதையும், கிஷோர் தனக்காக காத்திருப்பதையும் நினைவூட்டி விட்டு அதற்கு தேவையான கோப்பையை நந்தனிடம் பெற்று கொண்டவன். தான் 10 நிமிடங்களில் வருவதாக கூறிய பதிலோடு சென்றான் பரணி.

அவன் சென்றதும் மஹாவின் புறம் திரும்பியவன் அவள் பார்வையை உணர்ந்து தன் கோட்டை பார்க்க அது காலரின் பகுதி சுருங்கி இருக்க கண்டு மெலிதாக சிரிக்கபின் அவளை பார்த்துக் கொண்டே தன் கோட்டை கழட்டி தன் இருக்கையில் வைத்தான்.

அவன் தான் பார்ப்பதை உணர்ந்து ,அவனும்  சிரித்த படி கோட்டை கழட்டுவதை பார்த்து,

ஏய்…. எதுக்கு இப்ப கோட்டை கழட்டுற…” பதறினாள் மஹா.

அவளது பதற்றத்திருக்கான காரணத்தை கண்டு கொண்டவன்,”அடியேய் கொசுக்குட்டி…. அந்த அளவுக்கு இங்க சீன் இல்ல…. மீட்டிங்கிற்கு கசங்கி போன கோட்டோட போகனுமேனு தான் கழட்டினேன்என்றவனை பார்த்து நாக்கை கடித்துக் கொண்டாள்….

 

சரி என்ன விஷயம் ? இங்க வரைக்கும் வந்து இருக்க… ” அவனது கேள்வியில் தான் வந்ததின் நோக்கம் நினைவிற்கு வர தன் நெற்றியில் அறைந்து கொண்டாள் மஹா….

பின் அவனை ஓர் பார்வை பார்த்து விட்டு தலை குனிந்துக், ” ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…..”

அவளது பாவனைகளை ரசித்தவன், மெல்ல அவள் அருகில் வந்துஇங்கேயே  பேசணுமா….? ” என மெல்லிய குரலில் கேட்கவும்,

ஆம் என்று அவள் தலை அசைக்க….

சரி 1மணி நேரம் இங்கேயே வெய்ட் பண்ணு மீட்டிங்ப் போய்ட்டு வந்துறேன்… ” என்று கூறி விட்டு அவளை தாண்டி செல்கையில் அவளது குரலில் அவளை திரும்பிப் பார்த்தான்

எனக்கு இப்பவே பேசணும்…. 1மணி நேரம் எல்லாம் வெய்ட் பண்ண முடியாது….”

அவளை கூர்மையுடன் பார்த்தவன், ” ஏன்….??”

தலையை தொங்க வைத்துக் கொண்டவள், ” காலேஜ் இருக்கு…. அரை நாள் தான் லீவுமதியம் காலேஜ் போகனும்….”

சோ….. காலேஜ் கட் அடிச்சுட்டு வந்து இருக்க யாருக்கும் தெரியாமல் கரெக்டா….?” பேண்ட்டு பாக்கெட்டில் தன் கைகளை விட்டுக் கொண்டு கேட்டவனின் தோரணையில் மஹா மயங்கினது என்னவோ உண்மைதான்….

அவளது பார்வையை ஏற்றுஎன்னஎன்பது போல் புருவம் உயர்த்தி கேட்டவனுக்குஆம்என்று தலையை ஆட்டி வைத்தாள் உதட்டை பிதுக்கி...

வீட்டுல தெரியுமா..?” என்றவனை கலவரத்துடன் நோக்கியவள்…..

லூசு காண்டாமிருகம்…. தெரியாம தான் வந்து இருக்கேனு தலையை தலையை ஆட்டினேன்ல அப்புறம் என்ன….?” என்று எகிறினாள் கடுப்பில்...

 

அடிங்கு…… பண்ணுறது திருட்டு தனம் இதுல சவுண்ட் வேறையா..?”

இது உனக்கு தேவையா…? அப்படியே போய் இருக்கலாம் ஓவரா சீன் போடுறான்பனங்கொட்டை மண்டையன்…..” என தான் அணிந்து இருந்த கைப்பையின் நுனியை திருகியவாறே மெல்லிய மிக மெல்லிய குரலில் முனுமுனுத்தாள் அவனை ஓர கண்ணாள் பார்த்தபடி...

என்ன சொன்ன??” என்று கேட்டதற்கு ஒன்றும் இல்லை என பதில் அளித்தவளின் சிணுங்கலை ரசிக்ககவே தோன்றியது அவனுக்கு.

பின்,”ஓகே…. ஈவினிங் 6 க்கு கீரின்ஸ் ரெஸ்டாரண்டில் மீட் பண்ணலாம்…… ” என்றவன் நொடியும் தாமதிக்காது அவ்விடத்தை விட்டு சென்றான் மீட்டிங்கிற்கு .

 

 அறை வாசல் வரை சென்றவன் ஏதோ தோன்ற  திரும்பி மஹாவை பார்த்துவிட்டு கான்பெரன்ஸ் ஹாலை நோக்கி வேகமாக நடக்க தொடங்கினான்…

 

நந்தன் 6மணி என்றதும் அதை மறுத்து பேச வாய் திறந்தவள், ஓர் அடி எடுத்து வைக்க முயன்று வலியில் முகத்தை சுருக்கினாள்.

பின் நிமிர்ந்து பார்த்தவளுக்கோ அங்கு அவன் இல்லாத வெற்று இடம் பெரும் ஏமாற்றத்தை தர ஏனோ விழிகள் கலங்க தொடங்கியது….

என்ன இவன் இப்படி பேசிட்டு போறான்…. இவன போய் அப்பா ரொம்ப நல்லவன், உன்னை நல்லா பார்த்துப்பான், பாசமா இருப்பான்னு சொன்னாங்கஇப்படி கால் வலியில் கஷ்ட படுறேன் இந்த GM  கண்டுக்காம போகுது…. “

தன்னுள் புலம்பிக் கொண்டே வந்தவளுக்கு ஏனோ காலின் வலியை விட மனதில் தோன்றிய ஒரு ஏமாற்ற உணர்வின் வலியை பெரிதும் உணர்ந்தாள்….

‘இவனுக்கு என்னை பிடிக்கலை தான் அதுக்குன்னு இப்படியா? ஒரு சக மனுஷினு கூட பார்க்காம அவன் பாட்டுக்கு போய்ட்டான்….’ என மனதினுள் புலம்பிக் கொண்டே அறையை விட்டு நொண்டிக் கொண்டே வந்தவளுக்கு ஏனோ அழுகை வரும் போல் இருந்தது.

லிப்டின் அருகில்வரை நொண்டிக் கொண்டே சென்றவளுக்கு….. மனதின் தவிப்பை அடக்க தெரியாது கண்களை மூடி சுவற்றில் சாய்ந்து நின்று நந்தன் தன்னிடம் நடந்துக் கொண்ட விதத்தை யோசித்துப் பார்த்தவள்,  மூடிய இரு விழிகளில் இருந்து கண்ணீர் ஒரு மெல்லிய கோடாக அவள் கண்ணம் இறங்கின.

கான்பரன்ஸ் ஹாலை நோக்கி வேக எட்டுக்களுடன் நடந்தவனின் மனதில் மஹாவின் சிந்தனைகளே ஓடின….. தான் அறையை விட்டு வரும்போது அவள் கால் வலியில் முகம் சுழித்தது நினைவுவர தன் நடையை சட்டென்று நிறுத்தியவன். தன் நெற்றியை தேய்த்துக் கொண்டேஆஆஆஆ.. . .. இந்த கொசுக்குட்டி ரொம்ப இம்சை பண்ணுதே….” என்று முணுமுணுத்தவன் மஹாவை காண தன் அறை நோக்கி ஓடினான் வேகமாக...

தன் அறையில் மஹா இல்லை என்றதும் லிப்டை நோக்கி ஓடியவன் விழியில், கண்ணீருடன் தன் விழி மூடி சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த மஹா தென்பட்டாள்….

அவளின் வலி அறியாமல் அவளை வருத்தி விட்டோமோ என்று வருந்தியவன் அவள் அருகில் சென்று ஸ்ரீ” என கனிவுடன் மெல்லிய குரலில் அழைத்தான்…..

அவனது அழைப்பில் சட்டென்று விழி மலர்த்தி பார்த்து அதிர்ந்தாள் மஹா….

முகத்தில் அத்தனை கனிவையும் வைத்துக் கொண்டு கேட்டதும் இல்லாமல் தன்னை ஸ்ரீ என்று அவன் அழைத்த விதத்தில் அவனை இமைக்க மறந்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் தன்னை அறியாது...

அவளது பார்வையை உணர்ந்தவன் அவளை மீண்டும் சீண்டிப் பார்க்க தோன்றியது அவனுக்கு

எப்ப பாரு என்னை சைட் அடிக்குறதே வேலையா வச்சு இருக்க…… நீ கண் வச்சே பாதி இளைச்சுருவேன் போல…. ” என்று வம்பிழுக்க.

அதுவரை அவனை வியப்புடன் பார்த்து இருந்தவள் அவனது கேலி பேச்சில்  கண்களை சுருக்கி அவனை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

நீ நினைக்குற மாதிரி….அந்த அவ்வளவு ஒர்த்தா எல்லாம் நீ இல்ல, ஏதோ சுமாரா இருக்க …..” என அசால்ட்டு போல் பதில் உரைத்தாள் மஹா….

அடியேய்…. உன் வாய் இருக்கே… ” பல்லை கடித்தவன் அவளை அடிக்க கையை ஓங்கி கொண்டு வர அதை பார்த்து பயந்து லேசாக குனிந்து , கைகளை கொண்டு காதை முடியவள், கண்களையும் இறுக மூடிகொண்டாள் பட்டென்று….

அடிக்க கையை ஓங்கியவன் சட்டென்று குனிந்து அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.

இதை எதிர்பார்க்காதவளோ ஒரு நொடி அதிர்ந்தவள், அவன் கையில் இருந்து இறங்க போராடியபடி

ஐய்யோ…. என்னடா பண்ணுற தடியா ….. விடுடா காண்டாமிருகம்…. விடுடா…” என திமிறிக் கொண்டு இருந்தவளை பொருட் படுத்தாது, சற்று தள்ளி போடப் பட்டு இருந்த நாற்காலியில் அமர வைத்தான்.

அதுவரை அவனிடம் கத்திக் கொண்டே வந்தவளை அவன் கவனிக்காது அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவளது இடது காலை மென்மையாக பற்றி தன் வலது காலின் மடி மீது வைத்தான் அவளை நிமிர்ந்து பார்க்காது….

 

அவனிடம் இருந்து விடு பட எண்ணி கத்திக் கொண்டு இருந்தவள், நந்தன் தன் காலை பற்றவும் மீண்டும் பதறியவள்…. தன் காலை பின்னுக்கு இழுத்துக் கொள்ள முயற்சித்ததை பார்த்து அவன் சிறு முறைப்புடன் உச்சு கொட்டினான் அவளை பார்த்து..

அதில் 5 நொடிகள் அமைதியை காத்தவள் அவன் தன் காலை வலமும் இடமும் ஆட்டி பார்க்கும் போது வலி ஏற்பட அதை பொறுக்க முடியாமல் அவனிடம் எகிறினாள்,

டேய்…. தடிமாடு வலிக்குது டா…. விடுடா என் காலை….”

மீண்டும் தலை நிமிர்த்தி அவளை முறைத்தவன் வேறேதும் கூறாது அவளது காலை ஆராய்ந்தான்.

அதில் மஹாவிற்க்கு கோபம் வர,” டேய்…. தடிமாடு விடுடா வலிக்குது….. காலை உடைக்க பார்க்குறியா….? இரு இரு போலீஸ் கம்பிளைன்ட் தந்து உன்னை உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டுறேன்…. விடுடா….” என கத்திக் கொண்டே காலை அவன் பிடியில் இருந்து உருவிக் கொள்ள முயன்றாள்.

ஓவரா பேசுன கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கண்ணுக்கு குடுத்ததை வாய்க்கு குடுத்துடுவேன்டி…. வேண்ணும்னா இனி கத்து…. ” முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு அவன் கூற,

அதில் அதிர்ந்தவளின் விழிகள் இரண்டும் வெளியே தெரித்து விடும் அளவு கண்களை விரிக்க வாயை இரு கைக் கொண்டு முடிக் கொண்டாள் அவசரமாக...

அவள் அதிர்ந்த அந்த நொடியை தனதாக்கிக் கொண்டவன், தான் பற்றி இருந்த அவளின் இடது கால் மணிக்கட்டை வலது பக்கமாக ஒரு திருப்பு திருப்பினான் நந்தன்….

படக்என்ற ஓசை வர அதில் மிரண்ட மஹாஆஆஆஎன அலற ஆரம்பித்தாள் அடுத்த நொடி.

அவளது அலறலை கேட்டு என் செய்வது என்று முழித்த நந்தன் சட்டென எழுந்து, அவள் கன்னத்தை பற்றி அவளது பின்னங் கழுத்தை வளைத்துப் பிடித்து இதழோடு இதழ் பொருத்தி அவளது அலறலை அடக்கினான் அவசர கதியில்………

 

 

 கண்டிஷன் தொடரும்…….

 

 

 

 

Advertisement