Advertisement

UD:6
முருகன் சன்னதியில் இரு குடும்பமும் இரு பக்கமும் நின்று கண்களை மூடிக் கொண்டு தங்கள் வேண்டுதலை கடவுளிடம் கேட்டுக் கொண்டு இருக்க……
மஹா தன் வலதுக் கண்ணை மட்டும் திறந்து எதிரில் இருக்கும் நந்தனை பார்த்தாள்.அதே நேரம் நந்தனும் மஹாவை முறைத்துக் கொண்டு இருக்க மீண்டும் கண்களை மூடிக் கொண்டு முருகனுக்கு சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியம் செய்து படைப்பதாகவும் அதற்கு ஈடாக தன்னை நந்தனிடம் இருந்து காப்பாற்று மாறு வேண்டிக் கொண்டாள்.
பிரகாரத்தை சுற்றி முடிக்கும் வரை இருவரது விழிகளும் ஒரே நேர் கோட்டில் இருக்க அவர்களது மனமோ காலையில் இருந்து நடந்தவற்றை எண்ணிக் கொண்டு இருந்தது. 
நந்தன், மஹா இருவரும் ஒருவரையொருவர் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்த வேளையில் ” அண்ணா….. இப்படியா ஓப்பனா சைட் அடிப்ப….???? பாரு எல்லாரும் பார்த்து சிரிக்குறாங்க…. இப்படிஇஇஇ படம் காட்டுறீயே அண்ணா….” நந்தனின் காதை கடித்தான்  அஹில்  நந்தன் … 
அவன் கூறியதும் நந்தனும், மஹாவும் தன் நிலைக்கு வந்து மற்றவர்களைப் பார்க்க அனைவரும் சற்று தள்ளி நின்று கொண்டு இவர்களைப் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டு இருந்தனர்.  
அதில் நந்தனும், மஹாவும் அசடு வழிந்த படி அவரவர் குடும்பத்துடன் சென்று நின்றுக் கொண்டனர் வெட்கத்தோடு……
“ராமன்… பசங்க இரண்டு பேரும் கொஞ்சம் தனியா பேசட்டும்…. நாம கல்யாணத்தை பத்தி பேசலாம்….” என்று பத்மாநந்தன் ராமனிடம் கூறியதோடு தன் மனைவியிடம் திரும்பி “சரி தானே கார்த்திகா….. அவங்க பேசி கொஞ்சம் புரிஞ்சிகிடட்டும்… ” என கேட்க,
“ஆமாங்க….. இப்ப தான் முதல் தடவையாப் பசங்க பார்த்துக்குறாங்க….. அதனால பேசிப் பார்க்கட்டும்……” என பதில் அளிக்க…
அதற்கு ஜெயராமனும், வசந்தாவும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டனர்…
‘ஐயையோ….. இந்த அங்கிள் ஏன் இப்படி என்னை இந்த காண்டாமிருகத்துக்கிட்ட மாட்டிவிடப் பார்க்குறார்? மஹா இப்படி வந்து மாட்டிகிட்டியே….. விடாத கருப்பு மாதிரியே வந்து டார்ச்சர் பண்ணுறான்…. இவன நாம் கல்யாணம் பண்ணா சேதாரம் மட்டும் தான் மிஞ்சும் ……. எப்படியாச்சும் எஸ்கேப் ஆயிரு மஹா…..’ என மனதிற்குள் புலம்ப மட்டும்மே முடிந்தது…,
‘வாடி என் கொசுக்குட்டி….. நேத்து கூப்பிட கூப்பிட ஓடினல… இப்ப எப்படி ஓடுறனுப் பார்க்குறேன்….. ‘என மனதிற்குள் நினைத்த  நந்தன்  மஹாவை நோக்கி எள்ளல்ப் பார்வையை வீசினான்…….
அவர்களை தனியே சென்று பேசுமாறு பெரியவர்கள் கூறியதும் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை மஹாவின் மீது வீசி விட்டு கூடி இருந்தவர்களை விட்டு சிறிது தூரம் தள்ளி நின்றுக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் ,மனதில் எழுந்த சினத்தை அடக்கியவாறு….
இவனுடன் செல்வதா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருந்தாள் மஹா.
“அக்கா…. போ அக்கா…. ஆல் தி பெஸ்ட்…” என அனி வாழ்த்துக்கள் கூற,” நான் என்ன பரிட்சையா எழுதப் போறேன்???? ஆல் தி பெஸ்ட் சொல்லுற….” அவனிடம் காட்ட இயலாத எரிச்சலையும் கோவத்தையும் அனியிடம் காண்பித்தாள். 
மஹாவின் கேள்வியில் அனி”ஙே….” என விழிக்க அதைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்க முயற்சி செய்துக் கொண்டு இருந்தாள் மஹா.
அப்பொழுது ராமனும், வசந்தாவும் “மஹா…..போ மா…. தம்பி எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுவாங்க…. போ… போய் பேசு…..” என்று கூற,
மனதில் மூண்ட சஜ்சலத்தோடும் ஒருவகையான பயத்தோடும் நந்தனை நோக்கி நடக்கலானாள்….
அருகில் இருந்த தூணில் லேசாக சாய்ந்து  இருந்தவனின் சிகை காற்றில் ஆட, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, அங்கு சுற்றி இருந்த இயற்கையை கண்பார்த்தாலும் அதை ரசிக்க தோன்றாமல் இறுகிய முகத்துடன்  வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவனை ஏனோ ரசிக்க தோன்றாமல் இருக்க முடியவில்லை மஹாவால்.  
கொலுசொலி கேட்டு திரும்பியவன் மஹாவின் ரசனை சுமந்த பார்வையை ஒரு நொடியில் கண்டுக் கொண்டவன் யோசனையோடு அவளை முழுவதும் பார்க்க, அவள் பேசியதால் தோன்றிய கோபமும், ஆத்திரமும் மறைந்து ரசனை குடி  கொண்டது…. அழகு சிலை போல் இருந்த பதுமையை பார்க்க பார்க்க தெகட்டவில்லை அவனுக்கு….. 
அவனையே பார்த்துக் கொண்டு வந்தவள் அவன் சட்டென்று திரும்பி பார்க்கவும் ஒரு நொடி விழிவிரித்து அதிர்ந்தவள் தன் நாக்கை லேசாக கடித்துக் கொண்டு மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.
தான் அவளை கண்டுக் கொண்டோம் என தெரிந்ததும் அவளது செய்கையை கண்டு ரசித்தவன் அவள் அருகில் வந்து நின்றும் ஏதும் கூறாது அவளை முதலில் ரசித்து பின் அளவிடும் பார்வை பார்த்தான் நந்தன்.
நீண்ட நேரமாகியும் அவன் ஏதும் பேசாததால் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனது துளைக்கும் பார்வையில் துணுக்குற்றாள் மஹா.
“எதுக்கு இப்ப இப்படி பார்த்துட்டு இருக்க???? ” மெல்லிய குரலில் மஹா கேட்க,
“மிஸ். கொசுக்குட்டி…..” அழுத்தமான குரலில் நந்தன் அழைக்கவும் விசுக்கென்று நிமிர்ந்து அவனை முறைத்தவள்….
“யார பார்த்து அப்படி சொல்லுற…. உன் கண்ணுதான் நொள்ளைனு நினைச்சேன் ஆனா காதும் டமாரா….? ச்சு… ச்சு” என கேலியாக பரிதாபப் பட்டவளை கேள்வியாகப் பார்த்து வைத்தான்…..
“என்ன புரியவில்லையா???? அங்கிள் சொன்னது கேட்கலையா? என் பெயர் ஸ்ரீ… மஹஸ்ரீ ….. கொசுக்குட்டி இல்ல”என நிமிர்வாக கூறியவளை சில நொடிகள் ரசனையாகப் பார்த்தவன் பின் தன் பார்வையையும் மனதையும் வேறு புறம் திருப்பி மீண்டும் மஹாவைப் பார்த்து,
“அதை விட கொசுக்குட்டி தான் உனக்கு கரெக்டா பொருத்தமா இருக்கு…. “என்றவனை தன் விழிகளை பெரிதாக்கி முறைத்துப் பார்க்க அவள் விழியில் விரும்பியே தொலைந்துப் போக விரும்பினான் நந்தன்.
“சரி நேற்று கூப்பிட்டதுக்கு நிக்காம நீ பாட்டுக்கு ஓடுன… அப்புறம் என்ன சொன்ன….  ஆங்ங்ங்…. காண்டாமிருகம்…… நீ  கொசுக்குட்டி சைஸ்ல இருந்துட்டு என்னை சொல்லுறீயா…. எவ்வளவு திமிர் உனக்கு… ” என மெதுவாக என்றாலும் அவனது சீற்றம் அவனது வார்த்தையில் தெறிக்க அரண்டு விழித்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். 
அவனது வார்த்தை சீற்றத்திற்கும் மலர்ந்த முக பாவனையும் கண்டு குழம்பி தான் போன்னாள் மஹா. 
“என்ன” என்பது போல் புருவம் உயர்த்தி கேட்டவனுக்கு “எதுவும் இல்லை” என்பது போல் தலையை இடமும் வலமுமாக  ஆட்டி வைத்தாள்….
அனைவரும் பார்க்கும் வண்ணம் நந்தன் நிற்க, அவர்களுக்கு முதுகுக் காட்டி நின்றிருந்தாள் மஹா. யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க முகத்தை சிரித்த படியே வைத்துக்கொண்டு அவளிடம் அடிக் குரலில் சீறிக் கொண்டு இருந்தான்….
மஹாவின் அமைதியை கண்டு ,”என்னடி அமைதியா இருக்குற மாதிரி நடிக்குற…. ஓஓஓ…… எல்லாரும் இருக்காங்கனு இந்த வேஷமா….” 
மஹா, “ஹே…. என்ன ‘டி’ போட்டு பேசுற…. கொழுப்பா….???” 
நந்தன், ” ஆமாடி இப்ப என்னடி பண்ணுவ? அப்படி தான்டி பேசுவேன்….” என மேலும் டி போட்டு பேசி அவளை வெறுப்பேற்ற,
“போடா காண்டாமிருகம்…”என்று மஹா பதிலுக்கு எகிற,
“என்னது டா வா?????” என்ற நந்தனை பார்த்து,
“ஆமா டா டால்டா….” என மஹாவும் ,
“அடீங்கு…..” என்று நந்தனும் எகிறிக் கொண்டு வர, இருவரும் சண்டை கோழியாக சிலிர்த்துக் கொண்டு நின்றனர்.
அப்பொழுது பெரியவர்கள் அழைக்க சண்டையிட்டு கொண்டு இருந்த இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டே நகர்ந்து அவரவர் பெற்றோருடன் நின்று கொண்டனர்.
அனி, “என்ன மஹா அக்கா…… எல்லாம் ஓகே யா? உன் டேஸ்ட்டுக்கு தகுந்த மாதிரி இருக்காரா ?” 
அனியின் கேள்வியில் எரிச்சல் அடைந்த மஹா, “நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்குறியா….. என் வாயில இருந்து வாங்கி கட்டிக்காத…. ” என்று இருவரும் மெல்லிய குரலில் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்….
அனி தன் மனதில்’இவளுக்கு என்ன ஆச்சு ஒரு மார்க்கமா இருக்கா….. ம்ம்ம்…. நமக்கு என்ன வந்துச்சு. நம்ம வேடிக்கை பார்க்கலாம்….”’
“இன்னும் மூன்னு மாசம் தானே…. அதுக்குள்ள மஹாக்கு காலேஜ் முடிஞ்சுரும் , நந்தனுக்கும் பாம்பே பிராஜக்ட் முடிஞ்சுரும்…… அப்புறம் கல்யாணத்தை வச்சுக்கலாம்…. இப்ப நிச்சயதார்த்தம் மட்டும் வச்சுக்கலாம்…. என்ன சொல்லுற ராமன் உனக்கு சம்மதமா…” என பத்மாநந்தன் கேட்க அனைவரும் அதற்கு ஏக மனதோடு சம்மதம் சொல்ல அங்கு எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது சம்மந்தப் பட்ட இரு உள்ளங்களை தவிர….
பின் அதே கோவில் உள்ள அர்ச்சகரை வைத்து நிச்சயதார்த்ததிற்கு ஓர் நன்னாளும் குறிக்கப் பட்டது.
“இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு… அதுனால நிச்சயத்தை சிம்பிளா பண்ணிக்கலாம், கல்யாணம் நல்லா கிரேண்டா பண்ணிடலாம்….. உனக்கு சம்மதமா  பா…..” என ராமன் கேட்டதற்கு,
“எனக்கு பரிபூரன சம்மதம் பா….” என தோழர்களாகிய சம்மந்திகள் தங்கள் சந்தோஷத்தை கை குலுக்கி தெரியப்படுத்தினர்.
கடைசியில் நிச்சயதார்த்தம் பெண் வீட்டி வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப் பட்டது.
அஹில்,” அண்ணா கங்கிராட்ஸ்….. டிரீட் வைச்சுரு அண்ணா…” என தன் அண்ணனின் கைக் குலுக்கி தன் வாழ்த்தை தெரிவித்தான். 
பின் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வந்த நந்தன் மஹாவின் புறம் வந்ததும் மெல்லிய குரலில் இருவருக்கும் மட்டும் கேட்கும்படி, “நேத்து நீ காஃபி ஷாப்பில் பேசியதற்கு தண்டனை கல்யாணத்துக்கு அப்புறம் தெரியும்…. நான் யாருனு அப்ப காட்டுறேன் டி என் கொசுக்குட்டி….. பி ரெடி டு ரிசிவ் யுவர் பனிஷ்மென்ட்ஸ்….” என கூறிவிட்டு சென்றான்….
“இவன் என்ன சொல்லுறான்…….?”யோசித்தவள்” லூசு பய….” என மனதில் நந்தனை திட்டிக் கொண்டு இருக்க பத்மாநந்தனும், கார்த்திகாவும் மஹாவிடம் விடைபெற, அஹில்லும் மஹாவிடம் கூறிவிட்டு விடைபெற்று சென்றனர்.
……………..
சென்னையில் மிக பிரம்மாண்டமாய் இருந்த அந்த 5 தளங்களைக் கொண்ட எக்ஸ்போர்ட் மற்றும் ஃபேஷன் கம்பெனியின் நான்காவது தளத்தில், M.D அறையில் சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, வலது கையை நாற்காலியின் கைப்பிடியிலும், இடது கையை தன் நெற்றியிலும் வைத்து தாங்கியவாறு பலத்த யோசனையில் ஆழ்ந்து இருந்த நந்தனை   வெகு நேரம் பார்த்தவாறு  அவனுக்கு எதிரில் அமர்ந்து இருந்தான் கிஷோர்…..
அரை மணி நேரம் ஆன நிலையில், ” அப்படியே தூங்கி இருப்பானோ…. நாம தான் பேக்கு மாதிரி வெய்ட் பண்ணிட்டு இருக்கோம் போல….” என யோசித்தவனின் பொறுமை காற்றாடியாக மெல்ல மெல்லத் அவனை விட்டு தூரம் சென்றுக் கொண்டு இருந்தது. 
மேலும் சில மணித் துளிகள் கடக்க பொறுமையை முற்றிலும் இழந்த கிஷோர், ” டேய்…. இன்னும் எவ்வளவு நேரம் தான் உன்னை நான் சைட் அடிக்குறது? என்னால முடியலடா, சை…. ஃபிகரை சைட் அடிக்க வேண்டிய என்னை இப்படி இங்க உட்கார வச்சு கொடுமை பண்ணுறீயே இது நியாயமா ?”
“ம்ப்ச்ச்… இப்ப ஏன் டா இப்படி கத்துற?” என சலித்துக் கொண்டே டேபிளின் மேல் இரு கைகளையும் கோர்த்து வைத்து, தன்னை நிதானமாக பார்த்த நந்தனை கொலைவெறியில் கிஷோர் பார்த்து வைத்தான்.
நண்பனின் பார்வையை உணர்ந்து நந்தன், ” இப்ப என்ன டா வேண்ணும்?”
“எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் ” என கிஷோர் கூற,
“என்ன உண்மை?” என கேட்டுக் கொண்டே மீண்டும் சாய்ந்து அமர்ந்தான் நந்தன்,  கிஷோர் எதை கேட்க வருகிறான் என்று தெரிந்தே…. 
“நேத்து பொண்ணு பார்க்க போனியே அந்த விஷயம் என்ன ஆச்சுனு சொல்லு…. அப்பா ஃபோன் பண்ணி ரொம்ப சந்தோஷமா பேசுனாரு. நீ என்னடான்னா உலகத்தில உள்ள எல்லா சோகத்தையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி உன் முகத்தில் குடி வச்சு இருக்குற…..” என கிஷோர் கேட்க பதில் ஏதும் கூறாமல் எழுந்து சென்று கண்ணாடி ஜன்னல் வழியாக வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்.
நந்தனுக்கு அவனது மனதில் என்ன இருக்கிறது அவன் எதை விரும்புகிறான் என்றே தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தான். மஹாவின் அருகில் அவன் தன்னை இழப்பதை உணர்ந்தவன், அவள் பேசியது நினைவிற்கு வரவும் அவள் மேல் கடுங்கோபம் எழுவதையும் அவனால் தவிர்க்க முடியவில்லை…… தன் மனதிற்கு என்ன தேவை என்றே அவனால் உணரமுடியாது தவித்தான்.
கன்டிசன்ஸ் தொடரும் …….

Advertisement