Advertisement

UD-5:
“அதோ….. அண்ணா வந்துட்டான்…” என்ற குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க, 
மஹாவின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது,  சட்டென வந்த நந்தனின் நினைவில் அவளது தலை தானாக நிலம் பார்க்க, கை விரல்கள் வேர்த்து நடுங்க தொடங்கின…… 
குரல் வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்க்க, ஆறடி உயரத்தில், இளம் ரோஜா லெனின் சட்டையும் சந்தன நிற பேன்டில், கட்டுக்கோப்பான உடல் வாகுடன் இருந்தவன், கோவிலின் நடை வாசலை லேசாக குனிந்து தொட்டு வணங்கிக் கொண்டே உள்ளே நுழைந்தவனின் கம்பீரத்தில் அனைவரும் அவனை விழிவிரித்துப் பார்க்கவும்,  பத்மாநந்தன் கார்த்திகா தம்பதியினர் தங்கள் மகனின் கம்பீரத்தில் கர்வம் கொண்டனர். 
அனைவரது கவனத்தையும் ஈர்த்தவன், 26 வயது நிரம்பிய நேர்க் கொண்டப் பார்வையும் கம்பீரமும் நிறைந்த ஆண் அழகனாக திகழ்ந்தான். டெக்ஸ்டைல் இஞ்ஞினியரிங்படித்துவிட்டு அதே துறையில் MBA  படித்து இப்பொழுது தனது தந்தையின் டெக்ஸ்டைலை தன் கட்டுப்பாட்டில் நடத்திக் கொண்டு இருப்பவன், பின் தன் சொந்த முயற்சியில் ஒரு கம்பெனியை உருவாக்கி, அவர்களது டெக்ஸ்டைல் கடைக்கு அவனது கம்பெனியில் இருந்து மெட்டீரியல்ஸை சப்ளை செய்வதும் அல்லாமல் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்துக் கொண்டு இருப்பவன்.
அனைவரின் பார்வையை உணர்ந்து லேசாக ஒரு புன்னகையை சிந்திய வாறே அவர்களை நோக்கி முன்னேறினான்.
அப்பொழுது அனி,” ஹே….. மஹா அக்கா…… ஆளு செம்ம ஹேண்சமா இருக்காங்க டி…. ” என்றவள் மஹாவின் புறம் திரும்ப,  அவள் தலை குனிந்து இருப்பதைப் பார்த்து “உனக்குப் பிடிக்கலைனு சொல்லிரு டி…… நான் கரெக்ட்ப் பண்ணிக்குறேன்  ப்ளீஸ்…… ” என்று அனி கூறிய போதும் தலை நிமிர்ந்து பார்க்காமல் ஹேண்சம் என்ற வார்த்தையில் மீண்டும் நந்தனே நினைவில்    வர,
‘சை….. என்னதிது வெறும் 15 நிமிஷம்ப் பார்த்து பேசி…… இல்ல இல்ல சண்டைப் போட்ட ஒருத்தன் ஏன் இவ்வளவு டிஸ்டர்ப் பண்ணுறான்…..’ என நினைத்துக் கொண்டு இருந்தவளின் செவியில் அனியின் ரிக்வெஸ்ட்   விழாமல் போனது.
‘மஹா செல்லம்…. நீ குட் கேர்ள் சோ கண்பியூஸ் ஆகாதடி,  அந்த நந்தனையும் நினைக்காத… உனக்கு வாச்ச இளிச்சவாயன் இந்த யாதவ் தான் மஹா….’ என மனதிற்குள் தன்னை நிலைபடுத்திக் கொள்ள போராடிக் கொண்டு இருந்தாள் மஹா. 
தன் மனதில் முதல் சலனத்தை எற்படுதியவனின் முகமும், வார்த்தைகளும் அவளை குழப்பத்தின் பிடியில் இழுத்து சென்றது….
மஹாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால்,  இருக்கும் இடத்திற்காகவும், ஆட்களுக்காகவும் அமைதி காத்தாள் அனி.
‘என்ன ஆச்சு அக்காக்கு? இவ்வளவு அமைதியா இருக்கா…… கல்யாணம்னு சொன்னதும் திருந்திட்டாளோ….. ஐயோ…. தப்பாச்சே…… ‘ என யோசித்தவள் அதிர்ந்து மஹாவை சட்டென திரும்பிப் பார்க்க,  ஒரு நொடி ஆராய்ச்சியாக அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தவள்,
பின், ‘சே….. சே… இந்த மூஞ்சாச்சும் திருந்துரதாச்சும்…. என்ன விஷயம்னு அப்புறம் பேசிக்கலாம்’ என்று முடிவெடுத்து அமைதியை கடைப்பிடித்தாள் அனி.
அதற்குள் யாதவ் அவர்கள் அருகில் வந்துவிட, “ராமன் இவன்தான் என் பையன் .என்னோட டெக்ஸ்டைல்யை பார்த்துக்குறான், அப்புறம் அவனோட சொந்த உழைப்புல ஒரு கம்பெனிய சக்ஸஸ்புள்ளா ரன் பண்ணிட்டு இருக்கான்” என மகனின் தோளில் தோழமையுடன் கைப் போட்டவாறு,  தன்னுடன் இது நாள் வரை நண்பனாக இருந்து இனி சம்மந்தி ஆக போகும் ஜெயராமனிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அனைவரும் அதை புன்னகையுடன் கேட்டுக் கொண்டு இருக்க….
“வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க???? எப்படி இருகீங்க ஆன்ட்டி?” என இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தான் யாதவ்.
அதில் அனைவரும் அவன் கம்பீரத்திலும் வணக்கம் தெரிவித்த மரியாதையிலும் கவரப் பட்டனர். 
நந்தனுக்கு பதில் வணக்கம் வைத்து விட்ட பின் இரு குடும்பமும் பொதுவாக நலம் விசாரிக்கும் படலம் நடந்திக் கொண்டு இருந்தனர். 
அப்பொழுது பேசிக் கொண்டு இருந்த யாதவின் கால்களில் ஒரு குழந்தை விளையாட்டாய் ஓடி வந்து மோதி நின்றது.
ஒரு குட்டி ரோஜா குவியலை போல் ஏதோ ஒன்று தன் மீது மோதுவதை உணர்ந்து என்னவென்று தலை குனிந்து அவன் பார்க்க, தான் மோதியவர் தன்னை திட்டி விடுவாரோ என்று மிரட்சியுடன் அக்குழந்தை அவனைப் பார்த்து இரண்டடி பின் செல்ல பார்க்க. 
“ஆர் யூ ஓகே பேபி???” என கேள்வி கேட்டுக் கொண்டே மண்டியிட்டு அமர்ந்து அந்த குழந்தையின் கன்னம் கிள்ளி சிரித்தான்.
தான் மோதியவர் கோபம் கொள்ளவில்லை என்றதும் முகம் மலர,” ஐ எம் ஓகே அங்கிள். சாரி அங்கிள். பாய்(bye) அங்கிள்….” என விளையாடும் ஆர்வத்தில் அவசரமாக பதில் கூறி விட்டு ஓடி சென்றது அக்குழந்தை. 
‘அதே வாய்ஸ்…. அதே கேள்வி….. எங்கேயோ கேட்டு இருக்கேனே….’ யாதவ் கோவிலினுள் நுழைந்தது முதல் தலை குனிந்தே இருந்தவள், கம்பீரமான குரலால் யோசனையில் இருந்தவளின் நினைவில் நந்தன் வர சட்டென நிமிர்ந்து பார்க்க, இரண்டாவது அதிர்ச்சியால் விழிகள் இரண்டும் வெளியே தெரிந்துவிடும் அளவிற்கு இமைக்க மறந்து நின்றிருந்தாள் மஹா.
ஆம் இரண்டாம் அதிர்ச்சியே….. இன்று காலை வேளையில் தனதறையில் கேட்ட பாடலில் நந்தனின் நினைவு வர அதிர்ந்தவள், யோசனையில் மூழ்கினாள். இப்பொழுது நினைவில் நின்றவன் நிஜத்தில் தோன்றவும் மீண்டும் அதிர்ந்தாள் ஆனால் அது சந்தோஷத்தின் அதிர்வா? அல்லது பயத்தின் அதிர்வா? என்று அறியாள்…….
குழந்தையிடம் பேசிவிட்டு நிமிர்ந்தவனின் கண்ணில் அவளது அதிர்ச்சி நிறைந்த விழிகள் கொண்ட முகம் அவன் கருத்தில் பட” இவளா…….?” என அதிர்ந்தான் யாதவ் என்று சில நேரம் குடும்பத்தாரும், நந்தன் என்று தொழில் வட்டாரமும் நண்பர்களும் அழைக்கப்படும் யாதவ்நந்தன்……..
‘இந்த கொசுக்குட்டி இங்க என்ன பண்ணுது…..????’ என மனதில் நினைத்துக் கொண்டே மஹாவை உச்சி முதல் பாதம் வரை பார்த்தவன் அவளின் செய்கையும் அலங்காரமும் கண்டு துணுக்குற்றான் நந்தன். பின் அவசரமாக சுற்றிலும் தன் பார்வையை சுழற்றியவன் கண்ணில் தான் எதிர் பார்த்தது கிடைக்காததால் தலை குனிந்து, கண்களை இறுக மூடி ஆள மூச்செடுத்து தன்னை நிதானித்துக் கொண்டான்.
மெதுவாக தலை நிமிர்தவன் மஹாவும் தன்னை கலவரத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து அவனது கொசுக்குட்டியை தீப் பார்வை பார்த்தான்.
அதிர்ச்சியில் இருந்தவள் நந்தன் தன்னை குருகுருவென பார்ப்பதை உணர்ந்தவளுக்கு ஏனோ பெண்ணிற்கே உரிய வெட்கம் வர தாமரை மலர் போல் தலை கவிழ்ந்தாள் மஹா.
மனதில் இனம் புரியா உணர்வுடன் இருந்தவள் மெதுவாக தலையை நிமிர்த்தி பார்க்க, நந்தன் யாரையோ தேடுவதை உணர்ந்து தானும் விழிகளால் அவன் பார்த்த திசை எல்லாம் பார்த்து விட்டு மீண்டும் அவனையே குழப்பமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் 
மனதிற்குள் என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருந்தவள் மூளையில் மணி அடித்தது,’ஆஹா….. மஹா நீ தான் கல்யாண பொண்ணான்னு கன்பார்ம் பண்ணுறான் போல…..? அய்யோ….  நீ இந்த GM கிட்ட இப்படி வசமா மாட்டிக்குவனு தெரியாமப் போச்சே….. இப்ப என்ன பண்ணுறது….’ என மனதிற்குள் புலம்பி குழப்பிக் கொண்டு இருக்கையில் மீண்டும் நந்தனை பார்க்க, அவனது தீப் பார்வை பார்த்தவளோ படக்கென்று தலை குனிந்துக் கொண்டாள். 
‘அப்ப நேத்து நீ பேசுனது என்னை பத்தி தானா……??? சண்டாளி…. இருடி உன்னை கவனிச்சுக்குறேன்……’ என மனதில் கொசு குட்டிக்கு அர்ச்சனை செய்துக் கொண்டு இருந்தான் நந்தன்.
அப்பொழுது” யாதவ், இது தான் மஹஸ்ரீ  காலேஜ் பைனல் இயர் படிச்சுட்டு இருக்கா. ரொம்ப நல்ல பொண்ணு….” என பத்மாநந்தன் அவள் தலையை வருடி கூற,
யாரும் அறியா வண்ணம் மஹாவை முடிந்த மட்டம் முறைத்துக் கொண்டு இருந்தவன் மனதில்’ அப்பா….. இவளா நல்ல பொண்ணு????? சரியான…… பஜாரி. பேசியே ஊரை வித்துருவா…., இவள போய் நம்பி உங்க பையன்   வாழ்க்கையை பாழும் கிணத்துல தள்ளப் பார்க்குறீங்களே அப்பா……’ என நினைக்க….
‘ஆஹாஆஆ…… இந்த அங்கிள் இப்படி அந்த GMயை ஏத்தி விடுறாங்களே….. இது எங்க போய் முடிய போகுதோ தெரியலையே…… முருகா… என்னை காப்பாத்து’  என மனதிற்குள் புலம்பிக் கொண்டே ஓர கண்ணால் நந்தனை பார்ப்பதும் தலையை குனிந்து கொள்வதுமாக இருந்தாள் ….
“சரி சரி நல்ல நேரம் முடியறுதுக்குள்ள  உள்ள போய் சாமியை தரிசனம் பண்ணிட்டு வந்துறலாம். அப்புறம் மேற்க்கொண்டு மத்ததை பேசலாம்….. ” என பத்மாநந்தன் கூற அதை அனைவரும் ஆமோதிக்க கோவிலின் கர்ப்பகிரகதிற்க்கு சென்றனர்…..
மஹாவும், நந்தனும் அவரவர் நினைவில் உழன்றுக் கொண்டு இருந்தனர் அவர்களது மனதை அவர்களே அறியாமல்.  அதை அறிந்து புரிந்து அதை வெளிப்படுத்தும் முன் காலம் கடந்த ஞானமாக இருக்குமோ.???….
விடை விதியிடம்…….
கன்டிசன்ஸ் தொடரும் …….

Advertisement