Advertisement

Ep: 4
காலை 7.45…… வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க, தான் செய்வது சரியா என ஆலோசனையில் இருந்தாள் மஹா. தன்னையும் ஏமாற்றி தன் பெற்றோரையும் ஏமாற்றுகிறோமோ என கலங்கினாள்.
நேரம் ஆவதை உணர்ந்து ஜெயராமன் தன் மனைவியிடம் அனைவரையும் அழைத்துவருமாறு கூற.
“இதோ….. எல்லாரையும் கூட்டிட்டு வரேங்க….. ” என வசந்தா அனைவரையும் அழைக்க செல்கையில் சாந்தியும், அனிதாவும் படி இறங்கி ஹாள்ளுக்கு வந்து கொண்டு இருந்தனர்….. 
“சாந்தி நீ ரெடி ஆயிட்டனா போய் சாப்பிட்டுரு….” என்றவரை அனி குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்து விட்டு,
“ஏன் சித்தி என்னை எல்லாம் சாப்பிடச் சொல்ல மாட்டீங்களா? வீட்டுலையே சின்னப் பொண்ணு நான் தான் ஆனா யாரும் அந்த மாதிரி என்னை கவனிக்கிறது இல்ல….. யாருமே சரி இல்ல….. ” இரு கைகளையும் கட்டிக் கொண்டு கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டாள் அனி.
வசந்தா அவளை பார்த்து கேலியாக சிரித்து விட்டு சாந்தியின் புறம் திரும்பியவர்,
“சாந்தி காலைல நான் சமைச்சு முடிச்சு டேபிளில் எல்லாம் எடுத்து வச்சுட்டு ரெடியாக போய்ட்டேன்.அப்புறம் வந்து பார்த்தா இட்டிலியும் சட்டினியும் நிறைய குறைஞ்சு இருந்துச்சு, எப்படின்னு தான் தெரியல. உனக்கு தெரியுமா…?” என சாந்தியிடம் கேட்டு பார்வையை அனியிடம் நிறுத்தி ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்தி கேட்டார் வசந்தா.
வசந்தா சொல்ல ஆராம்பித்ததும் திருத்திருவென முழித்தவள் அவர் என்னவென்று கேட்கவும், ” அது நான் சாப்பிடலை பெரியம்மா…..”
“நானும் நீ தான் சாப்பிட்டன்னு சொல்லலையே அனி மா” என்றவர்க்கு வாயில் அழகுக் காட்டி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அனி.
அதைப் பார்த்து அனைவரும் சிறு புன்னகையை சிந்தினர் அவளது குறும்பில்….
“அனிதா நீ ஹரியைப் பார்த்தியா???? ” என வசந்தா படி ஏறிக் கொண்டே கேட்க.
“இல்ல பெரியம்மா….. அந்த பிக்(pig) இன்னும் தூங்குதுப் போல” பேசி முடிக்கவும் “ஆஆஆஆ….. அம்மா” என கத்தியவள் நடுமண்டையை தேய்த்துக் கொண்டு இருந்தாள்….
அனி கத்தியதில் அனைவரும் திரும்பிப் பார்க்க ஹரி அனிதாவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
இவர்களைக் கண்டு அனைவரும் சிரிக்கவும், அதில் கோபம் கொண்டு ஹரியை நோக்கி,
“ஏன்டா பிக்(pig) என்னை கொட்டின?” முகத்தை சுருக்கி மண்டையை தேய்த்துக் கொண்டே சண்டைக்கு நின்றாள் அனி.
“உனக்கு ஒன்னு போட்டா எல்லாம் பத்தாது…..” என மீண்டும் கையை ஓங்கிக் கொண்டு வந்தவனிடம் இருந்து தப்பித்து பெரியப்பாவின் அருகில் சென்று நின்றுக் கொண்டு ஹரிக்கு பளிப்புப் காட்டினாள் அனி.
தன்னையே முறைத்துக் கொண்டு இருந்தவனை பார்த்து, ” பாருங்க பெரியப்பா என்னை திட்டுறான்” என்று போலியாக அழுதவளைப் பார்த்து,
“ஏய்… நான் எப்ப திட்டினேன்? உன்னை முறைக்கத் தானே செஞ்சேன்… பொய்ச் சொல்லாத…. அப்புறம் கண்ணு ரெண்டையும் நோண்டிருவேன் ….”என்று திட்டிக் கொண்டே அவள் அருகில் வந்தான் ஹரி.
“இதோ இப்ப திட்டுறீயே… ” என்றவளை முறைத்தவன் தன் தந்தையிடம் திரும்பி,
“எல்லாம் நீங்க குடுக்குற செல்லம் அதான் இப்படி இருக்கா….. ஒரு நாள் நல்லா வாங்க போறா என் கிட்ட. அப்ப யாரும் சப்போர்ட் பண்ணிட்டு வரக் கூடாது, சொல்லிட்டேன்….” ஹரி கோபமாக பேசிக் கொண்டு இருக்கையில்,
“போ தம்பி…. போ… போ…. காத்து வரட்டும் ” என கேலி பேசி விட்டு அவன் கையால் அடுத்த பரிசினை பெறுவதற்கு முன்பு சிட்டாக ஓடியிருந்தாள் அனி.
ஓடும் அவளையே அனைவரும் சிறு சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தனர்.
அனிதா தன் தாய் சாந்தி, தந்தை விஜயராமனுடன் தேனியில் வசித்து வந்தவள், குழந்தை பருவத்தில் தாயின் சொல் கேட்டு அமைதியும் சமத்தாகவும் வளர்ந்து வந்தவள் தான், தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு இயற்கையாகவே அமைதியும், அதிகம் பேசாதவள் அப்பொழுது முற்றிலும் தன்னுள் ஒடுங்கிப் போனாள் தந்தையின் இழப்பில். சொந்தம் என்று யாரும் பெரிதாக இல்லாததால் தன் அக்காவின் வற்புற்றுத்தலில் கோவையில் அவர்களுடன் இருக்க ஒப்புக் கொண்டார் சாந்தி.
ஹரி,மஹா,அனி மூவரும் ஒரே பள்ளியில் தான் படித்தனர். மஹா,அனி இருவரும் ஒரு அணியாகவும், ஹரி ஒரு அணியாகவும் இருந்தனர்.இவ்விரு அணியால் வாரத்தில் பாதி நாள் அவர்களது வீடு போர்க்களமாகத் தான் காட்சி அளிக்கும். முதலில் இதில் அதிகம் பங்கு கொள்ளாத அனி, மஹாவின் சுட்டித் தனத்தால் அனியையும் சிறிது சிறிதாக மாற்றி மஹாவின் ஜுனியர் என்று பட்டம் பெறச் செய்தாள். 
ஹரி என அழைக்கப்படும் ஹரிஹரசுதன், வசந்தா ஜெயராமனின் முதல் வாரிசு,மஹாவின் உடன் பிறந்த அண்ணன், அனிதாவின் உடன்பிறவா உயிராய் திகழும் அண்ணன். பொறியியல் படித்துவிட்டு சென்னையில் பிரபல தொழில் நுட்ப கம்பெனியில் வேலை செய்பவன். 
தந்தையின் புறம் திரும்பிய ஹரி,” எல்லாரும் ரெடினா நாம கிளம்பலாம் அப்பா….”
ஹரியின் கூற்றுக்கு தலை அசைத்தவர், ” ஆமா ஹரி….. நல்ல நேரம் முடியுறத்துக்கு முன்னாடி கோவிலில் இருக்கனும்… நீ போய் கார் ரெடியா இருக்கானு பாரு… “
“சரி பா……” என ஹரி வெளியே சென்று விட ஜெயராமன் பூஜை அறையை நோக்கி சென்றார்…..
தனதறையில் இருந்த கண்ணாடியின் முன்பு கையில் தன் ஃபோனை யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் மஹா….
வாழ்க்கையின் முக்கிய முடிவில் அவசரப்பட்டு விட்டோமோ என யோசித்துக் கொண்டு இருந்தவளை வசந்தாவின் குரல் கலைத்தது.
மஹஸ்ரீ , வசந்தா ஜெயராமனின் ஆசை தவபுதள்வி. ஜெயராமன் கோயம்புத்தூரில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் மேனேஜராக பணி புரிகிற , நேர்மையானவர். வசந்தாவின் உலகம் தன் கணவர், மகன், மகளையே சுற்றி அமைந்த இல்லத்தரசி. மஹஸ்ரீ சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டில் இருப்பவள்.
“இப்ப என்ன பண்ணுறது? அம்மா அப்பா கிட்ட பேசிப் பார்க்கலாமா…. நாம எடுத்து இருக்குற முடிவால் எதிர்காலத்தில் ஏதாச்சும் பிரச்சினைன்னா அவங்க கண்டிப்பா தாங்க மாட்டாங்க….. ஆனா இப்ப கடைசி நிமிஷத்தில் ஏதாவது பேசி அவங்க கஷ்டபடுற மாதிரி ஆயிர கூடாதே…. ” என யோசித்துக் கொண்டு இருக்கையில்,வசந்தா தன் மகளை அழைக்க அறையினுள் நுழைந்தார்.
இது நாள் வரையில் குட்டி தேவதையாக வலம் வந்த தன் மகள் இன்று பட்டு உடுத்தி அழகின் மறுஉருவாய் நிற்பவளை கண்டு உள்ளம் புரித்துப் போனார்.
அவள் அருகில் சென்று,” ரெடி ஆயிட்டியா மஹா….?????? ” என கண்ணாடி முன்பு இருந்த மல்லிகை பூ சரத்தை மடித்துக் கொண்டே கேட்ட வசந்தாவிற்கு பதில் அளிக்காமல் தன் நினைவில் உழன்றுகொண்டு இருந்தாள் குழப்பத்தில்….
பதில் வராததை உணர்ந்த வசந்தா மஹாவை திரும்பி பார்த்து, “மஹா…. ” என அழைக்க அப்பொழுதும் பதில் அளிக்காமல் யோசித்துக் கொண்டு இருக்க.
“அடியே…. மஹா….” தோளில் ஒரு தட்டு தட்ட….
தன் பெற்றோரின் நினைவில் இருந்து வெளி வந்தவள், கேள்வியாக தன்னையே பார்க்கும் தன் தாயை பார்த்து முதலில் “ஙே….” என முழித்தவள் பின் சிறு புன்னகையைப் உதிர்த்தாள் மெலிதாக….
சிறு வயது முதல் இன்று வரை தான் செய்யும் அனைத்துக் சேட்டைகளையும் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கண்டிப்பையும் அன்பையும் ஒருசேர காட்டும் அன்னையை கண்டதும் மனதில் ஏதோ ஒருவித வலி பரவ எதுவும் பேச தோன்றாது சிறு புன்னகையை பதிலாக அளித்தாள்.
மஹாவின் புன்னகையைப் பார்த்து அதிர்ந்த வசந்தா இரண்டடி பின் செல்ல, அவரின் செயலில் துணுக்குற்ற மஹா, ” என்ன ஆச்சு அம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ” என பதட்டத்துடன் அவள் வினவ….
அவள் கேட்ட கேள்வியில் மேலும் அதிர்ந்த வசந்தா கண்கள் விரிய ஆச்சர்யமாக தன் மகளைப் பார்க்க, ” அம்மா….. என்ன ஆச்சுன்னு சொல்லுங்க…..” என மஹா அழுத்தமாக கேட்கவும்,
வசந்தா தன் வாய் திறந்து,” இல்ல என் பொண்ணு எதுவானாலும் பத்து வரி பேசித்தான் பழக்கம் ஆனா இன்னைக்கு அமைதியா சிரிக்குறா, அதுக்கும் மேலே என்னை அம்மானு கூப்பிட்டுட்டா அதான் அதிர்ச்சியா இருக்கு….”
வசந்தா கூறியதை கேட்டு அவரை முறைக்க வசந்தா மேலும்,
” உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே நல்லாத்தானே இருக்க….. ” என அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க,
” வசுஉஉ டார்லிஇஇ…..” என பல்லை கடித்தவளை பொருட்படுத்தாமல் வசந்தா மேலும் அவளை சீண்ட, ” போ மா…. ” என்று தரையை உதைத்து திரும்பி நின்றுக் இருகைகளையும் கட்டிக் கொண்டு உர்ரென்ற முகத்துடன் நின்று இருந்த மகளைப் ஆசை ஒழுக பார்த்தார் வசந்தா.
பின் மஹாவின் தலையை ஆறுதலாக தடவியவர் ” ரொம்ப அழகா இருக்க மஹா…. என் கண்ணே பட்டுரும் போல இருக்கு….” மஹாவின் முகத்தை நெட்டி முறித்தவரைப் பார்த்து சிரிப்பை பதிலாக தந்தாள் நிர்மலமான முகத்துடன்….
பின் தன் இயல்பான குறும்பு தலைதூக்க, ” உங்கள விட நான் அழகா இருக்கேன்னு பொறாமை அதான் என் ஹேர்ஸ்டைலை கலைச்சு விடுறீங்க வசு டார்லி…..டூ பேட்(bad) ….” என தலையை வலமும் இடமும் ஆட்டியவள் கண்ணாடியில் தன் கலையாத தலை முடியை சரி செய்வது போல் பாவனை செய்ய….
“ம்க்கும்…..” என நொடிந்துக் கொண்டவர் ” சரி சரி டைம் ஆச்சு கிளம்பு” பேசிக் கொண்டே மஹாவின் தலையில் மல்லிகை பூ சரத்தை சூட்டினார் வசந்தா.
பின் இருவரும் கீழே இறங்கி வர, ஜெயராமன் தன் மகளை பார்த்து பூரித்துப் போக….. தன் மகள் எல்லாம் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டார்….
“அக்கா சாப்டுறீயா சட்டினி செம்மயா இருந்துச்சு…. பெரியம்மா செஞ்ச சட்டினினா சும்மாவா….” என அனி தான் சாப்பிடவில்லை என்ற சட்டினியின் அருமை பெருமையை பேசிக் கொண்டு இருக்கையில் ஹரி அவள் அருகில் வந்து ” மேடம் நீங்க தான் சாப்பிடவே இல்லையே அப்புறம் எப்படி சட்டினி சூப்பர்னு சொல்லுறீங்க…?” என தாடையை தடவிக் கொண்டே கேட்க.
ஒரு நிமிடம் அவன் கேள்வியில் திணறியவள் பின் சுதாரித்து, “அது….. அது…. அதுதான் பெரியம்மா சமையல் பத்து தெருக்கு வீசுமே அத வச்சு தான் சொன்னேன்…..”
“அப்படியா????? எனக்கு ஒன்னும் வரலையே…” என்றவனை முறைத்து பார்த்தவள்.
“உனக்கு தான் உடம்புல பாதி பார்ட்ஸ் வேலை செய்யுறதே இல்லையே . அந்த லிஸ்டில் உன்னோட மூக்கும் இருக்கு போல…..” யோசிப்பதைப் போல பாவனை செய்ய….
அவள் கூறியதை கேட்டு ஹரி அனி காதை பிடித்து திருக, அதில் ”டேய்…. விடுடா வலிக்குது…. என்ன பெரியப்பா பார்த்து சிரிச்சுட்டு இருக்கீங்க … ஒரு குழந்தைய கொடுமை படுத்திட்டு இருக்கான் பொறுப்பே இல்லாமல் இருக்கீங்க….. காப்பாத்துங்க பீளிஸ்….” என கெஞ்சி கொண்டு இருந்தாள் அனி.
“ஹரி விடு பா…. பாவம் சின்ன பொண்ணு…. வலிக்கும்…” என்று ஜெயராமன் கூற,
“விடு ஹரி….. அவளை பத்தி தான் தெரியுமே அப்புறம் ஏன் நாம நம்ம டைமை வேஸ்ட் பண்ணனும்” என்ற சாந்தியை தீப் பார்வை பார்த்தாள் அனி.
அதற்கு ஹரி சிரிக்க, “ரொம்ப சிரிக்காத பல்லை உடைச்சுருவேன்….” என எரிந்து விழுந்தாள் அனி.
இவை அனைத்தையும் மஹா பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடிக்க.
“அரட்டை அடிச்சது போதும் கிளம்பலாம் டைம் ஆச்சு நல்ல நேரம் முடியப் போகுது பாருங்க….” என வசந்தா கூற அனைவரும் பூஜை அறையில் சாமியை வணங்கி விட்டு கோவில் செல்ல காரில் ஏறினர்.
கார் மருதமலை நோக்கி பயணம் செய்ய மஹாவின் நினைவோ பின் நோக்கி சென்றுக் கொண்டு இருந்தது….
என்ன முயன்றும் மஹாவினால் தன் மனதின் எண்ணங்களை அடக்க தெரியாது திணறினாள். மனதை அடக்க தெரிந்தால் அவன் ஞானி அல்லவா? அதை உணராது தன் நினைவையும், நினைவில் தோன்றும் சஞ்சலங்களையும் அடக்கவும் தெரியாமல், தவிர்க்கவும் தெரியாமல் இருந்தவளுக்கு அந்த ஏசி காரிலும் வியர்த்து வழிய அசௌகரியமாக உணர்ந்தாள் மஹா…
இப்படியே இருந்தால் கோவில் சென்று அடையும் முன் அனைவருக்கும் தன் முகமே தன்னை காட்டி குடுத்துவிடும் என பயந்தவள் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
அனியும் ஹரியும் சண்டையிட்டு கொண்டு வந்ததால் மற்றவர்கள் மஹாவின் தவிப்பை கவனிக்க தவறினர். அது ஒரு வகையில் மஹாவிற்கு சாதகமாக போயிற்று என்று தான் சொல்ல வேண்டும்….
அடுத்த அரைமணி நேர பயணத்தின் முடிவாக கார் கோவிலை வந்து அடைந்தது.
ஹரி காரை (car) பார்க் செய்ய சென்றுவிட மற்ற அனைவரும் கோவிலினுள் நுழைந்தனர்.
“எல்லாம் நல்லதாக நடக்கணும் கடவுளே…..” என வசந்தாவும் ஜெயராமனும் கடவுளிடம் வேண்டிக் கொண்டே கோவிலினுள் நுழைந்தனர்.
“இனி எதுவாயினும் தன் பெற்றோருக்காக பின் வாங்க கூடாது….. கடவுளே முருகா என்னை காப்பாத்து…..” என மனதில் முருகனை நினைத்துக் கொண்டே கோவிலுள் நுழைந்தாள் மஹா.
அப்பொழுது அனி மஹாவிடம் வம்பு வளர்த்து கொண்டே வர மஹாவிற்கு அதில் ஒன்ற முடியாமல் போனது அவஸ்தையில்…
“நாம ஏன் இவ்வளவு கன்பியூஸ் ஆகுறோம்???? எதுக்கு இந்த தவிப்பு நேற்றுவரை தோன்றாத பயம் பதற்றம் இன்று ஏன்????” என யோசித்துக் கொண்டு வந்தவளின் செவியில் அனி உச்சரித்த பெயர் விழவும் ஒரு நொடி அதிர்ந்தாள் தன்னுள்…
“யாதவ்….” என்ற பெயரில் அனியின் பேச்சை கவனிக்கத் தொடங்கியவளின் நினைவில் நந்தன் தோன்ற முற்றிலும் குழம்பித் தான் போன்னாள்…
‘இப்ப எதுக்கு அந்த GMயை பத்தி நினைப்பு வந்துச்சு???? அவன் ஒரு லூசு அவனை பத்தி நினைக்குற நீ அத விட பெரிய லூசு…’ என மனதில் தன்னை திட்டிக் கொண்டே வந்தவளுக்கு முன்தினம் நடந்த அனைத்தும் ஓர் படமாக கண் முன் விரிந்து காட்சி அளிக்க, தன்னையும் அறியாது சிறு புன்னகை ஒன்றை சிந்தினாள் உதட்டோரம்….
அப்பொழுது ,” வசந்தா அங்க இருக்காங்க எல்லாரும்….” என்ற தன் தந்தையின் குரலில் நினைவிற்கு வந்த மஹாவிற்கு மனதும் மூளையும்’நந்தா’ மற்றும் ‘யாதவ்’ வில் குழம்பி தவித்தது.
“கார்த்திகா அங்க பாரு எல்லாரும் வராங்க” என பத்மாநந்தன் தன் மனைவியிடம் கூற,
கோவில் பிராகாரத்தின் வெளி மண்டபத்தில் அமர்ந்து இருந்த அனைவரும் எழுந்து ஜெயராமன் குடும்பத்தை வரவேற்றனர்…..
பத்மாநந்தன், ” எப்படி இருக்க ஜெயராமா….? “
“நான் நல்லா இருக்கேன் பா. நீ எப்படி இருக்க….???” என கேட்டுக் கொண்டே இருவரும் ஆற தழுவிக் கொண்டனர்.
பின்பு சிறிது நேரம் நலம் விசாரிப்புகள் முடியவும்,
“நல்லா இருக்கியா மா?” என கார்த்திகா மஹாவின் தலையை ஆறுதலாக தடவியபடி கேட்க,
‘எதுக்கு இப்ப என் ஹேர் ஸ்டைலை கலைக்குறாங்க…?’ என மனதில் சிணுங்கிக் கொண்டே வெளியில் சிறு புன்னகையுடன் ” நல்லா இருக்கேன் ஆன்ட்டி” என பதில் அளித்தாள்.
அங்கு இருந்தவர்களில் சிலர் மஹாவை பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு இருக்க, அவர்கள் பேச்சை தடை செய்யும் விதமாக பத்மாநந்தன் குரலில் அனைவரின் கவனமும் திசை திரும்பியது.
தன்னை பற்றிதான் பேசுகிறார்கள் என்று மனதில் எழுந்த தவிப்பும் பதற்றமும் மீண்டும் தொற்றிக் கொள்ள முகத்தில் எதையும் காட்டாதிருக்க மிகவும் சிரமப்பட்டாள் மஹா…..
“நேத்து பாம்பேல ஒரு மீட்டிங்…. அதுக்கு போய் இருந்தான். இன்னைக்கு காலைல தான் வந்தான்…… கோவிலுக்கு இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவான். நாம அதுக்குள்ள சாமியை தரிசனம் பண்ணிட்டு வந்துரலாமே ராமன்…. ” என்று கூற,
“இல்ல பா…. அதான் நல்ல நேரம் இன்னும் இருக்கே….. மாப்பிள்ளையும் வந்துரட்டும். எல்லாரும் சேர்ந்தே சாமியை தரிசனம் பண்ணப் போலாம்…..” என ஜெயராமன் பதில் அளிக்க, அனைவரும் அதையே ஆமோதித்தனர்.
மாப்பிள்ளை என்று தன் தந்தை கூறியதும் அவர் முகத்தை ஏறிட்டு பார்த்த மஹாவிற்கு, தனக்கு தோன்றிய குழப்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தன் தந்தைகாக அவர் முகத்தில் தோன்றும் சந்தோஷத்திற்காக எதுவும் செய்ய துணிந்தாள்….
ஜெயராமன் பேசிக் கொண்டு இருக்கையில் கோவிலினுள் நுழைந்தவனை பார்த்து,
“அதோ….. அண்ணா வந்துட்டான்…” என்ற குரலில் அணைவரும் திரும்பிப் பார்க்க, மஹாவின் தலையோ தானாக நிலம் பார்க்க, கை விரல்கள் வேர்த்து உடல் லேசாக நடுங்கியது ……
மகளாய் வலம் வந்த நான் 
மணாளனை சந்திக்க போகும் நாளில் 
பதட்டம் கொண்டேன் ஏனோ …?????????
நேற்று என்னை தாங்கியவனோடு 
தந்தை எனக்காக பார்த்த 
வாழ்க்கை துணைக்கும் 
இடையில் என் மனம் பரிதவிக்க 
நான் அறியாமல் 
என் மனம் கொண்டவனே 
என் மணாளன் ஆவனா
கன்டிசன்ஸ் தொடரும் …….

Advertisement