Advertisement

அவள் கூறி முடித்ததும் நந்தன் அவளை இழுத்துக் இறுக்கி அணைத்து கொண்டான்…சாரி டி… ரொம்ப ரொம்ப சாரி டி…. உண்மை என்னனு தெரிஞ்சுக்காமா உன்னை வார்த்தையால ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்….தன் தவறை உணர்ந்து அவளிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பை வேண்டியபடியே நின்றான்…  
அவனது கன்னம் பற்றி தன்னை பார்க்க செய்தவள், “விடு யாது… நீ அந்த அளவுக்கு என்னை கஷ்டப் படுத்தலை….அன்னைக்கு ராத்திரி மாமா தனி வீட்டுக்கு கூட்டிட்டு போனப்ப, எனக்கு இதுல இஷ்டம் இல்லைன்னு சொல்ல வந்தேன் ஆனா நீங்களும் மாமாவும் பேசியதை கேட்டேன்….. கொஞ்ச நாளைக்கு தானே, அப்புறம் எப்பவும் போல நம்ம வீட்டுக்கு வந்துருங்கன்னு மாமா சொன்னதால ஏதும் பேசாம அமைதி ஆய்ட்டேன்….” 
“அப்புறம் அன்னைக்கு ராத்திரி சண்டை போட்டாலும் எனக்கு நகையை கலட்ட ஹெல்ப் பண்ணுனீயே… அப்ப…அன்று தான் தடுமாறியது நினைவிற்கு வர, வார்த்தையை முடிக்க முடியாமல் வெட்கம் வரவும் உதட்டை கடித்து வார்த்தையை முழுங்கிக் கொண்டு தலை கவிழ்ந்து கொண்டாள்…
அதை கண்டு கண்கள் மின்ன அவளை தன்னை காண செய்தவன்….அப்ப…?”என்று அவளை ஊக்குவிக்க…
அப்ப உன் கண்ணுல ஏதோ ஒன்னு என்னால உணர முடிஞ்சுது… அந்த பார்வைல நான் தடுமாறி போய்ட்டேன்… ஆனால் நீ எனக்கு செம்ம பல்பு குடுத்துட்ட தெரியுமா…மயக்கமாக ஆரம்பித்தவள் சிணுங்களில் முடித்தாள்….
அதில் தன் மனதை தொலைத்தவன்,”உண்மையை சொல்லணும்னா… அன்னைக்கு நானே தடுமாறி தான் டி போனேன்… அவ்வளவு அழகா இருந்தா… என்னை என்னால கண்ட்ரோல் பண்ண முடியல… அப்புறம் கஷ்டப் பட்டு பாஸ்வேர்ட் சொல்லுறல மாறி சொல்லிட்டு பால்கனிக்கு ஓடி வந்துட்டேன்…. ஒருவேலை அங்கேயே நின்னு இருந்தா இன்னெறத்துக்கு மேட்ர் முடிஞ்சு இருக்கும்…கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறிப்பது போல் பாவனை செய்ய அவன் கன்னத்தில் லேசாக ஒரு அறை விட்டாள் மஹா…
அதில் அதிர்ந்து தன் கன்னத்தில் கை வைத்தவன்,”ஏன்டி அடிச்ச…?” 
அடிக்காமல்… அன்னைக்கு என்னை ரேப் பண்ண பார்த்து இருப்ப… ஏதோ கடவுள் புண்ணியத்தில் நான் தப்பிச்சேன்…என்று பெருமூச்சு விட,
அது எப்படி டி ரேப் ஆகும்… அன்னைக்கு நீயும் தானே என் மேல் ஆசையா இருந்த…என்று கண்ணடித்தவனை கண்டு வெட்கம் கொண்டவள்,
உண்மை தான் யாது… ஆனா அன்னைக்கு எனக்கு உன் மேல இருந்தது காதல்ன்னு நான் உணரவே இல்ல… அன்னைக்கு ஐடி கார்டுக்கு சண்டை போட்டோம்மே அப்ப லேசா புரிஞ்சுது அப்புறம் ,என்னை தனியா விட்டுட்டு போனியே அப்ப தான் முழுசா புரிஞ்சுது….அவனது கால்களுக்கு நடுவில் அமர்ந்து இருந்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்து ஷர்ட் பொத்தனை திருகியடி அவள் கூற, அவளை தன்னிடம் இருந்து பிரித்தெடுத்தவன்… 
ஆமா… அன்னைக்கு ஏன் அப்படி உட்கார்ந்து இருந்த…?என்று அவசரமாக கேட்க,
அவனது செயலில் ஒன்றும் புறியாமல் முழித்தவள்…..
என்னைக்கு எப்படி உட்கார்ந்து இருந்தேன்….?எத கேட்குற நீ…?”
அதான் டி… அன்னைக்கு நைட் நான் மீட்டீங் போய்ட்டு வரும் போது கைல கத்தி எல்லாம் வச்சுக்கிட்டு… காளி மாதிரி உட்கார்ந்து இருந்தியே…என்றவனை முறைத்து பார்த்தவள் அவனுக்கு நான்கு மொத்துக்களை தந்துவிட்டு தொடர்ந்தாள்…
அது நான் ஏழாவது படிக்கும் போது அம்மா அப்பா கடைக்கு போயிருந்த நேரம் யாருனே தெரியாத இரண்டு பேரு வீட்டுக்குள் நுழைஞ்சு என்னை…. பிரச்சினை பண்ணாங்க… அப்ப நான் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினதுல பக்கத்து வீட்டுல இருந்த சந்தியாவோட அப்பா அம்மா வந்து பார்த்து அந்த தடியனுங்களை அடிச்சு போட்டு என்னை காப்பாத்துனாங்க…. அப்ப இருந்து வீட்டுல தனியா இருக்கணும்னா ரொம்ப பயம் டா… அன்னைக்கு கிட்சன்ல ஏதோ விழுற சத்தம் வேற வந்துச்சா அதான் பயந்துட்டேன்…மெதுவாக தலை குனிந்து கூறியவளை தன் தோளோடு அணைத்து கொண்டவன்சாரி டி…. வெரி சாரி டி கொசுக்குட்டி… உன் விஷயத்தில் நான் நிறைய தப்பு பண்ணி இருக்கேன் டி… அன்னைக்கு ரொம்ப பயந்துட்டியா…?குற்றவுணர்ச்சியில் குரல் கமர கேட்டவனின் கன்னம் பற்றி நெற்றியில் அழுத்தமாக தன் முத்தத்தை பதித்தவள், “ஆமா… ஆனா அது உன் தப்பு எதுவும் இல்லை… நான் போட்ட கண்டிஷன்ஸ் தான் எல்லாத்துக்கும் காரணம்…..என்றவளை வாரிக் கட்டி அணைத்தவன்…
தன் மேல் தவறிருந்தும் அதை காட்டிகொள்ளாமல் இருப்பவள் அன்று எவ்வளவு பயந்து இருப்பாள் என்று எண்ணி குற்ற உணர்ச்சியில் அவளை மேலும் மேலும் இறுகி அணைத்து மன்னிப்பை வேண்டினான்…..
பின், “நீ அந்த கண்டிஷன்ஸ் எல்லாம் சும்மா பேச்சுக்கு தான் போட்டேன்னு தெரியும்… அது தாங்காதுன்னும் தெரியும்….என்று கூறி மற்றோரு கண்ணில் இதழ் பதித்தான்….
அப்பொழுது சில்லென்று காற்று வீச, அதில் கீழே சிதறி கிடந்த காகிதங்களில் இரண்டு பறந்து வந்து இவர்கள் அருகில் வர அதை பார்த்தவர்கள் அர்த்த சிரிப்பொன்றை சிந்தினர்…
பின் நந்தன் அவளின் மதி முகத்தில் தன் இதழ்களால் ஊர்வலம் நடத்த கடைசியாக அந்த ஊர்வலம் தனக்கு சொந்தமான இடத்தில் இளைப்பாற எண்ணி முன்னேறும் சமயம்….
 
நேரங்கெட்ட நேரத்தில் ஒரு விஷயம் நினைவிற்கு வந்து அவசரமாக நந்தனிடம் இருந்து தன்னை பிரித்துக் கொண்டாள்….
அதில் எரிச்சல் உற்றவன்…”ஏய்… என்னடி பிரச்சினை உனக்கு…. ஏன் டி மனஷசனை கொல்லுற… என் பிலீங்ஸ் உனக்கு புரியுதா இல்லையா…?” என்று கேட்க, அதற்கு வாய் மூடி சிரித்தவள், அவனை கடுப்பேற்ற எண்ணி
என்ன ஃபீலிங்ஸ் யாது….?” என்று அப்பாவியாக கேட்க
அதற்கு அவளை முடிந்த மட்டும் முறைத்தவன், “பிரச்சினை பண்ணாம இருந்தா உனக்கு சேதாரம் கம்மி…. இல்லைனா….என்று விட்டு விழிகளால் அவளை அளவெடுக்க…
அவனது பார்வையில் பெண்ணவளின் நாணம் துளிர்த்தெழ, தலையை குனிந்துக் கொண்டவளை பார்த்து வாய்விட்டு பெரிதாக நகைத்தவன், தன் மனையாளின் அழகிய வெட்கத்தில்  கர்வத்தோடு  அவளை பார்த்து கண் சிமிட்டி இடது கையால் தன் மீசையை திருகிக் கொண்டான்…
 
தலைகுனிந்து கண்களை மட்டும் உயர்த்தி அவனது தோரணையை ரசித்து விட்டு மீண்டும் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்… 
சரியான திருட்டு கொசுக்குட்டி….என்று அவள் பார்வையை கண்டு அவள் முகத்தை தன் முன் இழுத்தவன் அவள் கன்னத்தில் நறுக்கென்று கடித்து வைத்தான்….
அதில் மஹா,”ஆஆஆ….. காண்டாமிருகம் ஏன்டா கடிச்ச… அப்புறம் ஏன்டா என்னை திருட்டு கொசுக்குட்டின்னு சொன்ன….கோபமாக அவனிடம் இருந்து தன் முகத்தை விடுவித்து கொண்டவள் அவன் கடித்த கன்னத்தை தேய்த்துக் கொண்டாள்.
சும்மா டி… கொஞ்ச நாள் ஆசை இப்படி உன் கன்னத்தை கடிக்கணும்னு…என்றுவிட்டு அவள் கன்னத்தை ஒரு விரலால் சுண்டி விட, அவள் அவனது கையை தட்டி விட்டு முறைப்பை பதிலாக தந்தவள், “அப்புறம்…என்று விஷயத்திற்கு வர,
அப்புறம் திருட்டுத் தனமா என்னை சைட் அடிக்குறது… நான் தூங்கும் போது என் மீசையை முறுக்கி விடுறது வச்சு சொன்னேன்…..தன் மீசையை நீவி விட்டபடி கூறியவனை கண்டு அதிர்ந்தவள்
அப்ப… அப்ப… நீ நேத்து தூங்கலையா…. ?”என்று அதிர்ந்து கேட்க, புன்னகையுடன் இல்லைஎன்று தலையை ஆட்டவெட்கம் பிடிங்கி திண்ண முகம் சிவப்பேறி உதட்டை கடித்து அவனை பார்க்க முடியாமல் வேறேங்கோ பார்த்துக் கொண்டு இருக்க… 
அவளின் நிலை அறிந்து தன்னை காண செய்தவன், “இப்ப எதுக்கு இவ்வளவு ரியாக்ஷன்…. உனக்கு சொந்தமானது தானே அப்புறம் என்ன டி…அதில் மேலும் வெட்கம் வர, அவன்  நெஞ்சில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்…. 
அவன் சட்டை பொத்தனை திருகியபடி மெல்லிய குரலில், “நீ தூங்கலைன்னா ஏன்டா என்னை தேடல… ?”என்று லேசாக எட்டிப் பார்த்த சோகத்துடன் கேட்க,
உனக்கு தெரியுமா டி நான் தேடலைன்னு….என்று கேட்ட மறுநொடி அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்தவள்,
நிஜமா தேடுனியா டா…?” மனதில் முன் தினம் தோன்றிய சிறு சுனக்கம் இப்பொழுது மறைந்து ஆர்வமாக கேட்க…
ஆமா டி என் கொசுக்குட்டி…. நீ போன பின்னாடி சில விஷயங்களை நிதானமா யோசிச்சுப் பார்த்தேன் அப்ப தான் நான் உன்னை தப்பா புரிஞ்சுக்கிட்டது, குடும்பத்துக்கு மேல் உனக்கு  இருந்த மரியாதை, என் மேல் இருந்த லவ்ன்னு எல்லாம் புரிஞ்சுது…என்று அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தவன் அதன் பின் அவன் தேடியது, சித்தியுடன் அவள் பேசியது, அறைக்கு வந்த பின் தன்னை கொலை முயற்சி செய்யவந்து தன் மீசையுடன் விளையாடியது பின் அவளை அணைத்துக் கொண்டு உறங்கியது என அனைத்தும் கூறியவன் அவனுக்கும் அவளுக்கும் நடுவில் இருந்த சிறிதளவு இடைவெளியை இல்லாதவாரு அமர்ந்தவன் அவள் கையில் காயம் பட்ட இடத்தில ஒரு முத்தம் வைத்து மன்னிப்பை வேண்டினான்……. தான் முன்னர் நடுவில் விட்ட பணியை தொடர போனவனை தடுத்து தள்ளி அமர்ந்தாள்….
ஏய் கொசுக்குட்டி… என்னை ரொம்ப சோதிக்குற டி… இது நல்லதுக்கு இல்ல டி…என்றவன் கடுப்பாக,
அப்படி தான் பண்ணுவேன்… என்னடா பண்ணுவ…திமிராக கேள்வி கேட்டவள் அவனை விட்டு நகர போக
என்ன டி கேட்ட, என்ன பண்ணுவேனா…? இப்ப பாரு டி என்ன பண்ணுறேன்னு…என்றவன் தன்னை விட்டு சற்று தூரம் நகர்ந்தவளின் பாதங்களை ஆவேசமாக பற்றி தன் புறம் இழுக்க, பளிங்கு தரையில் அவன் பலம் கொண்டு இழுத்ததும் வழுக்கிக்கொண்டு அவன் அருகில் வந்த அடுத்த நொடி அவளை தரையில் சாய்த்து அவள் மேல் படர்ந்தான்… 
அதில் அதிர்ந்தவள், “டேய்… என்னடா பண்ணுற… விடுடா…. விடுடா காண்டாமிருகம்…அவனிடம் இருந்து விலக முயல்கையில் ,
ம்ம்ம்… பார்த்தா தெரியலை உன்னை ரேப் பண்ண போறேன்…என்று விட்டு அவள் இதழ் நோக்கி குனியும் வேளையில்,
 
தடிமாடு… விடுடா… கொஞ்சம் பேசணும்…என்று அவனிடம் இருந்து விடுப்பட போராடியவளின் வார்த்தையில் அவள் பக்க வாட்டில் அவளை ஒட்டியபடி ஒருக்களித்து படுத்தவன், தலைக்கு கைகளால் முட்டுக் கொடுத்து விரல்களால் அவள் இதழ்களை தீண்டிய படி,
இன்னும் என்ன டி பேசணும்…? நாளைக்கு பேசலாமே டி கொசுக்குட்டி….என்று அவள் இதழ்களை சுண்டி இழுத்து அதில் முத்தம் வைக்க போனவின் கன்னத்தில் அவள் கைகளால் நச்சென்று ஒரு முத்தம் வைத்தாள்…. 
தன் கன்னத்தில் கைகளால் தேய்த்துக் கொண்டே,”என்னடி ரொம்ப அடிக்குற….?” என்று பாவமாக கேட்க, மஹாவிற்கு என்னவோ போல் இருக்க… எம்பி அவன் கன்னத்தில் தன் இதழ்களால் அடித்த இடத்தில் ஒத்தடம் வைத்து
சாரி டா… ரொம்ப அடிச்சுட்டேனா… வலிக்குதா…என்று அக்கறையுடன் கேட்டவளை பார்த்து
இல்லடி…  கொசுக்குட்டி கொசு அடித்தது போல் இருந்தது…என்று டைலாக் பேச, அதற்கு அவளிடம் இருந்து முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டான்…. 

Advertisement