Advertisement

ஒரு சின்ன சிரிப்புடன் அவனது அணைப்பை லேசாக தளர்த்த… அதில் சற்று ஆசுவாசமாக மூச்சு விட்டவள் அவனை விட்டு விலக நினைக்கும் தருணம்… அவன் மஹாவின் இடையில் கையிட்டு பக்கம் இழுத்து அணைத்த வாக்கிலே பால்கனியின் தடுப்பு சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான்…
 
அவளும் அவனுக்கு வாகாக அவன் மீதே சாய்ந்து அமர்ந்து, அவனது சட்டை பொத்தனை திருக்கியப்படி அவனை ஒருதரம் நிமிர்ந்து பார்த்தவள் மெல்லிய குரலில்…. 
உன் கிட்ட கொஞ்சம் பேசணும் யாது….என்று கூற,
அவன் தன் கைகடிகாரத்தை பார்த்து விட்டு, “ஒரு நிமிஷம் இரு….என்றவன் மீண்டும் தன் கைகடிகாரத்தை பார்த்தான்…. 
அவனது செயலை கண்டு ஒன்றும் புரியாமல் அவன் முகத்தையும் அவன் கைகடிகாரத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள்…. 
அப்பொழுது நந்தன் அவளை தள்ளி அமர வைத்து….. 
ஐ லவ் யூ டி கொசுக்குட்டி….என்று விட்டு அவள் வலது கையில் ஒரு மோதிரத்தை அணிவித்து அதில் சிறு முத்ததையும் பதித்தான்… 
அவனது செயலை கண்டு திகைத்தவள், அவனையே பார்த்துக் கொண்டு இருக்க, அதற்கு அவன் அவளை பார்த்து கண்ணடித்து…
என்னடி….?” என கேட்ட அடுத்த நொடி அவன் மடிமீது இருந்தாள் மஹா… 
அவனது இச்செயலை எதிர் பார்க்காததால் சற்று தடுமாறியவள் பிடிமானத்திற்கு அவனது ஷர்டு காலரை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்… 
இப்ப நான் பேசுறேன் நீ கேளு… நடுவுல நோ கிராஸ் டாக்….என்றவனை தடுத்து…
இப்ப எதுக்கு நீ டைம் பார்த்து லவ் சொன்ன…? “என்று கேள்வி எழுப்ப,
இப்ப தான் சொன்னேன் நோ கிராஸ் டாக்கன்னு…என்றவன் அவள் மூக்கை பிடித்து ஆட்டிஇதே நாள்… இதே நேரம் மூன்னு மாசத்திற்கு முன்னாடி ஒரு தேவதைய பார்த்தேன்… பார்த்து ஜர்க் ஆகி சைட் அடிச்சேன். அப்புறம் பேச ஆரம்பிச்ச பின்னாடி தான் தெரிஞ்சுது அது சரியான பஜாரின்னு…என்றவனை முதலில் அடி வெளுத்தவள் பின் காதலோடு அவனை அணைத்து முத்தம் ஒன்று வைத்தாள்…இப்ப சொல்லு  கேட்குறேன்…என்றுவிட்டு அவன் மேல் சாய்ந்து கொண்டவள்….
நான் உன்னை சந்தேக படவே இல்லை டி… எனக்கு கோபம் எல்லாம் அந்த கண்ணன் மேல தான் அவன் உன் கையை பிடிச்சு இழுத்தது தான் கோவம் அதான் அன்னைக்கு கத்திட்டேன்… ஏன்னா கட்டிக்க போறவனையே சாமியாரா இருக்க வைக்க பிளான் போட்டவளாச்சே…. அப்படி இருக்க நான் எப்படி டி உன்னை இன்னொருத்தன் கூட… எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு ஸ்ரீ…. அன்னைக்கு நான் முழுசா பேசுறதுக்கு முன்னாடி நீ தடுத்துட்ட, அவன் கையை பிடிச்சு இழுத்தா நாலு விடாம அவன் கிட்ட கெஞ்சிட்டு இருக்கணு தான் சொல்ல வந்தேன் ஸ்ரீ……பேசியபடி அவளது ஒரு கண்ணில் அழுத்தி ஒரு முத்தம் வைத்தான்…. 
அதை காதல் பொங்க வாங்கிக் கொண்டவளின் கை அவனது ஷர்டு காலரை இறுக பற்றியது…
நந்தன், “அப்புறம் வர்ஷு…என்றதும் அவள் முகம் சட்டென தொங்கிவிட,
அவள் மதிமுகத்தை இருகைகளிலும் ஏந்தியவன், அவள் மூக்கோடு மூக்கை உரசி அவளை பார்த்து கண்ணடித்து என்னஎன்று கேட்க,
ஒன்றுமில்லை என்று மறுப்பாக தலையசைத்தவளின் நெற்றியில் முட்டி…
எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்… ஆனா நீ நினைக்குற மாதிரி இல்ல ஸ்ரீ… அவ எனக்கு தங்கச்சி மாதிரி… எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேண்ணும்னு சின்ன வயசுல ரொம்ப அடம் பன்னினேன் ஆனா அம்மாக்கு யூட்ரஸ் பிராபிளம் இருந்ததால, இரண்டாவது குழந்தைக்கு வாயிப்பில்லாமல் போச்சு அப்போ தான் வர்ஷு பிறந்தா…. நான் தான் அவளை முதலில் தூக்கினேன்… பிங் கலர்ல ரொம்ப அழகா இருந்தா… அவளை என் தங்கை மாதிரி தான் பார்த்தேன் அவளும் அப்படிதான்… இது வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும்…என்று கூறியவனை கண்டு குற்றணர்ச்சியில் தலை குனிந்தவள் மெல்லிய குரலில் சாரி யாது…என்க
அவள் வாய் மீது விரல் வைத்து வேண்டாம்  என்பது போல் தலையை ஆட்டியவன், “சாரி கேட்க இதில் எதுவுமே இல்ல டி…. நீ கோவப்பட்டது ரொம்ப சரி… புதுசா எங்க குடும்பத்துக்குள் வந்த உனக்கு எப்படி இது பத்தி சொல்லாமல் தெரியும்… நான் தானே சொல்லி புரிய வச்சு இருக்கணும், தப்பு என் மேல தான் டி…என்றவனை இறுக அணைத்துக் கொண்டாள் மஹா…. 
அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் நான் நல்லா புருஷன் தான் டி….என்றவனை கேள்வியாக பார்த்தவளின் நாசியில் சிறு முத்தம் வைத்தவன், பாட்டியிடம் அவளுக்காக பேசியது இன்று காலை உணவருந்தும் போது பாட்டியிடம் இருந்து காப்பாற்ற பசிக்குது என்று உரைத்தது என்று அனைதையும் கூறி முடிக்க மஹா அவனை இறுக கட்டி அணைத்து நெஞ்சில் இதழ் பதித்தாள்….
 
சிறிது நேரம் நீடித்த அந்த இதமான அணைப்பு, பின் தான் கேட்க வேண்டியது நினைவிற்கு வர, அவனை விட்டு சட்டென பிரிந்தவள் அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.
அவள் விலகியதும் புரியாமல் விழித்தவன் அவள் கைப்பிடித்து அருகில் இழுக்க முயற்சி செய்ய, அவளிடம் இருந்து சுளீர் என்று ஒரு அடி கிடைத்து…
ஏன்டி… ஒல்லியா தொடப்பக்குச்சி மாதிரி இருந்துட்டு இப்படி அடிக்குற… ஏன்டி தள்ளி போற… எதுவா இருந்தாலும் இப்படி பக்கம் வந்து கட்டிக்கிட்டே பேசு..  “என்று ஆசையாக அழைக்க,
என்னது தொடப்பக்குச்சியா….என்றவள் அவனது முதுகில் நான்கு போட்ட பின்னரே சற்று ஓய்தாள்.
அவளது அனைத்து அடிகளையும் இன்முகத்துடன் வாங்கினான் நந்தன்…
அவனையே முறைத்துப் பார்க்க, அவளது கையை பிடித்து இழுத்தவன் அவனது கால்களுக்கு நடுவில் அவளை அமர வைத்து பின்னோடு அவளை தன் கைவளையத்திற்குள் கொண்டு வந்தவன் அவளது தோள்பட்டையில் தன் நாடியை பதித்து, “எதுவா இருந்தாலும் இப்படியே சொல்லு… இனி நமக்கு நடுவுல எந்த இடைவெளியும் இருக்க கூடாது…என்றவனுக்கு பதில் அளிக்காமல் அவனது மூச்சு காற்று தன் தோள்பட்டையில் பட்டு கூச, அதில் நெளிந்து  கொண்டு இருந்தாள்…
அதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளை இன்னும் சற்று நெருங்கி அணைத்துக் கொண்டு, “சொல்லுடி எதுக்கு அடிச்ச….?”
ம்ம்ம்… கொஞ்சம் தள்ளி உட்காரேன் டா… எனக்கு இப்ப கோவ படணும்.. நீ இப்படி எல்லாம் பண்ணா நான் எப்படி கோவபடுவேன், கேள்வி கேட்பேன்…?” என்று சிணுங்க, அதில் அழகாய் ஆழமாய் தொலைந்து போனான்…
பரவாயில்லை இப்படியே சொல்லு…என்க,
ம்ப்ச்ச்…என்று சலித்து  கொண்டவள்,
நீ ஏன் கூட்டுக் குடும்பமா வாழ்ந்தா தெரிஞ்சு இருக்கும்… என்னை என் குடும்பத்தில் இருந்து பிரிச்சுட்டன்னு சொன்ன…? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா… உண்மையா நான் மாமா கிட்ட எதுவும் பேசல டா… எனக்கு எதுவும் தெரியாது…நா…அவள் முடிக்கும் முன் தன் கைக்கொண்டு அவள் வாயை பொத்தியவன், அவளை தன்னை பார்க்கும்படி திரும்பி அமர செய்து
நான் நிறைய தப்பு பண்ணி இருக்கேன் ஸ்ரீ… அது எல்லாத்துக்கும் சாரி டி… நான் தான் உன்னை தப்பா புரிஞ்சுக்கிட்டேன் ….என்றவன் அன்று காஃபி ஷாப்பில் தான் கேட்டதும் கிஷோர் கூறியதும் அதன் பின் அவளை பார்த்ததும் தன் மனதில் அவள் வந்ததும் என் அனைத்தையும் கூறினான்….
 
அதை அமைதியாக கேட்டுக் கொண்டவள், “கிஷோர் அண்ணா சொன்னது கரெக்ட் யாது… நீ பாதில போய்ட்ட, அப்புறம் நாங்க பேசுனதை நீ கேட்கல… அன்னைக்கு…அன்று நிகழ்ந்ததை நந்தனுக்கு கூற தொடங்கினாள்…. 
*****
ஹாய் ரேஷ்மி… எப்படி இருக்க? வாழ்த்துக்கள் டி கல்யாண பொண்ணு..என்று சந்தியா அவளை வாழ்த்த, ரம்யாவும், மஹாவும் தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்…
எப்ப டி கல்யாணம்…என்று மஹா கேட்க,
நெஸ்ட் மன்த் டி…. மூன்னு பேரும் வந்துருங்க….என்று விட்டு பத்திரிகையை தோழிகளுக்கு கூடுத்துவிட்டு பொதுவாக பேசிக்கொண்டு இருந்தவர்களின் பேச்சு தனிக்குடித்தனம் பற்றி பேச தொடங்கியது.
ரேஷ்மி, “முதல கல்யாணம் பண்ணி அவங்களோடு போயிரணும் இல்ல தனிய வந்துரணும் மாமனார் மாமியார்ன்னு எஸ்ட்ரா லக்கேஜ் கூட எல்லாம் என்னால இருக்க முடியாது சாமி…என்றவளை புழுவை பார்ப்பது போல் பார்த்து வைத்தனர் தோழிகள் மூவரும்…
மஹா, “நீ சொல்லுவது கரெக்ட் தான் ரேஷ்மி கல்யாணம் ஆகிட்டா தனியா வந்துரணும்… நாம என்ன ஃபிரியா வேலை செய்யவா போறாம்… நம்ம லைஃப் நாம தான் வாழணும்… இதுல கூட்டு குடும்பம்னா ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ்… எதுக்கு அந்த தலைவலி எல்லாம்…சொந்தம்னா லீவுக்கு வந்தாங்களா பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டாங்களா…. பார்க் போனோமா ஊருக்கு கிளம்பினோமான்னு இருக்கணும்…. இல்ல ரேஷ்மி…? அத விட்டுட்டு ஒரே குடும்பமா இருந்து யாரு வேலை எல்லாம் செய்யுறது…என்றவளை சந்தியாவும், ரம்யாவும் அதிர்ந்து பார்க்க, ரேஷ்மி அதை தலையை ஆட்டி பலமாக ஆமோதித்தாள்…. 
அப்பொழுது தான் நந்தன் கோபத்தில் காஃபி ஷாப்பை விட்டு வெளியேறியது…. 
பின் மஹா,”ஏன் ரேஷ்மி நீ வினோத்தை விரும்பிதானே கல்யாணம் பண்ணிக்க போற….?”என்று கேள்விய எழுப்ப, அதற்கு ரேஷ்மி ஆம்என்று தலையை ஆட்டி ஆமோதிக்க,
ம்ம்… நீ கல்யாணம் பண்ணி போகும் போது உனக்கும் உன் பேரன்ஸ்க்கும் ரொம்ப கஷ்டமா இருக்கும்ல…என்று கேட்டுக் கொண்டே சாப்பிட
அதற்கும் அவள் ஆம் என்று தலையை ஆட்ட, அதற்கு மஹா, “அப்பா அம்மாவை விட்டு வரது ரொம்ப கஷ்டம், வலிக்கும்ன்னு உனக்கு தெரியும்… அப்படி இருக்கும் போது, நீ நேசிக்குற ஒருதர்க்கு அதே வலியையும், கஷ்டத்தையும் தரனும்ன்னு நினைக்குறது பேரு காதலா டி… ?” என்று வாயில் சான்வெஜ்யை அடக்கியப்படி கேட்க மூவரும் அவளை பார்த்து விழிக்க, ரேஷ்மிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை….
லுக் ரேஷ்மி நீ இன்சல்ட் ஆகணும்… கஷ்ட படுத்தணும்னு சொல்லல… கூட்டு குடும்பத்தில் இருக்குறது ஒரு டைப் ஆஃப் என்ஜாய்மென்ட்… நாம நிறைய லேர்ன் பண்ணிக்கலாம்… நாம இதுல எல்லாம் எஸ்பீரியன்ஸ் கிடையாது… சோ பெரியவங்க கிட்ட இருந்து நிறைய தெரிஞ்சுக்கலாம்… லைஃப்ல அட்ஜஸ்ட்மென்ட் வேண்ணும் இல்லாட்டி போர்(bore) அடிச்சுரும்… அதுக்குன்னு லைஃப் முழுக்க அட்ஜஸ்ட் பண்ணிட்டே இருக்கும்ன்னு அர்த்தம் இல்ல… சோ இப்படி எல்லாம் பேசாத ரேஷ்மி எதிர்காலத்தில நமக்கு நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறாலாம்….என்றவளை பார்த்தவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்றுவிட சந்தாயாவும் ரம்யாவும் சிநேகமாக புன்னகைத்து கொண்டவர்கள் தன் உணவில் கவனம் ஆயினர்….
*********

Advertisement