Advertisement

UD:30
ஊஞ்சலில் ஆட முயற்சி செய்தவள் முடியாமல் போகம்ப்ச்ச்…என்று சலிப்புடன் அதை விடுத்து நேராக அமர்ந்து கொண்டாள்…
அடுத்த சில நொடிகளில் ஊஞ்சல் தானாக ஆட அதிர்ந்து ஊஞ்சலின் கம்பியை இறுக பற்றியவள் தன்னை நிதானித்து வேகமாக அருகில் திரும்பி பார்க்க அங்கு நந்தன் அமர்ந்து இருந்தான்… 
இருவரும் எதிர் எதிர் திசையை நோக்கி அமர்ந்து இருந்தனர்…. 
அவனை கண்டு ஆச்சர்யம் கொண்ட மஹா, ‘இந்த காண்டாமிருகம் எப்ப வந்துச்சு…  நாம அது கூட கவனிக்காமல் உட்கார்ந்து இருந்தோமா… சைஎன்று எண்ணியவளுக்கு அடுத்து அவனிடம் எவ்வாறு பேசுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள்…
மஹா ஊஞ்சலில் அமர்ந்து சில நொடிகளிலேயே நந்தன் அவ்விடம் வந்து சேர்ந்தான் ஆனால் அவள் பலத்த யோசனையில் இருந்ததால் அவனை கவனிக்கவில்லை… 
அவள் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை கவனித்தவன் சத்தம் எழுப்பாமல் அவள் பின் புறத்தில் சென்று தடுப்பு சுவற்றின் மேல் சாய்ந்து நின்று இருகைகளையும் அகல விரித்து சுவற்றின் மேல் ஊன்றி, வலது காலை இடபுறமாக லேசாக மடக்கியவாறு நின்று மஹாவை பார்த்துக் கொண்டு இருந்தான்….
சிறிது நேரம் கழித்து அவள் ஊஞ்சலில் ஆட விரும்பி அது முடியாமல் போனதை கண்டவன்… சற்று இடைவெளி விட்டு அவளுக்கு எதிர் திசையை பார்த்தப் படி அமர்ந்து காலை லேசாக ஊன்றி ஊஞ்சலை ஆட்டினான்…. 
தன்னை கண்டு விட்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தவளை கண்டு தனக்குள் லேசாக புன்னகைத்து கொண்டவன்… 
நீ சொன்ன மாதிரி பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்…என்றவனை புரியாது அவன் முகத்தையே பார்க்க,
அவளது கேள்விகள் சுமந்த முகத்தை கண்டு சிரிப்பு வந்தாலும் அதை ரசித்தவன் பின் இறுகிய குரலில்…எனக்கு பிடிச்ச மாதிரி என் லைஃபை வாழலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன்… சோ…என்று கூறி இழுத்தவன் திரும்பி மஹாவின் முகத்தை பார்க்க,
இருவரும் எதிர் எதிராக அமர்ந்த நிலையில்  தலையை மட்டும் திருப்பி பார்க்க விழிகள் நான்கும் சில நொடிகள் தங்கள் உலகில் சஞ்சரிக்க தொடங்கின.
சிறிது நேரத்தில்… ஒரே நிலையில் இருந்த மஹாவிற்கு கழுத்து வழிக்க துவங்கவும், மனமே இல்லாமல் தன் விழிகளை அவனிடம் இருந்து பிரித்துக் கொண்டாள்.
பின் நந்தனே மேலே தொடர்ந்தான், “சோ… நாம பிரிஞ்சுரலாம்…என்று கூறியவனை அதிர்ந்து அவனை பார்த்தவள்… அவன் முகத்தில் எந்த ஒரு வேதனையும் தெரியாமல் இயல்பாக இருக்க,
எவ்வளவு அசால்ட்டா சொல்லுறான்…. கொஞ்சம் கூடவா என் மேல பீளிங்ஸ் இல்ல… எந்த விதத்திலுமா நான் அவன் மனசுல இல்லாம போய்ட்டேன்…மனதில் நொறுங்கி போனவள் தன்னை அவனுக்கு புரிய வைக்கும் நோக்கோடு பேச வாய் திறக்கும் முன், அதை கை நீட்டி தடுத்தவன்
நான் முழுசா சொல்லி முடிச்சுற்றேன்….என்றவன் மேலே தொடர்ந்தான்…
நமக்கு இப்ப தான் கல்யாணம் ஆகி இருக்கு… நாம இப்ப டிவோர்ஸ்க்கு அப்பிளை பண்ணாலும் ஒரு வருசம் ஆயிரும்… நம்மளோடது மியூச்வல்  டிவோர்ஸ்னால பெருசா பிராப்ளம் இருக்காது…என்று விட்டு அவள் முகம் பார்க்க அதில் அதிர்ச்சி, கோபம், ஏமாற்றம் என அனைத்தும் சேர்ந்து அவள் முகத்தில்  குடியேறி இருந்தன… 
அப்பபபா…. இந்த முகத்தை பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கே…. இந்த கண்ணுக்குள்ள விழுந்துருவேன் போல… எவ்வளவு பெருசா விரிக்குறா… கண்ணழகி….மனதில் அவளின் மதிமுகத்தை ரசித்தவன் நிலைமை புரிந்து தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து தன் தலையை திருப்பிக் கொண்டான்…
அதில் சுயம் பெற்றவள், தலை கவிழ்ந்து மெல்லிய குரலில், “நான் எப்ப மீயூச்வல் டிவர்ச்சுன்னு சொன்னேன்…என்று கேட்க,
அவளது கேள்வியில் சிரிப்பு வர, அதை அடக்கி, “நீ தானே நேத்து சொன்ன, நீ எனக்கு வேண்டாம்… நான் உனக்கு வேண்டாம்னு…கூலாக தோளை ஆட்டி சொன்னவனை கொலை செய்யும் வெறி எழுந்தது மஹாவிற்கு…. 
ஏன்டா எருமை மாடு… நான் கோவத்தில் சொன்ன என்னை சமாதானம் படுத்தாம… இதுதான் சாக்குன்னு ஓட பார்க்குறீயா…. எவ்வளவு திமிரு இருக்கும்… நீ சொன்ன உடனே நான் உன்னை விட்டு போயிறனுமா… பன்னி… பூதம்… உன்னை…மனதில் திட்டியவள் அவனை துவம்சம் செய்யும் எண்ணத்தில் ஆவேசமாக அவன் புறம் திரும்பியவள்.
அவன் கையில் சில காகிதங்களை சரி பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவள், ‘என்ன பேப்பர் அது… ம்ம்ம்… பொறு மஹா… அது என்னன்னு தெரிஞ்ச பின்னாடி அவனை மாவாட்டலாம்… இந்த காண்டாமிருகத்திற்கு இருக்குற திமிரு, கொழுப்புக்கு கோவை சரளா ஸ்டைல் தான் பாளோ பண்ணனும்… பொறு மஹா… பொறு…ஊஞ்சலின் கம்பியை இறுக பற்றி தன் கோவத்தை கட்டு படுத்திக் கொண்டாள்…
தான் கொண்டு வந்த பேப்பரில் அனைத்தையும் சரி பார்த்தவன்… அவளிடம் அதை பற்றி கூற அவள் புறம் திரும்பிவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது…
மஹா அவன் கையில் இருந்த காகிதங்களை கண்களாலேயே எரித்து விடுவது போல் அதையே குறுகுறுவெனப் பார்த்து கொண்டு இருந்தாள்… சிறு குழந்தை கோபத்தில் அமர்ந்து இருப்பது போல் தோன்றியது நந்தனுக்கு…
கண்ணாளையே பச்சை வாழையை எறிச்ச மாதிரி இவ பேப்பரை எறிச்சுருவா போல… சீக்கிரம் சொல்ல வேண்டியதை சொல்லிடு டா இல்லாட்டி தர்மடி உறுதியாயிரும்…என்று எண்ணி தன் தொண்டையை கணைக்க….
அதில் சுயத்திற்கு வந்தவள் வெடுக்கென்று தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்….
அதை கண்டு நமட்டு சிரிப்பை உதிர்த்து விட்டு, மெல்ல தொடங்கினான்…
இந்த ஒரு வருஷம் மட்டும்… அதாவது டிவோர்ஸ் வரும் வரைக்கும் நாம சேர்ந்து தான் இருந்தாகணும் வேற வழி இல்ல…பேசியவனுக்கு அவள் மனதில் சேர்ந்து தான் இருந்தாகணும்ன்னு ரொம்ப கஷ்டப் பட்டு சொல்லுரான்… திமிரு டா உனக்கு உடம்பு எல்லாம்… பேசி முடி டி… அப்புறம் இருக்குடி உனக்கு கச்சேரி…
நந்தன்,”சோ… இந்த ஒரு வருஷம் நாம சேர்ந்து இருக்குறதுக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு…. அத இந்த பேப்பர்ஸ்ல என்னனு மென்ஷன் பண்ணி இருக்கேன்…. அன்ட் நெக்ஸ்ட்… இந்த டிவோர்ஸ் பேப்பர்ஸ் எல்லாத்தையும் ஃபில் பண்ணிட்டேன் ஒன்ஸ் நீ செக் பண்ணிட்டு சைன் பண்ணிடு… நான் நாளை என்னோடு வக்கீல் கிட்ட குடுத்து பிராசஸ் பண்ண சொல்லிடுவேன்….என்றவன் அந்த காகிதங்களை ஊஞ்சலில் அவனுக்கும் அவளுக்குமான இடைவேளையில் வைத்து அதை அவள் புறம் நகர்த்தினான்…
அவனையே  பார்த்துக் கொண்டு இருந்தவள், ‘என்ன இவன் இப்படி பேசாறான்… நான் கண்டிஷன்ஸ் போட்டதால  இப்படி எல்லாம் பண்ணுறானா… மளிகை லிஸ்ட் கொடு  சாமான் வாங்கிட்டு வரேன்னு சொல்லுற மாதிரி சைன் போட்டு குடு பிராசஸ் பண்ணுறேன்னு சொல்லுறான்… அப்ப எனக்கும் இவனுக்கும் அவ்வளவு தானா… இந்த பேப்பர்ஸ் தான் எல்லாத்தையும் நிர்ணயம் பண்ணுதா…. எனக்கு மனசு வலிக்குது யாது… ஏன் இப்படி பண்ணுற…காகிதத்தில் தன் பார்வையை செலுத்தியவளுக்கு கண்கள் இருட்டி கொண்டு வருவதை போல் உணர்ந்தாள்…
ம்ம்ம்… படிச்சு பார்த்ததுட்டு சைன் போடு…அவளை படிக்க சொல்லி ஊக்குவிக்க….
அவனது வார்த்தையில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், லேசாக கலங்கிய கண்களோடு நடுங்கிய கையால் அவர்களுக்கு நடுவில் இருந்த காகிதங்களை அவனை பார்த்தபடியே எடுத்தவள்… வெகமாக மூச்சையெடுத்து விட்டு தன் கையில் இருந்த கண்டிஷன்ஸ் அடங்கிய காகிதங்களை பார்வையிட ஆரம்பித்தாள்…
காகிதத்தில் இருந்தவை….
இனி நாம் தனிதனி அறையில் இருக்க கூடாது, ஒரே அறையில் தான் இருக்கணும்….  என் கையணைப்புக்குள் தான் இனி உன் உறக்கம் இருக்க வேண்டும் அதுவும் நான் தான் முடிவு எடுப்பேன், நீ எப்பொழுது தூங்க வேண்டும் என்பதை… இனி உன் வாழ்க்கையில் எந்த ரகசியமும் எனக்கு தெரியாமல் இருக்க கூடாது அதே போல் தான் என் வாழ்கையும்… தினமும் நீ என்னிடம் அன்பா, பாசமா வசனங்கள் பேச வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை ஆனால் சண்டை போடாமல் இருக்க கூடாது… இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் சாப்பிடாமல் பட்டினியாக இருக்க கூடாது….படிக்க படிக்க உதட்டை கடித்து தன் கேவலை அடக்க முடிந்தவளாள் கண்களில் நிற்காமல் வழியும் கண்ணீரை அடக்க முடியவில்லை….
படித்து முடித்ததும் வேகமாக தன் பக்கத்தில் அமர்ந்து இருந்தவனை பார்க்க திரும்பியவள், அங்கு அவன் இல்லை என்றதும் நன்றாக திரும்பி தன் பின்புறம் தேட,
நந்தன், “ஸ்ரீ….மென்மையில் மென்மையாக காதலோடு அழைக்க,
அவன் குரல் வந்த திசையை திரும்பி பார்த்தவள், கண்கள் இரண்டும் அகல விரிந்தன….
ஊஞ்சலில் அமர்ந்து இருந்தவளின் முன் ஒரு காலை மடக்கி ஒரு காலில் தன் கைகளை ஊன்றி பாதி மண்டியிட்டு அமர்ந்து இருந்தான் நந்தன்…
முகம் பிரகாசமாக, கண்களில் காதலோடு இருந்தவனை கண்டு அவளின் இதயம் அவன்பால் முழுவதும் வீழ்ந்து தன்னை அவனுள் புதைத்துக் கொள்ள தோன்றியது மஹாவிற்கு….
நந்தன் கண்களில் காதலை தேக்கி வைத்து உயிர் உருகும் வார்த்தைகளால் மஹாவிடம் கேட்க, கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது…. 
ஸ்ரீ…. என் வாழ்க்கை முழுவதும் என் கூட சண்டை போட்டு, அடித்தடியோடு, போர்கலமா காதல் செஞ்சு ,என்னை சகிச்சிக்கிட்டு   வாழ உனக்கு விருப்பமா….?”மண்டியிட்ட வாக்கிலே வலது கையை அவள் புறம் நீட்டி கேட்டவனை இமைக்காமல் கண்களில் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டு இருந்தாள்… 
அவள் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறாள் என்று உணர்ந்த நந்தன்… அவளை பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்திஎன்னடி கொசுக்குட்டி உனக்கு ஓகேயா…?” என்று கேட்க,
அவன் கேட்ட தோரணையில் மயங்கியவள், “யாதவ்…..என்று ஒரு கேவலுடன் அவனை அமர்ந்த வாக்கிலே அவன் கழுத்தை சுற்றி கட்டி கொண்டவள் அழத்தொடங்கினாள்… 
பின் அவனை கட்டிக் கொண்டே மெதுவாக ஊஞ்சலை விட்டு சரிந்து அவனுடன் தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் நெஞ்சில் தன் முகத்தை அழுத்தி புதைத்துக் கொண்டாள்… நந்தனும் அவளை எவ்வளவு தன்னுள் இறுக்கி கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு காற்று கூட புக முடியாத அளவு அவளை அணைத்து இருந்தான்…
வார்த்தைகள் பரிமாறி கொள்ள வேண்டிய அவசியம் இன்றி மௌனத்திலும், அணைப்பிலும் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்… 
நீண்ட நேரம் அதே நிலை தொடர, மஹாவின்  அழுகையும் கேவலும் நின்று அவன் நெஞ்சில் உணர்ந்த சுகத்தில் முகத்தில் புன்னகை படர அமர்ந்து இருக்க, நந்தனோ நிம்மதியும் தன் பொருள் தன்னிடமே வந்து விட்ட சந்தோஷத்தில் அவளை மேலும் இறுக அணைத்துக் கொண்டான்…. 
சில மணி துளிகள் கடந்து செல்லவும், மெல்ல அவன் நெஞ்சில் இருந்து தன் தலையை நிமிர்த்தி பார்த்தவள், அவன் நெஞ்சில் ஒரு விரலால் சுரண்டி, “யாது…என்று மெல்லிய குரலில் நந்தனை அழைக்க
பெண்ணின் மென்மையிலும், காதலின் சுகத்திலும் ஆழ்ந்து இருந்தவனுக்கு அவளது அழைப்பு காதிலேயே விழவில்லை… மேலும் அவன் அந்த நிலையை கலைக்க விரும்பவில்லை என்றே சொல்லலாம்….
அவன் அசையாது இருக்கவும், மீண்டும் முன்பு போல் சுரண்டி கொஞ்சம் அழுத்தமாக  அழைக்க  அப்பொழுதும் அவன் அசைந்தபாடில்லை….
அதில் தன் பொறுமையை இழந்தவள்…
 
டேய் காண்டாமிருகம்….என்று சற்று குரலை உயர்த்தி அழைக்க,
ம்ப்ச்ச்… என்னடி…ஏகாந்த நிலையை அவள் கலைக்கவும் சலித்துக் கொண்டான்… 
ரொம்ப டைட்டா கட்டி புடிச்சு இருக்க டா… மூச்சு முட்டுது… கொஞ்சம் லூசா கட்டி புடியேன்…என்று லேசாக எட்டிப் பார்த்த வெட்கத்தோடு கூற
சட்டென குனிந்து அவள் முகத்தை பார்க்க, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவள் அவன் தன்னை பார்க்கவும்…. அவள்  தன் தலையை தாழ்த்தி கொண்டாள்… 

Advertisement