Advertisement

அவனோ, அவளது விழி அழகில் அழகாய் தொலைந்து போனான் அத்தருணத்தில் கூட. அவன் தடுமாறிய அந்த நொடியை பயன் படுத்தி கையை தட்டி விட்டு  படுக்கையை விட்டு வேகமாக எழுந்தவள் அவனை விட்டு விலகி நின்று,
இந்த தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத… மரியாதை கெட்டுட்டும்….கோபத்திலும், இயலாமையிலும், தன் வசம் இழந்தவளின் வார்த்தைகளும் அவள் வசம் இழந்தது….
என்ன டி ஓவர போற? உன்னை கல்யாணம் பண்ணிட்டு இன்னும் சாமியார் மாதிரி இருக்கேன் பாரு… நீ இதுவும் பேசுவ, இன்னுமும் பேசுவ…அவளது வார்த்தையில் அவனுக்கும் கோபம் வர அவளிடம் எகிறினான். 
ரொம்ப நடிக்காத… அதான் பார்க்குறேனே உன் சாமியார் வேஷத்தை…நக்கலாக அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு நெஞ்சுக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு கூறியவளை கண்டு நந்தனுக்கு கோபம் எல்லையை தொடும் நிலையில் இருந்தது… 
ஏய் என்ன டி அப்படி பார்த்த? உன்னை கல்யாணம் பண்ணுறது முன்னாடியே கண்ணியமா இருந்தவன்… நீ என்னோட மனைவின்னு நினைச்சுக்கூட உன் கிட்ட நான் வரம்பு மீறாமல் இருந்து இருக்கேன்… அப்படி இருக்கும் போது என்னடி பெருசா பார்த்த…?”
திருமணத்திற்கு பிறகு அவளே அவனை தூக்கத்தில் அணைத்த போதும் தன்னை கட்டுபடுத்தி விலகி நின்றவன். மனைவியே ஆயினும் அவளது விருப்பம் இல்லாமல் தொடுவது தவறு என்று எண்ணி கண்ணியம் காத்து வந்த தன் மேல் அவ்வாறான குற்றச்சாட்டில் பொறுமையை இழந்தான்…
அவளோ அவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்து விட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.
அதில் இன்னும் கோபம் அடைந்தவன், “இப்ப சொல்ல போறீயா இல்லையா…?” அவளை நோக்கி ஒரு அடி முன் நோக்கி சென்றான்.
ஒன்னுமே தெரியாத மாதிரி என்ன ஒரு நடிப்பு… செம்ம… அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேனே உன் கண்ணியமான நடவடிக்கையை… அவளது குத்தல்பேச்சில் அதிர்ந்தவன்,
நீ… நான் வர்ஷுவை தூக்கிட்டு வந்ததை பார்த்து சொல்லுறீயா…?”
அவனை வெற்று பார்வை பார்த்து இகழ்ச்சியாக புன்னகை புரிந்த விதத்திலேயே அவனுக்கு புரிந்தது அவள் தன்னையும் வர்ஷுவையும் கண்டு தான் இவ்வாறு பேசுகிறாள் என்று.
அதில் அவனுக்கு கோபம் வந்தும், வெளி காட்ட விருப்பாதவன் அவனுக்கும்  வர்ஷுக்கும் இடையேயான பந்தத்தை புரியவைக்க நினைத்தான்.
இங்க பாரு ஸ்ரீநீ நினைக்குற மாதிரி எல்லாம் இல்ல… அவ படம் பார்த்துட்டு வரும் போது கீழ விழுந்துட்டா… அதுல அவ கால் லேசா சுளுக்கிருச்சு… நடக்க கஷ்ட பாட்டாளேனு தான் தூக்கிட்டு வந்தேன் மத்தப்படி வேற ஒன்னும் இல்ல…குரலை உயர்த்தாமல் முயன்று வரவழைத்த பொறுமையுடன் மென்மையாக விளக்கினான்.
ம்ம்ம்…. அப்புறம்…?” ஏதோ கதை கேட்கும் தோனியில் அவள் ம் கொட்டி கேட்க
ஏய் என்னடி திமிரா…?”பொறுமை அவனை விட்டு பறந்து கொண்டு இருந்தது… 
ஆமா டா இப்ப என்ன அதுக்கு? அம்மணி கீழ விழுந்தாங்களாம் துரை தூக்கிட்டு வந்தாங்களாம்…. ஏன் உங்க இரண்டு பேரை தவிர வேற யாரும் கூட வரலையோ…? வீட்டுலையே இவ்வளவு படம் ஓட்டுறீங்கனா, தியேட்டரில என்ன நடந்துச்சோ….அவள் பேசியதில் கேலியும் நக்கலும் ஏகத்துக்கும் வழிந்தது.
அவள் கூறியதில் தன்னை முற்றிலும் இழந்த நந்தன், “ஏய்……பெரும் கர்ஜனையுடன் அவளை அடிக்க கையை ஓங்கி கொண்டு வர, மஹா ஒரு நொடி அதிர்ந்து அவனையும் ஓங்கி அவன் கையையும் மாறி மாறி பார்த்தாள்.
அவள் விழியில் கண்ட அதிர்வும், முகத்தில் இருந்த சோகமும் அவனை நிதானப்படுத்த, தான் செய்ய துணிந்த காரியத்தை எண்ணி தன்னை தானே வெறுத்தவன், கையை உதறி விட்டு அவளுக்கு முதுகு காட்டி நின்று இடது கையால் தன் தலையை கோதி தன்னை சமன் செய்ய முயற்சித்தான்.
ஓஓ…. அந்த அளவுக்கு போயிருச்சா… அவளுக்காக இவ்வளவு துடிக்குறவன், எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கணும்… உன் மாமா பொண்ணையே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தானே….தன் மீது அவனுக்கு காதல் இல்லை என்று வருந்தியவள், இப்பொழுது அவன் அவளுக்காக தன்னை அடிக்க கையை ஓங்கும் அளவிற்கு தன்னை சுத்தமாக பிடிக்கவில்லை, அவளை தான் பிடித்து இருக்கு அதனால் தான் தன்னை ஒவ்வோறு முறையும் தானிட்ட கண்டிஷனை சொல்லி காட்டி வதைத்தான் என்று அவள் தவறான எண்ணங்களால் தவறாகவே பேசினாள்.
ஆமா டி… பெரிய தப்பு பண்ணிட்டேன் உன்னை கல்யாணம் பண்ணியதுக்கு பண்ணாமலே இருந்து இருக்காலம்… என் நிம்மதியாச்சும் போகாமல் இருந்து இருக்கும்… சை… கோபத்தில் கூட அவன் பேசிய வார்த்தையில் அவளை தவிர வேறோரு பெண்னை மணந்து இருக்கலாம் என்று அவன் கூற முடியாத அளவுக்கு, அவன் மனதில் அவளே நிறைந்து இருந்தாள். ஆனால் அதை அவன் இன்று இப்பொழுது வரை வெளிக்காட்டாமல் அவளிடம் கூறாமல் இருந்ததே மீக பெரிய தவறாகி போனது.
அவனது வார்த்தையில் பெரிதும் அடிப்பட்டு போனாது அவளது காதல் கொண்ட  இதயம். அவளுக்கு முதலில் அவன் மேல் வந்த ஈர்ப்பு அவனுடன் சண்டையிட்டு அடிதடியில் இறங்கி, அவனை பற்றி சிந்தித்து என அழகாய் உண்டான காதல் அதை அவள் உணர்ந்து அனுப்பவிக்கும் முன்னே அதை அவன் செயலாலும், வார்த்தையாலும் வதைக்கும் படி ஆனாது….
அவனது வார்த்தையில் கலங்கி போய் நிற்க, அவன் அவளை சிறிதும் ஏறேடுத்தும் பார்க்காமல் குளியலறைக்குள் சென்று தன்னை நிதானமாக்க முயற்சித்தான்.
சிறிது நேரத்தில் வெளி வந்தவன் அவள் இன்னும் அதே இடத்தில் அணி அடித்தார் போல் நின்று இருப்பதை கண்டு…. அவளிடம் பேச வாய் திறக்கும் முன், ‘எதுக்கு தேவையில்லாத வம்பு… இப்ப எது பேசினாலும் சண்டைல தான் முடியும் அதுக்கு பேசாம போய் படுத்துறலாம்..தலையை ஆட்டி தன்னுள் பேசி கொண்டவன்,
அவளிடம் எதுவும் பேசாமல் படுக்கையில் படுக்க செல்ல, அவனையே அடிப்பட்ட பார்வையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவள். அவன் தன்னை கண்டு கொள்ளாதது மேலும் கோபத்தையும், ஆங்காரத்தையும், வெறியையும் கூட்ட, அவன் அருகில் சென்று,
இப்ப இவ்வளவு பேசுறவன் அன்னைக்கு நான் ஹோட்டல்ல இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்ன்னு எவ்வளவு கேட்டேன் அப்ப எல்லாம் என்னால முடியாதுன்னு சொல்லிட்டு இப்ப வந்து தப்பு பண்ணிட்டேன்னு சொல்லுற… அப்பவே இந்த கல்யாணத்தை நிறுத்தி இருந்தா நான் நிம்மதியா இருந்து இருப்பேன்… இப்படி இங்க வந்து இந்த வீட்டுல அந்த பாட்டியோட எனக்கு மல்லு கட்ட வேண்டி இருந்து இருக்காது… சை…கோபத்தில் வார்த்தைகளை கவனிக்காமல் வெளியிட்டாள் மஹா… 
அவள் பேசியதில் தனிந்த கோபம் மீண்டும் தலை தூக்க, “ஆமா டி…. உனக்கு மல்லு கட்டுற மாதிரி தான் தெரியும்… கூட்டு குடும்பத்தில் இருந்து வாழ்ந்து பார்த்து இருந்தா அதோட அருமை தெரியும் இல்லாட்டி இப்படி தான் மரியாதை இல்லாமல் பேசுவ… உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு நான் வந்ததும் என்னை என் குடும்பத்தில் இருந்து பிரிச்சவதானே நீ…அவன் வார்த்தையில் கோபமும் நக்கலும் ஒருங்கே கலந்து வெளி வந்தது….. 
அதை கேட்டதும் மஹாவிற்கு எங்கு இருந்தான் அவ்வளவு ஆத்திரமும், வெறியும் வந்ததோ தெரியவில்லை… வெடித்து சிதறும் எரிமலையாய் வந்தது அவளது வார்த்தைகள்,”போதும்….. போதும்…. போதும்… போதும்….கைகளால் தன் காதுகளை இறுக முடி கத்தியவள், பின் நிமிர்ந்து கலங்கிய விழிகளோடு அவனை பார்த்தவள்,
இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் ஜாக்கிரத்தை…கோபத்தில் வேகமாக மூச்சு வாங்க அவனை வெறி பிடித்தார் போல் பார்த்து கொண்டு இருந்தவள், தொடர்ந்தாள்
அது என்ன எப்ப பாரு குடும்பமா வாழ்ந்து இருந்தா தெரியும்ன்னு டைலாக் விடுற… அப்ப நான் என்ன அநாதையா வளர்ந்தவளா…. சொல்லு டா நான் என்ன தனியா யாரும் இல்லாமல் வளர்ந்தேனா? அன்னைக்கு ரிஷப்ஷன் முடிஞ்ச அன்னைக்கு ராத்திரி கூட இதையே சொல்லி நான் தப்பு பண்ணதா என் மேல பழி போட்ட… எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லியும் கேட்காம அடிக்கடி குத்தி காட்டி பேசுற… உனக்கு என்னை பத்தி என்ன தெரியும் சொல்லு….. என்னடா தெரியும்… ?”
நான் முதல கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன் தான் அப்புறம் உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன் முடிவு பண்ணதுக்கு அப்புறம் நான் எதை பத்தியும் யோசிக்கல… அன்னைக்கு ராத்திரி என்ன சொன்ன உன்னை உன் குடும்பத்தில் இருந்து நான் பிரிச்சுட்டேனா? எப்படி டா உனக்கு அப்படி சொல்ல தோணுச்சு… நான் வேலைக்கு போறேன்னு உன் கிட்ட மட்டும் தான்  சொன்னேன்… அத்தை கிட்டையோ, மாமாகிட்டையோ இத பத்தி நான் பேசவே இல்ல… இன்னும் சொல்ல போனா என் அப்பா அம்மாகே கல்யாணத்திற்கு அப்புறம் தான் தெரியும்…. அப்படி இருக்கும் போது நான் எப்படி பிளான் பண்ணி உன்னை பிரிச்சேன்னு சொல்லுற…கண்களில் கண்ணீர் வழிய ஆவேசமாக பேசியவளை அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தானே ஒழிய அவளை எதிர்த்து பேசவும் இல்லை, அவளை ஆறுதல் படுத்தவும் இல்லை….
அவளே, எனக்கும் ஒரு அண்ணா இருக்கான்… ஒருவேளை அவன் எங்களை விட்டு தனியா போற மாதிரி இருந்தா அது எவ்வளவு கஷ்டமும், குடும்பத்தில் இருக்குறவங்களுக்கு எவ்வளவு வலியை தரும்ன்னு எனக்கும் தெரியும் அப்படி இருக்கும் போது நானே அந்த தப்பை செய்வேனா…. ?” அவளது இந்த வார்த்தை அவனை மேலும் அதிர செய்தது… 
உன்னை முதன்முதல சந்திச்ச அன்னைக்கு அந்த மால்ல(mall) என் கூட படிச்ச பொண்ணை பார்த்தேன்… அவ கூட சொன்னா கல்யாணம் பண்ணி தனியா போனால்தான் ஜாலின்னு. நான் தான் அவளுக்கு புரிய வச்சேன் அது தப்புன்னு. ஆனா இன்னைக்கு என் மேல எப்படி பட்ட பழியை போட்டு இருக்க…?கண்களில் கண்ணீர் வழிய தேம்பிய படி பேசியவளின் வார்த்தையில் யாரோ தன் தலையில் ஓங்கி கொட்டியது போல் உணர்ந்தான். 
அப்பொழுது கிஷோர் கூறிய வார்த்தைகள் நந்தனின் நினைவில் வந்தது, அவசர பட்டு எந்த முடிவுக்கும் வந்துராத… அவங்க பேசிட்டே இருக்கும் போது நீ கோபப்பட்டு பாதில வந்துட்ட. நானும் உன் பின்னாடியே வந்துட்டேன்… , சிஸ்டர் கிட்ட இத பத்தி பேசி என்னனு முடிவு பண்ணு..என்றது. தான் இமாலய தவறு இழைத்ததை உணர்ந்தான் நந்தன். அவனது சிந்தனையை மீண்டும் கலைத்தாள் மஹா,
அப்புறம் என்ன சொன்ன குடும்பத்துக்கு மரியாதை கொடுக்கலையா.? எதை வச்சு அப்படி சொன்ன யாது….?” அழுதுக் கொண்டே தன் முகத்தை ஏக்கமாக பார்த்து கேள்வி கேட்டவளின் விழிகளை சந்திக்க வழி தெரியாமல் தலை குனிந்தான் நந்தன். 
அதை கண்டு கேலி புன்னகை உதட்டோரமும், கண்களில் கண்ணீருமாய் நின்றவள் அவனை நேராக பார்த்து, “நமக்கு கல்யாணம் ஆன இத்தனை நாள்ல உன் கிட்ட இத நான் சொன்னதே இல்ல யாது… ஈகோன்னு கூட வச்சுக்கோ… சொன்னா  கிண்டல் பண்ணுவன்னு நான் சொல்லல…ஒரு நொடி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, அவள் என்ன கூற போகிறாள் என்று எதிர்பார்ப்பில் அவளை நிமிர்ந்து பார்த்தான். 
அவள் தலை கவிழ்ந்து, எனக்கு சமைக்கவே தெரியாது யாது… நம்ம வீட்டுல இருந்தப்ப தான் அத்தை தோசை சுட கத்து குடுத்தாங்க… டீ, காஃபி கூட இரண்டு பேருக்கு போடுற மாதிரி தான் கத்துக்கிட்டேன்… ஆனா இங்க வந்து எல்லாத்தையும் பண்ணினேன், வெரகு அடுப்புல சமைக்க தெரியாம கை எல்லாம் சுட்டு… தலை கவிழ்ந்து இருந்தவள் அவள் உள்ளங்கையை பார்க்க கண்ணீர் இன்னும் முட்டிக் கொண்டு வந்தது….
அவளுக்கு சமைக்க தெரியாது என்பதை அறிந்து இருந்தான் தான். ஆனால் இங்கு வந்தது முதல் அவள் எவ்வாறு பெரியவர்களை சமாளிப்பாள் என்பதை அவன் மறந்தே போனான்… இப்பொழுது அவள் கூறிய பின்னரே தன் தவறை  உணர்ந்தான். 
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அப்பொழுது தான் அவள் கைகளை பார்த்தான். அவனை விட்டு சற்று தள்ளி நின்று பேசி கொண்டு இருந்ததால் அவளது கை காயம் சரியாக அவனுக்கு தெரியா விட்டாலும் காயத்தை ஓர் அளவுக்கு அவனால் பார்க்க முடிந்தது… அவளை உடனே அள்ளி அணைத்து ஆறுதல் படுத்து துடித்தது அவன் மனது.
எனக்கு தெரியாது, செய்ய முடியாதுன்னு சொல்லி மறுத்து பேசி இருக்க முடியுமே யாது. அது மரியாதையா இருக்காதுன்னு நான் அப்படி எல்லாம் பண்ணல… இது வரைக்கும் நான் யாரையும் மரியாதை குறைவா நடத்தவும் இல்ல, பேசியதும் இல்ல… அப்புறம் ஏன் யாது அப்படி எல்லாம் பேசின?” மனதில் இருந்த வலியும், ஏக்கமும் ஒன்று சேர்ந்து அவள் முகத்திலும் வார்த்தையிலும் தெரிய,
நந்தனுக்கு என்ன கூறுவது என்றே தெரியாமல் தவித்தான். அவள் குரலிலும், முகத்திலும் தெரிந்த வலியில் தடுமாறி போனான். அவள் சொல்வது போல் தன்னிடம் ஏட்டிக்கு போட்டியாக சண்டைக்கும், வம்புக்கும் நிற்பவள் தான். ஆனால் இதுவரை வீட்டில் யாரிடமும் திமிராக பேசியோ, எதிர்த்து பேசியோ, சண்டையிட்டு பார்த்தது இல்லை, இங்கு வந்து பாட்டி அவளை எவ்வளவு பேசியும் மறுவார்த்தை பேசாமல் மண்டையை ஆட்டி வைத்து இருக்கிறாள்…..
  
அழுது கரைபவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தவித்தவன். அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, மீண்டும் அவளது வார்த்தையில் அதிர்ந்து தான் அறியாமல் எவ்வளவு தவறுகளை செய்துள்ளோம் என்று அறிந்துக் கொண்டான்.
நான் உன் ஸ்டேடஸ் அளவுக்கு இல்லைன்னு தானே இப்படி எல்லாம் என் மேல பழி போட்ட, என்னை குறை சொல்லுற…அழுகையை சிறிது அடக்கியவள்
எனக்கு நீ வேண்டாம் …. நீ உன் ஸ்டேடஸ்க்கு சமமா இருக்க பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிகோ… என்னை விட்டுரு… ஆங்ங்.. நீ எதுக்கு தனியா பார்க்கணும், அதான் உன் மாமா பொண்ணு வர்ஷு இருக்காளே… அவங்க உன் ஸ்டேடஸ்க்கு தகுங்த மாதிரி தான் இருக்காங்க… நீ என்னை விட்டுரு…தேம்பிக் கொண்டே மனதில் எடுத்த முடிவை தன்னை வருத்தி கடின பட்டு கூறிமுடித்தாள்,
காதலை வெளிபடுத்தாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறாகி போனது என்று உணர்ந்தவன் அவளுக்கு புரிய வைத்து தன் காதலையும், காதல் மனைவியையும் தக்க வைத்து கொள்வானா அல்லது அவள் அவனை விட்டு பிரியும் முடிவினை ஏற்க நேரிடும்மா….? 
கண்டிஷன்ஸ் தொடரும் …….

Advertisement