Advertisement

UD:28
நடுங்கும் கைகளால் சாதத்தை எடுக்க கைகளை நீட்டியவளின் கையை இடித்துக் கொண்டு வேறோரு கரம் நீண்டு ஒரு கரண்டி சாதத்தை எடுத்து ஒரு தட்டில் இட்டுக் கொண்டது… 
அதில் ரசத்தை ஊற்றி அவசரமாக உண்ண, அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து லேசாக அசடு வழிந்தபடி,
இல்ல கொஞ்சம் ஹேவி ஆயிருச்சு… அதான் ரசசாதம் சாப்பிட்டா டைஜஷன்க்கு நல்லதுன்னு சும்மா இரண்டு வாய் தான்…என்றுவிட்டு மீண்டும் தன் தட்டில் கவனம் செலுத்தினான்… 
அதற்கு அனைவரும் ஒரு சிரிப்பை உதிர்க்க… மஹாவோ எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தாள்… 
இரண்டு நிமிடத்தில் உண்டு முடித்தவன் அங்கு நின்று இருந்த வேலையாளிடம் கண் ஜாடை காட்ட, அவள் மஹாவின் முன் இருந்த தட்டை எடுத்துக் கொண்டு போக, தன் முன் இருந்த ரசசாதம் உண்ட தட்டை அவள் புறம் தள்ளியவன் அவளை நிமிர்ந்தும் பாராமல் கை கழுவ சென்றான். 
அதுவரை அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள், வேலையால் தட்டை எடுத்துக் கொண்டு போகவும் தன் முன் ரசசாதம் உண்ட தட்டை நகர்த்தி வைத்ததையும் கண்டவளுக்கு இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்றே தெரியாமல் மலங்க மலங்க முழித்துக் கொண்டு இருந்தாள்… 
நந்தன் உண்டு முடித்தும் அங்கு இருந்து நகர்ந்து அவளின் செயலை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு அவளது பரிதவிப்பு மனதை வாட்ட, அவளை இதற்கு மேல் கலங்க விடுவது பிடிக்காமல் அவசரமாக சென்று வேறோரு தட்டில் சிறிதளவு சாதத்தில் ரசமிட்டு உண்டு விட்டு அந்த தட்டை அவள் புறம் நகர்த்தி விட்டு சென்றான்… 
மஹாவிற்காக அவனது அனைத்து செயலிலும் காதல் பொங்கி வழிந்தது ஆனால் அதை உணராதவள் தன்னை வருத்தி அவனை வருத்தும் முடிவை எடுக்க போவதை காதல் கொண்ட இரு இதயங்களும் அறியாமல் தங்களுக்குள் குழம்பிகொண்டு இருந்தது தன் துணையை எண்ணி….
டேபிளில் இருந்த அனைவரும் அவனது செயலை பார்த்தும் பாராமல் இருந்தனர்… அவன் சென்றதும் ஒருவருக்கொருவர் அர்த்த பார்வையை பரிமாற்றிக் கொண்டனறே தவிர வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை… பின் கார்த்திகா மஹாவை தட்டி, என்ன யோசனை பண்ணிட்டு இருக்க… சாப்பிடு பாப்பா…என்க,
அவருக்கு ஒரு சிறிய சிரிப்பை பதிலாக தந்த மஹா தன் உணவில் கவனம் ஆனாள். 
மாலையில் இளையவர்கள் படம் பார்க்க போவது என்று முடிவானது… 
மஹாவிற்கு நந்தனின் மேல் கோபமும் ஆத்திரமுமாக வந்தது… மதியத்தில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் நந்தனின் நடவடிக்கைளில் அவன் மீது கட்டுக்கடங்காத கோபமும், தன் இயலாமையும் சேர்ந்து அவளை தன் நிலை இழக்க செய்தது…
அதனால் தான் படத்திற்கு வரவில்லை என்று மறுப்பு தெரிவிக்க, ஏன் என்று கேள்வி வந்ததற்கு, தலைவலி என்று பொய் உறைத்து விட்டு அவர்களுடன் செல்லாமல் வீட்டிலேயே தங்கி விட்டாள்…
டைனிங் டேபிளில் அமர்ந்து, கையில் இருந்த டம்ப்ளரின் விழும்பை தடவியபடி தீவிர சிந்தனையில் இருந்தாள் மஹா…
என்ன பாப்பா சாப்பிடலையா…?” கேள்வி கேட்டப்படி அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த வித்யா டேபிளில் இருந்த உணவு பாத்திரங்களை திறந்து பார்க்க அவை அனைத்தும் குறையாமல் இருக்கவே கேள்வியாக அவளை பார்க்க,
இல்ல அத்தை…. GM வந்….. சாரி அவரு வந்துரட்டும்… அவர் சாப்பிட்ட பின்னாடி சாப்பிட்டுக்குறேன்…தடுமாற்றத்துடன் அவள் சொல்லி முடிக்கவும்,
 
புன்னகையுடன் கேட்டு கொண்டு இருந்தவர் அவள் பேசி முடித்ததும், “நீ உன் புருஷனை GMனே சொல்லலாம் பாட்டி முன்னாடி மட்டும் வேண்டாம்… அவங்க அந்த காலத்து ஆளுங்கல இது எல்லாம் ஏதுக்க மாட்டாங்க… அதுவும் இல்லாம நந்தன் மேல பாசம் அதிகம்…..என்று அவளுக்கு புரியவைக்க முயல,
அதான் தெரியுமே…சலித்துக் கொண்டவளை
என்னது ….என்ன தெரியும்?” என்று கேள்வியாக கேட்க,
அவரை ஓர் பார்வை பார்த்தவள் ஒரு பெருமூச்சுடன், இங்கு வந்த முதல் நாள் நடந்ததும் அதற்கு அவள் வாங்கிய திட்டும் அவனை ஏங்க.. என்னங்க…என்று அழைத்த அழகையும் கூற
வித்யாவுக்கு அவளது கூற்றையும் அதற்கு அவள் செய்த முக பாவனைகளையும் கண்டு வாய்விட்டு சிரிக்க, கண்களில் கண்ணீர் குலம் கட்டியது.
தலை குனிந்து அமர்ந்து இருந்தவள், அவர் சிரிப்பதை வெற்று பார்வை பார்த்து,
நீங்ககூட சிரிக்குறீங்கல அத்தை…மெல்லிய குரலில் தலை குனிந்து அமர்ந்தவாறு அவள் கேட்க. 
மஹாவின் சுட்டி தனம் தெரியும் ஆதலால் அந்நிகழ்வு எப்படி நடந்து இருக்கும், அவள் எவ்வாறு அழைத்து இருப்பாள் என்று எண்ணியவருக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பை வரவழைத்தது…
  
இப்பொழுது அவளது இறங்கிய குரலும் ,வெற்று பார்வையும், ‘நீங்கூடஎன்ற வார்த்தையும் அவளது மனநிலையை நன்கு பறைசாற்றியது…
மஹா…அவளது கையை அழுத்தமாக பற்ற
நிமிர்ந்து அவரை ஓர் பார்வை பார்த்தவள் முயன்று வரவழைத்த புன்னகையுடன், நீங்க போங்க அத்தைநான் அவர் வந்து சாப்பிட்ட பின்னாடி சாப்பிட்டுக்குறேன்… நீங்க போய் தூங்குங்க…” 
கண்ணீரை வெளி காட்டாமல் இருக்க பெரும் பாடுபட்டு அதை உள்ளிழுத்து கொண்டவள் அவரிடம் சகஜமாக பேசினாள்.
 
அவளது முயற்சியை உணர்ந்து அவளை மேலும் எதுவும் பேசி ரணப்படுத்த விரும்பாமல், தனிமை கொடுக்க எண்ணி அவளை சீக்கிரம் உண்ணுமாரு பணிந்து விட்டு அவ்விடம் விட்டு நீங்கினார்… 
அவர் சென்றதும் மீண்டும் நந்தனிடமே அவளது எண்ணங்கள் சூழல தொடங்கின,
நமக்கு லவ் வந்த மாதிரி அவனுக்கு வர்ல  போல… நம்ம மேல இன்டிரஸ்ட்டு (interest) இல்லையோ… ஆனா ஏன் இல்ல…? நான் ரொம்ப சண்டை போடுறேன் போல அதான் பிடிக்கலையோ…மனதில் சுய ஆராய்ச்சியில் இறங்கினாள் ஆனால் அவளது ஆராய்ச்சிகள் அனைத்தும் தவறான கோணத்தில் புரிந்துக் கொண்டவை என்று அவள் அறியாள்… 
அவனது மனதில் அவள் நிறைந்து இருக்க, அதை புரிந்து கொள்ளாமல் அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று தவறாக கருதி தன் நிம்மதியை கெடுத்துக் கொண்டும், தன்னையே குழப்பிக் கொண்டும் இருந்தாள் வெகு நேரமாக…
 
அவள் அவனது நினைவில், கையில் இருந்த டம்ப்ளரை ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்க வாசலில் கார் நிறுத்தும் சத்தத்தில் தன் நினைவில் இருந்து கலைந்தவள் வாசலை பார்க்க,
நந்தனின் அத்தை மகள்கள் மோனிக்கா, ரஞ்சிதா, அஹில் மூவரும் படத்தை பற்றி பேசி அரட்டை அடித்துக் கொண்டே மாடி படிகளில் ஏறி அவர்கள் அறைக்கு சென்று விட. இன்னும் நந்தனும், அவனது மாமன் மகள் வர்ஷினி மட்டும் வராததை உணர்ந்து ஏனோ மஹாவின் மனதிற்கு நெருடலாக பட்டது, ஒருவகை எதிர் பார்ப்புடன் வாசலையே பார்த்து கொண்டு இருந்தவளின் கண்கள் அகழ விரிந்தது. 
தான் கண்ட காட்சியில் அதிர்ந்து தன் இருக்கையில் இருந்து தன்னிச்சையாக எழுந்தவள் இருக்கையின் சாய்வில் இருகைகளாலும் பற்றி தன்னுள் எழுந்த கோபம், இயலாமை அனைத்தையும் அதனை பற்றி இருந்த பிடியில் காட்டினாள். 
நந்தன் வர்ஷுவை தன் கைகளில் ஏந்தியபடி வீட்டினுள் நுழைந்து கொண்டு இருந்தான். வர்ஷு அவனது கழுத்தை தன் கைகளால் சுற்றி மாலையாக கோர்த்து இருக்க… அவனை ஆசை பொங்கும் பார்வையால் பருகி கொண்டு இருந்தாள்…
வீட்டில் இரவின் இருள் சூழ்ந்திருக்க, ஆங்காங்கே ஒளிர்ந்துக் கொண்டு இருந்த குண்டு பல்பின் மங்கிய ஒளியில், பக்கவாட்டில் இருந்த டைனிங் டேபிளையும் அங்கு நின்று இருந்த மஹாவையும் இருவரும் கவனிக்க தவறினர். 
இவளை தாண்டி, கையில் வர்ஷுவை ஏந்தியபடி படிகளில் ஏறி அவளது அறைக்குள் நுழைந்தவனை கண்டு முற்றிலும் செயலற்று போனாள் மஹா. 
அவள் நந்தனையே நினைத்துக் கொண்டு இருந்ததாள் தலை தானாக கவிழ, கண்களில் இருந்த கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்து தரையில் விழுந்து சிதறியது… 
காரின் ஓசை கேட்டு வெளியே வந்த வித்யா முதலில் வந்த மூவரையும் கண்டவள் ஏன் இன்னும் நந்தனும் வர்ஷினியும் வரவில்லை என்று யோசித்துக் கொண்டே மஹாவிடம் பேச அவள் அருகில் செல்ல. அவள் அதிர்ந்து இருக்கையில் இருந்து எழுந்ததை கண்டு அவள் பார்வை சென்ற திசையில் பார்க்க அவரும் சற்று அதிர்ந்து தான் போனார்.
பின் மஹாவை பார்க்க அவள் தலை கவிழ்ந்தையும், கண்ணீரையும் கண்டவர் அவள் அவர்களை தவறாக புரிந்துக்கொண்டாள் என்பதை சரியாக யூகித்தார்… 
அவளுக்கு புரிய வைக்கும் நோக்கோடு,”மஹா…என்று அழைக்க,
அவரது அழைப்பில் தன் நிலைக்கு வந்தவள், அவர் பார்த்து இருக்க மாட்டார் என்றெண்ணி, தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு, வழிந்த கண்ணீரை அவர் அறியா வண்ணம் தொடைத்துக் கொண்டவள்,
அத்தை அவரு சாப்பிட்டாராம்… எனக்கும் தலை ரொம்ப வலிக்குது அதுனால எனக்கு சாப்பாடு வேண்டாம்… நான் தூங்க போறேன் அத்தை…தனக்கும் நந்தனுக்கும் நடுவில் உள்ள விஷயத்தை வெளி காட்ட விருப்பாதவள் சகஜமாக பேச முயற்சித்தாள் அவசரமாக…. 
அதை புரிந்துக் கொண்டவர் ஒருவகையில் மெச்சுதாலாக பார்த்தாலும் இன்னொரு புறம் அவள் வருந்துவதை கண்டு அவரும் கலங்க தான் செய்தார்.
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவர், அவளிடம் அதை பற்றி பேச வாய் திறக்கும் முன்,”போகட்டுமா அத்தை… ஒருமாதிரி அன்ஈஸியா(uneasy) இருக்கு…அவரிடம் பதில் இல்லை என்றதும் அவள் மீண்டும் கேட்டுவிட்டு அவரை பார்த்து தயங்கியவாறே நின்றாள்.
அவளது மனநிலையை உணர்ந்து கொண்ட வித்யா, அவள் அருகில் சென்று அவள் கன்னத்தை இதமாக உருடியவர்,”போ மா… நல்லா தூங்கி ஓய்வெடு நாம நாளைக்கு நிதானமா பேசலாம்…கனிவாக கூற,
அவரை கண்டு லேசாக புன்னகை செய்தவள், டைனிங் டேபிளில் இருந்த உணவு பாத்திரங்களை எடுக்க போக, அதை தடுத்த வித்யா,”நீ போ மா… நான் பாத்துக்குறேன்…என்க,
இல்ல அத்தை… நான் எடுத்து வச்சுட்டே போறேன்… பாட்டிக்கு தெரிஞ்சா கோவ படுவாங்க… ஏற்கனவே நிறைய சொதப்பிட்டேன்இப்ப ஒழுங்கா வேலை செய்யலைனா அதுக்கும் ஏதாவது திட்டுவாங்க…முகத்தில் சோகம் வழிந்தோட தலை கவிழ்ந்து நின்றவளை பாவமாக பார்த்தார் வித்யா. 
அவள் கைப்பிடித்து திருப்பி தன்னை பார்க்க செய்து,”ஏன் இப்படி இருக்க…?” என்று கேள்வி கேட்க, தான் அழுததை தான் கேட்கிறாரோ என்று அதிர்ந்து பார்க்க….
அவளது தோற்றத்தை கண்டு என்ன நினைத்தாரோ…சரி விடு… நீ போய் ரெஸ்ட் எடு… நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்… நீ போ…அவளிடம் இப்போது எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்து அவளை அறைக்கு அனுப்பிவைத்தார்.
சரிஎன்று தலையை ஆட்டியவள், சோர்ந்து போன நடையுடன் படி ஏறி தன் அறைக்கு சென்றாள்…
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த வித்யா, ‘நாளைக்கு முதல இவ கிட்ட பேசணும்… தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக்குறா…என்று எண்ணிய படி உணவு பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கிட்சனை நோக்கி சென்றார். 
தன் அறைக்குள் வந்து சுற்றி பார்க்க , இன்னும் நந்தன் வராததை கண்டு ஒரு விரக்தி புன்னகை புரிந்தவள், அவ ரூம்லையே இருந்துட்டான் போல…மனதில் எழுந்த குழப்பம், அவன் அவள் அறையில் அவனுடன் நுழைந்தது, இன்னும் இங்கு வராதது என்று அனைத்தும் சேர்ந்து ஒரு வகை மனவலியை  உருவாக்க அமைதியாக பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டாள். 
ஏன் இப்படி ஆகுது? அவனுக்கு ஏன் என்னை பிடிக்கல? என் மேல லவ் கொஞ்சம் கூடவா இல்ல…?சரி லவ் கூட வேண்டாம் அட்லீஸ்ட் அக்கரை ஆச்சும்…எண்ணி கொண்டே வந்தவள் அக்கரை என்ற வார்த்தையில் அவள் மூளை அவசரமாக அன்று ரோட்டில் தன்னை கண்டும் காணாதது போல் சென்றதும் அதன் பின் அவனது சந்தேக கேள்வியும் நினைவிற்கு வர, அவளுக்கு ஏதோ மூச்சு முட்டுவது போல் இருக்க அழுகையை அடக்க உதட்டை கடித்து கண்களை இறுக மூடி ஆழ மூச்செடுத்து தன்னை நிதானித்துக் கொள்ள பெரும் முயற்சி செய்தாள்.
அப்பொழுது அறையினுள் நுழைந்தான் நந்தன். அவன் வரும் அரவம் கேட்டதும் தன்னை நிதான படுத்திக் கொண்டவள். அவனிடம் எதுவும் பேசவோ, கேட்கவோ கூடாது என்று முடிவெடுத்து, அறைக்குள் நுழைய நந்தன் மஹாவை பார்த்து, ஏய் கொசுக்குட்டி நீ இன்னும் தூங்கலையா…?”
அவளது முகத்தை கூட பார்க்காமல் விசில் அடித்துக் கொண்டே தன் கைகடிகாரத்தை கழட்டிய படி கண்ணாடி முன் நின்று ஒற்றை புருவத்தை உயர்த்தி தன்னை பார்த்து கொண்டே கேட்டவனுக்கு பதில் அளிக்க தோன்றாமல் வெற்று பார்வையில் பார்த்துவிட்டு படுக்கையை நோக்கி சென்றாள்….
தனக்கு பதில் அளிக்காதவளை கண்ணாடியின் வழியாக பார்த்து, என்ன டி அமைதியா இருக்க…? இன்னைக்கு  படம் சூப்பரா இருந்துச்சு நீ தான் மிஸ் பண்ணிட்ட….என்றவனை பார்த்து நக்கலாக சிரித்தவள்,
நான் வந்து இருந்தா சிலருக்கு எல்லாம் தொந்தரவா இருந்து இருக்குமே…என்று முணுமுணுத்தவளைக் கண்டு,
என்னடி சொன்ன..? சத்தமா சொல்லு… இப்ப எதுக்கு நக்கலா சிரிச்ச…?” திரும்பி அவளை பார்த்து கேட்டவனை ஒரு பார்வை பார்த்து விட்டு படுகையில் இருந்து தலையணையை எடுத்துகொண்டு சோஃபாவில் படுத்து விட,
ஏய்… உன்னதான்டி கேட்கிறேன்…நீ பாட்டுக்கு படுக்குற…அவள் அருகில் வந்து கேட்க,
ஒன்னும் இல்ல…அவனை பார்க்காமல் பதில் அளித்தவள், திரும்பி அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்……
அவளையே சில நொடிகள் பார்த்தவன், “இவ என்னைக்கு நாம கேள்வி கேட்டு அதுக்கு ஒழுங்கா பதில் சொல்லி இருக்கா… சே… இவளை கல்யாணம் பண்ணதுக்கு கல்யாணமே பண்ணாம இருந்து இருக்கலாம்….வாய்விட்டு புலம்பிய படி மாற்று உடை எடுக்க அவளை விட்டு நகர்ந்தான்.
ஏற்கனவே மனதில் அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றும் வர்ஷு மீது ஈடுபாடுடன் இருப்பதாகவும் எண்ணியவள் அவனது இந்த வார்த்தை அவளை மேலும் வதைத்து,… அவனுடன் வாக்குவாதம் செய்ய கூடாது, பேச கூடாது என்ற முடிவுடன் தான் அவள் அறையினுள் நுழைந்தாள். 
ஆனால் அவனது வார்த்தையில் அவள் மனதில் எழுந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் போக,
அப்புறம் எதுக்கு பண்ணிக்கிட்ட? உனக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தானே….ஆவேசமாக எழுந்து அவனை பார்த்து கத்தினாள்.
அவள் அவ்வாறு கத்துவாள் என்று எதிர் பார்க்காதவன் பதறி போய் அவள் வாயை பொத்தினான் அவசரமாக..
ஏய் ஏன்டி இப்படி கத்துற? கொஞ்சமாச்சும் அறிவிருக்கா… நீ கத்துறது கேட்டு எல்லாரும் வந்துற போறாங்க…பதற்றத்தில் அவன் அவளை கடிய,
அமர்ந்த வாக்கிலே கண்களை உயர்த்தி அவனை முறைத்துக் கொண்டே அவன் கையை தட்டி விட முயற்சி செய்து கொண்டு இருந்தாள் மஹா…

Advertisement