Advertisement

அவள் பதறியதை கண்டு அனைவரும் சிரிக்க, ஓர் அழகிய சூழல் அங்கு உருவானது… 
பின் சிறிது நேரம் பேச்சும்  விளையாட்டுமாய் இருந்தவர்கள் நேரம் ஆவதை உணர்ந்து கிஷோரும், கௌதமும் விடைபெற்று சென்றனர் நந்தன் மஹாவிடம் சொல்லிக்கொண்டு…
அவர்கள் சென்றதும் மஹா ஒரு முறை நத்தனை திரும்பி பார்க்க… அவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்க… தலை கவிழ்ந்து கொண்டு தன் அறையில் சென்று முடங்கினாள் மஹா…
தன்   மனது  அவன்  அன்பையும்  அரவணைப்பையும்  வேண்டி  ஏங்குவதை  நன்கு உணர்ந்தவள்…. ஒருவேலை அவனிடம் தன் மனதை திறந்து கூறினாள் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என்ற எண்ணம் தோன்றியதும் உள்ளுக்குள்….
‘நான் ஏன் போய் பேசணும்…. எவ்வளவு ஹர்ட் பண்ணிட்டான்… அப்படி இருக்கும் போது நான் போய் பேசணுமா…? நெவர்…. போடா பன்னி… நீ எப்ப இத பத்தி பேசுறீயோ நானும் அப்பவே பேசுறேன்…”காதல் கொண்ட மனதிற்கு அவனது அன்பு மிகவும் தேவை என்று தெரிந்தும் மூளையின் பேச்சைக் கேட்டு, ஈகோவிற்கு முதன்மை இடம் கொடுத்து , அன்பை புறம் தள்ளினாள்…
அவனுடன் மனதில் வாக்குவாதம் செய்து, சண்டையிட்டு, என்ன செய்வது, ஏது செய்வது என்று நீண்ட நேரம் யோசித்தவள் நள்ளிரவையும் தாண்டி வெகு நேரம் கழித்தே தூக்கத்தை தழுவினாள்…
நந்தனோ, ஒருவகையான நிம்மதியுடன் படுக்கையில் சரிந்தான்….. தன் நண்பர்களை பற்றி யோசித்தவன் “ரெண்டு பேருக்கும் என்னோட தேங்க்ஸ் டா மச்சான்ஸ்….”என்றவன் மஹாவின் நினைவில் படுத்ததும் உறங்கி போனான்….
கடிகாரத்தையும், கையில் இருந்த ஃபைளையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்…
“இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கா இந்த கொசுக்குட்டி… 7 மணிக்கு இங்க இருந்து கிளம்பணும்னு சொன்னேன்… மணி 6.30 ஆச்சு… வருவாளா மாட்டாளா…” என்று புலம்பிக் கொண்டு இருக்க, 
வெளியே பால்கனி வழியாக எங்கிருந்தோ,
அவள் வருவாளா… ஓஓ அவள் வருவாளா…?
உடைந்து போன என் நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா…
என்று பாடல் கேட்க, 
“எவன்டா அவன் படத்துல வர மாதிரி எப்ப பாரு சிட்ஷவேன் சாங் போட்டுட்டு…. “என்று புலம்பிக் கொண்டே தன் நெற்றியில் அறைந்து கொண்டான்…
மஹா, ஏதோ கனவு கண்டு லேசாக புரண்டு படுத்தவளின் எதிரில் தெரிந்த கடிக்காரத்தை பார்த்து அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள்… 
“ஐய்யோ… காண்டாமிருகம் நேத்து சொல்லுச்சே…  எழு மணிக்கு கிளம்பணும்ன்னு… இப்படி 6.30மணி வரை தூங்கி இருக்கியே மஹா… லூசு… லூசு…”என்று தன்னை தானே திட்டிக் கொண்டவள்… அவசரமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள்…
ஃபைளை பார்த்துக் கொண்டு இருந்தவன், அறைக்கதவு திறக்கும் சத்ததில் நிமிர்ந்து பார்க்க நந்தனின் மீண்டும் ஒருமுறை ஹார்மோன்கள் ஹார்மோனியம் வாசிக்க தொடங்கியது…. 
அறையை விட்டு வேகமாக வெளியே வந்தவள், சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்க்க அது சரியாக 7 என்று காட்ட… பெருமூச்சொன்றை விட்டவள் அவன் புறம் திரும்பி, “போலாமா…..”என்று தலையை ஆட்டி சொல்ல,
நந்தனோ அவள் விட்ட பெரு மூச்சில் அவனது மூச்சு நின்று விடும் போல் இருந்தது… 
அவசரமாக குளித்துவிட்டு வந்தவள், தலையை துவட்டாமல், ஈர முடியுடன் தண்ணீர் சொட்ட, முகத்தில் எந்த ஒப்பனையும் இன்றி பொட்டும், உச்சி வகுட்டில் சிறிதாக குங்குமமும், சின்தட்டிக்கு புடவையும் அணிந்து , தன் கைப்பையை சுருட்டி கையின் இடுக்கில் பொதிந்து வைத்து இருக்க அதில் அவளது வெற்றிடையை பளீர் என்று காட்டி கொடுத்தது அவள் கணவனுக்கு… தன் இடது கையில் பிரேஸ்லெடை அணிந்தப்படி தலையை ஆட்டி கேட்க நந்தனின் உணர்வுகள் தாறுமாறாக நர்த்தனம் ஆடி அவனது பார்வை கணவன் பார்வையாக மாறி அவள் மேல் ஊர்வலம் சென்றது…
சீக்கிரம் தயாராகி வர வேண்டும் என்று புடவையை அறையும் குறையுமாக அணிந்ததில் ஆங்காங்கே அவளது அழகை அவன் பார்வைக்கு விருந்தாக்கினாள்….  அவனது பார்வையை உணராமல், “எதுக்கு இப்படி லுக் விடுறான்… லூசு காண்டாமிருகம்….” என்று மனதில் எண்ணியவள்,
“டேய்…டைம் ஆச்சு… எழு மணிக்கு போகணும்னு சொன்ன… “என்று கேட்டுக் கொண்டே அவசரமாக கட்டியதில் நெகிழ்ந்து இருந்த புடவையை சரி செய்துக் கொண்டவளை கண்டு ஒரு கணவனாய் முதன் முதலில் நந்தனுக்கு கோபமாக வந்தது…. 
“ம்ப்ச்ச்….” என்று சலித்துக் கொண்டவன் எதுவும் பேசாது அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறினான்…. 
அவன் சலித்துக் கொண்டதில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், ‘இப்ப எதுக்கு இவ்வளவு சலிச்சுக்குறான்… அதான் கரெக்டா டைம்கு வந்துட்டேனே… அப்புறம் என்னவாம்… ரொம்ப ஓவரா தான் போறான் தடிமாடு போடா… ‘மனதில் அவனை திட்டிக் கொண்டே அவனை பின் தொடர்ந்தாள் சிணுங்கியபடி…
மஹா இன்று அவன் முன் எழில் ஓவியமாக நின்று இருந்தவளை உரிமையுடன் காணாமல் இருக்க முடியவில்லை நந்தனுக்கு….
வீட்டில் நைட் ஷர்டும் பேண்ட்டும் அணிந்து பார்த்து இருக்கிறான் தான்…அது எல்லாம் லூசாக அவள் மெலிந்த தேகத்தில் அந்த ஆடைக்குள் இன்னொருவர் புகுந்துக் கொள்ளும் அளவிற்கு இருக்கும்… ஆனால் இன்று அவள் அழகை பண்மடங்கு எடுத்து காட்டிய இந்த புடவையில் அவன் தன் வசம் இழந்தான்.
காரில் செல்கையில் அவள் தன் தலையை கோதி காயவைத்தவள், தன் கைப்பையில் இருந்த சீப்பைக் கொண்டு காரில் இருந்த மிரரில் பார்த்துக் தலை வாரிக் கொண்டு இருக்க… 
அவளை ஓர கண்ணால் ரசித்து நோட்டம் விட்டப்படி இருந்தான் நந்தன்… 
கார் வீட்டை அடைந்ததும் நந்தன் மனநிலை மாறி வீட்டிற்குள் செல்லுகையில்…. அவனது சித்தி வித்யா எதற்கோ வீட்டில் இருந்து வெளியே வர, நந்தனை கண்டு மகிழ்ச்சியில் அவனை வரவேற்றவர்… மஹாவின் புறம் திரும்பியவர் அதிர்ந்து போனார்… 
“டேய் நந்தா… என்னடா இது… ?” என்று அதிர்ந்து மஹாவை கைக் காட்டி நந்தனிடம் கேட்க, 
அவனும் புரியாது மஹாவை மேல் இருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு, “என்னதுன்னா…. பொண்ணு… “அறிவாளியாக பதில் அளிக்க, 
நந்தனும் அத்தையும் தன்னை ஒரு மார்க்கமாக பார்ப்பதை கண்டு அவளும் தன்னை ஒருமுறை குனிந்து பார்த்து எதுவும் வித்தியாசமாக தெரியாததால் உதட்டை பிதுக்கி என்னவாக இருக்கும் என்று அவர்களை மாறி மாறி பார்க்க… நந்தனின் பதிலில் அவனை ஒரு அற்பபிறவி போல் பார்த்தனர் பெண்கள் இருவரும்…
அவர்களது பார்வையை கண்டு ஒன்றும் தெரியாதது போல் பாவனை காட்ட, அவன் தலையில் தட்டிய வித்யா…
“இப்படி மெலிஞ்சு போய் இருக்கா… முகம் ஏன் இப்படி டல்லா இருக்கு…. ? ஏன்டா…”என்று வித்யா நந்தனை கேட்க,
 
“என்கிட்ட கேட்டா என்ன அர்த்தம்….? உங்க ஆசை மருமக தான் டயட்ல இருக்காங்க அவங்களை கேளுங்க…. காலைல பிரெட்டு பால் தான்… அப்படி சாப்பிட்டா… ‘எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே’மான்னு தான் நீங்க அவகிட்ட கேட்க முடியும்…..” குரலில் ஏற்ற இறக்கங்களோட பேச, வித்யா தன் நெற்றியில் அறைந்து கொள்ள , மஹா அவன் மண்டையில் நாலு போட வேண்டும் என்று தோன்றியது…. 
“இல்ல அத்தை… கொஞ்சம் வொர்க்கு ஜாஸ்தி அதான்… வேற ஒன்னும் இல்ல அத்தை…”ஏதோ காரணத்தை சொல்லி சமாளிக்க நந்தன் அவளை வெற்று பார்வை பார்த்து வைத்தான்… 
பின் மூவரும் வீட்டினுள் நுழைய, அனைவரின் நலன் விசாரிப்புக்கு பின் காலை உணவை முடித்துக் கொண்டு தங்கள் கிராமத்திற்கு செல்வது என்று முடிவானது… 
அப்பொழுது மஹா தங்கள் அறைக்கு செல்ல எத்தனிக்கையில், அவளை தடுத்த நந்தன்,”எங்க போற….? டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்பணும் வா சாப்பிடலாம்…” நேரம் ஆவதை வலியுறுத்தி கிளம்ப சொல்ல சற்று யோசித்தவள் பின் தன் அத்தைமார்களை அணுகினாள்….
“அத்தை…ஏழு மணிக்கு கிளம்பணும்ன்னு சொன்னாங்க…ஆனா நான் காலைல லேட்டா எந்திரிச்சுட்டேன்… டைம் இல்லைன்னு…. “பாதியில் நிறுத்தி என்ன நினைப்பார்களோ என்று பயந்து தயங்கி தயங்கி பின் தொடர்ந்தாள்,
“டைம் இல்லைன்னு அவசரமாக குளிச்சுட்டு வெளிய வந்த பின்னாடி தான் பிரஷ் பண்ணலைன்னு நியாபகம் வந்தது… இனி அதை பண்ணிட்டு இருக்க நேரம் இல்லைன்னு இங்க வந்து பண்ணிக்கலாம்ன்னு ஹாண்பேக்கில் போட்டு எடுத்துட்டு வந்தேன்… இது யாதவ்க்கு தெரியாது… தெரிஞ்சா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க… அதுனால ரூம்க்கு போக ஹெல்ப் பண்ணுங்க அத்தை’ஸ்” என்று வேகமாக சொல்லி முடிக்க, 
கார்த்திகா அதிர்ந்து வித்யாவை பார்க்க அவர் சிரிப்பை அடக்க கஷ்டபடுவதை கண்டு அவருக்கும் சிரிப்பு வர, கடைசியில் இருவராலும் சிரிப்பை  அடக்க  முடியாமல் போக  நன்றாக வாய் விட்டு சிரித்தனர்….
அவளது சுட்டி தனம் பற்றி  தெரிந்ததால் இது போல் ஏதாவது இருக்கும் என்று யூகித்து இருந்தார் வித்யா. ஆனால் கார்த்திகாக்கு அவளது இந்த செயல் முதலில் அதிர்வை  தந்தாலும்  பின்பு அதை ரசிக்கவே செய்தார்…
அவர்கள் சிரிப்பதை கண்டு சற்று இளகுவானாள் மஹா… 
பின் கார்த்திகா தன் சிரிப்பை அடக்கி, மஹாவின் தலையை வாஞ்சையாக தடவி,”நீயும், நந்தன்னும் சந்தோஷமா இருக்கணும்….” மனநிறைவுடன் ஆசிர்வாதம் செய்ய,தான் இருக்கும் நிலையை எண்ணி வருதியவள் துக்கத்தை மறைத்துக் கொண்டு அவர் ஆசியை புன்னகையுடனே ஏற்றுக் கொண்டாள் மஹா… 
பின் அவளுக்கு உதவி செய்து அவர்கள் உண்ட பின்னர் முதலில் நந்தனும் மஹாவும் செல்வதாகவும், பின்னர் குடும்பத்தில் மற்றவர்கள் செல்வதென்றும் முடிவாகி இருக்க… அதன் பேரில் பொள்ளாச்சி நோக்கி காரில் பயணம் ஆயினர் கொசுக்குட்டியும் காண்டாமிருகமும்…
சில மணி நேர பயணத்தின் முடிவாக அவர்கள் சொந்த ஊரில் அரண்மனை போன்ற வீட்டின் முன் அவர்களது கார் நின்றது மிதமான வேகத்தில்… 
அந்த காலத்து அரண்மனை போன்று அகன்று, பெரிய பெரிய தூண்களுடன் சுற்றிலும் அமைந்து இருந்த தோட்டத்தையும் கண்டு மஹா பிரம்மித்து போய் சுற்றி பார்த்துக் கொண்டே வந்தவள் வாசலில் இவர்களுக்காக காத்திருந்த அனைவரையும் கண்டு புன்னகை புரிந்தவளை ஆராயும் பார்வை பார்த்து வைத்தனர் சிலர்… அதில் மனதில் சுருக்கென்று இருக்க நந்தனிடம் ஒன்றிக் கொண்டாள் எதார்த்தமாக….
ஆனால் நந்தனோ அவளை கண்டுக் கொள்ளாமல்… தன் குடும்பத்தை பார்த்த மகிழ்ச்சியில் இவளை அம்போ என விட்டது போல் இருந்தது, ‘கொஞ்சம் கஷ்டம் தான் சமாளிக்கலாம்… வேற வழி….’என்று எண்ணியவள்,
‘ஐயோ… இவங்க ரியாக்ஷன் எல்லாம் பலமா இருக்கு… இன்னைக்கு உனக்கு கட்டம் சரி இல்ல போல டி தங்கம்… ஆஆஆ…இவங்க லுக்கை பார்த்தா வயிறு வலிக்குற மாதிரி வேற இருக்கே…’என்று மனதினுள் புலம்பினாள் சாந்தமான முகத்துடன்.
அவளுக்கு மனதில் பயம் அப்பிக்கொள்ள, கடவுளிடம் வேண்டிக் கொண்டே உள்ளே நுழைந்தாள்…
அவளது வாழ்க்கை இனி தலைகீழாக மாற போவதை பேதை அவள் உணர்வாளா? அதுவும் தன் மணாளனால் தான்  என்று அதை உணரும் போது அதை சந்தோஷத்துடன் ஏற்பாளா அல்லது வருந்தி துயரத்தில் வீழ்வாளா…?
கண்டிஷன்ஸ் தொடரும் …….

Advertisement