Advertisement

கோபத்தின் பிடியில் இருந்தவன் சாலையில் நின்று இருந்த மஹாவை பார்க்க மேலும் கோபம் அதிகமாக அவளை கண்டு கொள்ளாமல் சென்றான்… அவள் அருகில் வரவும் முகம் பிரகாசமாக ஆனதையும்,அவளை தாண்டி சென்ற போது முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை காரின் சைடு மிரர்(side mirror) வழியாக பார்த்துக் கொண்டே காரை வேகமாக செலுத்தினான்…
அவர்கள் நின்று இருந்த சாலையின் வளைவில் கார் சென்று மறைந்ததும் தான் மஹாவிற்கு சுய உணர்வே வந்தது… 
நந்தனின் செயலில் பெண்ணவனின் மனம் பெரிதாக அடி வாங்கியது… ஒரு கணவனாய் நந்தன் தரவேண்டிய பாதுகாப்பை அவள் இழந்தது போல் உணர்ந்தாள்…. 
அப்பொழுது தந்தை கூறிய வார்த்தைகள் அவள் நினைவில் வந்தது, ‘அவன் உன்னை பத்திராம பார்த்துப்பான் மஹா….’ அப்பா  சொன்ன வார்த்தையும்  அவன்  செயலும்  வேறாக இருக்க  அவள்  மனதளவில்  மறித்து போனாள்.. 
அவள் தன் நினைவில் இருக்க, கார் மறைந்ததும் தான் கண்ணன் இன்னும் தன்னிடம் கெஞ்சிக் கொண்டு இருந்ததை கண்டாள்….
நந்தன் நிற்காமல் சென்றது, மஹாவை பெரிதாக பாதித்திருக்க…..  அதோடு தன்  இயலாமையை கண்டு கோபமாக வர… அது எதிரில் நின்று கெஞ்சிக் கொண்டு இருந்தவன் மேல் திரும்பியது….
“இனப்(enough)….” பெருங்குரல் எடுத்து  கத்தியவளை கண்டு அரண்டவன், சமாதனம் பேச வாய் திறக்கும் முன்,
“ஸ்டாப்பிட் கண்ணன்…. ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்…. நீங்க எவ்வளவு சீப்பா பிஹேவ் பண்ணுறீங்கன்னு தெரியுமா… ? எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு கண்ணன்… புரிஞ்சுக்கோங்க…” கோபத்தில் கத்தியவளை கண்டு அவன் பிடியிலே நின்றான்..
“அவன் வேண்டாம் மஹா உனக்கு… நான் உன்னை நல்லா பார்த்துக்குறேன்… நீ என் கூட வந்துரு… ” என்று கூறி அவள் கையை பிடித்து இழுக்க…அவனது சொல்லிலும், செயலிலும் வெகுண்டாள் மஹா…
“கையை விடுங்க கண்ணன்… பெரிய தப்பு பண்ணுறீங்க… ஒழுங்கா கையை விடுங்க…” அவள் கையை அவனிடம் இருந்து உருவிக் கொள்ள போராட,
“முடியாது மஹா… எனக்கு நீ வேணும்… என் கூட வந்துரு…” அவள் கையை மேலும் பிடித்து இழுக்க, 
“ஒழுங்கா கையை விடுடா நாயே… எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லுறேன் சைக்கோ மாதிரி பேசுற… அறிவில்ல உனக்கு… ஒழுங்கு மரியாதையா கைய விடு இல்ல செருப்பு பிஞ்சுரும்… “அவனை திட்டிக் கொண்டே கையை உருவிக்கொள்ள போராடினாள்…
 
அவளது பேச்சிற்கு பதில் கூற வாயை திறந்தவன் முன் அசுர வேகத்தில் அவனை மோதுவது போல் ஒரு கார் வந்து நிற்க… ஒரு நொடி அதிர்ந்து போனான் கண்ணன்… 
கார் நின்ற வேகத்தில் அதை விட்டு சீறிப்பாயும் சிங்கத்தின் வேகத்தோடு கீழே இறங்கிய நந்தனின் கம்பீரத்தில் கண்ணன் அசந்து போக, அவன் அருகில் வந்த நந்தனின் பார்வை மஹாவை பிடித்து இருந்த அவனது கைமேல் இருந்தது…
அவனது கம்பீரத்திலும் தோரணையிலும், அழகிலும் எப்பொழுதும் மெய்மறந்து நிற்கும் மஹாவிற்கு இன்று ஏனோ அது எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை… அவன் செய்த செயலே நினைவிற்கு வர அவளது மனம் எங்கோ ஒரு  மூலையில் ஓவென்று அழுவது போல் உணர்ந்தாள்…
அவனது கம்பீர்த்தை கண்டு ஆவென நின்று இருந்தவன்… நந்தனின் துளைக்கும் தீ பார்வையை உணர்ந்து அவன் பார்வை நின்ற இடத்தை கண்ணனும் பார்க்க… அவன் பார்வையாலே தன் கையை எரிப்பது போல் உணர்ந்தவன் மெல்ல மஹாவின் கையை விடுவித்தான்…
அதன் பின்னரே நந்தனின் பார்வை அவனை ஆராய்ந்தது… அவனது கூர் விழிகள் தன்னை ஆராய்வதை உணர்ந்தவனின் உடலில் ஒரு வித நடுக்கம் பரவ, லேசாக வியர்த்து வழிந்தது கண்ணனுக்கு…. இருப்பிணும் எச்சிலை கூட்டி விழுங்கியவன் வரவழைத்த தைரியத்தில், 
“யாரு சார் நீங்க… ? “என்று வினவ,
நந்தன் மஹாவின் புறம் திரும்பி,”இங்க ஏன் மஹா நிக்குற…?” என்று கடினப் பட்டு வரவழைத்த மென்மையில் கேட்க, 
அவள் பதிலேதும் கூறாமல் அமைதி காக்க அது அவனது கோபத்தை ஏற்றிவிட்டது… அதை இருக்கும் சூழலை  கருத்தில்க் கொண்டு அடக்கி கொண்டவன்..
“சரி போ போய் கார்ல ஏறு… டைம் ஆச்சு…” என்று கூறியதும், 
காரை திரும்பி பார்த்தவள் சற்று முன்பு அவன் அவளை கண்டும் காணாதது போல் தன் அருகில் வந்ததும் வேகமாக சென்றது நினைவிற்கு வந்தது, அதே யோசனையில் நின்று இருந்தவள் அவனை திரும்பி பார்க்க அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்… 
அவனது பார்வையின் அழுத்ததை கண்டவள், இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவனுடன் சண்டைக்கு நிர்ப்பது சரிவராது என்று உணர்ந்து, எதுவும் எதிர்த்து பேசாமல் அமைதியாக நகர்ந்து காரில் ஏறி அமர்ந்தாள்… 
அவளை பார்த்துக் கொண்டு இருந்த கண்ணனுக்கு நின்று இருப்பவன் யார் என்று ஓரளவுக்கு புரிந்ததில்.. மனதில் பயம் வந்து அப்பிக் கொண்டது சட்டென்று…
நந்தன் அவனை ஒரு முறை ஆராய்ந்து பார்த்து விட்டு, “ஹாய்…ஐ ஆம் மிஸ்டர் ஆஃப் மஹாஸ்ரீ …. ” அவன் புறம் தன் வலது கரத்தை நீட்டியவன் முகத்தில் மருந்துக்கும்  புன்னகை இல்லை…. 
அவனது தோரணையை கண்டு பயந்தப்படி, “ஹலோ சார்… “தன் வலது கரத்தை நீட்ட,
முறுக்கேறிய அவனது கைகள் கண்ணனின் கையை பற்றியதும் அதை விடாமல்…. கைகுழுக்கிய படி, “தென் வாட்ஸ் மேட்டர் பட்டி(buddy)….” என்று சிறு புன்னகை முகத்துடன் பேச,
கண்ணனின் முகமோ பயத்தில் விளக்கெண்ணையை குடித்தது போல் இருந்தது… 
“நத்திங் சார்…” என்று கூறியவன் தன் கையை அவனது பிடியில் இருந்து பிரித்து எடுக்க முயற்சித்தவன் முடியாமல் போக அவனை பாவமாக பார்த்து வைத்தான்…
கூர் பார்வையுடன் கண்ணனையே பார்த்துக் கொண்டு இருந்தவன் முகம் இறுகி இருக்க, உதட்டில் மெல்லிய மிக மெல்லிய கீற்றாய் புன்னகை அமர்ந்து இருக்க, நிமிர்ந்து நின்ற விதத்தை பார்த்து,’ ஐயோ சாமி விட்டா போதும் இப்படியே ஓடிருவேன்… முடியலையே….’மனதிற்குள் புலம்பியவன் வெளியே அவனை பார்த்து இளித்து  வைத்தான்… 
காரில் இருந்த மஹாவிற்கோ உள்ளுக்குள் ஏதோ திகுதிகுவென எறிவது போல  இருந்தது…. 
“தடிமாடு… அவன் என் கையை பிடிச்சு இழுத்து வம்பு பண்ணுனான் அவனை நாலு மொத்து மொத்தாமா நட்பு கரம் நீட்டி உறவை பலப்படுத்துறான் பாரு காண்டாமிருகம்… எருமை… சை…” கோபத்தில் புலம்பிக் கொண்டு இருந்தாள்…
காரின் வெளியே,”ஓகே தென்… மீட் யூ சம் அதர் டைம்…. “நந்தன் கடைசியாக கண்ணனின் கரத்தை பிடித்து ஆட்ட,
 
கண்ணனோ அவசரமாக “ஓகே சார்… ஸ்யுர்(sure) சார்….” என்று பதில் அளித்தான் பவ்வியமாக… 
அதில் மேலும் நந்தனின் புன்னகை விரிந்தது நக்கலாக… 
பின் தன் காரில் ஏறி வீட்டை நோக்கி செல்லுத்த, எப்பொழுதும் இரு துருவங்களும் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் போது போர் களத்தின் ஒரு அங்கமாய் இருக்கும் ஆனால் இன்றோ அஹிம்சையை பின்பற்றும் இடமாக இருந்தது…
இருவர் மனமும் வெவ்வேறு வகையில் கோபத்திலும், இயலாமையுடனும் கொதித்துக் கொண்டு இருந்தன வீடு வந்து சேரும் வரையிலும்….
எவ்வளவு நேரம் ஷவரின் அடியில் நின்றாளோ அவளுக்கே தெரியவில்லை, குளிரில் உடம்பு நடுங்க ஆரம்பித்ததும் தன் நினைவலைகளில் இருந்து வெளியே வந்தவள், உடை  மாற்றி  கொண்டு  படுக்கையில் விழுந்தவளுக்கு நந்தனின் செயலும் தன்  வாழ்க்கை  பற்றின பயமும் அவள்  மனதை  அலைக்கழித்தது…
காலை எப்பொழுதும் போல் எழுந்த மஹா   தயாராகி தன் உணவாகிய பிரெட்டையும் பாலையும் அருந்திக் கொண்டு இருக்க…. நந்தன் தன் அறையில் இருந்து வெளியே வந்தவனுக்கு, அவளை கண்டதும் மட்டுபட்டு இருந்த கோபம் இப்பொழுது எரிமலையாக உள்ளுக்குள் சிதறிக் கொண்டு இருந்தது…
அது முகத்திலும் தெரிய, அவளை  பார்க்க  பிடிக்காமல் தன் முகத்தை திருப்பிக் கொண்டான்… 
அவனது முக திருப்பலை கண்டு மனதில் வலி  எடுக்க அமைதியாக தலை குனிந்து கொண்டவள், ‘முகத்தை கூட பார்க்க பிடிக்கலையா இவனுக்கு… அப்படி என்ன டா தப்பு பண்ணினேன் காண்டாமிருகம்… நீ ஒன்னும் என்னை பார்க்க தேவையில்லை போடா பன்னி…’ மனதில் அவனை திட்டியவள் வெளியே முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு தோளை ஆட்டி விட்டு தன் பாலில் கவனத்தை செலுத்தினாள்…
என்ன முயன்றும் அவள் சிந்தனை நந்தனின் முகத்திருப்பத்திற்கு என்ன காரணம் என்றே யோசிக்க தோணியது… 
விடையாக, ‘ஒரு வேலை நம்மல சந்தேக படுறானா…?’ என்ற எண்ணம் எழ அவள் நிலை தடுமாறி தான் போனாள்…. 
அவளது இந்த எண்ணத்தில் அவள் முகம்  அப்பட்டமாக அதிர்ச்சியை காட்ட… அவளை ஓர விழியில் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளது முகத்தை கண்டு ‘என்ன ஆச்சு இவளுக்கு… சரியான லூசு… இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் தான் பைத்தியம்  மாதிரி சுத்துறேன்… ‘மனதில் புலம்பிக் கொண்டே கம்பெனிக்கு செல்ல தயாரானான்…
மஹாவிற்கு அதற்கு மேல் அங்கு இருப்பு கொள்ளவில்லை… அவனது நேற்றைய  கேள்வியின் தோரணையும் அவனது இன்றைய முகதிருப்பலும் அவளுக்கு நந்தன் தன்னை சந்தேகிக்கிறான் என்றே தோன்றியது…. 
வேகமாக இருக்கையில் இருந்து எழுந்தவள் அவசரமாக வாயிலை நோக்கி நடக்க, நந்தனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை… 
வீட்டின் வாயிலில் ஒரு நொடி நின்றவள் மனம் கேட்காமல் நந்தனை திரும்பிப் பார்க்க அவன் இவள் திரும்புவதை கவனித்து சட்டென்று தன் தலையை திருப்பிக் கொண்டான்.
அவன் தன்னை பார்க்க விரும்பவில்லை என்று எண்ணிய மஹாவிற்கு, அவனது சந்தேக எண்ணத்தில் தான் இவ்வாறு செய்கிறான் என்று நினைத்து மனவேதனையுடன் விருட்டென்று கிளம்பிவிட்டாள்….
நந்தனும் இன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டே… தன் கம்பெனி நோக்கி பயணம் ஆனான் ஒருவித சிந்தனையோடு…
தன் அலுவலகத்தில் மஹாவிற்கு மூளையும், மனமும் நந்தனின்  நினைவில்  உழன்றது …’அவன் எப்படி நம்மளை அப்படி நினைச்சான்… நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல டா….. இவனுக்கு எப்ப பாரு என்னை தப்பா நினைக்குறதே வேலையா போச்சு … சே..’ என்று எண்ணியவளுக்கு அன்று வரவேற்பு நடந்து முடிந்த அன்று இரவு நந்தனின் வீட்டில் அவனது அறையில் நடந்தது நினைவிற்கு வந்தது… 

கண்டிஷன்ஸ் தொடரும் …….

Advertisement