Advertisement

“உனக்கு தெரியும்…. நீ தான் எங்கையோ எடுத்து வச்சு இருக்க ஒழுங்கா சொல்லு டி… எனக்கு மீட்டீங்க்கு டைம் ஆச்சு… தேவை இல்லாமல் விளையாடாத…நம்ம சண்டைய வேற ஒரு நாள் வச்சுக்கலாம்… ஒழுங்கா சொல்லிரு…. “பொறுமையாக தன் நிலையை விளக்கியவனை ஒரு முறை பார்த்துவிட்டு, தன் பிரெட்டை ஒரு வாய் கடித்தவள், 
“அதான் சொல்லுறேன்ல எனக்கு தெரியாதுன்னு… அப்புறம் ஏன் சும்மா சும்மா என்னையே கேட்டுட்டு இருக்க? நீ எங்கையோ போட்டுட்டு என்னை டார்ச்சர் பண்ணுற…. போ போய் ஒழுங்கா தேடி பாரு… “, என்று விட்டு அடுத்த வாய்க்கு பிரெட்டை கொண்டு செல்லும் நேரம் பார்த்து…அந்த பிரெட்டு கீழே விழுந்து தன் உயிரைக் விட்டு இருந்தது…
அவளது பதிலில் கோபம் வர, டைனிங் டேபிளின் இருக்கையில் அமர்ந்திருந்தவளின் முழங்கையை பிடித்து வேகமாக இழுத்து தன்னை பார்க்கும்படி அவளை நிர்க்க வைத்தவனை கண்டு கொள்ளாமல்…..
அவன் இழுத்த வேகத்தில் பிரெட் கீழே விழ, டேபிள் ஆடியதில் டம்ளரும் சரிந்து அதில் இருந்த பாலும் கீழே கொட்டி இருந்தது… அதையே வெறித்து பார்த்தக் கொண்டிருந்தவளுக்கு கோபம் வந்தது ஏகத்திற்கும், அதில் அவனை கண்டு முறைத்தவள், அவன் கையை உதறி விட்டு 
 “எனக்கு தான் தெரியாதுன்னு சொல்லுறேன்ல சும்மா எதுக்கு இப்படி சீன் போடுற..” கோபத்தில் பதிலுறைத்தவள், கிட்சனை நோக்கி நடக்க போக அவளது வழியை மறைத்து நின்றான் நந்தன்.,
“இப்ப சொல்ல போறீயா இல்லையா…”என்று கர்ஜித்தவனை கண்டு அசராமல் மஹா நிற்கவும்,
“சொல்லு டி…” என்று அவளை நோக்கி ஓர் அடி முன்னேறியவனை கண்டு,
“சொல்ல முடியாது…” என்றவளின் குரலில் உறுதி தெரிந்தது, அவனை தாண்டி செல்ல முயல்கயில்,
அவள் கையை பிடித்து நிறுத்தியவன்,”அப்ப நீ தான் எடுத்து வச்சு இருக்க…” என்றவனின் கைப்பிடி இறுகியது,
அவன் பிடித்த கையையும், அவனையும் மாறி மாறி பார்த்தவள், தெளிவான குரலில்,” ஆமா டா இப்ப என்ன அதுக்கு…?” அவள் கூறி முடிக்கும் முன்…. 
அவளை பின்புறமாக திருப்பி அவன் பிடித்து இருந்த அவள் கையை முதுகின் பின்புறம் கொண்டு வந்து முறுக்கினான்.
அதில் மஹாவின் கையும், தோள்பட்டையும் வலிக்க, “விடுடா என் கைய… பன்னி விடு டா…” என்று கத்தி கொண்டே தன் கையை அவன் பிடியிலிருந்து உருவி கொள்ள அவள் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியோடு சேர்த்து வலியையும் தழுவியது. 
“ஃபோன் எங்கன்னு சொல்லு கையை விடுறேன்…” என்று அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்தி பல்லை கடித்து கொண்டு கேட்க,
“நீ கைய விடு நான் சொல்லுறேன்…” என்றவளை நம்பாத ஒரு பார்வை பார்த்தவன்… 
“நீ பிராடு டி… ஏமாத்தினாலும் ஏமாத்துவ… சோ எங்க இருக்குன்னு முதல சொல்லு…” அவளது துடுக்குதனம் பற்றி தெரிந்ததால் அவன் மஹாவின் கையை விடாமல் பற்றி மேலும் லேசாக  முறுக்க,
“ஆஆஆஆ….. தடிமாடு விடுடா வலிக்குது… நான் தான் சொல்லுறேன்னு சொல்லுறேன்ல…”என்று அலறியவளை கண்டு லேசாக மனம் இறங்கியவன் அவள் கையை விடுவித்தான்….
பாவமாக முகத்தை தொங்க போட்டுக்கொண்டவள், அவன் முறுக்கிய கையை பார்க்க அது அவன் இறுகியபிடியில் சிக்கி இருந்ததால் நொடியில் சிவந்து கன்னி போய் இருக்க, “ம்ம்ம்…” என்ற சிணுங்களுடன் உதட்டை பிதுக்கி தன் கையை நீவி விட்டு கொண்டாள்…
நந்தனை முறைத்துக் கொண்டே, அவனை தாண்டி சென்றவள் ஃபோனை தேடி எடுப்பது போல் பாவனை செய்து தன் கைப்பையை எடுத்து கொண்டவள் சட்டென்று கதவை நோக்கி ஓட…. அவளை வைத்த கண் எடுக்காமல் குறுகுறு வென்று பார்த்துக் கொண்டு இருந்தவன்…
அவள் வாயிலை நோக்கி ஓடவும் அவளது நோக்கம் புரிந்து சுதாரித்து… நந்தனும் அவளை நோக்கி ஓடினான்… 
ஆனால் அவள் வெளியே ஓடும் முன் நூலிழை இடைவெளியில் கதவிற்கும் மஹாவிற்கும் நடுவில் வந்து நின்றான் நந்தன்…
அதில் இருவரும் முழுவதுமாக உரசி விடுவது போல் பிரேக் அடித்து நிற்க… இடித்து விடுவோம் என்று உணர்ந்து மஹா சட்டென்று பின்நோக்கி நகர்ந்து நின்றாள்…. 
“ஒழுங்கா வழிய விடு… இல்ல…” ஒரு விரல் நீட்டி மிரட்ட…
“இல்லாட்டி என்ன டி பண்ணுவ…?” அவனும் திமிராக கேட்க,
“வேண்டாம்… ஒழுங்கா வழிய விடுடா…” குரலை உயர்த்தி மிரட்டியவளின் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தான்….
“ஆஆஆ… தடிமாடு… பன்னி… எருமை… ஏன்டா கொட்டினே…” தலையை தேய்த்துக் கொண்டே அழுது விடுபவள் போல் கேட்டவளை பார்த்து முறைத்தவன்,
“எதுக்கு கொட்டினேன்னு தெரியாதா…? ஒழுங்கா ஃபோனை கூடு டி… இல்ல நீ இங்க இருந்து ஒரு அடிக்க கூட நகர முடியாது…” என்று மிரட்டியவனை கண்டு,
“நீ மட்டும் என் ஐடி கார்டை எடுத்து வச்சுட்டு குடுத்தியா…? நானே தானே தேடி எடுத்தேன்… நேத்து கூட பால்ல பேப்பரை கலந்து விட்ட…. ” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவள் மறந்தும் இரவு நடந்ததை பற்றி பேசவில்லை….
காரணம் அவள் அவன் மீது காதல் கொண்டு அதில் ஏமாற்ந்ததாக எண்ணினாள்… அந்த ஏமாற்றம் அவளை பெரிதும் வதைத்தது….
நந்தன், “அன்னைக்கு என் கிட்ட கேட்டியா என் ஐடி கார்டு எங்கன்னு… ? இல்லல…. அப்புறம் என்ன…? என்னமோ நான் எடுத்து வச்ச மாதிரி பேசுற… நீ சாம்பார்ல உப்பு போடாம இருந்து இருந்தா நான் ஏன்டி பால்ல பேப்பரை போட போறேன்….? ஒழுங்கா என் ஃபோனை குடுத்துடு டி இல்லை திரும்பவும் கொட்டுவேன்…” என்று அவன் அவளை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வர…
தன் மண்டையை காத்துக் கொள்ளும் பொருட்டு ஓர் அடி பின் சென்றவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனை முறைத்துக் பார்த்தாள்…
நந்தன்,” என்ன….?”
“ஒன்னும் இல்ல…. ” உதட்டை பிதுக்கி தலையை மறுப்பாக அசைத்தவள்,
சோஃபாவின் அருகில் சென்று அவனை ஒருமுறை பார்த்துவிட்டு அவனது பேக்கில் இருந்து ஃபோனை எடுத்து டீப்பாயின் மேல் வைத்தவள் அவனை திரும்பியும் பாராமல் கிட்சனை நோக்கி சென்றாள்…
அதை கண்டு நந்தனுக்கு கோபம் வர, “பாவி கொசுக்குட்டி…. என் பேகுலையே (bag) வச்சுட்டு வீடு முழுக்க தேட வச்சு இருக்கா பாரு…அடியேய்ய்ய்… இன்னோரு நாள் என் கிட்ட கண்டிப்பா சிக்குவ டி…. அப்ப பார்த்துக்குறேன்…” வாய் விட்டு புலம்பியவன்… 
கம்பெனிக்கு செல்ல தன் பேக்கையும், ஃபோனையும் எடுத்துக் கொண்டு ஷூவை அணிந்துக் கொண்டு இருக்கும் போது கிட்சனில் இருந்து அவள் வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான்….,
உடையில் சிந்திய தண்ணீரை தட்டியபடி, தன் வாயையும் துடைத்துக் கொண்டு வந்தவளை கண்டு முறைத்து பார்க்க, அவளும் அவனை முறைத்துக் கொண்டே கதவை நோக்கி சென்றாள்…
செருப்பை அணிந்துவிட்டு கதவை திறக்க அதன் மீது கை வைத்தவள் ஒரு முறை திரும்பி டைனிங் டேபிளை பார்க்க, சிந்திய பாலையும், கீழே கிடந்த பிரெட்டையும் பார்த்து பெருமூச்சொன்றை விட்டு விட்டு வெளியே சென்றுவிட்டாள் அமைதியாக….
அவள் பார்வை சில நொடிகள் எங்கோ தேங்கி இருப்பதை கண்டு அவனும் அவள் பார்வை சென்ற திசையில் பார்க்க,”கொசுக்குட்டி சாப்பாடு போச்சா… ? தேவைதான் எவ்வளவு நேரம் டென்ஷன் பண்ணிட்டா… ஒரு நாள் பட்டினியா போட்டும் ஒன்னும் ஆயிராது… ஒரு வேளை சாப்பிடாததிற்கு கொசுக்குட்டிக்கு எம்புட்டு ஃபீலிங்ஸ்… ” தனக்கு தானே சொல்லிக் கொண்டவன், ஒருமுறை சிதறிய உணவை பார்த்துவிட்டு கம்பெனிக்கு கிளம்பினான்…
அவனது கம்பெனியில் மீட்டீங் முடியும் முன்னரே பாதியில் இருந்து எழுந்து வந்தவன்… தன் அறையில் கோபத்தின் உச்சியில் சிங்கத்தின் வேட்கையில் அறையை அளந்துக் கொண்டு இருந்தான் நந்தன்… அவனது கண்கள் சிவந்து இருக்க இடது கையால் தன் தலையை கோதியபடி தன் கோபத்தை அடக்க முயற்சி செய்துக் கொண்டு இருந்தவன் அது முடியாமல் ஜன்னலின் அருகில் சென்று வெளியே பார்வையை செலுத்திய படி வலது கையால் சுவரை ஓங்கி குத்திக் கொண்டு இருந்தான்…
“சை… எவ்வளவு திமிரு… எவ்வளவு அகங்காரம்… இவள போய் நம்பினேன் பாரு… அப்படி என்னடி ஈகோ உனக்கு… எவ்வளவு ஈஸியா என்னை ஏமாத்திட்டா… இல்ல இல்ல நான் தான் ஏமாந்துட்டேன்…” என்று புலம்பிக் கொண்டு இருந்தவன் அவளின் நினைவில் “பாவி… எப்படி டி உன்னல இப்படி இருக்க முடிஞ்சுது…” மனதில் எழுந்த பெருந்துயருடன் தன் இருக்கையில் அமர்ந்து கைகளால் தலையை தாங்கியபடி அமர்ந்து கொண்டான் நந்தன்…. 
தன் நினைவில் உழன்று கொண்டு இருந்தவன் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க… தன் நண்பனுக்கு அழைத்து பேசி, ஒரு தீர்மானத்துடன் தன் அறையை விட்டு வெளியே வர, மீட்டீங் முடிந்து வந்த கிஷோர்,
“டேய் நந்தா எல்லாம் சக்சஸ் டா… அவங்களுக்கு எல்லாம் ஓகே … இந்த பிராஜக்ட் மட்டும் ஓகே ஆயிட்டா நமக்கு நல்ல டேர்ன் ஓவர் கிடைக்கும்.. நெக்ஸ்ட் லெவல்க்கு போயிருவோம்…. “மகிழ்ச்சியுடன் கூற நந்தனின் முகமோ இறுகி இருந்தது… 
கிஷோரை பார்த்து அடக்க பட்ட கோபத்தில், தன் இதழில் தவழ்ந்த நக்கல் புன்னகையுடன், கைமுஷ்டிகள் இறுக நின்று இருந்தான் நந்தன். 
அவனை கண்டு துணுக்குற்ற கிஷோர், “என்ன ஆச்சு நந்தா….?”என்று வினவ… 
அதற்கு பதில் கூறாமல் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு சிறுத்தையின் வேகத்தோடு அங்கு இருந்து சென்றான் காரை நோக்கி…
ஒன்றும் புரியாமல் ஒருவகை பயத்துடன்,  செல்லும் அவனையே பார்த்து இருந்தான் கிஷோர்….
“என்ன ஆச்சு இவனுக்கு ஏன் இவ்வளவு கோவமா போறான்….”என்று யோசித்தவனுக்கு விடை கிடைக்க போவது இல்லை என்று தெரிந்து தன் வேலையை பார்க்க சென்றான் வேறு வழியின்றி…. 
நந்தன், எந்த ஒரு விசயத்தையும் கிஹோரிடம் இருந்து மறைபவன் அல்ல அந்த அளவிற்கு இருவரும் நெருக்கமானவர்கள்… அனால் சில சமையங்களில் சிலதை பகிர்த்து கொள்ள விரும்ப மாட்டான் நந்தன்… அது எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அவன் முடிவெடுத்து விட்டால் ஒரு முத்து கூட வாயில் இருந்து விழாது… அதனால் இப்பொழுது அவன் பதில் கூறாமல் போவதை கண்டுகொல்லாம விட்டுவிட்டான்….
 
அரைமணி நேர பயணத்தின் முடிவில் கார் பார்க்கிங் ஏரியாவில் , காரில் இருந்து இறங்காமல் தன் கோபத்தை முடிந்த மட்டம் அடக்கிக் கொண்டவன், முயன்று வர வைத்த புன்னகையுடன் கீழே இறங்கி தன் நண்பனை காண அவனது அலுவலகம் வந்தவன் நண்பனின் அறையை நோக்கி நடக்க தொடங்கினான் நந்தன்…..
வழியில் பார்வையால் எரித்து விடுவது போல் தனக்கு எதிரே வந்தவரை பார்த்துக் கொண்டே சென்றதை அந்த நபர் கவனிக்கவில்லை…
நண்பனின் அறைக்கு சென்றவன் சிறிது நேரம் பேசிவிட்டு தன் வேலை முடிந்ததும் அங்கிருந்து கிளம்பினான் நந்தன்..
காரில் தன் கம்பெனிக்கு செல்லும் வழியெல்லாம் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல்,”ஷீட்… ” என்று தன் ஸ்டீரிங்கை தட்டிக் கொண்டே வந்தான்… 
கம்பெனியில் தன் அறைக்கு வந்து அடுத்து என்ன செய்வது என்று பலத்த யோசனையில் ஆழ்ந்தான்… 
அவன் காலை முதல் ஆராய்ந்து விசாரித்ததில் அவன் எண்ணத்திற்கு மாறாகவே விடைக்கள் அனைத்தும் கிடைக்க….. மனதில் இருந்த ஒருவகை நற்ப்பாசையில் கடைசி முயற்சி ஒன்றை செயல் படுத்த எண்ணிய நந்தன், ஒரு ஆண்மகனுக்கு இது பெரும் அவமானமாக என்று கருதினான்… 
ஒருவேலை தன் கடைசி முயற்சியும் தன் எண்ணத்தை பொய்யாக்கினால் அதற்கு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கி அதற்கு ஓர் தீர்வும் கண்டான்… 
அன்று முழுவதும் கோபத்தில் சுற்றியவன் மாலை 6.30 மணியளவில் கம்பெனியில் இருந்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்க…
எதர்ச்சையாக சாலையில் அவன் கண்ட காட்சியில் தன் நிலையை இழந்து காரின் வேகத்தை கூட்டினான் வீட்டைநோக்கி…
வீட்டின் கார் பார்க்கிங்கில், தன் காரை கொண்டு வந்து நிறுத்தியவன்… காரை விட்டு இறங்காமல் தன் காரை உறும விட… அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்த மஹா எதுவும் கூறாது காரை விட்டு இறங்கி தங்கள் வீட்டை நோக்கி சென்றாள்… 
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன்… காரை விட்டு இறங்கி வேக நடையுடன் தங்கள் வீட்டை அடைந்தான் அத்தனை கோவத்தோடு…
புயல் போல் வீட்டின் உள்ளே நுழைந்தவன், “யாரு டி அவன்…?”என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு கர்ஜிக்க,
தன் அறைக்குள் செல்ல இருந்தவள் அவனது கர்ஜனையில் தூக்கிவாரிப் போட, அதிர்ந்து அவன் முகம் பார்க்க…
அவளது அதிர்ந்த முகத்தை கண்டு கொஞ்சமும் இளகாமல்,”கேட்குறேன்ல சொல்லு டி… யாரு அவன்….?” என்று மீண்டும் சீறினான் அவளிடம்….
கண்டிஷன்ஸ் தொடரும் …….

Advertisement