Advertisement

UD:24
வீட்டிற்கு வந்து வாயர்க்கதவை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்… 
தரையில் சோஃபாவின் அருகில் கால்களை மடக்கி கைகளை முட்டியை சுற்றி மடக்கி வைத்திருந்தவளின் கையில் கத்தி இருக்க, தலையை கால் முட்டியில் சாய்த்து அமர்ந்திருந்தாள் மஹா…
அவளை கண்டதும் அதிர்ந்து நின்ற நந்தன் பின் சுதாரித்து, “ஸ்ரீ…” என்று பதற்றமாக அழைக்க,
அந்த குரலும், பெயரும் செவி வழி பயனித்து இதயத்தை சென்றடைய, மயக்கத்தில் இருந்து பட்டென நிமிர்ந்து வாயிலை பார்த்த மஹா, 
நொடி நேரம் கூட தாமதிக்காமல், ,”யாது…” என ஓடி சென்று நந்தனை இறுக கட்டிக் கொண்டாள்…
அவளது இந்த திடீர் தாக்குதலில் ஒரு அடி பின் சென்றவன்… தன்னை சமாளித்துக் கொண்டு குனிந்து அவளை பார்த்து, “ஸ்ரீ… என்ன ஆச்சு மா… ?” பயத்தில் இருக்கிறாள் என்று அவள் உடல் நடுக்கத்தில் உணர்ந்தவன் மென்மையாக கேட்க,
 
அவளிடம் இருந்து பதில் ஏதும் இல்லாமல் போகவும், திரும்பி வாசல் கதவை சாத்தியவனை கட்டிக் கொண்டே இருந்தவள் அவனை விடுவிக்க தோன்றாமல் நின்று இருந்தாள்…
இத்தனை மணிநேரம் மனதில் சூழ்ந்து இருந்த பயத்தால், ஒரு இன்ச் இடைவேளை கூட இல்லாமல் அவனை அணைத்துக் கொண்டு நின்று இருந்தாள்…
பின் மெதுவாக அவள் தோள் தொட்டு தன்னை விட்டு பிரிக்க முயற்சி செய்ய, அது முடியாமல் போகவே…’இவ கிட்ட தன்மையா பேசுனா எதுவும்மே வேளைக்கு ஆகாது போல….’ அவளை திசை திருப்ப எண்ணி, “ஏய்… இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிக்குறதா ஐடியா.. என் ஷர்ட் கசங்குது பாரு… ” என்றதும்…
அவனை விட்டு வேகமாக பிரிந்தவள் அவனையும், அவன் ஷர்டையும் மாறி மாறி பார்த்தவள் கையில் இருந்த கத்தியை கீழே போட்டு விட்டு அவன் ஷர்டை கைகளால் கசக்கி விட ஆரம்பித்தாள் மூர்கமாக… 
அவளது இச்செயலை சற்றும் எதிர்பாராதவன், “ஏய்… ஏய்…லூசு விடுடி… விடுன்னு சொல்லுறேன்ல…. ஏன்டி இப்படி பண்ணுற… லூசு கொசுக்குட்டி… “அவளிடம் இருந்து தப்பிப்பதற்காக அவளது கைகளை தட்டி விட்ட படி பின் நோக்கி செல்ல, அவளோ முழுவீச்சில் எதை பற்றியும் கவலைக் கொள்ளாமல் அவனது ஷர்டை கசக்கிவிடும் குறிக்கோளுடன் அவனை நோக்கி நடந்துக் கொண்டே ஷர்டில் குறியாக இருந்தாள்…
அவளது கைகளை தடுக்க முயற்சிசெய்தவன் ஒரு கட்டத்தில் முடியாமல் போக… அவளது இருகைகளையும் இறுக பற்றி பக்கவாட்டில் தள்ளி விட… அதில் நிலை தடுமாறி வீழ போனவளை பிடிக்க நினைத்து அவனும் அவளுடன் சோஃபாவில் வீழ்ந்தான்…
இருவர் முகமும் மிக அருகில் தெரிய, அவளது கலங்கிய கண்களும், சோபையான, பொலிவிழந்த முகமும் அவனை அவளது முகத்தை ஆராய செய்தது… 
அவளும் அவனையே தான் இமைக்க மறந்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்… சில மணி நேரங்களுக்கு முன்பு அவள் காண துடித்த முகம் அல்லவா…
அவள் நினைவில் வந்த அழகாக தருணங்களோடு அவன் தன்னிடம் சொல்லாமல் சென்றதும் அதன் பின் நடந்ததும் நினைவிற்கு வர, அதுவரை அவனை ரசித்துக் கொண்டிருந்த அவள் கண்கள், இப்பொழுது கோபத்தை பரிதிப்பளித்தது…
மஹாவின் மீது பட்டும் படாமல் அவளது தலையின் பக்கவாட்டில் ஒரு கையும் சோஃபாவின் சாய்வில் ஒரு கையும் வைத்து அவள் மீது வீழ்ந்தும் வீழாமல் இருந்த நந்தனின் நெஞ்சில் ஒரு அடி வைத்தவள், 
“பன்னி ஏன்டா சொல்லாம போனா… ” என்று கோபமாக கேட்க, 
“ஸ்ஸ்… எதுக்கு டி அடிக்குற… இவ்வளவு நாள் வாய் மட்டும் தான் ஓவரா போச்சு இன்னைக்கு கையும் கொஞ்சம் ஓவரா தான் நீளுது…” அவள் மேல் இருந்து எழுந்து நின்று அதடியவனை, 
“ஆமா டா தடியா… அப்படி தான் நீளும்… ஏன் சொல்லாம போன… நான் காலைல எவ்வளவு லேட் ஆனாலும் ஆஃபிஸ் போகும் போது உனக்காக வெய்ட் பண்ணி உன் முன்னாடி தானே கிளம்புறேன்… அப்ப உனக்கும் அத பண்ணணும்னு அறிவில்ல… இதுல ஷர்ட் கசங்குதுன்னு சார்க்கு ஃபீலிங் வேற… உன்னை…” கோபத்தில் அவள் உணர்ச்சி வசப்பட்டு தன் மனதின் ஏக்கத்தை வெளிப்படுத்தியவள், முடிவில் அவன் ஷர்டை மீண்டும் கசக்கிவிட…
“ஏய்… லூசு…” அவள் கையை தடுத்தவன், அவள் கூறியதின் அர்த்ததை புரிந்துக்கொள்ளாமல் அவளை வார்த்தைக் கொண்டு வதைத்தான்…
அதில் அதிர்ந்து அவன் முகத்தை பார்த்தவாறே அவனை விட்டு ஓர் அடி பின் சென்றாள். 
தன் ஷர்டில் அவள் கசக்கிவிட்டதை நீவி விட்டப்படி, தலையை நிமிர்த்தாமல் விழிகளை மட்டும் உயர்த்தி அவளை பார்த்தவாறே, “நீ போட்ட கண்டிஷன் தான்… நானும் அதே கண்டிஷன்ஸ் போட்டேன் எங்கே போற, என்ன பண்ணுறன்னு கேட்க கூடாதுனு… நீயும் உடனே ஓகே சொன்னதா நியாபகம்… ” நக்கலாக அவன் கேட்க, மஹாவோ அதிர்ந்து அவனை விட்டு பின் சென்றாள்….
அவள் அமைதியை கண்டு,”என்ன கொசுக்குட்டி… மறந்து போச்சா…? ” என்று கேலிப் புன்னகையுடன் கேட்க, 
அதிர்ந்து நின்றவள் அவனது கேலிப் பேச்சில், “ஆ.. ஆமால.. ம..மறந்துட்டேன்… சா..” ஏதோ தொண்டையை அடைப்பதுப் போல் இருந்தது அவளுக்கு, எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டு,தலை கவிழ்ந்து “சாரி… ” என்க,
அவளது இந்த தடுமாற்றம், அதிர்ந்த முகம் கண்டு யோசனை ஆனவன் சற்றென்று தன் வார்த்தையின் வீரியம் புரிய, அவளுக்கு தான் விளையாட்டாக கூறியதை புரிய வைக்க எண்ணி, அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்து பேச முற்படும் போது, 
அவள் தன் உணர்ச்சிகளையும் முகத்தையும் மறைக்க சட்டென திரும்பி அறைக்கு செல்ல எத்தனித்தாள்… 
அப்பொழுது நந்தன், “ஸ்ரீ…” என்று அழைக்க, அதற்கு நிற்காமல் செல்பவளை பின் தொடர்ந்தான்.. அவளுடன் பேச வேண்டும் என்று… 
தன் அறை வாசல் வரை சென்று ஒரு நிமிடம் தேங்கி நின்று அவன் புறம் தலை குனிந்த நிலையிலேயே திரும்பி நின்றவள், “ஒரே ஒரு ரெக்வஸ்ட்…. இனி நைட் வெளிய போற மாதிரி இருந்தா சொல்லிடு, நான் அத்தை மாமா கூட போய் இருந்துப்பேன்…” மெல்லிய குரலில் கூறியவள், தலை நிமிர்ந்து அவனை பார்த்து, “பிளீஸ்…” என்று விட்டு தன்  அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டாள்… 
மஹா அவன் புறம் திரும்பியதும் அவன் அவளை கவனிக்க, அவளது வார்த்தையில் அவனது இதயத்தில் யாரோ எதையோ குத்தியது போல் இருந்தது….
எவ்வளவு பெரிய தவறை புரிந்துள்ளோம் என்று புரிய… அவளை சமாதானம் செய்ய விளைந்து அவள் அறையை தட்ட கையை ஏந்தியவன்… பின் மனதில் அவளை ஒவ்வொரு முறையும் காயப்படுத்துவதை உணர்ந்து அவனுள் எழுந்த குற்றுணர்ச்சியில், அவளிடம் என்னவென்று பேச என்று தெரியாமல் அறைக்கதவை தாட்டாமல் பின்னடைந்தான்…
சோஃபாவில் பொத்து என்று அமர்ந்து கைகளில் தன் தலையை தாங்கியபடி இருந்தவனுக்கு, ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறோம் என்றே புரியவில்லை… 
 
அன்று ஐடி கார்டு விஷயத்திலும், இன்றும் தான் இளைத்த தவறை எண்ணி தன்னேயே வெறுத்தவன்… அவள் எந்த அளவிற்கு கஷ்டபட்டு இருந்து இருப்பாள் என்று எண்ணியவனுக்கு தன் மேலே வெறுப்பாக இருந்தது… 
அன்றும், இன்றும் அவளுக்கு அவளது கண்டிஷனை நினைவுறுத்தவும் அதற்கு அவளது அதிர்ந்த முகமும், அதன் பின் அவளது அமைதியும் அவனை கொல்லாமல் கொன்றது… 
அன்று மஹாவின் கண்டிஷன்ஸை கேட்ட பொழுது அவள் அதை மனமுவர்ந்து கூறவில்லை, திருமணத்தை நிறுத்துவதற்காக தான் கூறுகிறாள் என்று அறிந்துதான் இருந்தான்… 
இன்று அதே வார்த்தைகளை அவன் அவளிடம் கூறும்போது அவளின் அதிர்வும், அமைதியும் அவளது வேதனையை காட்டியது… ஆனால் ஏன் என்று தான் அவனுக்கு பிடிப்படவில்லை… ஆனால் அவளது வருத்தமான முகம் அவனை கொன்றது உண்மை….
அவளது நினைவில் உழன்று படி தன் முகத்தை மூடி அழுத்தி துடைத்தவன் விழியில், தரையில் கிடந்த கத்தியை பார்த்தவன்,சற்று நேரத்திற்கு முன்பு அவளது செயலை எண்ணி யோசனையில் ஆழ்ந்தான்… 
‘ஏன் அப்படி நடந்துக்கிட்டா…? கத்திய வச்சுக்குற அளவுக்கு என்ன பயம்…’ என்று யோசித்துக் கொண்டு இருந்தவனுக்கு அப்பொழுது தான் உரைத்தது… 
‘ஒரு வேலை தனியா இருக்க பயமோ… ஆனால் கத்தி? ஏதாச்சும் பிரச்சினையா இருக்குமா… இப்ப ஏதாச்சும் பிரச்சினையா இல்ல எப்பவும் இந்த மாதிரி தானா…?’ என்று யோசித்தவன் அவளை மிகவும் வேதனைப் படுத்துகின்றோம் என்று மட்டும் விளங்கியது நந்தனுக்கு… 
‘என்னனு கேட்குறது… ஆனா இப்ப கேட்டா சொல்லுவாளா? …. என்ன பிரச்சினைன்னு எப்படி தெரிஞ்சுக்குறது…? எப்படி ஆறுதல் சொல்லுறது? ஒரு வேலை இன்னும் பயந்துட்டு இருப்பாளா??? கடவுளே…….” என்ன செய்வது என்று புரியாமல் சிறிது நேரம் முழித்தவன்…
பின் எழுந்து சென்று கத்தியை எடுத்து கிட்சனில் வைத்துவிட்டு தன் அறைக்கு செல்லும் முன் அவளது அறையை சில நொடிகள் பார்த்தவன் பின் அறைக்கு சென்று படுக்கையில் சரிந்தான்….. 
தன் அறைக்குள் வந்தவள் கதவை சாற்றி விட்டு அதன் மேலே சாய்ந்து சரிந்து கீழே அமர்ந்தவளின் மூளை அவனது வார்த்தைகளையே எண்ணிக் கொண்டு இருந்தன…. 
‘நான் கண்டிஷன்ஸ் போட்டது தப்பு தான்… அதுக்காக வாழ்நாள் முழுக்க அதுக்கான தண்டனையை நான் அனுபவிக்கணுமா… ‘ என்று யோசித்தவள்,’அப்ப அவனுக்கு என் மேல கொஞ்சம் கூட பாசம் இல்லையா… ? அப்ப அன்னைக்கு சாப்டியான்னு கேட்டதுக்கு காரணம் என் மேல பாசம் இல்லையா…அப்படி இருந்து இருந்தா இப்ப என்கிட்ட வந்து பேசி இருப்பாங்களே…. எவ்வளவு நேரம் ஆச்சு…. ஆனா பேசலையே… அப்ப நான் தான் என்னை குழப்பிக்கிட்டேனா… ‘ என்று அவனது சிந்தனையில் முழ்கி இருந்தவளுக்கு,  அவளது இதயம் சுக்கு நூறாய் உடைவது போல் இருந்தது… 
‘கண்டிஷன்ஸ் போட்டா அதை பாளோ பண்ணியே ஆகணுமா? அப்ப என் லைஃப்…? நம்ம லைஃப்….? எல்லாம் போச்சா….? ஒரு வேளை என்னை டிவோர்ஸ் (divorce)பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்க நினைக்குறான்னா…?அப்பப்ப சொல்லுவானே ஸ்டேடஸ்ன்னு… அப்ப என்னை கழட்டி விட்டுட்டு அவன் ஸ்டேடஸ்க்கு தகுந்த மாதிரி பொண்ணை பார்த்து கட்டிக்க போறான் போல அதான் நான் சொன்னதையே விடாம பிடிச்சுகிட்டு என்னை ஒதுக்கி வைக்குறான்… எ…எனக்கு ஒரு சந்தர்ப்பமே அவன் குடுக்கல…’ அவனது முந்தைய செயல்களும் வார்த்தைகளும் அவளை ஏடாகூடமாக யோசிக்க வைத்து கண்கள் கலங்கி கன்னம் வழிந்து…
தீவிர யோசனையில், பசி மயக்கம், தனிமை அதிர்ச்சியால் வந்த சோர்வு என்று அனைத்தும் சேர்ந்து அவளுக்கு அமர்ந்த வாக்கிலே தூக்கம் தழுவியது…
அவன் எப்படி பேசுவது என்று குற்றவுறணர்ச்சியில் பேசாமல் விட்டது அவளை மேலும் தாக்கியது… 
அவளை பற்றி யோசனையில் இருந்தவன் இனி அவளை வருத்த கூடாது, தன்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவுடன் தன் நித்திரைக்கு சென்றான்…
அவளை இனி வருத்த கூடாது என்று எண்ணியவன் மறுநாளே அவளது இதயத்தை அவனது வார்த்தைக்கள் கொண்டு கொல்ல போவதை அறிவானோ…
நாளைய பொழுதின் விடியலில் ,அவளது நிம்மதி குழைய போவதை உணராமல் தரையில் துயில் கொள்ளும் அவள் நிலைமை என்னவாகும்…?
வாயில் பிரெட்டை வைத்து அடக்கியப்படி ஓரவிழியில் நந்தனை நோட்டம் விட்டகொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தாள்… 
வீடு முழுவதும் தேடிக் கொண்டு இருந்த நந்தனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு இருந்தது… 
இன்னும் 1மணி நேரத்தில் அவன் தன் கம்பெனியில் இருக்க வேண்டும்… முன்தினம் நடந்த மீட்டிங் நல்ல படியாக முடிந்ததால் அந்த ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு செல்ல, அதை பற்றி பேச முக்கிய மீட்டிங் ஒன்று முடிவானது…
ஆனால் அவன் கிளம்ப முடியாதபடி அவனது அலைபேசி அவன் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தது…. அதற்கான காரணகர்த்தா எதுவும் தெரியாதது போல் பிரெட்டை அமுக்கிக் கொண்டு இருந்தாள்….
ஓர விழியில் அவனை பார்த்து உதட்டோரும் தவழ்ந்த புன்னகையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவளை கண்டு கொண்ட நந்தனுக்கு சந்தேகம் எழ, சில நிமிடங்கள் ஃபோனை தேடுவது போல் அவளை கண்காணித்துக் கொண்டு இருந்தான். 
அவளது முழியும், உதட்டோரம் தவழும் கேலி புன்னகையும் சொல்லாமல் சொன்னது அவள் தான் தன் ஃபோனை எடுத்துக் வைத்துள்ளதாள் என்று … 
அவள் அருகில் நிதானமாக சென்றவன் மென்மையாக, “என் ஃபோனை நீ தானே எடுத்த… “இவளிடம் கோபப்படுவதால் எவ்வித பயனும் இல்லை என்று அறிந்தவன் மென்மையை கடைப்பிடித்தான்… 
முன்தினம் இரவு அவளை காயப்படுத்தியதை மனதில் கொண்டு அவளை வருத்தக் கூடாது என்று பொறுமையும், நிதானமாக பேசினான்…
“என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்… ?” கூலாக பேசியவளை என்ன செய்வது என்று தெரியவில்லை நந்தனுக்கு….
காலை செய்தித்தாளை புரட்டிக் கொண்டு இருந்தவன், கம்பெனிக்கு செல்ல நேரம் ஆவதை உணர்ந்து அவசரத்தில் ஃபோனை டீப்பாயின் மேலே வைத்துவிட்டு சொன்றுவிட, அதை கண்ட மஹாவிற்கு,
‘சிக்குனான் சிவணான்டி… மவனே… நேத்து என்னை கஷ்டபடுத்தினல, பால்ல பேப்பர் கலந்த,ராத்திரி என்னை அழ வைச்ச…. என் ஐடி கார்டை தேட வைச்ச…. இதுக்கு எல்லாம் சேர்த்துவச்சு இப்ப பழிவாங்குறேன் உன்னை… ‘என்று மனதில் பழிவெறியில் அவனது ஃபோனை அவசரமாக எடுத்து ஒளித்து வைத்தாள்… 
“என்னோட  ஃபோனை குடு… விளையாடாத டி… நீ தான் எடுத்து வச்சு இருக்கணு தெரியும்….”சற்று குரலை உயர்த்தி கேட்டவனை வெறித்துப் பார்த்தவள், 
நிதானமாக,”எனக்கு தெரியாது….”
பொறுமையை இழந்த நந்தன்,”எங்க என் ஃபோன்னு மரியாதையா சொல்லிரு…. இல்லாட்டி அடிப் பிச்சுருவேன் டி…”
பிரெட்டில் ஜாமை தடவியபடி,”எனக்கு தெரியாது….” தேய்ந்து போன டேப்பை(tape) போல் மீண்டும் அதே பதிலை கூற,

Advertisement