Advertisement

“எதுக்கு டி கடிச்ச…?” கையை தேய்த்துக் கொண்டே கோபத்தில் கேட்க, 
“நீ ரிமோட்டை தரல அதான்…” அசால்ட்டாக கூறியவளை, 
“ராட்சசி… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல உனக்கு எல்லாம்… லூசு…” தன் மனைவியே ஆயினும் அவளை நெருங்க முடியாமல் தன் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாமல் தன்னை இம்சை செய்யும் அவளின் மீது கோபம் வர, அதை வார்த்தைகளால் இந்த சந்தர்ப்பத்தில் அவன்வெளிபடுத்தினான்…
 
அவளோ… “உனக்கு தான் டா மனசாட்சி இல்ல… நான் நாள் முழுக்க வேலை பார்த்துட்டு வரேன்… எனக்கு பிடிச்சதை என்னை பார்க்க விடாம கொடுமை படுத்துற…” என்று அவனுக்கு எதிராக நின்று சண்டையிட,
தன் நிலையை எண்ணி நெற்றியில் அறைந்து கொண்டவன், அவளை முறைத்து பார்த்து,
“நாங்க எல்லாம் மட்டும் என்ன நாள் முழுக்க தூங்கிட்டு இருக்கோமா… அடியேய்… கொன்றுருவேன் பேசாம போயிரு…” ஒரு விரல் நீட்டி அவளை எச்சரிக்கை செய்ய,
“நீ ஒன்னும் என்னை போல இல்லையே… நீ ரெண்டு கம்பெனிக்கு M.D, அப்பா பிஸ்னஸையும் பார்த்துக்குற… ” என்று கூறியவளை கண்டு, வினோதமாக பார்க்க, 
அவனது பார்வையை கண்டு, “எதுக்கு டா தடியா அப்படி பார்க்குற…?” என்று கேட்க,
முதலில் அவளது செயலால் கோபத்தில் இருந்தவன், இப்பொழுது அவளது வார்த்தையில் இன்னும் கோபம் வலுபெற, அவள் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தான்…
“ஆஆஆஆ…ஏன்டா கொட்டின?” என்று முகத்தை சுருக்கி தன் மண்டையை தேய்த்துக் கொண்டே கேட்க, 
அவளது பாவனையிலும் சிணுங்களிலும் தன்னை மேலும் இழந்தவன் அவளை இரண்டடி நெருங்கினால் அள்ளி எடுக்கும் அளவிற்கு நின்றும், தனக்கு அந்த உரிமை இருந்தும், எதுவும் செய்ய இயலாமல் தன் காதல் கொண்ட இதயம் படும் பாட்டை அடக்க வழிதெரியாமல் தன் தலையை கோதி வேறு திசை பார்த்தான்…
 
“பதில் சொல்லுடா பன்னி… “என்று மீண்டும் கேட்டவளை மனதிற்குள்,
‘விடாது கருப்பு மாதிரி தொல்ல பண்ணுறா கொசுக்குட்டி…உன்னை என்ன பண்ணுறேன் பாரு…’ மனதில் புலம்பியவன்,
“சொல்ல முடியாது…. என்ன டி பண்ணுவ…” ஒரு முடிவுடன் அவனும் பதில் சொல்ல, 
அதில் வெகுண்டவள், “இப்ப நீ சொல்லல நான் அத்தைக்கு ஃபோன் பண்ணி என்னை அடிச்சு கொடுமை பண்ணுறான்னு சொல்லுவேன்…” கூறிக் கொண்டே தன் அலைபேசியை கையில் எடுக்க, 
அதை வெடுக்கென்று பிடிங்கியவன், “ஏய்.. அரைலூசு… நான் கம்பெனிக்கு M.D யா இருந்தா என்ன… கம்பெனிக்கு போய் வேலையை பார்க்காமல் வீட்டுல உட்கார்ந்து டிவி பார்க்க முடியுமா… நான் ஒழுங்கா வேலை பார்த்தாதான் ரெண்டு கம்பெனி, டெக்ஸ்டைல்ஸ் எல்லாம் பார்த்துக்க முடியும்….. “என்றவனை ஒரு நொடி வெறித்துப் பார்த்தவள்..
“அது எல்லாம் எனக்கு தெரியாது… நீ என் ஃபோனை குடு…” என்று போராடி (சண்டையிட்டு) கொண்டு இருக்க… 
அவன் பதிலுக்கு பேச வாய் திறக்கும் முன், வீட்டின் அழைப்பு மணி ஒலித்து அவர்களின் சண்டைக்கு தற்காலிகமாக​ இடைவேளை விடப்பட்டது…
நந்தன் அவளை முறைத்துக் கொண்டே அவளை தாண்டி சென்று கதவை திறக்க போகவும், அவளோ அவனை முறைத்துக் கொண்டே நின்றவள் தன்னை தாண்டி சென்றதும் நெஞ்சுக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு பொத்தென்று சோஃபாவில் அமர்ந்தாள்…
கதவை திறந்து பார்க்க, நந்தனின் வீட்டில் வேலை பார்க்கும் அன்னமாள் வந்திருந்தார்,
“தம்பி… பாப்பா தோசை மாவு கேட்டுச்சாம்…. அம்மா குடுத்து அனுப்பினாங்க…. “என்று கார்த்திகா கொடுத்தனுப்பிய தோசை மாவு அடங்கிய பாத்திரத்தை காட்டினார்… 
அன்னமா அவ்வாறு கூறியதும் விசுக்கென்று திரும்பி அமர்ந்து வாசலை பார்த்தவள், அவர் கையில் ஒரு கட்ட பையில் மாவு அடங்கிய பாத்திரத்தை கண்டவளுக்கு கோபம் தலைக்கேற அதை அவர் முன் காட்ட விரும்பாமல் அவனை முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டு இருந்தாள்…
நந்தன் மாலை வீட்டிற்கு வந்து இன்று என்ன சமைப்பது என்று கிட்சனை குடையும் போது தோசையும், சாம்பாரும் சாப்பிட ஆசை வர. 
வெளியை கடையில் மாவை வாங்க விரும்பாதவன் என் செய்வது என்று யோசித்து, தன் அன்னைக்கு அழைத்து மஹா தோசை சுட விரும்பியதாகவும் தோசை மாவு வேண்டும் என்று கூற, கொடுத்தனுப்புவதாக கூறினார் கார்த்திகா… 
“ஓஓஓ… சரி அன்னமா… அம்மா சொல்லி இருந்தாங்க குடுத்து விடுறேன்னு…அதை  பிரிட்ஜ்ல வச்சுருங்க… “என்று நந்தன் அவரிடம் கூற,
அவரும் அதை பிரிட்ஜில் வைக்க போக, மஹா சோஃபாவின் சாய்வில் கைகளை ஊன்றி தன் முகத்தை அதில் தாங்கிய படி திரும்பி அமர்ந்து, இருவரையும் அந்த பாத்திரத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள்…
நந்தன் அவளை பார்த்தும் பார்க்காதது போல நின்று இருந்தான்.
ஏனென்றால் அவள் நிச்சயம் தன்னை முறைத்து கொண்டு இருப்பாள் என்று அறிந்தவன், அன்னமாள் முன்பு எதற்கு வீண் சண்டையை உருவாக்கி அவர் முன் தங்களை காட்டி கொடுக்க வேண்டும் என்று அவளை பார்ப்பதை தவிர்த்தான்…..
அன்னமாள், “தம்பி… ராத்திரிக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க நான் செஞ்சு வச்சுட்டு போறேன்….” என்று கூற, 
மஹாவின் முகம் ஆயிரம் வால்ட்ஸ் பல்ப் போல் பிரகாசமாக,
நந்தன்,”அது எல்லாம் வேண்டாம் அன்னாம…. நாங்க பார்த்துக்குறோம்… உங்களுக்கு லேட் ஆயிடுச்சு பாருங்க… நீங்க கிளம்புங்க…” என்று பவ்வியமாக மறுத்து விட,
இப்பொழுது பியூஸ் பிடுங்கிய பல்ப் போல் ஆனது மஹாவின் முகம்… 
அன்னமாளும் சரி என்று கதவின் அருகில் செல்லும் போது, நந்தன் அவரை சமைக்க வேண்டாம் என்றதிலும், தன் பேரை சொல்லி தோசை உண்ண போகிறான் ஆனால் தான் மட்டும் பட்டினியாக இருக்க போகிறோம் என்றதும் கோபம் வர, 
“ஒரு நிமிஷம் அன்னமா… நாளைக்கு அத்தையை பார்க்கும் போது…. இவரு என்னை கொடிட்டாருன்னு சொல்லுங்க… அடிச்சு கொடுமை படுத்துறான்னு சொல்லுங்க… வீட்டுல சொல்ல கூடாதுன்னு என் ஃபோனை பிடுங்கி வச்சு இருக்காருன்னும் சொல்லிடுங்க பிளீஸ்…” என்று பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு நந்தனை டேமேஜ் செய்ய, 
நந்தன் அவள் பேசியதை கேட்டு அவள் அருகில் வந்து அவள் கைப்பிடித்து இழுக்க, அவனிடம் இருந்து தன் கையை சட்டென  உருவி கொண்டவள், கைகளை கட்டி கொண்டு முகத்தை திருப்பி வைத்துக் கொண்டாள்… 
அன்னாமா அவர்களின் ஊடலை பார்த்து தலைகுனிந்து வெட்கப்பட்டு சிரிக்க, நந்தன் அவரை கண்டு அசடு வழிய சிரித்து வைத்தவன்…
‘மானத்தை வாங்குது கொசுக்குட்டி…’ மனதில் புலம்ப மட்டுமே முடிந்தது அவனால்.
சினந்சிறுச்சுங்க நடுவில் வந்து விட்டோம் என்று எண்ணி  அதற்கு மேல் அங்கு இருக்க சங்கோஜம் கொண்டு, “சரி பாப்பா… சரி தம்பி… நான் கிளம்புறேன்…” என்றுவிட்டு கிளம்பும் போது,
 
“மறக்காம அத்தை கிட்ட சொல்லிடுங்க அன்னமா…”என மீண்டும் அவளுக்கு நியாபகபடுத்தியவளை என்ன செய்தால் தகும் என்றே  தோன்றியது அவளது ஆசை GMக்கு…..
அன்னமாள் சென்றதும் வேகமாக சென்று கதவை சாற்றியவன் கொலைவெறியில் அவள் புறம் திரும்ப, ‘ஐயோ… காண்டாமிருகம் செம்ம டென்ஷனா இருக்கு மாட்டுனா அவனுக்கு இன்னைக்கு தோசைக்கு நாம தான் சட்டினி… சோ எஸ்கேப் மஹா…  ‘மனதில் நினைத்தவள் அடுத்த நொடியே அதை செயல் படுத்தவும் செய்தாள். 
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், “இதை எப்படி தான் அத்தையும் மாமாவும் வீட்டில் வச்சு மேச்சாங்கன்னு தெரியல… ஒருவேலை அவங்களால் முடியாம தான் என் கிட்ட தள்ளி விட்டுடாங்க போல… ரெண்டு வாரத்திற்கே நாக்கு தள்ளுது இதுல வாழ்நாள் முழுக்க… சாமி… இவ கூட சண்டை போடவே ஒரு நாளைக்கு இருப்பத்தி நான்கு மணிநேரம் பத்தாது போல…” வாய் விட்டு புலம்பிய படி சாம்பார் வைக்க தேவையானதை தயார் செய்துக் கொண்டு இருக்க…   
மனம் அவனது அனுமதி இன்றி மஹாவின் பின் சுற்றியது… திருமணத்தின் இரவு அன்று அவளை அருகில் ரசனையுடன் பார்த்தது அதன் பின் இன்று தான் அவன் பார்வை கணவனது பார்வையாக மாறியது… 
அதன் பின்னர் வந்த இரவுகளில் அவளாக தூக்கத்தில் தன்னை நாடும் போது அதில் ஒருவகை பாசமே இருந்தன… பின் இங்கு வந்த பின்னரும்,  இரவில் அவளது அனைப்பை தேடினான் தான் ஆனால் அவன் அதை ஒரு கணவனாக எதிர்பார்க்கவில்லை ஆனால் இன்று அவனையும் அறியாமல் அவனது உணர்வுகள் துண்டப்பட்டது அவளது நெருக்கத்தில்…. அது கணவன் என்ற உரிமையால் வந்தது என்று அவனுக்கு புரிய, மனதில் அவள்பால் எழுந்த புதிய உணர்வை உணர்ந்தவனின் மன நிலை ஒருவகை புத்துணர்வுடன் முகம் பிரகாசமாக அவளை நினைத்தப்படி சாம்பாரை வைத்து முடித்தான். 
தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்தவளுக்கு கிட்சனில் இருந்து சாம்பாரின் வாசனை வர,மதியம் மட்டும் உண்ட தயிர் சாதத்தை தவிர, காலையில் இருந்து வேறு எதுவும் சாப்பிடாமல் பட்டினியுடன் இருந்தவளுக்கு கோபம் கோபமாக வந்தது… 
ஒரு வேலை அன்னமாள் சமைத்து இருந்தால் தன் வயிற்றிற்கு ஏதாவது கிடைத்து இருக்கும். ஆனால் அதை நந்தன் கெடுத்துவிட்டதாக எண்ணி அவனை வெறி தீரும் அளவுக்கு குத்த வேண்டும் போல் இருந்தது மஹாவிற்கு….
கோபமாக டிவியின் முன்பு அமர்ந்தவளின் முகம் உர்ரென இருக்க, கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தாள், சாம்பாரின் வாசனையை மோப்பம் பிடித்தப்படி… 
‘இவனை நாம பழிவாங்கியே தீரணும்… ஆனா என்ன பண்ணலாம்…?’என்று தீவிரமான யோசனையில் ஆழ்ந்தாள் அமைதியாக.
அந்நேரம் அவனுக்கு ஏதோ அழைப்பு வர, அதை உயிர்ப்பித்து காதிற்கு கொடுத்தவன் வேலை விஷயமாக பேச்சு சற்று நீண்டு கொண்டே போக, தன் அறையில் ஒரு கோப்பையை ஆராய வேண்டி இருந்தது… அதனால் தன் அறைக்கு செல்ல வெளியே வந்தவன் கண்ணில், டிவியின் முன் அதுவும் காதல் பாட்டு ஓடிக்கொண்டு இருக்க, அதை பார்த்துக் கொண்டு இருந்தவளின் முகம் உர்ரென தூக்கி வைத்துக் கொண்டு தீவிர யோசனையில் இருந்தவளை கண்டு அவனுக்கு சிரிப்புவந்தது, அவளது சிறுபிள்ளை தனமான செயலை ரசித்துக்கொண்டே தன் அறைக்கு சென்றான் நந்தன். 
அவன் உள்ளே சென்றதை உறுதி படுத்திக் கொண்டு ,அவசரமாக எழுந்து கிட்சனிற்கு சென்றவள் அவன் செய்து வைத்து இருந்த சாம்பாரை கண்டு எச்சிலை கூட்டி விழுங்க, அதை கண்டதும் பசி இன்னும் அதிகம் ஆகவும், அதை ருசி பார்க்க எண்ணி கைகள் நீண்ட சமயம், தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் நந்தன் தான் என்று தன் இயலாமை, கோபமாக மாறியது… அதன் விளைவாக ருசி பார்க்க நீண்ட கைகள் தானாக அருகில் இருந்த உப்பை நோக்கி சென்றது.
அவன் வருமுன் அவசரமாக  உப்பை எடுத்து அதில் கொட்டியவள், அதை கரன்டியால் ஒரு கலக்கு கலக்கிவிட்டு… உப்பு டப்பாவை அதன் இடத்திலே வைத்து விட்டு கிட்சனை விட்டு வேகமாக ஓடியவள், சோஃபாவில் சென்று சம்மனமிட்டு பழையபடி அமரவும், நந்தன் அறையை விட்டு வரவும் சரியாக இருந்தது… 
மஹாவை பார்த்தவன் அவள் முன்பு போல் இல்லாமல் இப்பொழுது படபடப்பாகவும், திருதிருவென விழித்தப்படி அமர்ந்து இருக்க அதை புருவம் சுருக்கி யோசித்தப்படி அவளை பார்த்துக் கொண்டே கிட்சனுல் சென்றான்…
அவன் கிட்சனுல் செல்லும் வரை அவனையே ஓர கண்ணால் பார்ப்பதும் டிவியை பார்ப்பதுமாக இருந்தவள், அவன் சென்றதும் நிம்மதி பெருமூச்சொன்றை விட்டு, ‘பேசாம இப்பவே எந்திரிச்சு உள்ள போய்றலாமா… ‘என யோசனை தோன்ற,
 
‘இல்ல… இல்ல… நான் மட்டும் பட்டினியா இருக்கேன் அவன் நல்லா தோசை, சாம்பார், சட்டினின்னு அமுக்குவானா… இல்ல முடியாது… அவன் அந்த உப்பு சாம்பாரை சாப்பிட்டு முகம் போற போக்கை பார்த்துட்டு அப்புறம் போலாம்… ‘ என முடிவெடுத்து கிட்சனை பார்க்க,
‘இன்னும் என்ன பண்ணுறான்னு தெரியலையே… சை… எவ்வளவு நேரம் தான் வெய்ட் பண்ணுறது…’ என நகத்தை கடித்துக் கொண்டு கிட்சனையே பார்த்து கொண்டு இருந்தாள்.
அவன் முகம் இறுக அவளை பார்த்துக் கொண்டே கிட்சனை விட்டு வெளி வர, சட்டென மஹா டிவியின் புறம் திரும்பி அமர்ந்து கொள்ள, ‘நாம பார்த்ததை பார்த்து இருப்பானோ…?’ என்று யோசித்தவள்,
அவன் தன்னை நோக்கி நிதானமாக வருவதை ஓர கண்ணால் கவனித்து, ‘ஐயோ… மாட்டிக்கிட்டோம் போல மஹா… சீக்கிரம் எந்திரிச்சு ரூம்க்கு ஓடு டி…’ என்று மூளை அவளுக்கு அறிவுறுத்த, 
மெல்ல சோஃபாவை விட்டு எழுந்தவள் அவனை அடி கண்ணில் பார்த்தவாரே ரூமை நோக்கி முதலில் நடந்தவள் அவன் தன்னை சற்று நெருங்கவும் பதற்றமாகி, ஓட முயற்சி செய்ய…
அவளின் நோக்கம் புரிந்து அவளுக்கு முன் அவள் அறையின் வாசலை முற்றுகையிட்டான் நந்தன்.
இதை சற்றும் எதிர்பார்க்காதவள், அவனிடம் பிடி படாமல் இருக்க சோஃபாவை சுற்றி ஓட, அவன் அவள் பின் ஓடிய படி, “ஒழுங்கா நில்லு டி… வேண்ணும்ன்னு தானே சாம்பார்ல உப்பை போட்ட, ஏய்…கொசுக்குட்டி…” அவளை எட்டி பிடிக்க முயன்று தோற்றவன், 
அவளை மீண்டும் பிடிக்க முயல, மஹா, “நான் எதுவும் பண்ணுல… நீ என் மேல வீண் பழி போடுற..” சோஃபாவை சுற்றி ஓடிய படி பதில் அளிக்க,
“நீ எதுவும் பண்ணலைனா ஏன்டி ஓடுற…” என்று அவன் கேள்வி கேட்டு மடக்க, 
“அது நீ.. நீ.. எதுக்கோ என்னை அடிக்க வர அதான் பயந்து ஓடுறேன்…” என்ற கூறியவளை கண்டு, ஒரு நொடி நின்று அவளை முறைக்க,
அந்த இடைவேளையை பயன் படுத்தி அவனுக்கு போக்கு காட்டி விட்டு அறைக்குள் புகுந்து தால் போட்டுக் கொண்டாள்…
வெளியே நந்தனோ,”எப்படியும் சிக்காமலா போய்ருவ… அப்ப பார்த்துக்குறேன் டி…” என்று கத்திவிட்டு சென்றான்,
 
மூச்சு வாங்க படுக்கையில் விழுந்தவளுக்கு  பசி இருந்த போதிலும் அவளின் முகமும், மனமும் நிறைந்து இருந்தது… தன்னவனுடன் இந்த சடுகுடு ஆட்டம் ஒரு வித சந்தோசத்தை உருவாக்க,
அருகில் இருந்த தலையனையை கட்டி அணைத்தவளின் நினைவில் ரிமோட்டிர்க்காக நடந்த சண்டை நினைவிற்கு வர, அதை யோசித்துக் கொண்டே வந்தவளின் மண்டையில் அப்பொழுது தான் அவனின் விலகலுக்கான காரணம் புரிந்தது…
அதிர்ந்து படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவள் தன் நெற்றியில் அறைந்து கொண்டு, “ஐயோ மஹா… இப்படி பண்ணி இருக்கியே… அவன் என்ன நினைச்சு இருப்பான்… சை…” என வாய்விட்டு புலம்பிக் கொண்டு இருந்தாள்…
அவள் போட்ட கண்டிஷனால் தன்னுடைய ஒவ்வொரு செயலும் அவளை ஏதோ ஒரு விதத்தில் தாக்குவதை இப்பொழுது உணர்ந்தாள்… 
அழகிய உணர்வு பூர்வமான ஒரு நிகழ்வை அனுபவிக்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்தாள்…
இனி வரும் நாட்களில் தாம் சந்திக்க போகும் பிரச்சனையை உணராமல் குற்ற உணர்ச்சியிலும் பசியிலும் கண்ணயர்ந்தாள் மஹா… 
கண்டிஷன்ஸ் தொடரும் …….

Advertisement