Advertisement

UD:22
நந்தன் டீயை பருகி விட்டு, கம்பெனி செல்ல தயாராக சென்றவன், திரும்பி ஹாலிற்கு வருகையில் அதிர்ந்து சிலையென நின்றான். 
காரணம், அவனது அன்பு மனையாள் ஆஃபிஸ் செல்ல கிளம்பி தயாராக நின்று இருந்தாள்… 
‘என்ன ஒரு அதிசயம்… இவ்வளவு சீக்கிரம் ரெடியாகி வெளிய வந்துட்டா… நமக்கு சமைச்சு வைக்க போறாளா…?’என்று யோசிக்க, அவனது மனம் அவனை பார்த்து ஏளனமாக சிரிப்பதை போல் இருந்தது, ‘அப்படி எல்லாம் பண்ணுற டைப் இல்லையே நம்ம ஆளு… நம்மளை சமைக்க சொல்லி சாப்பிடுவாளே தவிர இவ எல்லாம் சமைக்க மாட்டா… சோம்பேறி கொசுக்குட்டி….’ மனதில் எண்ணங்கள் ஓட, விழிகள் அவள் பின் ஓடியது.
நந்தனின் வரவுக்காக காத்து இருந்தது போல், அவன் வந்ததும் எல்லாம் எடுத்து வைப்பது போல் பாவளா காட்டி விட்டு வெளிவாசல் வரை சென்றவள், திரும்பி ஒரு பார்வை பார்க்க,நந்தணும் அவளை திரும்பி பார்க்க சரியாக, இருந்தது… 
பின் அவள் கிளம்பி சென்று விட, ” இப்ப அவ பார்த்ததுக்கு ‘நான் போய்டு வரேன்’ அர்த்தமா…?” என்று யோசித்துக்கொண்டு இருந்தவன்… பின் சிறிது நேரம் லேப்டாப்பில் வேலை பார்த்துவிட்டு… காலை உணவை முடித்துக் கொண்டு தன் கம்பெனிக்கு கிளம்பி சென்றான்…
காரில் சென்று கொண்டு இருந்தவனுக்கு ஏனோ மனம் மஹாவின் நினைவுகளை அலசிப் கொண்டே இருந்தன…. இன்று அவளுடன் சண்டை இடாமலும் ஒரு வார்த்தை பேசாமலும் ஏதோ ஒரு உற்சாகத்தை இழந்தது போல் இருப்பதை உணர முடிந்தது அவனால்…
கம்பெனியிலும் அதே மனநிலை தொடர, தன் நினைவுகளை சிரம பட்டு கட்டுக்குள் கொண்டு வந்து வேலையில் தன் கவனத்தை செலுத்தினான்…. 
வீட்டில் இருந்து எப்பொழுதும் கிளம்பும் நேரத்தை விட சற்று முன்னதாகவே கிளம்பியா மஹா….. ஸ்கூட்டியில் வராமல் பேருந்தில் தனது அலுவலகத்திற்கு வந்தவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது…. 
தனது நிலையை குறித்து வருந்தியவளின் நினைவகள் மெல்ல பின் நோக்கி பயணித்தது….
***
முன் தினம்  ஆஃபீஸில் தன் ஐடி கார்டு தொலைந்து விட்டதாக கூரியத்திற்கு, இனி இது போல் தொடர கூடாது என்று எச்சரிக்கை விடுத்த அவளது டீம் ஹேட் (team head), ஐநூறு ரூபாய் பைன் கட்டி புது ஐடியை பெற்றுக் கொள்ளுமாறு சொல்ல… முதலில் சரி என்று ஒப்புகொண்டவலுக்கு பின்பு தான் நினைவு வந்தது, தன்னிடம் காசு இல்லை என்பதை பற்றி….
காலேஜ் படிக்கும் போது கை செலவுக்காக தந்தை தந்த பணம் மட்டுமே இருக்க… அவளது ஏடியம் கார்டும் திருமணத்தின் போது செலவுக்காக அப்பாவிடம் அதை தந்தது நினைவுக்கு வர, நெற்றியில் அறைந்து கொண்டாள்… 
பின் தன்னுடைய டீம் ஹேட்டை  பார்த்து தனக்கு ஒரு நாள் அவகாசம் தருமாறு கேட்க, அதற்கு அவரும் சரியென்று ஓப்புக்கொள்ள, ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள் இப்பொழுதைய செலவை குறைத்ததில்… 
மாலை ஆனதும் வேகமாக வீட்டிற்கு வந்தவள், தன் அறை முழுவதும் தேடி பார்க்க அது எங்கும் கிடைக்கவில்லை… பின் ஹால் முழுவதும் தேடி பார்த்தவள் அது எங்கும் காணாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கையில் தலையை கைகளால் தாங்கியபடி சிறிது நேரம் அமர்ந்து இருந்தவள் பின் பக்கவாட்டில் சாய்ந்தப்படியே திரும்பிப்​பார்த்தபொழுது அவள் கண்ணில் ஏதோ வித்தியாசமாக ஒன்று பட்டது,
அதை நன்கு உற்று பார்த்தவளுக்கு தன் ஐடி கார்டின் கயிறு போல் தெரியவும், அவசரமாக எழுந்து சோஃபாவின் அடியில் குனிந்து பார்த்தவளுக்கு தன் ஐடி கார்டு தான் என்றவதும், தனக்கு ஐந்நூறு ரூபாய் மிச்சம் என்ற சந்தோஷத்தில் தன் முருகனுக்கு  பல நன்றிகளை அனுப்பி வைத்தாள்…
பின் தன் அறைக்கு சென்று தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து பார்க்க, மொத்தம் சேர்த்து 1400 சொச்சமே இருந்தது… அதை கணக்கிட்டு பார்த்தவளுக்கு மண்டையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது…. 
‘எவ்வளவு பொரிய முட்டாள்தனம் பண்ணி இருக்கேன்…. இப்ப என்ன பண்ணுவேன்… கண்டிப்பா நம்மாள சமாளிக்க முடியாது… ஒரு மாசம் முழுவதுக்கும் மூன்று வேளை சாப்பாட்டுக்கு…. அதுவும் வெளி சாப்பாடு… வண்டிக்கு பெட்டிரோல், ஒரு வேலை வேற ஏதாச்சும்னா பண தேவை வரும்… ஐயோ…. இந்த பணத்தை வச்சு எப்படி சமாளிக்க… முதல் மாச சம்பளம் வரும் வரை வீட்டிலும் கேட்க முடியாது, பிரண்ட்ஸ் கிட்டையும் கேட்க முடியாது…. ‘பால்கனியில் நின்று மனதில் எண்ணியவளுக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது…..
‘கோடிஸ்வரன் வீட்டு பையனை கல்யாணம் பண்ணி இருக்கும் போது வீட்டுல பணம் கேட்டா, கண்டிப்பா நான் சந்தோஷமா இல்லன்னு நினைச்சு கஷ்டப் படுவாங்க… பிரண்ட்ஸ் கிட்ட கேட்டா நான் என்னமோ அவனை கொடுமை படுத்துற மாதிரி சீன் போட்டு என்னை தப்பா நினைப்பாங்க இப்ப என்ன பண்ணுறது…??? பேசாம யாதவ் கிட்ட நமக்கு சமைக்க தெரியாதுன்னு உண்மையை சொல்லிடலாமா… காசாவது மிச்சம் ஆகும்….’ என  மண்டை வெடித்து விடும் அளவிற்கு யோசனைகளும், தன் நிலைமையும் எண்ணி எரிச்சலாக வந்தது…
‘என்னனு போய் பேசுவ? இத்தன நாளு இல்லாமால் இப்ப மட்டும் போய் பேசுனா சீப்பா நினைக்க மாட்டானா… காசு இல்லைனதும் இப்ப வந்து பேசற… அப்ப உன் தேவைக்கு தான் நீ என்னை யூஸ் பண்ண பாக்குறன்னு சொல்லிட்டா என்ன பண்ணுறது… ‘ என்று யோசித்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது…..
‘இல்ல யாதவ் அப்படி எல்லாம் கேட்க மாட்டான்… ‘என்று அவளது காதல் கொண்ட உள்மனது அவனுக்காக வாதாட,’ அவனை பத்தி ரொம்ப நல்லா தெரிஞ்ச மாதிரி சர்ட்டிபிகேட் தர… அப்ப அவன் மேல ஏதாச்சும் வந்துடுச்சா… ‘சட்டென்ன கண்கள் விரிய முகம் பிரகாசமாக நின்றவள், தங்கள் முதல் சந்திப்பு முதல் இன்று வரை நடந்ததை எண்ணி பார்த்து, ‘யாதவ் நல்ல டைப் தான்… நான் தான் வாயை குடுத்து வினைய இழுத்து வச்சு இருக்கேன்… ‘என்று எண்ணியவளுக்கு ஏனோ தன் மனதை கொஞ்சம் புரிந்துக்கொண்ட உடன் லேசாக வெட்கம் எட்டிப் பார்த்தது…
பின், ‘இல்ல… இல்ல… நல்லவன் இல்லாம் இல்ல… என் ஐடி கார்டை ஒளிச்சு வச்சு இருக்கான் பன்னி… இருந்தாலும்….. அவன் அப்படி பண்ணலைன்னா நமக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குறது கடைசியா தான் தெரிஞ்சு இருக்கும் அப்ப தெரிஞ்சு இருந்தா நிலமை இத விட மோசமா இருந்து இருக்கும்…’என்று அவனக்கு சாதகமாகவும் பாதகமாகவும் தன் மனம் அவனுக்கு பட்டி மன்றம் நடத்திக் கொண்டு இருந்த சமையம், 
கிட்சனில் சத்தம் கேட்டு உள்ளே எட்டி பார்த்தவள் யாதவை கண்டதும், எப்பொழுதும் தோன்றும் துடுக்கு தனம் தோன்ற, தன் கையில் இருந்த ஐடி கார்டை பார்த்து விட்டு அவனுடன் சண்டைக்கு நின்றாள்… ஆனால் இறுதியில் அவன் கூறியதை கேட்டு காதல் அரும்பிய இதயம் வழியில் துடிக்க, எதுவும் பேசாமல் நகர போனவளை அவன் உணவு உண்ண அழைத்ததும் மீண்டும் தன் நிலையை எண்ணி வருந்தியவள், ‘தாம் அவனை பற்றி நினைக்கவே இல்லையே, சாப்பிட்டானா என்று கூட யோசிக்கலையே ஆனா இவன்….’ அவனது அக்கறையான கேள்வியில் தாம் பெரியதாக ஒன்றை இழந்தது போல் தோன்றியது மஹாவிற்கு…
மீண்டும் பால்கனியில் வந்து நின்றவளுக்கு தன் தோழியின் வார்த்தைகள் நியாபகத்திற்கு வந்தது, ‘ஒரு வேலை காதல் வந்தால் உன்னோட இந்த வார்த்தைகளே உனக்கு பிரச்சனையாக வந்து நிக்கும்….’ அதை நினைத்து பார்த்தவளுக்கோ பக்கென்று இருந்தது…, “காதலா…” என்று லேசாக வாய் விட்டு கூறியவளின் சிந்தனையில் தான் புரிந்த பிழையை கண்டாள்… 
அவன் ஆஃபிஸில் முத்தம் தந்த போதே அதை உணர தவறிய தன் மடத்தனத்தை எண்ணி வருந்தியவள்… ‘இதே வேற எவனாச்சும் பண்ணி இருந்தா அன்னைக்கு மாதிரி சும்மா இருந்து இருப்பியா… சாமி ஆடி இருப்பல… அதை ஏன்டி புரிஞ்சுக்காம விட்ட… ?’ என்று அவனது நினைவுகளின் அலசலில் அவனது கண்ணியமும், நேர்மையும் எண்ணி பெருமை கொள்வதா இல்லை தன் தலையில் தானே ஒரு லாரி மணலை கொட்டிக் கொண்டதை எண்ணி வருந்துவதா என்று தெரியாமல் முழித்தவளுக்கு கண்களில் கண்ணீர் வரும் போல் இருக்க…… தன் அறைக்கு திரும்பி செல்கையில் அவனை சில நொடிகள் பார்த்து விட்டு சென்றாள் ஒருவகை இயலாமையுடன்….
அறைக்குள் வந்தவள், “சை… இப்படி காசுக்காக தேவை வரும் போதா என் யாதுவை நான் புரிஞ்சுக்கணும்… “என்றவள் ’என் யாது‘ என்றதும் லேசாக முகம் சிவக்க நின்று இருந்தவள் பின் தன் நிலையை எண்ணி புலம்பி, அடுத்து காசுக்கும், முக்கியமாக உணவிற்கும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தவள்,
நீண்ட நேர யோசனைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தாள், இனி ஆஃபிஸ்க்கு பேருந்தில் வருவது என்றும் காலை உணவிற்கு பிரெட் ஜாமும், மதியம் கேன்டீனிலும், இரவு விரதம் இருப்பது என்றும் முடிவானது…. 
ஆஃபீஸில் தன் நினைவில் உழன்று கொண்டு இருந்தவள் அடுத்து தன் வாழ்வில் என்ன என்பதை பற்றி யோசிக்க அவள் முகத்தின் முன் ஒரு பெரிய கேள்வி குறி வந்து நிற்க, விறுவிதிர்த்து போனாள்….. இதற்கு மேல் எதுவும் யோசிக்க கூடாது என்ற முடிவுடன் தன் வேலையில் கவனத்தை திருபிக்கொண்டள்…
மதிய உணவு இடைவேளையின் போது கேன்டீன் சென்றவள், விலை பட்டியலில் குறைந்த விலையில் இருந்த தயிர் சாதத்தை வாங்கிக் கொண்டு வந்தவளை ஏன் என்று உடன் பணி புரியும் தோழிகள் கேட்க, “உடம்பு ஓவர் ஹீட் ஆயிருச்சு தான்….”என்று கூறி சமாளித்து வைத்தாள்… 
மாலை பேருந்தில் ஏரியவளுக்கு மிக்ஸியில் அரைபடுவது போல் இருந்தது… அவளது ஸ்டாப்பிற்கு வந்து இறங்குவதற்க்குள் சக்கையாகி இருந்தாள்… தன்னை தாண்டி போகும் பேருந்தை பார்த்துக் கொண்டு இருந்தவள், “இன்னைக்கு ஒரு நாளைக்கே இப்படியா… முருகா இது என்ன சோதனை…. “முருகனிடம் புலம்பியவள் மெதுவாக தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்…. 
அவள் வீட்டை அடையும் போது நந்தன் வீட்டில் இருக்க, தன் மனதை உணர்ந்த பிறகு அவனை பார்க்கும் போது ஏதோ படப்படப்பாக லேசாக வியர்த்தது, தன் முகத்தில் உள்ள சோர்வை மறைத்துவிட்டு, அவனை ஓர விழியில் சைட் அடித்துக் கொண்டே தன் அறைக்கு சென்றவளுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது… 
“நீ இப்படி எல்லாம் பண்ணா அவனுக்கு டௌட் (doubt) வந்துரும் லூசு மஹா… சாதாரணமா இரு… “என்று தனக்கு தானே அறிவுரை சொல்லி கொண்டவள், குளியலறைக்கு சென்று குளித்து விட்டு பிங்க் நிற டிஷர்ட்டும், முட்டிவரை இருந்த வெள்ளை நிற மிடியும் அணிந்து முடியை லேசாக தூக்கி கொண்டையிட்டு ஹாலிற்கு வந்து சோஃபாவில் அமர்ந்தாள்…
நந்தன் தீவிரமாக டிவியில் ஒரு ஆஷ்ன் படம் பார்த்துக் கொண்டு இருக்க, அறை கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்து, மூச்சு விட மறந்துப் போனான் அவளது ஒப்பனை இல்லாத அழகில்… 
அவளை முதல் முறையாக சந்தித்த அந்த அழகிய நிமிடங்கள் கண் முன் வந்து செல்ல, அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்… 
உச்சியில் போட்டு இருந்த கொண்டையும், தொலதொலவென டிஷர்ட்வும், முட்டிக்கால் வரை இருந்த மிடியிலும் மஹாவை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது நந்தனுக்கு… 
அவள் அறையில் இருந்து வந்து சோஃபாவில் அமரும் வரை அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன்… அவள் அமர்ந்ததும் தன் விழிகளை கடினப்பட்டு அவளிடம் இருந்து பிரித்து டிவியின் பக்கம் திரும்பினான்…
இருப்பினும் தலையை கோதுவது போலவும், ஏதோ சத்தம் கேட்டு திரும்புவது போலவும், தன் கை கால்களை நீட்டி முறுவலிப்பது போலவும் பாவனை செய்து அவளை சைட் அடிப்பதில் கவனத்தை செலுத்தியதால் படத்தில் கவனம் இன்றி போனது… 
அவள் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கி விடும் போது தான் அவன் அவள் நெற்றியில் இருக்கும் குங்குமத்தை அவனித்தான்… தன் நெற்றி வகுட்டில் இருந்த குங்குமம் அவள் முகத்திற்கு மேலும் அழகுட்ட, ‘ஐயோ… கொல்லுறாளே…. முடியல டி கொசுக்குட்டி…. ‘மனதிற்குள் அவளுடன் பேசியவன் வெளியே அமைதியே திருவுருவாக அமர்ந்து இருந்தான்…
அறையை விட்டு வெளி வந்தவள் டிவியை பார்த்துக் கொண்டே சோஃபாவில் அமர்ந்து அதில் தீவிரமாக இருக்க,பார்த்து கொண்டு இருந்த படத்தில் எதுவோ சந்தேகம் வர, புருவம் சுருக்கி உதட்டை ஒரு பக்கம் சரித்து, “டேய் காண்டாமிருகம்…எனக்கு ஒரு சந்தேகம்…” என்று டிவியை பார்த்துக் கொண்டே கேட்கவும், 
மனைவியை பார்த்து (சைட் அடித்து) கொண்டு இருந்தவன், தன்னை அவள் அழைக்கவும் அவனை சுற்றி இருந்த மாயவலை அறுந்து விழ, அவளை முடிந்த மட்டும் முறைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான்… 
தான் அழைத்ததற்கு அவனிடம் பதில் இல்லை என்றதும் அவனை திரும்பி பார்த்து குழம்பினாள், ‘இந்த காண்டாமிருகம் எதுக்கு இப்ப இப்படி முறைச்சுட்டு நிக்குது…. ‘மனதில் யோசித்தவளுக்கு காரணம் கிட்டாமல், ‘இவனுக்கு வேற வேலை இல்லை…’ என்று எண்ணியவள்,
சந்தேகத்தை கேட்காமல் படத்தில் கவனத்தை செலுத்த, சிறிது நேரத்தில் அதில் இடைவேளை வரவும் அவள் வேற சேனலை மாத்த சொல்ல, அவளை ரசித்து கொண்டு இருந்ததால் அவள் சொல்லுக்கு இணங்கி வேற சேனலை வைத்தான் நந்தன்… மீண்டும் மாற்ற சொல்ல அவனும் அவள் சொல்லுப் படி செய்துக் கொண்டே வந்தவன்… ஒரு கட்டத்தில் கடுப்பாகி போனான்… 
கடைசியாக ஒரு நியூஸ் சேனலில் வந்து நிற்க அதையும் மாற்ற சொல்லியவளை கண்டு உச்சபட்ச கடுப்பிற்கு சென்றவன் அவள் கூறியது போல் மாற்றாமல் அதையே வைத்திருந்தான்…
“டேய் காண்டாமிருகம்… மாத்து டா… எனக்கு இது வேண்டாம்… ” என்று அவனை பார்த்து கத்த, 
“முடியாது போடி… சும்மா எத்தனை சேனலை தான் மாத்துறது… இதையே பாரு… உனக்கு தான் அறிவு கம்மியாச்சே… அதுனால இதை கொஞ்ச நேரம் பார்த்து ரெண்டு விஷயமாச்சும் தெரிஞ்சுக்கோ…” என்று நக்கலாக கூறிவிட்டு டிவியை பார்க்க,
“போடா லூசு… உனக்கு தான் அறிவு இல்ல… இப்ப மாத்த போறியா இல்லையா…” இடுப்பில் இருகைகளையும் வைத்து கொண்டு அவன் புறம் திரும்பி அமர்ந்து கேட்டவளுக்கு,
“முடியாது போடி…” என்று அசால்ட்டாக அவனிடம் இருந்து பதில் வரவும், 
சட்டென அவன் அருகில் அமர்ந்து அவன் கையில் இருந்த டிவி ரிமோட்டை பிடுங்க முயற்சித்து, “ரிமோட்டை குடு டா… ” என்று அவனுடன் மல்லுக்கு நின்றாள்…
அவளது செயலை சற்றும் எதிர்பார்க்காத நந்தன் முதலில் தடுமாறினாலும் பின் சுதாரித்து, “குடுக்க முடியாது போடி…” அவனும் அவளுடன் மல்லுக்கு நிற்க, 
சிறிது நேரம் அவர்களது சண்டை நீடித்ததில், அவர்களின் உறவு அடுத்து அடிதடியில் இறங்கும் நேரமானது… 
அவனது பக்கவாட்டில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்க விட்டப் படி அமர்ந்து அவனிடம் சண்டையிட்டு கொண்டு இருந்தவள், ரிமோட்டை கைப்பற்றும் எண்ணத்தில் மேலும் அவனை நெருங்கி அமர்ந்து கண்கள் ரிமோட்டின் மீதும் வைத்துக் கொண்டும், அவனுடன் வார்த்தைகளால் சண்டையிட்டு கொண்டும் இருக்க, நந்தனின் நிலை தான் மிகவும் மோசமானது… 
‘ஐயோ… இவ தெரிஞ்சு செய்யுறாளா இல்ல தெரியாம செய்யுறாளான்னு தெரியல… ஆனா நல்லா வச்சு செய்யுறா… கடவுளே…’ மனதில் புலம்பியவன் அவளை விட்டு விலக முற்பட, 
அவளோ, ரிமோட்டை தராமல் இருக்க தான் விலகுகிறான் என்று எண்ணி மேலும் அவனை நெருங்கி அமர,’ஐயோ… முடியலை… நம்ம கன்டிரோலா இருக்கும்ன்னு நினைச்சா கூட இருக்க விட மாட்டா போல… இதுக்கு மேல உட்கார்ந்து இருந்தோம் நம்ம கற்புக்கு நாமளே உத்திரவாதம் தரமுடியாம போயிரும்…’ என்று மனதில் எண்ணியவன் அதை செயல் படுத்தும் முன் மஹா அவளது செயலை செய்திருக்க, அலரியபடி எழுந்து நின்றான் நந்தன்…

Advertisement