Advertisement

பின் வெளி வந்தவன் அவளது அறையை பார்க்க, இன்னும் அவள் வெளி வரவில்லை என்று தெரிந்துக் கொண்டவன்,”கொசுக்குட்டி இன்னுமா தேடாம இருக்கா… நேத்தும் இப்படி தான் லேட்டா கிளம்புனா அதே மாதிரி இன்னைக்கும் பண்ணுறா… இவள எல்லாம்…” வாய் விட்டு சத்தமாக புலம்பியவன், முன்தினம் செய்த சேமியாவின் மிச்சம் இருக்க, அதை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
அப்பொழுது அறையில் இருந்து பதற்றமாக வெளி வந்தவள், அவசரமாக சோஃபாவில் தேட… அவள் தேடுவது கையில் சிக்காமல் போக, ஹாலில், பால்கனியில் என நேற்று அவள் வீட்டிற்க்குள் சுற்றிய அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு மீண்டும் தன் அறைக்கே சென்று பார்க்க அங்கும் இல்லை என்று தோய்ந்து போய் சோஃபாவில் அமர்ந்தாள்….
அவள் தேடிக் கொண்டு இருந்ததை ஏதோ படம் பார்க்கும் தோரணையில் டைனிங் டேபிளிலின் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டு, முகத்தில் லேசாக படர்ந்த கேலி புன்னகையுடன் தன் சேமியாவை ருசிப்பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்.
‘இவளுக்கு முதுகு வளையாது போல… சோஃபாக்கு கீழ தான் இருக்கு குனிஞ்சு தேடுனா கிடைக்கும் ஆனா குனிய மாட்டா போல… சோம்பேறி கொசுக்குட்டி… ‘மனதில் எண்ணிக் கொண்டவன் வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை….
இடுப்பில் ஒரு கையும், வாயில் ஒரு கையும் வைத்து படுதீவிரமாக தன் நியாபக அடுக்கில் எங்கு தவர விட்டோம் என்று யோசித்துக் கொண்டு இருந்தவள், ஏதோ தோன்ற சட்டென நந்தனை திரும்பி பார்க்க… 
அவள் தன்னை பார்க்கும் வரை அவளது செயலையே கேலியாக பார்த்துக் கொண்டு இருந்தவன், அவள் தன் புறம் திரும்பவும்,… தன் முகபாவனையை சீர் செய்துக் கொண்டு… சேமியாவில் கவனத்தை திருப்பினான்.
‘ஒரு வேலை இந்த காண்டாமிருகம் தான் எடுத்து வச்சு இருக்குமோ… ஆளும் முழியும் சரியில்லையே….’ மனதில் யோசித்தவள் சில நொடிகள் அவனை குறுகுறுவென பார்க்க, பின் நேரம் ஆவதை உணர்ந்து மீண்டும் ஹாலில் தேடிப் பார்க்க, ஐடி கார்டு கிடைக்கமால் போனதுதான் மிச்சம்….
முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு என் செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் மஹா…
உண்டு முடித்தவன், எழுந்து கிட்சனிற்கு செல்லும் போது அவளை பார்க்க… முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு பதற்றத்துடன் நின்று இருந்தவளின் தோற்றம் ஏனோ மனதை உருக்க,
‘பார்க்க பாவமா இருக்கே… பேசாம சொல்லிறலாமா… ‘என்று யோசித்தவன் பின் நேற்று அவள் ஆடிய ஆட்டம் நினைவிற்கு வர,
‘நோ… நானா போய் சொல்ல மாட்டேன் ஒரு வேலை அவளா வந்து கேட்ட சொல்லலாம்….’என்று முடிவெடுத்து விட்டு, வெளியே வர, அவளும் அவனை பார்க்க, 
‘இவன் கிட்ட கேட்டு பார்க்கலாமா… ‘என்று ஒரு நொடி யோசித்தவள், ‘வேண்டாம்… கேட்டா ஓவரா பண்ணுவான்…. பேசாம நாமளே தேடிப் பார்க்கலாம்…’என்று எண்ணி முகத்தை திருப்பி கொண்டாள்…
‘பாருடா திமிர… நீ எல்லாம் அடங்குற கேஸா… உனக்கு இது தேவைதான் நல்லா அனுபவி டி என் கொசுக்குட்டி…’ மனதில் எண்ணிக் கொண்டவன் வெளியே எதையும் காட்டாமல், ஆஃபிஸ் செல்ல தன் ஷூவை அணிந்துக் கொண்டே அவளை ஒரு பார்வை பார்க்க…
அவள் பால்கனியில் தேடி விட்டு, நகத்தை கடித்தப்படி ஹாலிற்கு வந்து கொண்டு இருந்தாள்…. அவன் தன்னை பார்ப்பதை கண்டு,
“என்ன டா லுக்கு…?” ஐடி கார்டு கிடைக்காத எரிச்சலை அவனிடம் காட்டினாள்….
அவளது கேள்வியில் இளகிய அவனது மனது மீண்டும் முருங்கை மரம் ஏறியது, ‘ஒன்றும் இல்லை’ என்பது போல் தலையையும் தோலையும் ஆட்டி விட்டு கிளம்பி செல்ல,
அவள் மீண்டும் தன் வீட்டை முழுவதுமாக தேடிப் பார்த்துவிட்டு இதற்கு மேல் இங்கு இருந்தாள் அலுவலகம் செல்ல முடியாது என்று தோன்ற, சோகமான முகத்துடன் புயல் வேகத்தில் அலுவலகம் நோக்கி சென்றாள்…
காரில்,”இருந்தாலும் இவ்வளவு திமிர் ஆகாது டி உனக்கு… அங்கையே ஐடி கார்டை காணம்ன்னு தான் தேடிட்டு இருக்க… இதுல தெணாவட்டா, ‘டா’ போட்டு கேள்வி வேற கேட்குற…” அவளது செயலில் எரிச்சல் உற்றவன், அதை திசை திருப்ப காரின் வேகத்தில் காட்டினான்…
ஆஃபிஸ்ஸில் அவனது எண்ணம் முழுக்க ‘மஹா என்ன செய்து இருப்பாள் ‘என்றே எண்ணிக் கொண்டு இருக்கும் படி ஆனது.
கிஷோர்,”டேய்… என்னடா ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க… ஏதாச்சும் பிரச்சினையா… காலைல இருந்து வேலைல கவனமே இல்லாமல் இருக்க… “என்று கேட்க, 
அப்பொழுது தான் தன் தவறை உணர்ந்தான்… தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த கம்பெனியை சிறிது நாட்களாக சரி வர நிர்வகிப்பது இல்லை என்று தெரிந்து குற்ற உணர்வில் தலை குனிந்துக்கொள்ள,…
கிஷோர் அவனது கையை பிடித்து அழுத்தம் தர, அதில் நிமிர்ந்தவன் அடுத்த அடுத்த வேலையை பழைய வேகத்துடனும்  ஆளுமையுடனும் பார்க்க துவங்கினான்… 
மதிய உணவின் போது அவனது நினைவு அவனையும் மீறி அவளிடம் வந்து நின்றது, ‘கொசுக்குட்டி சாப்பிட்டு இருக்குமா…?’என்ற எண்ணம் எழுந்தது அவள் நேற்று தான் சாப்பிட்டு விட்டதாக கூறிய தோரணையில் லேசாக சிரிப்பு வரதான் செய்தது நந்தனுக்கு…
பின்,’அது எல்லாம் சாப்பிட்டு இருப்பா… அது எல்லாம் குறை வைக்க மாட்டா கொசுக்குட்டி…’என்று எண்ணியவன், தன் உணவில் கவனம் ஆனான்… 
மதியம் மெட்டிரியள்ஸ் ரெடியாகும் இடத்திற்கு வந்தவன் அதை முழுவதுமாக சுற்றி பார்த்து… தேவையான அறிவுரைகளை வழங்கி, வேலை எவ்வாறு நடக்கிறது என்று அனைத்தையும் பார்த்து விட்டு தன் அறைக்கு வந்தான்.
தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து ஷர்டின் காலர் பொத்தானை கழட்டி விட்டு கண்மூடி அமர்ந்தவனின் நினைவில் மஹாவின் சோக முகம் தெரிய, சட்டென கண்களை திறந்து மணியை பார்த்தவன் அது 7 என காட்டியது…
கிஷோரிடம் சொல்லிவிட்டு, தன் வீட்டை நோக்கி விரைந்தான் அவசரமாக.
“என்ன பண்ணி இருப்பா… எப்ப வேலைக்கு போய் இருப்பா..? வேலைக்கே போகாமா மட்டம் போட்டு இருப்பாளோ… கொசுக்குட்டி பண்ணாலும் பண்ணி இருக்கும்… ” என்று யோசித்துக் கொண்டே தங்கள் குடியிருப்பின் பார்க்கிங் ஏறியாவிற்கு வந்தவன், கார் நிறுத்த போகையில் அது முடியாமல் பல்லை கடித்தான் தன்னுடைய ஆசை மனையாடியாள்,
“கொசுக்குட்டி ஏன்டி என்னை டார்ச்சர் பண்ணுற…?” பல்லை கடித்தவன், கடுப்புடன் காரை விட்டு கீழே இறங்கி தங்கள் குடியிருப்பின் பார்க்கிங் ஸ்லாடில்(slot) அவளது பிங்க் ஸ்கூட்டியை நடுவில் நிறுத்தி இருந்ததை கண்டு சிரிப்பதா இல்லை கோவபடுவதா என்று அறியாமல் சற்று குழம்பிதான் போனான்…
பின் அவளது ஸ்கூட்டியை ஓரமாக நகர்த்தி நிறுத்தியவன் தன் காரை பார்க் செய்து விட்டு வீட்டை நோக்கி சென்றான் வேகமாக…
வீட்டிற்குள் நுழைந்ததும் தன் மனையாளை தேட, அவளது தரிசனம் பால்கனியில் கிட்டியது… பால்கனியின் கம்பியின் மீது கைகளை கட்டி கொண்டு, அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவள் தீவிரமான யோசனையில் முழ்கி இருந்தாள்…..
 
அவளையே பார்த்துக் கொண்டு வந்தவன் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து தன்னை நிதானித்து கொண்டு, சாய்ந்த வாக்கிலே அவளை திரும்பி பார்த்து ஐடி கார்டை பார்த்தாளா என்ற எண்ணம் தோன்ற சட்டென குனிந்து பார்க்க அங்கு அது இல்லாமல் போக, ‘ம்ம்ம்.. பார்த்துட்டா போல… ஆனா எப்ப பார்த்து இருப்பா…’ என்ற கேள்வி எழ, ‘எப்படி தெரிஞ்சு இருக்கும்…?’என்று யோசித்துக் கொண்டு இருந்தவனுக்கு பசிப்பதை போல்இருக்க,
தனதறைக்கு சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்தவன் , பால்கனியை பார்க்க அவள் அப்பொழுதும் அதே நிலையில் நின்று இருந்தாள்….
‘நாம வந்தது தெரியுமா தெரியாதான்னு தெரியலையே… அப்படி என்ன கொசுக்குட்டிக்கு தீவிர யோசனையா இருக்கும்… ‘என்று நந்தன் அவளை பற்றி யோசித்துக் கொண்டே தன் இரவு உணவுக்கு தயார் செய்துக் கொண்டு இருந்தான்….
“உனக்கு முன்னாடியே தெரியும் தானே….” என்ற அவளது குரலில் ஒரு நொடி அதிர்ந்து திருப்பியவன், 
அவளையும், இடுப்பில் வைத்து இருந்த கையில் தொங்கிய ஐடி கார்டையும் கண்டவன்,’ஓகே கொசுக்குட்டி போர்க்கு ரெடி ஆயிருச்சு… நீ  தயாராகு  மாப்பிள…’என்று மனதில் எண்ணிக் கொண்டவன், வெளியே
“எதை பத்தி கேட்குற…?” கேள்வியை அவள் புறமே திருப்ப,
“நடிக்காத டா காண்டாமிருகம்… காலைல நான் ஐடி கார்டை தேடுனது உனக்கு தெரியும்…. ஆனா ஒன்னுமே தெரியாத மாதிரி நடிச்சு இருக்க…” சண்டைக்கு சிலிர்த்துக் கொண்டு வர,
“ஓஓஓ… அப்படியா?  ஐடி கார்டு தான் தேடுனியா..? ” வாய் மீது கை வைத்து வியப்பது போல் பாவனை செய்ய,
அதில் கடுப்பானவள்,”டேய்… நடிக்காத… நீ தான் என் ஐடி கார்டை ஒளிச்சு வச்சு என்னை டென்ஷன் பண்ணி இருக்க… ” என்று அவன் மேல் புகார் பாட,
“ஏய் எனக்கு என்ன வேற வேலை இல்ல… உன் ஓட்ட ஐடி கார்டை ஒளிச்சுவச்சு விளையாட நான் என்ன லூசா ….? நீ எங்கையோ போட்டுட்டு என் கிட்ட எதுக்கு டி சண்டைக்கு நிக்குற…” அவனும் அவளுடன் கலத்தில் இறங்கினான்,
“நடிக்காத டா… காண்டாமிருகம்… உனக்கு தெரியும் தானே இது சோஃபாக்கு அடில இருந்துச்சுன்னு…” என்று கேட்டவளை நிதானமாக பார்த்தவன்,
“ஆமா… தெரியும்…. இப்ப என்ன அதுக்கு…?” அசால்ட்டாக வந்தது கேள்வி அவனிடம் இருந்து,
“அப்புறம் ஏன்டா  நான் கேட்டதுக்கு ஒன்னும் இல்லன்னு மண்டைய ஆட்டிட்டு போன…?” கடுப்பின் எல்லையில் இருந்தவள் அவன் அருகில் நெருங்கி ஒரு விரல் நீட்டி கேள்வி கேட்க,
அவளை பொறுமையாக ஒரு பார்வை பார்த்தவன்,” நீ என்னனு கேட்ட? என் ஐடி கார்டு எங்கன்னு கேட்டியா இல்ல அதை  எங்கையாச்சும் பார்த்தியான்னு கேட்டியா…?” என்று ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து நிதானமாக கேட்க,
மஹா ஒரு அடி பின் சென்று அவனை வெற்று பார்வை பார்த்தவள்… அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தலை குனிந்தாள் பதிலின்றி…
பின் நிமிர்ந்து, “அதான் நான் தேடுறேன்னு தெரியும்ல அப்ப சொல்லி இருக்க வேண்டியது தானே….?” என்று சற்று தணிந்த குரலில் கேட்க, 
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், உற்று நோக்கியபடி நெஞ்சின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு நின்றிருக்க… அவனிடம் பதில் இல்லாமல் போக அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் தலை கவிழ்ந்து கொள்ள,
நந்தனுக்கு என்ன தோன்றியதோ, நிதானமாக “நீ தானே கண்டிஷன் போட்ட… என் விஷயத்தில் தலையிட கூடாதுன்னு… அதான் சொல்லலை… ” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் மஹா….
“அப்படி இருந்தும் நீ நேத்து ஃபோன் எடுக்கும் போது கீழ விழுந்ததை கேட்டா சொல்லலாம்னு தான் நினைச்சேன்  ஆனா… “என்று விட்டு தோளை ஆட்ட,
தான் புரிந்த மிக பெரிய தவறு அவளது இதயத்தில் சுல் என்று ஒரு வலியை உண்டாக்க, அதில் தன் உதட்டை கடித்து தலை குனிந்துக் கொண்டவள்…. வேறு எதுவும் கூறாமல் கிட்சனை விட்டு வெளியேற போக,
அவளது அமைதி அவனை ஏதோ செய்ய, தான் கூறியதும் அவளது அதிர்ந்த விழிகளும், உதட்டை கடித்து கொண்டு எதுவும் பேசாமல் செல்ல போனவளை கண்டு, ‘ரொம்ப ஹார்ட் பண்ணிட்டோமோ…’ மனதில் நினைத்தவன்,
“சாப்பிடுறியா ஸ்ரீ ..?” மனம் பொறுக்காமல் ஏதோ பேச வேண்டும் என்று அவளிடம் கேட்க,
அவனது கேள்வியில் அவனை திரும்பி ஒரு வெற்று பார்வை பார்த்தவள், வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டி விட்டு செல்ல போக…
“சாப்பிட்டுயா… ?” என்று அடுத்த கேள்வியை கேட்க, 
“ம்ம்ம்….” என்று பதில் அளித்துவிட்டு, வேகமாக சென்று பால்கனியில் நின்றுக் கொண்டாள்…
ஏனோ அழுகை வரும் போல் இருந்தது அவளுக்கு… எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்து இருக்கிறோம் என்று உணர்ந்தாள்… 
நான் புரிந்த தவறின் வீரியம் புரிய, என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டு நின்று இருந்தவள்…. அவனது கேள்விகள் அவள் மனதை ஏதோ குடைவதை போல் இருந்தது…..
இதற்கு மேல் இங்கு இருந்தாள் சரி வராது என்று தோன்ற, தன் அறைக்கு செல்லும் முன் கிட்சனை திரும்பி பார்க்க.., நந்தன் சமைத்து கொண்டு இருந்தான்…
சில நொடிகள் அவனை வெறித்துப் பார்த்தவள் பின் விடுவிடுவென தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் வேதனையோடு.
“இப்ப என்ன பண்ணுறது…? இப்படி மாட்டிக்கிட்டோமே… அப்பா கிட்ட கேட்கலாம் தான் ஆனா பிரச்சினை ஆயிரும்… சந்தியா ரம்யா கிட்ட கேட்டா கண்டிப்பா திட்டுவாங்க… கூட வேலை செய்றவங்க… வேண்டாம் வேண்டாம் அது நல்லா இருக்காது… சை… இப்ப ஏதாச்சும் பண்ணனுமே..” என்று புலம்பியவாரு தன் அறையில் சிறிது நேரம் நடை பயின்றவள்,
பின்,”பேசாம இவன் கிட்டையே பேசி பார்ப்போமா… ” சற்று நேரத்திற்கு முன் அவனது கேள்விகள் நினைவிற்கு வர, 
“கடைசி அவன் கிட்டையே போய் நிக்குற மாதிரி ஆயிருச்சே… வேண்டாம்… நாம போய் பேசுனா ஓவரா பண்ணுவான்… அதுக்கு நம்ம பிரச்சினையை நாமளே பார்த்துக்கலாம்…” என்று முடிவெடுத்தவளுக்கு அதை எப்படி சமாளிப்பது என்று தான் பிடிப்படவில்லை…
வெகு நேரம் ஆகியும் தன்னுடைய பிரச்சினைக்கு எந்த யோசனையும் தோன்றாமல் படுக்கையில் விழுந்தாள் அடுத்த நாளில் இருந்து தன் சோதனை காலம் என்று தெரிந்து, ஆனால் அதை எவ்வாறு கடப்பது என்று தெரியாமல்  இயலாமையுடன் கண்ணயர்ந்தாள்….
கண்டிஷன்ஸ் தொடரும் ……. 

Advertisement