UD:21
ஆஃபிஸ்ஸில் தன் சுழல் நாற்காலியில் அரை வட்டம் அடித்தப்படி, வலக்கையில் இருவிரலில் பென்(pen)யை சுழற்றிக் கொண்டு, முகத்தில் புன்னகையுடன் யோசனையில் ஆழ்ந்து இருந்தான் நந்தன்.
காலையில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு,’இவளை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களான்னு சந்தேகமா இருக்கு… அடுத்த முறை அத்தை மாமாவை பார்க்கும் போது கண்டிப்பா இதை பத்தி கேட்கணும்’ என்று அதிமுக்கிய முடிவு எடுக்கவும் அவனுக்காக சொல்லி இருந்த காலை உணவை அவனது பி.ஏ எடுத்து வரவும் சரியாக இருக்க, 
தன் அறைக்கு பக்கம் இருந்த அறைக்குள் நுழைந்தான். அந்த அறை ஒரு குட்டி படுக்கையும், டேபிளும், ஒரு ரெஸ்ட் ரூமும் கொண்டது… 
அவன் சாப்பிட அமர்ந்ததும், மஹா காலையில் உணவை வாயில் அடைத்து கொண்டே நந்தனிடம் பேசும் போது அவளது அழகிய பஞ்சு கன்னங்கள் பூரியை போல் உப்பி இருந்ததை நினைத்து பார்த்தவனுக்கு முகத்தில் புன்னகை தோன்றியது… 
பின்  பி.ஏ தன்னை கவனிப்பதை உணர்ந்து, தன் உணவில் கவனம் ஆனான்…
அன்று முழுவதும் மஹாவிற்கு நாள் நல்லாதாக அமைந்ததா என்றால் தெரியாது ஆனால் நந்தனுக்கு ஒருவகை புத்துணர்வுடன் இருந்தது முற்றிலும் உண்மை… முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகையுடன் வளம் வந்தான். புதிதாக திருமணமானதால் இது மற்றவர் பார்வைக்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை….
மாலை ஆறு மணிக்கு கிஷோர் நந்தனிடம் ஒரு கிளைன்டை பார்க்க போவதாக கூற, நந்தன் அவனை மறுத்து, தானே செல்வதாக கூறி கிளம்பினான். அவனது வேலை முடிந்ததும் வீட்டிற்கு வர மணி 7ஆகி இருந்தது,  அப்பொழுது வரை மஹா வீட்டிற்கு வந்தாள் இல்லை…
“இந்த கொசுக்குட்டி இன்னுமா வரல… எங்கையாச்சும் ஊர் சுத்த போய் இருப்பாளோ…”என்று புலம்பிக் கொண்டே  தன் அறைக்கு சென்று ரெப்ரெஸாகி  (refresh) ஹாலுக்கு வந்தான்.
பின் தன் லேப்டாப்பில்  ஆஃபிஸ் வேலையில் மூழ்கி இருந்தவன் ,வேலை விஷயமாக கிஷோர்க்கு தன் ஃபோனில் இருந்து அழைப்பு விடுத்தான்…, 
கிஷோர்,”என்னடா… எதுக்கு கால் பண்ணி இருக்க?என்ன விஷயம்?” 
“இல்ல டா… நம்ம டென்டர் எடுத்த பிராஜக்ட்ல ஒரு சின்ன சந்தேகம் அதான் கால் பண்ணினேன்…” நந்தன் தன் லேப்டாப்பில் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டே கிஷோரிடம் பேசிக் கொண்டு இருக்க…
“டேய்… இது உனக்கே நியாயமா படுதா… கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ஏன்டா இப்படி பண்ணுற.. “கிஷோர் அலுத்துக் கொள்ள,
“டேய் ரொம்ப பண்ணாத டா… கல்யாணமானா  வேலை செய்ய கூடாத… சும்மா லூசு மாதிரி பேசாத…”கிஷோரை நந்தன் அதட்ட, 
“டேய் நந்தா… வேலை செய்யலாம் ஆனால் அதுக்குன்னு ஒரு நேரங்காலம் வேண்டாமா .. ?” கிஷோர் கேட்டதும் திடுக்கிட்ட நந்தன். தன் காதில் இருந்த ஃபோனை எடுத்து அதில் மணியை பார்க்க அதில் 8.30 என இருக்க, 
‘இன்னுமா இவ வரல… ஏதாச்சும் ஆயிருக்குமோ…’மனதில் ஒருவகை பதற்றம் பரவ, “டேய் நான் அப்புறம் கூப்பிடுறேன் உன்னை… பாய் டா..”அவசரமாக பேசியவன் நண்பனது  பதிலையும் எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தவன்,
அடுத்து என்ன செய்வது என்று சில நொடிகள் யோசிக்க, அவளது அலைபேசிக்கு  அழைக்க, அது நாட் ரீச்சபல் என வரவும் சற்று பரபரப்பானான். 
சோஃபாவில் அமர்ந்து ,எதிரில் இருந்த டேப்பிலில் கால் நீட்டி, மடியில் லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டு இருந்தவன், அவள் இன்னும் வராததும், ஃபோன் நாட் ரீச்சபல் என்று வரவும், பதற்றத்துடன் அவளை தேடி பார்க்கலாம் என்று எண்ணி சோஃபாவில் இருந்து எழ போக, 
அதே நேரம் வீட்டின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மஹா…
அவளை கண்டதும் பெருமூச்சை விட்டவன் அவளை தலை முதல் கால் வரை அளவிட்டு அவளுக்கு எதுவும் இல்லை என்று ஊர்ஜித படுத்திக் கொண்டான்.
உள்ளே நுழைந்தவள், அங்கு அமர்ந்து இருந்த ஒரு ஜீவனை சற்றும் கண்டு கொள்ளாமல், தன் பேக்கை சோஃபாவின் ஒரு மூலையில் எரிந்து விட்டு தனி இருக்கையில் பொத்தென்று அமர்ந்து சம்மணம் இட்டு அமர்ந்தவள்,தலை கவிழ்ந்து கொண்டாள். 
அவள் நுழைந்த அடுத்த நொடி அவளை ஆராய்ந்து பார்த்துவிட்டு எதுவும் பிரச்சினை இல்லை என்று தெரிந்ததும் தன் வேலையில் கவனத்தை செலுத்த, அவள் பேக்கை ஒரு பக்கம் எரிந்ததை ஓர கண்ணால் கவனித்துவிட்டு, 
எதுவும் கூறாமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்தான். சில நிமிடங்கள் கழிய வேலையில் கவனம் சிதறியது நந்தனுக்கு, ஏன் என்று யோசிதத்தவன் அப்பொழுது தான் கவனித்தான் மஹாவின் அமைதியை…
அவளை நிமிர்ந்து பார்த்தவன், அமைதியாக தலை குனிந்து அமர்ந்து இருந்தவளின் முகம் சற்று படபடப்பாக இருப்பதை உணர்ந்தான்… 
‘என்ன ஆச்சு இவளுக்கு… அதிசயமா அமைதியா இருக்கா… ‘மனதில் எண்ணியவன் அவளிடம் கேட்க நினைத்து வாய் திறக்க சட்டென அவளது கண்டிஷன் நினைவிற்கு வர, 
‘எதுக்கு வம்பு… இவ கிட்ட வாயை  கொடுத்து   யாரு வாக்குவாதம் பண்ணுறது… அதுக்கு பேசாம நாம நம்ம வேலையை பார்க்கலாம்..’என்று எண்ணியவன் அவளிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக தன் வேலையை தொடர்ந்தான்…. 
வேலையை கவனித்தாலும் அவன் விழிகள் அவளை கவனிக்க தவறவில்லை… அவளது விழிகளில் தோன்றிய அலைப்புறுதில் நந்தனுக்கு தான் மனதில் ஏதோ நெருடலாக தோன்ற…
‘அசிங்கப் பட்டாலும் பரவாயில்லை கேட்டு பார்ப்போம்….’ காதல் கொண்ட மனம் அவனை அவளிடத்தில் கேட்க தூண்டியது…
“ஸ்ரீ ஆர் யூ ஓகே….?” அவன் கேட்ட மறுநொடி அவளிடம் இருந்து பதில் வந்தது. ஆனால் பாவம் நந்தன் தான் என்னது என்று புரியாமல் விழிக்க நேர்ந்தது.
“நான் தொலைஞ்சு போயிட்டேன் யாது.. ” என்று கூறிவிட்டு மீண்டும் தலை கவிழ்ந்து கொண்டாள்…
நந்தன்,”என்னது…?”என புரியாமல் விழிக்க, 
அவனை நிமிர்ந்து பாவமாக பார்த்து விட்டு மீண்டும் தலை கவிழ்ந்தவளை, “பைத்தியம் பிடிச்சுருச்சா உனக்கு… நீ தொலைஞ்சு போயிட்டா எப்படி டி என் கண் முன்னால இருக்குற?” என்று அவளிடம் கேள்வி கேட்க, 
“அடேய் லூசு… நான் வீட்டுக்கு வர வழியில் தொலைஞ்சு போய்டேன்னு சொல்லுறேன்…” என்றவளை பார்த்து கடுப்பானவன், 
“அடிங்கு… திமிரு பிடிச்சவளே… நீ வீட்டுக்கு வர வழிய கூட தெரியாமல் ஊர் சுத்திட்டு…. தொலைஞ்சு போய்டேன்னு சொல்லி என்னை குழப்புறியா…” அவன் எகிற,
அவன் கூறியதும் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தவள், “இல்ல யாது…. எனக்கு வழி நல்லா தெரியும்… ரெகுலரா வரவேண்டிய வழியில் வொர்க்கு நடக்குதுன்னு வழியை திருப்பி விட்டுட்டாங்க… அதான் தொலைஞ்சு போய்ட்டேன்… எனக்கு என்னமோ இதை யாரோ வேண்ணும்ன்னு பண்ண மாதிரி இருக்கு….” தீவிரமான முகத்தை வைத்துக் கொண்டு கூற,
அவனோ அவள் கூறிய தொலைஞ்சு போய்ட்டேன் என்ற வார்த்தையில் மீண்டும் கடுப்பாக, 
“ஏய்… பேசாம எந்திரிச்சு போயிருடி… மனுசனை கடுப்படிச்சுக்கிட்டு.. ” அவள் மீது எரிந்து விழ,
அவனை திட்ட வாய் திறக்கும் முன் அவனது அலைபேசி சிணுங்கி மஹாவிடம் இருந்து நந்தனை காப்பாற்ற, அந்த அழைப்புக்கு ஒரு பெரிய நன்றியை மனசார கூறியவன், அழைப்பை ஏற்று பேச துவங்க, மஹா அறைக்கு சென்று தன்னை சுத்த படுத்திக் கொண்டு வந்தாள்.
ஹாலுக்கு வந்தவள், நந்தனை பார்க்க அவன் தீவிரமாக வேலை செய்வதை கண்டு, தன் தோளை ஆட்டிவிட்டு, சோஃபாவின் தனி இருக்கையில் அமர்ந்து டிவியை ஆன் செய்து பார்க்க தொடங்கினாள்…
மஹா டிவி யை உயிர்பித்ததும், அவளையும் டிவியும் ஒரு முறை பார்த்தவன் எதுவும் கூறாது அமைதியாக தன் வேளையை தொடர்ந்தான். 
தனக்கு பிடித்த பாடல் ஒன்று ஒளிப்பரப்பாக அதில் குஷியாகி சற்று சவுண்டை கூட்டி வைக்க, அதில் நந்தனுக்கு கவனம் சிதற அவளிடம் அதை குறைக்க சொல்லவும்…
அவள் வேண்டும் என்றே இன்னும் கூட்டி வைக்க, “ஏய்… இப்ப சவுண்டை குறைக்க போறீயா இல்லை… “என்று குரலை உயர்த்தி கேட்வனை வெறித்துப் பார்த்தாளே தவிர குறைக்கவில்லை.
அடுத்த பாட்டும் அவளுக்கு பிடித்த பாட்டாகவே வர, அதில் இன்னும் குஷியாகி அவளும் கூட சேர்ந்து பாட தொடங்கியவளை,
“ஏய்…” என்று அவன் கத்த, அவசரமாக தன் இருக்கையில் இருந்து எழுந்து தன் பேக்கில் கை விட்டு எதையோ தீவிரமாக தேடியவளுக்கு.
தேடியது கிடைத்ததும் அதை புன்னகையுடன் வெளியே எடுத்து அவன் முன் ஆட்டி காண்பித்தாள் குஷியாக….
 
அவள் தீவிரமாக தேடுவதை பார்த்து அவனும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் தன் முன் ஆட்டியதை யோசனையாக பார்த்தவன்,
‘இப்ப எதுக்கு இந்த கூளிங் கிளாசை இவ்வளவு அவசரமா தேடி எடுத்தா…’என்று மனதில் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவள் அதை அணிந்துக் கொண்டு, 
தான் அமர்ந்து இருந்த இருக்கையின் மேல் ஏறி, சத்தமான குரலில் பாடலோடு சேர்ந்து, 
நான் யாரு… நான் யாரு…
கொய்யால நீ கேளு….
என்று அவனை பார்த்து கை கால்களை காட்டி பாட, அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் தன் நிலைமையை எண்ணி நெற்றியில் அறைந்துக் கொண்டான்… 
பின்,
நான் ராஜா…நான் ராஜா…
எங்கேயும் நான் ராஜா…
என்ற வரிக்கு தான் அணிந்து இருந்த பிங் நிற நைட் பேண்ட் ஷர்ட்டின் காலரை தூக்கி விட்டு அவள் பாட,
 
அவளை கொலவெறியுடன் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் மேல் பாய்ந்து கடித்து குதறும் அளவிற்கு செல்ல இருந்தான்… 
ஆனால் அதை கட்டுப்படுத்திக் கொண்டு, “ஏய் நிறுத்து டி… ஒழுங்கா போய் நைட்க்கு சமைக்குற வழியை பாரு.. போ…. ” என்று உறும,
மஹா தன் இருக்கையில் இருந்து பொத்தென்று கீழே  குதிக்க, தன் அருகில் அவ்வாறு குதிப்பாள் என்று எதிர்பார்க்காத நந்தன் அதிர்ந்து, 
“ஏய்… குட்டி பிசாசு… அறிவில்ல…” என்று கத்த,
தன் ஃபோனை எடுத்துக் கொண்டே….”ஏன்… இல்லைன்னு சொன்னா உனக்கு இருக்குறதை எனக்கு தர போறீயா….” நக்கலாக கூறிவிட்டு அமர்த்தலாக இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து (நீலாம்பரி ஸ்டைலில்) அவனை ஒரு லுக் விட, 
நந்தனின் நிலை வெடித்து சிதறும் குக்கரை போல் இருந்தது…அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனை பார்த்து,
“என்ன சொன்ன சமைக்கணும்மா… ?”நக்கலாக கேட்டு விட்டு, 
“சில்லி பாய்(silly boy)…” என்று விட்டு மீண்டும் டிவியை பார்க்க,
நந்தன், மடியில் இருந்த லேப்டாப்பை அனைத்து தன் முன் இருந்த டேபிளின் மேல் வைத்தவன், 
“என்னடி ரொம்ப ஓவரா தான் போற… இப்ப நீ சாப்பிடுறதுக்கு எப்படி இருந்தாலும் சமைச்சு தானே ஆகணும்… அப்ப பார்த்துக்குறேன் டி….” என்று கோபத்தில் கத்த,
அதற்கெல்லாம் அசராமல் வயிற்றை பிடித்துக் கொண்டு அவள் சிரிப்பதை உறுத்து பார்த்தவனை….
“லூசு காண்டாமிருகம்…. நான் ஏன் எனக்கு சமைக்கணும்? நான் வெளிய சாப்பிட்டு தானே வந்தேன்…” என்று விட்டு மீண்டும் சிரித்துவைத்தாள், 
“சரியான கேடி டி…”கடுப்பில் கூறி விட்டு எழுந்து கிட்சன் செல்ல எத்தனிக்க, அவள் குரலில் திரும்பியவன் அவளை முறைத்து மட்டுமே பார்க்க முடிந்தது…
அவன் கேடி என்றதும், மஹா” நீ மட்டும் என்ன நல்லவனா…? நான் கேடினா… நீ பிராடு..  போடா…” என்று அசால்ட்டாக காலை அவன் ‘போடி’ என்றது போல் அவள் போடா என்று கூறவும் அவளது ஃபோன் அலற, 
அதை எடுத்து பார்க்க அம்மா என்றதும் உற்சாகத்தோடு அதை தன் காதிற்கு குடுத்து பால்கனியை நோக்கி சென்றாள்.
அவளையே முறைத்துக் கொண்டு இருந்தவனை அவள் சற்றும் பொருட்படுத்தாமல் போக, “இவள போய் நல்லவன்னு என் தலைல கட்டிட்டாங்களே…” தன் நெற்றியில் அறைந்து கொண்டு டிவி வால்யூமை குறைத்துவிட்டு கிட்சனுக்கு சென்று தனக்கு மட்டும் சேமியா செய்து அதை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தவன்…
சோஃபாவில் அமரும் முன் கீழே அவளது ஜடி கார்டை பார்த்து,”இன்னைக்கு தான் குடுத்து இருக்காங்க அதுக்குள்ள கீழ போட்டுட்டு அதை எடுத்தும் வைக்காம போய் இருக்கு பாரு கொசுக்குட்டி… “என்றவன் அதை எடுக்க போகும் முன் ஒரு யோசனை தோன்ற கண்கள் பளப்பளத்தது…
தனது ஃபோனை எடுக்கையில் ஐடி கார்டும் சேர்ந்து விழுந்ததை அவள் கவனிக்க தவறினாள்…. சோஃபாவின் கால் அருகே  விழுந்து கிடந்த ஐடிகார்டை எடுக்காமல் அதை இன்னும் சற்று உள்ளே தள்ளிவிட்டு, அவளை பார்க்க… இன்னும் தன் அன்னையுடன் பேசிக் கொண்டு இருக்கவும்… 
ஒரு வெற்றி பெற்ற தோரனையுடன் சோஃபாவில் அமர்ந்து, டிவியை பார்த்துக் கொண்டே தன் சேமியாவை விழுங்கிக் கொண்டு இருந்தான்… 
பின் எழுந்து கிட்சனிற்கு செல்கையில், “ஆமா அம்மா… நான் தொலைஞ்சு போய்டேன் தெரியுமா…”தான் தொலைந்து போன சோக கதையை தன் தாயிடம் வாசித்துக் கொண்டு இருந்தது தெளிவாக நந்தனின் காதில் விழ,
“இவ அதை விட மாட்டா போல்…”தன் நெற்றியில் அறைந்து கொண்டவன் வாய் விட்டு முணுமுணுத்துக் கொண்டே கிட்சனில் தான் அலம்பிய பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டு மீண்டும் ஹாலிற்கு வர,
அவன் பின்னோடு மஹாவும் ஃபோன் பேசிக் கொண்டே வந்தாள். நந்தன் டிவியை அனைத்து விட்டு, தன் லேப்டாபை தூக்க, மஹா தன் பேக்கை தூக்கிக் கொண்டு, “ஐயோ சந்தியா இல்ல டி..அப்புறம்  நான் தொலைஞ்சு போய்ட்டேன்… ” என்று பேசிக் கொண்டே தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொள்ள, “அப்படியே தொலைஞ்சு போய் இருந்தா நல்லா தான் இருந்து இருக்கும் பட் கடவுள் மனசு வைக்கணுமே…” பெருமூச்சை விட்டுவிட்டு தன் அறைக்கு சென்றான் நந்தன்…
காலை வழக்கம் போல் எழுந்தவன் அவளுக்கும் சேர்த்து டீ போடுவோமா என்று ஒரு சில நிமிடங்களின் யோசனைக்கு பிறகு வேண்டாம் என முடிவெடுத்து தனக்கு மட்டும் தயாரித்து, அதை பருகிய படியே சோஃபாவில் அமர்ந்து பேப்பரை படித்துக் கொண்டு இருக்க…
எதர்ச்சையாக திரும்புகையில் சோஃபாவின் அடியில் அவளது ஐடி கார்டு கண்ணில் பட,”இன்னுமா தேடாமல் இருக்கா… “என்று யோசித்தவன் ,”நேத்து என்ன ஆட்டம் போட்டு என்னை டென்ஷன் பண்ணின, இன்னும் கொஞ்ச நேரத்தில் பாரு நீ எப்படி டென்ஷன் ஆகுறன… ஐ ஆம் வெய்ட்டிங் டி பேபி…” நக்கலாக கூறியவன், சிறிது நேரம் பேப்பரை பார்த்துவிட்டு எழுந்து ஆஃபீஸ்க்கு தயாராக சென்றான்…