Advertisement

‘சே… போட்டது போட்ட மாதிரியே வந்த கழட்டி இருந்தா இப்படி சிக்கி இருக்காது… லூசு மாதிரி பெட்டுல இவ்வளவு நேரம் புரண்டா எப்படி கழட்ட முடியும்…’உள்ளுக்குள் புலம்பிய படி மீண்டும் முயச்சித்தவள்,
“அய்யோ முருகா… “எரிச்சலில் லேசாக வாய் விட்டு புலம்பியே விட்டாள், 
அதுவரை தூங்காமல் விழி மூடி தன் யோசனையில் உழன்று கொண்டு இருந்தவன் அருகில் அவளது அசையும் அரவம் கேட்டு விழிகளை திறந்தானே தவிர திரும்பி பார்க்கவில்லை. 
‘என்ன பண்ணிட்டு இருக்கா…? தூங்க விடாம சாகடிக்குறா… இன்னைக்கு ஒரு முடிவுல தான் சுத்துறா போல… ‘ பல்லை கடித்து தன் கோவத்தை கட்டு படுத்திக் கொண்டான். 
சிறிது நேரத்தில் அவள் வாய் விட்டு புலம்ப, முதலிலேயே ஏக கடுப்பிலும் கோபத்திலும் இருந்தவன் சோர்வில் உறங்க நினைக்க அவளது அசைவிலும், புலம்பலிலும் அவன் பொறுமை அவனை விட்டு ஹைஸ்பீடில்(highspeed) பறந்தது….
மீண்டும் அவளை திட்டுவதற்காக அவள் புறம் திரும்ப, அதிர்ச்சியில் உறைந்து போய் இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தவனுக்கு குப்பென்று வேர்த்து வழிந்தது. 
பின் நினைவு வந்தவனாக அவசரமாக திரும்பி மீண்டும் படுத்துக் கொண்டான். 
‘சை… நம்மளை ஒழுங்கா இருக்க விட மாட்டா கொசுக்குட்டி…’ மனதில் அவளை திட்டிக் கொண்டு இருந்தவன் மெல்ல திரும்பி அவளை பார்க்க, அவள் இன்னும் அதே நிலையில் இருப்பதை கண்டு மீண்டும் திரும்பிக் கொண்டான். 
அவனது உணர்வுகள் தங்களின் தூக்கம் கலைந்து வேலை செய்ய ஆயுத்தம் ஆயினர்….
நகைகளின் கொக்கியை கழட்ட இடைஞ்சலாக இருக்கும் என்று முடியை முன் பக்கமாக போட்டு இருந்தவள்,கைகள் இரண்டையும் தூக்கி கொக்கிகளுடன் சண்டை போட்டு கொண்டு இருக்க. படுக்கையில் சம்மணம் இட்டு அமர்ந்து, அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்தவளின் பிளௌஸின் பின் கழுத்து கீழே இறங்கி இருக்க அதன் தூரி முடிச்சு நெகிழ்ந்து இருந்தது. பிளௌஸிற்க்கும் புடவை மடிப்பிற்க்கும் நடுவில் அவளின் இடை லேசாக தெரிய, அறையில் ஒளிர்ந்த விடிவெள்ளியின் வெளிச்சத்தில் நந்தன் அவளின் இந்த அழகை கண்டு சற்று தடுமாறி தான் போனான்.
முடிந்த மட்டும் முயற்சி செய்து பார்த்தவள் முடியாமல் போக. என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு அத்தையிடம் சென்று கழட்டி கொள்ளலாம் என்று தோன்ற வேகமாக எழுந்து சென்று கதவின் கைப்பிடியில் கை வைக்க போனவளை மணியின் ஓசை தடுத்து நிறுத்தியது. 
ஓசை வந்த திசையில் திரும்பி பார்த்தவளுக்கு, மணி 1 என காட்ட. தான் செய்ய இருந்த மடதனத்தை எண்ணி தன்னை தானே நொந்தவள் மெல்ல கதவின் மேல் தலையை முட்டிக் கொண்டு நின்றாள்.
அவள் படுக்கையை விட்டு எழுந்தது முதல் அவளையே ஓர கண்ணால் கவனித்து கொண்டு இருந்த நந்தன், 
‘என்ன ஆச்சு இவளுக்கு… ? சண்டை போட்டதுல மூளை குழம்பி போச்சா… இல்ல பேய் புடிச்சுருச்சா… ‘ மனதில் யோசித்துக் கொண்டு இருந்தவன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். 
சோர்வு ஒரு பக்கம் படுத்த, அவளது உடையும், நகையும் அசௌகரியத்தை உண்டு பண்ண எரிச்சலாக வந்தது மஹாவிற்கு.
பின் பெருமூச்சொன்றை வெளி இட்டவள் கண்ணாடி முன் சென்று அமர்ந்து மீண்டும் முயற்சிக்க ஆரம்பித்தாள்… 
அணிந்து இருப்பது வைரம் என்பதால் அதை பத்திர படுத்தி வைக்க வேண்டிவேறு இருந்தது. வெகு நேரம் போராடியும் அவளால் கழட்ட இயலாமல் முற்றிலும் சோர்ந்து போனாள். 
கண்ணாடியில் தன்னையே  பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு சிறிது நேரத்திற்கு முன்பு நந்தன் கூறிய குற்றச்சாட்டு  நினைவு  வர உடைந்து போனாள் உள்ளுக்குள்.
‘எங்க? என்ன தப்பு நடந்துச்சு….? நான்தான் தப்பு பண்ணினேன்னு எதை வச்சு சொல்லுறான்? நான் ஒண்ணும்மே பண்ணல எதுக்கு என் மேல பழி போடணும்…. இப்ப இதுக்கு எல்லாம் நான் காரணம் இல்லைனு நிருபிக்கணும்மா… ஆனா எப்படி??? நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறானே….’ அவன் பேசிய போது தன்னை நிருப்பிக்க எதிர்த்து பேசி  சண்டையிட்டவளுக்கு ஏனோ இப்பொழுது கண்களில் தண்ணீர் துளிர்த்தது. 
அவன் பேசியதற்கு தான் அவ்வாறு இல்லை என்று கூற முடியாமல் போன தன் இயலாமையும், இப்பொழுது இந்த கொக்கிகளுடன் நடந்த சண்டையில் அதை கழட்ட முடியாமல் போன இயலாமையும் சேர்ந்து ஏனோ பெரிதாக எரிச்சல் வர. அது சற்று நேரத்தில் அழுகையாக மாறியது. 
கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தவள். அழுகையை அடக்க தெரியாமல் முகத்தை மூடிக் கொண்டு குனிந்து அமர்ந்துக் கொண்டாள். 
அவளையே ஓர விழியில் பார்த்துக் கொண்டு இருந்தவன். அவள் அழுகையை அடக்க முயற்சி செய்வது கண்டு மனம் பொறுக்காமல் படுக்கையை விட்டு எழுந்து அவள் அருகில் வந்து  நின்றவன்….
முகத்தை மூடிக் கொண்டு குனிந்து இருந்தவள் முடியை முன் பக்கம் போட்டு இருக்க. நந்தன் அவளது அட்டிகையின் கொக்கி மீது கை வைக்க… கழுத்தில் ஏதோ குறுகுறுப்பது போல் உணர்ந்தவள், பயத்தில் சட்டென நிமிர்ந்து பார்க்க, நந்தனை கண்டு விழிகள் விரிய ஆச்சர்யமாக பார்த்தாள். 
தன் அழுகையை அடக்க முயற்சி செய்தும் ஒரு துளி அவள் இமையின் நுனியில் நான் விழபோகிறேன் என்பது போல் நின்று இருந்தது. 
அவளது விழியை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு இருந்தவன் கைகள் மீண்டும் தானாக மேல் எழுந்து அவளது நகையின் கொக்கியில் கை வைக்க… அதுவரை அவனை விழி விரித்து பார்த்தபடி இருந்தவள் அவனது ஸ்பரிசம் பட்டதும் பெண்ணிற்கே உரிய வெட்கம் லேசாக மேலோங்க விழியையும் தலையையும் தாழ்த்தி கொண்டாள்.
அதுவரை அவர்கள் இட்டுக் கொண்ட சண்டைகள், பிரச்சனைகள், கோபம், இயலாமை, எரிச்சல் அனைத்தையும் மறந்து அவர்கள் உலகில் மெதுவாக சஞ்சரிக்க துவங்கினர்…. 
அவனது தீண்டலில் ஏன்னோ அவளுக்குள்ள ஒருவகை இன்ப அவஸ்தையை அனுபவித்தாள்…. அவன் மேல் இருந்த ஒருவகையான ஈர்ப்பும், கணவனென்ற உரிமையும் அவளை மெதுவாக அவன்பால் இழுத்து சென்றது….. 
அவளை பார்ப்பதும், கொக்கியை கழட்ட முயற்சிப்பதுமாக இருக்க… அவனது விழி கனைகளை தாங்குவதும், ஸ்பரிசத்தால் உண்டாகும் கூச்சத்தை உணர்வதுமாக இருந்தாள்   மஹா. 
சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு கழுத்தை ஒட்டி இருந்த அட்டிகையின் கொக்கியை கழட்டி அதை இலகுவாக்கி அவள் கழுத்தில் இருந்து விலக்கியதும் ஒரு பெருமூச்சை மஹா வெளியிட, அவளது அசௌகரியத்தை நீங்கியதை உணர்ந்து லேசாக உதட்டில் ஒரு சிறு கீற்றாய் புன்னகையை புரிந்தான். 
பின் மற்றதையும் அவன் கழட்டி முடிப்பதற்குள் தலை கவிழ்ந்து இருந்தவள் விழிகளை மட்டும் உயர்த்தி அவனது விழியுடன் மோத விட்டாள் மௌனமாக. 
நகைகளை கழட்டியவன் அவளது தலை அலங்காரத்தையும் களைக்க  உதவி புரிய, அவளது கூந்தலின் மென்மையில் லேசாக வழுக்கி விழுந்ததை  போல் உணர்ந்தவன், ‘யப்பா…. என்ன இவ்வளவு சாப்ட்டா இருக்கு …’. உதவி புரியும் சாக்கில் லேசாக தொட்டு பார்க்கவும் செய்தான். 
எல்லாம் முடிந்து நிமிர்ந்து பார்க்க, விடி விளக்கின் மங்கிய ஒளியில் கண்ணாடி முன் ஒப்பனை இன்றி, அணிகலன்கள் இன்றி, விரித்து விட்ட கூந்தலில் ஏதோ தேவதையை கண்டது போல் இருந்தது நந்தனுக்கு. 
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் உடம்பில்  ஹார்மோன்களின் வேலையை செவ்வன செய்ய தொடங்க, நிலை தடுமாறி போனான் நந்தன். 
தான் கழட்டிய அனைத்து நகைகளையும் பெட்டியில் வைத்து பத்திரபடுத்துவதில் கவனமாக இருந்தவள் அவனது விழியை கவனிக்க தவறினாள் பேதையவள். 
அனைத்தையும் பெட்டியில் வைத்து விட்டு எழுந்து, அவன் புறம் திரும்பி பெட்டியை அவனிடம் நீட்டியவள், “இது எல்லாம் டைமன்ஸ் (diamonds),சோ பத்திரமா லாக்கர்ல வச்சுரு…. ” என்று மெல்லிய குரலில் அவனது சட்டை பொத்தன்களை பார்த்த வாரே கூற, 
அவனிடம் இருந்து பதில் ஏதும் வராததை உணர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க அவனது விழியில் வழிந்த ஏதோ ஒன்றில் அது தாபமோ, ஆசையோ ஏதோ ஒன்றை உணர்ந்து அதிர்ந்து நின்றாள். 
அவனது விழி மொழி இவளது விழி வழியாக ஊடுருவிய ஒரு சக்தி அவளது ஹார்மோன்களின் இன்ஜினை தூசி தட்டி வேலை செய்ய வைத்தது. 
அவள் நீட்டிய பெட்டியை வாங்காமல் அவளை நோக்கி அடி மேல் அடி வைத்து முன்னே செல்ல, அவனது ஒவ்வொரு அடிக்கும் இவள் பின்னே நகர்ந்து கொண்டு இருந்தவள் கப்போர்டில் இடித்துக் கொண்டு நின்றாள். 
அவளுக்கும் அவனுக்கும் இரண்டடி இடைவெளி இருக்க, அவன் தன் கைகளை அவளை நோக்கி நீட்ட, மஹாவிற்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது… தன் கைகளை அவள் காது மடல் அருகே கொண்டு சென்றவன் பட்டென அருகில் இருந்த கப்போர்டை திறந்து அதனுள்ளே இருந்த லாக்கரை சுட்டி காட்டினான்.
எதையோ எதிர்பார்த்து ஏமார்ந்தது போல் முழித்துக் கொண்டு இருந்தவளை சொடுக்கிட்டு நினைவிற்கு அழைக்க, ‘ஙே’ என விழித்து வைத்தாள் மஹா. 
அவளால் தன் உணர்வுகளில் இருந்து சட்டென்ன மீள முடியாமல் கண்களை இறுக முடி தலை குனிந்து நிற்க,
“ஏய் லூசு…. என்ன நின்னுக்கிட்டே தூக்கமா…. சொல்லுறது கேட்குறியா இல்லையா….” குரல் உயர்த்தி அதட்டவும் தன்னை சமணம் செய்து கொண்டவள்.
“ஆங்ங்… சொல்லு…” என்று திணறி கொண்டு சொல்ல… “இந்த லாக்கரோட பாஸ்வேர்ட் **** …. மறந்துராத…. அப்புறம் எல்லார் கிட்டையும் சொல்லிட்டு சுத்தாத… இதுல ஒரு சில முக்கியமான ஃபைல்ஸ் (files) வச்சு இருக்கேன்…. பீ கேர்புல்…” கூறி விட்டு பால்கனியில் சென்று நின்றவன், நீண்ட பெருமூச்சை விட்டு தன் தலையை கோதி உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிதான்.
‘சே.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சண்டை போட்டு இப்ப இப்படி  வழிஞ்சி இருக்கீயே நந்தா…. ‘ மனசிகமாக நெற்றியில் அறைந்து கொள்ள, ‘ நல்ல வேளை அந்த கொசுக்குட்டி என்னை கவனிக்கலை இல்லைனா ஓவரா பேசி இருப்பா…’ என்று எண்ணிக் கொண்டு வந்தவன், அவளது முகத்தில் தோன்றிய ஏமாற்றத்தை எண்ணியவனுக்கு சிறு புன்னகை தோன்றியது.
இது எவ்வாறு சாத்தியமாகும்? சில மணி நேரங்களுக்கு முன்பு அவளால் உண்டான பிரச்சனையும், அதற்கு இருவரும் இட்ட சண்டையும் எண்ணியவனுக்கு வியப்பாக இருந்தது. இளமை உணர்வுகளால் வந்த மாற்றமா என்று எண்ணியவனுக்கு அவனது மனசாட்சி இல்லை என்று அடித்துக் கூறியது… 
முதலில் அவள் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்த பொழுதே அவன் அவளுக்காக யோசித்தவன் பின் சில நொடிகள் சலனப் பட்டாலும் மீண்டும் இயல்புக்கு வந்து அவளுக்கு உதவினான். அதன் பின்னரே சூழ்நிலையும், தன் மணையாளின் அழகும் அவனை வேறு திசையில் இழுத்துச் சென்றது. 
இதற்கு என்ன காரணம்? அளவுக்கு அதிகமான கோபம் இருந்த போதிலும் அவளிடம் அதை நீடித்து வைக்க முடியவில்லையே? அவள் வருந்தும் போது தானும் வருந்துவது ஏன்? இருவரும் தங்கள் சந்தித்து முதல் இந்த நொடி வரை சமரச பேச்சுவார்த்தை என்று எண்ணினால் ஒரு சில நிமிடங்களே பேசி இருக்க, மற்ற அனைத்து பேசு வார்த்தையும் போர்புரியும் வீரர்களை போல் அல்லவா இருந்து இருக்கிறது அவ்வாறு இருக்க இது எப்படி..?. 
தொழில்களில் பல வெற்றிகளை சந்தித்து, அதில் உள்ள சூட்சுமத்தை தெரிந்துக் கொண்டவன் . வாழ்கையின் சூட்சுமத்தை அறிய தவறினான் ….
அவன் சென்றதும் சில நொடிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறியவள். அவசரமாக தனக்கு தேவையான மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். 
“அறிவுகெட்டவளே…. இப்படியா டி பண்ணுவ.. லூசு… லூசு….” பலமுறை தன் நெற்றியில் அறைந்து கொண்டவள் அங்கு இருந்த கண்ணாடியின் முன் நின்று,”கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே உன் மேல அபாண்டமா பழி போட்டு திட்டினான்…. எல்லாத்தையும் மறந்துட்டு இப்படி வழிஞ்சு இருக்க… பாரு உன்னை எப்படி இன்சல்ட் பண்ணி…..” தான் கூற வந்த வார்த்தைகள் எண்ணி அதிர்ந்து பாதியில் நின்று போனது.
பின் யோசனையுடன் மெல்ல திரும்பி பேசின் (basin) மீது சாய்ந்து நின்று,”அவன் உன்னை இன்சல்ட் பண்ணிட்டான் நீ நினைக்குற அப்படினா, அவன் கிட்ட இருந்து ஏதாச்சும் எதிர்பார்த்தியா….? ” வாய்விட்டு தன்னை தானே கேள்வி கேட்டு கொள்ள, ‘ஆம்’ என்று அவள் மனது சொல்லவும், “இது எப்படி சாத்தியம்…?” என்று நந்தனை போலவே அவளும் அதே கேள்வியை கேட்டு, ஏதேதோ யோசித்து குழம்பி தலைவலி வந்ததே மிச்சம் என லேசாக குளித்து விட்டு இரவு உடைக்கு மாறியவள் வெளியே வந்து பார்க்க….
நந்தன் இன்னும் வெளியே இருப்பதை கண்டு பெருமூச்சை விட்டவள். வேகமாக சென்று படுத்துக் கொண்டாள். 
வெகு நேரம் ஆனதை உணர்ந்து அறைக்குள் நுழைந்தவன் படுக்கையில் இருந்தவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக படுக்கையின் மறுமுனையில் வந்து படுத்துக் கொண்டான். 
இருவரும் எதிர் எதிர் புறமாக முதுகு காட்டி உறங்காமல் கண் விழித்து படுத்திருந்தனர் தங்களின் விடை தெரியா கேள்வியோடு. போரில் இருக்கும் எதிரிகளை போல் நின்றாலும் இருவர் எண்ணங்களும் ஒன்றையே யோசித்து ஒரே நேர் கோட்டில் நின்று இருந்தனர்.
இருவர் மனதிலும் காதல் மலர்ந்ததை உணராமல் தங்களையும் தங்கள் இணையையும் வதைத்துக் கொண்டு இருந்தனர். 
காதல்- பேசி, புரிந்து, அன்பு காட்டுவது மட்டும் அல்லாமல் உரிமையிலும், ஊடலாலும், உணர்வாலும் உருவாகும் என்று உணர தவறியது அழகிய இரு உள்ளங்கள்.
கண்டிஷன்ஸ் தொடரும் …….





Advertisement