Advertisement

UD:18
கார் மண்டபத்தை நோக்கி சென்றுக் கொண்டு இருக்க, இருவருவரது பார்வையும் ஒருவர் மற்றவர் அறியா வண்ணம் தழுவிச் சென்றது. அன்று தான் விரும்பி அவனுக்கு நன்றாக இருக்குமே என்று ஆசையாக தொட்டு பார்த்த ஆடையை அணிந்து இருந்தவன், மஹாவின் வாட்டர் டேப் ஓப்பனிங்கிற்கு காரணம் ஆனான்…. 
அன்று துணி கடையில் நந்தனுக்கு எதுவும் பிடிக்கவில்லை என்று அனைவரும் யோசித்துக் கொண்டு இருந்த சமயம்.கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவள் மெல்ல தன் இருக்கையை விட்டு எழுந்து பிரித்து வைத்து இருந்த தனி தனி வகை ஆடைகளை தொட்டவாரே மெதுவாக நடந்து வந்தாள். அப்பொழுது அவள் கண்ணில் பட்ட  ஒரு உடையின் அருகில் நின்று அதை மெதுவாக வருடிக் கொண்டு இருந்தவளுக்கு ஃபோனில் ஒரு அழைப்பு வர சற்று தள்ளி நின்று பேச சென்றாள். 
அதை கண்டு கொண்ட நந்தன் அந்த உடையை பார்க்க அவனுக்கும் அது மிகவும் பிடித்து போய் விட அதையே எடுப்பதென்று முடிவு செய்தான்…….
தான் தேர்வு செய்த இளம் ரோஜா வண்ணத்தில் தங்க நிறத்தில் மயில் தோகை வடிவம் கொண்ட பார்டர் அமைந்த பட்டிலும், அழகு நிலையத்தில் இருந்து வந்த பெண்களின் கைவண்ணத்தில் தலை அலங்காரத்திலும், முகத்தில் இருந்த ஒப்பனையிலும் தேவதையாக ஒளிர்ந்ததாள் மஹா…
மண்டபம் வந்து அடையும் வரை ஒருவர்  மற்றொருவரை  கண்டும் காணாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தனர் தங்களுக்குள்…
இருவரும் தங்கள் இணைக்காக தேர்ந்தெடுத்த உடையில், அவர்களது அழகை கண்டு மனம் தடுமாறி தங்களது நெருக்கத்தை பெருதும் விரும்பினர், ஆனால் அதை வெளி காட்டிகொள்ள தோன்றாமல் இருவரும் வீம்புடன் வளம் வந்தனர் அமைதியாக…..
பின் மண்டபத்தில் இவர்களுக்கு முன்பாகவே சிலர் வந்து இருக்க, இருவரும் ஜோடியாக மேடை ஏறினர். பின் அனைவர் முன்பும் இருவரும் மாலை மாற்றிக் கொண்டதும் , அவர்களுக்கு வாழ்த்து சொல்ல  ஒருவர் பின் ஒருவராக வர தொடங்கினர். 
மாலை மாற்றிக் கொண்ட பின் நந்தன் மஹாவின் கையில் தன் கையை கோர்த்துக் கொள்ள, கேள்வியாக நந்தனையும், அவனது கோர்த்து இருந்த கையையும் பார்க்க. அவள் பார்வையை கண்டவன், அதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டு….. 
உதட்டில் தவழ்ந்து மெல்லிய சிரிப்புடன் அவள் புறம் குனிந்தவன்,”இங்க வரவங்க எல்லாம் வி.ஐ.பி’ஸ், பிஸ்னஸ் பீப்பல்ஸ் சோ உன்  ஓட்ட வாயை ஓப்பன் பண்ணிடாதே…. ” புன்னகை முகமாக கூற, கடுப்பான மஹா…
“போடா காண்டாமிருகம்…. நீ தான் ஓட்ட வாய், திமிர் பிடித்தவன்…” அவளும் சிரித்த முகமாக பதில் கூற, 
கோபத்தை காட்ட இயலாததால், ” தேங்க்ஸ் கொசுக்குட்டி…” அவன் சொல்லி முடிக்கவும் மேடை ஏறி ஒருவர் வரவும் சரியாக இருக்க. அந்த நிமிடம் நந்தன் காப்பற்ற பட்டான். 
அவனது கையணைபை சிறிது நேரத்தில் ரசிக்க தொடங்கியவள்…. அவன் அறியாவணம் அவனை பார்வையால் விழுங்கவும் தவறவில்லை…. 
வாழ்த்து சொல்ல வந்தவரை அறிமுகபடுத்த நினைத்து அவள்புறம் திரும்பியவன் அவளது ரசனை சுமந்த பார்வையை கண்டு முதலில் அதிர்ந்தவன் பின் குழம்பி போனான்,’ஏண்டி இப்படி சைட் அடிக்குற…. ஆனா வெளிய திமிரா கண்டிஷன்ஸ் போட்டு சீன் போடுற…. இவ என்னை பைத்தியக்காரனா அலைய விடாம ஓய மாட்ட போல….’ என்று எண்ணியவன் அவளை விழிகளால் கபளீகரம் செய்யவும் தவறவில்லை…..  
பின் முழுதாக மூன்று மணி நேரம் ஆனது வரவேற்பு முடிவடைய…. அமர்வதற்கு நேரம் அளிக்காமல்  ஒருவர் பின் ஒருவராக வர சோர்ந்து போனாள் மஹா… 
இருப்பினும் எங்கும் முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பேசியவளுக்கு அவனது கையணைப்பை  மிகவும் ஆதரவாக உணர்ந்தாள் உள்ளுக்குள். 
வரவேற்பு முடிந்து அனைவரும் காரில் பயணமானார்கள் வீட்டிற்கு. மஹா காரில் ஏறியதும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்த அடுத்த இரண்டாவது நிமிடத்தில் உறங்கி போனாள். தூக்கத்தில் தலை அவன்  பக்கம் சரிவதும் நிமிர்வதுமாக இருந்தவளை கண்டவனுக்கு, என்ன தோன்றியதோ அவள் பக்கம் நகர்ந்து அமர்ந்து அவள் தலையை தன் தோளில் தாங்கினான் மென்மையாக. 
அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவன், பின் சாலையை பார்க்க அது தன் வீட்டிற்கு செல்லும் விழி இல்லை என்று தெரிந்து…
“அண்ணா…. இந்த பக்கம் ஏன் போறீங்க?? வீட்டுக்கு போற வழி இது இல்லையே…. ” என்று தன் வீட்டின் கார் ஓட்டுனரிடம் வினவ, 
“தம்பி… ஐயா தான் இப்படி போக சொன்னாங்க…. ” என்று கூறியவன் பதிலில் எனக்கு எதுவும் தெரியாது என்பது போல் இருந்தது. 
பின் தன் தந்தைக்கு அழைத்து என்னவென்று கேட்க, “கொஞ்சம் பொறு டா… சொல்லுறேன்… ” வேறேதும் கூறாது அழைப்பை துண்டித்து விட, நந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை… 
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை திரும்பி பார்த்தவன், ‘இப்ப  கொசுக்குட்டி எந்திரிச்சா கதக்கலி ஆடுமே…. ‘ என்று யோசிக்க, ஓட்டுனர் புறம் திரும்பியவன், “அண்ணா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் போய் சேர? ” 
“அவ்வளவு தான் தம்பி ஒரு 2 நிமிஷம் தான் வந்துட்டோம்…” என்று பவ்வியமாக பதில் அளிக்க, அதில் பதட்டமானவன்,
அவசரமாக மஹாவின் புறம் திரும்பி, அவளது தூக்கம் கலையா வண்ணம் நேராக அமர வைத்துவிட்டு விலகி அமர்ந்து கொண்டான்… 
2 நிமிடத்தில் கார் நின்ற இடத்தை கண்டு புருவம் சுருக்கியவன் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே மற்ற அனைவரும் வந்து இருந்தனர். 
“இங்க எதுக்கு பா வந்து இருக்கோம்…. ?” நந்தனின் கேள்விக்கு பதில் அளிக்கும் முன், 
“பாப்பா எங்க டா…?” என்று கேட்க, 
‘என்னது பாப்பாஆஆஆ? ஆளையே காலி பண்ணுற பீப்பா அவ…இப்படி எதுவும் தெரியாமல் இருக்கீங்களே அப்பா….’ மனதில் நினைத்தவன் வெளியே எதுவும் கூறாது புன்னகை முகத்துடன்,
“கார்ல இருக்கா…ஆனா தூங்கிட்டு இருக்கா… ” 
“சரியான லூசு பொண்ணு… இப்படியா தூங்குறது… ? இருங்க அண்ணா நான் எழுப்புறேன்….” வசுந்தரா அவசரமாக காரை நோக்கி செல்ல, 
‘சரியா சொன்னீங்க அத்தை… உங்களுக்கு மட்டும் தான் உங்க பொண்ணை பத்தி தெரிஞ்சு இருக்கு…’ மனதில் தன் மாமியாருக்கு பாராட்டு விழா நடத்தினான் நந்தன்.
“ஒன்னும் பிரச்சினை இல்லை அண்ணி… பாப்பா ரொம்ப டையர்டா சோர்ந்து போயிருப்பா… அதுனால எதுவும் திட்டாதீங்க…” என்று கார்த்திகா மஹாவிற்கு பறிந்து பேச….
‘ஆஹா… இந்த மம்மி இப்ப டேஞ்சுறஸ் மம்மியா மாறிட்டாங்க… நம்ம கொஞ்சம் கேர்புல்லா தான் இருக்கணும்…’ நந்தனின் மனதில் எச்சரிக்கை உணர்வு தோன்றியது தன் அன்னையாள்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளை அரட்டி உருட்டி கஷ்டப்பட்டு எழுந்திருக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது வசுவிற்கு… 
காரை விட்டு அரைகுறை தூக்கத்தில் தள்ளாடி வந்தவள் எங்கு இருக்கோம் என்ன ஏது என்று பார்க்காமல் எனக்கு என்ன வந்தது என்பது போல் நின்று இருந்தவளை கண்டு சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டு நின்று இருந்தான் அவளது அருமை மணாளன்.
“அப்பா ஏன் இப்படி… இதுக்கு என்ன அவசியம் வந்தது இப்ப…. ?”தன்னுடைய விருப்பமின்மையை தந்தையிடம் காட்டினான் நந்தன்…
அனைவரையும் விட்டு சிறிது தள்ளி நின்று பேசிக் கொண்டு இருந்தனர் நந்தனும்  அவனுடைய தந்தையும்…
வரவேற்பு முடிந்து அவர்கள் நேரே சென்றம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு… அதில் ஒரு வீட்டை தான் பத்தா அவர்  மகன் மற்றும் மருமகள் பெயரில் வாங்கி இருந்தார். அதோட இல்லாமல் அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் அனுப்பவும் நினைத்தார்… அதில் நந்தனுக்கு விருப்பம் இல்லாமல் போக தன் தந்தையிடம் அதை பற்றி பேசவும் செய்தான்.
“இல்ல நந்தா…. உங்களோட நல்லதுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன்… புரிஞ்சுக்க முயற்சி பண்ணு….”நிதானமாக அவனுக்கு புரிய வைக்கும் நோக்கோடு  பேசினார் அவன் தந்தை.
“இதுல என்ன நல்லது இருக்க போகுது….”எரிச்சலுடன் நந்தன் கேட்க,
ஒரு பெருமூச்சை விட்டவர்,”இப்ப நீ ஒரு பாம்பே பிராஜக்ட் பண்ணிட்டு இருக்க… அதுல பிஸியாவும் இருக்க… அதே மாதிரி பாப்பாவும் வேலைல ஜாயின் பண்ண போறா… இரண்டு பேரும் பிஸியா இருக்கீங்க…உங்களை பார்த்தா, டைம் ஒதுக்கி ஹனிமூன் போற மாதிரி தெரியல… அதான் இந்த ஏற்பாடு… கொஞ்ச நாளைக்கு தான் அப்புறம் எப்பவும் போல நம்ம வீட்டுக்கே வந்துருங்க…”என்று அவரது இச்செயலுக்கான காரணத்தை கூற, 
“ம்ப்ச்ச்….” என்று சலித்துக் கொண்டவன்,’ஏன்ப்பா நீங்க வேற அவ தெரியாமல் தொட்டாலே முட்ட கண்ணு ரெண்டும் வெளிய வர அளவுக்கு பார்த்து வைப்பா இதுல இது வேற… சாமியார் வாழ்க்கைக்கு தனி வீடு அவசியமா…’மனதில் புலம்பிக் கொண்டு இருந்தான் நந்தன்.
அப்பொழுது,”அது மட்டும் இல்ல பாப்பாக்கும் ஆஃபீஸ்க்கு நம்ம வீட்டுல இருந்து ஒரு மணி நேரம் டிரேவல் பண்ணனும் இந்த வீடுன்னா அரைமணி நேரம் தான்… பாப்பா பேசிட்டு இருக்கும் போது கேட்டேன்… அதுனால கொஞ்ச நாளைக்கு இங்க இருக்க  லைப்பை   நல்லா என்ஜாய் பண்ணு இது உங்களோட பர்ஸ்னல் டேஸ் சோ… லிவ் யூர் லைஃப் (live your life)…. “என்று அவன் தோளில் தட்டி விட்டு போக, நந்தனுக்கு மஹாவின் மீது கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது…
தனக்கு இதில் விருப்பம் இல்லை என்று சொல்லுவதற்காக மஹாவும் அவர்களை நோக்கி வர, பத்தாவும் நந்தனும் பேசியதை கேட்ட மஹாவிற்கு பத்தாவை நினைத்து சந்தோஷம், மரியாதை, பாசம் என அனைத்தும் பெருகியது…
அதில் அவள் எதுவும் பேசாமல் வந்த தடம்  தெரியாமல் சென்றுவிட்டாள்… 
பின் அனைவரும் தங்கள் இல்லத்திற்கு பயணமாக , முன்பு இருந்த இலக்கம் நந்தனிடம் இல்லாமல் முகம் இறுகி இருப்பதை உணர்ந்து…
‘என்ன ஆச்சு இந்த காண்டாமிருகம்க்கு…. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லாத்தானே இருந்தான்… சரியான லூசு எப்ப இவன் மூட் மாறும்னே தெரியலையே….’ மனதில் அவனை எண்ணிக் கொண்டு வந்தவளுக்கு தெரியவில்லை இன்னும் சிறிது நேரத்தில் அவனது இந்த இறுகிய முகத்தின் பிரதிப்பலிப்பை காண போகிறாள் என்று…
வீட்டில் தங்கள் அறைக்குள் நுழைந்ததும்,”இப்ப உனக்கு சந்தோஷமா….?” என்று கோபத்தில் கேட்டவனை புரியாத பார்வை பார்த்தாள் மஹா…
“என்ன பார்க்குற… நீ பிளான் பண்ண மாதிரியே பண்ணிட்ட… இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கும்மே….” விழிகளில் கோபமும் வார்த்தையில் நக்கலும் தெரித்தது… .
“என்ன சொல்லுற… ? எனக்கு ஒன்னுமே புரியல… நான் என்ன பிளான் பண்ணினேன் … ? “புரியாமல் குழப்பத்துடனே கேட்டவளைப் பார்த்து,
“ரொம்ப நடிக்காத டி…  முடியல… நீ சொல்லாம எப்படி  அப்பா இந்த மாதிரி தனி வீடு பார்ப்பாங்க…” கோபத்தில் என்ன ஏது என்று தெரியாமல் மஹாவின் மீது குற்றம் சாற்றினான்…
“ஏய் காண்டாமிருகம் ரொம்ப பேசுற… நான் மாமா கிட்ட எதுவும் பேசல… இன்னும் சொல்ல போனா எனக்கே இப்ப தான் இந்த விஷயம் தெரியும்….” தன்னை புரிய வைக்க முயன்று மென்மையாகவே அவளது வார்த்தைகள் வெளி வந்தது…
“ஓ.. அப்ப நீ இங்கு இருந்து ஆஃபீஸ்க்கு தூரமா இருக்குன்னு சொல்வே இல்ல…”
“லூசு நான் அப்படி சொன்னது என் பிரண்டு கிட்ட தான்… மாமா கிட்ட நான் ஒரு வார்த்தை கூட பேசல… ” என்று எரிச்சல் பட,
“ஓ…. அப்ப பிரண்டு கிட்ட பேசுற மாதிரி அவர் முன்னாடி பேசி இருக்க… நீ தானே சொன்ன உனக்கு ஒன்னு தேவைனா அதுக்கு என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்ன்னு… அப்ப இப்படி கூட பண்ணி இருப்ப… எப்படியோ நீ நினைச்ச மாதிரி,ஆசைப்பட்ட மாதிரி ஒரு வாழ்க்கை, முக்கியமா நீ பிளான் பண்ண மாதிரியே எல்லாம் நடந்துருச்சு… நீ இப்ப பயங்கர ஹாப்பி தானே… அதோட அருமை எல்லாம் கூட்டு குடும்பமா வாழ்ந்து பார்த்து இருந்தா தெரியும்… உனக்கு எப்படி இதெல்லாம் புரிய போகுது…..” தன் வாட்சை கலட்டிக் கொண்டே நக்கலாக கேட்க, மஹாவிற்கு பொறுமை பறந்து ஓடியது….
“என்ன விட்டா ரொம்ப பேசிட்டே போற…உனக்கு என்ன எல்லாம் தெரியுமா…? நான் என்ன மாதிரி வாழ்க்கை ஆசைப்பட்டேன்னு… சும்மா வாய் இருக்குன்னு பேசாத… நான் எதுவும் பிளான் பண்ணவில்லை…..இந்த தனிக்குடித்தனம் பத்தி எனக்கு ஒன்னுமே தெரியாது… நான் யாரு கிட்டையும் எதுவும் பேசவில்லை … எனக்கு அதுக்கு அவசியமும் இல்ல…”என்று ஆவேசமாக பேசியவள் அவனது பதிலை கூட எதிர் பார்க்காமல் வேகமாக சென்று படுக்கையில் படுத்து தன் இருகாதுகளையும் பொத்திக் கொண்டாள்… 
அவன் அடுத்து கோபப்பட்டு தன்னை நோகும்படி ஏதேனும் பேசுவான் என்று எண்ணி தன் காதுகளை பொத்திக் கொண்டாள்… 
அவளது பேச்சில் கோபம் தலைக்கேற  அடுத்து அவன் பேசும் முன் அவள் படுத்துக் கொண்டு காதுகளை பொத்திக் கொண்டதை பார்த்து கோபம் இன்னும் அதிகரிக்க அதை அவளிடம் காட்டவும் முடியாமல் தன் உடையை மாற்றிக் கொண்டு வேகமாக பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டான்… 
படுக்கையில் இருந்தவளோ… “நாம எதுவுமே பண்ணல… சரியான லூசு… நம்ம மேல பழியை  போடுறான் … பன்னி.. எருமை…” என்று திட்டிக் கொண்டு இருந்தாள்…
சில மணி நேரங்களுக்கு பின் படுக்கையின் மூலையில் படுத்து இருந்தவளின் மனமும், வெளியே பால்கனியில் நின்று இருந்தவன் மனமும் கொதித்துக் கொண்டு இருந்தது… 
இன்னும் சொல்ல போனால் இருமனங்களும் இருவேறு விதமாக தவித்துக் கொண்டு இருந்தது. 
‘என்னமோ நான் தான் வேண்ணும்னு பண்ண மாதிரி பேசுறான்… திமிர் பிடிச்சவன் போடா காண்டாமிருகம்…. ‘ என மனதில் அவளும்,
‘நினைச்ச மாதிரியே பண்ணிட்டா… சரியான கைகாரி… ரொம்ப லேசா எடை  போட்டுட்டேன் இவளை சை…. சரியான பஜாரி…’ என அவனும்….
இருவரும் மாற்றி மாற்றி தங்கள் இணையை கொஞ்சிக் கொண்டு இருந்தனர்…
சிறிது நேரம் பால்கனியில் உழன்றுக் கொண்டு இருந்தவன் அன்றைய நாளின் சோர்வு அவனது உடலை ஓய்வுக்கு அழைக்கவும்,
இதற்கு மேல் இங்கு இருக்க முடியாது என அறைக்குள் நுழைய, அவனது ஆசை மனைவி கண்ணில் பட்டு ஒரு நொடி அவன் கால்கள் தயங்கி நிற்க, பின் சிறிது நேரத்திற்கு முன் நிகழ்ந்தது நினைவிற்கு வந்ததும் முகம் இறுக வேகமாக சென்று படுக்கையின் மறுமுனையில் படுத்துக் கொண்டான்.
 
இருவரும் எதிர் எதிராக ஒருங்களித்து படுத்திருந்தனர், அரைமணி நேரம் கழிய, புரண்டு படுத்தவளுக்கு…. 
அந்த ஏசி அறையிலும் வேர்த்து வழிந்தது….. மனதில் இருந்த புழுக்கமா  அல்லது அவள் உடுத்தி இருந்த பட்டும், அணிந்து இருந்த நகைகளின் புழுக்கத்தினாலா என்று அறியாமல் அசவுகரியமாக நெளிந்துக் கொண்டு இருந்தாள்.
இதற்கு மேல் தாங்காது என்று எழுந்து நகைகளை கலைய ஆரம்பிக்க…. கையிலும் காதிலும் இருந்ததை வேகமாக கழட்டியவளாள் தன் கழுத்தில் இருந்ததில் ஒன்றை  கூட கழட்ட முடியவில்லை… 
கழுத்தை ஒட்டி இருந்த அட்டிகை, நெக்லஸ், ஆரம், அவளது தாலி கயிறு என்று அனைத்து கொக்கியிடும் இடமமும் ஒன்றோடு ஒன்று சிக்கி இருக்க சிறிது நேரம் முயற்சி செய்து பார்த்து தோற்று போனாள். 

Advertisement