Advertisement

கோவிலில் சாமி தரிசனம் முடித்து, சற்று நேரம் படிகளில் அமர்ந்து இருந்தனர். இருவருக்கும் நடுவில் அமைதி நிலவ, அதை நந்தனே உடைத்தெறிந்தான். 
“எப்ப வேலைல ஜாயின் பண்ணனும்?” எதார்த்தமாக கேட்க, 
ஓர விழியில் அவனை பார்த்து கொண்டு இருந்தவள் அவன் தீடிரென கேள்வி கேட்கவும் ஒரு நொடி தடுமாறியவள் பின் சுதாரித்து, “ஆங்ங்…. இன்னும் பத்து நாள்ல…” என்க,
“ம்ம்ம்….. ” தலை அசைத்து அதை ஆமோதிக்க, “சரி கிளம்பலாமா….” என்றவனை நிமிர்ந்து பார்க்காமல் சரி என்று தலை அசைக்க. 
நந்தன் முதலில் எழுந்துக்கொள்ள, அடுத்து அவள் எழும் போது புடவையின் மீது கால் வைத்து இருந்ததை கவனிக்காமல் எழவும் புடவை தடுக்கி விழ போனவளை சட்டென்ன தாங்கி பிடித்தான் நந்தன்.
பின் சுதாரித்து இருவரும் விலகி கொண்டு நின்றனர்… தான் விழ போவதும் இவன் தன்னை தாங்கி பிடிக்கும் இந்த வாடிக்கையால்,ஏனோ  தன் மேல் இருந்த கோபம் அனைத்தும் இப்போது அவன் மேல் திரும்ப, அவனை உக்கிரமாக பார்த்து விட்டு காரை நோக்கி வேக எட்டு வைத்து நடந்தாள். 
அவள் முறைபிற்கு காரணம் புரியாமல், செல்லும் அவளை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு, தான் அவளை தொட்டத்தற்கு தான் முறைக்கின்றளோ என்று எண்ணம் வர…. ஆத்திரமாக வந்தது அவனுக்கு…. வேகமாக சென்று காரில் ஏறியவன் அவள் புறம் திரும்பி அவளை உறுத்து பார்க்க, 
“என்ன…?” அவன் பார்வையை உணர்ந்து எரிச்சலுடன் கேட்க, 
அவள் எரிச்சலில் தன் நிதானத்தை இழந்து கொண்டு வந்தவன், 
“இப்ப எதுக்கு கோவில்ல வச்சு முறைச்ச?” பல்லை கடித்து படி அவள் மீது பார்வையை செலுத்தியபடியே கேட்டவனை ஒரு முறை அவனை பார்த்து விட்டு அமைதியாக முகத்தை திருப்பி கொண்டாள். 
அதில் இன்னும் கோபம் வர, “ஏய்…. சொல்லுடி இப்ப எதுக்கு முறைச்ச?”
அவன் அதட்டி கேட்கவும் தன் மேல் இருந்த கோபத்தில், தவறு தன் மேல் என்பதை மறந்து போக, இவனை கண்டத்தில் இருந்து தான் அனைத்துக்கும் காரணம் என்று எண்ணம் தோன்ற, “இப்ப எதுக்கு சும்மா சவுண்ட் விடுற? என்னை தொடக்கூடாதுன்னு சொல்லி நான் போட்ட கண்டிஷன்க்கு சரி சொன்னதால்  தானே நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்… ஆனா நீ கேப் கிடைக்கும் போது எல்லாம் சான்ஸை யூஸ் பண்ணிக்குற… கடைசி தப்பு என் மேலன்னு கதை கட்டுற… ” ஆவேசமாக பேசியவளை கூர்ந்து பார்த்தவன், நிதானமாக 
“நேத்து நைட் யாரு மா பக்கத்துல படுத்து கட்டி புடித்தது…?” அவனது நிதானமான கேள்விக்கு அவளது தலை தானாக கவிழ்ந்து கொள்ள, 
“சொல்லுங்க மேடம்…” அழுத்தி கேட்கவும், 
தன் நிலையை எண்ணி கோபம் வர அதையும் அவனிடமே காட்டினாள்.
“இங்க பாரு நான் தனியா ஓரமா தான் உட்கார்ந்து இருந்தேன்… அப்புறம்… “சொல்ல தயங்கியவள் பின் நிமிர்ந்து, “எப்படி நேரா படுத்தேன்னு தெரியல… இந்த மாதிரி ஏதாச்சும் ஆகிரும்னு தான்   உன்னை கீழே இறங்க சொன்னேன்… ஆனா நீ அப்ப கூட அந்த சான்ஸை யூஸ் பண்ணிக்கிட்டு என்னை…. “அந்த முத்தத்தை தானும் விரும்பினோம் என்பதை மறந்து அவனிடம் கோபத்தில் கத்திக் கொண்டு இருந்தாள்….
அவள் பேசியதை குறிக்கிடாமல் கேட்டு கொண்டு வந்தவன்,’அப்ப நான் தான் இவ பின்னாடி அலைஞ்சுட்டு தப்பா நடந்துகிட்டேன்னு சொல்லவராளா?’ மனதில் இவ்வெண்ணம் தோன்றவும் கார் ஸ்டேரிங்கை பிடித்து ஓங்கி தட்டியவன். அவளுக்கு பதில் ஏதும் கூறாமல் காரை வீட்டை நோக்கி செலுத்தினான்…
அவனது செயல்களை பார்த்துக் கொண்டு இருந்தவள் ,’ஓவரா பேசிட்டோமோ…. கீழே விழாமல் பிடிக்க தானே செஞ்சான்… சை… தேவையில்லாமல் பேசிட்டோம்… ஹர்ட் (hurt) ஆயிட்டான் போல… ‘ மனதில் தான் பேசியதற்கு வருந்தியவள் அவனிடம் மன்னிப்பு கேட்க முடிவு செய்து, அவனை பார்க்க. முகம் பாறை போல் இறுகி, புருவங்கள் முடிச்சிட, நேர் கொண்ட விழியுடன் காரை ஓட்டிக் கொண்டு இருந்தவனை கண்டு சற்று அரண்டு தான் போனாள். 
நந்தனுக்கு தனிமையில் இருக்க வேண்டும் போல் தோன்றியது.அதனால் காரை வேகமாக வீட்டை நோக்கி செலுத்தினான்…. அவளது வார்த்தைகள் அவனது மனதை பெரிதும் காயபடுத்த, எங்கு நாம் ஏதாவது பேசி அவளை வதைத்து விடுவோமோ என்று அஞ்சினான் ஒரு நல்லா காதல் கணவனாய். 
இருவர் மனதிலும் அவர்களது துணைக்காக காதல் இருந்தும் அதை உணர முற்படவில்லை…. உரிமை உணர்வும், ஒருவர் வருந்தும் போது தானும் வருந்தும் போதும், வருத்தி விடுவோமோ என்று அஞ்சும் போதும் அது எதனால் என்று யோசிக்க வில்லை இருவரும்…. 
கார் வீட்டை அடைந்ததும் எதுவும் கூறாது மாடிக்கு சென்று அங்கு இருந்த ஊஞ்சலில் அமர்ந்து யோசிக்க தொடங்கினான். 
‘சை… இப்படி நினைச்சுட்டாளே… நான் சான்ஸை யூஸ் பண்ணிக்குறேன்னா…? அவ மேல உரிமை இருக்குன்னு தானே கிஸ் பண்ணினேன்… அதுக்கு இப்படியா சொல்லுவா…’எதற்கு அந்த உரிமை? எதனால் வந்த உரிமை? என்று யோசிக்காதது அவன் தவறா அல்ல விதியின் செயலா?
‘இனி பாருடி என்னை…. நீயா என் கிட்ட வர வரைக்கும் நான் உன் கிட்ட வர மாட்டேன்… ‘மனதில் ஒருமுடிவை எடுத்த பின்னரும் , தன்னை இகழ்வாக  அவள் எண்ணியதால் ஆத்திரம் வர ஊஞ்சலின் இருக்கையில் தன் கைமுஸ்டியை மடக்கி ஓங்கி குத்தினான்.
மஹா, ‘இருந்தாலும் நீ இப்படி பேசி இருக்க கூடாது. அவன் முகமே ஒருமாதிரி ஆயிருச்சு. நேத்து நீயும் தானே தப்பு பண்ண…’ அதை நினைத்ததும் வெட்கம் வர முகம் லேசாக அந்திவானமாய் சிவந்து போனது. 
“ஏய்… என்ன நின்னுக்கிட்டே கனவு காணுற… போ… போய் இந்த ஜூஸை மாப்பிள்ளைக்கு கூடு…” என்று சாந்தி அவள் கையில் ஜூஸ் நிரம்பிய கண்ணாடி குவளையை அவள் கையில் திணிக்க கொஞ்சமே கொஞ்சம் அரண்டு போனாள். 
‘அவனே ஏக இடுப்புல இருக்கான் என் மேல… இதுல அவனுக்கு நான் போய் தரணுமா? தனியா சிக்குனா கைமா போட காத்துட்டு இருக்கிறவன் கிட்ட என்னை கோத்து விடுறியே சித்தி…’மனதில் புலம்பியவள் வெளியே பேசாமல் சாந்தி தந்ததை வாங்கி கொண்டு தங்கள் அறைக்கு செல்ல, அங்கு அவன் இல்லாததை கண்டு வீடு முழுவதும் தேடியவள், 
‘அய்யோ நான் பேசுனதுக்கு கோவம் வந்து அம்மா வீட்டுக்கு ஓடிடானா…. ‘ என்று யோசித்தபடி நின்று இருந்தவளை ராமன் என்னவென்று கேட்டத்திற்கு, தனது தேடுதல் வேட்டையை கூற
“எல்லா இடத்துலையும் தேடுனியே மாடில தேடுனியா…? மாப்பிள்ளை மாடி படி ஏறுவதை பார்த்தேன்…” ராமன் கூறி முடிக்கும் முன் மாடியை நோக்கி ஓடியவளை கண்டு லேசாக புன்னகைத்தவாறே அவ்விடம் விட்டு நீங்கினார். 
ஏதோ ஒரு பரிதவிப்பில் அவனை காண ஒடி சென்றவள், அவன் ஊஞ்சலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கையை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, காற்றில் அசைந்தாடிய கேசத்தை கண்டு மஹாவின் மனம் தாளம் தப்பி ஒலித்தது. 
‘என்ன இவன் இவ்வளவு ஹான்சமா இருக்கான்… ம்ம்ம்… இவனால் நம்ம அடிக்கடி இப்படி சைட் அடிச்சு மாட்டிக்குறோம் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்…. ‘ மனதில் உறுதி கொண்டவள் தலையை கவிழ்ந்து கொண்டு எதுவும் பேசாமல் அவன் அருகில் சென்று நிற்கவும்.
தன் அருகில் ஏதோ நிழல் ஆடுவதை உணர்ந்து கண் திறந்து பார்த்தவன் மஹாவை கண்டதும் முகத்தை திருப்பி கொண்டு எழுந்து நின்று, “என்ன?” ஒற்றை வார்த்தையில் கேள்வி வர, 
‘சார் செம்ம ஹாட்டா இருக்காங்க போல…? ஏய் நீ எந்த ஹாட் பத்தி சொல்லுற? ‘ மனசாட்சி கேட்ட கேள்விக்கு நமட்டு சிரிப்பை பதிலாக அளித்தவளை கண்டு’ ஏய்… நீ சரி இல்ல டி…’ என்று புலம்பிய மனதை கண்டுக் கொள்ளாமல், 
“ஜூஸ்…” என்று கையில் இருந்ததை அவன் புறம் நீட்ட.
அவளையும் அவள் கையில் இருந்த குவளையும் ஒரு முறை பார்த்தவன் மனதில், ‘இவ்வளவு பேசிட்டு எதுவுமே நடக்காத மாதிரி ஜூஸோட வந்து நிக்குறா பாரு… ‘ கோபம் வர அதை வெளியே காட்டாமல், “எனக்கு வேண்டாம்….” முகத்தை திருப்பி கொண்டு கூற,
“சித்தி தான் குடுத்து விட்டாங்க… என்னால எல்லாம் திரும்பி கொண்டு போக முடியாது…. உங்களுக்கு வேண்டாம்னா நீங்களே கொண்டு போய் வேண்டாம்னு சொல்லி குடுத்துடுங்க… ” ஓய்யிலாக கூறியவளை கண்டு எரிச்சல் வர. 
அவள் கையில் இருந்ததை பிடுங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்து விட்டு கிளாஸ்க்கு கைநீட்டியதை தவிர்த்து, ஊஞ்சலின் இருக்கையில் வைத்துவிட்டு திரும்பி நின்றுக் கொண்டான். 
‘பாருடா… GMக்கு திமிர… பேசுனது தப்புதான்னு சாரி கேட்கணும் நினைச்சேன் ஆனா நீ ஓவரா பண்ணுற சோ சாரி சொல்ல முடியாது போடா… ‘மனதில் சொல்லி கொண்டவள் குனிந்து கிளாஸை எடுத்துக் கொண்டு வேக எட்டுக்களுடன் அங்கு இருந்து செல்ல….
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், அவள் கண் பார்வையில் இருந்து மறைந்ததும் வானத்தை வெறித்துப் பார்தது நின்று இருந்தான். 
இருவரும் மனம் விட்டு பேசாமல் மனதில் இருக்கும் சஞ்சலங்களையும் தண்ணீர் ஊற்றி வளர்க்க தொடங்கினர். 
அதற்கு மேல் இருவரும் பேசிக் கொள்ளாமல், பெரியவர்களுக்கு சந்தேகம் வரா வண்ணம் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசியவர்கள் இரவு உணவை உண்டு விட்டு தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டனர். 
நந்தன் எதுவும் பேசாது அமைதியாக சென்று படுக்கையில் முன்தினம் போல் படுத்துக் கொள்ள மஹா தான் தவித்து போனாள்.
 
அவள் தவிப்புடன் நின்று இருப்பதை கண்டு,”நீ போட்ட கண்டிஷன்க்கு ஓகே சொன்ன  எனக்கு , அதை காப்பாற்றவும் தெரியும்… சோ நான் இங்க தான் படுப்பேன். அதே மாதிரி நீ நான் போட்ட கண்டிஷனை காப்பாற்ற முடிஞ்சா மேல படு இல்லாடி கீழ படு… ” என்றுவிட்டு கண்களை மூடி கொண்டான். 
அவன் கூறியதில் ரோஷம் பொத்துக் கொண்டு வர, “என்னாலையும் காப்பாற்ற முடியும்… என்னால எல்லாம் கீழ படுக்க முடியாது…” என்று ஆவேசமாக பேசியவள்,
வேகமாக படுக்கையின் மறுமுனைக்கு வந்து பொத்தென்று அமர்ந்து படுத்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து தூக்கம் வராமல் புரண்டு படுத்தவள் நந்தனின் பரந்த தோள்களை வெகு நேரம் வெறித்து பார்த்தவளுக்கு முன் தினம் நடந்தது நினைவுக்கு வர சிறு வெட்கத்தில் மீண்டும் எதிர் புறம் புரண்டு படுத்துக் கொண்டாள். 
‘சே… என்னது இது தூக்கமே வரமாட்டீங்குது… ஏன் ஒரு மாதிரி இருக்கு… ‘மனதில் யோசித்து கொண்டு இருந்தவளுக்கு தான் அணிந்து இருந்த புடவை எரிச்சலை ஏற்படுத்த, எழுந்து வேற ஒரு மாற்று துணியை எடுத்து கொண்டு குளியலறையில் சென்று மாற்றி விட்டு வந்து படுத்துக் கொண்டாள். 
சிறிது நேரம் நந்தனை பற்றி யோசித்துக் கொண்டு இருந்தவள் மெதுவாக உறங்கியும் போனாள். வெகு நேரம் தன் அருகில் எந்த அரவமும் கேட்காததால் லேசாக திரும்பி பார்க்க, கை காலை முடிந்த மட்டும் தன்னுள் சுருக்கி கொண்டு படுக்கையின் மூலையில் படுத்து இருந்தவளை கண்டு, ‘ரொம்ப கஷ்டப் படுத்துரோமோ…’என்று எண்ணியவன் அவள் புறம் கையை நீட்ட, அவள் கூறியது நினைவிற்கு வர தன் கையை இழுத்துக் கொண்டவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான். 
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை யாரோ அழுத்துவது போல் உணர்ந்தவன் என்னவென்று கண்களை திறந்து பார்க்க, உதட்டில் புன்னகை வந்து அமர்ந்து கொண்டது… ‘ஏய்… கொசுக்குட்டி உனக்கு ஒழுங்கா தூங்க தெரியாதா… கையையும் காலையும் போட்டே என்னை கொன்னுருவா போல….’ கோபம் மறைந்து அவள் மேல் ஆசையே வந்தது அவள் சிறுபிள்ளை தனமாக தூங்கும்  அழகை கண்டு,
இந்த நிலை அவளுக்கு தெரிய வந்தால் மீண்டும் வார்த்தை சண்டை வரும் என்று தோன்றியது நந்தனுக்கு… ஒரு ஐந்து நிமிடம் அந்த தருணத்தை ரசித்தவன் பின் அவளை தன் மீது இருந்து விலக்கி தனித்து படுக்க வைத்து அவளை பார்த்துக் கொண்டே தூக்கத்தை தழுவினான். 
விடியற்காலையில் லேசாக தூக்கம் கலைந்த மஹா ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்க்க, தனக்கு வெகு அருகில் தெரிந்த அவனது முகத்தை கண்டு பதறியடித்து எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன் நெற்றியில் அறைந்து கொண்டாள்…
‘சே… இப்படியாடி தூங்குவ… ஏதோ உனக்கு நல்ல நேரம் அதான் அவன் மேல விழுந்து புரல்வதற்கு முன்ன எந்திரிச்ச…. சப்ப்ப்பா…. இரண்டு நாளுக்கே இப்படியா..? இனி வாழ்க்கை முழுக்க எப்படி தூங்குறது??’ஏற்கனவே அவன் மீது புரண்டது தெரியாமல் மனதில் தீவிரமாக யோசித்தபடி அவனை விட்டு விலகி படுக்க, மூளைக்கு அதிகம் வேலை கொடுத்து யோசித்ததால் சோர்வில் உறங்கி போனாள். 
எப்பொழுதும் போல் ஆறு மணிக்கு கண் விழித்த நந்தன் அருகில் தன் மனையாளை பார்க்க, இரவு படுத்து இருந்தது போல் படுக்கையின் மூலையில் இருந்தாள். அதை கண்டு லேசாக புன்னகைத்து, ‘நடுவில் முழிச்சு இருப்பா போல… பிராடு கொசுக்குட்டி….’ அவளது வார்த்தையில் ரணப்பட்டு கோபம் இருப்பினும் அவளது சிறுபிள்ளை தனமான செயலில் அவன் இலகுவானான்….
பின் அனைவரும் தயாராகி சென்னை கிளம்பினர் அன்றைய மாலை அவர்களது வரவேற்பிற்கு…. 
மதியம் ஒரு மணி அளவில் சென்னை போய் சேர்ந்தவர்கள் மதிய உணவை முடித்துக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க சென்றனர். மஹாவை கார்த்திகா தங்கள் அறையிலேயே படுத்து ஓய்வெடுக்க சொல்ல, நந்தன் தன் அறைக்கு சென்று படுத்து கொண்டான். 
மாலை 6.30 மணி அளவில் அனைவரும் மண்டபம் நோக்கி பயணம் ஆயினர். 
நந்தனும், மஹாவும் ஒரு காரிலும் மற்ற உறவினர்கள் தனித்தனியாக 3 காரிலும் பயணம் ஆயினர். 

கண்டிஷன்ஸ் தொடரும் …….

Advertisement