Advertisement

UD:17
நடுநிசியில் லேசாக தூக்கம் கலையை புரண்டு படுத்து கண்களை மெல்லத் திறந்து பார்த்தவனுக்கு, வெளிச்சம் கண்ணை கூசியது….
“இந்த கொசுக்குட்டி லைட்டை கூட அனைக்காம தூங்கி இருக்கு போல… லூசு….” முணுமுணுத்துக் கொண்டே கண்களை கசக்கி திறந்து பார்க்க அதிர்ந்தான் நந்தன்…..
நந்தனுக்கு எதிராக, வாயை கைக்குட்டையால் மறைத்தவாரு கட்டி இருக்க, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, காலைமடக்கிய நிலையில் கட்டில் சாய்ந்து அமர்ந்தவாறே தூங்கிக் கொண்டு இருந்தாள் மஹா…. 
அவளை கண்டதும் தன் நெற்றியில் அறைந்து கொண்டவன், “இவளை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? லூசு…. லூசு….” வாய்விட்டு புலம்பியவாரே மீண்டும் அவளை உற்று பார்த்தான் நந்தன். 
“எவ்வளவு பெரிய சேஃப்டி பிரெக்காஷன்…. ? ” என்று அவள் கட்டி இருந்த கைக் குட்டையை பார்த்தப் படி மெல்ல தவழ்ந்து அவள் அருகில் ஒரு காலை மடக்கி மற்றோரு காலை பாதி மடக்கியவாறு அமர்ந்தான். 
முகத்தில் முன்னுச்சியில் தவழ்ந்துக் கொண்டு இருந்த முடியை பட்டும் படாமல் ஒதிக்கி விட்டு, அவள் அதரங்களை மறைத்துக் கொண்டு இருந்த கைக்குட்டையை, அவள் தூக்கம் கலையாமல் மெதுவாக பிடித்து கீழே இழுக்க பட்டுவண்ண ரோஜா இதழ் இவனை கண்டு வா என்று அழைப்பது போல் இருந்தது.
தூக்கத்தில் சரிந்து இருந்த அவள் தலையை, தூக்கம் கலைந்து விடாமல் பற்றி, அவளை நேராக படுக்க வைக்க முயன்றான். வெகு நேரம் காலை மடக்கி வைத்து ஓரே நிலையில் இருந்ததால் மரத்துக் போயிருக்க, அவன் அவளை தலையணையில் கிடத்தி கால்களை விரித்து விட முயல்கையில், “ஸ்ஸ்… காலு…” என்று லேசாக வலியில் முணுங்கினாள். 
அதில் பதறி தன் கையை விலக்கி கொண்டவன், “வலிக்கட்டும் டி கொசுக்குட்டி. .. ஓவரா பண்ணல… உனக்கு இது தேவைதான்….” என்று அவன் வாய் சொல்ல அவனது கை அவள் உள்ளங்காலை தேய்த்துவிட்டு கொண்டு இருந்தன. 
காலின் வலி சிறிது குறைந்ததும் முகம் இலகுவாக, லேசாக, காலை நீட்டி வசதியாக படுத்தவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்…. பின் அவளை நெருங்கி முகத்தை பார்த்தவாறே ஒருக்களித்து தலைக்கு முட்டு குடுத்து படுத்துக் கொண்டு, “தூங்கும் போது கூட இத்தனை ரியாக்ஷனோட தான் தூங்குவியா டி கொசுக்குட்டி…?” என்று கொஞ்சியவன் அவளுடனான முதல் சந்திப்பை நினைத்து, 
“ஓவர் வாய்டி உனக்கு…. இத்துனுன்டு இருந்துட்டு என்னமா வாயடிக்குற…. ஆனா அது தான் என்னை உன் பக்கம் ஈர்த்துச்சோ என்னமோ… ” என்று மெல்லிய குரலில் அவளது தூக்கம் கெடாமல் பேசிக் கொண்டே வந்தவன் அவள் பேசியதும் நினைவிற்கு வர சில நிமிடங்கள் முகம் இறுகி இருந்தவன்,
“ஏன்டி அப்படி பேசுன…? நீ பேசுனது தப்பு ஸ்ரீ .. நீ நினைக்குற மாதிரி இருந்தா நல்லா இருக்கும் தான் ஆனா நிறைவானதா இருக்காது… இப்ப இருக்குற எல்லாருக்கும் இப்படி இருந்தா நீயும் அப்படிதான் இருக்கணும்னு அவசியம் இருக்கா என்ன? நீயா யோசிக்க மாட்டியா…? நம்ம லைஃப் நம்ம தான் வாழணும்… மத்தவங்க இப்படி இருக்காங்க அதுனால நாமும் அப்படியே இருக்காலாம்னு நினைக்குறது தப்பு ஸ்ரீ .” என்று மெல்லிய குரலில் உரைத்தவன் அவள் கன்னத்தை மெதுவாக தடயவியவாரே,
“முதலில் நீ பேசினது கேட்டு கோபமா வந்தது… நாலு அப்புனா என்னனு தோனுச்சு… அப்புறம் பொண்ணு பார்க்கும் போது ஏதோ உன்னை விட்டுற கூடாதுனு நினைச்சேன், நீ பேசுனதுக்கு உன்னை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தண்டனை தரனும்னு நினைச்சேன்… உன்னை உணர ஆரம்பிச்சதும் உனக்கு அதை புரிய வைக்கணும்னு நினைச்சேன்…. ம்ம்ம்…ஆனா நீ என்னை கொஞ்சும் கொஞ்சமா உன் கிட்ட விழ வைக்குற ஸ்ரீ.. இத எப்படி என்னனு எடுத்துக்குறதுனு தெரியல… ஆனா நீ வேணும்ன்னு தோணுது… உன் கிட்ட சண்டை போடாம இருக்க முடியும்னு தோணல டி கொசுக்குட்டி….” கன்னத்தை வருடிக் கொண்டு இருந்த கைக்கள் அவள் மூக்கின் நுனியை பிடித்து மெல்ல ஆட்ட, அதில் லேசாக சிணுங்கியவள் மூக்கை சுருக்கி கொண்டு தலையணையில் மேலும் முகத்தை புதைத்துக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றாள். ஒருவன் தனக்காக உருகுவதை உணராமல்…. 
அவளை சிறிது நேரம் பார்த்தவன் பெருமூச்சொன்றை விட்டு லைட்டை அனைத்து விட்டு, தன் தூக்கத்தை தொடர்ந்தான். தன் நெஞ்சில் பாரத்தை உணர்ந்து கண் விழித்து பார்த்தவன் தன் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்ட கொசுக்குட்டியை கண்டு சிரித்து,
‘ஏன்டி இவ்வளவு பெரிய பெட்டுல படுக்க இடம் இல்லாத மாதிரி என் மேல் இருக்க…. காலைல கண்ணு முழிச்சு பார்த்தா கொசுக்குட்டி ருத்ரதாண்டவம் ஆடும் என்னமோ நானே பண்ண மாதிரி…. ‘ மனதில் எண்ணி சிரித்துக் கொண்டவன். அவளை லேசாக அணைக்க, மேலும் அவனுடன் ஒன்றிய படி வாகாக அவள் உறங்க, சற்று திணறி போனான் நந்தன்.
‘ஐயோ இம்சை பண்ணுறாளே… எப்படி நிம்மதியா தூங்குறா பாரு….  கொசுக்குட்டி…’சிறிது நேரம் அவஸ்தையில் நெளிந்தவன்  , உடலின் சோர்வின் காரணமாக உறங்கியும் போனான்….
காலை ஆறு மணிக்கு உறக்கம் கலைந்த நந்தன் இன்னும் தன் மேல் உணர்ந்த பாரத்தை புரிந்து கொண்டு, உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் குனிந்து பார்க்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மஹா. 
“என்ன இவ இப்படி தூங்குறா…. ஒரு இன்ச் கூட நகராம…. தூங்கு மூஞ்சி எப்ப டி எந்திரிப்ப? ” ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளிடம் கேட்டவனுக்கு விடைதான் இல்லை. 
அவளது தூக்கத்தை கலைக்க விரும்பாமல், கூத்தலை லேசாக கோதியபடி அசையாது படுத்து இருக்க. மணி ஏழரை ஆனதும் இதற்கு மேல் விட்டால் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து. அவளது கையையும், காலையும் மெதுவாக நகர்த்த முயற்சி செய்யும் பொழுது அவளது தூக்கம் கலைய… நகர்த்த முயற்சித்த அவன் கைகளை தட்டி விட்டு மீண்டும் பழைய நிலைக்கு வந்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள். 
‘இது என்னடா வம்பா போச்சு…. இவளும் எந்திரிக்க மாட்டிங்கிறா… நம்மளையும் எந்திரிக்க விட மாட்டேங்குறா… ம்ப்ச்ச்… இப்ப எந்திரிச்சா ஓவரா ஆடுவா . சரி அவளுக்கு முன்னாடியே எந்திரிச்சுரலாம்னு பார்த்தா இந்த கொசுக்குட்டி எருமகுட்டி மாதிரி தூங்குது… அப்பா முருகா நீ தான் என்னை காப்பாதணும்….’ மனதில் புலம்பிக் கொண்டே இருந்தவன் அப்பொழுது தான் கவனித்தான். 
அவள் வெக மூச்சுடன் கனம் இல்லாமல் தன் மேல் படுத்து இருப்பதை…. ‘முழிச்சுட்டா போல ஆனா ஏன் இன்னும் என் மேல இருந்து எழும்பாமல் படுத்து இருக்கா…. ‘ யோசிக்கும் போது அதன் காரணம் அவன் மண்டையில் உறைத்தது… 
குனிந்து அவளை கண்டவன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்,’ஏய் கொசுக்குட்டி இப்படியே வெட்க பட்டு எவ்வளவு நேரம் படுத்து இருப்ப…? போதும் டி எந்திரி பிளீஸ்….’ மனதில் அவளிடம் சொன்னானே தவிர வாய் திறந்து சொல்லவில்லை… 
மேலும் சில நிமிடங்கள் கரைய, அவள் தன்னை விட்டு எந்திரிப்பது போல் தெரியாததால். மீண்டும் அவளை தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சிக்க, இம்முறை அவளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் போக உதட்டில் தவழ்ந்த புன்னகை மேலும் பெரிதாக விரிந்தது… 
அவளை தன் பக்கவாட்டில் படுக்க வைத்தான். படுக்கையை விட்டு எழுந்து பால்கனிக்கு சென்று, ஆழ்ந்த மூச்செடுத்து காலை புத்துணர்ச்சியுடன் தன் சேட்டை மனைவியின் நினைவில் அழகாய் மூழ்கி இருந்து பத்து நிமிடங்கள் கழித்து உள்ளே வந்து பார்க்க… காலையில் இருந்து அடக்கி வைத்த சிரிப்பை இப்பொழுது சிரித்தான். 
‘ஏய் கொசுக்குட்டி… எப்படா வெளிய போவேன்னு காத்துகிட்டு இருந்து இருப்ப போல…’ முகமெல்லாம் பிரகாசமாக மனதில் நிறைந்த சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டு இருந்தான்.
அவனது சிரிப்பிற்கு காரணம், படுக்கையில் அவனது கொசுக்குட்டி இல்லாமல் காலியாக இருந்தது…. நந்தன் முதலில் அவளது கையையும் காலையும் அகற்ற முற்படும் போதே லேசாக தூக்கம் கலைந்து இருந்தாள். தன் தலையணையை கட்டி பிடிப்பதாக நினைத்து நந்தனை அணைக்க, அப்பொழுது தான் அதன் வித்தியாசத்தை உணர்ந்தாள். 
அதில் தூக்கம் முழுவதும் ஜெட் வேகத்தில் பறந்து விட, என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு பதற்றத்தில் வேகமாக மூச்சு வாங்கியது…. இப்பொழுது எழுந்தாள் அவன் தன்னை கேலி செய்வான், அல்லது தன்னை கொத்து பரோட்டா ஆக்குவது நிச்சயம் என்பது புரிந்தது. 
என்ன செய்வது என்று யோசிக்க, “பேசாம இப்படியே கொஞ்ச நேரம் தூங்குற மாதிரி நடிக்கலாம்… திரும்பவும் எந்திரிக்க நினைச்சு அவனே நம்மளை விட்டு விலகிருவான்…. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எதுவும் தெரியாத மாதிரி நாம எந்திரிச்சுக்கலாம்….. ” பிளான் போட்டு படுத்து இருந்தவள், அவன் பால்கனிக்கு சென்ற அடுத்த நொடி வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்…. 
“மஹா…. மஹா…. லூசு டி நீ… என்ன நினைச்சு இருப்பான் உன்னை பத்தி…. மானம் போச்சு… மரியாதை போச்சு…. ஆங்ங்ங்… அவன் எப்ப உனக்கு மரியாதை குடுத்து இருக்கான்…நீ முதல குடுத்தாதானே அவன் உனக்கு தருவான்…..?” தாடையில் கைவிரல்களால் தட்டியப்படி யோசிக்க, அவளது மனசாட்சி, 
‘இப்ப ரொம்ப முக்கியம்…. ‘ என்று சளித்துக் கொள்ள, “அட ஆமால… ” என்றவள்” ஐயோ இப்படி பண்ணிட்டியே மஹா… கண்டிஷன்ஸ் எல்லாம் போட்டியே… இப்படி நீயே அத ஒடைச்சுட்டியே…. அவனே… அவனே கையையும் காலையும் தள்ளியும் விட்டு எந்திரிக்க பார்த்தான் ஆனா நான்…. வம்படியா கட்டி புடிச்சுடேன்… ஐயோ மஹா… ஏன்டி இப்படி பண்ண…?” குளியலறை கதவில் சாய்ந்து சம்மணம் இட்டு அமர்ந்து மெல்லிய குரலில் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருந்தாள்…
வெளியே நந்தன் அப்பொழுது தான் அறைக்குள் நுழைந்து மஹா இல்லாததை கண்டு சிரித்து கொண்டு இருக்க… அது மஹாவின் காதில் விழுந்து அவளது ஒப்பாரி மேலும் ஒரு 5 நிமிடங்கள் தொடர்ந்தது. 
அப்பொழுது அவனது அறைகதவு தட்டப்பட, தன் சிரிப்பை அடக்கி ஆசுவாசப் படுத்திக் கொண்டவன். தட்டியது யார் என்று பார்க்க, தன் மாமியார் கோவில் செல்ல வேண்டும் என்றும் சீக்கிரம் தயார் ஆகி வருமாறு கூறிவிட்டு செல்ல. ‘சரி’ என்று பதில் உறைத்து விட்டு வந்து படுக்கையில் படுத்துக் கொண்டான், 
தனது தாயின் பேச்சை குளியலறை கதவில் தன் காதை வைத்து யாரு என்று ஒட்டுகேட்டவள்… இதற்கு மேல் இங்கு இருக்க முடியாது என்று உணர்ந்து அவசரமாக குளித்துவிட்டு கதவை திறந்து வெளியே எட்டிப் பார்க்க, நந்தன் விழி மூடியபடி படுக்கையில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து இருந்தான்… 
பின் ஒரு தைரிய முடிவுடன் வெளியே வந்து எதுவும் நடக்காது போல் தயாராக தொடங்கினாள் மஹா. கதவு திறக்கும் வரை கண் திறந்து இருந்தவன் அவள் வரும் அரவம் கேட்டு,வேண்டும் என்றே தன் விழிகளை மூடி அவளை நோட்டம் விட்டான்.
அவளோ எதுவும் பேசாமல், நந்தன் என்ற ஒரு உயிரினம் இருப்பதே தெரியாத வண்ணம் இருந்தது அவளது செய்கைகள். சிறிது நேரம் அவளை பார்த்து விட்டு பின் எழுந்து குளியலறைக்கு சென்றான். 
அவன் எழுவதை உணர்ந்தவள், தன்னிடம் எதுவும் பேசி விட கூடாது என்று அவன் தன்னை கடந்து செல்ல எடுத்துக் கொண்ட அந்த 3 நிமிடத்தில் ஊரில் உள்ள அனைத்து தெய்வத்தையும் துணைக்கு அழைத்து இருந்தாள். 
உள்ளே சென்றவனுக்கு மீண்டும் சிரிப்பு பொத்துக் கொண்டு வர, “ஹய்யோ கொசுக்குட்டி… செம்ம நடிப்புடி… ஆனாலும் உன் முகம் உன்னை காட்டி குடுத்துருச்சு டி….” என்றுவிட்டு சிறிது நேரம் சிரித்தவன் பின் தயாராக சென்றான்… 
“தெரியாம தப்பு பண்ணிட்டு இப்படி மாட்டிக்கிட்டு முழிக்குறியே டி மஹா… சை…” என்று சலித்தப்படி தன் நெற்றியில் அறைந்து கொண்டாள். 
பின், “நின்னு கனவு கண்டுட்டு இருக்காம அவன் வரதுக்குள்ள ரெடி ஆகி வெளிய போயிரனும் டி..” முடிவெடுத்தவள் பூனை போல் குளியலறையின் கதவின் அருகில் வந்து சத்தம் வராத வண்ணம் அதை வெளியே பூட்டு பொட்டு விட்டு, அவசரமாக ரெடி ஆகி விட்டு பூட்டையும் திறந்துவிட்டு ஒன்னும் அறியாதது போல் வெளியேறி விட்டாள். 
குளித்து முடித்து வெளியே வந்தவன், எதிர்பார்த்தது போல் அவள் இல்லாததை கண்டு சிரித்து கொண்டே தானும் தயாராகி வெளியே வந்தான். 
பின் அனைவரும் காலை உணவை முடித்துவிட்டு, இவர்கள் இருவரையும் கோவிலுக்கு சென்று வர சொல்லி பெரியவர்கள் சொல்ல, நந்தன் அவர்களுக்கு சரி என்று உரைத்தாலும், காலையில் இருந்து தன்னுக்கு டிமிக்கி தரும் அவளது முகத்தை ஓர விழியில் பார்க்க, 
‘ஆஹா… தனியா மாட்டுன டி மஹா.. இப்ப என்ன பண்ணுறது… ‘ மனதில் எண்ணிய வாரே தீவிர யோசனையில் இருந்தவளை கண்டு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு இருந்தான் நந்தன். 
அரைமணிநேரம் கழித்து இருவரும் கோவில் செல்ல காரில் ஏறினார். இருவர் ஒருவருக்கொருவர் எதுவும் பேசாது அவரவர் எண்ணங்களில் உழன்றபடி இருந்தனர். 
தான் இப்படி செய்து விட்டோமே என்று மனதுக்குள் உறுத்திக் கொண்டு இருக்க தன் மேலேயே கோபம் உண்டாகி நந்தனைவிட்டு விலகி நின்றாள். அவளை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று அவனும் விலகி நின்றான். 

Advertisement