Advertisement

இல்ல வசுந்தரா நம்ம பொண்ணு இப்படி நிம்மதி இல்லாமல் குழப்பத்துடன் சுத்துறது பார்க்க கஷ்டமா இருக்கு…. அவ இருக்குற இடம் சத்தமா கலகலப்பாக இருக்கும். ஆனா இப்ப பாரு…. அவளை கட்டாய படுத்த வேண்டாம் வசுந்தரா…. இத விட்டுறலாம் இனி பேச வேண்டாம்… அவளுக்கு அந்த பையன் தான்னு இருந்தா கண்டிப்பா எப்பவாக இருந்தாலும்அவங்களுக்கு கல்யாணம் நடக்கும். இப்ப என் பொண்ணு சந்தோஷமும், நிம்மதியும் தான் முக்கியம்…..  ” என்றவரின் முகத்தில் மகளின் மேல் இருந்த பாசத்தை அப்படியே கண்ட வசுந்தரா கனிவுடன் அவரையே பார்த்து இருந்தார். 
உங்க இஷ்டம் போலவே பண்ணுங்க….. எனக்கும் மஹா இப்படி இருக்குறது என்னவோ போல தான் இருக்குங்க….என்றவர் மேலே எதுவும் கூறாது இருக்க, இருவரும்அமைதி காத்தனர்.
நாளைக்கு என்ன சொல்ல போறீங்க பத்தா அண்ணா கிட்ட? ” வசுந்தரா கேட்கவும், ” தெரியலை வசுந்தரா…. நாளை காலையே இத பத்தி பத்தா கிட்ட பேசணும். அன்னைக்கு ரொம்ப சந்தோஷமா பேசினான். இப்ப எப்படி வேண்டாம்னு சொல்லுறதுனு தெரியலை… பத்தாவை கஷ்ட படுத்தாமல் பேசணும்…  ஆனா எப்படின்னு தான் தெரியலை….பெருமூச்சொன்றை வெளியிட்டவர்,” யோசிக்கலாம்…. “என்று அமைதியாகி விட  நட்புக்கும், மகளின் பாசத்திற்கும் நடுவில் அல்லாடினார் ஜெயராமன்….
இவை அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்த மஹா எவ்வாறு உணர்ந்தாள் என்று அவளே அறியவில்லை…. சத்தம் எழுப்பாமல் தன் அறைக்கு வந்து படுக்கையில் சரிந்தவள்,  மூளைக்கும் மனசுக்கும் வேலையை பணிந்தாள்.
இதுவரை தன் ஆசை படியே அனைத்தும் நடுந்தது அவள் வாழ்வில். இவள் ஆசைக்கு தன் தந்தை இது வரை ஒரு வார்த்தை கூட மறுத்து பேசியது கிடையாது. தாய் சில நேரம் கண்டிப்பது உண்டு ஆனால் தந்தை அமைதியே உருவானவர் பாசத்தை மட்டுமே காட்டி வந்தவர், இப்பொழுது தன் மணவாழ்க்கையில் எது செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்று நம்பினாள். அந்த நம்பிக்கையின் முடிவாக இத்திருமணத்திற்கு சம்மதம் சொல்லுவது என்று யோசித்தாளே தவிர திருமணத்தின் மேல் நம்பிக்கை வைக்க தவறினாள். அதுவே பின் நாட்களில் அவள் வாழ்வின் பெரும் பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழியாக அமைய போவதும் உணர்ந்து இருக்கவில்லை மஹா.
அழகாக விடிந்த அந்த காலை பொழுது அனைவருக்கும் இனிமையாகவே அமைந்தது. காலை எழுந்ததும் தன் தந்தையின் முன் நின்றவள் அவர் கைப்பற்றி  தன் சம்மதத்தை தெரிவிக்க, முழு மனதுடன் தான் தன் மகள் ஒப்புக்கொண்டாளா என்று முதலில் சந்தேகமாக பார்த்தவர். பின் மகளின் முகத்தில் தோன்றிய சிறு வெட்கத்தை அவள் மனதை காட்ட மிகவும் மகிழ்ந்து போயினர் ராமனும், வசுந்தராவும். 
திருமணம் என்று கூறியதும் அனைத்து பெண்களும் தோன்றும் இயல்பான வெட்கமே மஹாவிற்கு தோன்றியதே தவிர, அதன் மேல் கொண்ட ஈடுபாடினால் அல்ல என்று அங்கிருந்த யாரும் அதை உணரவில்லை….
பின் அனைத்தும் அதன் போக்கில் வேகமாக நடக்க, ஒரு வாரம் கடந்த நிலையில் ஓர் வெள்ளிக்கிழமை அன்று பெண் பார்க்கும் படலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் விதியின் விளையாட்டில் மாப்பிள்ளை, பெண் பார்க்கும் படலம் ஓர் நாள் முன்பாகவே நடந்தேறியது அவர்களுக்கு ஷாப்பிங் காம்பிளக்ஸில். 
தங்கள் நினைவில் பயனித்துக் கொண்டு இருந்தவர்களின் கார் பயணமும் அவளது ஹாஸ்டல் அருகில் வந்து விட, அவள் அவசரமாக காரை நிறுத்த சொல்ல. தன் நினைவில் இருந்தவன் முதலில் புரியாது அவளை கேள்வியாக நோக்கியவன், பின் சாலையின் ஓரமாக காரை நிறுத்தி அவள் புறம் திரும்பினான்….
இப்ப எதுக்கு நிறுத்த சொன்ன….?” நிதானமாக நினைவின் ஓட்டத்தில் காரை  ஓட்டிக் கொண்டு இருந்தவனை அதிரெடியாக கலைத்த அவளது பேச்சில் எரிச்சல் வர அதை வெளிக்காட்டாமல் பல்லை கடித்து கொண்டு பொருமையுடன் கேட்க
அவனது கேள்வியையும், எரிச்சலையும் சிறிதும் பொருட்படுத்தாமல் சாலையின் இருபுறமும் யாரேனும் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டபடி, ” நான் இங்கே இறங்கிக்குறேன்…..என்றவளின் பதிலில் கோபம் வர,  இறங்க போனவளின் கைப்பிடித்து தன் புறம் திருப்பியவன் மேல் பட்டும் படாமல் மோத நேர்ந்தது அவளுக்கு.
அடுத்த சில நொடிகள், விழிகள் நான்கும் சிறு கவி பாட, ஒருவர் மூச்சு காற்றை இன்னொருவர் பகிர்ந்து கொண்டிருந்த அந்த ஏகாந்த வேளையில், அதை கலைக்க நந்தியின் வேலை புரிந்தது அவனது அலைபேசி. பின் இருவரும் தங்களின் நிலை அறிந்து பிரிந்து தங்கள் இருக்கையில் அமர்ந்தனர் அவசர கதியில்.
இடது கையால் தன் தலையை கோதி சம்மன் செய்ய அவன் முயற்ச்சிக்க அதில் ஓர் அளவு வெற்றியும் கண்டவன் அவளை திரும்பி பார்க்க, அவனது விழிகள் கோபத்தை மறந்து  ரசனையுடன் அவளது மதி முகத்தையும் செய்கையும் ரசிக்க தோன்றியது.
அவனிடம் இருந்து பிரிந்தவள் அவனின் நெருக்கமும், ஏகாந்த இரவு சுழலும் அவளை நிலை கொள்ளாமல் இருக்க செய்து அவஸ்தை செய்ய….. தன்னை நிலை படுத்திக் கொள்ள தலை கவிழ்ந்து பற்களால் தன் உதட்டை கடித்து, தன் நடுங்கும் கைகளால் தன் ஷாலின் நுனியை திருகியபடி அமர்ந்து இருந்தவளை அள்ளி எடுத்து அணைத்து கொள்ள தூண்டிய கைகளையும், மனதையும் அடக்கும் பொருட்டு காரின் ஸ்டேரிங்கை இறுக பற்றியவன், 
பின் இருக்கும் நிலையை எண்ணி, ” இன்னும் கொஞ்சம் தூரம் போனா கேட்(gate) வந்துரும் …..இப்ப எதுக்கு இங்கே இறங்குற? ” மனதில் புகுந்த கல்லதனத்தால் குரலில் மென்மையும், விழிகளில் ரசனையை சுமந்துக் கொண்டு கேட்டான் நந்தன்.
அவனது விழி மொழியையும், குரல் மென்மையையும் உணராமல் , “லூசாபா நீ….என்று சந்தேகமாக அவனிடமே கேட்டு அவனது கோபதிற்கு தண்ணீர் ஊற்றினாள் தன்னை அறியாமல்…
ஏய்…. என்ன டி திமிரா….?”நந்தன்  பல்லை கடித்து கொண்டு கேட்க,
இல்ல கொழுப்பு…..நக்கலாக பதில் அளித்ததும் அல்லாமல் ஈஈஈ என இழித்தும் வைத்தாள். 
ஏய்….. கொசுக்குட்டி….ஒரு விரல் நீட்டி கோபத்தில் முகம் சிவக்க அவன் கர்ஜிக்க, அதில் லேசாக ஜர்க்கு ஆனவள் அதை வெளிக்காட்டாமல் பெருந்தன்மையாக,
சரி… சரி…. என்னை டென்ஷன் பண்ணாம என்ன வேண்ணும்னு சொல்லுங்க…..என்று கூலாக கூறியவளை பார்த்து கோபம் தலைக்கு ஏற அவளை உறுத்து பார்த்து வைத்தான்….
ஆஹா…. காண்டாமிருகம் டென்ஷன் ஆகி, விடுற மூச்சு காத்துல நான் பறந்து போய் ரூம்ல விழுந்துருவேன் போல…. பேபி மா அடக்கிவாசி….ஓர விழியில் அவனை பார்த்துவிட்டு மனதில் அவளது GMயை கொஞ்சியவள்.வெளியே,
ஏதோ கேட்டீங்களே…. என்னது…..?” தாடையில் கைவிரல்களால் தட்டியப்படி யோசனை செய்வது போல் பாவனை செய்யவும், “ஏய்….. உன்னை…..” என்றவாறு அவள் புறம் சரிந்தவனை கண்டு அதிர்ந்தவள், கார் கதவோடு பல்லி போல் ஒட்டி கொண்டு மருண்ட விழியால் விழிக்க,
 அவன் தன் இடது கையை அவளது சீட்டின் சாய்விலும், வலது கையை காரின் டேஷ் போர்டிலும் வைத்து அவள் முகத்திற்கு அருகில் நெருங்கி அமர்ந்து இருந்த விதம், அவளை சிறை செய்து வைத்தது போல் இருந்தது மஹாவிற்கு. அவனது நெருக்கத்தில் அவளுக்கு மூச்சு முட்டுவது போல் உணர்ந்தவள் இதில் இருந்து விடுபட
ரொம்ப டைம் ஆச்சு…. கேட் (gate)ல உங்க கூட போய் இறங்குனா தேவையில்லாத பிரச்சினை வரும்….. அதான் நான் இங்கேயே இறங்கிக்குறேன்னு சொன்னேன்….மிக மெல்லிய குரலில் கண்களை படபடவென சிமிட்டி, எச்சிலை விழுங்கி உடம்பில் உள்ள அனைத்து சக்திகளையும் கூட்டி கூறியவளை பார்த்து நமட்டு சிரிப்பை உதிர்த்தவனை கண்டு விழிகளை தாழ்த்தி கொண்டாள் மஹா. 
அவனது அருகாமையில் தான் பலவீனம் ஆவதை நன்கு உணர்ந்து இருந்த மஹாவிற்கு, தன் நிலையை எண்ணி மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொள்ள, ‘ வர… வர… நீ சரியே இல்ல…. உன் தைரியம் எல்லாம் எங்க போச்சு மஹா…. காக்கா தூக்கிட்டு போகுற அளவுக்கு விட்டுட்டியா…? லூசு…. லூசு…மனதில் தன்னை தானே திட்டிக் கொண்டு இருந்தவளை அவனது குரல் நடப்புக்கு இழுத்து வந்தது….
ஹாஸ்டல் போர யோசனை இருக்கா, இல்லையா…? இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்க போற?” என்றவனை முறைத்துப் பார்த்தவள் பின் வாயில் அளவம் காட்டி விட்டு காரை விட்டு இறங்கினாள். 
அவளது பதிலில் நமட்டு சிரிப்புடன் தன் சீட்டில் சீராக அமர்ந்து அவளது முக பாவனையை ரசித்து கொண்டு இருந்தவனுக்கு புரிந்தது, தன்னை மனதில் அர்ச்சனை செய்துக் கொண்டு இருக்கிறாள் என்று. ‘ஸ்ரீ…. ‘ மெல்லியதாக அவளது பெயரை உச்சரித்துப் பார்த்தவன், உதட்டில் புன்னகையுடன் கார்விட்டு இறங்கும் அவளேயே பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்.
 
காரை விட்டு இறங்கியவள் சாலையின் இருபுறமும் திரும்பி பார்த்து யாரும் இல்லாததை உறுதி செய்துக் கொண்டு. சாலையின் மறுபுறம் சென்றவள், சிறிது தூரம் நடக்க மீண்டும் கண்களை சுழற்றி, குனிந்து பெரிய கல்லை தூக்கி ஹாஸ்டல் காம்பொன்ட்டு சுவற்றின் அருகில் வைத்தவள், மேலும் இரண்டு கற்களை அவ்வாறே அடுக்க, மஹா கேட்டின் (gate) உள்ளே செல்லும் வரை காத்திருக்க முடிவு செய்தவன் அவளின் இச்செயலை புரியாது பார்த்தவன், காரை விட்டு இறங்கி அவளை நோக்கி நடக்க ஆரம்பித்த சமயம், மஹா அந்த கற்களின் மேல் ஏறி நிற்கவும்,
ஏய்…. கொசுக்குட்டி என்ன பண்ணுற?” சந்தேகமாக கேட்க, அவனது கேள்வியில் பதறி போய் திரும்பியவள் தடுமாறி கீழே விழ போனவளின் இடையில் கை வைத்து அவன் தாங்கி பிடிக்க, அதேநேரம்  கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் அவனது தோள்களை பிடிமானத்திற்கு பிடித்துக் கொண்டாள்.
அவளது இடையினை பற்றி குழந்தையை இறக்குவது போல இறக்கியவனின் விழிகள் அவளை காதலுடன் பார்க்க, அவளோ அவனது கைகள் படர்ந்த இடத்தை உணர்ந்து படபடப்புடன் பார்த்தவள் அவனது காதல் பார்வையை உணர தவறினாள்.
ஆம் நந்தனின் மனதில் காதல் என்னும் மொட்டு ஒன்று உருவானது மெல்ல. அவளது தடுமாற்றம்  , அவள் தன்னிடம் தன்னிலை இழக்கும் நிலை, தன்னிடம் சரிக்கு சமமாக வாதாடுவது, அவளது சிறுபிள்ளை தனம், அவளது பாவனைகள், அவளது வேலைக்கு செல்ல வேண்டும் என்ற சுய கௌரவம் என முற்றிலும் அவளிடம் தன்னை இழந்தான் நந்தன். 
படபடப்பில் அவனிடம் இருந்து மெல்ல விலக  முயற்சித்தவளின் எண்ணம் புரிந்து அவன் தன் கைகளை விலக்கி கொள்ளவும்… தன் தோள் பற்றி இருந்த கைகளை சட்டென விலக்கி கொண்ட மஹாவை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன். 
என்ன பண்ணுற நீ? கேட் வழியா போகாம இது என்ன வேலை?” குரலில் கடினத்தை காட்டி கேட்கவனை நிமிர்ந்து பார்த்தவள்,
டைம் 8.45 ஆச்சு….தலை குனிந்து மெல்லிய குரலில் அவள் கூற,
அதுக்கு….?”
அவனை ஓர் பார்வை பார்த்துவிட்டு, ” இப்ப கேட் வழியாக போனால் எங்க போன? ஏன் லேட்? யாரு கிட்ட பிர்மிஷன் வாங்கின? அப்படின்னு கேள்வி மேல கேள்வி கேட்டு வார்டன் சிபிசிஐடி விசாரணை நடத்தும். அதான்…..ஷாலின் நுனியை திருகியவாரு மெல்லிய குரலில் இழுக்க,
அதனால்……சந்தேக பார்வையுடன் நெற்றியை சுருக்கி கேட்க,
அதான் இப்படி சுவர் ஏறி குதிச்சு போய்ட்டா யாருக்கும் தெரியாது. சத்தம் போடாமல் அப்படியே எஸ்ஸாகி ரூம்க்கு போய்ருவேன்…..என்று கண்களை உருட்டி கூறியவளின் பாவனையில் முற்றிலும் தொலைந்து போனான் நந்தன்.
அவளை மேலும் மேலும் அணைக்க துடிக்கும் கையை அடக்கும் பொருட்டு பேன்டு பாக்கேட்டில் கைகளை நுழைத்து கொண்டு அவளை உற்று நோக்கியபடி, ” இப்ப நான் பிடிக்காமல் இருந்து இருந்தா கீழே விழுந்து கை,காலை  உடைச்சு இருப்ப….அவளை கீழே விழாது காத்த கர்வத்துடன் அவன் கூற.
லூசு காண்டாமிருகம்…. நீ சத்தம் போடாமல் இருந்து இருந்தா நான் கீழே விழுகிற மாதிரி போய் இருக்க மாட்டேன்….. எல்லாம் உன்னால தான்…அவனுடன் சண்டைக்கு நின்றவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டவன்,
எல்லாம் எனக்கு தேவைதான்…. கீழே விழுந்தா விழட்டும்னு விட்டு இருக்கணும்…. தப்பு தான் உன்னை விழாமல் பிடிச்சது தப்புதான்…..பொய்யாக சளித்துக் கொண்டவன், ” இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிக்குறதா ஐடியா மேடம்…என்று கேள்வி எழுப்ப,
ஐயோ…. ஆமால…. டைம் ஆச்சு….தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் கற்களின் மேல் ஏறியவள் ஏதோ தோன்ற அவனை திரும்பி பார்த்து,
எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா….?” என்று சிறு குரலில் கேட்டவளை,
என்னஎன்பது போல் பார்த்தவனை, ” நான் காம்பொன்டுக்கு அந்த பக்கம் போனதும் இந்த கல்லை எல்லாம் தனித்தனியாக பிரித்து போட்டுறீங்களா ? செக்கியுரிட்டி பார்த்தா பிரச்சினை ஆயிரும்…. பிளீஸ்…..முகத்தை  சுருக்கி கெஞ்சலாக கேட்டவளை ஆசையாக பார்த்தவன். அவனது சம்மதம் இன்றி அவனது தலை சரி என்று ஆட. 
 சிறு புன்னகையுடன் அதை ஏற்றவள் திரும்பி லாவகமாக காம்பௌன் சுவற்றில் ஏறி, அவனை திரும்பி ஓர் பார்வை பார்த்துவிட்டு ஹாஸ்டலின் உட்புறம் தாவ, அவள் பத்திரமாக தரை இறங்கியது போல் நந்தனுக்கு கேட்கவும்… அவள் கூறியது போல் செய்தவன் மீண்டும் தன் காரில் வந்து அமர்ந்து தன் நிலையை எண்ணி நெற்றியை தேய்த்துக் கொண்டே,
கொசுக்குட்டி சுவர் ஏறுனதை பார்த்தா பல நாள் பழக்கம் போல…. ரௌடி ரௌடி….என்று வாய் விட்டு கூறியவன்,” நான் போய் அவ சொன்னானு கல்லை தூக்கி போட்டுட்டு வந்தேன் பாரு… அடேய் நந்தா இது சரி இல்ல…என்று தன்னை தானே திட்டியவன். காரை தன் வீட்டை நோக்கி செலுத்தினான். 



கண்டிசன்ஸ் தொடரும் …….
 

Advertisement