Advertisement

UD:12
உறவினர் ஒருவர் திருமணத்திற்க்காக சென்னை வந்து இருந்தார் ராமன். திருமணம் அங்கு உள்ள ஒரு பிரபல முருகன் கோவிலில்  நடக்கவிருந்தது.
கோவிலுக்கு சென்று திருமணத்தில் கலந்துக் கொண்ட பின்னர் அப்படியே ஊருக்கு திரும்புவதாக முடிவு செய்திருக்க… திருமணம் முடிந்து கிளம்பும் நேரத்தில் பத்மாநந்தனை காண நேர்ந்தது ராமனுக்கு. ஜெயராமனும், பத்மாநந்தனும் பாலியசிநேகிதர்கள். ஓர் அழகிய ஆழமான நட்பு அவர்களுக்கு நடுவில் வளர்ந்து இருந்தது பல வருடங்களாக…. இப்பொழுது எதிர்பாராத விதமாக பத்மாநந்தன் ராமனை கண்டதில் தன் கவலையை மறந்து நண்பனுடன் பேச தொடங்கியிருந்தார்.
எப்படி பா இருக்க? வீட்டுல தங்கச்சி, பிள்ளை எல்லாம் எப்படி இருக்காங்க? உன் வேலை எல்லாம் எப்படி போகுது? எப்ப சென்னை வந்த? ” நண்பனை கண்ட மகிழ்ச்சியில் கேள்வியை அடுக்கி கொண்டே போக….
அவரது கேள்வி கனைகளை சிரிப்புடன் கேட்டு கொண்டு இருந்த ராமனை என்னவென்று பத்மாநந்தன் கேட்கவும், ” ஒன்னும் இல்லை பா… நீ இன்னும் மாறவே இல்லை…. “என்க, மனதில் பொங்கிய மகிழ்ச்சியை தங்கள் அணைப்பின் மூலம் பரிமாற்றி கொண்டனர் இருவரும்…. பின் ராமன்,
நான் நல்லா இருக்கேன் பா. வீட்டுலையும் நல்லா இருக்காங்க. ரொம்ப நெருங்கிய சொந்தத்தில் ஒரு கல்யாணம் இந்த கோவில்ல, தவிர்க்க  முடியல. அதான் வந்தேன் இப்ப கிளம்பிருவேன்……என்று ராமன் கூறும்போது இடைபுகுந்தார் பத்மாநந்தன்.
என்னது உடனே கிளம்புறியா? அது எல்லாம் ஒன்னும் வேண்டாம். பேசாம வா வீட்டுக்கு போலாம். ஒரு நாள் தங்கி இருந்து சாப்பிட்டு போலாம்….என்றவரை மறுத்தார் ராமன்.
இல்லப்பா பத்தா….  இன்னொரு நாள் குடும்பத்தோடு வரேன். இன்னைக்கு என்னால முடியாது ஊர்ல வேலை நிறைய இருக்கு. இந்த கல்யாணத்தை தவிர்க்க முடியாதேனு தான் வந்தேன்… அது சரி இங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்கீங்களா… தம்பி என்ன பண்ணுறாங்க…?”  
“ம்ம்ம்….” என்றவர், “ சரிப்பா….. இன்னொரு நாள் கண்டிப்பா வரணும்… இல்ல…. உன் தங்கச்சி என்னை வீட்டுல சேர்க்க மாட்டா…என்று கூறி சிரித்தவர் , ” வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்க பா… தம்பி படிப்ப முடிச்சுட்டு தொழிலை எடுத்து நடத்திட்டு இருக்கான். நான் வீட்டுல நிம்மதியா ஓய்வெடுக்குறேன்….என்று தன் மீசையை நீவி விட்டப்படி தன் மகனை பற்றி பெருமையாக கூற அதை தலையசைத்து சிறு புன்னகையுடன் கேட்டு கொண்டார் ராமன்.
பின் சில நொடிகள் அமைதி நிலவ, நண்பனை திரும்பிப்  பார்த்த ராமன் அவர் முகத்தில் தெரிந்த வேதனையின் சாயலை கண்டு என்னவென்று கேட்டதற்கு
தம்பிக்கு ஜாதகத்தில் ஏதோ தோஷமாம். அடுத்த வருசத்துக்குள்ள கல்யாணம் பண்ணலைனா இனி அவனுக்கு 30வயசு கழிச்சு தான் கல்யாணம் நடக்குமாம். சரி இப்பவே கல்யாணத்தை பண்ணிரலாம்னு பார்த்தா, யார பார்த்தாலும் பிடிக்கலைனு சொல்லுறான். அவன் அம்மா வேற கவலை பட்டுடே இருக்கா…. அதான் கொஞ்சம் கவலையா இருக்கு பா….தன் மனவேதனையை நண்பனிடம் கொட்டியவர் எங்கோ வெரித்தப் படி இருந்தார்.
ஏன் பிடிக்கலையாம்? தம்பிக்கு ஏதாச்சும் காதல்னு …..  “சொல்ல வந்ததை முடிக்காமல் அவர் இழுக்க, நண்பன் கூற வருவது புரிய, “அப்படி இருந்தாலாச்சும் அவன் இஷ்டப்படி கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தா அதுவும் இல்லையாம். கேட்டு பார்த்தாச்சு ராமா… அவனுக்கு ஏனோ எந்த பொண்ணும் பிடிக்கல…. பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாம அழைஞ்சுட்டு இருக்கோம்…என்று கவலை தோய்ந்த குரலில் கூற இருவரும் யோசனையில் ஆழ்ந்தனர். 
பின் நண்பர்கள் இருவருக்கும் மனதில் ஓர் நினைவு வரவும், சட்டென்ன ஒருவரையொருவர் பார்க்க, ” ராமன் எனக்கு தோன்றியது தான் உனக்கும் தோணுச்சா…? ” என்று கேட்டவருக்கு ஆம்என்பது போல் தலை அசைக்க, நிம்மதியான பெருமூச்சொன்றை வெளியிட்டனர் நண்பர்கள் இருவரும்….
பாப்பா என்ன பண்ணுறா ராமன்? சின்ன வயசுல பார்த்தது….என்று அவரின் மகளின் சிறுவயது முகத்தை நினைவில் நிறுத்தி புன்னகை  புரிந்தவர், ” ரொம்ப சுட்டி இல்ல, துருதுருனு ஓடிட்டே இருப்பா….என்க,
இப்பவும் அப்படியே தான் இருக்கா பத்தா…. ம்ம்ம்…. காலேஜ் என்ஜினீயரிங் கடைசி வருடம் படிக்குறா….என்றவர் மேலும் மகளின் அருமை பெருமையை பற்றி கூற, இருவரும் அவர்களின் பிள்ளைகளின்  ஃபோட்டோ வை பறிமாறிக் கொண்டனர்.
பின் வீட்டில் பேசி சம்மதம் வாங்கி அடுத்து என்ன செய்வது என முடிவு செய்யப்பட்டது. பத்மாநந்தன் அவர் மனைவியிடம் கோவிலில் நண்பனை கண்டது, அவரது மகளுக்கும் தங்கள் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பியதையும் கூறி ராமனின் மகளது ஃபோட்டோவை காட்டினார். கார்த்திகாக்கும் இந்த சம்பந்தம் பிடித்துவிடவே மகனிடம் இதை பற்றி பேச வேண்டும் என முடிவு செய்தார். அன்று இரவு அலுவலகத்தில் இருந்து வந்த  மகன் உணவு உண்ண வரும் போது இதைப் பற்றி பேச முடிவு செய்தனர். 
நந்தன் உணவு உண்ண அமர்ந்ததும் கார்த்திகா பத்மாநந்தனுக்கு கண் ஜாடை காட்டி பேசுமாறு சைகை செய்ய, பொரு என்பது போல் கண்களை மூடி திறந்தவர் மகனிடம் பேச வாய் திறக்கும் முன்,
என்ன அப்பா விஷயம்….?” சாப்பிட்டு கொண்டே கேட்க,
மகன் அவ்வாறு கேட்டதும் தந்தைக்கும், தாயிக்கும் உற்சாகம் வர, காலையில் நடந்த அனைத்தையும் கூறி அவனுக்கு சம்மதமா என்று கேட்டார் பத்மாநந்தன்.
தந்தையும், தாயும் தன் திருமணத்திற்காக படும் கஷ்டம் தெரிந்துதான் இருந்தது நந்தனுக்கு, இருப்பிணும் ஒவ்வொருமுறை  அவர்கள் பார்த்த பெண்ணை பற்றி கூறும் போது அவள் தனக்கானவள் என்று இதுவரை உணர்ந்தது கிடையாது. ஆகையால் அவர்கள் கூறும் பெண்ணிற்கு தன் விருப்பம்மின்மையை காட்டி வந்தான்.ஆனால் இன்றோ எதுவும் கூறாது   உணவை அளந்தவாரே யோசிக்க தொடங்கினான். ஜெயராமனை பற்றி நந்தனுக்கு தெரியும் தந்தையின் பாலிய சிநேகிதர் என்று ஆதலால் சிறிது யோசித்து விட்டு பெயர் என்னவென்று கேட்க, பத்தாவும், கார்த்திகாவும் ஙேஎன்று விழிக்க…. அவர்கள் விழிப்பதை பார்த்து புன்னகைத்தவன்,
உங்க மருமக பெயர் கூட சொல்லாமல் எப்படி பா…? அவ்வளவு டாப் சீக்ரெட்டா என்ன….?” தன் விருப்பத்தை மறைமுகமாக சொல்லியவன் எழுந்து கை கழுவ செல்ல அதன் பின்னரே இருவருக்கும் தங்கள் மகன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னது புரிந்து மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றனர். 
நந்தன் வளர்ந்ததும், வளர்வதும் ஒரு கூட்டு குடும்பத்தில், விழா நாட்கள் என்றால் சிறுவர்களால் வீடு இரண்டாகி விடும், கலகலப்புக்கு குறை என்பது சிறிதும் இருக்காது. நந்தனுக்கு தொழிலும், குடும்பமும் இரு கண்கள் போல், எதற்கும் யாருக்காகவும் இந்த இரண்டையும் விட்டு கொடுக்க மாட்டான். தனக்கு பார்த்த அனைத்து பெண்ணையும் முதலில் பெண்ணை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் பெண்ணின் குடும்பத்தை பற்றி அறிந்து கொள்வான். திருமணம் புரிந்து இங்கு தன் குடும்பத்தை பிரித்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தான். இன்று ராமனை பற்றி கூறியதும் எதையும் விசாரிக்காது பெண்ணின் பெயரைக் கேட்டதும், தங்கள் மகனை பற்றி அறிந்திருந்ததால் முதலில் அதிர்ந்தவர்கள் பின் சுதாரித்து,
மஹஸ்ரீ ….என்று கார்த்திகா கூற, கை கழுவி கொண்டு இருந்தவன் கைகள் ஒரு நொடி தன் செயலை நிறுத்தியது.
ஏன் என்று தெரியாமலே நந்தனின் மனதில் முகம் தெரியாத அவளின் மீது ஒரு ஈர்ப்பு உருவானது அவள் பெயரினால். மெதுவாக அவளது பெயரை உச்சரித்து பார்த்தவன் சிறு கீற்றாக புன்னகையை புரிந்தான். பின் தன் பெற்றோரிடம் தனக்கு சம்மதம் என்று கூற, ஃபோட்டோவை காட்ட வந்த தன் தந்தையிடம் வேண்டாம் என மறுத்தவன்
இல்ல பா…. நான் நேரில் பார்த்துக்குறேன்…. ஃபோட்டோ வேண்டாம்…மகன் மறுத்ததும் இருவரும் பயம் கலந்த கவலையுடன் அவனை பார்த்தனர். ஏன்னென்றால் நேரில் பார்த்த பின்பு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டால் என் செய்வது என்று பயந்தனர்.
அதை புரிந்துக் கொண்ட நந்தன், ” அப்பா, அம்மா இந்த ஜென்மத்தில் அவதான் என் மனைவி அதுனால நீங்க பயபட வேண்டாம்…. நான் நேரில் பார்த்துக்குறேன் பிளீஸ்….என்று கூறியவன் வேறு எதுவும் கூறாது தன் அறையை நோக்கி வேக எட்டு வைத்து ஓடியவன் முகம் பிரகாசமாக இருக்க புன்னகையுடன் படி ஏறினான்.
அவன் புன்னகையுடன் செல்வதை பார்த்து கொண்டு இருந்தவர்களின் முகத்திலும் மகிழ்ச்சி படர…, மனநிறைவுடன் நாளை இதை பற்றி ராமனிடம் பேச வேண்டும் என்ற முடிவுடன் தங்கள் அறைக்கு சென்றனர்.
நந்தனோ, பால்கனியில் நின்று இடது கையால் தன் தலையை கோதி வலது கையால் தடுப்பு சுவரை பற்றிக் கொண்டு  அவளின் பெயரை உச்சரித்து, எப்படி இருப்பாள் தன் குடும்பத்தோடு ஒத்து போவாளா என்ற சிந்தனையில் அழகாக மூழ்கி இருந்தான்.
ராமன், வீடு வந்து சேர்ந்ததும் வசந்தா விடம் அனைத்தையும் கூறி என்ன செய்வது என்று யோசனை கேட்க,
எனக்கு சம்மதம்ங்க…. எப்படியும் அவளோட இந்த வருஷம் படிப்பு முடிஞ்சு கல்யாணம் பண்ணி வைக்க தான் போறோம். அதுக்கு கார்த்திகா அண்ணி பையனுக்கே கொடுக்கலாம்… தெரியாத யாருக்கோ பொண்ணை கட்டி வைக்குறதுக்கு தெரிஞ்ச இடத்துல கட்டி கொடுக்கலாம்…..ஆனாலும் மஹா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்…. அவ சம்மதம் முக்கியம் இல்லையா…?மனைவி கூறியதை கேட்டு சரி என்பது போல் தலை அசைத்தவர் மகளின் விடுமுறை நாளின் வரவுக்காக காத்து இருந்தார்.
காலை பொழுதில் பத்மாநந்தன் குடும்பம் சாப்பாட்டு மேசையில் குழுமி இருந்தது. பத்மாநந்தனின் அண்ணன், தம்பி மற்றும் நந்தன் அலுவலகம் செல்லவும், சிறியவர்கள் கல்லூரி செல்லவும், அன்னைமார்கள் அவர்களுக்கு உணவை பரிமாறிக் கொண்டு இருக்க. பத்மாநந்தன் தன் மகன் நந்தனுக்கு பெண் பார்த்து இருப்பதையும் அதற்கு அவன் சம்மதம் தெரிவித்ததையும், இனி மேற் கொண்டு பேச போவதையும் கூறினார். அதற்கு அனைவரும் நந்தனுக்கு வாழ்த்து தெரிவித்து அவனை கிண்டல் செய்து ஒருவழி ஆக்கி விட்டனர். 
பின் பத்மாநந்தன் ராமனை அழைத்து விஷயத்தை கூற, ராமன் தன் மகளின் வரவுக்காக காத்திருப்பதாகவும் வீட்டில் தங்களுக்கு சம்மதம் என்று கூறவும் அனைவரும் மஹாவின் வருகைக்கு காத்து இருந்தனர்.
அந்த வார விடுமுறையில் மஹா வீட்டிற்கு வர, மகளுடன் கோவிலுக்கு சென்றவர்கள் சாமி தரிசனம் முடித்து படிகளில் அமர்ந்து இருக்கும் போது மெதுவாக நந்தனை பற்றி கூறியவர்களுக்கு  பதில் எதுவும்  கூறாமல் ஏதோ யோசனையில் இருந்தாள் மஹா. 
ஜெயராமனும், வசுந்தராவும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு மகளின் புறம் திரும்பினர். இருவரும் மகளை தங்களின் விருப்பத்திற்காக கட்டாய படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
 
தன் நினைவில் உழன்றுக் கொண்டு இருந்த மஹாவின் தோளில் கை வைக்க. அதில் நினைவிற்கு வந்தவள் திரும்பி தன் பெற்றோரை பார்த்து லேசாக புன்னகைத்து மீண்டும் அமைதி காத்தாள். அவளின் அலைபுறுதலை புரிந்து கொண்ட வசுந்தரா மகளின் முகத்தை தன்னை பார்க்கும் வண்ணம் திருப்பியவர்,
உன் மனசுல எதையாச்சும் போட்டு கொழப்பிக்காத மஹா. உனக்கு இஷ்டம்னா தான் இதை பற்றி மேற்கொண்டு பேசுவோம். நீ வேண்டாம்னு சொன்னா விட்டுறளாம்…… எங்களுக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம் டா கண்ணா….அவளின் முகத்தில் விழுந்த முடி கற்றையை ஒதுக்கிய வாரே கூறியவறை பார்த்து சினேகமாக புன்னகைத்தவள்,
எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேண்ணும் ம்மா பிளீஸ்….” என மெல்லிய குரலில் கூற,
தாராளமா யோசி மா…. இது உன்னோட வாழ்க்கை நீ தான் முடிவு பண்ணனும்….புன்னகையுடனே அவரும் பதில் அளிக்க,
சற்று ஆசுவாசமானவள், இருவருடனும் வீட்டிற்கு கிளம்பி சென்றாள். அன்று முழுவதும் யாருடனும் எதுவும் பேசாது அமைதியே உருவாக வலம் வந்தவளை யாரும் எதுவும் கூறாது பார்வையாளர்களாக இருந்தனர்.
இதுவரை வீடு, தோழிகள்,படிப்பு, ஹாஸ்டல், அரட்டை என்று சுதந்திரமாக சுற்றி வந்தவள், திருமணம் என்பதை பற்றி எள்ளளவும் சிந்திக்காதவளின் வாழ்வில் திடிரென்று திருமணத்தை பற்றி பேசவும் முற்றிலும் குழம்பி, அடுத்து என் செய்வது என்று புரியாமல் தன்னுக்குள் புலம்பிய படி வீட்டை அளந்தாள் மஹா. 
வாழ்கையின் அடுத்த கட்டத்தில் இருப்பதை உணர்ந்தவளுக்கு, எப்படி பட்ட தீர்மானத்தை எடுப்பது என்று சுத்தமாக புரிப்படவில்லை. அதே யோசனையில் சுற்றிக் கொண்டு இருந்தவள் பெற்றோரின் அறையை கடக்கும் போது அவர்களின் சம்பாஷனை மஹாவின் காதில் விழ, கால்கள் அவ்விடத்தை விட்டு நகராது அங்கேயே நின்று அவர்கள் பேசியதை கேட்க செய்தது …
வசுந்தரா பேசாம பத்தா கிட்ட இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிடலாமா….?” வருத்தம் தோய்ந்த முகத்துடன் தன் மனைவியிடம் வினவ
ஏங்க அப்படி கேட்குறீங்க….?” முகம் சந்தேகத்தை பிரிப்பளித்தது. ஏனெனில் இந்த திருமணத்தை பெரிதும் தன் கணவர் விரும்பியதை அறிந்தவர். அவ்வாறு இருக்க இப்பொழுது வேண்டாம் என்று கூற காரணம் என்னவாக இருக்கும் என சந்தேகம் தோன்றியது அவருள். 





Advertisement