Advertisement

UD:11
விடிந்த பின்பும் எழ மனமில்லாமல் படுக்கையில் புரண்டுக் கொண்டு இருந்தவளின் மனமோ அவனை பற்றிய நினைவில் நிலைபெற்று இருந்தது.
 
வெகு நேரமாக அவளை பார்த்தும் பார்க்காதது போல் தங்கள் வேலையில் முனைப்பாய் இருந்த சந்தியாவும், ரம்யாவும் தங்களுக்குள் ஓர் அர்த்த பார்வையை பரிமாற்றிக் கொண்டனறே தவிர வாய் திறந்து என்னவென்று கேட்கவில்லை…. 
 
மேலும் அரை மணி நேரம் கடந்ததே தவிர தன் படுக்கையை விட்டு எழும் யோசனையே இல்லாதது போல் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து மிக தீவிரமான ஆலோசனையில் இருந்தாள் மஹா. 
 
நேத்து அவன் கிட்ட பேசியது சரியா? நாம எடுத்த முடிவு சரிதானா? நான் ஒரு முடிவு பண்ணி வச்சு இருந்தேன்.. இவன் என்னை குழப்பி விட்டு, இப்படிவேற  முடிவு எடுக்க வச்சுட்டான்னு நினைக்குறேன்…. ஆனா அவன் ஏன் அப்படி பண்ணனும் ? ஒரு வேலை அவனுக்கு என்னை பிடிச்சு இருக்கோ?’ என்று யோசித்துக் கொண்டு இருந்தவள் நந்தனுக்கும் தன் மேல் விருப்பம் இருக்குமோ என்று தோன்றியதும் பட்டென்ன படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் முகம் பிரகாசமாக….. தொடர்ந்து,
 
ஆனா எப்ப பாரு உர்ருனு தானே இருக்கான்? இல்ல இல்ல காலைல கூட முத்தா வச்சானே…. அப்ப அதுக்கு என்ன அர்த்தம்?’என்று யோசிக்கும் போதே கைவிரல்கள் தானாக மேல் எழுந்து தன் இதழை தொட, அவன் அளித்த இதழொற்றல் நினைவிற்கு வர, ஷாக் அடித்தாற் போல் உணர்ந்து  சட்டென தன் கையை விளக்கி கொண்டவள், “ஆஆஆஆ….. குழப்புறானே… காண்டாமிருகம்…. டேய்..வாய் விட்டு கத்திய வாரே தன் தலையை இரு கைகளால் தாங்கிய படி அமர்ந்து விட்டாள் குழம்பிபோய்….
 
அவளது நிலையை பார்த்துக் கொண்டு இருந்த இருவரும், அவள் செய்யும் பாவனைகளையும் புலம்பல்களையும் பார்த்து முன் தினம் என்ன நிகழ்ந்து இருக்கும் என்று தெரியாமல் அவர்களும் குழம்பினர்.
 
நேற்று அவனுடன் பேசி விட்டு ஹாஸ்டலுக்கு வந்தவள் யாரிடமும் எதுவும் கூறாது படுக்கையில் விழுந்தவளுக்கு மனதின் குழப்பங்கள் அவளது செயல்ப்பாட்டை முடக்கியது….. ஏதோ அவன் தன்னை ஆட்டிவிக்கும் பொம்மை போல் ஒரு பிரம்மை அவளுள்….
 
அவன் மேல் ஒருவகையான ஈர்ப்பு மட்டுமே இருக்க அவனுடனான திருமண பந்தத்தை அவள் சிந்திக்கவே இல்லை….. எதற்காக இத்திருமணத்தை நிறுத்த போராடுகிறோம் என்றே தெரியாமல் தவித்தாள் மஹா. அதற்கான பொய் காரணங்களையும் தேடினாளே ஒழிய தன்னையும் அவனையும் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.
 
நீண்ட நேர ஆராய்ச்சியின் முடிவாக அவளது எட்டாமறிவில் அறிந்துக் கொண்டது ஒன்றை தான், அது தான் திருமண வாழ்க்கையில் அவனுடன் இணைய இன்னும் தயார் ஆகவில்லை என்பது ஒன்றே…
 
அன்று கோவிலில் ஹான்சம் என்ற வார்த்தையில் நந்தனின் முகம் நினைவிற்கு வந்ததில் அதை வெறும் ஈர்ப்பு என்றே    அவள் நினைக்க, அவளே அறியாமல் நந்தன் தன் பின்பத்தை அவள் அடிமனத்தில் பதித்திருந்தான்.
 
தோழிகள் இருவரும் என்னவாயிற்று என்று கேட்டதற்கு ஒன்றும் இல்லை என்று கூறி தன் சிந்தனை என்னும் குழப்பத்தில் தன்னை மேலும் குழப்பி கொண்டு இருந்தவள் தன்னையும் அறியாது உறங்கியும் போனாள். 
 
காலையும் அவளது இந்த யோசனை தொடர, தங்கள் பொறுமையை இழுத்து பிடித்து வைத்து இருந்தனர் சந்தியாவும், ரம்யாவும். அவள் வாய் விட்டு புலம்பவும் இதற்கு மேல் தாங்காது என ரம்யா அவளை நோக்கி முன்னேற சந்தியா அவள் கை பிடித்து நிறுத்தி வேண்டாம் என மறுப்பாக தலை அசைக்க, பெருமூச்சொன்றை விட்ட ரம்யா மெல்லிய குரலில், ” சரிடி நான் அத பத்தி கேட்கல ஆனா காலேஜ்க்கு நேரம் ஆகுது…. இப்படியே அவ மூஞ்ச பார்த்துட்டு வெய்ட் பண்ணிட்டு இருந்தா எப்ப காலேஜ்க்கு போரது?”
 
ரம்யா கூறியதும் அவள் கையை விடுவிக்க, மஹாவின் அருகில் சென்று அவளை அழைக்க.அப்பொழுதும் தன் நிலை மாறாமல் கைகளால் தலையை தாங்கியபடி அமர்ந்து இருந்தாள் மஹா.
 
அவள் முதுகில் ரம்யா ஒன்று போட, ” ஹே…. லூசு ஏன் டி அடிச்ச….” 
 
தன் கைகளை வளைத்து முதுகை தேய்த்தப்படி மஹா கேட்க,
 
ம்ம்ம்…. முதுகுல ஏதோ தூசி இருந்துச்சு அதான் தட்டி விட்டேன்என்றவளை முறைத்து பார்த்த மஹாவை
 
சும்மா முறைக்காத காலேஜ்க்கு போற எண்ணம் இருக்கா இல்லையா…?” கடுப்புடன் ரம்யா கேட்கவும்,
 
அப்பொழுது தான் காலேஜிற்க்கு நேரமாவதை உணர்ந்தவள். பின் 15 நிமிடத்தில், தான் தயாராகி வருவதாக கூறி அவசரமாக குளியலறை நோக்கி சென்றாள் மஹா. 
 
சொன்னது போல் வந்தவளை இருவரும் முறைக்க, ” சாரி டி பக்கீஸ்…. ஏதோ யோசனையில் இருந்துட்டேன்…… முறைக்காதீங்க டி…. போலாம் போலாம் நேரம் ஆச்சு….” 
 
ஒருவழியாக சமாதானம் செய்து இருவரையும் வெளியே அழைத்து வந்தவளுக்கு மெஸ்ஸில் இருந்து கேசரி வாசனை வர, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தோழிகளை பார்த்தவளின் வாயிற்றுக்குள் பூணை ஒன்று ஓடும் உணர்வு.
 
முன்தினம் நந்தனுடன் பேசி முடித்ததும் நேரமாவதை உணர்ந்து உண்ணாமல் வந்தவள், அறைக்கு வந்து குழப்பத்தில் இருக்க தன்னையும் அறியாது உறங்கியும் போனாள்…..
 
இப்பொழுது அவளது முகபவனையை யுகித்தார் போன்று அவளுக்கு துனை நின்றாள் ரம்யா. என்னவென்று சந்தியா இருவரையும் கேள்வியாக பார்க்க,
 
பாவம் டி மஹா… பசிக்குது போல…..5 நிமிஷம் தான் சாப்பிட்டு போலாம் டி….பக்கத்து இலைக்கு பாயாசம் என்பது போல் ரம்யா கேட்க தன் நெற்றியில் அறைந்து கொள்ள மட்டுமே முடிந்தது சந்தியாவிற்கு….
 
பின் மூவரும் வேகமாக உண்டு விட்டு காலேஜை நோக்கி தங்கள் வண்டியில் செல்ல மஹாவின் எண்ணங்களோ நந்தனையை சுற்றி வந்தது. இதே நிலைமை வகுப்பிலும் தொடர, நொந்தே போனாள் மஹா. எவ்வளவு போராடியும் தன் சிந்தனையை கட்டுபடுத்த முடியாமல் நந்தனிடமே இறுதியில் வந்து நின்றன…. 
 
அவளது அவஸ்தையை பார்த்துக் கொண்டு இருந்தாலும் தோழிகள் இருவரும் ஏதும் பேசாது அமைதி காத்தனர் சூழ்நிலை காரணமாக…. மதிய உணவு இடைவேளையின் போது இதை பற்றி பேசி கொள்ளலாம் என்ற முடிவோடு.
 
கேன்டீனில்  தன் முன் இருந்த உணவை அளந்துக் கொண்டு இருந்தவளை ஓர விழியில் நோட்டம் விடப்படி இருந்த சந்தயா. சிறிது நேரம் தாக்குபிடித்தவள் இதற்கு மேல் மஹா தங்களிடம் அவளாக எதுவும் கூற போவது இல்லை என்று அறிந்து, அவள்புறம் திரும்பி, ” என்ன ஆச்சு மஹா…. ஏன் இப்படி இருக்க….? நேத்து பேச போனியே அது என்ன ஆச்சு….? நீயா சொல்லுவேனு பார்த்தா எதுவுமே சொல்லல…. எதை யோசிச்சு குழப்பிட்டு இருக்க?” 
 
தலைநிமிர்ந்து சந்தியாவை ஒரு முறை பாவமாக பார்த்து விட்டு மீண்டும் தலை கவிழ்ந்துக் கொண்டாள் கேள்விக்கு பதில் கூறாது…
 
அவள் கையை மெதுவாக அழுத்தம் கொடுத்து பற்றியவள் அவளை கூறும்படி கூக்குவிக்க மெதுவாக தன் திருவாய் மலர்ந்து  நிகழ்ந்ததை கூற தொடங்கினாள்…
********
முதலில் இத்திருமணத்தை நிறுத்த எண்ணி அவனிடம் பேச முடிவு செய்தவள். பின் தன்னால் உதவு முடியாது என அவன் கூறி விடவே என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் மஹா….
 
இருவருக்கும் தங்கள் ஆழ்மனதில் விருப்பம் இருந்தும் அதை வேண்டும் என்றே உணர்ந்து கொள்ளாது இருந்தனர். அவன் அதை உணர்ந்தும் அதை வெளிக் காட்ட நினைக்கவில்லை காரணம் அன்றைய நாளின் அவளது பேச்சு, எங்கு நாம் இலகினால் அவள் பேசியது போல் செய்துவிடுவாளோ என்று நினைத்தவன் அதனால் வரும் பின்விளைவுகளை எண்ணி அமைதி காத்தான் . அவளுக்கோ, தான் அவனுடன் மாலில் வழக்காடியதால் தான் தன் மேல் கோபம் கொண்டு திருமணத்திற்கு பின் தன்னை கொடுமைபடுத்துவான் என்று எண்ணி அவள் தேடிய காரணம், தான் இன்னும் திருமணத்திற்கு தயார் ஆக வில்லை என்பது, ஆனால் இதில் அவளது விருப்பத்தையும் உணர மறந்தாள் என்பது தான் வருத்தமான விஷயம்… 
 
இருவரும் தங்கள் மனதில் இருப்பதை மனம் விட்டு பேசாமல் தங்களுக்குள்ளே அதை போட்டு குழப்பி தங்களையே வதைக்க முடிவு செய்தார்கள் அவர்களே அறியாமல்.
 
தன் தந்தையிடம் பேச தயங்கியவள் அவனை வைத்து இத்திருமணத்தை நிறுத்த எண்ணினாள், ஆனால் இறுதியாக அவனது பேச்சிலோ தன் கையே தனக்குதவி என்று முடிவு செய்தாள். அதன் பொருட்டு அடுத்து என்ன செய்வது என்று தீவிர சிந்தனையில், சுற்றி இருப்பதை மறந்து தன் நினைவில் ஆழ்ந்து விட்டாள் மஹா….
 
மங்கிய வெளிச்சத்தில், தலைகுனிந்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இடது கையை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டவள், வலது கை விரல் நகத்தை கடித்து யோசித்துக் கொண்டு இருந்தவளை இமைக்க மறந்துப் பார்த்திருந்தான் நந்தன். 
 
அப்பொழுது  மிக மிக மெல்லிய ஒளியில்
ஏன் பெண்ணென்று பிறந்தாய்….
ஏன் என் கண்ணில் விழுந்தாய்….
ஏன் ஒரு பாதி சிரித்தாய்….
என் உயிர் பூவை எரித்தாய்….
 
என்ற பாடல்  மெல்லிய கீதமாய் அந்த அறையில் ஒழிக்க அது அவன் காதில் விழவும், அவனது பார்வை ரசனையாய் அவளை கவனித்தது.
 
காலேஜில் இருந்து நேராக அவனை காண வந்ததால் தலை கலைந்து, மதியம் மனதில் இருந்த பதட்டதினால் சரியாக உண்ணாததால் முகத்தில் இருந்த சோர்வு, காலையில் உடுத்திய இருந்த அதே  காட்டன் சுடியாக இருந்தாலும் சற்றும் கலையாமல் அதே மடிப்புடன் ஷாலின் இரு பக்கமும் பின் செய்து நேர்த்தியாக உடை அணிந்து இருந்தவளை ஏனோ பார்க்க பார்க்க  திகட்டவில்லை நந்தனுக்கு….
 
நாற்காலியின் கைப்பிடியில் இடது கையை ஊன்றி, உள்ளங்கையால் முகத்தை தாங்கிய வாரு அமர்ந்து, மஹாவின் மீது படிந்த பார்வையை அகற்றாது இருந்தவனின் கவனத்தை அவனது அலைபேசி கலைத்தது….. 
 
அவன்  பேசும் போதும் அவனது பார்வை மஹாவின் மீதே இருக்க….. அவளது யோசனை தாங்கிய முகமும், அதில் தோன்றிய பாவனைகளையும் கவனித்துக் கொண்டு இருந்தவன் இறுதியில் அவளது முகத்தில் தோன்றிய தெளிவு, அவள் விட்ட பெருமூச்சும், நிமிர்ந்து அமர்ந்த தோரணையும் அவள் ஏதோ முடிவை எடுத்து விட்டதாக பட தான் பேசிக் கொண்டு இருந்த அழைப்பை துண்டித்தான். மனம் ஏதோ படப்படப்பாக இருப்பதாய் உணர்ந்தவன் அதை ஏன் என்று உணர மறந்து விட்டான். 
 
என்ன கூற போகிறாள் என்று தெரியாது தவிப்பில் படபடத்தவன் அவள் பேசுவதற்காக காத்து இருந்தான். 
 
அவன் தன்னை ரசனையுடன் பார்ப்பதை கூட உணராமல்  தன் நினைவில்  இருந்த மஹா, நீண்ட யோசனைக்கு  பின்  என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவள் தன் இருக்கையில் இருந்து நிமிர்ந்து அமர்ந்து அவனை நிதானமாக நேர்க் கொண்டு பார்த்தவள், தன் பேச்சை தொடர்ந்தாள்.
 
நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்குறேன்…..அவனது விழிகளை பார்த்து கூற தொடங்கியவள் முடிக்கும் போது அவனது பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தன் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.
 
அவளது பதிலை கேட்டு முதலில் மகிழ்ந்தவன் அடுத்த நொடியே அதிர்ந்து போனான் நந்தன்.சில மணி துளிக்களுக்கு முன்பு வரை இந்த திருமணத்தை நிறுத்த சண்டையிட்டு கொண்டு இருந்தவள், இப்பொழுது சம்மதம் கூறுவதை கேட்டு அதிர்ந்தவன், பின் யோசனையாக அவளது முகத்தை பார்க்க தன் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் இருந்தான் வெறித்தப் பார்வையுடன்…. 
 
அவனிடம் பதில் ஏதும் இல்லாததை உணர்ந்து அவனை நிமிர்ந்துப் பார்க்க, தன்னை துளைக்கும் பார்வை பார்த்தவனை கேள்வியாக நோக்கினாள் மஹா.
 
அவளது பார்வையை உணர்ந்து, ” ம்…. மேல சொல்லு….நிச்சயம் அவள் சம்மதம் சொன்னதற்கு காரணம் இருக்கும், அவ்வளவு எளிதில் ஒத்து கொள்பவள் இவள் இல்லையே என்று அவளை பற்றி சரியாக யூகித்து இருந்தான் அவளது காண்டாமிருகம்….
 
அவள் நிமிர்ந்து ஓர் பார்வை பார்த்து விட்டு, ” ஆனா…..என்று இழுக்க,
 
ஆனா….என்ன? “
 
உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க சில கண்டிஷன்ஸ் இருக்கு…..” 
 
அவள் கூறியதும் யோசனையில் புருவமும் சுழிக்க அவளையை பார்த்துக் கொண்டு இருந்தவன்,
 
கண்டிஷன்ஸா….? ” 
 
ஆமா….கண்டிஷன்ஸ் தான். என்னாலையும் என் அப்பா கிட்ட பேச முடியாது,  உனக்கும் உன் அப்பா கிட்ட பேச முடியாது….அதும் இல்லாமல் இந்த கல்யாணத்தில் இஷ்டமும் இல்ல… நமக்கு இப்ப இதவிட்டா வேற வழியும் இல்ல….அவள் கூறியதை கேட்டு தன் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது நந்தனுக்கு…..
 
ஆனால் அவளது கண்டிஷன்ஸை தெரியாமல் அவசரப் பட்டு எதுவும் பேசி விட கூடாது என்று தோன்ற   அமைதி காத்தான்.
 
சரி என்ன கண்டிஷன்ஸ்னு சொல்ல….டேபிளில் கைகளை கோர்த்தவாறு அமர்ந்தான்.
 
முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது இருப்பவனை பார்த்து ஒரு நொடி தயங்கியவள், மனதை திடப் படுத்திக் கொண்டு பேசினாள், ” நான் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆயிருக்கேன் சோ கல்யாணத்திற்கு அப்புறம் நான் வேலைக்கு போவேன்…..
 
அவள் கூறியதில் புருவம் சுருக்கி யோசித்தவனுக்கு தன்னை புரியவைக்கும் நோக்கோடு பேச வாய் திறந்தவளை கை உயர்த்தி தடுத்தவன் , ” வேற என்ன எல்லாம் கண்டிஷன்ஸ்னு சொல்லிடு அப்புறம் கடைசிய முடிவு பண்ணலாம்….என்று முகம் இறுக கூறியவனை கண்டு மஹாவிற்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும் தான் பேசியே ஆக வேண்டும் என்று தீர்மானத்தாள்.
 








 

 

Advertisement