Advertisement

நான் என் விருப்படிதான் இருப்பேன்…. என்னை உன் விருப்பப்படி இருக்க சொல்ல கூடாது இத பண்ணாத பண்ணுன்னு ஆடர் போட கூடாது, என்னோட பெர்சனல் ஸ்பேஸ்க்குள்ள வரகூடாது, நான் ஜாலி டைப் ப்ரீயா   இருக்கணும் நினைப்பேன் சோ இப்படிதான் இருப்பேன் என்னோட கேரக்டரை மாத்த சொல்ல கூடாது, அப்புறம்……
தயங்கியவள்  அவனை விழி உயர்த்தி பார்த்து, பின் விழியை தாழ்த்தி தன் கடைசி கண்டிஷனை கூறினாள் அவன் தலையில் இடியை இறக்க… 
இந்த கல்யாணம் அப்பாக்காக தான் பண்ணிக்குறேன் சோ…… நீ….எப்படி சொல்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தவளை கூர்ந்து நோக்க,
மீண்டும்நீ…என்றவளைநான்…என்று அவன் எடுத்துக் கொடுக்க,
நீ கணவன்னு என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது…. தொட்டு பேச கூடாது, முக்கியமா இன்னைக்கு பண்ண மாதிரி பண்ணவே கூடாது…..தன் ஆள் காட்டி விரலை நீட்டி அவனை மிரட்ட,
அவள் படபடவென பொரிந்ததையும் தன்னை மிரட்டிய தோரணையும் கண்டு ஏனோ அவனுக்கு சிரிப்பு வர அதை வாய்க்குள்ளே அடக்கி கொண்டான்.
அவனுக்கு அவள் மீது கோபம் இருந்தது என்னவோ உண்மை தான்,  அது அவள் பேசியதை கேட்டு வந்த கோபமே தவிர. அவளை வெறுக்கவோ பிடிக்கவில்லை என்றோ எண்ணவில்லை. கோவிலில் பேசிய பொழுதும் அவளது செயலுக்கு, அவளை திருமணம் செய்து தண்டனை அளிக்க எண்ணினானே தவிர திருமணத்தை நிறுத்த எண்ணவில்லை. இதோ இப்பொதும் அவளது கண்டிஷன்ஸை கேட்டு முதலில் கோபம் வந்தாலும் பின் அவள் கூறியவற்றையும் பாவனையையும் கண்டு ரசித்து சிரிக்கக் தான் தோன்றியது அவனுக்கு. இவை அனைத்தையும் ஏன் என்று யோசித்து பார்க்க தவறினான். 
முதன் முதலில் அவளை கண்ட நொடியில் தன்னை அறியாமல் அவள் தன் மனதில் நுழைந்ததை உணரவில்லை நந்தன். அதை உணரும் போது அதை அவளிடம் உணர்த்துவானா இல்லை அமைதி காப்பானா???
பேசி முடித்த அவளையே தீவிரமாக சில நொடிகள் ஊன்று பார்த்தவன், அவளது கண்ணை நேருக்கு நேர் பார்த்து,” கல்யாணம் பண்ணி என்னை சாமியாரா இருக்க சொல்லுற…. அப்படித்தானே….?” அவனது குரலில் நக்கல் ஏகத்துக்கும் இருந்ததோ என்னவோ…
அவனது கேள்வியில் மலங்க மலங்க முழிக்க, என்ன சொல்வது என்று தெரியவில்லை அவளுக்கு. தான் எத்தனை விஷயங்களை கூறினோம் ஆனால் இவன் எதை பற்றி மட்டும் கேட்கிறான் பாரு என்றே எண்ண தோன்றியது.
அது…. வந்து….
ம்ம்ம்…. சொல்லு…. வந்து ???” நமட்டு சிரிப்புடன் அவளை பார்த்து கேட்க,
அவனது சிரிப்பில் கோபம் வர,” ஹலோ…. என்ன….? நான் வேற கண்டிஷன்ஸ்வும் போட்டேன் அது பத்தி எல்லாம் கேட்காம இத பத்தி மட்டும் கேட்குற…. என்ன திமிரா?” 
ஹே….. எனக்கு என் கவலை முக்கியம் மா…கெத்தாக கூறியபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
அவ அவளுக்கு ஒரு கஷ்டம்னா இந்த காண்டாமிருகம்க்கு என்ன கஷ்டம் பாரு…கடவுளே என்னை காப்பாத்து…..மனதினுள் மானசிகமாக தலையில் அடித்துக் கொண்டவள் வெளியே அமைதியான முகத்துடன் காட்சி அளித்தாள், காரியம் ஆக வேண்டும்மே….
அவளது அமைதியான முகத்தை வைத்து, அவள் மனதினுள் தன்னை எண்ணை சட்டியில் வறுப்பது போல் தோன்றியது அவனுக்கு. இதற்கு மேல் அவளை வம்பு வளர்க்க விரும்பாமல்,
ஓகே பைன்…. உன் கண்டிஷன்ஸை நீ சொல்லிட்ட நானும் சொல்லிடுறேன்…..நிதானமாக கூறியவனை புருவம் சுருக்கி சந்தேக பார்வை பார்த்தாள் மஹா.
ஐயோ…. என்ன சொல்ல போறானோ…. கண்டிப்பா உறுப்படியா சொல்ல மாட்டான்…. சாமியார் ஆக முடியாதுனு நம்மளை டார்கேட் பண்ண போறானோ….. மஹா உஷாரா இருந்துக்கோடி…..மனதில் பலவாறு யோசனையில் இருந்தவளை அவனது குரல் நினைவிற்கு இழுத்து வந்தது. 
அப்பாக்காக தான் பொண்ணு யாருனு கூட பார்க்காம கல்யாணத்திற்கு சரி சொன்னேனே தவிர வேற காரணம் இல்ல… சோ நீ என் வழில வர கூடாது நானும் உன் வழில வர மாட்டேன். நான் எங்க போறேன் எப்ப வருவேன், என்ன பண்ணுறேன், யாரு கூட பழகுறேனு எதுவும் என்னை கேள்வி கேட்க கூடாது…..புரிந்ததா என்பது போல் புருவம் உயர்த்தி கேட்டவனை திமிராக ஒரு பார்வை பார்த்தவள்,
நீ என்ன பண்ணுறனு பார்க்குறது என் வேலை இல்லை….. நீ என் வழில குறுக்கே வராம இருந்தாள் நானும் வர மாட்டேன்….சிலுப்பிக் கொண்டு கூறியவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தான் நந்தன்.
அப்புறம்….. நீ வேலைக்கு போறது என்னக்கு சரியா படல…. ஹே…. இரு சொல்லி முடிச்சுறேன் உடனே உன் ஸ்பீக்கரை ஓபன் பண்ணிறாத….அவள் முறைப்பதை பார்த்து கூறியவன், மேலும் தொடர்ந்தான்,
நானே ஓன் பிஸினஸ் ரன் பண்ணுறேன் அப்புறம் அப்பாவோட டெக்ஸ்டைல்ஸ்வும் இருக்கு…. புதுசா ஒரு பிராண்சும் ஓபன் பண்ணறேன் அதுக்கான ஓர்க்கு போய்ட்டு இருக்கு….என்றவனை இடைமறித்தவள்,
அதுக்கு நான் என்ன பண்ணட்டும்? இது எதுக்கு என் கிட்ட சொல்லுற…என்றவள் லூசா பா நீ…என்ற தோரணையில் அவனை பார்த்து வைத்தாள்.
நெற்றியை விரல்களால் நீவி விட்டு கொண்டவன்கொஞ்சம் நான் பேசி முடிக்குற வரைக்கும் நீ பேசாமல் இருக்கியா….சலிப்புடன் கூற,
சரி… சரி…. சொல்லு….என்று பெருந்தன்மையாக அமைதி காத்தாள்.
பெருமூச்சொன்றை விட்டவன்,” உனக்கு வேலைக்கு போகணும்னு தோனுச்சுனா தாராளமா போ ஆனா எதுக்கு வெளிய போகணும் நம்ம ஆபிஸ்கே வந்து வேலையை பாரு…..” 
அவன் மனதில் இருந்து தானாக வந்த அவனுள் கலந்த அவளையும் குறிக்கும்  ‘நம்மஎன்ற வார்த்தையை  அவனும் கவனிக்கவில்லை. அவளும் கவனிக்கவில்லை….. ஒரு வேலை உணர்ந்து  இருந்தால் பின் வரும் பிரச்சனைகளையும், தவற போகும் வார்த்தையையும் தவிர்த்து இருக்காலாம் ஆனால் விதி இவ்விடத்தில் அது வேலையை செவ்வென செய்தது….
அவன் கூறியதை கேட்டு யோசித்தவளை, அவன் குறிக்கிடாது அவள் யோசிக்க நேரம் அழித்தான். யோசனையில் இருந்தவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன்யோசிக்குறதுக்கு எவ்வளவு ரியாக்ஷன் தரா…அவள் முகத்தில் வந்து போன பாவனையை ரசித்து கொண்டு இருந்தவன் மனதில் அவளுக்குநவரச நாயகி என்று செல்ல பெயரிட்டான்.
சட்டென…அது எல்லாம் ஒன்னும் வேண்டாம்….அவள் கூறியதை கேட்டு அவள் என்ன கூறுகிறாள் என்று புரியாமல் முதலில் முழிக்க மட்டுமே முடிந்தது… 
இவ்வளவு நேரமும் அவளை ரசித்துக்கொண்டு இருந்தவன் திடிரென்று அவள் முடியாது என்று கூறவும் முழித்தவன் பின் புரிந்ததும் அவளை யோசனையாக பார்த்து,
ஏன்…?” என்று வினவ,
என்ன ஏன்….? என்னை வெளிய வேலைக்கு விடமால் உன் ஆப்பிஸ்ல வேலை செய்ய வச்சு என்னை உன் கன்டிரோல்ல வச்சுக்க பார்க்குற…. என்னால உன் ஆப்பிஸ்ல எல்லாம் வேலை செய்ய முடியாது… நான் செலக்டான கம்பெனில தான் வேலைக்கு போவேன்…..என்ற கூறியவளை கண்டு கடுப்பானவன்,
உன்னை என் கன்ரோல்ல கொண்டு வந்துட்டாலும்….. நீ எல்லாம் அடங்குற கேஸ்ஸா….என்று கேலி பேசியவனை அவள் முடிந்த மட்டும் முறைத்துப் பார்க்க,
சும்மா முறைக்காத….. எனக்குனு ஒரு ஸ்டேடஸ் இருக்கு….. அதை சிதைக்க நான் அனுமதிக்க மாட்டேன்…. நீ வேலைக்கு போ யாரும் தடை சொல்லலை ஆனா வேற ஒருத்தனுக்கு கீழ ஏன் வேலைக்கு போகணும்….? உன்னை கன்ரோல் பண்ணி  நீ ஒன்னும் எனக்கு பெருசா அடிமை வேலை பார்க்க போறது கிடையாது அப்புறம் ஏன் சீன் போடுற?” என்க,
உனக்கு ஸ்டேடஸ் இருக்குன்னா….. உங்க அப்பா கிட்ட சொல்லி அதுக்கு தங்குந்த மாதிரி ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணு எதுக்கு என்னை பண்ணிக்குற? ” ஏனோ அவனது இந்த வார்த்தையில் அவளது மென்மனம் பெரிதும் அடிவாங்கியது,
அது தான் முடியலையே…..என்றவன் அவள் தன்னை முறைப்பதை பார்த்துஇப்ப என்னதான் சொல்ல வர….?” சலிப்புடன் கேட்க,
நான் உன் கம்பெனில வேலை செய்ய மாட்டேன். நான் கேம்பஸ்ல செலக்டான கம்பெனில தான் வேலைக்கு போவேன். யூ கான்ட் கன்ட்ரோல் மீ…..என்றவளை தீர்க்கமாக பார்த்தவன்,
சற்று இடைவெளி விட்டு, ” ஓகே பைன்…. யோசிச்சுட்டு சொல்லுறேன்…..என்றவனை சந்தேகமாக அவள் பார்வை பார்க்க,
வாட்……என்றவனிடம் 
இல்ல…. இது பத்தி வீட்டுல போட்டு குடுத்து என்னை ஸ்டாப் பண்ண முயற்சி பண்ணினேனு வை…. உன்னை காலி பண்ணிடுவேன்…..என்று மிரட்டியவளை பார்த்து நந்தனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வர தன் முகத்தை வேறு புறம் திருப்பி சமன் செய்து கொள்ள முயற்சி செய்து ஓர் அளவிற்கு அதில் வெற்றியும் கண்டான். பின்,
சரி…. சரி…..கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத…. என்ன சாப்பிடுறனு சொல்லு….என்று சகஜ நிலைக்கு திரும்பி அவளிடம் கேட்க,
என்னது சாப்பாடா…. அதுக்குள்ள நைட் ஆயிடுச்சா….அதிர்ந்து தன் கை கடிகாரத்தை பார்க்க, அது மணி எட்டு என்று காட்டியதில் மேலும் அதிர்ந்து தன் இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து நின்றாள்.
அவள் எழுந்து நின்ற வேகத்தை கண்டுஎன்ன ஆச்சு… எதுக்கு இவ்வளவு ஷாக்…? எட்டு  தானே ஆச்சு…என்று கூலாக கேட்டவை பார்த்து பதற்றமாக பார்த்தவள்,
“எட்டு  தானே ஆச்சா….எனக்கு எட்டு மணிகுள்ள ஹாஸ்டல்ல இருக்கணும்…. இல்லாட்டி அந்த வார்டன் என்னை சுக்கா போட்டுரும்…. நான் கிளம்புறேன்என்று அவசரமாக கூறியவள் தன் பையை எடுத்து கொண்டு செல்ல இருந்தவளை அவன் குரல் தடுத்து நிறுத்தியது. 
சரி இதை யாரு குடிக்குறது…மில்ஷேக்கை சுட்டிக் காட்டி கேட்டவனை முறைத்து பார்த்தவள்,
எனக்கு வேண்டாம்….என்று பல்லை கடித்து கொண்டு கூறி, அவ்விடத்தை விட்டு நகர்ந்து இரண்டு அடி வைக்க
ஹலோ மேடம்….. பில் பே பண்ணது நான்…. வேண்டாம்னா அப்பவே சொல்லி இருக்க வேண்டியது தானே…. இப்ப வேஸ்ட் பண்ணுற…கராராக கூறியவனையும் மில் ஷேக்கையும் மாறி மாறி முறைத்தவள். வேகமாக டேபிளின் அருகில் வந்து மில் ஷேக்கை எடுத்து அவனை முறைத்துக் கொண்டே ஒரே மூச்சில் குடித்து முடித்து கிளாஸை பொத்தென்று டேபிளில் வைத்தாள் அவனை முறைத்துக் கொண்டே,அதோடு சிறு குழந்தையை போலவே தன் உதட்டின் மேல் இருந்த நுரையை தன் நாக்கால் நக்கி கொண்டவள்….
இப்ப ஓகே யா மிஸ்டர். யாதவ்நந்தன்…. உங்க பணம் வேஸ்ட் ஆகலை போதுமா….என்று உரைத்தவள் விடுவிடுவென்று வெளியே சென்று விட்டாள் வேகமாக.
அவளது சோர்ந்த முகத்தை கண்டு அவள் எதுவும் சாப்பிடாமல் செல்வதை மனம் ஏற்காமல். அவளை வேண்டுமென்றே சீண்டி மில் ஷேக்கை அருந்த வைத்தவனுக்கு அவள் பேசிய விதம்,கடைசியாக அவள் நாவினால் நக்கியது என்று அனைத்தும் எண்ணி சிரித்துக் கொண்டே ஃபில் பே பண்ணியவன்,’” லூசு இவ்வளவு நேரம் கூட தானே இருந்தா ஃபில் பே பண்ணினேனா இல்லையான்னு கூட தெரியாம கோவ   படுது   கொசுக்குட்டி…..’ என எண்ணி கொண்டான் உள்ளுக்குள்…
பின் ஹோட்டலை விட்டு வெளியே வர அங்கு தன் கை கடிகாரத்தை பார்த்து புலம்பி கொண்டு இருந்தவளை கண்டு புன்னகை பூக்க,” டைம் ஆச்சுனு சொல்லிட்டு இங்க நின்னு என்ன பண்ணுது கொசுக்குட்டி…..
அவளை நோக்கி நடக்க போக, மஹா தனக்கு பின்னால் இருந்தவனை கவனிக்காமல்ஐயோ டைம் ஆச்சே…. பேசாம ரம்யாவை வெய்ட் பண்ண சொல்லி இருக்கலாம் இப்ப பாரு நல்லா மாட்டி கிட்டியே மஹா… இனி எப்ப பஸ் ஸ்டாண்டு போய் பஸ் புடிச்சு, எப்ப ஹாஸ்டல் போய் சேரது…. முருகா…. பிளீஸ் ஹேல்ப் மீ யா… இன்னைக்கு நீ சுக்கா ஆக போறது கன்பார்ம் போல டி …என்று புலம்பியவள் ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்டை நோக்கி செல்ல தொடங்கினாள்.
நந்தனோ புன்னகைத்தவாரே அவள் அருகில் தனது காரை நிறுத்தி அவளை ஏற சொல்ல, அவனை வினோதாமாக பார்த்து வைத்தாள் மஹா. காரணம், இது வரை அவன் அவள் இடத்தில் கரிசனமாக நடந்து கொண்டதே கிடையாது என்பது அவளது கணிப்பு. அவள் கீழே விழுந்தது, அவள் திருமணம் வேண்டாம் என்ற கூறிய உணர்வை உதாசீனம் செய்தது என்று அவளது அவன் மேல் உள்ள எதிர் வினை எண்ணங்களே முதன்மையாக தெரிந்தது.
அவனும் தன் உணர்வுகளை வெளிபடையாக அவளிடம் காட்டாமல் தனக்குள்ளே வைத்துக் கொண்டு அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று முடிவுடன் தன் உணர்வுகளை மறைத்தான்.
அவளது பார்வையை உணர்ந்து காரினுள் இருந்தபடிஎன்ன என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டவனின் தோரணையில் மீண்டும் ஒரு முறை தன் வாட்டர் டேப்பை திரந்து விட்டாள் மஹா.
அவளது ரசனையான பார்வையில் முற்றிலும் குழம்பினான் நந்தன். இந்த கொசுக்குட்டிக்கு என்ன தான் பிரச்சினை? என்னை பிடிக்கலைனு சொல்லுறா ஆனா நல்லா வெரிச்சு வெரிச்சு பார்க்குறா, கிஸ் பண்ணா எதிர்க்காமல் இருக்கா ஆனா பிடிக்கலைனு சொல்லுறா…. ச்சே… நம்மளை பைத்தியக்காரன் ஆக்கிருவா போல.. .மனதிற்குள் புலம்பியவன் வெளியே சளைக்காமல் அவளது பார்வையை தாங்கி நின்றான்.
அப்பொழுது அவர்களை தாண்டி சென்ற வண்டியின் ஓசையில் தங்கள் நடப்பிற்கு வந்தனர் இருவரும். மஹா தலை கவிழ்ந்து, கீழ் உதட்டை கடித்து தன்னை சமன் செய்து கொண்டவள் மெல்ல நிமிர்ந்து நந்தனை பார்க்க தன் வலது கையால் பின்னந்தலையை கோதி ஏதோ முணுமுணுப்பதை பார்த்து மீண்டும் தலை கவிழ்ந்து கொண்டாள் சங்கடத்தில்…
இப்ப வந்து ஏற போறியா இல்லையா? எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை உனக்கு தான் நேரம் ஆச்சு… வேண்ணும்னா வந்து ஏறு டிராப் பண்ணுறேன்….சாவகாசமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்து சீட்டி அடிக்க ஆரம்பித்தான்.
மஹாவும் நேரம் ஆவதை உணர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்க அவனுடன் செல்வதா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருந்தாள். ஏனேன்றால் இன்று காலை அவனது அலுவலகத்தில் வைத்து அவன் செய்த செயல்கள் நினைவில் நின்று அவளை பட்டிமன்றம் நடத்த செய்தது. பின் நேரம் ஆவதை உணர்ந்து அவனுடன் செல்ல முடிவெடுத்தவள்,
இனி பஸ் பிடிச்சு போறதுகுள்ள 9 மணி ஆயிரும் அதுக்கு இந்த GM கூடவே போகலாம். காலைல பண்ண மாதிரி பண்ண வந்தா மூக்கு மேல ஒரு குத்து விட வேண்டியது தான்….மனதில் தற்காப்பு கலை ஒன்றை யோசித்து விட்டு காரில் சென்று ஏறினாள்.
பின் கார் அவனது கையில் அவளது ஹாஸ்டல் நோக்கி வேகமெடுத்தது.  மஹா எங்கு அவன் தன்னை மீண்டும் முத்தம் இட வருவானோ என்ற பயத்தில் பார்த்திருக்க, நந்தன் அவளது பார்வைக்கான அர்த்தம் புரியாத குழப்பத்தில் இருந்தான்.  அவர் அவர் நிலையில் இருக்க ஏதோ தோன்ற இருவரும் ஒரே சமயம் திரும்பி மற்றோருவரை பார்க்க சில நொடிகள் தங்கள் விழிகளுக்குள் எதையோ இருவரும் தேடி மீண்டும் தங்கள் விழிகளை வேறு திசையில் திருப்பிக் கொண்டனர்.
இப்பொழுது இருவர் மனதிலும் ஒரே எண்ணமே ஓடியது. அது தங்கள் தந்தை அவர்களிடம் பேசியது…..
கண்டிஷன் தொடரும் …….

Advertisement