Advertisement

UD:10
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் மஹா. திருமணம் நடந்து விட கூடாது என்பது மட்டுமே அவளது மனதில் பிரதானமாக இருந்தது. 
தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினால் விட்டுவிடுவான் என்று எதிர் பார்க்க, அவன் ஏன் என்ற தோரணையிலேயே தெரிந்தது அவன் தன்னை விட்டு விடுவதாக இல்லை என்று. தான் இன்னும் காலேஜ் சென்றுக் கொண்டு இருப்பதால் சின்ன பெண் என்று கூறினால் விட்டு விடுவான் என்று யோசிக்க அதுவும் தோல்வியில் முடிந்தது அவளுக்கு.
என்ன செய்வது என்று தெரியாமல் அவள் தவிக்க…..அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளது தவிப்பை புரிந்து கொண்டான் போலும்…
“ஒரு நியாயமான காரணம் சொல்லு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல. அப்புறம் முடிவு பண்ணலாம்….” என்றவனை ஏறிட்டுப் பார்த்தவள் மண்டையில் ஏதோ தோன்ற,
“எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கலை….. அதான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்….” என்று பட்டென்று கூறிவிட்டாள்.
அவள் கூறிய பதில் ஒரு நொடி மனதில் வலியை உணர்ந்தவன்…. உடனே தன்னை சமன் செய்து கொண்டு, இன்று காலை தன்னுடைய செயலுக்கு அவள் மறுப்பு கூறாததும், இப்பொழுது தான் உள்ளே நுழைந்ததும் அவள் பார்வையின் மொழி வேறு கூறியதையும் கணக்கிட்டு பார்த்தவன்….
மீண்டும் அவளை தீர்க்கமாக பார்த்து, “என்னை ஏன் பிடிக்கலை…?” என்று மீண்டும் கேட்க,
‘என்னடா இது வம்பா போச்சு…. இப்ப இதுக்கு என்ன காரணத்தை யோசிக்குறது..’ மனதில் யோசித்த படி ஒரு பெருமூச்சை விட்டு தலையில் கைவைத்து கொண்டாள். 
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், அவளது செயலில் சிரிப்புவர மேசையின் மீது கையை ஊன்றி , “என்ன காரணம் சொல்லுறதுனு யோசிக்குறியா…?” என்று கேட்க,
தன் நினைவில் இருந்தவள் அதே நிலையில் அமர்ந்தவாறே ‘ஆம்’ என்று முதலில் தலையை ஆட்டியவள் பின் சுதாரித்துக் ‘இல்லை’ என்று வேகமாக தலையை ஆட்டினாள் மறுப்பாக…
அவளது தலையாட்டலை கண்டு சிரிப்புவர அதை அடக்கிக் கொண்டு வெளியே இறுகிய முகத்தோடு அவளை கூர்ப் பார்வை பார்த்து வைக்க…. அவனது பார்வையை கண்டு மஹாவிற்க்கு உள்ளுக்குள் குளிரெடுக்க தன் விழிகளை தாழ்த்தியவளின் மண்டைக்குள் என்ன காரணம் சொல்வதென்று படு தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கினாள்.
அவனும் சளைக்காமல் அவளையே பார்த்த படி மெதுவாக ஒரு ஒரு மிடராக மில் ஷேக்கை பருகியதோடு அவள் அடுத்து என்ன காரணம் சொல்ல போகிறாள் என்று தவிப்போடு பொறுமைக் காத்தான்…. ஏனோ நந்தனுக்கு அவளை இழந்துவிட கூடாது என்று தோன்றியது. தொழில் சாம்ராஜ்ஜியத்தை திறம்பட நடத்திக் கொண்டு வருபவன் நேர்மையும், கம்பீரமும் கொண்டவன், குடும்பம் என்று வரும் போது கலகலப்பாவும், அன்பாகவும் வலம் வருபவன். தன்னிடம் சரிக்கு சமமாக நின்று சண்டையிடும் மஹாவை ஏனோ பிடித்துப் போனது நந்தனுக்கு.
ஒரு வேளை அன்று மாலை அவளை தாங்கிப் பிடித்த அந்த நிகழ்வோடு நின்று இருந்தால் நிச்சயம் அவன் மனதில் அவள் மேல் உண்டான நேசத்தை வெளிப்படுத்தி இருப்பானோ என்னமோ…. ஆனால் விதி ஆடிய விளையாட்டில் அவள் காபி ஷாப்பில் பேசியது அவன் காதில் விழ நேர்ந்தது.
அதன் விளைவால்  வந்த கோபம் அவளுக்கு பாடம் புகட்ட நினைத்ததே தவிர அவளை மறுக்க நினைக்கவில்லை.
சிறிது நேரம் கழிய தன் நினைவில் இருந்து வெளி வர, அவளின் காரணத்திற்காக காத்து இருந்தவன் ,பதிலேதும் இல்லாததால்  தன் தொண்டையை கனைத்து அவளுக்கு தான் இன்னும் பதிலுக்காக காத்து இருப்பதை உணர வைத்தான்.
அதுவரையிளுமே என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தாள் மஹா…. அவனை பற்றி தெரிந்தால் அல்லவா காரணம் கூற இயலும். அவனை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் தலையை குனிந்துக் கொண்டாள் தவிப்போடு. அவனது தோற்றத்தில் குறை கூற இயலுமா என்று நற்பாசையில் நிமிர்ந்து பார்க்க , தன்னையே பார்த்த படி இருந்தவனை கண்டு மீண்டும் தலை குனிந்துக் கொண்டாள்.
‘லூசா டி நீ….. அவன் உள்ள வரும் போது நல்லா வாட்டர் டேப்பை திரந்து விட்டியே மறந்து போச்சா…. அதை கவனிச்சானோ இல்லையோ தெரியல…. ஒரு வேலை கவனிச்சு இருந்து நீ இப்ப ஏதாச்சும் குறை சொன்ன அவன் நல்ல டெட்டால் விட்டு வாஷ் பண்ண வாய்ப்புகள் அதிகம். சோ வேற யோசி….’என அவள் மனதிற்குள் யோசித்துக் கொண்டு இருக்க. அவன் செறுமியதில்  தன் நினைவு கலைந்து அவனை ஏறிட்டுப் பார்த்தவளின் கண்ணில் அது பட, அவள் மண்டையின் மேல் மணியும் அடித்தது. 
சந்தோஷத்தில் சட்டென நிமிர்ந்து அமர்ந்து டெபிளை தட்டினாள் வேகமாக…. அடுத்து அவள் சொன்ன பதிலில் இப்பொழுது முழிப்பது அவனது முறையாயிற்று….
தான் சரியாக தான் கேட்டோமா என்று சந்தேகம் எழ என்னவென்று அவன் மீண்டும் அவளிடமே கேட்டான்…… 
“வாட்….. கம் அகைன்…..” கூர்மையையான பார்வையால் அவன் கேட்க 
நிமிர்வாக அமர்ந்து அவனது பார்வையை சளைக்காமல் எதிர்க் கொண்டவள் அவனை பார்த்து, ” நீ ஒரு மேல்சாவனிஸ்ட்…” ஏதோ சாதித்த திருப்தியுடன் நிமிர்வாக பதில் உரைத்தாள்.
தன்னை அவள் அவ்வாறு கூற  காரணம் தெரியாமல் ஒரு நிமிடம் நெற்றி சுருக்கி அவளை பார்த்தவன், அவள் அமர்ந்து இருந்த தோரணையில் அவனுக்கு சந்தேகம் எழுந்தது. நிச்சயம் ஏதேனும் கிறுக்கு தனமாக தான் யோசித்து இருப்பாள் என்று யூகித்தான் நந்தன். அவள் தன்னை அவ்வாறு கூறும் அளவிற்கு இருவரும் பழகவும் இல்லை பார்த்துக் கொண்டதும் இல்லை .பின் எதை வைத்து அவள் அப்படி கூறினாள் என்று தோன்ற காரணத்தையும் அவளிடம் கேட்க நினைத்தான்.
“ஓகே பைன்….. எத வச்சு நான் மேல்சாவனிஸ்ட்ன்னு சொல்லுற? காரணம் தெரிஞ்சுக்கலாமா….?” ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவனை பார்த்து மீண்டும் வாட்டர் டேப்பை கொஞ்சம் திறந்து விட்டவள் பின் சுதாரித்துக் அவனை நிமிர்வாக பார்த்து, 
“இதோ… இது தான் காரணம்…” தன் முன் இருந்த மில் ஷேக்கை சுட்டிக் காட்டியவளின் தோரணையில் அத்தனை நிமிர்வு….
அவளையும் மில் ஷேக்கையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தவன் மீண்டும் ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்தி கேட்டவனை, மனதிற்குள் ’ஐயோ….. இவன் என்ன சும்மா சும்மா புருவத்தை தூக்கிட்டு இருக்கான்… அவனுக்கு மட்டும் தான் புருவம் இருக்குற மாதிரி…சை…..’ மனதில் அவனை அர்சித்துக் கொண்டு இருந்தவள். வெளியே,
“என்ன….? நான் நீ வரத்துக்கு முன்னாடியே வந்துட்டேன் ஆனா எதுவும் ஆடர் பண்ணமா இருந்தேன்…. நீ வந்த பின்னாடி ஆடர் பண்ணிக்கலாம்னு நினைச்சேன் ஆனா நீ…..?” கேள்வியுடன் அவனை பார்த்தவள் மேலும் தொடர்ந்தாள்.
“சார் வந்தீங்க…. பேரர்  வந்து   சார் ஆர்டர்  ப்ளீஸ்னு   கேட்டான்       , நீயும் ஆடர் தர… நான் இங்க ஒருத்தி இருக்குறதே பொருட்படுத்தவே இல்ல நீ…. எனக்கு மில் ஷேக் பிடிக்காது, ஐஸ்கிரீம் தான் பிடிக்கும் அதும் ஸ்டாபெரி பிலேவர். பட் நான் இப்ப இத அட்ஜஸ்ட் பண்ணி குடிக்கணும்… சாதாரண விஷயத்துக்கே    உங்க இஷ்டம் போல தான்  பண்ணுற…. அதை இன்டைரேக்டா  என்னையும் பண்ண வைக்குற…. அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி எல்லாம் டாமினேட் பண்ணுவ….. ? 
அவளது கூற்றில் ஒரு நொடி அதிர்ந்து தான் போனான் நந்தன். 
‘அடிப்பாவி கொசுக்குட்டி… ஒரு மில் ஷேக் ஆடர் பண்ணது குத்தமா?.’வாயில் கைவைத்தவாரு மனதிற்குள் அதிர்ந்தவன் தன் முகத்தில் எதையும் காட்டாது, நிதானமாக தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து அவளையே இமைக்காது பார்க்க,  ‘எப்படி எல்லாம் காரணம் கண்டுபிடிக்குறா… ஷப்ப்ப்பா…. இவ கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்….’ மனதில் முடிவெடுத்தவன் நிதானமாக,
“இப்ப என்ன உனக்கு பிடிச்ச ஐஸ்கிரீம்  வேண்ணும் அவ்வளவுதானே…. முன்னாடியே சொல்லி இருந்தா மேட்டர் சால்வ்டு… ” அவளிடம் கூலாக கூறியபடி பேரரை கை அசைத்து அழைக்க,
“இல்ல… இல்ல… வேண்டாம்… இதுவே போதும்….” அவள் அவசரமாக மறுக்க,
“இல்ல…. உனக்கு பிடிச்சதையே சாப்பிடு… சாப்பாட்டு விஷயத்தில் போய் என்ன இருக்கு…. ? உனக்கு பிடிச்சதை ஆடர் பண்ணு..” மீண்டும் பேரரை அழைக்க போக,
“அதான் வேண்டாம்னு சொல்லுறேன்ல …. அப்புறம் ஏன் இப்படி பண்ணுறீங்க….” முதலில் அதிகாரமாக பேச ஆரம்பித்தவள் பின் கெஞ்சலுடன் முடித்தாள்.
அவளது கெஞ்சல் முகமும், அவளது மரியாதையான பேச்சும் அவனை அமைதி காக்க செய்தது.
இத்திருமணத்தை எவ்வாறேனும் நிறுத்தி விட வேண்டும் என்று எண்ணியவளுக்கு, அதை எவ்வாறு நிறுத்துவது என்பது மட்டும் புரியவில்லை. தான் என்ன யோசித்தும் அவனிடம் தன் வேலை செல்லுபடி ஆகாத இயலாமையில் தன் கைகளால்  தலையை தாங்கியபடி அமர்ந்து விட்டாள் மஹா.
அவளை பார்த்துக் கொண்டு இருந்தவன் பெருமூச்சொன்றை விட, ‘இந்த கொசுக்குட்டியை ஓட்டுறது ரொம்ப கஷ்டம் போல…’ மனதில் எண்ணியவன். கனிவான குரலில்,
“என்ன பிரச்சினை ஸ்ரீ உனக்கு…. ?” என்று இதமாக அவன் கேட்க,
அவனது மென்மையான பேச்சில் தன் தலையை நிமிர்த்தி அவள் பார்க்க. ஒரு நிமிடம் அவனது விழியோடு அவள் விழி கலக்க மீண்டும் தன் தலையை கவிழ்த்துக் கொண்டாள்.
“ம்ப்ச்ச்…. என்னனு சொல்லு… சொன்னா தானே தெரியும்… ஏன் இப்படி பண்ணுற..” ஆதங்கத்துடன் அவன் வினவவும், சட்டென்று வந்து விழுந்தது அவள் வார்த்தைகள். 
“எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல…. இந்த கல்யாணத்தை நிறுத்தனும்…. அதுக்கு தான் பேசணும்னு சொன்னேன்….. ” தீவிரமான முகத்தோடு அவள் கூறியதற்கு மீண்டும் அவனிடம் இருந்து ஒற்றை வார்த்தையாக,” ஏன்” என்ற கேள்வி வர, எரிச்சல் உற்றாள் மஹா. 
“என்ன சும்மா சும்மா ஏன்னு கேட்குற? எனக்கு பிடிக்கலைனா பிடிக்கலை…. இந்த கல்யாணமும் பிடிக்கல, எதுவும் பிடிக்கல. நான் இன்னும் காலேஜே முடிக்கலை அதுக்குள்ள கல்யாணமா? அது மட்டும் இல்லாமல் நான் இன்னும் மனரீதியா கல்யாணத்துக்கு தயார் ஆகலை. கல்யாணத்தை பத்தி யோசிச்சது கூட இல்லை…. இந்த நிலையில் என்னை  எப்படி கல்யாணம் பண்ணிக்க சொல்லுற?” என மூச்சு விடாது அவள் பேசி முடிக்க…..ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவன் பதில் உரைத்தான். 
“ஹலோ ஒரு நிமிஷம்…. இங்க யாரும் உன்னை கல்யாணம் பண்ணனும்னு தவம் இருக்கலை….”மனதில் ஆசை இருந்தும் அதை அவளிடம் வெளிக்காட்ட விரும்பாதவன் அவளிடம் வெட்டி விராப்புக்காக வார்த்தையை உதிர்த்தான். அது அவனது எதிர் காலத்தில் பெரும் இடியாக அவன் தலையில் இறங்கும் என்று அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை அதை உணர்ந்து இருந்தால் நிச்சயம் அவள் மேல் இருக்கும் விருப்பத்தையும் , தன் மனதையும் வெளிப்படுத்தி இருப்பானோ என்னமோ…..
“அப்பா, அம்மா சொன்னாங்கனு தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கேன்…. சோ… ஓவரா சீன் கிரியேட் பண்ணாத….” என்று இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் நிதானமாக மில் ஷேக்கை அருந்தியவாரே தலை நிமிர்ந்து பார்க்க, அவளது தவிப்பான முகத்தை கண்டு குழம்பினான்.
அவனது வார்த்தையை கேட்டவளுக்கோ மீண்டும் தான் தோற்றதாக உணர்ந்தாள் மஹா…. திருமணம் வேண்டாம், இஷ்டம் இல்லை என்று கூறினாளே தவிர உன் மேல் இஷ்டம் இல்லை என்று அவள் கூறவில்லை. முதலில் ஏதோ காரணம் கூற வேண்டும்மே என்று கூறினாளே தவிர மனம் அறிந்து அவள் கூறவில்லை…. தனக்கு ஏற்பட்டதை போல் அவனுக்கு தன் மேல் எவ்விதமான நினைப்பும், ஈர்ப்பும் இல்லை போலும் என்று நினைத்து தவித்தாள் மஹா.
‘என்ன ‘ என்பது போல் புருவம் உயர்த்தி கேட்க ‘ஒன்றும் இல்லை’ என அவனக்கு பதில் அளித்தவள் மீண்டும் தலை குனிந்துக் கொண்டாள்.
“இப்ப எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்க? என்னதான் பண்ணுறதா முடிவு பண்ணி இருக்க? எதுவானாலும் சீக்கிரம் பதில் சொல்லு….. ” அசால்ட்டாக கூறியவனின் மனம் ஏனோ படப்படவென அடித்துக்கொண்டது மீண்டும் அவள் தன்னை வேண்டாம் என சொல்லிவிட கூடாது என்று.
அவனை நிமிர்ந்து ஓர் பார்வைப் பார்த்துவிட்டு,”எனக்கு கல்யாணத்தை நிறுத்தனும்…. வீட்டுல என்னை பிடிக்கலைனு சொல்லிடுங்க….” என்றவளை ஆயாசமாக பார்க்க….
‘கல்யாணத்தை நிறுத்தனும்னே நினைக்குறா பாரு.. ஏய்…. கொசுக்குட்டி திமிரு டி… உடம்பு பூரா திமிர்… உன்ன விடும் ஐடியா எனக்கில்ல  செல்லம்….’மனதில் எண்ணியவன் அவளை எவ்வாறு ஒத்துக் கொள்ள வைப்பது என்று யோசித்து வார்த்தையை அவளிடம் உபயோகித்தான். 
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” 
“இல்ல நீங்க உங்க வீட்டுல என்னை பிடிக்கலைனு சொல்லிடுங்க…. இந்த கல்யாணம் நின்னுரும்.” என்று டெபிளின் நுனியை நகத்தால் கீறிய வாரே கூறியவளை நெற்றி சுருக்கி பார்க்க,
“அதை நீயே உன் வீட்டூல சொல்லு. உனக்கு தானே விருப்பம் இல்லை….. அப்ப நீ தானே பேசணும்… என்னை ஏன் இழுக்குற? எங்க அப்பா சொன்னாங்கனு தான் கல்யாணத்துக்கு ஏதோ ஒத்துக்கிட்டேன்… சோ என்னால என் வீட்டில் பேச முடியாது….” முகத்தில் வழிந்த இகழ்ச்சியில் மஹாவிற்கு கோபம் எரிமலையாக குமறி வெடிக்க தொடங்க வாய் திறக்கவும் அவளது ஃபோன் அலறவும் சரியாக இருக்க அதை தன் காதுக்கு குடுத்தாள்..
“மஹா… கிளம்பலாமா? டைம் ஆச்சு டி…” ரம்யா கேட்க,
“இல்ல நீ கிளம்பு நான் வந்துறேன்…” இன்று இதற்கு ஒரு முடிவு கட்டாமல் விடுவது இல்லை என்று உறுதியுடன் இருந்தவளை மீண்டும் ரம்யாவின் குரல் தடுத்தது.
“ஏய் ஏற்கனவே டைம் ஆச்சு இப்ப போனா தான் கரெக்டா இருக்கும்… ஒழுங்கா கிளம்பி வா…. இன்னொரு நாள் பேசிக்கலாம்… ” படபடப்புடன், எவ்வாறாவது தோழியை உடன் அழைத்து சென்று விட வேண்டும் என்று முடிவுடன் அவள் மஹாவை அழைக்க
“இல்ல என்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியாமல் நான் வரதா இல்ல… நீ கிளம்பி போ…. நான் வந்துறேன்…..” நந்தனை முறைத்துக் கொண்டே ரம்யாவிடம் பதில் கூறியவள் அவளது அழைப்பை துண்டித்தாள். 
‘ஆஆஆஆஆ ரௌடி ரேஜ்க்கு பேசுறாளே….இது எங்க போய் முடிய போகுதோ தெரியலை….. கடவுளே அந்த அண்ணாவை காப்பாத்து….’ அழைப்பேசியை பார்த்த வாரே மனதில் கடவுளிடம் தன் கோரிக்கையை வைத்துவிட்டு ஹாஸ்டலை நோக்கி தன் வண்டியில் பயணம் ஆனாள் ரம்யா.
“இப்ப என்ன சொல்ல வரீங்க? கல்யாணத்தை நிறுத்த முடியுமா முடியாதா? ” என்று முனைப்புடன் அவள் எகிற,
“முடியாது….” ஒற்றை வார்த்தையில் அலட்சியமான பதில் வந்தது அவனிடம் இருந்து…
அதில் அவளுக்கு சுருசுருவென கோபம் வர, ” என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? இஷ்டம் இல்லைனு சொல்லுறேன் புரிஞ்சுகாம பேசிட்டு இருக்கீங்க…. பிடிக்கலைனா விட வேண்டியது தானே. வேற பொண்ணா கிடைக்காது உங்களுக்கு, ஒழுங்கா இந்த கல்யாணத்தை நிறுத்துங்க இல்லாட்டி…. இல்லாட்டி….” அவன் முன் வலது கையின் ஆள்காட்டி விரலை நீட்டி கோபத்தில் கண்கள் சிவக்க பேசிக் கொண்டு இருந்தவள் அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் இழுக்க, அதுவரை தன் முன் இருந்த மில் ஷேக்கை முழுவதும் குடித்து முடித்தவன்.
 கூலாக இருகைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து அவளை பார்த்து, ” இல்லாட்டி….” என்று அவளை அடுத்து பேச தூண்டினான்.
அவனது அலட்சிய பாவனையில் கொதித்தெழுந்தாள் மஹா….
“இல்லாட்டி போலீஸ் கம்பிளைன்ட் குடுப்பேன் உங்க மேல…… வழுக்கட்டாயமா கல்யாணம் பண்ண பார்க்குறான்னு ….” அவனுக்கு பதில் குடுத்தே ஆக வேண்டும் என்ற நோக்கோடு என்ன பேசுகிறோம் என்றே அறியாமல் படபடவென பொரிந்தாள் மஹா.
அவளது பதிலில் வலது புருவத்தை மட்டும் உயர்த்தி வாய் விட்டு சிரித்தவன் தன் இருக்கையில் இருந்து முன் நோக்கி நகர்ந்து அமர்ந்து டெபிளில் தன் கைகளை ஊன்றி நிதானமாக அவளை பார்த்தான் நந்தன்….. கோபத்தில் வேகமாக மூச்சு வாங்க, கண்கள் சிவக்க, மூக்கு விடைக்க இருந்தவளை பார்த்து மென்மையான குரலில்,
“லுக்கு… நான் உன் கிட்ட பிரபோஸ் பண்ணினேனா?” அவளது கண்களை நேராகப் பார்த்து அவன் கேட்க அதில் ஒரு நொடி அதிர்ந்தவள் அதை தன் முகத்திலும் பிரதிபலிக்க, தான் பேசிய வார்த்தையின் தவறை உணர்ந்து தலைகவிழ்ந்தாள்.
“பதில் சொல்லுங்க மேடம்….” என ஏகத்துக்கும் நக்கலாக அவன் கேட்க,
தலைகவிழ்ந்த நிலையிலே ‘இல்லை’ என்று  மறுப்பாக தலை அசைத்தாள்….
“கல்யாணம் பண்ணிக்க சொல்லி நான் உன்னை மிரட்டினேனா?”
‘இல்லை ‘ என்று மீண்டும் தலை அசைக்க….
“என் வீட்டில் இருந்து யாராச்சும் வந்து உங்க பொண்ணு தான் எங்க வீட்டுக்கு மருமகளாக வரனும்னு சொல்லி பிரச்சினை பண்ணினாங்களா?” 
அதற்கும் ‘இல்லை’ என்று தலையை ஆட்டினாள்….
“அப்புறம் எப்படி மேடம் போலிஸ் கம்ப்ளையின்ட் கொடுப்பீங்க?” தன் முகத்தை வலது கையால் நாடியை தடவியவாறு கேட்க, அவளிடம் எந்த பதிலும் அசைவும் இன்றி போனது.
தான் பேசியதின் முட்டாள்தனத்தை எண்ணி அவளுக்கு சங்கடமாக போனது. தனக்கு விருப்பம் இல்லாத திருமணத்தை நிறுத்தக்கோரி அவனிடம் கேட்க வந்தவள் அவனையே போலிஸில் பிடித்துக் குடுப்பேன் என்று கூறிய தன் மடதனத்தை எண்ணி தன்னை தானே திட்டிக் கொண்டாள். 
அவளது அமைதியை பார்த்தவன் மேலும் தொடர்ந்தான், “உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லைனா… உன் பேரண்ட்ஸ் கிட்ட பேசி இதை நிறுத்து அத விட்டுட்டு என்னை மிரட்டுறதுல எந்த பயணும் இல்ல….. ” இதை சொல்லும் போது ஏனோ அவன் மனதில் பாரம் ஏற அதை மறைத்து கொண்டு அவளிடம் அதை உரைத்தான்.
அவன் கூறியதை கேட்டு அவனை நிமிர்ந்து பாவமாக பார்த்துவிட்டு மீண்டும் தலைகவிழ்ந்துக் கொண்டாள்.
அவளது நிலையை கண்டு நந்தனின் முகம் கனிய, ” ஸ்ரீ …” என்று மென்மையாக அழைக்க…. அவனது விழிப்பில் தலை நிமிர்ந்து அவனை பார்த்தவள்….. அவனது விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றை உணர முடியாமல் மீண்டும் தலை குனிந்துக் கொண்டாள்.
அவனது விழி மொழியை உணர்ந்து இருந்தால் நிச்சயம் பின்னாளில்  அவனையும் உணர்ந்து இருப்பாளோ என்னவோ…. 
ஏட்டிக்குப் போட்டியாக நிற்பவள் இன்று ஓர் முடிவெடுக்க முடியாமல் தவிப்பதை பார்க்க முடியாமல் அவளிடம் பேச தொடங்கினான்.
பெரு மூச்சொன்றை வெளி இட்டவன், “இங்க பாரு  ஸ்ரீ… உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லைன்னு சொல்லுற…. உன்னோட இந்த பிரச்சனைக்கு இரண்டே வழிதான் இருக்கு..” என்றவனை ஆர்வமாக பார்த்தாள் மஹா.
அவளது ஆர்வம் அவனுக்கு வேதனையை அழிக்க அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் பேச்சை தொடர்ந்தான், ” ஒன்னு நீ உன்னோட அப்பா அம்மா கிட்ட இதை பற்றி பேசி கல்யாணத்தை நிறுத்து….” என்று கூற,
“அப்பா கிட்ட பேச முடியாது….. அவர் இந்த கல்யாணத்துல ரொம்ப ஆர்வமா இருக்காரு.எப்படி அவர் கிட்ட போய்  இஷ்டம் இல்லைனு சொல்லுறது?” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் அவனிடமே கேட்டு வைத்தாள்.
மஹாவின் மனநிலையை ஓர் அளவுக்கு யூகித்தான் நந்தன். வீட்டிற்கு தெரியாமல் இத்திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதே….. அதே சமயம் அவளுக்கு தன் மேல் எந்த வெறுப்பும் இல்லை என்றும் புரிந்துக் கொண்டான்…. இன்று நாம் நடந்துக் கொண்ட விததிற்க்கு இப்பொழுது வரை அவளிடம் அதன் மறுப்போ கோபமோ இல்லை என்று யூகித்தவன், தன்னை திருமணம் செய்து கொள்ள மட்டும் அவளுக்கு இஷ்டம் இல்லை எண்ணும் எண்ணம் அவன் சிந்தையில் வலம் வந்தது…..
அவனது சைகைக்கு திட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தான் வந்தாள். ஆனால் அவனை கண்டதும் அனைத்தும் மறந்து போக இறுதியில்  அவள் மனதிலும் நினைவிலும் திருமணத்தை நிறுத்துவதை பற்றிய சிந்தனை மட்டும் உழன்று கொண்டு இருந்தது.
“ஓகே பைன்… இரண்டாவது வழி இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லுறது…. வீட்டூல இருக்குறவங்க கிட்ட இத உன்னால் சொல்ல முடியாதுனா என்னால எதுவுமே பண்ண முடியாது….. நான் வேண்டாம்னு சொன்னா என்னை நிறைய கேள்வி கேட்பாங்க பதில் இல்லாத கேள்விக்கு என்னை என்ன பண்ண சொல்லுற? உனக்கு தேவைனா நீதான் பேசணும்….. ஒன்னு உன் வீட்டில பேசு இல்லாடி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு…. முடிவு உன் கைல…. நல்லா யோசிச்சு சொல்லு….” என்றவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்…
அவன் கூறியதும் அதிர்ந்து அவனை பார்த்தவள் அவன் கூறுவதின் நியாயம் உரைத்தது மஹாவிற்கு. என் தேவையை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்… இதில் இவனை இழுப்பது சரிவராது. என்ன செய்வது என்று யோசனையில் ஆழ்ந்தாள் மஹா….
 
கன்டிசன்ஸ் தொடரும் …….

Advertisement